நட்புகளாலும், தோழமைகளாலும், உறவுகளாலுமே கட்டமைக்கப் பட்டதாகவே இருக்கிறது இவனது உலகம்.
இதில் உறவுகளின் உலகை சற்றே அல்ல,சற்று கூடுதலாகவே சுருக்கிப் பார்த்துக்கொள்ளலாம்.80களின் முதிர்பருவத்தில் ஆரம்ப மாகிற இவனது ஓட்டமே இதைசம்பாதித்தும் சாதித்தும் கொடுத்தி ரு கிறதுஎனநினைக்கிறான்.
ஒரு மழை நாளின் மாலை வேளை என்பதாய் நினைவு அவனுக்கு. சாத்தூரின் 42பி-எல்.எப்தெரு மாடி அறை இவனை உளவாங்கிக் கொள்கிறது.
84 ன்முதற்பகுதியில் பணிக்குச்செர்ந்த நாளன்றிலிருந்து வெம்மை மிகுந்த சாத்தூரின்மண்ணைஎட்டித்தொடுகிற நாளதுவரை தொழிற்ச ங்கம்என்றாலே என்னவென்று தெரியாத விரதத்தில் இருந்த நாட்க ளின் நகர்வை 42 எல்.எப் தெரு கிட்டத்தட்ட தகர்த்தெரிந்ததாய்/
எம்மார்பி என்கிற அன்புள்ளம் மட்டுமே முதல் அறிமுகமாயும் மூத்த நட்பாயும் இருந்த காலங்களில் வேலி தாண்டிய வெள்ளாடாய் பணி மாறு தலில் சாத்தூர் வந்தசிறிது நாட்களில் நட்பின்விரிவுஈரமிக்க மனிதர்களால் நெசவிடப்படுகிறது.
தோழர் மாதவராஜ் அவர்கள்,தோழர் காமராஜ் அவர்கள்,தோழர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் ,சோலைஅண்ணா,சாமிநாதன்,,,, என இன்னும் இன்னுமாய் நீண்டு,,,,,,,, வாழ்விற்கான இவர்களது போராட்டம் உக்கிரம் கொண்ட நாட்க ளில் நாங்களும் இருக்கிறோம் உங்களுடன் கைகோர்க்கவும், மனம் பிணைக்கவுமாய் என கோடு காட்டி பூத்துச்சிரித்த நட்பாய் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச் சாமி,தனுஷ்கோடிராமசாமிசார்,தோழர் எஸ்.ஏ.பி அவர்கள் பட்டைய ன்ச்செட்டித்தெரு சந்து,தனலட்சுமி ஹோட் டல், டாக்டர் வெங்கடாச் சலம் அவர்கள் டீக்கடை பாய், நிப்புக்கம்பெனித் தோழர்கள் மாண வர்கள் பூங்குன்றன், ஜெயராஜ்,லட்சுமி காந்தன்,,,,,,,இன்னும் இன்னு மாய் பெயர் தெரியாத பெயர் ஞாபகமில்லாமல் எழுத விட்டுப் போன பல பேருடன் எல்.எப் தெருவின் தேய்ப்பு வண்டிக்காரரும் கை கோர்த்துக் கொள்கிறவராய்/
சட்டென மண் பிளந்து பூத்த உறவாய் இத்தனை பிரியமும், நேச முமாய் வளர்ந்த தோழமையும்,நட்பும் மனம் கொண்டிருந்த வேளை யில் நெல்லை மண்ணில் நடந்த த.மு.எ.க.ச மாநாடு இவனை இலக்கியத்தின் பக்கம் ஈர்த்தது என நினைக்கிறான்.
இவன்,ராமசாமி மற்றும் இரண்டு தோழர்கள் போயிருந்த மாநாட் டில்தான் திருவண்ணாமலைத் தோழர்களால் ஹேண்ட் போஸ் டரில் சதுர,சதுரமாய் மடக்கி எழுதப்பட்டிருந்த மார்டன் எழுத்துக்கள் இவனை கவர்க்கிறது. அதில் ஏற்பட்ட அந்த ஈர்ப்பு அப்படியே மாநாட்டில் பேசப்பட்ட பாடகர்கள், எழுத்தாளர்கள் பக்கம் கொஞ்ச, கொஞ்சமாய் சரியச்செய்ய காது கொடுத்து கேட்ட பேச்சுகளும்,மனம் ஈர்த்து கவர்ந்த நினைவுகளுமாய் மாநாடு முடிந்து வந்த நாளிலி ருந்து மையம் கொண்டதாயுமாய்/
திருமணாமாகா இருபத்தை தாண்டிய பிரமச்சாரி பருவம் பெரிய வரப்பிரசாதமாயும்,வேறு எங்கும் பார்வை திரும்பாத படிக்காய் என்னை சுற்றி கடிவாளமிட்ட நாட்களாயும்/ இருக்கட்டுமே என்ன கெட்டுப்போனது இப்போ து? என்கிற நினைவின் நகர்வுடனுமாய் விருதுநகர் வந்து போன நாட்களில் இங்கு உறவிட்ட தோழர்கள் தோழர்கள் சேகர் அவர்கள், சீனிவாசன் அவர்கள் எஸ் கே ஆர் அவர்கள் பாலு விஜயன் ராஜேந்திரன், முத்துக் குமார்1 முத்துக் குமார் 2 வசந்தன்,மணிமாறன் பாலசுப்பிரமணியன், கண்ணன் கோட் டைராஜ் மாரிமுத்து,முத்துராஜ்,உலகு,பிச்சைமற்றும் டெய்சி மேடம், ஜானகி அக்கா வெகுமுக்கியமாய் சுந்தர் ஜி,,,,என அறிமுக வர்ணம் தீட்டி வைக்கிறது.
அப்போது இவர்களெல்லாம் மையம் கொண்டிருந்த இயக்கம்,அதில் அவர்கள் கையாண்ட பிரச்சனை,அதனால் அவர்கள் சந்தித்த விளைவுகள் இயக்கத்தி ற்கானஅவர்களது உழைப்பு, தியாகங்கள், அர்ப்பணிப்புகள் எல்லாமுமாய் இவனில் ஒருவித மென் கவனத்தை ஏற்படுத்திச்சென்றது எனலாம்.அப்படி அன்று ஏற்பட்ட கவனமே இன்று இவனது எழுத்தை சத்தியமாகவும், சாத்தியமாகவும் ஆக்கி யிருக்கிறதுஎன்பதாய் நினைக்கிறான்.
அப்பொழுது வசப்பட்ட அந்த எழுத்து இவனிலிருந்து படைப்பாக உருப்பெறுகிற ஒவ்வொரு கனம் தோறுமாய் இவர்கள் அனைவரை யும் மனம் நிரப்பி நினை த்துக் கொள்கிறான்.
இவன் வாழ்ந்த பெரிய பேராலியும் ,பெரிய பேராலி மண்ணும், அவ் வூரின் மனிதர்களும், உறவினர்களும் இவனை எவ்வளவுதூரம் மனம் கவர்ந்தார்களோ அல்லது இவனில் குடிகொண்டிருந்தார்க ளோ அதற்கு சற்றும் குறையாமல் இயக்கத்தின் மனிதர்களும் இவன் மனம் கவர்ந்தவர்களாகவே இன்றளவும்/ அந்த மனம் கவர்தலே இங்கே நட்பாகவும் தோழமையாகவும்/
நட்புகளாலும், தோழமைகளாலும் உறவுகளாலும் கட்டமைக்கப்பட் டதாகவே இருக்கிறது இவனது உலகம்/
4 comments:
நட்பாகவும் தோழமையாகவும் - இதுவல்லவோ சொர்க்கம்...!
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நட்பூக்கள் சிறந்து மலரட்டும்! நன்றி!
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் சுரேஷ் எஸ் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment