சைக்கிளை பற்றிய எனது கனவின் முடிவு பல சமயங்களில் கீழ்கண்டவாறு தான் பதிவாகிறது.
நான்+சைக்கிள்+ரிப்பேர்+குடும்பம்+உடல்நலம் என்கிற ப்ளஸ்,ப்ளஸான விசாரிப்புகளினூடாகவே எனது சைக்கிளை பற்றியும் கேட்டறிந்து என்னை அனுப்பி வைப்பார்.
அவர்சொன்னயோசனைதான்இது.வருடமெல்லாம் இதற்கு செலவழிப்பதற்கு புது சைக்கிள் வாங்கி விடலாம் என்றார். அவர் சொன்ன நாளிலிருந்து நன் வைத்திருந்த சைக்கிள் பெருபாரமாய் ஆகிபோனது எனக்கு.
ஒரு ஜே.சி.பி இயந்திரத்தோடு சேர்த்து கட்டப்பட்டிருந்த எனது சைக்கிளை நாள் முழுவதுமாய் ஓட்டி அலுத்துப்போனது போலவும் இறகு முளைத்திருந்த சைக்கிள் கடை பாய் தலையில் குல்லாயுடன் பறந்து வந்து புது சைக்கிளை தந்து விட்டு பழசை தூக்கிக்கொண்டு பறந்ததாயும் கனவு கண்டேன்.
அன்றிலிருந்து புது சைக்கிள் ஓட்டுபவர்களையும்,சைக்கிள் கடை பாயையும் வெறித்து,வெறித்துபார்ப்பவனாயும்,பித்துபிடித்தவன்போலவும்ஆகிப்போனேன்.
அன்றாடஉடற்பயிற்சிக்குவாக்கிங்,ரன்னிங்,எக்சர்சைஸ்,யோகா,சைக்கிளிங்,
இவற்றில் எது பெஸ்ட் என்பதில் ஆரம்பித்து “சைக்கிளிங்கே” நல்லது முடிவு க்கு வரும்போது அதற்கும் புது சைக்கிளே ஏற்றது என்கிற மன ஏற்புட னும்,சமாதானத்துடனுமாய் இருந்த நாட்களின் நகர்வுகளில்தான் எனது மகன் சொல்கிறான்.ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புக்கு செல்பவன்.
“எனக்குபுதுசைக்கிள்வேண்டும்.எனது உயரத்திற்கேற்றவாறு நீங்கள் வாங்கித் தரும் சைக்கிளை இந்த முழு பரிட்சை லீவு நாட்களில் நன்றாக ஓட்டிப் பழகிக்கொள்வேன்.
சைக்கிளின்சாரதியாயும்,பராமரிப்பாளனாயும்நானே இருப்பேன்.அதன் ஓட்டத் திலும்,அதன் ஒவ்வொரு சுழற்சியிலும்,அதன் அழகிலும் அதன் ஒவ்வொரு உதிரிப்பாகத்தின் மீதும் எனது பார்வையை ஓடவிட்டு மனம் கலக்கவிட்டு கரைந்துருகி ஆனந்தமாகிப்போவேன்.
பக்கத்தூரிலுள்ள எனது பாட்டி வீடும்,அடுத்த தெருவிலுள்ள அத்தை வீடும் தூரம்அதிகமற்றுப்போகும்எனக்கு”எனஎக்ஸட்ரா,எக்ஸட்ராவாய் ஆசைகளை விரிக்கிறான். முகமெல்லாம் பூரிப்பாக.
அதுமாதிரியெல்லாம்நான்யாரிடமும்போய் சொல்லமுடியாது.மிஞ்சி,மிஞ்சி ப் போனால் எனது மனைவியிடம் சொல்லலாம். “அட பைத்தியகார மனுசா”என அவளும் அதற்காக சிரிக்கக்கூடும்.அதற்காகத்தான் யாரிடமும் சொல்லாமல் மனதிற்குள்ளேயே வைத்து பூட்டி சாவியை எங்கோ தொலைத்து விட்டேன். அனைத்து வீட்டிலும் நிறைவேறாத ஆசைகளுடன் திரியும் பெற்றோர்களின் கணக்கில்தற்காலிகமாகநானும்.
நான் சென்ற பதினோரு மணி இரவிற்கெல்லாம் எனது சைக்கிள் அப்படி நிற்கும் என நினைக்கவில்லை.
அன்று அப்படி ஒரு நினைப்பு.தலை பெருத்தும்,கைகால்கள் சூம்பிப்போன குழந்தையாய் பின்புறம் காட்டி அழுக்கடைந்து நின்றது.
அதிகம்அழுக்குப் படாமலும்,ஒருசின்ன ரிப்பேர் ஆனாலும் அதை சரிபார்த்து சைக்கிளுக்கும்,எனக்குமாய்சந்தோஷம்ஏற்படுத்திபராமரித்த நாட்கள்.
அப்படியெல்லாம் பொத்தி,பொத்தி பாதுகாத்த சைக்கிள் இப்படி நின்றதை பார் த்ததும் வாய் உலர்ந்து நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொள்ள உடல் சுருங்கி ஏதோ அன்னிய தேசத்தில் நிற்கும் மனோநிலையினனாய் ஆகிபோகிறேன்.
என்னை சுற்றி வரிசை கிரமத்தில் நின்ற சைக்கிள்கள்,அதை எடுக்க வந்த ஒன்றிரண்டு மனிதர்கள்,சைக்கிள் ஸ்டாண்டினுள் எரிந்த மின் விளக்குகளின் வெளிச்சம்,ஸ்டாண்டை ஒட்டிய சாலையில் செல்லும் ஆட்டோவின் ஹாரன் ஒலி, “ணங்க,,,,,ணங்க,,,,என்கிற அடுப்படி சத்தம், “கண்ணதாசன் காரைக்குடி” என அறிவிக்கிற பாடல் எல்லாம் என்னை சுற்றி வந்தன.
நீள,நீளமாக எதிரெதிரே வகுந்து போடப்பட்டிருந்தவைகளில் எட்டாவது வரிசையில்தான் நிறுத்தியிருந்தேன் இடதுபுறமாக.எப்போதும் பதிவாக நிறுத் தும் வரிசை.
இடது என்றால் உனக்கு அப்படி ஒரு மயக்கம் என்கிறான் நண்பன். “இல்லை நண்பா,நீ நினைத்து அழுத்தம் கொடுத்து பேசுகிற இடது எல்லாம் இல்லை இதில்.நேராகப்போய் இடதுபக்கம்திருப்பி நிறுத்துவதில் உள்ள ஒரு சின்ன செளகரியம்தான் என்னை அப்படி செய்யத்தூண்டுகிறது.வீணாக உனது செளக ரியப்படிஏதாவது கற்பனை செய்து கொள்ளாதே என்கிற சொல்லை ஊதித் தள்ளியவனாக,“என்னமோபோ,பார்ப்பவையும்,கேள்விப்படுபவையும்,நீசொல் பவையும்ஏகத்துக்குஇடிக்கிறதே”எனசிரித்தவனாய்கிளம்பிப் போய்விடுவான், என்கிற அவனது நினைவை சுமந்தபடி எனது சைக்கிளை சுற்றி, சுற்றி வருகி றேன்.
அனைத்து குடும்பங்களிலும் பங்கு வகிக்கும் ரத்தமும்,சதையுமற்ற ஓர் குடும்ப உறுப்பினராக இன்றளவும் காட்சி தருகிற ஒரு பொருளாயும்,
பயன்பாட்டிலுள்ள உயிர் திணைபோல் ஆகிப்போன எனது சைக்கிளின் பரிதாப நிலைபற்றி,,,,,,,,, மீசைக்கும், உருவத்திற்கும், குரலுக்கும் சம்பந்தமற்றவராய் உட்கார்ந்திருந்தசைக்கிள்ஸ்டாண்ட்க்காரரிடம்சொல்லமுடியாது,வருத்தப்பட்டும் ஏதும் பிரயோஜனமில்லை என்கிற நோக்கம் மேலோங்க,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,
அனாதையாய் அழுதுகொண்டு நிற்கும் குழந்தை போல நின்ற எனது சைக்கி ளைஎடுத்துக்கொண்டுகிளம்புகிறேன்மேலும் பரிதாபத்திற்குரியவனாக/.
2 comments:
நிஜமாகவே தெரிகிறது தோழர்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment