12 Mar 2016

மாவுக்கல்லும் தூசியும்,,,/



உடைத்தெறியபட்ட கற்கள் சதுரங்களாயும்,செவ்வகங்களாயும் முக்கோண வடிவிலும் அருங்கோணமாயுமாய் இன்னமும் இன்னமுமான வடிவம் காட்டியுமாய் காட்சி தருகிறது.கூடவேகொஞ்சம் சிமெண்ட் மற்றும் செங்கல் காரையும் தூசியுடனுமாய்/

ஏதாவதுஒரு வீட்டின் தரைத்தளம்,மற்றும் அடுப்படி மேடை சிங்க தொட்டியை உடைத்தெடுத்திருக்கவேண்டும்.நல்லதல்லாததைஉடைத்துவிட்டு நல்லதை  வைத்திருக்க நடந்த முன்னேற்பாடா அல்லது அதை விட சிறந்ததாக வேறேதும் வைப்பதற்காக இதைப்பெயர்த்தெடுக்கிறார்களா தெரிய வில்லை.

இடிக்கப்பட்ட வேகம்,இடித்தவரின் கை,அவர்களதுஉழைப்பின் உறுதி எல்லாம் குவிக்கப்பட்ட மண் குவியலில் தெரிந்தது.

இவனது பக்கத்து வீட்டுக்காரர் மாரிச்சாமி புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக் கும் பொழுது தரைக்கு மார்பிள்தான் பதிக்க வேண்டும் என நிலையாக நின்று விட்டார்.

எழுநூறு சதுர அடி வீடு கட்ட வேண்டியது,அவரது சேமிப்பு,பேங்கில் வாங்கிய லோன்,மனைவியின்நகையை அடகுவைத்தது என எல்லாம் தொகையையும் ஒன்று சேர்த்து அவர் கடன் வாங்கிய பேங்கிலேயே அவரது கணக்கில் போட்டு வைத்து விட்டார்.

இவனிடம் கேட்டார்,என்ன சார் வீடு கட்டும் போது நீங்கள் கூலி காண்ட்ராக்ட் விட்டீர்களா இல்லை மொத்தக்காண்ட்ராக்டா,இல்லை அத்தைக் கூலி வேலை யா,,,,,,,,,,என,,/எல்லாம்கேட்டுவிட்டுகடைசியாகஒருஎஞ்சினியரிடம் ஒப்படைத்து விட்டார் வேலையை/

பத்து நாட்களாக கேட்காதவர்களிடமெல்லாம் கேட்டு, விசாரிக்காதவர்களிட மெல்லாம்விசாரித்து அந்த எஞ்ஜினியரைபிடித்தார், இடத்தையும், வீடு கட்டு வதற்கான பணத்தையும் இஞ்ஜினியரிடம் கொடுத்து விடுவது வீட்டின் சாவியை வாங்கிக் கொள்வது என்கிறது போலானஒப்பந்தம்.

ஒப்பந்தம் எழுதிய நாளில் இஞ்ஜினியர் இடத்தைப் பார்த்து விட்டு அரை மணி நேரம் பேசினார்.அதிலும் இவரது பக்கத்து வீட்டுக்காரர் மாரிச்சாமி பார்க்க கொஞ்சம் அப்பாவியாக இருந்ததில் இஞ்ஜினியருக்கு சௌகரியமாகப் போய் விட்டது.இன்னும்சொல்லப்போனால் பேச்சில் கொஞ்சம் எள்ளல் பேசும் அளவு கூட போய் விட்டது.பேச்சிலேயே கொஞ்சம் வீடு கட்டினார்.அவர் வீடு கட்டுவது வீட்டுக்காரர் மாரிச்சாமிக்கு தெரிந்திருந்தாலும் கூட அவர் ஒன்றும் தெரியாது போல் இஞ்ஜினியர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டார், அவருக்குஇப்போதைக்குஎடுத்திருக்கிறவேலைநல்லபடியாகமுடியவேண்டும்.  என்கிற எண்ணம் தவிர வேறொன்றுமில்லை.

கட்டைஊனிபூஜை போட்டு வீட்டு வேலை ஆரம்பித்த நாளிலிருந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்த வீடு முக்கால் வாசி முடிந்து வீட்டின் உள் பூச்சும் தரை தளமும்தான் பாக்கி என்பதாய் இருந்த வேளையில் வீட்டுக்காரர்பிடிவாதமாக தரையில்மார்பிள்தான்பதிக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டார்.இஞ்ஜினியர் அதெல்லாம் சரிதான் பட்ஜெட் கொஞ்சம் கூடுமே என்றார்.பட்ஜெட் கூடுமா,சரி யோசிப்போம் என பதினைந்து நாட்க ளுக்குவேலையைநிறுத்த ச்சொல்லிவிட்டார்.மாரிச்சாமி.

இஞ்ஜினியரும் சரி பரவாயில்லை, உங்களது மனதே என்னுடைய திருப்தி என நிறுத்தி விட்டார்.பதினைந்து நாட்களுக்கு அப்புறமாய் இல்லை சார், வேண்டாம் மார்பிள் சாதாரண சிமிண்ட தளமே போதும் எனச்சொல்லி விட் டார் மாரிச்சாமி.

இஞ்ஜினியர் கூடசொன்னார்,இல்லை சார்இப்போதைக்கு கையில் இருப்ப தைக் கொடுங்கள்,நான் இன்னொரு இடத்திற்காய் வாங்கி வைத்திருக்கிற மார்பிள் கைவசம் இருக்கிறது,அதை உங்களது வீட்டிற்கு பதித்து விடுகிறேன். எனக்கு ஒரு ஆறு மாத காலத்திற்குள்ளாக நிதானம் காட்டிக்கொடுங்கள் பணம் அது போதும் என்றார்

நான் ஆரம்பித்து வைத்திருக்கிற இன்னொரு வேலை முடிய ஆறு மாதமோ அல்லது அதற்கு மேலாகவோ கூட ஆகிப்போகலாம்,உங்கள் சம்மதம் எப்படி எனச் சொல்லுங்கள் என்றார்.

மாரிச்சாமிக்கானால் அரை மனதாய் சம்மதம் ,ஒருபக்கம் மார்பிள் பதித்து தரை மிளிர வேண்டும் என ஆசை ,ஒரு பக்கம் கடன் கூடி நிம்மதி போய் விடும் என்கிறதான நினைவு/

வீட்டில் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் மார்பிள் பதித்து விட வேண்டும் என்பதுதான்ஆசை.பிள்ளைகள்வெளிப்படையாகச்சொல்லிவிட்டார்கள்.மனைவி மனதிற்குள்ளாகமருகிக்கொண்டிருந்தாள்.வீட்டுக்காரருக்கானால்அரை மனது சம்மதமானபோதிலும்கூடகொஞ்சம்தயங்கினார்.வீடுகட்டுவதற்காய்வாங்கிய நிலத்திற்கு கொடுக்க வேண்டிய கடன் இன்னும் பாக்கி இருக்கிறது. ரொம்பவும்இல்லை.இன்னும் பத்தாயிரம் வரைதான் பாக்கி இருக்கிறது. அதற் கே அவர் கோர்ட்டுக்குப்போகிறேன்எனநிற்கிறார்.வீ.ஏ.ஓ தான் பேசித் தலை யிட்டு அவரைக் கொஞ்சம் சமாதானப்படுத்தி வைத்திருக்கிறார்.

வீ ஏ ஓ தான் இந்த நிலத்தை வாங்கிக்கொடுத்தார்.குழி ரூபாய் 2500 என. மொத்தம் 25 குழி,அவ்வளவு நிலம் தேவைஇல்லைதான் வீடு கட்ட/,இருந்த போதும் மொத்தமாக வருகிறதென வாங்கிப் போட்டார்.

வெறும் சீமைக்கருவேலைமுள்மரமாய் அடர்ந்து கிடந்த நிலத்தில் காலடி எடுத்து வைத்து அளந்து கல் போட்டு பத்திரம் பதிந்த அன்று பாதி ரூபாயை ரொக்கமாகக்கொடுத்தார்.மீதிப்பணத்தை பி எப் லோன் போட்டு ஒரு மாதத்திற் குள்ளாகதருவதாகசொல்லியிருந்தான்.வீ ஏ ஓ அதற்கு ஏற்றுக் கொண்டார். ஆனால் மாரிச்சாமி வேலை பார்த்த தனியார் நிறுவனம் மூலமாக எழுதிப் போன பி எப் லோன் வரவில்லை.என்ன செய்ய என கைபிசைந்து நின்ற வேளைவீ.ஏ.ஓ போன்பண்ணி நிலத்துக்காரர் போலீஸ் ஸ்டேசன் போகப் போகிறேன்என்கிறார்,என்றார்.அதற்குமாரிச்சாமி பி.எப்லோன் போட்டிருக்கிற விபரத்தையும் அது இரண்டொரு நாளில் வந்து விடும் எனச்சொன்னபோது வி ஏ ஓ அரை மனதுடன் அதை ஏற்றுகொண்டார்.

மாரிச்சாமி வீ ஏ ஓ விடம் சொன்ன நாளைக்கு முன்னதாகவே பணம் வந்து விட வீ ஏ ஓவிடம் கொடுத்து விட்டு வந்தான் பத்தாயிரத்தைக் குறைத்துக் கொண்டு,அந்தப்பத்தாயிரத்தை வீ ஏ ஓ கையிலிருந்துபோட்டு நிலத்துக்காரரி டம்கொடுத்திருக்கிறார் என்பது பின்னாளில் அவரது பேச்சிலிருந்து தெரிந்தது. உனக்குக்கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் கொடுக்கவில்லை, உனது குணம், பிடித்துப்போன உனது நடத்தை உனது இருப்பு ,,,,,,,எல்லாம் என்னை ஈர்த்து விட மனம் பிடித்துப் போய் உனக்காக பணம் கொடுத்தி ருக்கிறேன், மற்றபடி வேறொன்றுமில்லை என்றார் வீ ஏ ஓ.

அவரது பணத்தையும் கொடுக்க வேண்டும்.இதில் தரைக்கு மார்பிள் வேறு போட்டு விட்டால் அந்தக்கடனும் தனியாக ஏறிவிடும்.கடன் ஏறி நிம்மதி போய் அலைவதற்கு பேசாமல் தரைக்கு மார்பிள் போடும் யோசனையை கை விட்டு விடலாம்.பின்னாடி வசதி வருகிற நாட்களில் பார்த்துக் கொள்ளலாம் என தரைக்கு மார்பிள் பதிக்காமல் விட்டு விட்டார்.ஆனால் அடுப்படி மேடைக்கு மட்டுமாய் விடாப்பிடியாக எஞினியர் கடப்பக்கல் மேடையும் சிங்கும் அமைத்துக்கொடுத்தார்.பணம் பின்னாளில் வருடங்கள் கழித்துக்கூட வாங்கிக் கொள்கிறேன் என்றார்.பின் ஒரு வருடத்திற்குள்ளாக எஞ்ஜினியரி டம் பட்ட கடனையும் வீ.ஏ.ஓவிற்கு தரவேண்டிய பணத்தையும் கொடுத்து முடித்து விட்டார்,இதைஅவரைப் பார்க்கிற நாட்களிலெ  ல்லாம் தவறாமல் சொல்லுவார். மாரிச்சாமி/

நேரமாகிப்போகிறது பஸ்ஸிற்கு என பின்னால் அமர்ந்திருக்கிற மகனிடம் முன்அனுமதி வாங்கிக் கொண்டும், நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஆக்ஸி லேட்டரை முறுக்கிக்கொண்டு வந்ததற்கு இப்படி காத்திருக்கிற பலன்தான் கிடைத்தது.பஸ்வர இன்னும் ஐந்து நிமிடத்திலிருந்து ,பத்து நிமிடங்கள் வரை ஆகலாம்.செல்போனில் மணி பார்த்த போது செல் சொன்னது.

பாலத்திலிருந்து இறங்கிவருகிற பஸ்களும் வேன்களும் இன்ன பிற வாகன ங்களும் சாலையின் இடது புறமும்,பாலத்தில் ஏறுகிற வாகனங்கள் வலது புறமாயும் அணிவகுத்து வருகிறதாய்ப் படுகிறது, வருகிறபோகிற வாகனங்க ளில் பத்தில் இரண்டு அல்லது மூன்றாவது பள்ளிக் கல்லூரி வாகனங்களாய் இருந்தது.

இதைப்பார்த்தவாறு இவர்கள் காத்து நின்ற தருணங்களில் முதலாவதாய் ராமேஸ்வரம் பஸ்ஸீம் ,இரண்டாவதாய் ப்ரதீப்பும் ,பின் மூன்றாவதாய் அல்லது நான்காவதாய் இவனது பையன் செல்ல வேண்டிய பஸ் வரும். அதற்குள்ளாக கலந்து கட்டி பள்ளிக்கல்லூரி வேன்களும் பஸ்களும் வந்து விடும்.இன்று என்னவோ தாமதம் காட்டுகிறது.

நிற்கிற இடத்தின் மேலாக பரந்து விரிந்த குடையாய் காட்சி தருகிற மரம் பூப்பூத்திருந்தது. தூங்கு மூஞ்சி மரம் என நினைக்கிறான்.அது என்ன மரம் என யாரிடமாவது கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைப் பதுண்டு சமயங்களில்/ நினைத்த கணத்திலிருந்து சிறிது நேரம் வரைக்குமாய் நிலை கொண்டிருக்கிற நினைவு பின் பறந்து போகிறதாயும்,காற்றில் கரைந்து விடுகிறதாயும்/

இன்று போல் பஸ்ஸிற்காய் காத்து நிற்கிற நேரத்திலும் அது தான் தோன்று கிறது.தற்செயலாய் மரத்தை அண்ணாந்து பார்த்த போது மஞ்சளும் ,வெள்ளை யும் ,இளம் பச்சையுமாய் பூத்திருந்த பூக்களிலிருந்து ஒன்று திறந்திருந்த இவனது வாய் மீதாக விழுந்தது.

இது போலாய் பலரது வாய் மேலும், உடல் மீதுமாக விழுந்த பூக்களைச் சுமந்த மரங்கள் பாலத்திலிருந்துஇறங்கிச் சரிகிறசாலையின் இரு மருங்கிலு மாய் காணக்கிடைக்கவில்லை.

ரோட்டை அகலப்படுத்துவதற்காக சாலையின் இரு மருங்கிலுமாய் இருந்த மரங்களை வெட்டி விட்டார்கள்.அவர்கள் வெட்டிய மரம் ஒவ்வொன்றும் ஐம்பது வருடங்கள் சரித்திரம் கொண்டதாக இருந்தது.ஆழ வேறூன்றி அகலக் கிளைகள் கொண்ட அகன்று பரந்திருந்த அம்மரங்களை மெசின் கொண்டு அறுத்துப்போடும் போதும்,ஜே சி பி மெசினை வைத்து தூர்களை இழுத்து அகற்றும்போதும்பார்த்தவர்களுக்குகண்ணீர்வராதகுறையாகத்தான்இருந்தது.

வெட்டிப்போடப்பட்டிருந்தமரக்கிளைக்களும்,மரத்தின்இலைகளும்,சாலையில் வருகிறவர்கள் போகிறவர்களைப்பார்த்துஎங்களைக் காப்பாற்றுங்கள், எங்க ளைக் காப்பாற்றுங்கள் என கூவி அழைத்ததாய் இருந்தது.ஒன்றல்ல இரண்ட ல்ல சாலையின்இருமருங்கிலும் இருந்த இருபதிற்கும்மேற்பட்ட மரங்கள் இருந்த இடத்தில்விளக்குக்கம்பங்களும்,விளம்பரப்பலகைகளும் நின்றிருந் தன.

சாலையின் மத்தியில் இருந்த முழங்கால் உயரச்சுவரின் ஊடாக வாய்க்கால் வகுத்தது போல் காணப்பட்ட மண்பரப்பின் ஊடாக ஊனப்பட்டு வளர்ந்திருந்த செடிகளின்பூத்துச்சிரித்த பூக்கள் சிவப்பாய் வெள்ளையாய் கலர்க்காட்டி நின்றி ருந்தன குட்டையாய்/

இவர்கள் நின்றிருந்த இடம்தான் பஸ்டாப் என அர்த்தமாகிறது.ஆனால் அது அல்ல இடம்.பஸ்டாப் இவர்கள் நின்றிருந்த தூங்கு மூஞ்சி மரத்திலிருந்து பத்தடி தள்ளித்தான் இருந்தது.

நன்றாக உயர்த்திக் கட்டப்பட்டிருந்த முச்செவ்வகமான கட்டிடம்.உள்ளே மூன்று பக்கமுமாய் கடப்பக்கல் மேடை போடப்பட்டு பதினைந்து அடி அகலத் திலும் ஆறடி நீளத்திலுமாய் தன் கம்பீரம் காட்டி நின்றது,இப்ப்பொழுதுதான் கட்டி ஒரு வருடம் கூட ஆகாத புதுக்கருக்கு இன்னும் அதில் ஒட்டித் தெரிந் தது.ஆனாலும்அங்குபோய்யாரும்நிற்பதில்லை.நன்றாகநின்றால்பஸ்ஸிற்காக நிற்பவர்களில் பத்து அல்லது ஐந்து பேர் வரை நிற்பார்கள் ,மிச்சம் பேர் எல்லாம் ரோட்டோரங்களிலும் மரத்தடியிலுமாகத்தான்/

அப்படி நிற்கும் போது மரத்தடியின் பக்கமாய் நின்ற மின் கம்பத்தின் கீழாக பூக்கடை வைத்திருந்தவள் சொன்னாள்.ஏதாவது அவசர வேலை இருந்தா விட்டுட்டுக்கெளம்புங்க நீங்க,பஸ் வரவும் நான் ஏத்தி விட்டிருறேன் என்றாள்.

மானசீகமாகவும்வெளிப்படையாகவும்அப்பெண்ணிற்கு நன்றி சொல்லி விட்டுப் போன அன்றைய தினத்தின் அவசியம் போல சில நாட்களில் ஏற்பட்டுப் போ னது தற்செயலா அல்லது எதுவென இதுவரை புரியாததாகவே/

அவ்வப்பொழுது பஸ்ஸிற்காய் நிற்கும் போதும் அந்த இடத்தைக் கடக்கையி லும்லேசாகபுன்னகைக்கிறஅந்தப்பெண்ணின்வயதுமுதிர்ந்த சிரிப்பில் பூவாசம்/

வாயிலும் மேலிலுமாய் விழுந்திருந்த பூக்களை தட்டிவிட்டு விட்டு தரை முழு வதுமாய் போர்வையாய் போர்த்தியிருந்த பூக்களை மிதித்தவனாய் பைய னிடம் சொல்லிவிட்டுக்கிளம்புகிறான்.நேரமாகிறது எனக்கு,பஸ் வந்தால் ஏறிக்கொள்,நான் போய் பெட்ரோல் போட்டுக்கொண்டு கிளம்புகி றேன்.என பேட்ரோல்பங்க்வந்தபோது பெட்ரோல் பங்கின் அருகாமை யாக இருந்த சீமைக் கருவேலைமுட்கள்நிறைந்திருந்தவெற்று வெளியில்தான் அந்தக் குவியலைக் கொட்டி வைத்திருந்தார்கள்.

பெட்ரோல் போட வருகிற நேரங்களில் அவசர ஆத்திரத்திற்கு ஒதுங்குகிற பதிவான ஒரு இடமாக இருந்தது அது.நீண்டு வாலோடியாய் ஓடிச்செல்கிற சாலையின் ஓரமாய் இப்படியாய் ஒரு இடம் இருப்பது ஆத்திர அவசரத்திற்கு உதவுகிறதுதான்.இது போலான குவியலை மதுரை ரோட்டில் பார்த்திருக் கிறான்.புது பஸ்டாண்ட் திரும்புகிற இடத்தில் இருக்கும்.அது அனேகமாக மார்பிள் கற்களை பொடி பண்ணுகிற பேக்டரி என இவன் புரிந்து வைத்திருந் தான், இடையிடையில் கொஞ்சம் பெரிது பெரிதான மார்பிள் கற்களைப் பார்க்கலாம்.

மதுரைரோட்டில் அன்று பார்த்தகற்குவியலும் சரி,பெட்ரோல் பங்க் அருகாய் பார்த்த உடைத்தஎறியப்பட்ட குவியலும் சரி ஏதோ முன் பின் அறியா குடும் பத்தினரின் முகம் சுமந்து கொண்டிருப்பதாகப் பட்டது.

நேற்று இரவு ஒரு புகழ் பெற்ற இயக்குனரின் படம் பார்த்து விட்டு தூங்க போகும்பொழுதுஇரவுமணிபணிரெண்டாகிப்போனது.அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்தப்படத்தைப்பற்றி ஒரு இலக்கிய மாத இதழில் வெளி வந்திருந்த விமர்சனம் சரி என்றே பட்டது.இவன் அப்படி ஒன்றும் பெரியவிமர்சகனோஅல்லது படத்தை சீர்தூக்கிப்பார்த்து சரி தவறு சொல்கிற அளவிற்கான ஆளெல்லாம் கிடையாது என்ற போதும் கொஞ்சம் காரம் ஜாஸ்தி,,,,இனிப்பு கம்மி,,,,, என சொல்லத்தெரிந்து வைத்திருந்தான்.

இவனது மனைவி கூடச்சொல்வாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்கை யிலோஅல்லதுசினிமாபார்க்கையிலோ,,,,,சினிமாதான,நாடகம்தானஅதுக்குப் போயி எதுக்கு இவ்வளவு சீரியஸாகுறீங்க அது ஒரு பொழுது போக்கு ,அதைப்போய் இப்படி சீரியஸாக எடுத்துக்கொண்டும்,புரிந்து கொண் டும் விடா விட்டால் என்ன,என அவள் சொன்னதும் சட்டென அதற்கு பதில்சொல்பவ னாகஇருந்திருக்கிறான்இதுநாள்வரை.அப்படியானால் கோயிலுக் குப் போவ தை ஒரு பொழுது போக்காக எடுத்துக்கொள்வாயா நீ என/

அவளும் விட மாட்டாள்,அது எப்படி எடுத்துக் கொள்ள முடியும் சினிமா சித்தரி க்கப்படுவது,கோயில்அப்படியல்ல,தெய்வமும்,கலாச்சாரமும்ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் வேறு வேறல்லவா, என அவள் சொன்ன போதும் இரண்டும்சமூகஉட்கட்டமைப்பின்மீதான எண்ணங்களின் பிரதிபலிப்பு தானே,,,? என இவனும் அவளுமாக நிறையப்பேசுவார்கள்.இவர்கள் பேசிக் கொண்டிருக் கும் பொழுதோ, உரையாடலை ஆரம்பிக்கிற பொழுதோ யாராவது வந்து விட்டால் என்ன வழக்கம் போல புருசனும் பொண்டாட்டியுமா விவாதத்துல யெறங்கீட்டீங்களா என்பார்கள்.இதுக்குப்பதிலா இன்னைக்கு சோத்துக்குஎன்ன பண்ணலாம்,கொளம்புக்கு என்ன செய்யலாம்ன்னு பேசீரு ந்தாலாவது பிரயோ ஜனமா இருந்திருக்கும்.

என்னதான் நீங்கமுக்கிமுக்கிபேசுனாலும்கூடநடக்குறதுதான் நடக்கும். சும்மா இந்தமாதிரிபேசுறதவிட்டுட்டுகல்யாணத்துக்குவளந்துநிக்கிறபெரியபொண்ணு க்குமாப்ளபாக்குறது சம்பந்தமாயும்,சின்னமகளோட12ஆம்வகுப்புபடிப்பையும் கொஞ்சம்கவனிங்க என்பார் வீட்டிற்கு அடிக்கடி வருகிற சொந்தக்காரர் ஒருவர்.

அவரதுஇந்தப்பேச்சை கேட்கிற கணத்தில் ஒன்று சேர்ந்து கொள்வார்கள் இரண்டு பேரும்/

எண்ணன்னேஇது,போனவாரம்வந்தப்பக்கூடஒங்க சின்ன மகன் டீவியப்பாத்து க் கெட்டுப்போறான்னு சொன்னீங்க,இப்ப வந்துட்டு இப்பிடி சொல்றீங்களே என இருவருமாய் சேர்ந்து அவருக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது இவன் பணி புரிந்த ஊரில் தங்கியிருந்த நாட்களில் நடந்த நிகழ்வு நினைவிற்கு வராமல் இல்லை.

வேலைக்குச்சென்று வந்தநாளன்றின்மாலைஇரவு கவிழும் நேரமாய் இவன் வீட்டை விட்டு வெளியில் கடைக்கு வந்திருந்த நேரம் கல்யாணி அண்ண னுடன்பேசிக் கொண்டிருந்தான்.அப்பொழுது வேகமாக வந்த அவளது மனைவி பதைபதைப்பாக காணப்பட்டாள்.இவன் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டான், கணவனும், மனைவியும் பேசுகிற இடத்தில் நாம் எதற்கு அனாவசியமாய் என ,

தீப்பெட்டி ஆபீஸ் போன பிள்ளை இன்னும் வீடு வரவில்லையாம்/4.30 மிஞ்சிப் போனால் ஐந்து அல்லது ஐந்தரை மணிக்குள்ளாக வந்து விடுவாள். வந்த துமாய் அம்மாவை சுடுதண்ணி வைக்கச்சொல்லி குளித்து விட்டு உள்ளூரில் இருக்கிற பெருமாள் கோயிலுக்குப்போய் விட்டு வந்து இரவு வீட்டு வேலை யில் அவளது அம்மாவிற்கு உதவியாக இருப்பாள்.

இப்பொழுதுஇரண்டுவாரங்களாய்த்தான்கோயிலுக்குப்போகவில்லை.அவளது அம்மா வேண்டாம் எனச் சொல்லி விட்டாள்.கோயில் இருக்கிறது வடக்குத் தெருவில்,இவர்கள் இருப்பது தெற்குத்தெருவில்/

கல்யாணியின் மகள் வேலை பார்க்கிற தீப்பெட்டி ஆபீஸ் இருப்பது வடக்குத் தெருவில்தான்,அட ஏம்பா வேலை விட்டு வரும்போது ஒரு எட்டு கும்புட்டு வர்றதுக்கென்ன என அவளது அம்மா கேட்கும் போதெல்லாம்,,,அது எப்படி ம்மா குளிக்காம செய்யாம ஒடம்பு முழுக்க அடிக்கிற மருந்து வாசனையோட போயி சாமி கும்புடுறது என்பாள்.நீயி என்ன கோயிலுக்கு உள்ளயா போயி சாமி கும்புடப்போற,கோயிலுக்கு வெளியில நடையில நின்னு கும்புட்டு வர்றதுக்கு எப்பிடிப்போனா என்ன,என அவளது அம்மா சொன்னதும் சும்மா இரும்மா நீயீ,வீட்ல வந்து குளிச்சிட்டு தலையில ஒரு மொழம் மல்லிகைப் பூவோடகாத்தாடபோயி வந்த மனசுக்குக்கொஞ்சம் யெதமா இருக்கும். ஏங் கூட இன்னும்ரெண்டுமூணுபேரு வருவாங்க,அப்பிடியே பேசிக்கிட்டே போயி ட்டு வருவோம்/எனச்சொல்வாள்.

வாரம் முழுக்க பூட்டியிருக்கிற அந்தக்கோயில் வாரத்தின் வெள்ளிக் கிழமை களில் மட்டும் திறந்திருக்கும். மற்றநாட்களில் கோயிலின் வாசலில் சூடம் பொருத்தி வைத்துவிட்டு கும்பிட்டு விட்டு வருவார்கள்.

சில நாட்களில் பக்கத்திலிருக்கிற வேப்ப மரத்தின் அடியிலாக கொஞ்சம் நேரம் அமர்ந்து பேசிவிட்டு வருவார்கள்.அவர்களது பேச்சில் கோயிலுக்குள் இருக்கிற சாமியிலிருந்து அவர்கள் வேலை பார்க்கிற தீப்பெட்டி ஆபீஸ் சூப்பர் வைசர் வரைக்குமாய் அரை படுவார்கள்.

இப்பொழுதுஇரண்டுவாரங்களாககோயிலுக்குப்போகவில்லை.போய்வரமுடிய வில்லை.கோயிலுக்குபோய் வருகிற வழியில் சில விடலைப்பை யன் களின் கேலியும்,சீண்டுதல்ப்பேச்சும்,அவர்களைப்பின் தொடர்தலும் கூடுதலாகிப் போக கோயிலுக்குப்போக வேண்டாம் என நிறுத்தி விட்டார்கள்.பையன்கள் பின் தொடர்வதும்கேலிபேசுவதும் பிள்ளைகளுக்குக் கூடத்தெரியவில்லை முதலில்/ டீக்கடைக்கார்தான் விசயத்தைச்சொன்னார்.

டீக்கடைக்காரபால்ச்சாமியண்ணனும்,கல்யாணியும்மாமன்மச்சினன்முறையி ல் பழகிக்கொள்வார்கள்.அவர்கள் இருவரும் சொந்தமெல்லாம் இல்லை.

கமுதிப்பக்கமிருந்து பிழைப்பிற்கு வழி தேடி நிர்கதியாய்இங்கு வந்து நின்ற போது கல்யாணியின் தலைதுவட்டி பாதுகாத்து தன்னகத்தே அடை காத்துக் கொண்டவராய்டீக்கடைபால்ச்சாமியண்ணன் இருந்தார்.

அப்படியாய்அன்று அடைகாத்த பால்சாமியண்ணமிம் பாஞ்சாரத்திலிருந்துக் கிளைத்த நட்பு அவர்களை மாமன் மச்சான் என உறவுகொண்டாட வைத்து விட்டது.

பால்ச்சாமியண்ணன் டீக்கடைக்கு டீ வாங்க வருகிற கல்யாணியை சர்வ சாதாரணமாக கேலிபண்ணுவார்.சார் இவரத்தான் ஊர்க்காவலுக்குப்போட்டுரு க்கு நல்லா பாத்துக்கங்க என்பார்.அதற்கு கல்யாணியும் சிரித்துக்கொள்வார். ஏய் போ மாப்புள அங்கிட்டு,நா ஊருக்கு காவல்ண்ணா ஓங்தங்கச்சியும் ஏங் க்கூட வரணுமில்ல என்பார்.இருவருமாய் சிரித்துக்கொள்வார்கள்.சப்தமிட்டு/

தினசரி காலையிலும் மாலையிலுமாக பால்சாமியண்ணன் கடை வந்துதான் டீ வாங்குவார் கல்யாணி/ ஒரு பார்சல் டீதான் மொத்தக்குடும்பத்திற்கும்/ கல்யாணி அவரதுஇரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பத்திற்கு ஒருபார்சல் டீ வாங்குற போதும் கூட காணாததுதான்.ஆனால் பால்சாமியண்ணன் கடையில் வாங்கும் போது நான்கு பேர் போக கூட ஒரு ஆள் சேர்த்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இந்த மாதிரியான அளவில்லா டீக்கு கல்யாணிகொடுக்கிற காசும் பால்சாமி யண்ணன் வாங்கி கல்லா கட்டுகிற பணமும் எந்த வியாபாரதர்மத்திலும் அடங்காது.கேட்டால் அட போ மச்சான் நீ பாட்டுக்கு,இப்ப நீயி காசு குடுத்துத் தான் எனக்கு நெறையப்போகுதாக்கும் நீயி ஒரு திக்கம் என்பார்.வேணுன்னா ஒண்ணு செய்யி நா குடுக்குற டீக்கு பதிலா ஓங் மகள ஏங் பையனுக்குக் கட்டிக்குடுத்துரு என்பார்.பால்ச்சாமியண்ணன் கல்யாணியிடம்/

இது போலான வரம்பு மீறாத பேச்சும் சிரிப்பும் பழக்க வழக்கங்களும் அவர்க ளுக்குள்ளாய் வளர்ந்திருந்த நட்பும் கல்யாணி வளர்ந்து வசதியான சொந்த மாக வீடு வாசல், கையிருப்பு,,,,,,என ஆகிப்போன பின்பும் கூட துளியும் பிளவு பட்டு விடவில்லை.

அந்த நட்பின் மூலாதாரமும் ,வேரும் கிளை பரப்பலும் ஒருவர் வீட்டு விசே சத்தில் இன்னொருவர் வீட்டு இருப்பும்,ஆலோசனையும் முக்கியம் எனும் அளவிற்கு பிணைப்பை உருவாக்கியிருந்தது.அந்த பிணைப்பும் இறுக்கமும் இருந்த நாட்களின் நகர்வில் பால்சாமியண்ணண்டீக்கடையில் நின்றுபேசிக் கொண்டிருக்கும்போதுதான்அவள்மனைவிவந்துபதைபதைத்துச் சொன்னாள்.  மகள் இன்னும் வீடு வரவில்லை என

அதை முழுதாக விசாரிக்கிற நேரத்திற்குள்ளாய் வாங்க மச்சான் என பால்ச் சாமியண்ணன்கல்யாணியைகூட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்.

கொஞ்சநேரத்தில்களோபரமாகிப்போனதுகல்யாணியின்வீடு.எங்கபோயிருப்பா,  என்ன ஆக்கியிருப்பா,,இப்பிடியா செய்வா பொம்பளப்புள்ள எங்க போறோம் என்ன செய்யிறோம்ன்னு கூடச்சொல்லாம, என பலரும் பல விதமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது அந்தப்பக்கமாகப் போன வாத்தியார் ஒழுக்கமா அவளுக்கு ஒரு பையனப்பாத்து கட்டிவையுங்க,,,,, எனச் சொல்லி விட்டுப் போய் விட்டார்,

அவரது பேச்சின் அர்த்தம் அங்கிருந்த குழந்தைக்குக்கூடத் தெரியும். என்பது தான் நிதர்சனம்.

தீப்பெட்டி ஆபீஸிலில் வேலை செய்பவள்தானே எவனுடனாவது போயிருப் பாள் என்கிற உள்ளர்த்தத்தைக்கொண்டிருந்த அவரது பேச்சு நிலமையை இன்னும் பதட்டமாக்கியதேதவிரகுறைக்கவில்லை.

தேடிப்போனகல்யாணியும்பால்சாமியண்ணனும்இன்னும்வரவில்லை.பேசிக்  கொண்டிருந்தவிசயத்தின் வீர்யமும் சுவாராஸ்யமும் குறைந்து போன போது வீட்டு முன்பாக கூட்டம் குறைய ஆரம்பித்தது.கூட்டம்குறைந்த சிறிது நேரத் தில் கல்யாணி வந்து விட்டார்.

மகளுடன்.வேலை முடிந்து பக்கத்து ஊரில் இருக்கிற தோழியின் வீட்டிற்கு போயிருக்கிறாள்.கூட வேலை பார்ப்பவளிடம் சொல்லியிருக்கிறாள்,அவள் அவளது அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போகிற அவசரத்தில் சொல்ல மறந்து போனாள்.என்பது தெரிந்தது பிற்பாடு.

உடன் வேலைபார்ப்பவள் மறு நாள் வந்து கல்யாணியிடமும்கல்யாணியின் மனைவியிடமும் மன்னிப்புக் கேட்டாள்.மன்னிப்புக்கேட்டு என செய்ய ,நடந்த நிகழ்வும் ஏற்பட்ட கெட்ட பெயரும் நிலை கொண்டு விட்டதுதானே,,?என வருத்தப்பட்ட கல்யாணியின் மகள் மறு நாள் வேலைவிட்டு வரும் போது வாத்தியாரிடம் போய் சண்டை போட்டு விட்டு வந்து விட்டாள்.தன்னை எப்படி இப்படி இழிவாகவும் பழித்தும் பேசலாம் என,/

இத்தனைக்கும் அவளுக்கு சொல்லிக்கொடுத்த வாத்தியார் அவர்.அவருக்கும் கொஞ்சம் அவமானமாகவே போய் விட்டது,சிறு பிள்ளைதானே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத வயது. கொஞ்ச நேரம் பேசியதும் அழுது விட்டாள்.அழுது கொண்டே வாத்தியாரின் வீட்டு  வாசலில்  உட்கார்ந்து 
விட்டாள். அட சண்டாளத்தனமே,இப்பிடியா நடக்கும் காலக்கொடும,,,என வாசலில் அமர்ந்திருந்த அவளை வீட்டிற்குள் கூட்டிப் போய் சிறிது நேரம் உட்கார வைத்து டீக்கொடுத்து மனசை சாந்தப் படுத்தி அனுப்பினாள். வாத்தி யாரின்மனைவி.

அவளைஅப்படிவீட்டிற்குள்ளாய் கூட்டிப் போனதற்குகாரணம் இருந்தது.வீட்டு வாசலில் கூட்டம் கூடி விட்டது. அதைத் தவிர்ப்பதற்காகவும் வாத்தியாரின் அந்தப்பேச்சிற்குவருத்தம்தெரிவிப்பதற்காகவும்தான்/வாத்தியாரும்அவளிடம்  மனதார மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

பின்அந்தபக்கமாய்போகும் போது கல்யாணியிடமும் கல்யாணியின் மனைவி யிடமுமாய் மன்னிப்புக்கேட்டுக்கொண்டார். வாத்தியாரின் அந்தப்பேச்சும் மன்னிப்புக்கோரலும் கல்யாணியை அவரது பெண்ணுக்கு அவரச அவசரமாக கல்யாணம் பேசி முடிக்கும் நிலைக்குத்தள்ளியது என்கிற நினைவு சுமந்து உடைத்தெறியப்பட்டிருந்த கற்களின் சதுரங்களையும் ,செவ்வகங்களையும் அருங்கோணங்களையும்,,,,இன்ன பிற வடிவம் தாங்கிய குவியலையுமாய் பார்த்துக்கொண்டு செல்கிறான்.

16 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தொடக்கிய விதமும் முடித்த விதமும் சிறப்பு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார் நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

அருமைநண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

SUPER (From Android)

'பரிவை' சே.குமார் said...

நல்ல எழுத்து அண்ணா..

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

வலிப்போக்கன் said...

மன்னிப்பு கேட்டவர்களை மன்னித்தார் களா...? என்பது தெரியவில்லையே....???

vimalanperali said...

வணக்கம் வலிப்போக்கன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
மன்னிப்பதும் மறப்பதும் நம் இயல்புதானே?

Nagendra Bharathi said...

அருமை

vimalanperali said...

வணக்கம் நாகேந்திர பாரதி சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

துரை செல்வராஜூ said...

தாங்கள் எனது தளத்திற்கு வருகையளித்து
கருத்துரை வழங்கிய அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

துரை செல்வராஜூ said...

தெளிந்த நீரோட்டம் போல சம்பவங்கள்..
பல சமயங்களில் இப்படித்தான் நடந்து விடுகின்றது..

வாழ்க நலம்..

vimalanperali said...

வணக்கம் துரை செல்வராஜீ சார்,
நன்றி தங்களின் மகிழ்ச்சிக்கு/

vimalanperali said...

வணக்கம் துரை செல்வராஜி சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/