போய்க் கொண்டிருந்த இரு சக்கரவாகனத்தைக் காணவில்லை.
பச்சைக்கலர்காட்டிச்சிரித்துக்கொண்டிருக்கிறவண்டிஅது.ஏன்அப்படிசிரிக்கிறது எந்தஅளவும்நாணமுமற்றுஎன்றுஅதனிடம் கேட்டபொழுதோ அல்லது அதைப் பார்த்துக் கொண்டிருந்த கணங்களிலோ அதுகண் சிமிட்டிச் சொன்ன செய்தி யாய் இதுதான் எப்பொழுதும்மனம் தாங்கிநிற்கிறது/
எனது கலர் எனது ஸ்டைல்,எனது இருப்பு என் மேல் படர்ந்திருக்கும் அழகு, நான்நிமிர்ந்துநிற்கிற கம்பீரம்,,,,,,,, இன்னும் இன்னுமான எத்தனையோ விஷய ங்களை உள்ளடக்கி வைத்திருக்கிற என்னைப் பாருங்கள்.நான் நிற்கிற, போய், வருகிறஅழகைப்பாருங்கள்என தன்னைத் தானே பேசிக்கொள்கிறவண்டியின் ஓட்டம்நின்றுபோய்/
அது இப்பொழுது,,,,,,,,,எங்குபோயிருக்கும்,வண்டியை வாங்கியஷோ ரூமில் போய்கேட்கலாமா,வேண்டாம் அங்குபோய் கேட்பதை விடுத்து வேறு எங்கா யினும்ஞாபகப்பிசகாய் நிறுத்தி விட்டுவந்திருக்கலாமோ என்கிற நினைவுகள் ஏதாயினும்இவனதுநினைவுப்புரட்டலில்இருக்கிறதாஎன புரட்டிப் பார்த்த சமயங்களில்ஒன்றும்தட்டுப்படவில்லை தான்.
ரூபாய்8888கட்டினால்போதும்,வண்டியைவாங்கிக்கொள்ளலாம்,மிச்சம் சுலபத் தவணைகளில் கட்டிக்கொள்ளலாம் என பஜாரில் கடை போட்டு விற்றார்கள். பழைய வண்டி இருந்தாலும் கூட அதை நாங்கள் எக்ஸேஞ் எடுத்துக் கொள் வோம் என்றார்கள்,பரவாயில்லையே என இவனும் மூன்று ஷோ ரூம்களில் கொட்டேஷன் வாங்கி இருந்தான்,ஒன்று வித் அவுட் கியர் வண்டி,மற்ற இரண்டும் வித் கியர் வண்டி,இதில் வித் அவுட் கியர் வண்டி விற்ற ஷோரூம் பெரிய கண்மாய் ரோட்டில் இருந்தது பஸ்டாண்டிற்கு அருகாமையிலாக/
அந்த கண்மாய் இருந்த இடத்தில்தான் இப்பொழுது பஸ் டாண்ட் இருக்கிறது என்றார்கள்.பஸ்டாண்ட் அப்பொழுது கட்டிய நேரத்தில் சரியாக இருந்திருக் கும் போலும்/அந்த இடம் அப்பொழுது இருந்த போக்கு வரத்து சாலையில் கனரக மித ரக வாகனங்களின் ஓட்டம் என இருந்த நேரத்தில் கண்மாய் பஸ்டாண்டாய் மாறி புதுப்பொலிவுடனும் புதுதோற்றம் கொண்ட போதும் ஊர் மக்கள் சந்தோஷம்தான் பட்டிருப்பார்கள்.சொல்லப்போனால் ஊர்ப்போக்குவர த்து மையப்பட்டு நிற்க இந்த இடம் ஒரு கடும் வரப்பிரசாதமாய் அமைந்து போனது எனக்கூட நினைத்திருக்கக்கூடும் மக்கள்.அப்பொழுது பஸ்டாண்டின் உள்ளே இரண்டு புக் ஸ்டால்களும்,மூன்று டீஸ்டால்களும் ஒரு பால்க் கடையுமாக இருந்தது,இதில் பால்க்கடையில் கூட்டம் கொஞ்சம் அதிக மாக இருக்கும் ,காரணம் பால் பாக்கெட்டும் விற்றார்கள்.
போன மாதம் இரவு கடை பூட்டப்படுகிற நேரம் இருக்கும் அந்நேரம்தான் போயிருந்தான் புத்தகம் வாங்குவதற்கு.வழக்கமாக வாங்குகிற கடை என்ப தால் புத்தகம் எடுத்து வைத்து விட்டார் கடைக்காரர்.இவ்வளவு அவச ரமா வராட்டி என்ன,நாளைக்கி வாங்கிக்கிற வேண்டியதுதான ஓடியாபோகுது புத்தகம் என்றார்.நகரில் இலக்கிய புத்தகம் கிடைக்கிற இடம் பஸ்டாண்டில் இருக்கிற அந்தக்கடையும் முருகன் கோவிலுக்கு பின்னால் இருக்கிற பாய் கடையும்,மதுரைரோட்டில் இருக்கிற அக்கா கடையுமாகத்தான் இருந்தது.
அக்கா கடைக்கு இந்த நிமிடம் வரை கதவு கிடையாது.வெறும் சாக்கு மட்டு மே கதவாக தொங்க விடப்பட்டும் இருக்கிறது என்பார் தோழர்.ரோடு முக்கில் டானாப்பட அமைந்திருக்கிற அந்தக்கடையில் எப்பொழுதாவது பஸ்டாண்ட் கடைக்குப்போகமுடியாதநாட்களில்புத்தகம்வாங்குவான்,அப்பொழுதெல்லாம் அந்தக்கடைக்காரிபற்களில்கறை தெரிய அழகாகச்சிரிப்பாள்.கூடவே வெட்டப் பட்டிருந்த கிராப் தலை முடியும்,அகலமாய் ஊதிப்பருத்த முகமும்/
என்னசார்,வாங்கசௌரியமாஇருக்கீங்களா,,,?என்கிறகேள்வியுடன்ஆரம்பிக்கிற அவள் இவனுக்குத்தெரிந்து பத்து வருடங்களுக்கு முன் மிகவும் களையாக இருப்பாள்.அந்தக்களை இப்பொழுது எங்கு போனது எனத்தெரியவில்லை.ஏன் என பேச்சு வாக்கில் கேட்ட போது ஒரு நாள் சொன்னாள்.என்ன செய்ய சார் ரோட்டுக்கு வந்துட்டா எங்க பொழப்[பு இப்பிடித்தான் இருக்கு,நாலு பேரு வந்து போற யெடம்,இதுல நல்ல மனசுக்காரக்களும் வருவாங்க,நாரப்பய புள்ளைக ளும் வரும்.சில விருதாப்பயலுகதண்ணிமப்புலவந்துகடை முன்னால வந்து ரெட்ட அர்த்ததுல பேசி நிக்கும்,வீரம் காம்பிக்கும் பொம்பள சகவாசம் தேவைப் படுது,வர்றயான்னுவெளிப்படையாவேசைகையிலகேக்கும்.அந்நேரமெல்லாம் கிட்டத்தட்டஉயிர்போயிஉயிர் வரும்.என்ன செய்ய சொல்லுங்க,சில சமயம் அமைதியா இருந்துருவேன் மனசடக்கிக் கிட்டு,சில நேரம் செருப்பெடுக்க வேண்டியதா இருக்கும்.இதுல கம்முன்னு இருக்குற நேரம் பிரச்சனை எதுவும் இருக்காது,செருப்பெடுத்து காண்பிக்கிற நேரம் ஏதாவது ஒரு ரூபத்துல சின்னதாவோ பெருசாவோ பிரச்சன உருவெ டுத்து நிக்கும்/அப்படி நிக்குற நேரங்கள்லயெல்லாம் யேவாரம் கெட்டு போறது ண்டு.சமயத்துல போலீஸ் ஸ்டேஷன் வர கூட போயிரும்.இது எதுக்கு வம்பு நம்மஒடம்பு தோற்றந்தான அவுங்கள இப்பிடி பேசவும் யோசிக்கவும் வைக்குது, அதை மாத்திக்கிருவம் ன்னு மாத்திக் கிட்டேன்.
மொதல்ல இடுப்பளவு தொங்குன முடிய கிராப்பா வெட்டிக்கிட்டேன். அப்புறம் வெத்தல போட்டேன்,மனசுக்கும் ,ஒடம்புக்கும் ஒவ்வலைன்னாக்கூட பான் பராக்கு போட்டேன்.கனத்த கொரல்ல பேசப்பழகிக்கிட்டேன்.இதுல மத்த ரெண் டும் கைகுடுத்துச்சி.கனத்த குரலும் எடுத்தெறிஞ்ச பேச்சும் கை குடுக்கல. இப்பக்கூட வம்பு வருதுதா,ஆனா அது முன்னளவுக்கு இல்ல,என்ன செய்ய வேர்விட்டயெடத்துல இருந்து பிடுங்கி நட்ட யெடம் சரியில்லாததால இப்பிடி ஆகிப்போகுது பொம்பளைகளுக்கு.இதில் நானும் ஒருத்தின்னு வச்சிக்கலாம்.
வீட்ட விட்டு தெருவுல யெறங்குனா நெறைஞ்சி ஓடுற தண்ணியும் கண்ணுக் கெட்டுன வரைக்கும் பச்சையும் பயிருமா இருந்த ஊருல இருந்து இங்க வந்து ,,,,,,,,சரி அதுவும் ஓடிப்போச்சி வருசங்க,புள்ளைங்க வளந்து தோளுக்கு மேல் நிக்குது,அதுக வளர்ச்சியையும்,படிப்பையும் பாத்து சந்தோஷப்பட்டு மனச ஆத்திக்கிற வேண்டியதுதா, என்பாள்.
அந்தக்கடைப்பக்கமாய் போகும் போதும் வரும் போதும் எப்.எம் ரேடியோவில் சொருகிய பென் ட்ரைவிலிருந்து மென்மையும் சோகமும் கலந்த பாடல்கள் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் .அதற்காகவே அங்கு மாதா மாதம் ஒருபுத்தகம்வாங்கினான்,பஸ்டாண்ட் கடைக்காரர் என்ன வழக்கமா வாங்குற ஒரு புத்தகம் கொறையுதே எனக்கேட்ட பொழுது ஒரு விதமாய் சிரித்து சமாளித்தான்.
கை இறக்கிய முழுக்கை ஜிப்பாவுடன் அப்பாவியாகவும் பாந்தமாகவும் பதிலு க்குச்சிரிக்கிற அவரது வீட்டை ஒட்டி இருக்கிற தனியார் அலுவலகத்தில்தான் இவன் ஒப்பந்த முறையில் பணிபுரிந்தான்.
மாதச்சம்பளம் தவிர்த்து தீபாவளி பொங்கல் என்றால் அந்த அலுவலகத்தில் பணிபுரிகிற எட்டுப்பேரும் தருகிற போனஸ் மற்றும் ஊக்கத்தொகை,டீ காபி பலகாரம்எனஏதோகொஞ்சம்மனதை நிறைக்கும்,அவர்களுக்குள் எவ்வளவுதான் கோபமும் தாபமும் ஆதங்களும் இருந்த போதும் கூட உள்ளுக்குள் பூத்தி ருக்கும் நட்பும்உறவும் கூட எப்பொழுதும் நல்ல விதமாகவும் ஆத்மார்த்தமா கவும்/
இப்படி இருந்த நாட்கள் ஒன்றில்தான் அலுவலகத்திற்கு வந்திருந்தவரிடம் ஏற்பட்ட உரசலில் கோப வார்த்தைகளாய் கொட்டிகொண்டே அலுவலகத்தின் பக்கவாட்டாய் இருக்கிற பாத்ரூம் பக்கம் போய் விட்டான்.அங்கு போய் தொடந்த பேச்சின் மிச்ச சொச்சம் பாத்ரூம் காம்பவுண்ட் சுவரை ஒட்டிய வீட்டில் இருந்த புத்தகக் கடைக்காரருக்கு கேட்டு விட்டது போலும்.அல்லது அவரது வீட்டின் பெண்டு பிள்ளைகள் சொல்லியிருக்கலாம்.அடுத்த முறை கடைக்குபுத்தகம் வாங்கப் போயிருந்த போது கொஞ்சமாய் கோபமும் நிறைய வருத்தமும் பட்டார். கோபத்தை அடக்கியாளவும் அதை எந்த இடத்தில் வெளிப்படுத்த வேண்டும் எனவும் நிறைய பேசியவர் இனிமேல் இப்படியான வீண் பேச்சுக்கள் வேண்டாம் என்றார்.அந்த வேண்டாமில் பட்டுத்தெரித்த ஞாயம் ஞாயமாகவே பட்டது இவனுக்கு/
பஸ்டாண்டைகடக்கிற போதெல்லாமும்,அவரது கடைக்குச் சென்று புத்தகம் வாங்குகிற போதிலும் இவனுக்கு அவரின் சொல் கட்டு ஞாபகம் வராமல் இருந்ததில்லை.அந்தஞாபகத்துடன்அந்தஷோருமில்கொட்டேஷன் வாங்கிக் கொண்டுமற்றஇரண்டுஷோ ரூம்களிலும் கொடேஷன் வாங்கினான். கொட்டே ஷன் வாங்கியதிலிருந்து இரண்டு வாரம் மூன்று கம்பெனிக்கார்களும் தூங்க விடவில்லை இவனை/
மாறி மாறி போன், சின்னதாகஒரு கொட்டேஷன் வாங்கியது இவன் தவறா,,,. எனயோசித்துக் கொண்டிருந்த ஒரு நாளில் வண்டி ஷோ ரூமிலிருந்து போன். பேசியவள்இளம்பெண்ணாக இருக்க வேண்டும்போலும், தமிழ் தெரியாது போல பேசினாள்.நுனி நாக்கில்ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு/
இவனுக்கானால்அந்தப்பேச்சுகொஞ்சம் எரிச்சலூட்டி விட்டது. முதலில் நீங்கள் எந்த ஊர் எனச் சொல்லுங்கள். அப்புறமாய் உங்களிடம் வண்டி வாங்குவதைப் பற்றி நான் சொல்கிறேன் எனக்கொஞ்சம் எரிச்சலாய் பேசி விட்டான். பேசிய தோடு மட்டுமல்லாமல் நேரே ஷோரூமுக்கே போய் தன்னிடம் பேசிய பெண்ணைப்பார்த்து சப்தமும் போட்டு விட்டு வந்து விட்டான்.
ஆனால்இவன்நினைத்துகோபமாய் போன அளவிற்கு சப்தம் போடவில்லை, காரணம்அவளைப்பார்த்ததும் மனம் அமந்து விட கழிவிறக்கமே காரணம் எனலாம்,
தோழர் மாரியண்ணனை ஒரு முறைப்பார்க்கப்போயிருந்த போது அவர்கள் வசிக்கும் சுண்ணாம்புக்காரத் தெருவில்தான் அங்குமிங்குமாய் ஓடித்திரிந்தாள் அளவு காணாத சாயம் வெளுத்துப்போன நைட்டியுடன்/
தோழருடன் இவன் பேசிக்கொண்டிருக்கும் போது தோழரின் மனைவியிடம் வந்து கோலப்பொடிவாங்கிப்போனாள்.சிறிது நேரம் அவளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். நட்டுவைத்தபூச்செடிக்கு கைகால் முளைத்து அங்கு மிங்குமாய் ஓடித்திரிந்ததைப் போல் இருந்தது பார்ப்பதற்கு/
தோழர்தான் சொன்னார் ,இவள் எங்களது அருகாமைத்தெருக்காரி,இவளை எனது மனைவிக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆகவே எங்கள் வீட்டிற்கு இவள் வந்து விட்டால் எனக்கும் சரி எனது மனைவிக்கும் சரி பொழுது போவது தெரியாது, ஒரு தடவை இப்படித்தான் அவள் ஏதோ சிரிப்பாய் பேசப்போய் எனக்கு அழுகையே வந்து விட்டது.பயந்து போனாள் என் மனைவி,ஏன் இப்படி எனக்கேட்கும் போது தான் சொன்னேன், இவளப்போல நமக்கும் ஒரு பெண் பிள்ளை இருந்திருக்கக் கூடாதா,ஒரு தறுதலைப்பயலை பெத்து வச்சிக் கிட்டு, நாமபடுற பாடு வெளிய சொன்னா வெக்கக்கேடு,பத்தாவது படிக்கிற இந்த வயசுலயே தண்ணி சிகரெட்டுன்னு கெட்டு தூர்ந்து போயிட்டான். எல்லாம் சேர்வார் சேர்க்க,நான் தெருத்தெருவா போயி கோலப்பொடி வித்து ட்டு கொண்நாந்துபோடுற காசு இப்பிடி போதையிலயும் பொகையிலயுமா போகுது, இந்நேரம்இவன்ஒருபொம்பளைப்புள்ளையா பொறந்திருந்தா கழுதைய கட்டிக் குடுத்துட்டு நிம்மதியா இருந்திருக்கலாம்,நம்ம தலையில எழுதியிருக்கு இப்படியான புள்ளையவச்சிகிட்டுஅழுந்திச்சாவனுன்னுஎன்ன செய்ய, அத மாத்த யாரால முடியும்.சொல்லுங்க என்றார்.
இவன் கூடப்பொறந்த வந்தான இன்னொருத்தன் அவன் பாரு ஒழுக்கமா படிச்சிக்கிட்டு அவன் வாட்டுக்கு ஸ்கூலுக்குப்போயிட்டு எந்த வம்பு தும்பு மில்லாம வந்துக்கிட்டும் போயிக்கிட்டும்இருக்கான்.
இவன்போன நேரம் அதிகாலை ஐந்தரை மணியாய் இருந்தது, நேராகப்போய் ஜேம்ஸ் கடையில் ஒரு ஸ்டார்ங் டீ,அந்தபக்கம் போனால் சார்லஸ் கடை ஞாபகம் வந்து விடும் இவனுக்கு அல்லது வண்டி நேராக நங்கூரமிட்டு விடும் டீக்கடைக்கு.
முன்பெல்லாம் தங்கவேலு கடையில் குடித்த டீ சார்லஸ் கடைக்கு இடம் மாறிப்போனது,காரணம் பெரிதாக ஒன்றுமில்லை.தங்கவேலின் கடை பக்க வாட்டில் லாரி புக்கிங்க் ஆபீஸ் இருந்தது.அங்கு எந்நேரமும் மூடை இறக்கி யும் ஏற்றியும் கொண்டு இருந்தார்கள். இறக்கிய மூடைலாரி ஆபீஸிற்குள் ளும்ஏற்றபடுகிறமூடைகள்எங்காயினும்தொலைதூரஊர்களுக்குசெல்வனவாய் இருந்தன.அதனால்அங்கு எந்நேரமும் பரபரப்பாய் இருக்கும்,கடையின் முன் நிற்க இடமிருக்காது.சரி கடைக்குள்ளாவது உட்காரலாம் என நினைத்தால் அங்கும் இடமிருக்கவில்லை.சரி என்ன செய்ய சற்றே சங்கடத்துடன் வண்டியை நிறுத்தி விட்டு டீசாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வண்டியை அங்குமிங்குமாய் நகற்றச்சொல்லி சொல்லி விடுவார்கள் லாரி ஆபீஸ் காரர்கள்.இதற்கு சங்கடப்பட்டேதான் சார்லஸ் கடைக்குப்போனான்.அங்கு கடையின் முன்பாக இருந்த வேம்பு நிழலில் வண்டியை நிறுத்திக்கொள்ள ஏதுவாய் இருந்தது,வண்டியை நிறுத்த,கொஞ்சம் சௌகரியமாயும்பட்டது. தவிர அந்தக்கடையில் இல்லாத இனிப்பும் அதிரசமும், தேங்காய் பன்னும் இங்கு கிடைத்தது.இப்பொழுதெல்லாம் அந்தப்பக்கம் போய் விட்டாலே சார்லஸ் கடைக்கு டீகுடிக்கப்போய் விடுகிறான்,
எப்பொழுதுஅதிகாலைஅந்தப்பக்கம்போனாலும்சார்லஸ்கடையில் டீக்குடித்து விட்டுத் தான் மறு வேலை பார்ப்பான்.அது போலத்தான் தோழரைப் பார்க்கப் போயிருந்த அன்றும்,/
மேம்பாலம் வழியாகத்தான் சென்றான்.காலை வேளை யின்சிலுசிலுகாற்று உடல்தொட்டுசிலிர்க்கச்செய்ததுசற்றேஎனச் சொல்லலாம். வண்டியின் சீரான வேகம் மற்றும் ரோட்டின் அந்நேரமான வாகனப் போக்கு வரத்து எல்லாம் சேரஇவனைசிலிர்க்கச்செய்ததுசற்றே.வெள்ளைச்சட்டையும்கறுப்புக் கலர் பேண்ட்டும் நன்றாக இருந்தது இவனைஇவனே பார்த்துக்கொள்வதற்கு, மீண்டும் ஒரு முறைபார்த்துக்கொண்டான்.அடஆமாம் உண்மை முற்றிலும், என்ன கொஞ்சம் நரை கூடி கிழப்பருவம் வந்துவிட்டது,முன்பு போலெல்லாம் இப்பொழுது இல்லை.முன்பெல்லாம் வாரத்தின் மூன்று நாள் அல்லது வாரம் முழுவது மாய் கண்விழித்து இரவு செகண்ட் ஷோ பார்ப்பது வழக்கம்/மறு நாள் காலை வழக்கம் போல சீக்கிரம் எழுந்து விடுவான்.உடலில் பெரிதாக ஒன்றும் அலுப்புத்தெரியாது.இப்பொழுது அப்படியாய் இருக்கவில்லை உடம்பு/ கிழக்கே நடந்தால்மேற்கேஇழுக்கிறது,மேற்கேநடந்தால்கிழக்கேஇழுக்கிறது. இழுவை யாய் இழுக்கிற வாழ்க்கை.
பால்க்கார்களின்சைக்கிளின்ஓட்டம்குறைந்துஇருசக்கரவாகனங்களில்பயணித்துக்கொண்டிருந்தார்கள்,தெப்பத்துஇறக்கத்தில்இருக்கிறஇளையராகவன் டீக்கடை க்கு பால் ஊற்றுகிறவர் சைக்கிளில்தான்வழக்கமாக வருவார்,
அவர் ரிடையர் பாலிடெக்னிக்வாத்தியார்.அதிகாலையில்ஆறுமணிகெல்லாம் வந்துவிடுகிறார்,கடைக்கு ஒண்ணாம் நம்பர் பால் டிப்போவிலிருந்து பால் எடுத்துவருகிறார்.அளவாக/ பத்து லிட்டர்பால்மட்டுமே எடுப்பார், குறிப்பிட்ட சில வீடுகளுக்கு 8 லிட்டர் போக டீக் கடைக்கு இரண்டு லிட்டர்.முடிந்தது அவரது வியாபாரம்,வெள்ளை டவுசர் வெள்ளைச்சட்டைதான் போட்டிருப்பார். அதிகம் பேச மாட்டார்,அதற்காக குறைவாகவும் பேச மாட்டார்,டீக்கடைக்கு பால் ஊற்றும் போது அவரிடமிருந்து பொங்கி பிரவகிக்கும் பேச்சு ஆச்சரியப்பட வைத்துவிடுவதுண்டு அந்நேரம்அங்கேடீக்குடிகிக்கிறபலரை/
அவர் டீக்குடித்துக்கொண்டிருக்கும் போதோ அல்லது டீக்குடித்து விட்டு கிளம் புகிற போதோ யாராவது தெரிந்தவர் வந்து விட்டால் டீக்குடியுங்கள் என்பார் மறுப்பவர்களிடம் கொஞ்சோண்டு பெரு நீர்,குடித்தால் சிறிது நேரத்தில் சிறு நீராய் வெளிவரப்போகிறது,இதற்குப்போய் ஏன் இவ்வளவு சங்கடம்,,,என்பார்/
அவருக்கு சொந்ததில் மூன்று வீடுகள் இருந்தது அவரது தெருவிலேயே,/ வேறு எங்காவது கட்டி வைத்துக்கொண்டு அதைப்போய் பார்க்க வைக்க ரொம்பவும் சிரமம்,இதனால் நம்ம சொந்தக்காரக இருக்குற யெடத்துலயே நம்ம வீட்டக்கட்டி வாடைகைக்கு விட்ரலாம்ன்னு ஒரு யோசனைதான்,இதுல நான் இப்ப இருக்குற வீடு கட்டுனது,வாடகைக்கு விடிருக்குற ரெண்டு வீடும் வாங்குனது பாத்துக்கங்க எனச் சிரிப்பார்.அவருக்கு இருக்குற வசதிக்கு ஏன் இப்படிஅலையணும்,காலாட்டிக்கிட்டுவீட்டுலஉக்காந்துசாப்புடுறதவிட்டுட்டு,,,/ எனச்சொல்பவர்களுக்கு அவரது பதிலாய்,,,, ஒன்றுதான் இருந்தது,காசுக்காக செய்றதில்லப்பா இது/நாம் என்னா பெரிசுசா அலைஞ்சு வச்சா யேவாரம் பண்ணப்போறோம்.பதிவா நாலு வீடு,இந்தக்கடை, அவ்வளவுதான, சாய்ங் காலம் அது போல்,இன்னும் சொல்லப் போனா சாய்ங்காலம் ஊத்துற பாலு இந்தக் கடைக்குக்கிடையாது.இதுக்கு எனக்குஆகுறநேரம்ஒண்ணரை மணி நேரம்தான்/
காலையில் முக்கா மணி நேரம்,சாய்ங் காலம்முக்கா மணிநேரம்,, சைக்கிள எடுத்துட்டு கொஞ்சம் மிதி அவ்வளவுதான். இதுக்குன்னு பெரிய மெனக் கெடல் ஒண்ணும் கெடையாது.தவுர வீட்ல ஒக்காந்துக்கிட்டு சும்மா இருக்குற துக்குநாலுபேரபாத்தமாதிரியும்ஆகிப் போச்சி, பொழுதும் போகும் ,ஒடம்புக்கு ஒருசின்னஎக்ஸர்சைஸ்ஆகிப்போச்சி/மனசும் ரிலாக்ஸாகிப்போகும்/என்பார்,
பாலத்தின்மீதுபோகும்போதுமற்றபால்க்கார்களைப் பார்க்கும் போது அவரது ஞாபகம் வந்தது,பாலம் இறக்கம் டீக்கடை போய் நின்றதும்/
பச்சைக்கலர்வேண்டாம்,கறுப்புக்கலரில்வாங்கிக் கொள்ளலாம், போன தடவை தான் பச்சைக்கலரில்வாங்கினோம்.இந்த தடவையும் அதே கலரில் வாங்கு வதா வேண்டாம்,என நினைத்துச்சொன்னபோது இளைய மகன் வேண்டாம் அந்தக் கலர்.வேண்டுமானால் ஊதா நிறத்தில் வாங்கிக் கொள்ளலாம் என சொன்ன போது இவனுக்கு ஊதாக்கலர் பிடிக்கவில்லை.சரி எனசீட்டுக் குலுக்கிப் போடாமல்வீட்டில்அனைவரின்சம்மதத்துடன் வாங்கிய வண்டி.
என்னமனைவிஸ்கூட்டிவாங்கினால்எனக்குகொஞ்சம்உதவியாய் இருக்குமே எனச்சொன்னாள்..இவன்தான்.வேண்டாம்அதுஇப்படிஒருவண்டியைவாங்கினால் வீட்டில்எல்லோரும் ஓட்டிக்கொள்ளலாம் என நிரம்பித் ததும்பிய மனோ நிலையில் வாங்கிய வண்டி அது/

பச்சைக்கலர்காட்டிச்சிரித்துக்கொண்டிருக்கிறவண்டிஅது.ஏன்அப்படிசிரிக்கிறது எந்தஅளவும்நாணமுமற்றுஎன்றுஅதனிடம் கேட்டபொழுதோ அல்லது அதைப் பார்த்துக் கொண்டிருந்த கணங்களிலோஅதுகண்சிமிட்டிச்சொன்ன செய்தி யாய் இதுதான் எப்பொழுதும்மனம்தாங்கிநிற்கிறது/

4 comments:
வணக்கம்
நன்றாகஉள்ளது.. படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்.த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அருமை
வணக்கம் நாகேந்திர பாரதி சார்,
நன்றி வருக்கைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment