பெயர் பலகை,,,,,,
கொஞ்சம் முரடுபட்டுத்தான் தெரிகிறது.நரம்புகள் புடைத்துத் தெறிப் பது போலவும் உருவேறியிருக்கிற கை எக்குப்போலவுமாய் நீட்டிக் கொண்டிருக்க கோழியை உறிக்கிறாள்.
பக்கத்தில் கோழி வெட்டுகிற வட்டக்கட்டை மீது கூர்மை பாய்ந்த கத்தி. கொஞ்சம் பிசகினாலும் கையை பதம் பார்த்து விடக் கூடும்.
RS பிராய்லர்ஸ் என கடையின் பத்தடி செவ்வக அகலத்துடனுமாய் கூரை வேயப்பட்டு கூரையின் மேல் கடையின் பெயர் தாங்கிய பலகை நின்றதாய்.மஞ்சள் பெயிண்ட் அடிக்கப்பட்டுசிவப்பு நிறம் பொரித்திருந்தஎழுத்துக்கள்.
அதென்னதெனத்தெரியவில்லை,சிவப்புக்குஅப்படிஒருதனித்தஅடை யாளம்.?அடர் நிறங்கள்பல கொண்டிருக்கிற அடையாளங்க ளில் சிவப்பு முதன்மை பெற்று தெரிவதாக அவனுக்கு. பெயர் தாங்கிய பலகைஅங்கங்கேபள்ளமும்,மேடுமாகவும்,புள்ளிவைத்தும்நெளிந்துமாய்/ பழைய தகரமாய் இருக்க வேண்டும் போல,காற்றுக்க்கு லேசாக தலை ஆட்டியது.
அவர்கள்பட்ஜெட்டுக்குஇதுதான்முடிந்திருக்கிறதுபோலும்.”ஏதோ ஒரு அடையாளத்திற்குதானே இது போதும்” என அவர்கள் நினைத் திருக்கலாம்.ஆனால் போர்டு பார்க்க ரொம்ப நன்றாக இருந்தது.
கோழிகள்,கடைக்கானமூலப்பொருட்கள்,கூரைவேய,,,,,,,,,இத்தியாதி, இத்தியாதி என கணக்குப்போட்டுப் பார்க்கையில் ஏதாவது ஒன்று பெயரளவிற்கு செய்து முடிக்கும் படி ஆகி விடுகிறதுதான்.அது புதிதாக திறக்கிற கோழிக்கறி கடையிலிருந்து திருமண வீடுகள் வரைஇப்படி ஆகிப்போகிற இனிய விபத்தாய் மாறிப்போகிறது.
“,,,,,,,,,,,,,,பிராய்லர்ஸ்”என போர்டு வைக்கப்பட்டகடையின்முன்பாகத் தான் நிற்கிறேன்.
சீக்கிரம் வாருங்கள்.எவ்வளவு நேரமாய் நிற்பது காத்துக்கொண்டு. நான் வந்து ஒரு மணிநேரம் ஆகப்போகிறது. போரடிகிறதே ஏன் சும்மா நிற்பானேன் என இரண்டு டீ குடித்து விட்டேன்.அப்படியே தெரு முக்கிலிருக்கிற பால்ப் பண்னை வரை போய் KSR யும் பார்த்து விட்டு வந்து விட்டேன்.,
அன்பின்மனிதர்அவர் அவரைப்போன்ற மனிதர்களைப் பார்க்கிற போதும்,அவர்களிடம் பேசி விட்டு வருகிற போதுமாய் மனதில் ஒடுகிற சம்பவங்களின் தொகுப்பான கடந்த காலகசப்புகளையும், இனிப்புகளையும் மறக்க இயலாதவனாக ஆகிப் போகிறோம்தான்” என்கிறஇலக்கணத்திற்கு உட்பட்டவனாய் நான் வந்து கொண்டிருந்த வேளையில் உன்நினைவு சுமந்த மனதை உள்தாங்கி நிற்கிறேன்.வா நண்பா சீக்கிரம்” என எனது முதுகுக்குப் பின்னால் கேட்ட பூங்கொத் து பேச்சின் தூவலை தாங்கியவனாய் நின்ற என முன்னே விரிந்த கடையில் கோழி உரித்த பெண் “லெக் பீஸ் வேணுமா சார்,என இரண் டைப் போடுகிறாள்.
ஒல்லியான உருவத்தில்,புது நிறமாய் அடர்கலரில் உடை அணிந்து கொண்டு நின்ற அவள் வியர்த்துத் தெரிந்தாள்.
இடது ஓரம் உரித்து குவிக்கப்படிருந்த கோழிகள்.அதை வெட்டுவதற் காய்சற்றுதள்ளிவைக்கப்பட்டிருந்தவட்டக்கட்டை.அதன்மீது இருந்த கத்திகள்இரண்டு.
மேலேவேயப்பட்டிருந்தகூரை,அதில்முடியிடப்பட்டிருந்த கயிறுகள். அதில்ஒட்டித்தொங்கிக்கொண்டிருந்தநூலாம்படைபெரிய,பெரியஈயப்
பாத்திரங்கள்,அதில்ஒன்றிரண்டில்பாதியளவுநிரப்பட்டிருந்ததண்ணீர் எனநிரம்பியிருந்தகடைக்குபின்னால்தான் அவர்களது வீடும் காட்சிப் பட்டுத் தெரிகிறது.
வீட்டின் முன்னால் சும்மாக்கிடக்கிற வெளியை மடக்கி இப்படி அசைவம் செய்யும் கடையாய்ஆக்கி இங்கு24மணிநேரமும்கோழிக் கறிகிடைகும்என போர்டுதொங்கவிட்டிருந்தார்கள்.
அந்த விட்டிருந்தலை தாங்கி கையில் கண்ணாடி வலையலும், கத்தி யுமாய்நின்ற அவள் எந்நேரம் கடை வேலையை முடித்து விட்டு எந்நேரம் வீட்டு வேலைகளைப் பார்க்கச் செல்வாளோ?
5 comments:
அருமை அய்யா...
வணக்கம் ஸ்ரீமலையப்பன் ஸ்ரீ ராம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் நாகேந்திர பாரதி சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
ரொம்ப நல்லாயிருக்கு...
வணக்கம் பரிவை சேக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment