24 Feb 2016

கோலமாவு,,,,,

அன்று மாலை தாமதமாகத்தான் தேனீர்கொண்டு வந்தாள். ஒரு டீ மூன்று காபிகள்.

வெள்ளைநிறத்தில்சிவப்புப்பூப் போட்டசேலை. சிவப்புக்கலரில்சட்டை. மெலி ந்து தளர்ந்த சிவந்த மேனி.படிய வாரியிருந்த தலை முடி.இதுதான் அவள் என்கிற அடையாளத்துடன்தான் அவளது தினசரி வருகை.

புடவைஜாக்கெட்டில்வேண்டுமால்மாற்றம் இருக்கலாம்.ஆனால் அவளது புன்னகையிலும், கனிவிலும் எந்த மாற்றமும் இருக்காது.

கேட்டால் “போகும் போது அள்ளிக் கொண்டா போக போறம் சார்.இருக்குற வரைக்கும்நாலுபேர்கூடநல்லாபழகி சிரிச்சு பேசீட்டு சந்தோசமா இருந்துட்டுப் போகவேண்டியதுதானசார்.

எந்நேரமும்உம்மன்னாமூஞ்சிமாதிரிதிரிஞ்சா,ஒடம்பும்,மனசும்கெட்டுப்போயிரும் சார்.

அவருக்குஇப்பிடிஇருக்குறதுதான்பிடிக்கும்.அதுமாதிரிதான்நான்இப்ப இருந்து ட் டு வர்ரேன்.அவரு கத்துக்குடுத்துட்டுபோனதுதான் இதெல்லாம். இந்தாநான் கட்டியிருக்கேனே இந்த செகப்புக்கலர் சேல.இது அவருக்கு ரொம்பப்பிடிக்கும். அதான் இத அடிக்கடி கட்டிக்கிருவேன்,சேலையில்இருக்குற பூக்கள் கூட உதிந்து போயிரும் போல இருக்கு.இருந்தாலும் நான் விடறதாயில்ல. ”என்பாள்.

அலுவலகத்தில் உள்ள மற்ற மூவருக்கும் காபி.அவனுக்கு மட்டும் டீ.அது ஏன் எனத்தெரியவில்லை.

டீ மீதான மோகம் வர வர அதிகரிக்கிறதே தவிர குறைந்த பாடில்லை. இந்த முறை டாக்டரிடம் சென்ற போது அவர் கீரீன் டீவேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள் என்றார்.

துவர்ப்பும்,இனிப்புமாய்49ஆண்டுகள்நாவின்சுவையறும்புகளில்நல்லாட்சிசெய்து கொண்டிருந்தஒன்றுமாறுவதென்றால்கொஞ்சமல்ல,நிறையவேசிரமப்படவேண்டியிருக்கிறது.
அலசர் தொந்தரவினால் வயிறு வலித்தபோதோ அல்லது வயிற்றின் பக்க வாட்டுப்பகுதி வலித்த போதும் வலியச்சென்று டீக்குடிக்கிற பழக்கம் அவனுள் எப்போதுமுடியிட்டுகொண்டது எனத் தெரியவில்லை.

காலையில் எழுந்து இரண்டு டம்ளர் டீயில் சுழியிடுகிற பழக்கம் இரவு படுக் கைக்கு போகும் போது எண்ணிக்கையில் பத்தைத் தொட்டிருக்கும்.“நல்ல ஆளு ,நல்ல பழக்கம் போங்க என்பாள்.இவனது மனைவி.

அவள் அனுதினமும் தேனீர் கொண்டு வந்திருந்த நேரம் தூரத்தில் எங்காவது ஒரு பூ மலர்ந்திருக்க வேண்டும். அவளைஅவன்அக்கா என்றே கூப்பிடப் பழகியிருந்தான்.அது என்னவோ தெரியவில்லை.பெண் என்றால் அக்கா,ஆண் என்றால் அண்ணன் என்பது இவனது கணக்காக இருந்தது.

அந்தஅலுவலகத்திற்குமாறுதல்ஆகி வந்த நாள் முதலாய் இப்படித்தான் ஊரில்
எல்லோரிடமும்பழகுகிறான்.பேசுகிறான், ஒட்டிக்கொள்கிறான்.

வாங்கக்கா,போங்கக்கா,சரிங்கக்கா,வாங்கம்மா,போங்கம்மாவும் சேர்த்தே வரும் சமயத்தில்/

இந்தமாசம்டீக்காசுவாங்கலையாக்கா,,,,,,என்பதுமாதிரியானதேஅவளுடனான அதிகபட்ச பேச்சாக இருந்திருக்கிறது இதுவரை இவனுக்கு/

ராமசாமியின்மனைவிஅவள்.ராமசாமிடீக்கடைஎன்றால்ஊருக்குள்பலபேருக்கு மனம் களி கொள்ளும்/

இளைஞரிலிருந்து பெரியவர்வரைஅவரது கடைவடைக்கும்,டீமற்றும் டிபனுக் குமாய் அடிமை.அடிமை என்ன அடிமை?அவரிடம் போனால் கடன் சொல்லிக் கொள்ளலாம்.

காலையில் இட்லி, தோசை, வடை ,மொச்சை சில நாட்களில் பூரி என ஆரம்பி க்கிற வியாபாரம் பாதி கடனில் போய் முடியும்.

கடன் என்றால் அந்த மாதிரி கடனை ஊருக்குள் எந்தக் கடையிலும் பார்க்க முடியாது. அப்படி ஒரு திகிடுதிம்பான கடன். சாப்பிட வருபவர்களும் கூசாமல் கடன் சொல்வார்கள்.அவரும் கூசாமல் கடன் கொடுப்பார்.

கடன்தான் அவர்களுக்குள்ளான மனப்பினைப்போ என எண்ணுகிற அளவு/
நோட்டு நிறைந்த கணக்குகள் ஒவ்வொருவர் பெயரிலும் கடையில்உள்ளமர அலமாரியில்அடுக்கப்பட்டிருக்கும்.நோட்டைக்காட்டிகாசைக்கேட்டால்பெருத்துநிற்கும்அவருடையதொந்தியைதடவிக்கொடுத்தவாறு”குடுப்பம், குடுப்பம் எங்க ஊரவிட்டு ஓடியா போகப்போறம்”.என அவர்கள் சிரித்து கேலியாய் சொல்வதும்,இவர் “என்னையப் பாத்தா எளக்காரமா தெரியுதா ஒங்களுக்கு,வர்ரறவுங்கெல்லாம்இப்பிடிசித்தப்பா,பெரியப்பா,மாமன்,மச்சான்னு போயிட்டீங்கன்னாஅப்பறம் நான் தலையிலதுண்டப்போட்டுட்டு போக வேண் டியதுதான்,“இங்க ஒங்க பேர்ல இருக்குற கணக்கு நோட்டுல அடைகாத்து கெடக்குதுப்பா. என்பவர் சரி,சரி வாங்கப்பா வந்து போன காலு,தின்னு பழகுன வாயி நீங்களும் வேற எங்கதான் போவீங்க” என்பார்.

ஊரின் முக்கிய சந்திப்பில் அல்ல.ஒரு ஒதுக்குப்புறமாய் இருந்தது அவரது கடை.எண்ணி இருந்த கடைகளில் அவரது கடை முக்கிய இடம் பெற்றதாக/

தரை தடவி நிரம்பிய புழுதியில் புரண்டு எழுந்து வந்த உழைப்பின் மக்களின் பிரியம் இவரது கடையாகதான் இருந்திருக்கிறது.

உழைப்பின்ருசியறிந்தவர்களைஅவர்என்றும்புறக்கணித்ததில்லை.ஊரிலுள்ள கடைகள் வாடிக்கையாக ஒரு சிலரை மட்டுமே வைத்துக் கொண்டிருந்த போது இவர் அனைத்துத் தரப்பையும் வாடிக்கை யாளர் ஆக்கினார்.

அப்படியானவர்களுக்கு இவரது மன விசாலம் பிடித்துப் போகவும் உழைப்பின் மக்களும்இல்லாதவர்களும்அவர்களதுகடையின்நிரந்தரவாடிக்கையாளராகிப் போனார்கள்.

அப்படிவாடிக்கையாகிப்போனவர்கள்சொன்னசொல்லும்,பேசியபேச்சும் இவர் பேசியசிரிப்புப் பேச்சுகளும், கோபங்களும்,ஆதங்கங்களும் அவரது கடையின் சுவர்களில் மோதி எதிரொலித்துக்கொண்டிருந்த ஒரு நாள் இரவில் இறந்து போகிறார் அவர்.

அதிகம்குடித்ததனால்கல்லீரலும்,கணையமும்கெட்டுப்போய்விட்டது என்றார் களாம்டாக்டர்கள்.பின்எந்நேரமும்அதிலேயேமுக்குளித்துக் கொண்டிருந்தால் கெடாமல்என்ன செய்யும்.என்றார்கள் ஊர்க்கார்கள்.

எதுஎப்படியோஅவரதுஇழப்பைஊர்ஜீரணித்துஏற்றுக்கொண்டதைபோலஅவரது குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மயானத்தில்எரிந்துபரவியதீயின்புகையாய்அவரதுநினைவும்காற்றில்கரைந்து போனது. அதற்கப்புறமாக அவள்தான் கடையை பொறுப்பேற்று/

முன்பு போலான வியாபாரமும், வாடிக்கையாளர்களும் இல்லைஎன்றாலும் கூடஅவள்வேறு விதமாக வியாபாரத்தை விரிவு செய்தாள்.

காலையில்டீ,வடை.முடிகிறஅன்றுமட்டும்இட்லி,தோசை,அப்புறம்அதுமுடிந்து பள்ளி இடைவேளை விடுகிற வேளையில் பள்ளிப்பிள்ளைகளுக்கு ரஸ்னா, ஜூஸ்,ஏதாவதுதின்பண்டம்,அப்புறம்காலனிவீட்டுப்பக்கம்வடைவிற்கப்போவாள்.இதுபோகசாய்ங்காலவேளைகளில்இனிப்புஉருண்டை,ரவாலட்டு,மிட்டாய்சேவு,முறுக்கு என்கிற புதுதளத்தை விரித்துவிட்டாள்.

பிழைப்பிற்குவேறுஎங்குபோகசொந்த ஊருக்குப் போகலாம்என்றால் தனியாக இருந்த சனாதன விதவைத்தாயும் இறந்துபோனார்.

உள்ளூரில்இருக்கிறஅண்ணனுக்குஅவனதுபிழைப்பிற்காய் கைஊணி கர்ணம் பாயவே நேரம் சரியாய் இருக்கிறது. மம்பட்டி,கடப்பாரை, விவசாயம், கூலி வேலைஇதுவேஅவனதுபிழைப்பைநிர்ணயம் செய்கிற மந்திரச்சொல்லாக இருக்கிறது.

இருக்கிறகால்காணியில்,,,,,,,,,,,ஏதோபயர்ஆபீஸ்காரர்கள்நிலத்தைவிலைக்குக் கேட்டதாய்சொன்னான்விற்றால்கணிசமாய்கொஞ்சம்தேறும்.உனக்குஏதாவது தருகிறேன் என்றிருந்தான்.

அவன்கொடுத்தால் அப்படியே பேங்கில் போட்டு வைத்துக்கொள்ளலாம். பின் னால் உதவும்.

அவள்தங்கச்சிசிவகாசியில்வாக்கப்பட்டிருக்கிறாள்.கொஞ்சம்வசதியானஇடம். பக்கத்தில்அண்டவிடமாட்டாள்.கடுவாப்புலி.அவளதுபையனைதம்பிபெண்ணுக்கு கேட்கலாம் என நினைக்கிறாள்.

“பெரியவீட்டுக்காரங்கஅப்பிடித்தான்இருப்பாங்க,நாமதான்அனுசரிச்சி போயிக் கிறனும்.”எனநினைத்துக்கொள்வாள் அடிக்கடி/

சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறான். கை நிறை ந்த சம்பளம்.ஓரளவு வசதியாக இருப்பதாய் சொல்கிறார்கள்.

ஏதோகல்யாணம்செய்துவைத்தால்அவர்களது பிழைப்பு எப்படியாவது ஓடி 
விடும்.

ஆனால்எப்படிவாய்க்கிறதுஎனத் தெரியவில்லை.விதிவிட்டவழிஎன்றைக்கும் அவ்வளவுநேரம்இருந்துபேசியதில்லைஅவள் வருவாள்.

டீதருவாள்போய்விடுவாள்.மின்னலின்வேகத்தில்தான்அவளதுநகர்வுஇன்று டீயைவைத்துவிட்டுநகரவில்லை கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தாள்.

“சாய்ங்காலம்வடைபோடுவீங்களா?அவன்.

“இல்ல சார் இப்பத்தான் விருதுநகர் வரைக்கும் போயிட்டு வந்தேன்.ரேஷன் கார்டுல அவபேர சேக்குறதுக்குள்ள போதும், போதும்ன்னு ஆயிருச்சி. போன வாரம்கொண்டுபோயி குடுத்துட்டு வந்தேன். காசு பத்து அஞ்சு ஆனாலும் செஞ்சு குடுத்தாங்களே.

ரேஷன் கடைக்காரர்தான் இதுக்கெல்லாம் உதவியா இருந்தாரு.இப்பத்தான். என்னமோ அவரு இல்லாத கொற.இப்பிடி அலைஞ்சி திரிஞ்சி சீரழிய வேண்டி யிருக்கு என சொன்ன போது அவளது கண்கள் துளித்து விட்டது.“ஏங்தம்பி பொண்டாட்டிக்கும்எனக்கும்பேச்சுவார்த்தகெடையாதுன்னாலும் ஆம் பள தொனையில்லாதவ அவ எங்க போவா பாவம்?’ நல்லாயிருப்பாங் கன்னுதான் செஞ்சுவச்சம்.அவருதங்கச்சிக்கும்,ஏந்தம்பிக்கும்கல்யாணம்கட்டி வச்சி கூட்டீ ட்டு வந்து இங்கயே குடிவச்சம்சொந்தஊர்ல இருந்தா சேராதவுக கூட சேந்து கெட்டுப் போயிருவான்.”“எங்க அண்ணன் கூட இங்கயே இருக் கட்டும். நான் அவனஆளாகிவிடுரேன்னாருஏந்தக்கச்சிவீட்டுக்கு வேலைக்கு நம்பகமான வேலையாளச்சின்னுநெனைச்சா,இதுஎதுவும்வேணாம்ன்னுஎங்கவீட்டுக்காரர் தான்இங்ககூட்டீட்டிவந்துகடைய கையில குடுத்தாரு. அவுகளும் நல்லாத் தான் பொழைச்சாங்க, “ஏந் தம்பின்னாகடையேகதின்னு கெடந்தான். அவன் பொண்டாட்டியவும்சும்மாசொல்லக்கூடாது.வடைக்குமாவாட்ட,இட்லிக்குப் போட,சட்னிக்குஆட்டகடைக்குபோயிசரக்கு வாங்கீட்டுவரன்னுரெக்ககட்டிக் கிட்டுதான்இருப்பா,அவுகரெண்டுபேரு இருந்த வரைக்கும் எங்களுக்கு சொட க்கு எடுத்துவுட்ட மாதிரி நிம்மதியா இருந்துச்சி, அவுங்களும் சந்தோச மாதான் இருந்தாங்க,“எனக்குத் தெரிஞ்சு இந்த ஊரல சந்தோசமா அப்பிடி ஒரு குடும்பம் இருந்துநான் பாத்ததில்ல. அவன் போதாத காலம். ஒத்தப் பொம்பளப் புள்ளைய பெத்துப் போட்டுட்டு யெறந்து போனான் ,“அவன் சாகும் போது இந்த புள்ள ஆறு வயசுல நின்னுச்சு,ரெக்க மொளைக் காத கோழிக்குஞ்சா, “ஏதோ பேரு தெரியாமஒடம்புலபுகுந்த நோயி அவன உருக்குளைச்சிருச்சி.. அவன் போதாத நேரமோஎங்கபோதாதநேரமோதெரியல.

பொண்டாட்டியவும்,புள்ளயவும்இப்பிடிதெருவுலவிட்டுட்டுபோயிட்டான்,என்ன செய்யபின்ன?அவஆட்டுனமாவும்சுட்டுப்போட்டஇட்லியும்தொடந்து இருக்கட் டும் ன்னு ஏங் வீட்டுக்காரர்தான் அரவணைச்சுக்கிட்டாரு.

ஒருபக்கம் கூட பொறந்த தங்கச்சி,ஒருபக்கம் நனஞ்ச கோழிக்குஞ்சா நிக்கிற மச்சினன்(ஏந்தம்பி)பிள்ள,பின்னஎன்னசெய்ய?இழுத்துபோட்டுக்கிட்டம்,“அன்னை க்கு இழுத்த இழுப்பு இன்னைய வரைக்கும் ஓடிக்கிட்டு இருக்கு.

அவுங்களோடஒத்தப்புள்ளதான்இப்பநெஞ்சுக்குழியிலநின்னுக்கிட்டுவாதிச்சிட்டு கெடக்கா.அவளுக்கு வயசு ஆச்சு,11 வது போறா,அவரு யெறந்த மறு நாளே இவ ஒக்காந்துட்டா குத்தவச்சி/

அழுதகண்ணீரோடஈரம்காயிறதுக்குள்ளஇப்பிடிஒண்ணு.சந்தோசப்படுறதா,
துக்கப்படுறதான்னுதெரியல,அவரக்கொண்டோயிசுடுகாட்டுலவச்சகையோட இந்தவிசேசத்தையும் செஞ்சு முடிச்சோம்.என்னசெய்ய பின்ன?ஏதோ வயித்து ஆத்தரம்,வாழ்க்கத் தேவை பொழைக்கணும்ஓடிக்கிட்டுத் திரியிரேன், “நானு ஏந்தம்பி பொண்டாட்டி,அவ மகன்னு மூணு பேருக்கும் ,மூணுவேளைஒன்பது தட்டு கழுவுவனும் சார்.இருக்கோ இல்லையோ அது தெரியுமா வயித்துக்கு?,

“அவரு உசிரோட இருந்து நல்லாபொழச்சநேரத்துல எங்க வீடே கதின்னு கெடந்தான் இன்னோரு தங்கச்சி பையன். எங்களுக்கும் புள்ளைஇல்லாத காரணத்துனாலஅவனத்தான்புள்ளையாநெனைச்சு வளத்தோம்.இப்ப அவனும் சேலத்துல ஒரு கம்பெனியில வேலை பாக்குறான். கை நெறைய சம்பாதிக்கி றான்,கண்ணுக்கு லட்சணமா இருக்கான்.

அவனுக்கு இந்தப்புள்ளய கட்டி வச்சிரலாமன்னு ஒருபக்கம் யோசன ஓடுது சார்,நாலுபக்கம்பாக்கவேண்டியதுதான்.எதுதோதுவருதோஅதமுடிச்சிக்கிற வேண் டி யதுதான் சார்.ஏற்கனவே சிவகாசிக்காரி புள்ள மனசுலநிக்கிறான். இவன் ஒருபக்கம்,ரெண்டு பேருதாய் தகப்பங்கிட்டயும்,கையக் காலபுடிச்சா வது பேசிப் பாக்கணும். யாராவதுஒருத்தர்சம்மதம்சொன்னாக்கூட போதும் ,"சாதாரணமா இருக்குற வன் கூட இன்னைக்கு பத்து பவுன் கேக்குறான். அதான் என்ன செய்யன்னுதெரியல. முழிச்சிக்கிட்டு நிக்கிறோம். இவளதள்ளி விட்டுட்டாஎங்ககடமை முடிஞ்சிரும் சார்.

இனிமே எங்களுக்கு என்ன,ரெண்டு பேர்தான சார்,அப்பிடியே கடையக் கட்டிக் கிட்டு பொழுதப் போக்கிற மாட்டோம்? என்றவாறு நகர்கிறாள்.

8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

யதார்த்தம்

KILLERGEE Devakottai said...

நடைமுறை உண்மை....
தமிழ் மணம் 2

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை தோழர்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
மிக அருமையாக சொன்னீர்கள் யதார்த்தம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
மிகஅருமையாக சொல்லியுள்ளீர்கள் யதார்த்தம்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் கில்லர்ஜி தேவகோட்டை சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு சார்/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/