அங்குதான்இருந்தேன்.அல்லம்பட்டிமுக்கு,புதுபஸ்டாண்ட்,கலக்ட்ரேட்
சூல க்கரை,எம்ஜியார் சிலை அருகில் கருமாதி மடம் முக்கு தங்கப்பாண்டி தோ ழர் டீக்கடை
என/
புழுதிபூத்த
மண்ணின் வாசமும் உழைப்பாளிகளின் வியர்வையும்
ஒரு சேர்ந் து பிசையப்பட்டிருந்த வியர்வை வாசம் மிகுந்த ஏரியா அது.லாரி புக்கிங்
ஆபீசும் பார்சல் சர்வீஸ் ஆபீசும்,கொரியரும் தீப்பெட்டி ஆபீசும் மர அறுவை மில்லுமாய்
சேர்ந்து கட்டி காட்சி தந்திருக்கிற ஏரியாவாய் அது.
புழுதி பூத்திருக்கிற
மண்ணின் வியர்வை வரிகள் அங்கு வசிக்கிற மனிதர்க ளின் உடம்பில்நிரந்தரஉரிமைவாங்கிகுடிகொண்டிருந்ததாக/
உறிஞ்சிக்
குடித்த தேனீரின் சுவை நாவின் சுவையறும்புகளில் பற்றிப் படர்ந் து ஒவ்வொருமடக்காய்
பயணிக்கையில் ஆசுவாசம் கொள்கிறது உடல்/
வழிந்து ஆறிய
வியர்வைக்கும்,பயணித்துவந்த களைப்பிற்குமாகஇப்படியான தொரு ஆசுவாசமும் பெஞ்சில் அமர்ந்து
கொள்கிற ஆயாசமும் தேவைப் படுகிறதுதான்.
ஆள் அரவமற்ற
அத்துவான வெளியில் அங்கொன்றும்இங்கொன்றுமாய் நட மிடுகிற மனிதர்களும்,வாகனங்களும் கண்ணில்
பட்ட ரோட்டின் இடது ஓர மாய் மரபெஞ்சில் அமர்ந்து
வலது கையில் வாங்கிய டீக்கிளாஸை இடது கைக்கு மாற்றி பின் இடது கையிலிருந்து வலது கைக்கு
வரவழைத்து கிளா ஸின் அடியில் சொட்டடித்து நிற்கிற டீத்துளியின் இறங்கிச்சொட்டுகிற துளி யை
துடைத்துவிட்டுக் குடிக்கையில் கிடைக்கிற சுகமும் ஒருவித ஓய்வ றிகிற மனோபான்மையுமாய்
நன்றாகஇருக்கும்தான்.
ஆனால் இப்படியானதொரு
நெரிசல் மிகுந்த சாலையின் முனையில் இடது பக்கமாய் லாரி ஆபீசையும் வலது பக்கமாய் பார்சல்
சர்வீஸையும் உள்ளடக்கி அதன் நடுவிலாய் அமைந்திருக்கிற கடையில் இம்மாதிரி எதிர்பார்க்கலாமா
என்பது தெரியவில்லை. எதிர்பார்த்துத்தான் அமர்ந்தேன் ஏனெனத் தெரியா மலேயே/
தேவைப்படுகிற
ஆசுவாசமும் அது ஏற்றுக்கொள்கிற மனதும் இடத்திற்கு இடம் வேறுபடும் போல/அந்த வேறுபாட்டை
அங்கு உணர்ந்தேனோ என்ன வோஎனத் தெரியாமலேயே அமர்ந்திருக்கிறவனாயும் பின் டீ சாப்பிடுகிறவ
னாயும்.
அல்லம்பட்டி
முக்கில் சைக்கிளை எடுக்கும் போது மணி இருக்கலாம் ஆறு அல்லது ஆறரை.எவ்வளவு முயன்றும்
கூட இன்றும் பெர்மிஷன் போட்டு விட்டு வரமுடியவில்லை.இன்று நேற்றல்ல கிட்டத்தட்ட ஒருமாதமாக
பெர்மி ஷனில் வரவேண்டும் சாயங்காலமாக என நினைக்கிற நிறைவேறா ஆசை சூழ்ந்த மனோநிலையினாய்
திரிந்து கொண்டு/
பெரிதாய் ஒன்றுமில்லை.மூன்று
அல்லது மூன்றரை வருடங்கள் இருக் கலாம். நண்பர் ஒருவரது அக்காவின் வீட்டிற்கு சென்றிருந்த
பொழுது ஹா லில் போடப்பட்டிருந்த மூங்கில் சேரை பார்த்து விட்டேன்.ஆகா என்ன இது அழகாக
இருக்கிறதே இப்படி/சேர் முழுவதுமாய் ஓடிக்காண்பிக்கிற அதன் வரிகளும்,பின்னலும் கைதேர்ந்த
சிற்பியின் உளி ஓவியம் போலவும் ,நேர்த்தியான் ஓவியன் வரைந்த சிற்பம் போலவும் அடக்கம்
காட்டி அமர்ந்தி ருக்கிறதே/
வாய் இருக்கவில்லை
எனக்கு.கேட்டே விட்டேன் எங்கு வாங்கியது .என்ன விலை என/சர்வோதயாவில் வாங்கியது அது
.அதன் விலை இவ்வளவு எனச் சொன்னவரிடம்ஓரிருவாரங்களுக்குள்லெல்லாம்வாங்கிவிடுவேன்
என சூளு ரைக்காத குறையாய் சொல்லிவிட்டு வந்தேன்.அன்று சொன்ன அந்த ஓரிரு வாரம் இன்றுதான்
கைவரப்பெற்றிருக்கிறது.
டவுனுக்குள்ளாய்
இருக்கிற கடையில் நேற்று இரவு போய் கேட்டபோது மூன்று பேர் அமரக்கூடிய அளவில் இருந்த
(சிறிது மனம் வைத்தால் நான்கு பேர்கூட அமரலாம்.என்கிற நினைப்பையும் மனமிருந்தால் வெத்திலையில்
கூட நான்கு பேர் படுக்கலாம் என்கிற சொல்லை பொய்யாக்கியவராய் ,,,,) மூங்கில் பெஞ்ச்,அதனுடன்
இரண்டு மூங்கில் சேர்,ஒரு டீப்பாய் என அனை த்தும் சேர்த்து செட்டாகத்தான் விற்பனைக்கு,அதன்
விலை 24 ஆயிரத்துச் சில்லறை எனகிறார்.டீப்பாய் இல்லாமல் வேறொரு சேர் தவிர்த்து அது
எவ்வளவு,இது எப்படி எனக்கேட்டபோது சார் சூலக்கரையில் எங்களது கோ டவுன் உள்ளது பார்த்துவிட்டு
வாருங்கள்,அது பர்னிச்சருக்கான டிவிசன், அங்கு போய்ப்பார்த்தால் உங்களுக்கே ஒரு ஐடியா
கிடைக்கும் என்றார்.
அவர் சொன்ன
சொல்லின் நுனி பற்றி எந்நேரம்வரை அங்கு கடை இருக் கும் எனகேட்டபோது அவர் எட்டுமணிவரைதான்
என்றார். கைக் கடிகாரத் தினுள்ளாய் சின்னதும்
பெரியதுமாய் நொடிமுள்ளுடன் உறவாடிக் கொண் டு 7.30 என்கிறது,
கடைவிட்டு
வெளியே வர ஐந்து நிமிடங்களுக்கு மேலாகிப் போகலாம்.பின் இங்கிருந்து சைக்கிள் மிதித்து
மூன்று கிலோ மீட்டர்கள் பயணித்து அங்கு எட்டுமணிக்குள்ளாகப்போவது இயலாத காரியம்.ஆகவே
விட்டுவிடலாம் இந்த யோசனையை, பார்த்துக் கொள்ளலாம் நாளை.என வீடு போய் அடை கிறவனாய்/
இன்று அலுவலகம்
முடிந்து வந்த இந்த இனிய மாலை வேளை சைக்கிள் ஸ்டாண்டிற்கு கை காட்டுகிறது.அங்குதான்
உன் சைக்கிள் இருக்கிறது எடுத்துக்கொள் ஞாபகமாக என/
முன் கூடை
வைத்து அரக்குக்கலரில் அழகு தாங்கிய சைக்கிள்,பள்ளி 8 ஆம் வகுப்புப்படிக்கும் இளைய
மகன் எனக்கே எனக்கு என பரிசளித்த புத்தம் புது சைக்கிள்.அவனுக்கென வாங்கிய சைக்கிளைக்
கொடுத்து விட்டு நான் வைத்திருந்த பழைய சைக்கிளை வாங்கிக் கொண்டான்.வாங்கிய அன்று அவன்
பார்வையில் இருந்த ப்ரியமும்,வாஞ்சையும் இன்றளவும் மனதில் நிற்க அந்த பிரியமும் வாஞ்சைப்படர்வுமான
பார்வைதாங்கிய அந்த சைக்கிளைஎடுத்துக்கொண்டுவந்தபோதுஸ்டாண்ட்க்காரர் கேட்டார். என்ன
சைக்கிள்லேயேவா சூலக்கரைக்கு என/
அப்படிக்கேட்டவரை
ஆச்சரியமாய் ஏறிட்டவனாக பயணித்து புது பஸ்டாண் ட்,கலக்ட்ரேட்,சூலக்கரை,என பயணித்து
எம்ஜியார் சிலை, கருமாதி மடம் முக்கு என அண்மித்து தோழர் தங்கப்பாண்டி டீக் கடையில்
மையம் கொண் டிருக்கிறவனாக/
5 comments:
அல்லம்பட்டி, கருமாதி மடம், புது பஸ் ஸ்டான்ட் எல்லா இடத்திற்கும் நேரில் சென்றது போன்றோர் உணர்வு.பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.
எவ்வளவு தூரம் என்றாலும் சைக்கிள் தானா...? ஆனால் உடம்பிற்கு நல்லது... // இளைய மகன் எனக்கே எனக்கு என பரிசளித்த // ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
இன்றைய பகிர்வில்...
வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...! - இந்த தலைப்பில் உள்ள விவரங்கள் உங்களுக்கு உதவக் கூடும்... நன்றி...
Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html
வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்,நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம்திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment