எனதுகை பேசியின் வண்ணத்திரையில் ஆட்டுக்குட்டியின் படமே இருக்கிறது இன்னும்.
உடல்முழுக்ககறுப்பாயும்,கால்கள் நான்கிலும் வயிற்றின் நடுப்பகுதியிலுமா ய் வெள்ளை ரோமங்கள் காட்டிய ஆட்டுக்குட்டி தரையில் குனிந்து குனிந்து இலைகளை தன் பெருமூச்சால் ஊதி சுத்தம் செய்துவிட்டு அதன் நுனி உதடுக ளால்கவ்வியெடுத்து சாப்பிடுகிற அழகைக்காண கோடி கண்வேண்டும்.
கருப்பும்,வெள்ளையும் இப்படி அதற்கு கலந்து பூசியது யார்?எந்த ஓவியரின் கை
வண்ணம் அது?ஏன் இப்படி ஒரு கலரை அவர் தேர்வு செய்ய
வேண்டும்? நன்றாகயிருக்கிறது பார்ப்பதற்கு.
வண்ணங்களை குழைத்துப் பூசிய ஒரு வண்டொண்று வீருகொண்டு தன் உருவைமாற்றிக்கொண்டுஆடாய்வடிவெடுத்துநிற்பதாகவேதெரிந்ததெனக்கு/
இதைஅதனிடம்போய்சொல்லவோ,கேட்கவோமுடியாதுஎன நினைக்கிறேன்.
அப்படியே கேட்டாலும் என்ன சொல்லி விடப்போகிறது பிரமாதமாய். “என்னி டம் இது
பற்றி கேட்டால் எனக்கு என்ன தெரியும்?எனது தாயின் கருவில் நான் ஜனித்துஉருக்கொண்டநாளில்எப்படிஇருந்தேன்எனஎனக்கேதெரியாதுஇல்லை யா?”என்பதாகத்தானே பதில் வரும்.
அதனால் அதை கேட்பதை விட்டு விட்டு அதன் அழகில் சொக்கி நிற்பவனாய்
இப்போது.அதைக்காணகண்கோடிவேண்டும்.கோடிக்கண்ணுக்குஎங்கேபோவது இப்போது?ஆதலால்என்னிடம்உள்ளஜோடிக்கண்களையேகோடிக்கண்களாக்கிப் பார்க்கிறேன்.அவ்வளவே/
கிடைக்கிறநேரங்களில்வாய் நிறையவும்,அது அல்லாத பொழுதுகளில் இப்படி நுனிஉதடுகொண்டுகவ்வித் தின்கிற பக்குவத்தை அதற்கு யார்கற்றுக் கொடுத் தது,எப்போது,எப்படி? எனத்தெரியவில்லை. அதனிடம் கேட்டபோது அதன்தாய் என்கிறது அது.
"முன்னங்கால்களைஇயல்பாகவும்,பின்னங்கால்களை சற்றே அகட்டியுமாய் வைத்துதன்
பால் சுரக்கிற மடிக்காம்புகளை எனக்கு முட்டிக் குடிக்க கற்றுக்
கொடுத்த எனது தாய் எனக்குக்கற்றுத்தராமல் வேறு யார் கற்றுத்தருவார்கள்
கொடுத்த எனது தாய் எனக்குக்கற்றுத்தராமல் வேறு யார் கற்றுத்தருவார்கள்
இதையெல்லாம்?
நான்எனதுஎனமட்டும்இல்லாமல்நாம்நமதுஎனஇயங்குகிறஎங்களதுஇனத்தின் துணைகளானமற்றவற்றைப்பார்த்தும்கற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
பிறந்ததிலிருந்து அப்படியெல்லாம் கற்றுத்தெளிந்த நான் இன்று என் இனத் தோடு
வராமல் தனியே மேய வந்து விட்டதை வைத்து இத்தனை கேட்டால் எப்படி?
காலையில்பொழுதுவிடிகிறநேரமாய்எங்களைஅவிழ்த்துவிடுகிறார்கள்.அடைக்கப்பட்டிருந்த
கொட்டடியின்வாசத்திலிருந்தும்,புழுக்கத்திலிருந்தும்.நாங்கள்போட்டபுழுக்கை களும்,பெய்து தீர்த்தகோமியமுமாய்நிறைந்துபோனதொழுவத்திலிருந்துதான் விடிந்த பொழுதை துணைக்கழைத்துக்கொண்டு திறந்துவிடுகிறார்கள்.விடிந்த பொழுது என கணக்கு எங்களுக்கு.5.00,5.30,6.00 மணி
என்பது உங்கள் கணக் காக/
திறந்து விட்டதும் ஊருவர் மீது ஒருவர் ஒட்டியும்,ஒருவர் மீது ஒருவர் உரசியும்,ஒருவர் மீது ஒருவர் மோதியும், உறவாடிக்கொண்டுமாய் வெளியே வருகிற நாங்கள் இப்படி புல் வெளிகளையும்,வெற்றிடங்களையும் மரம் வளர்ந்த வீட்டின் பக்கவாட்டு வெற்று வெளிகளையும் தேடி ஓடி வருகிறோம் எங்களது வயிறு நிறைக்க வேண்டி/
எங்களை வளர்த்து,எங்களின் மீது அக்கறைப்பட்டு ,எங்கள் உடல் பார்த்து
,எங்கள்நோய்பார்த்துஎங்களின் மீது தனி கரிசனம் கொள்கிற எங்களது
உரிமை யாளர் கூட இவ்வளவு பேசியதில்லை.
இரவு,பகல்எனகொட்டடிகளில்அடைக்கப்பட்டுபுழுங்கி தீர்கிற நேரம் தவிர்த்து
சுதந்திரக்காற்றைசுவாசிக்கநேர்கிறதருணங்களில்இப்படிகட்டையைக்கொடுத் தால்
எப்படி என்பதே இந்த நேரத்தின் எனது முக்கிய கேள்வியாய் இருக்கிறது.
மண்பிளந்துதுளிர்த்துவளர்ந்துகிளை பரப்பி தன் ஆகுருதி காட்டி விரிந்தோங்கி
நிற்கிறமரம்அதன்இலைகள்உதிர்க்கிறசமயம்என்னையும்,என்போன்றவர்களையும்நினைவில்வைத்துஉதிர்ப்பதாய்தோணவில்லை.துளிர்ப்பதும்,மொட்டுவிடுவதும்,பூப்பதும்காய்ப்பதும்
பின் உதிர்வதும்தானே அதன் இயல்பாகித் தெரிகிறது.
தன் வாழ் நாளில் கன்றாகி,செடியாகி,மரமாகி நிழல் பரப்புகிற வேலைகளைச்
செய்கிறமரத்தைஊன்றியனேவெட்டுகிறான்.வெட்டியவனேஊனுகிறான்திரும்
பவுமாய்.
விதைப்பதும்வெட்டுவதும்தொழிலாளின்முக்கியவேலைகளில் ஒன்றாகிப்
போகிறது இங்கு.
இந்நிலையில் பூமியின் வரமான மரம் கொடுத்ததை சாப்பிடவும்,சாப்பிட்டு வயிறு
நிறைக்கவும் பசியாறவுமாய் வருகிற எங்களை நீங்கள் போட்டோ எடுத்து உங்களது கை
பேசியின் வண்ணத்திரையில் வைத்து அழகுபடுத்திக் கொள்வதில்தவறேதும்இருக்க
முடியாது. அதற்காக நான் பயன்பட்டதில் எனக்கெந்தஆட்சேபனையும்
இல்லை,சந்தோஷமே எனக்கு/
இலை தந்த மரங்கள் விறகாயும்,இன்ன பிற பொருளாயும்,நான் இரையாயும்
ஆகிப்போகிற கொடுமையைத்தவிர்த்து வேறென்ன நடந்து விடப்போகிறது இங்கு
பிரமாதமாய்.எனச்சொன்னஆட்டுக்குட்டியின்படம்எனதுகைபேசியின் வண்ணத்திரையில்
காணக்கிடைக்கிறது அனுதினமுமாய்/
5 comments:
ரசனையான யதார்த்தமான வர்ணனை ஆட்டுக்குட்டியைப்போலவே அழகு நண்பரே...
தமிழ் மணம் 1
படம் அசத்தி விட்டது அய்யா,
உங்கள் போல் உணர்வுகளின் கைபிடியில் பயணித்து பதிவிட முடியாது யாருக்கும் ..
வாழ்த்துக்கள்
தம +
அழகிய ரசனை...
தங்களின் ஈர மனது தெரிகிறது நண்பரே
நன்றி
தம +1
வணக்கம் திண்டுக்கல் தன்பாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment