அதையும் சேர்த்தே வெட்டியிருக்கலாம்.இப்பொழுது ஏதோ தலையில் ஒரு பக்கம் மட்டும் வெட்டி விட்ட முடி போல இருக்கிறது,
காய்ந்து போன புற்களின் வேர்பாகமும் நுனிப்பாகமுமாக பாதி வெட்டுப் பட்டும் மீதி வெட்டுப் படாமலும்அசிங்கமாகித்தெரிகிறது.
வேலைசெய்ய ஆரம்பித்த நேரமும் வேலை செய்யதேர்ந்தெடுத்த மண் வெட் டியும் சரியில்லாமல் போனது.
வீடு கட்டும் பொழுது எதற்கும் இருக்கட்டும் என கடப்பாரையும்,இரும்புத் தட்டும் மண்வெட்டியுமாய் வாங்கிப்போட்டான்.மண்வெட்டியும் தட்டும் ஒரே நாளில் வாங்கி வந்து விட்டான்.
சைக்கிளில் போய்த்தான் வாங்கி வந்தான்.இப்பொழுது போல்அப்போது இரு சக்கரவாகனம்வாங்குற அளவிற்கு பண வசதி இல்லை. வீட்டிற்காய் சிமிண் டுக்கும் மணலுக்கும்,ஜல்லிக்கும்,லாரிக்காரர்களுக்குமாய் கொட்டிக்கொடுத்த காசிலும் எதற்கென்றே தெரியாமல்போனபணத்திலுமாய் கொஞ்சத்தை யே னும் ஒதுக்கி ஒரு இருசக்கர வாகனம் வாங்கியிருக்கலாம் என்றாள் மனைவி. இவனுக்கு அதெல்லாம் அந்நேரம் தோணவில்லை. அது பற்றிய சிந்தனை கூட இல்லை.
இவனுக்கு ஒரே மதி. செய்து கொண்டிருக்கிற வேலையை முடிக்க வேண்டும் முதலில்,பின் தான் எல்லாம் என/அம்மாதிரியான சிந்தனைகூடஅதுதவிர்த்து வேறெதையும் நினைத்துப்பார்க்கதோணாமல்கூடச் செய்திருக்கலாம்.
மண் வெட்டியும் தட்டும் கடப்பாரையும் வாங்கப்போன போது கடைக்காரர் கூடக் கேட்டார், ”விவசாயம் பண்ணுகிறீர்களா அல்லது வாடகைக்கு ஏதும் விடவா,இல்லைஎதற்கும்இருக்கட்டும்வீட்டுத்தேவைக்கு என வாங்குகிறீர்க ளா என கேட்டார்.இவன் நினைத்த மாதிரியே எதற்கும் ஆகும் என்ற சொல்லை கடைக்காரர் சொன்னது ஒரேமாதிரியாய் இருந்ததில் இவனுக்கு சந்தோஷம்.
அன்றுவாங்கி வந்த தட்டும் கடப்பாரையும் எதற்கும் பயன் பட்டதோ இல்லை யோ மண் வெட்டி அடிக்கடி பயனுக்குள்ளானது.
வீட்டின் முன்னும் பக்கவாட்டு வெளியிலுமாய் மண் அடித்து அதைஅள்ளிப் போடவீட்டின்முன்பாகவும்இன்னமும்கொல்லைவெளியிலுமாய் வளர்ந்து விடு கிற புற்களையும் களைச்செடிகளையும் செதுக்க என இவன் அடிக்கடி பயன் படுத்திருக்கிறான்.ஒருமுறை வீட்டின் முன்பாய் வீடித்த காரை மண்ணை கொண்டு வந்து போட்டு அதை திம்ஸ்கட்டையால் அடித்து இறுக்கிய போதும் அந்த மண்ணை சமப்படுத்த அந்த மண்வெட்டி பயன்பட்டது.
இப்படியான பணிகளுக்கு அடிக்கடியாய் பயன்பட்ட மண்வெட்டி இவனுக்கு திருப்தியாய் இல்லை.
ஊரில்கூலி வேலைசெய்து திரிந்த நாட்களில் வைத்திருந்தஅரை மண்வெட்டி போல் இல்லை இது.ராஜ் அண்ணன் பட்டறையில் இரும்புத்தகடு கொடுத்து அடித்து வாங்கியது.வேலைக்கு நன்றாக இருக்கும், ஒரு வெட்டு வெட்டினால் இரண்டுமூன்று வெட்டிற்கு வேலை செய்யும். அந்த மூன்று வெட்டின் வேகத் தையும் ஆவலையுமாய் உள்வாங்கிக் கொண்டு தோட்டத்தில் ஒருமுறை வரப்பிலிருந்தகரட்டைவெட்டமண்வெட்டியைஓங்கிஇறக்கியபோது மண்வெட்டி கரட்டுக்குள் பதிந்திருந்த கல்லில் அடித்து அடித்த வேகத்தில் மண் வெட்டி யை தூக்கிவிட்டது,தூக்கிவிட்ட மண்வெட்டியின் பின் பக்கம் இவனது நெற்றி யில் அடித்து நெற்றியின் நடுப்பகுதி புடைத்து வீங்கிப்போனது.
நெற்றியை தடவியவாறே மண்வெட்டியைப்பார்த்த பொழுது மண்வெட்டியின் முனை கல்பட்ட இடத்தில் நெளிந்து மடங்கிப் போயிருந்தது.அதை வைத்து இனி இந்த கரட்டை வெட்டுவது சிரமம் என பக்கத்துத்தோட்டத்து ஜோதி அத்தை பம்ப்செட் ரூமிலிருந்து மண்வெட்டி கேட்டு வாங்கி வந்து கரட்டை வெட்டிமுடித்து விட்டு அன்று சாயங்காலமே ராஜண்ணனின் கொல்லம் பட்ட றையில் போய்தொழிந்துவிட்டுவந்தான்.
நல்லவேளையாய்மண்வெட்டியின்கைபிடிக்கு(கணைக்கு)ஒன்றும்ஆகவில்லை. மண்வெட்டியின் கழுத்து தொட்டு நிற்கிற இடத்திற்கு அருகில் பிளவுபட்டுத் தெரிந்தது..
ராஜண்ணன்பட்டறையில்மண்வெட்டியைசரிசெய்யக்கொடுத்தஅன்றுமாலையே கருக்கலோடுகறுக்கலாகப்போய் கண்மாய்க் கரை ஓடையில் நின்ற சீமைக் கருவேலையில்பருத்த கிளை ஒன்றை வெட்டி வந்து அதன் தோலை உரித்து ஒன்று போல சீவி மாட்டுச்சாணம் தடவி இரவு முழுவதுமாய் வீட்டின் ஓர மாய் போட்டு வைத்துவிட்டு காலையில் அதை லேசாக இளம் பதமாக தீயில் போட்டு வாட்டி எடுத்து கழுவி விட்டு மண்வெட்டியில் மாட்டவும் ஜம்மென ஆகிப்போனது.புதுச்சட்டை போட்ட மிடுக்குடனாய்/
அன்றிலிருந்து அதற்கு புதுச்சட்டை போட்ட மண்வெட்டி என பெயர் வைத்து மகிழ்ந்து கொண்டான்.
அது போலாய் புதிதாய் வாங்கி வந்த மண்வெட்டி இல்லையானாலும் கூட அதை வைத்துத்தான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.அவ்வளவு ஒன்றும் மோசமுமில்லை அவ்வளவாய் ஒன்றும் திருப்தியும் இல்லை.
எங்காவது மண்வெட்டி தொழிவதற்கு ஆள் கிடைத்தால் மண்வெட்டியின் மொட்டையாகிப் போயிருக்கிற முனையை சற்றே கூர்மைப்படுத்தியும் ஏந்த லாய் நீட்டி இருக்கிற அதன் உடல் பகுதியை கொஞ்சமாய் மடக்கி விட்டால் வேலை செய்ய ஏதுவாக இருக்கும் என்கிற நினைப்பு இந்த மண்வெட்டி வாங்கியபத்து வருடங்களாக நீண்டு கொண்டிருக்க போனமாதம் ஒருவெயில் நாளில் மதுரை ரோட்டிலிருக்கிற ஒரு டீக் கடையில் நின்று கொண்டு தோழர் கோட்டைக்கு போன் பண்ணிக் கேட்டான்.
தோழர் இங்கனயோ சுத்தி இருக்குற ஊர்கள்லயோ எங்கயும் கெடையாது. மம்பட்டி தொழியிற யெடம்.வேணுமின்னா அருப்புக்கோட்டைக்கு அந்தப் பக்கம் போனாத்தான் உண்டு என்றார்.
அத்துடன் மண்வெட்டி தொழியும் யோசனையை விட்டுவிட்டான் இவன். ஆனாலும் ஒவ்வொரு முறையுமாய் இந்த மண்வெட்டியை தொடும் போதும் ஊரில் இவன் வைத்திருந்த மண்வெட்டியின் ஞாபகம் வராமல் இல்லை. பாத்தி கட்ட, மண் அள்ள, குப்பை அள்ள, தண்ணீர் பாய்ச்ச ,வரப்பு வெட்ட களை செதுக்க,,,,,,,இன்னும் இன்னுமான எத்தனையோ வேலைகளைசெய்த மண் வெட்டியை மறக்க முடியவில்லை.
இந்த மண் வெட்டியை எடுத்து என்றாவது ஒரு நாள்தான் வேலை செய்வான் என்ற போதிலும் கூட/
அசிங்கமாக இல்லாவிட்டாலும் கூட கொஞ்சம் விடுபட்டுத் தெரிவது போல் தான்உள்ளது.புல்முளைத்த வெளியினூடாகபரவிக்கிடக்கிறகட்டாந்தரை அத்து வானமாய் வெளிப்பட்டுக்காட்சிப் படுவது போல இருக்கிறது,
இப்பொழுது என்ன அதனால் கெட்டுப் போனது என விட்டு விட மனமில்லை. ஆனால் செய்து முடிக்க நேரமுமில்லை.
இருட்டி விட்டது.மாலை ஐந்தே முக்கால் மணிக்கு ஆரம்பித்தால் இப்படித் தான் ஆகிப் போகும் என்ற மகளை ஏறிட்டவனாய் சொல்கிறான்.”வேறென்ன செய்யச்சொல்ற சொல்லு, ஆத்தரத்துக்கு வேல செஞ்சா முடியும், அவசரத் துக்கு வேகு வேகுன்னு நின்னா இப்படித்தான்.விடிஞ்சா நல்ல நாள வச்சிக் கிட்டு இன்னிக்கி ராத்திரிக்குள்ள அத செஞ்சி முடிக்கணுன்னா எப்பிடி,,,,,?நீயி பொம்பளப்புள்ளைன்னாலும் கூச்சம்பாக்காம எங்கூட மப்பட்டியதூக்கிட்டு வந்துட்ட,ஓங்அண்ணன்வீட்டுக்குள்ளஉக்காந்துடீவியப்பாத்துக்கிட்டுஇருக்கான். என்னசெய்யச்சொல்லு,எங்கஅப்பாதான்சொல்லுவாருஅடிக்கடி,”எந்த வேலை ய செஞ்சிமுடிக்கணுமின்னாலும்அதப்பத்தினநெனைப்பு மனசுகுள்ள கறுகறு ன்னு இருக்கணும்டா,” என்பார்,உள்ளுக்குள்ளஒரு சுடர் எரிஞ்சி உறுத்திக் கிட்டே இருக்கணும்என்பார். அந்தச்சுடரும் கறுகறுப்பும் இவனுக்குள்ளே இருக்கிறதா இல்லையா என உரசிப்பார்க்க முனைகிற நேரங்களில் மகளுக்கு அந்தச் சுடரும் கறு கறுப்பும் முழுவதுமாய் இருப்பதாக நினைத்தான்.அவனது நினைவுப் படியே அது காட்சிப்படவும்செய்தது.
பத்தாம் வகுப்புப்படிக்கிறாள். மாதந்திர காலாண்டு அரையாண்டு தேர்வுகளில் பத்து ரேங்குகளுக்குள்ளாக வந்து விடுவாள்.பள்ளிக்குப்போக ஏதாவது தாம தம் ஆனால் மட்டுமே இவனது இருசக்கரவாகனத்தின்உதவியை நாடுவாள். மற்றபடி சைக்கிள் சைக்கிள் சைக்கிள்தான்.
வீட்டில் மட்டும் என இல்லை.பள்ளியில் சக மாணவிகளிடம் மற்றும் நட்புக ளிடம் பழகும் போது கூட அவளது நடை முறை அப்படித்தான் வெளிப்படும். அவளுடன்படிக்கிற பிள்ளைகளெல்லாம் வருடத்திற்கு நான்கு யூனி பார்ம் என முறை வைத்துப்போட்டுக்கொள்ளும் பொழுது இவள் மட்டும் இரண்டு செட் போதும் என்பாள்.இடது பக்க தோள்ப் பட்டைப்பக்கம் சின்னதாக ஓட்டை விழுந்து இருக்கிறதே என்றால் இருக்கட்டுமே என்ன இப்பொழுது பெட்டிக் கோட் போட்டதும்தான் மறைந்து போகிறதே ஓட்டை,அப்புறம் என்ன,,,,? இன்னும் என்ன முழுப்பரிட்சை வர கொஞ்ச நாள்தானே இருக்கிறது, அப்புற மாய் முழுப்பரிட்சை முடிந்த பின் அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்பாள்.வேணுமின்னா எனக்கு யூனிபார்ம் வாங்க நினைக்கிற காசுல அம்மா வுக்கு அவுங்க மனசுக்குபிடிச்ச மாதிரி ஒரு சேல வாங்கிக்குங்க,இல்ல அண்ணனுக்கு ஒரு பேண்ட் சர்ட் வாங்கிக் குடுங்க, என்னைய மட்டும் கவனிச்சா அவன் மனசும் சங்கடப்படுமில்ல என்பாள்.
அடி ஆத்திஎனஉச்சி குளிர்ந்து விழியோரங்களில் கண்ணீர் கட்டி விடும் இவ னுக்கு, மனைவியைப் பார்ப்பான்,அவளுக்கானால் கண்ணீர் தரையில் சிந்தக் காத்திருக்கும்.அப்படியேமகளைஉச்சிமோந்துதூக்கிகிறுகிறுவெனசுற்றுவான். இது என்ன புதுப்பழக்கம், வயசுக்கு வந்த புள்ளைய தலைக்கு மேல தூக்கி வச்சிஆடிக்கிட்டுஎன சபதம் போடுவாள் மனைவி.என்னம்மா நம்ம புள்ளைய தூக்கி வச்சி கொஞ்சுறதுக்கு என்ன என்றால் அதெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும்தான் தெரிஞ்சிக்கங்க என சப்தம் போடுகிற மனைவியை பரிதாபமாக ஏறிடும் போது இவனது பிடியிலிருந்து இறங்கிய மகள் இவன் காதுப் பக்கமாய் வந்து ”நீங்க அம்மாவத்தூக்கிச்சுத்தலையின்னு அவுங்களு க்கு வருத்தம்பா”என்பாள் மனைவிக்குக் கேட்காமல்/
அவளுக்குஅன்று பள்ளி இருந்தது. இவனுக்கும் அன்று அலுவலகம் இருந்தது. என்ன செய்ய அவள் பள்ளி விட்டு வருகிற நேரமும் இவன் அலுவலகம் விட்டு வருகிற வேளையும் ஒன்றாகிப் பட்டுத்தெரிந்தது.
என்னசெய்யப்பின்னேஇப்படித்தான்அவதிஅவதியாய் வேலை செய்ய வேண்டி யிருக்கிற போது அரைகுறையாகத்தான் முடியும்.பின்னே நாளை பொங்கலை வைத்துக்கொண்டு எத்தனை வேலையைச்செய்வது?
நல்ல வேளையாய் இன்று காலை கறும்பு வாங்கி வாங்கி வந்து விட்டான். மாலையாகிப்போன இப்பொழுதோ அல்லது நாளையோ போய் வாங்கினால் சில்லறைக்கு கறும்பு தர யோசிப்பார்கள்.அப்படியே வாங்கினாலும் நல்ல கறும்பாய்அமையாது.கைகால்சூம்பிப்போனகுழந்தைபோலஇருக்கும்.அதற்கா கவே இன்றுகாலைபள்ளிவிட்டுவரும் பொழுது வாங்கி வந்துவிட்டான்.
நாலாவது கேட் அருகில் இருக்கிற டீக்கடை வழியாகத்தான் வந்தான். டீக் கடையில்நல்ல கூட்டம்.எப்பொழுதும் இருப்பதுதான்.இன்று கொஞ்சம் அதிகப் பட்டுத் தெரிந்தது,பொங்கலுக்கு முதல் நாள் என்பதால் வீடுகளுக்கு வந்த விருந்தாளிகளைடீக்கடைகாட்சிப்படுத்திக்காண்பிக்கிறதா என்ன,,,,?இருக்கலாம்.
அந்தப் பக்கமாகப்போனானால் இந்தக் கடையில் இவன் டீ சாப்பிடுவது உறுதி என சின்னக் குழந்தையைக்கேட்டால் கூடச்சொல்லிவிடும்.
அதுஎப்படிநாலாவதுகேட்,டீக்கடை,இவன்அங்குகுடிப்பது,,,எல்லாம் சின்னக் குழந்தைக்கு எப்படித்தெரியும் என்கிற வாதத்திற்கு பதில் வாதமாய் பின் எப்படி சின்னக்குழந்தை இத்தனை யையும் சொல்லும்.என்பான் நண்பன் ஒருவன்.
இப்படியான வாதங்களும் பிரதிவாதங்களுமாய் மாறி மாறி தெரிவுபட்டுத் தெரிகிற தினங்களினூடே காண்கிற காட்சியாய் இப்படிஒன்றுஇருக்கிறதுதா ன்.
டீக்கடையில் டீக்குடிக்கும் முன்பாக வண்டியை நிறுத்திவிட்டு கொஞ்சம் ஏறிட்டப்பொழுது டீக்கடையின் பக்க வாட்டில் ரோடு தாண்டி கரும்புக்கடை போட்டிருந்தார்கள்.
மேலுயர்த்திக் கட்டப்பட்டிருந்தமூங்கில் கரும்புகள் ஊன்றப்பட்டிருந்த படலுக் குள்ளேகரும்புகளைஅடுக்கி வைத்திருந்தார்கள் கட்டுக்கட்டாக/எதைஎடுப்பது எதைவிடுப்பது என்கிற குழப்பம் கறும்பு வாங்க வருகிறவர்களுக்கு வரும் போல் தெரிகிறது கடைக்காரர் அடுக்கி வைத்திருக்கிற கட்டுக்களை பார்க்கிற போது.
கடைக்காரர் தெளிவாகச்சொல்லி விட்டார்.கட்டாக மட்டுமே கொடுப்போம், சில்லறைக்குக் கிடையாது,அப்படி வேண்டுமானால்சாய்ங்காலம்வாருங்கள் இல்லையானால் இதோ இந்த ஓரமாய் அடுக்கப்பட்டிருக்கிறது பாருங்கள், அதை எடுத்துச் செல்லுங்கள்.ஒருதட்டைநாற்பது ரூபாய் என்றார்.
கரும்பு வாங்க வேண்டும் என்கிற நினைப்பிற்கும் ,அதற்காய் விற்கிற இடம் தேடிச்சென்றதற்கான தண்டனை போலிருக்கிறது என்கிறதான மனதுடன் கடையை விட்டுவிலகி வருகிறான். கரும்பு வாங்காமலேயே/வந்ததற்கு ஒரு டீயும் வடையும் மட்டும் சாப்பிட்டு விட்டு வண்டியைக்கிளப்பி ரயில்வே லைன் அருகே ஓரமாக சென்று கொண்டிருக்கும் போது லைன் ஓரமாய் ஒரு கடை தென்பட்டது. சில்லறைக்கு கொடுப்பீர்கள என இவன் கேட்ட வாய் மூடும் முன்பாக ஒரு கரும்பு முப்பது ரூபாய் என இவன் கேட்ட மூன்று கரும்புகளையும் இரண்டிரண்டாக வெட்டிகட்டிக்கொடுத்தார்கள். மூன்றும் இவன் கேட்டபடியே பருசாக இருந்தது. யப்பா இப்பொழுதுதான்திருப்தியாக இருந்தது இவனுக்கு/
கரும்புவாங்கியாகிவிட்டது,இனிவெங்காயம்வாங்கவேண்டும்.காய்கறியெல்லா ம் வாங்கியாகிவிட்டது நேற்றே/
ஆபீஸ் கிளம்பிப் போகும் போது அப்படியே பஜார் வழியாகப்போனால் வெங் காயத்தை வாங்கிக்கொண்டே ஆபீஸ் போய் விடலாம் என்கிற நினைப்பில் வந்த பொழுது ராம் தியேட்டர் கல்யாணமண்டபம் காம்ப்ளக்ஸில் பல்லாரி வெங்காயம் விற்றுக்கொண்டிருந்தார்கள் கிலோ இருபத்தைந்து ரூபாய் என/
.இரண்டு காம்ளக்ஸிகளை வாங்கி ஒரே கடையாய் ஆக்கியிருந்தார்கள். கடையினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரியதானமரசெல்ப் காலியாய் காட்சிப் பட கடையின் வெளியே இருந்த திண்ணையில் வெங்காயத்தை குவித்து வைத்தி ருந்தார். அதைப்பார்த்து நாம் இவர் வெங்காயம் மட்டும்தான் விற்கிறார் என நினைத்து விடக்கூடாது.ஒரு நாள் பெரிய வெங்காயம்,ஒரு நாள் சின்ன வெங்காயம்,சமயத்தில்இரண்டுமாய்,,பிரிதொரு சமயம் உருளைக் கிழங்கு, காய்கறியில் சில வகைகள் மட்டும் எனவிற்பார், அவரைப் பார்க்கை யில் உண்மையிலுமேனும் பல சரக்கு விற்கிறவராய் காட்சிப்படுவார்.
கையில் பையிருந்தாலாவது வாங்கிப் போகலாம் வெங்காயம் ,இனி வீட்டில் போய் காசு எடுத்து வந்து வெங்காயம் வாங்கிக் கொண்டிருந்தால் நேரமாகிப் போகும்ஆபீஸ்ப்போக/ஆகையால் வேண்டாம் இந்த ஏற்பாடு, மனைவியையா வது மகளையாவது வாங்கிக்கொள்ளச் சொல்லலாம்.என நினைத்து காலை யில்அலுவலகம் போய் விட்டு இப்பொழுது அவசரஅவசரமாக வந்து எல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.
வந்ததுமே வெட்டியிருக்கலாம் புல்லை.இப்பொழுது பொங்கலுக்கு முதல் நாள் போய் எல்லா வேலையௌம் செய்து முடிக்க வேண்டும் என்றால்,,,,,,,,,?
ஒரு மாதம் நிற்காமல் விட்டுவிட்டுபெய்த மழை வீட்டின் முன்னிருந்த முள் முளைத்தவெளியைகுட்டிக்குளமாய் ஆக்கிவிட்டுப்போன பின் அங்கு முளைத் திருக்கிற புல் மற்றும் பெயர் தெரியாத செடிகளை ஆடுகள் தின்னவில்லை.
ஆட்டுக்காரர் கூட கேட்பார் அடிக்கடி.அவருக்கு இந்தப்பக்கம் வருகிற போதெ ல்லாம் வீட்டின் பக்கவாட்டு வெளியிலிருக்கிற வேப்ப மரத்தின் மீது ஒரு கண்/
எந்தப்பக்கம் ஆடுகளைப்பத்திக்கொண்டு போனாலும் குறைவாக இருக்கிற மேய்ச்சல் நிலங்களில் இப்படித்தான் தண்ணீர் நின்று காட்சிப்படுகிறதாய் சொன்னார்.
தண்ணீருக்குள் மூழ்கியோ அல்லது அரை பாதியாகவோ வெளியே நீட்டி காட்சி தருகிற புற்களையும் இன்னபிற செடிகளையும் ஆடுகள்,தின்பதில்லை. இப்போதைக்கு ஆடுகளுக்கு ரேஷன் அரிசி வாங்கி சமைத்துப்போடுகிறோம் அதன்கஞ்சியைக்குடிக்கக்கொடுக்கிறோம்.ஆகவேஇந்தவேப்பங்குலைகளை ஒடிக்க சற்றே முன் அனுமதி கொடுத்தீர்களேயானால் ஆடுகள் அவைகளைத் தின்று பசியாற்றிக்கொள்ளும்.உங்களுக்கும்புண்ணியமாகிப்போகும்என அவர் கேட்டுக் கொண்டிருந்த நாட்களின் சற்று பின்னும்,இவன் அவரை வேப்பங் குலைகளை ஒடிக்கஅனுமதித்தநாட்களின் மென்நகர்விலுமாய் குலம்கட்டியி ருந்த இடம் காய் ந்து போக அதுவரை ஈரம் காத்து நின்ற புற்கள் ஈரம் காய்ந்து ஆடுகளைத் தின்ன அனுமதித்தது.
அப்படியாய் இயற்கை பார்த்து அனுமதித்த புற்களை வெட்டிவிட்டால் வெறுமை பட்டுத்தெரியும் தரையைப் பார்த்து ஏமாந்து போகும்தானே ஆடுகள் என நினைத்து வெட்டாமல் விட்டிருந்த புற்கள் வீட்டு வாசலுக்கு எதிர்த்தாற் போல் அசிங்கமாக இருக்கிறதே நல்ல நாளும் அதுவுமாக வெட்டி சுத்தம் பண்ணி விடலாம்எனஇரண்டு மூன்று நாட்களாய் நினைத்துக்கொண்டிருந்த வேலை பொங்கலுக்கு முதல் நாள்தான் செய்ய வாய்த்தது இளைய மகளின் துணையுடன்/

8 comments:
அருமை தோழர்...
கரும்பாய் இனிக்கும் மிக அழகான யதார்த்தமான எழுத்துக்கள். மண்வெட்டி முதல் அனைத்தையும் பொறுமையாக ரஸித்துப்படித்து இன்புற்றேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வணக்கம் வை கோபாலகிருஷ்ணன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அருமை! அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளை எதார்த்தமாக சொல்லியுள்ளீர்கள்!
வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/
அருமையான பதிவு
கதை நகர்வு நன்று
தொடருங்கள்
யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
http://www.ypvnpubs.com/2016/01/01.html
வணக்கம் காசிராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment