வழக்கமானநாட்களின்நகர்வுகளில்அந்தசம்பவம்ஓர்நாளின்நகர்வில்நடந்து
விடுகிறது.
இரண்டுவருடங்களாக வேலைபார்த்த கடையிலிருந்து திடீரெனநின்று விடு
கிறான்எனதுவேலையின்விலகல்".என்கிற எந்தவித தகவலும் இல்லை அவனி டமிருந்து.
காலையில் ஆறு மணிக்கு வேலைக்கு வருபவன் மதியம் இரண்டு மணிக்கு சாப்பிடப்போவான் வழக்கமாக.அன்றும் அப்படித்தான் சென்றுள்ளான்.
சாப்பிட்டு விட்டு திரும்பவரவில்லை.அவனது மாமாதான் அவன் சார்பாக
வந்துள்ளார்கடை முதலாளியிடம் தகவல் சொல்லிவிட்டு மிச்ச சம்பளத்தை கணக்குப்
பார்த்துவாங்கிச்செல்ல.
முதலாளி என்றால் அவரே கடையின் டீமாஸ்டரும், கடையின் முதலாளியு மாய்./
நிறைய டீக் கடைகளில் இன்று அதுதான் நிலை.கேட்டால் ஏறிப் போன சீனி
விலை யிலிருந்து ,வேலைக்காரப் பையனின் சம்பளம் வரை வரிசையாக மனப்பாடமாய் கணக்குச் சொல்கிறார்கள்.
அந்தப்பழக்கத்தின்தொடர்ச்சியாகவும்,நீட்சியாகவும்கடைப்பையன்களை கெட் ட வார்த்தைகளில் திட்டுதல்,அடித்தல்,கேலி பேசுதல் எல்லாமும் .
இதைப் பொறுத்துக் கொள்ளாமல் மேலே போட்டிருக்கும் எருமைத் தோலை எடுத்துவிட்டால் வாங்கும் சம்பளத்திலும் மண்விழும்தான்.
இப்படியெல்லாம் நடக்கும் என எதிர் பார்த்தும் அம்மாதிரி நடக்கும் சமயங்களி
ல் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து மனம் பொறுக்க மாட்டாமலும் வேலையை விட்டு
நின்று விடுகிறான் திடீரென.
நன்றாக இருந்தால் அவனுக்கு இருக்கலாம் வயது பனிரெண்டு.அவனை இந்த டீக்
கடையில் வேலைக்கு சேர்ப்பதற்காக பள்ளியிலிருந்து பிய்த்துக் கொண் டு வரப்
பட்டபோது அவனுக்கு படிப்பு நன்றாக வரவில்லை என்பதெல்லாம் காரணமில்லை.
அவன் வயதில்,அவன் படித்த வகுப்பில் படிப்பிலும், விளையாட்டிலும் படு சூட் டி கையாக இருந்துள்ளான்.
உள்ளூரிலுள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியில்தான் அவனது படிப்பு.அந்த
பள்ளிக்கு வரும் பாதிக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளைப் போலவே அவ னும் பையில்
சத்துணவு தட்டு சுமந்தும், சாயம் போன சட்டை, டவுசர் அணிந்து கொண்டும்.
அப்பா விவசாயக் கூலி,அம்மா கிடைத்த நேரங்களில் கிடைத்த வேலைக்கு.
பெரும்பாலும் சித்தாள் வேலைக்கும் காட்டுவேலைக்கும் பகிர்ந்து போவதே
அவளுக்கு வாய்த்திருக்கிறது. அப்பா வேலையில் கிடைக்கும் கூலியில்
குடிக்க,கொஞ்சமாய் வீட்டில் காசு கொடுக்க குடிவெறியில் அவன் அம்மாவை அடிக்க
என்பதையே வாடிக்கையாக வைதிருக்கிறார்.
வேறுஎன்னதான் செய்வாள் பாவம் அவனது அம்மா.கணவனை சத்தம் போட் டு விட்டு உயிர் கரைய உழைத்திருக்கிறாள்.
வீட்டில் உலை கொதிக்க வேண்டுமே?உடல் தேய உழைத்த அவளை அவளு க்குள் குடிகொண்டிருந்த காச நோய் மெல்ல,மெல்ல தின்றுகொண்டிருந்தது .
அரிசி,பருப்பு,மளிகை என அவளது சம்பளப் பணத்தில் செலவழிக்கும் ஒரு தொகையைப்
போலவே காச நோய்க்கும் செலவழிக்க வேண்டிய கட்டாய த்துக்கு உள்ளானாள்.
அப்படியான கட்டாயங்களையெல்லாம் மீறி நோய் முற் றிய ஒருநாளில் கவர்மெண்ட்
ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகப் படும் வழியில் இறந்து போகிறாள்.
இறந்து போன அம்மாவின் நினைவாகவே பரிதவித்த அவனையும்,அவனது தம்பியையும்
விட்டு,விட்டு அவனது அப்பா வேறு ஒரு திருமணம் செய்து
கொள்கிறார்.குடும்பத்தை மறக்கிறார். புது மனைவியுடன் வெளியேறுகிறார்
ஊரிலிருந்து.
தனித்து விடப் பட்ட இவனையும்,இவனது தம்பியையும் பாட்டியின் இறகு
பாதுகாக்கிறது.பாட்டி வயதானவள்.என்ன சம்பாதித்து,என்னத்தை சாப்பி
ட்டு...........,,,,,,,,?
பிழைப்பு, சாப்பாடு என வரும் போது படிப்பு போன்ற அனாவசிய விஷயங்கள் (?/) சட்டென முடக்கி வைக்கப் பட்டுவிடுகிறதுதான்.
அவனது படிப்பு நிறுத்தப் பட்டு டீக் கடையில் வேலைக்குச் சேர்ந்த அன்று மன
திற்குள்ளாகவே அவன் அழுத அழுகையும் ,பொருமிய பொருமலும் கொஞ்ச நஞ்சமல்ல,அந்த
அழுகையும் பொருமலும் நின்று டீக் கடைவேலையே சாஸ் வதம் போல ஆகிப் போனவன்
கைகால் முளைத்த இயந்திரமாய்.
வீட்டிலிருந்து வரும் போதே மற்றதெல்லாம் மற்ற நினைப்பெல்லம் மறந்து போக
டீக் கடைமட்டுமே பிரதானமாய் நிற்கும்.ஒருகிலோ மீட்டர் தூரத்திலி ருந்த
வீட்டிலிருந்து சூப்பர் மேனாய் பறந்து வருவான்.
இவன் வயதுப் பையன்கள் நிலையாக ஒரே கடையில்ஆறுமாத்திற்குமேலாக வேலைசெய்வதே
உலக அதிசயமாக பார்க்கப் படும் போது இவனது இரண்டு வருட உழைப்பு ஒரே கடையில்
இருந்தது ஆச்சரியம்தான் எனவும் பேசிக் கொண்டார்கள்.
அவனதுஅன்றாடவேலைகளானகடையைகூட்ட,சுத்தம்பண்ணகிளாஸ்கழுவ, பால் வாங்கி
வர,கடைகளுக்குப் போக என இருப்பது போல வெளியிடகளில் டீக் கேட்போருக்கும்
கொண்டு போய் கொடுப்பதும்தான்.
அப்படிக் கொடுக்கப் போகும் கடைகள், இதர நிறுவனங்கள்,,விறகுக் கடை, லாரிசெட்
போன்ற இத்தியான இத்தியான இடங்களில் ஏதோ ஒரு இடத்தில் அவனை கெட்ட
வார்த்தைகளாலும் எடுத்தெறிந்தும் பேசியுள்ளார்கள்.
இறக்கைகள் பொசுக்கப் பட்ட பறவையாய் மனம் வெம்பி முதலாளியிடம்
சொல்லியிருக்கிறான்.பதிலுக்கு முதலாளியிடமிருந்து எனக்குத் தேவை
வியாபாரம்,உனக்கு நேர்ந்தமான,அவமான பிரச்சினை பற்றிய கவலை அல்ல என பதில்
வந்திருக்கிறது.
பார்த்தான்,மனம்பொருமிப்,பொருமிஅதற்குமேலும்பொருக்கமாட்டாதவனாய் வேலையை விட்டு நின்றுவிடுகிறான்.திடீரென.
ஆனால் அவனது அடுத்த நகர்வு எதுவாய் இருக்கும் ? ஏதாவது ஒரு டீக் கடை யை நோக்கியோ,அல்லது பலசரக்குக் கடையை நோக்கியோதானே?
சரி வைத்துக் கொள்வோம்.அப்படியே அவனது பொழுதுகள் நகருவதாக/ஆனா ல் இப்படியாக
நகரும் பொழுதுகள் அவன் ஒருவனுக்கு மட்டும்தானா?அவன் வயதில் டீக் கடைகளில்
அன்றாடம் அவதிப் படும் மற்ற சிறுவர்களுக்கும் தானா...........,,,,,,,,,,,,?
5 comments:
பசி என்று ஒன்று இருக்கிறதே... ம்... என்ன செய்வது...
எல்லாம் வயிற்றுக்காக...
தமிழ் மணம் 2
கதை தொடுத்துக் கூறுகையில்
பசி படுத்தும் பாட்டால்
உழைப்பும் பிழைப்பும்
வணக்கம் காசிராஜலிங்கம் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தன்பாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment