செல்கிற வழி வேறெதுமாக அல்லாமல் வடக்குவெளி வீதியாகவே இருந்தது. கட்டம் கட்டிய சதுர சிமெண்ட் பலகைகளும்சீராகப் பூசிய வழவழப்பான சிமிண்ட் சாலையும் பார்க்க நன்றாக இருந்தது.
அந்தஊரின்பெரும்பான்மையினரும், பெருந்தனக்காரர்களும் வசித்த வீதிகளை கடந்து கீறிச் சென்ற சாலையது.
இதேபோலவேஅச்சுஅசலாகT K R ரோட்டில் இருக்கிற வீடுகளைக் காணலாம் அங்கு பெரிது பெரிதாய் உருவம் காட்டியும்,தனது ஆகுருதி காட்டியுமாய்/
பெரும்பான்மைவீடுகள்பச்சைக்கலர்பூசியும்காகிதபூமரங்களைவாசல்முன்சுமந்துமாய்காட்சியளிக்கும். ஒரே ஒரு வீட்டில் மட்டும் காகித பூ மரத்தின் மீது ரோஸ்க்கலர் பூக்கள்சுமந்தமரம்ஒன்றுபற்றிப்படர்ந்துதொங்கும்.அதன்பெயர்தெரிய வில்லை, இப்போ தைக்கு ரோஸ் மரம் என வைத்துக்கொள்ளலாம்.
அந்த மரத்தைப்பார்த்தவாறு அந்த வழியாக போகும் போதெல்லாம் ஒன்று சைக்கிளின் வேகம்மட்டுப்பட்டுவிடுகிறதுஅல்லது இவனாக சைக்கிளைவிட்டுகீழிறங்கிஉருட்டஆரம்பித்துவிடுவான். அவ்வளவு ஒருஈர்ப்பு இருந்தது அந்தச் செடிகளின் மீதும் பூக்களின் மீதுமாய்/ அந்த ஈர்ப்பு செடியுடனும் பூக்களுடனும்மட்டுமே நின்றுபோகிறது வீட்டுக்காரர்கள் மீது அல்ல.
அவர்களைஒருமுறைகூட பார்த்ததில்லை. வளைத்துக் கட்டப்பட்டி ருக்கிறகாம்பவுண்டுக்குள்இருந்தசெடிகளைஇப்போதெல்லாம்பார்க்க முடிவதில்லை.வெட்டிஅகற்றிவிட்டார்கள் போலும்.
காகிதபூமரங்களையும்,முல்லைக்கொடிகளையும்,இது மாதிரி பெயர்
தெரியாதரோஸ்ச்செடிகளையும்சுமந்துநின்றவீடுகளின்முன்முற்றங் களும்வாசல்களும் இப்போது வெற்று வெளி காட்டிச் சிரிப்பவை யாக/
இவன்சொல்வதுபத்துவருடங்களுக்குமுன்பாக.அப்படியொருபாதிப்பையும்தோற்றத்தையும் ஏற்படுத்திய வீதியாக இருந்த வடக்கு வெளி வீதியில் மரங்களை நட்டால் எப்படி யிருக்கும்?நட முடியாது அதுதான் சாக்கடை ஓடுகிறதே வடக்குவெளி வீதியின் இரண்டு பக்கமும் தன் திறந்த மேனி காட்டி/
நேற்றுக்கூடப்பார்த்தான்.கௌவர்மெண்ட்ஆஸ்பத்திரியின்காம்பவுண்ட் சுவருக்கு வெளியே நீண்டிருந்த மரக்கிளைகளையெல்லாம் வெட்டி இருந்தார்கள்.தனது கைகளை நீட்டியது போல் கிளைகளை நீட்டித் தெரிந்தபோது இருந்த அழகு அதை வெட்டிய பின்பு காணாமல் போனது. வெட்டப்பட்டவையெல்லாம் 50வருட வாழ்நாள்சரித்திரம் தாங்கியமரங்கள். வெட்டுப் பட்ட இடமும் அதில்நீட்டித்தெரிந்த மரச் செதில்களும்ரத்தம் கசிந்தது போலவும் வெட்டுப் பட்டகிளைகள் கீழேதரையில் கிடந்து உயிர்துடித்துக் கிடப்பது போலவுமாய் காட்சிப் பட்டுத் தெரிகிறது.அதிகாலை வேளையில் கீச்,கீச்சென கத்தித் திரியும் குருவிகளும், அடையும் பறவைகளும் இன்னும்பிற சின்னச் சின்ன ஜீவராசிகளும்இனி எந்தக்கிளைதேடி அலையுமோ? பறவைக ளின் சப்தம் நிறைந்த இளம் காலைகள் இனி வெட்டப்பட்டக் கிளைக ளைத்தேடிஅலையுமோ?வெட்டியஅரிவாளும்வெட்டுப்பட்டமரங்களும் பேசிக்கொண்டமௌன மொழிகள் இப்படித்தான் ரத்தம் பூசி நின்றதா எனத் தெரியவில்லை.
வழக்கத்திற்கு மாறாக இன்று அலுவலகம் விட்டு சீக்கிரம் வந்து விடுகிறான். 5.00 மணிக் கெல்லாம் வந்தவன் 5.30 க்கெல்லாம் வீடு வந்து விட்டான்.இவன் வந்த போது மனைவி வீட்டில் இல்லை. எங்காவதுகடைக்குப்போயிருப்பாள்ஒரு துணிபையையும்,கையகல பர்சையும் வைத்துக் கொண்டு கடைக்குகிளம்பி விடுவாள்.
அதுஒருமனது.மெனக்கெட்டு,மெனக்கெட்டு,தேடித்தேடிநுணுகி,நுணுகி,
விசாரித்து விசாரித்து எதையும்பார்தாய்ந்து வாங்கிற நல்மனது. அரை கிலோ கறிவாங்க நாலு கடையாவது ஏறி இறங்குவாள் எனப்பெயர் அவளு க்குஅந்தவீதியில்/ எதையும்நல்லதாகவே வாங்க வேண்டும் கூடுமான வரைஎன்கிறமுன்முனைப்பு உண்டு அவளுள் காய்கறி வாங்குவ திலிருந்து, சேலைதுணிமணி வாங்குவது வரை அப்படித் தான் அவளது இயல்பாய் இருந்தது.
ஆனால் போன மாதம் எடுத்த சேலைதான் கொஞ்சம் பிசகாய் எடுத்து விட்டாள்.1500ரூபாய்க்கு மதிப்புப்பெறாத்சேலையும் அவளது மேனி நிறத்திற்கு ஒத்துவராத கலரிலுமாய் எடுத்து வந்திருந்தாள். இவன்தான்வேண்டாம்எனச்சொல்லிதிரும்பக்கொடுத்துவரச்சொன்னான்.
கடைக்காரர்கூடக்கேட்டார்இவனிடம்பின்னொருநாளில்.புடவையின் விலை அதிகம் என ரிட்டர்ன்கொடுத்து விட்டீர்களாஎன/ அதற்கு ஒரு வாறாய் சிரித்துச் சமாளித்தான். ஒரு வேளை இவனது உள் மன கிடக்கையை பிரதிபலித்துவிட்டாரோ/
கடையில்பார்ச்சலாய்வாங்கியவடைகள்ஆறுவாசம்வீசியும்தன்இருப்புக் காட்டியுமாய் தோள்ப் பைக்குள் அடங்கிக் கிடந்தது.மூடிய ஜிப்பின்பொடிப்பற்கள்வழியேகசிந்து வந்து காற்றோடு கைகோர்த்து நாசியை துளைத்த நேரம் மகனிடமிருந்து ப்ளாஸ்டிக் கப்பில் தண்ணீர் வாங்கி கால் கழுவுகிறான்.வீட்டிற்கு வெளியே வாசலில் வைத்து இவன் கால் கழுவுகிற அழகையும் (?) நல்லதனத்தையும் பார்த்த மகன் ” இன்னோரு கப்பு தண்ணி தர்ரேன், கூடவே சேத்து மூஞ்சியவும் கழுவீட்டு வாங்க” என்றான்.
எட்டாம்வகுப்புப்படிக்கிறான்.ஒல்லியாய்வளர்ந்துநிற்கிறஒடிசலான
உடலுக்குச்சொந்தக்காரன். சாப்பாட்டிற்கு காய்கறி, காய்கறிக்கு சாப்பாடு என எதுவும் ஆகாது அவனுக்கு, ஸ்ஸ்ஸ்ஸ்,,,, மூச், தூரப்போய்விடுங்கள்என்று விடுவான்.பின் உடம்பு எப்படியிருக்கும் எனஎண்ணத்தோணுகிறதுஅவனைப்பார்க்கிறகணங்கள் தோறுமாய்/ ஆனால் அந்த அளவுக்குப் பரவாயில்லை.ஸ்கூலில்ஸ்போர்ட்ஸ் ரசனை எக்ஸட்ரா, எக்ஸட்ரா எனத் ததும்பிக் காணப் படுகிற ரசவா தியாய்/ வீட்டில் ஏதாவது ஒரு பொருள் ரிப்பேர் ஆகிப்போனால் அதை கழட்டி மாட்டுவ திலிருந்து E S P N லும் ஸ்டார்ஸ் போர்ட் ஸிலும் விளையாட்டுகளை விரும்பிப் பார்பவனாய். என்ன முன்பு சிறுவயதில் இருந்த ஒரு தேடல் இப்போது மிஸ்ஸிங்/ பள்ளிகளும், படிப்பும் அதை சரியாக புள்ளி பிசகாமல் செய்து விடுகிறது போலும்/ ஒன்றே ஒன்றை மட்டும் இவன் சொன்னான் மகனிடம்,”ஒடிந்த கைஉனக்கு பார்த்து விளை யாடு, கேம்ஸ் பீரியடில் அதிகம் ரிஸ்க் எடுத்துக்கொள்ளாதே” என/
பாய் கடையில் வாங்கிய வடையது. தியாகு மாஸ்டர்தான் வடை கட்டிக் கொடுத்தார். எப்போது போனாலும் சரிஅந்தக் கடைக்கு அவர் தான்இவனுக்குவடைகட்டி கொடுப்பது.அது தற்செயல் ஒற்றுமை யா அல்லதுதிட்டமிட்ட நிகழ்வாதெரிய வில்லை. எதுவானாலும் இப்படி ஏற்படுவது அபூர்வமே/தினசரி அல்ல வாரத்தின் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஏற்படுகிற இந்தநிகழ்வு இவனைஅவரிடம் ஈர்ப்பு ஏற்படச் செய்து விடுகிறதுண்டு அந்தக் கணங்களில்/
நேற்றைக்கு முன்தினம் அவரைப்பார்த்தபோது அவர் கேட்ட ரூபா யைக்கொடுக்கமறந்துபோனான்.எப்போதாவதுஒருமுறைகைமாத்தாக க்கேட்பார். அதுகைமாத்தா அல்லது திரும்பிக் கொடுக்காமையா?, இவனும்அதைஎதிர்பார்த்துதருவதில்லை,அவரும்அப்படிதிருப்பிக் கொடுக் கவில்லை என வருத்தப்பட்டதாயும் தெரியவில்லை.
அவருக்குஒருமகள்உண்டு.இரண்டாவதுபெண்.முதலாவதாய்பையன். பெண் வேண்டும் என பிரயாசைப்பட்ட சமயத்தில் பிறந்தவள். ஆக வே மிகவும் செல்லமாக வளர்த்தார். அவளுக்கு தான் காய்ச்சல் என பெட்டில் சேர்த்திருப்பதாகஒரு நாள் மாலையில் கடைக்கு டீக் குடிக்க போயிருந்தநேரம்மிகவும் தயங்கித் தயங்கி 200ரூபாய் கிடைக்குமாஎனக்கேட்டார். எப்போழுதும் அப்படிக்கேட்பவரில்லை. தீபாவளி,பொங்கல் ஏதாவதுபண்டிகை நாட்களில் முன்னறிவிப்பு ஏதும் இன்றி ”என்னண்னே”என்பார்,நாமாக புரிந்து கொள்ள வேண் டும். அவ்வளவே/ அப்படி ஏதும் சமிக்சை காட்டாமல் ஒரு சின்ன முன்னறிவிப்பு கூட ஏதும் இல்லாமல் இப்படிவந்து நின்ற போது ஆச்சரியமாக இருந்தது.
அவரை அனுப்பிவிட்டு பழங்களும்ஹார்லிக்ஸ்பாட்டிலுமாக போய் ஆஸ்பத்திரியில் போய் நின்ற போது நைந்த துணியாய்க்கிடந்தாள் அவரது மகள். நர்ஸைப் பார்த்துவிபரம் கேட்ட போது ஒருவாரம் ஆஸ்பத்திரியில்இருக்கவேண்டி வரும் ,சத்தில்லாத உடல், சட்டென நோய்வந்துதொற்றிக்கொள்கிறது.என்றாள்.அவள்உடல்தேறிவருவதற்கு முன் இரண்டு முறைபோய் பார்த்து விட்டுவந்தான்.12 வயது இருக்க லாம் அவளுக்கு. ஆனால் பார்ப்பதற்கு ஏழு வயது பெண் போல காட்சியளித்தாள். அவ்வளவு பூஞ்சை உடல், இவனுக்குக் கூட ஆசை மிகுந்த ஒரு எண்ணம். கல்யாணம் செய்தால் இந்த மாதிரி ஒரு பெண்ணைத்தான் கட்டிக் கொள்ள வேண்டும் என. அன்று துளிர் விட்ட எண்ணம் திருமண நாள்வரை மட்டுப்பாடாமல் இவனுள்/
அந்தக்கடையில் அவரேதான் டீ மாஸ்டராயும் வடை போடுகிறவரா யும்.மாஸ்டர்கள் பெருத்துப் போன தேசத்தில் இவரும் ஒரு மாஸ் டராய் தன் பணியை செவ்வனே செய்த வாறும் காலம் தள்ளிய வாறுமாய்/கல்லாவிலிருந்து காசு எடுத்துப்பொய் சரக்கு வாங்கி வருவதிலிருந்து வெங்காயம் நறுக்கி பச்சைமிளகாய் அருவி,கறி வேப்பிலை மல்லி இலைகளை கிள்ளியும், உருவிப் போட்டு மாவு பிசைந்து அடுப்பு மூட்டி வடையும், பஜ்ஜியுமாய் எண்ணெய் மிதக்கிற சட்டியிலிருந்துஅரித்துஎடுப்பவர்அவரேயாகிப்போகிறார்.மந்திரமும், மாற்றுருவும் யாரும் சொல்லா மலும், பிசைந்து உருவாக் காமலும் தானாய் உருவாகிப் போன அல்லது மாற்றுருவான ஒரு காட்சி ஊடகமாய் பிரிகிற பொழுதில் இவனது இருப்பு அங்கு நிலை கொண் டிருந்தது.
அலுவலக பணி நிமித்தமாய் போய் வருகையில் அலுவலகத்தில் இளம் பெண் ஒருவள் தனது செல்போனில் சத்தமில்லாமல் பாடல் கேட்டுக்கொண்டிருந்தாள்.எல்லாம் மென்மை ததும்புற காதல் பாடல்களாகவே இருந்தன.அது சரி அந்த வயதில் அதுதானே பாடு பொருளாய் இருக்கிறது.
கழுவிய காலின் ஈரமும் முகத்தில் வழிந்த நேர்கோடுகளும் கை கோர்த வேளையில் பஜாருக்கு போய்வரலாம்என்கிற நினைப்பு மேலோங்ககிளம்பி விடுகிறான்,
பஜார்ப்பக்கம் சென்று ஒரு மாதத்திற்கு மேலிருக்கலாம்.இப்படியே விட்டால் பஜாரின் முகம் மறந்து விடக்கூடும். தேன்கனிஸ்டோர் ஜவுளிக்கடைஇரண்டுக்குமாய்போய் விட்டு அப்படியே டெலிபோன் பில்லையும் கட்டிவிட்டுவரலாம் என்கிறநினைப்பில் பஜார்ப்பக்கம் சென்று விட்டான் தனதுஇருசக்கரவாகனத்தில்/
ஒர்க் ஷாப்க்காரர் இன்மேல் இது போல அடிக்கடி ரிப்பேர்வரத் தான் செய்யும்,வாங்கி ஐந்து வருடங்களுக்கு மேலாகிப்போனதில்லையா, பேசாமல் புதிதாய் பெரியவண்டிவாங்கி விடுங்கள் அதுதான் நல்லது என்றார்.
முன்பெல்லாம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பஜார்ப்பக்கம் சென்று வருவான். இப்போதெல்லாம் அப்படி முடியவில்லை, ரயில் வே கேட் அடைப்பில் நின்ற போது கையேந்திய முதியவளைப் பார்க்கையில் மனம் பிசைகிறது.அருகில் நின்ற டவுன் பஸ்ஸிலி ருந்து வந்த பாடல் மனம் கவ்வ ரசிக்க முடியாமல் போகிறது.
டெலிபோன் பில் கட்டப்போகையில் அங்கு ஒருவர் மட்டுமே இருந்தார்.சென்ற மாதமோ அல்லது இரண்டு மாதங்களுக்குமுன்பாகவோசென்றபோதுஅங்குவேலைபார்த்த பெண் வருத்தப்பட்டதுஅவனுக்குநினைவுக்குவந்தது“சார்நீங்கபில்லுகட்ட
வந்தீங்கன்னு தெரியுமா, இல்ல கையில கத்தியோட வந்தீங்கன்னு தெரியுமா” என்றார். அவளது பேச்சி லிருந்த உள் ஞாயத்தை உணர முடியாமல் இல்லை.ஒற்றைஆள், தனிமைச் சூழல், கடந்து விட்ட மாலை நேரம், இருட்டிவருகிற பொழுது இன்னும்,இன்னமுமான பணிச் சூழலும் கூட அவளை இப்படி பேச வைத்து விடுகிறது.
பில் கட்டி விட்டு வெளியே வருகையில் தெரிந்த பணியாள் புன்ன கைத்தார். இவனும் பதிலுக்கு ஸ்னேகமாய் சிரித்து விட்டு நகன்றான் நல்லாயிருக்கீங்களா என்கிற வார்த்தை யுடன்/
தேன்கனி ஸ்டோரில் நின்றபோது போன் பண்ணிய மனைவி வாங்க வேண்டியபொருட்களைஞாபகப்படுத்தினாள்.கூடவேநாலாம்வீட்டுப் பாட்டிக்குஹார்லிக்ஸ்பாட்டில் வாங்கிக் கொள்ளச் சொல்லிச் சொன் னாள். பிள்ளைகளற்ற முதிய தம்பதிகள், சிரமத்தை மடியில் கட்டிக் கொண்டு தனிமையில் வாழ்பவர்கள்.
அவர்களது ஞாபகத்துடனும் நினைவுடனுமாய் மனைவி சொன்ன பொருள்களையும், கூடவே ஹார்லிக்ஸையும் வாங்கிக்கொண்டு கிளம்பும் போது இவன் சென்ற பாதை வேறாக அல்லாமல் வடக்கு வெளி வீதியாகவே இருந்தது.
12 comments:
யதார்த்தம் பேசும் பதிவு
தமிழ் மணம்
ஒரு மனிதனின் வாழ்க்கையோடு ஒன்றிய வடக்குவெளி வீதியும் பூக்களும் வடையுமாய் அழகாய் பயணிக்கும் கதை...
அருமை அண்ணா...
வணக்கம் கில்லர்ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
இவ்வாறான நிகழ்வுகளை நான் பிறந்த கும்பகோணம் போகும் ஒவ்வொருமுறையும் எதிர்கொள்கிறேன், மனதளவில். நன்றி.
வணக்கம் டாக்டர் ஜம்புலிங்கம் சார்
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/
பயணத்தை ரசித்தேன் ஐயா...
பயணத்தை நானும் ரசித்தேன்நண்பரே
நன்றி
தம +1
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
மாறாத எதார்த்தம் இன்னும் ஐயா.... நன்றாக இருந்தது..
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் ஜெயசீலன் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment