25 Nov 2015

விழியில் விழுந்து,,,,,,,

குடிக்க நினைத்த டீயின் மிடறுகள் மறந்து போகஅப்படியேநிற்கிறேன்பாடலை கேட்டவாறே/

போக்குவரத்துப்பேருந்து அது.நான் சென்ற காலை 10.55 மணிக்கு ரயில்வே கேட் அடைப்பில் வரிசையாக நின்ற வாகன்ங்களில் அதுவும் ஒன்றாய் தன் இருப்பு காட்டியும் பயணிகளின் நிலை காட்டியுமாய்/

பட்டேல் ரோடு கடந்து மெயின் ரோட்டை முத்தமிடப்போகிற திருப்பத்தில் இரு சக்கர வாகனத்தை திருப்பிய போது அடைக்கப்பட்டிருந்த ரயில்வே கேட் கண்ணில் படுகிறது. எனக்கு நினைவு தெரிய இழுத்துஅடைக்கப்படுகிற கேட்டாகவேஇருந்தது. எப்படியும் குறைந்த்து பத்தடி நீளத்திற்காவது இருக்கிற அந்தஇரும்பு கேட்மூடும் போதும் ,திறக்கிற வேளையிலும் அருகில் வேறு யாரையும் அனுமதித்த்தில்லை கேட் கீப்பரைத்தவிர்த்து/

நான் இரு சக்கர வாகனத்தை நிறுத்திய இடம் ரோட்டின் இடது புறமாய் இருக்கிறது. நின்ற இடத்தில் நிழல் இல்லை என்றாலும் கூட சற்றுத்தள்ளி தன் வளர்ச்சி காட்டி நின்றிருந்த புங்க மர நிழலில் நிற்கிறேன்.அந்த நேரத்தைய காலை வெயிலுக்கு அது இதமாய் இருக்கிறது. காற்றுதந்த இதத்தை விட என்னிடம்கை ஏந்தி வந்த மூதாட்டிக்கு தர என்னிடம் சில்லறைகள் இல்லை. பேருந்துநிறுத்தங்களிலும், அடைக்கப்பட்டிருக்கிற ரயில்வே கேட் அருகிலு மாய் இது மாதிரியான மூதாட்டிகளைப் பார்ப்பது தவிர்க்க இயலாததாகவே/

என்னிடம்கொடுக்கசில்லறைஇல்லை.என்னைவிட்டுசற்றுத்தள்ளிபின்னால்நின்ற சைக்கிள்க் காரர் அந்தம்மாவுக்கு சில்லறை கொடுக்கிறார்.நல்ல விஷயமாகப்போய் விடுகிறது. என்னிடம் இல்லாத சில்லறையை அவரிடம் கேட்டு வாங்கியதாகவே படுகிறதெனக்கு/

அந்தக்காட்சிப்பதிவிலும்பேருந்தினுள்இருந்துஒலித்தபாடல்என்மனதுக்குஇனியதாகவே/ பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது,நான் கேட்டுகொண்டிருக்கிறேன். சாலையின் இயக்கம் ரயில்வேகேட்அடைப்பில் தற்சமயமாய்அடைபட்டு/ வாலாய்நீண்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்தபேருந்துகளும் வாகன்ங்களும் கலர் பூசியும் பொலி விழந்துமாய்/

நான் நின்றிருந்த இடத்தின் எதிர் சாரியில் காட்சிப்பட்ட கரும்பு ஜூஸ் வண்டி.நின்று குடித்துக் கொண்டிருந்தவர்கள். மிஷினில் அரைபடுகிற கரும்பு. கண்பட்ட மண்,அதை ஒட்டி நீண்டிருந்த கரு மேனி பூசிய தார்ச்சாலை. சாலை ஓரத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பேருந்து நிறுத்தம். அதற்காகஅங்கு குவிக்கப்பட்டிருந்தமணல்,செங்கல், ஜல்லி இதரவைகள்/

விழிபடர்ந்த இவைகளையெல்லாம் பார்த்தவாறு இருந்த நான் குடிக்க நினைத்த டீயின் மிடறுகள் மறந்து போக அப்படியே நிற்கிறேன். அப்படியொ ன்றும் டீக்கடை தேடிபோக வேண்டிய தூரத்திலிருக்கவில்லை. கண் விழி படர்கிற தூரத்தில்தான். இவைகளையெல்லாம் கண்ணுற்றவாறே இருந்த கணத்தில் திறந்துவிட்டிருந்த ரயில்வே கேட்டின் திறப்புக்கு இசைந்து நகன்ற வாகனங்களுடன்வாகனமாயும்பாதசாரியாயும்நகர்கிறவனாகிப் போகிறேன். பேருந்தினுள்ஒலித்தபாடலையும், கையேந்திய மூதாட்டியையும் நினைத்துச் சுமந்தவாறு/

15 comments:

KILLERGEE Devakottai said...

யதார்த்தமான சம்பவம் யதார்த்த நடையும் அருமை நண்பரே..
தமிழ் மணம் 1

yathavan64@gmail.com said...

விழியில் விழுந்து,,,,,,,
மனதுக்குள் விளையாடும் மன சாட்சியை
கூண்டில் ஏற்றி குறுக்கு விசாரணைக்கு ஆட்படுத்திய
அற்புத நிகழ்வு!
அருமை நண்பரே!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு கில்லர் ஜி சார்/

vimalanperali said...

வணக்கம் யாதவன் நம்பி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு யாதவன் நம்பி சார்.

ஸ்ரீமலையப்பன் said...

அய்யா எழுத்துக்கள் மிகவும் நெருக்கமாக உள்ளதால் படிக்க சிரமமாக உள்ளது...

வலிப்போக்கன் said...

அருமை நண்பரேஃ.....

Thulasidharan V Thillaiakathu said...

யதார்த்தம் சொட்டுகின்ற கண்ணில் காணும் காட்சி விவரணம் அருமை! நண்பரே!

vimalanperali said...

வணக்கம் ஸ்ரீராம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் வலிப்போக்கன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

யதார்த்தம் அண்ணா...

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/