Showing posts with label சொல்சித்திரம்.சிறுகதை பதிவுசமூகம்சித்திரம். Show all posts
Showing posts with label சொல்சித்திரம்.சிறுகதை பதிவுசமூகம்சித்திரம். Show all posts

17 May 2020

சூறைக்காற்று,,,,,,

அவனது இருப்பு தர்மசங்கடப்படுத்துவதாயும்,கொஞ்சமாய் மனக்கிலேசத் தை உண்டு பண்ணுவதாயும்,,,/

திடு திப்பென அறிமுகமற்ற ஒரு அந்நிய மனிதர் வீட்டின் முன் அமர்ந்திருக் கிறார் என்றால் கொஞ்சம் யோசனையாகத்தானே இருக்கிறது,

கால்கள் இரண்டையும் நீட்டி வேப்பமரத்தில் தலையைச் சாய்ந்து படுத்திரு ந்தார்,

காலையில் வாசல் தெளிக்க எழுந்திருந்த மனைவிதான் பதட்டமாய் வந்து எழுப்பினாள் இவனை,

நல்ல தூக்கம் ஞாயிற்றுக் கிழமைகளில் இப்படியாய் தூங்க வாய்ப்பது பாக்கியமே என்கிற எண்ணம் எப்பொழுதுமே இவனிடம் இருந்ததுண்டு. காரணம் அதற்கு முந்தைய நாள் முன் இரவு இஷ்டத்திற்கு கண்விழிக்கலாம், தாமதமாய் தூங்கலாம்.தொலைக்காட்சி அல்லது கையில் இருக்கிற கைபேசி வழியாய் ஏதாவது படம் செய்தி பார்க்கலாம்,இப்படிப்பார்க்கிற எதுவும் பிடிக்கவில்லையெ ன்றாலும் கூட யூட்யூப்பில் ஏதாவது குறும்படம் அல்லது மனம் பிடித்த பேச்சு, அல்லது கதையாடல் நிகழ்ச்சி என பார்ப்பதுண்டு.

இவனைபொறுத்த வரையில் இப்படியாய் பார்க்க,கேட்க,உணர,நேர்கிற எந்த ஒரு நல்ல நிகழ்வும் வீண் என நினைத்ததில்லை.அதனால்தான் அப்படியான நிகழ்வுகளின் நினைவுகளை வருடமெல்லாம் அசை போட்டுக்கொண்டிருக்க வாய்க்கிறது,

போடுகிற அசைவின் நன்மையும்,தீமையும் நன்றாகவேஅமைந்து விடுகிறது ண்டுதான் பெரும்பாலுமாய், நேற்று இரவு அப்படி ஒன்றும் பெரிதாக பாதித்த இரவாய் ஞாபகம் இல்லை.

சாப்பிட்டதும் சிறிது நேரம் படித்துக்கொண்டிருந்தான்,என்ன புஸ்தகம் என்பது ஞாபகத்தில் இல்லை,மனம் ஒட்டாத படிப்பு,படிக்க வேண்டுமே என வம்பாய் படித்துக்கொண்டிருந்தான், பசிக்காத வயிற்றில் வம்பாய் கொண்டு சோற்றை வைத்து விட்டு வந்தது போல் தெரிகிறது,சிறப்பு அனுமதியெல் லாம் வாங்காமல் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு போகாமல்,டிக்கெட் ஏதும் எடுக்காமல் உள்ளே ஏணி போட்டு இறங்கி சிறிது சாப்பாட்டை இறக்கி வைத்து விட்டு வந்து விடுகிற ஆபத்து நிகழ்ந்து போவதுண்டுதான், இறக்கிய சோற்றின் மணம் ருசி, உப்புப்புளி, காரத்தின் அளவு அனாவசியமாகிப் பட்டுத்தோணிப்போகிறதுதான் அங்கு/ ,பசி இல்லாது வம்பாய் சாப்புடுகிற போது அதன் ருசி இரண்டாம் பட்சமா கி தெரிகிறதுதான்,

நேற்று இரவும் அப்படித்தான் ,

தோசைக்கு ஊற்றிக்கொடுத்தாள், இவன் அறிய சின்ன வயதில் தோசை இட்லி என்பது தேவலோகத்து வாசிகள் மட்டுமே உண்கிற அபூர்வ பண்டாகித் தெரிந்ததுண்டு,

”அடி ஆத்தி,அவுங்க வீட்டுல இட்லிக்குப் போட்டுருக்காங்களாம்த்தா,அவுங்க வீட்டுல தோசைக்காமுல்ல போட்டுருக்காங்களாம், ஆத்தி,,, என கன்னத்தில் வைத்து ஊர் பெரு மூச்செறிகிற திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் ஊரின் மையமாய் இருக்கும் பெரிய ஆட்டு உரலில்தான் ஊரே தோசைக்கும், இட்லிக்கு மாய் மாவு ஆட்டும்,மற்ற நாட்களில் ராமண்ணன் போன்றவர்கள் தங்களதுஒற்றைக் காளைக்கும்,மற்றவர்கள் தங்களின் ஜோடி மாடுகளுக்கும் பருத்தி விதையும்,கம்பும் ஊற வைத்து அறைத்துக்கொண்டு போனார்கள்.

அது அப்படித்தான் ராமு அண்ணனைப்போல நிறையப்பேர் ஒற்றைக்காளை மாட்டை வைத்திருந்தார்கள்,அவர் வைத்திருந்தது இடத்து மாடு என்றால் யாரிட மாவது இருக்கிற வலத்துக்காளையை வாங்கிக் கொண்டு போய் வேலையை முடித்துக்கொண்டு வருவார்.

உழவுக்கு ,குப்பை அடிக்க,வண்டி அடிக்க என ஆடி மாதம் தவிர்த்து அவர்களுக்கு வேலை இருந்தது, ராமு அண்ணன் தன்னிடமிருக்கிற ஒற்றைக் காளையை வைத்துக்கொண்டு வருடமெல்லாம் ஏதாவது வண்டி மாட்டு வேலைக்கும் ,உழவு வேலைக்குமாய் போய்க்கொண்டிருப்பார்,ராமு அண்ண னிடம் இருந்ததைப்போல மந்தை வீட்டு பெருமாளிடம் இருக்கிற ஒற்றை மாடும், வடக்குத்தெரு முனியசாமியிடம் மாட்டு வண்டியும் வருடமெல்லாம் விவசாய நிலத்தின் மேல் நடந்த எல்லா வேலைகளுக்கும் போய் வந்தது, இது விஷயத்தில் பரஸ்பரம் மூவரின் கையும் மனமுமாய் பிணைந்திருக்க ஒரு கூட்டு வைத்துக் கொண்டார்கள்.

தன்னிடமில்லாத வலத்துக்காளையை இடத்துகாளைக்காரரிடமும்,. தன்னி டம் இல்லாத மாட்டு வண்டியை அதை வைத்திருப்பவரிடமுமாய் பரஸ்பர நட்பில் பரிமாறிகொண்டார்கள்,

அது போலவே ஒரே உரலில் பண்டிகைக்கும்,தனது வீட்டு விசேசத்திற்குமாய் ,மாவரைத்தவர்கள் இட்லி மாவு கொஞ்சத்தை அதை அரைக்காதவர்களிடம் கொடுத்து விட்டு தோசை மாவை அவர்களிடமிருந்து கொஞ்சமாய் வாங்கிக் கொண்டார்கள்,

வண்டி மாடுகளின் பரிமாற்றம் விவசாய நிலங்களிலும் இட்லி தோசை மாவுக ளின் பரிமாற்றம் வீடுகளிலுமாய் இருந்த நேரம் நினைவுக்கு வந்து போவது தவிர்க்க முடியாது போகிறதுதான்,

பொதுவாக தோசை சாப்பிடுவது இவனுக்கு ஆகாது அல்லது பிடிக்காது, எத்தனை வகை சட்னி அல்லது சாம்பார் வைக்கிற போதும் கூட தோசை என்றால் முகம் ஏழு கோணலாய்த்தான் போய் விடுகிறது,

“அந்த மானிக்கி அரைச்சி வச்ச சட்னியையும்,ஊத்தி வைச்ச தோசையையும் தூக்கி தலை வழியா கவுத்தி விட்டுருவேன் தெரியுமா,,,/ எப்பவாவது அத்தி பூத்தாப்புல ஹோட்டலுக்கு சாப்புடப்போகும் போது ஸ்பெசல் தோசைதான் வேணும்,அது சாப்புட்டா என்னோட எனர்ஜி ஏறி பயில்வான் மாதிரி ஆகிப் போவேன்னு சத்தியம் செஞ்சது போல தோசை மட்டுமே வாங்கி சாப்புட்ட கையோட வேற எதுவும் சாப்புடாம அப்பிடியே எந்திரிச்சிர்றீங்க,கூட வந்த பாவத்துக்கு நானும் ஆசைப்பட்டதக்கூட சாப்புடாம கடனுக்கு என்னத்தை யாவது சாப்புட்டுட்டு எந்திரிச்சு ஒங்க பின்னாடியே ஓடி வந்துரற துண்டுதான, இதுக்கு எதுக்கு கடைக்குப்போகணும் இதுக்கு எதுக்கு சாப்புடணுமுன்னு தெரியல, கடைக்குள்ள நீங்களும் நானுமா நொழஞ்ச ஒடனேயே சர்வர்லயிருந்து அடுப்புல நிக்கிற சரக்கு மாஸ்டர் வரைக்கும் சாருக்கு ஒரு ஸ்பெசல் தோசைன்னு சொல்லீருவாங்க,எனக்கு என்ன வேணுமுன்னு மறந்து போயிக்கூட கேக்க மாட்டாங்க,நானா ஆர்டர் சொன்னாத்தான்,அப்பிடி சொல்றதுலயும் ஒரு வம்பு இருக்கு,புருஷன்தோசை மட்டும் சாப்புடும் போது பொண்டாட்டிக் காரி இஷ்டத் துக்குஆர்டர் பண்ணி சாப்புடுறாளேன்னுநெனைச்சிறக்கூடாது.அந்த நெனைப்பு வந்துருச்சின்னா சாப்புடறது ஒடம்புல ஒட்டாது, நிம்மதியா சாப்புட முடியாது ,அவக்கு தொவக்குன்னு சாப்புட்டுட்டு எந்திரிக்க வேண்டியதிருக்கும்,ஏதோ பெரிசா ஒரு குத்தம் செஞ்சிட்டு மாதிரி பீலிங்கோட ஹோட்டல்ல இருந்து வர வேண்டியதா இருக்கு, அதுக்குத்தான் பேசாம ஒங்க கூட சாப்புட வார இருந்துக் குறது பெட்டர்,எதுக்கு ஒங்க கூட வந்துக்கிட்டு ,கடையில சாப்புடப்புடிக்கிற பண்டம் வீட்ல சாப்புடப்புடிக்காம போறதுக்கு என்ன காரணமுன்னு வீண் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு,,,,,, இதுக்கு பேசாம வீட்டுலயே இருந்துட்டுப் போகலாம், நீங்க ஒங்களுக்குப் புடிச்சத சாப்பிடுங்க என்பாள்,

வேண்டாததத்தின்ற காண்டா மிருகமாய் நுனி விரலால் ஒரு தோசையை மட்டும் பிய்த்து சாப்பிட்டு விட்டு படுத்து விட்டான், அன்றைக்கு மனசுக்குப் பிடித்த பழைய சோறு இல்லை.,

அச்சங்களின் பிடியிலும் அதன் வசத்திலுமாய் இருக்கிற மனது மிகவும் சங்கடமாகியே/

வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்த பொழுது வேப்ப மரத்தடியில் படுத்திருந்த அவன் பக்கத்தில் பைஜாமாவில் ஒரு பெண்,

அவளது வலது தோளில் குழந்தை, அனேகமாக இருவரும் அவனது மனைவி குழந்தையாக இருக்க வேண்டும்,

சிவப்பின் தீற்றலாய் குழந்தை அழகாய் இருந்தது,வெளிர்க்கலரில் சட்டையும் சிவப்புக் கலரில் அணிந்திந்த பாவாடையும் பார்க்க அழகாக இருந்தது .பசியி லும் தாகத்திலுமாய் அழுதழுது ஓய்ந்திருக்க வேண்டும் போலும்,

தாயின் தோளில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தது,கண்ணீர் வரிகளும் ,அதை துடைத்து பிஞ்சுக் கைகளின் தடமும் அழுக்கு முகத்தில் பட்டுத் தெரிந்தது. அவர்கள் சாய்ந்து படுத்திருந்த வேப்பமரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள் இரண்டு அவளது உதட்டிலும் ,அவனது தலையிலுமாய் விழுந்தன, உதட்டில் விழுந்ததை எடுத்து தலையிலும்,தலையில் விழுந்ததை எடுத்து உதட்டிலுமாய் வைத்துப் பார்க்கிற பிடிப்பட்டுத்தெரிகிறது அவர்கள் இருவரையும் பார்த்த கணத்தில்./

அந்நேரமாய் கூவிய தூரத்துப் பறவைகள் இரண்டு தன் மரம் அது,தங்களின் குடியிடத்தின் கீழ் யாரது புதிதாக எனக்கேட்டதாய் படுகிறது,

பறவைகளின் பாஷை என்ன தேவை என வருகிற போது தேவ பாஷை கூட புடிபட்டுப்போகும் போலிருக்கிறதுதான்,

சரி அது கைவரும் போது பார்த்துக்கொள்ளலாம் .உயர்ந்து கிளைத்த கிளைகளுக்கும், அடர்ந்து பாவிய இலைகளுக்கும் ஊடே பறந்து பாவி கூடு கட்டி குடும்பம் கொண்ட எங்களின் இருப்பும் காதலும் அந்நியோன்யமும் சத்தியமானது இந்த கணத்தில் என்கிற உள்ளார்த்தமும் அதன் குரலில் இல்லாமல் இல்லை,

வேப்ப மரத்தில் அடர்வு கொண்ட இலைகள் அதன் இடது புறமாய் இருந்த தென்னை மரத்தின் கீற்றுகளைப்பார்த்து கண்ணடித்துச்சிரித்ததாய் பதிவு கொள்வோமே,யார்யாரோஎதெதெற்கோயார் யாரையோப்பார்த்து சிரிக்கும் பொழுது நான் இன்னொரு மரத்தைப்பார்த்து சிரிப்பதில் தப்பென்ன இருந்து விடமுடியும் பெரிதாய்,,,,,? என்பதுதான் அதன் பதிலாய் இருக்கிறது இந்த நேரத்தில்/

நீ என்னைப் பார்ப்பதும்,கண்ணடித்துச்சிரிப்பதும்,என் தோள் உரச ஆசை கொள்வதும் தப்பிலைதான், ஆனால் மித மிஞ்சிய மருத்துவ குணம் கொண்டு காணப்படுகிற உன்னிடம் நான் எப்படி சமதையாய் பழகி நிற்பது,?மண் பிளந்து துளிர்வு கொண்ட நாள் முதல் வளர்ந்து கிளைத்து நெடித்து பாவி,இலையும் ,பூவும்,காயும் கனியுமாய் ஆகுருதி காட்டி நிற்கிற உன்னில் எதுவும் வீண் இல்லை,எல்லாமே மருத்துவ குணம் கொண்டது.நான் அப்பிடியி ல்லை ஒற்றையாய் நெடித்து உயரம் காட்டி நிற்பதுதவிர்த்து என்ன இருக்கிறது என்னில்/ என்கிற தென்னையிடம் விலை மதிப்பில்லா தென்னங் கீற்றுகளும், தேங்காயும்,இளநீரும்உன்னில்தவிர்த்து வேறு யாரிடம்  இருந்து விட முடியும்,,,?

“ஏங்கிட்ட தஞ்சமடைஞ்ச பறவைங்க இங்க கூடுகட்டிக்கிட்டு ஓங்கிட்ட வந்து குஞ்சு பொரிக்குது,ஓங்கிட்ட குஞ்சு பொரிச்சிக்கிட்டு ஏங்கிட்ட வந்து குடும்பம் நடத்துது.அப்பிடி அங்கயும் இங்கயுமா மாறி மாறி சந்தோஷமா இருக்குற பாக்கியத்த நம்ம ரெண்டு பேருக்கும் வாய்ச்சிருக்குதே, இது பெரிய குடுப்பினை இல்லையா,அந்தக்குடுப்பினைதான் நமக்கு வாய்ச்ச பெருமை இல்லையா,இத விட எனக்கும் ஒனக்கும் வேறென்ன வேணும்,ஏங்கிட்ட மருத்துவ குணம் இருக்குதுண்ணா ஓங்கிட்ட வேற கொணம் இருக்குது,நம்ம ரெண்டு பேருல யாருக்கும் யாரும் கொறைஞ்சவுங்க இல்ல,தெரிஞ்சிக்க, என்றது வேப்ப மரம்.

“இருக்கட்டும் இருக்கட்டும் என்கிற சந்தோஷம் போர்த்தியதாய் மரங்கள் இரண்டும் சிரித்துக்கொண்டே கைகுலுக்கியும் ஒன்றின் மீது ஒன்றுமாய் படர்ந்து கொண்டன,

வாசல் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தவள் எல்லாம் போட்டு ஓடோடி வந்து இவனை எழுப்பி விஷயம் சொல்லி கூட்டிக்கொண்டு போனாள்,

அவள் சென்ற வேகத்தில் மரத்தடியில் படுத்திருந்திருந்தவர்களை சிண்டைப் பிடித்து தூக்கி எறிந்து விடுவாள் போலிருந்தது,இவன் மட்டும் இல்லையென் றால் அதுதான் அங்கு நடந்திருக்கும் போல/

அசதியில்தூங்கிக்கொண்டிருந்தவனைஎழுப்பினான்,பதறிப்போய்எழுந்தவன் சொன்ன முதல் வார்த்தை மன்னிச்சிக்கங்கம்மா,ரொம்ப தூரம் நடந்து வந்த அசதியிலயும்,களைப்பிலயும் ,பசியிலயும் தூங்கீட்டம்மா,,,,இந்தா கெளம்பீர் றம்மா,,, என்றவனாய் அருகில் படுத்திருந்த மனைவியை எழுப்பினான்,

ஒன்றை ஒன்று நெருங்காமலும் தள்ளி நிற்காமலுமாய் கறுப்புக் கலரில் மெலிதாக இழுக்கபட்டிருந்த வெள்ளைக்கட்டங்கள் போட்ட சட்டை அவனுக்கு நன்றாக இருந்தது,அதற்கு மேட்சாய் அரை வெள்ளையில் பேண்ட் அணிந்திருந்தான்,

அருகில் படுத்திருந்த மனைவியை எழுப்பி விட்டான். படக்கென திடுக்கிட்டு எழுந்தவள்பேந்தப்பேந்தவிழித்தாள்,மன்னிச்சிக்கங்கம்மா,இதோகெளம்பீடுறோம், என்றவளாய் படுக்கையை விட்டு எழுந்தமர்ந்தவள் அருகில் தூங்கிக் கொண்டு  இருந்த குழந்தை தூக்கி தோளில் போட்டுக்கொள்கிறாள்.

கீழே தரையில் விரித்திருந்த துண்டை எடுத்து கையில் வைத்துக் கொண் டவன் ”ஒரே குழந்தைதாம்மா ,நல்லா வளக்கணுமுன்னு நெனைச்சோம், அவளுக்கு இன்னொரு கொழந்த பெத்துக்குற அளவுக்கு ஒடம்புல தெம்பு இல்லைன்னு டாக்டர் சொல்லீட்டாரு, அத்தை பொண்ணு தான், இவதான் வேணுமுன்னு ஒத்தைக்கால்ல நின்னு கட்டிக்கிட்டேன், கல்யாணமெல்லாம் நல்ல படியாத்தான் நடந்தது,ரெண்டு பேரும் உள்ளூர்க்காரங்கதான்,அவுங்க வீடு மெயின் ரோடு,ஏங் வீடு அந்த மெயின்ல இருந்து பிரியிற சந்துல மூணாவது வீடா இருந்தது,ரெண்டு பேருக்கும் ”கண்டதும் காதல் கட்டுனா இவளத்தான் கட்டுவேன்னு” எதுவும் கெடையாது,அவ வீட்டு வழியா போகும் போது தற்செயலா அவளப் பாத்தேன், வீட்ல வந்து சொன்னேன்,அடுத்த மாசமே கல்யாணம் நடந்துருச்சி, உள்ளூர்லயே இருந்தா பொழப்புக்கு வழி வேணுமே,விருந்தும் மருந்தும் மூணு நாளைக்கு மேல கசந்து போகுமுன்னு சொல்லுவாங்கல்ல,,, அப்பிடித் தான் ஆகிப்போச்சி எங்க பொழப்பு,

“உள்ளூர் பொழப்புக்கு வழி குடுக்க முடியல,வேற வழியில்லாம திருப்பூர் பக்கமா போனோம் ரெண்டு பேரும் ,அங்க போயித்தான் இந்தக் கொழந்தையப் பெத்துக் கிட்டம்,

”புதுசான ஊரு ,புதுசான பழக்கம்,அதுவரை செஞ்சி பழகாத வேலை,,, எல்லாம் கை வந்திச்சி,தேவைக்காகவும் அவசியத்துக்காகவும் ஒருத்தருக் கொருத்தர் சார்ந்து இருக்க பழகீட்டோம், எங்களப்போல பொழைக்க வந்த குடும்பங்க அங்க ஆயிரக்கணக்குல இருந்தாங்க,அனேகமா அவுங்க எல்லாரும் அந்த ஊர தன்னோட சொந்த ஊராத்தான் நெனைச்சாங்க, பொழப்புக்காக போனவுங்க அங்கேயே புள்ளைங்க படிப்பு சொந்த வீடு, கையில் கொஞ்சம் காசுன்னு சேக்க ஆரம்பிச்சி வேர் விட ஆரம்பிச்சிருந்த நேரம் எல்லாம் ஒழைச்சிப்போட்ட மாதிரி இந்த நெருக்கடி வரவும் அப்பிடியப்பிடியே போட்டது போட்ட படி வந்துட்டம்மா, என்னோட சேந்து ஐநூறு பேராவது வந்திருப்பாங்க எல்லாம் இந்த டவுனுக்குள்ள அங்கங்க இது மாதிரி தூங்கிட்டும் தூக்கமில்லாமயும் கெடப்பாங்கம்மா, எங்களுக்கு பொழப்பு தான் போச்சே ஒழிய எங்கள்ல யாரும் பிச்சைக்காரங்க இல்ல, எங்க எல்லாருக்கும் பேங்குல ,சேமிப்பு இருக்கு,இன்னும் சில பேரு பேங்க் செக்புக்கு கூட வைச்சிருக்காங்க,ஏடிஎம் கார்டு,டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுன்னு வாழ்ந்தவுங்க,இன்னும் சில பேருன்னா தவணை முறையில வீட்டு மனைவாங்குறதுக்கு சீட்டு கட்டி வச்சிருக்காங்க,சில பேரு தெருவுக்குள்ள சீஇட்டுபோட்டு வச்சிருக்காங்க,,,, கையில எப்பவும் அஞ்சி பத்துன்னு ரொக்கம் வச்சிருக்குறவுங்க,என்னதான் வயித்துக்கு இல்லைன்னாக்கூட யார்கிட்டயும் திருட்டுப் பழக்கம் கெடையாதும்மா,வலியப்புனைஞ்சி பொய் சொல்றதோ, ஏமாத்துற பழக்கமோ கெடையாது.

”நாங்க எல்லாம் உண்மையா உழைச்சி,உண்மையா வாழ்ந்து, உண்மையா இருந்து பழகீட்டோம்,இனிமேலும் அப்பிடியேதான் இருப்போம்,எந்த இடர் பாடும் இடையில் வந்தாலும் சரின்னு நெஞ்சு நிமிர்த்தி வாழ்ந்துக்கிட்டு இருந்தோம், திடீர்ன்னு காலம் ஒழைச்சிப்போட்ட சீட்டுக்கட்டாட்டம் ஆகிப் போனம்,

எங்களோட வந்தவுங்க எல்லாம் அங்கங்க படுத்துக்கெடக்காங்க இந்த ரோடு முழுக்க இருக்குற மரத்தடியிலயும் வீடுங்க முன்னாடியுமா,,,,,என்றவன் முடிச்சை கட்டிக் கொண்டு குழைந்தையையும் மனைவியையும் கூட்டிக் கொண்டு கிளம்புவதற்கு ரெடியாகி நிற்கிறான்,

அவனது கையில் இவனும் மனைவியும் கொடுத்த கோதுமை மாவு பாக்கெ ட்டும், கொசம் காய்கறிகளும்,பலசரக்கும்/ கூடவே கொஞ்சம் நம்பிக்கையும்/


8 Feb 2020

குமிழிக்காத்து,,,,,



சடுதியில் தெரிந்த முகத்தை உற்றுப்பார்க்கையில் வெளிப்பட்டவர் தர்மராய் இருக்கிறார், அவனது ஊர்க்காரர் என்பது தவிர்த்து வேறதிகமான பழக்கம் ஏதும் இல்லாதவர்.இவன் மீது அளவற்ற பிரியமும் மதிப்பு வைத் திருப்பவர்.

அப்பாதாத்தா காலத்து மரியாதையும் கட்டிக்காப்பாத்திவந்த மதிப்பும் இவன் மீதும் தொடர்ந்தது.

போகிற போக்கில் வேகமாக கடக்கையில் பிடிபடவில்லை இன்னார் என/ கொஞ்சம் நிறுத்தி பிரேக்கை கைக்குள் கொண்டு வந்து பின் உற்று நோக்கு கையில் அவராய் வரையப்பட்டிருந்தார்,

வெயில் பரந்திருந்த ஒருமதியம்,ஒரு மணிக்கு நெருக்கி இருக்கலாம். வாட்ச் கட்டுகிற பழக்கம் விட்டுப்போய் ஒரு வருடத்திற்கும் மேலாகிப் போனது,

பரமசிவம்அண்ணன்கூடக்கேட்டார்.”ஏன் இப்பிடிஇருக்குற சிம்பிளா இருக்கு றேங் குற பேர்ல வாட்ச்கூட கட்டலையின்னா எப்பிடி,,,? நல்லதா ஒரு பேண்ட், சர்ட், கையில பிரேஸ்லெட், மோதிரம்,,,, இதெல்லாம் நீ எப்பயும் கூட போட வேணாம், ஏதாவது கல்யாணம் காச்சி,விஷேசமுன்னு போற நாட்கள்ல யாவது போட்டுக்கிறலாமுல்ல என்பார்,

இவன் மீது சிறிது அக்கறை உள்ளவர், குருத்தாய் முளைத்தெழுந்ததிலி ருந்து பார்த்துவருபவர்.

இவனதுஅசைவு,எண்ணம்,நடப்பு,பழக்கம்,,எல்லாம்தெரிந்தவர்,அவர்எப்பொழுது இதைக்கவனித்தார், எப்படி அவதானித்தார்,,,,,தெரியவில்லை.

அவரைப் பார்த்து மிகவும் நாட்களாகிப்போனது,மல்லிகா அக்கா வீட்டு திருமணத்தன்று பார்த்தது,பந்தியிலிருந்து வெளிவரும்போது பார்த்தவர் சிறிது நேரம் பேசினார்,

வீடு,குடும்பம்,பிள்ளைகள்,அவர்களின்படிப்பு,வேலை,வேலை பார்க்கிற ஊர்,,, என எல்லாம் விசாரித்தார்,பேசிய பேச்சிலிருந்து சிறிது நூற்தெடுத்து பாவு முக்கி சாயம் சேர்த்து கொஞ்சம் சொல்லுவார். சமயத்தில் அதுவும் சொல்லாமல் மனதை ஊடுருவிப் பார்ப்பது போல மௌனமான பார்வை யுடன்  நகன்று விடுவார்,

அப்படி நகர்பவர் எப்படி இதையெல்லாம் கவனித்தார் எனத் தெரியவி ல்லை,நீ ஓடிக்கிட்டு திரியிர நிக்கக் கூடநேரமில்லாம, பாக்கவும் கேக்கவும் சந்தோ ஷமா இருந்தாலும் கூட ஒருபக்கம் வருத்தமாவும் இருக்கு,

”ஏங் மக கல்யாணத்துக்குக்கூட லேட்டாத்தான் வந்த ஓங் சம்சாரத்தகூட்டிக் கிட்டு/ கேட்டதுக்கு என்னனென்னெமோ வேலையின்னு சொன்ன, அங்க போனேன் ,இங்க போனேன்னு சொன்ன,ஏங் மனசு அத ஒத்துக்காட்டிகூட ஒனக்காக அதச் சரின்னு ஏத்துக்கிட்டு தலையாடிக்கிட்டேன். ஆனா நீ என்ன மோ எனக்காக கல்யாணத்துக்கு வந்தது போல நடந்துக்கிட்ட,

நம்ம சொந்தக்காரங்கள்லாம் காலையில ஆறு மணிக்கும் அஞ்சரை மணிக் குமா வந்து சேந்துட்டாங்க,நீ ஒருத்தன்தான் நடக்குறது ,என்னமோ ஊரார் வீட்டு கல்யாணம் மாதிரி அவ்வளவு நேரம் கழிச்சி வந்த”என்றவரை ஏறிட்டவன் பெரியவர் பேசும் போது கம்முன்னுஇருக்கணும் என மனதிற் க்கு சொல்லி வைத்தான்,

“நீஅன்னைக்கிகல்யாணத்துக்கு வராததுனாலகல்யாணம் நின்னு போகப் போயிறதில்லை,ஆனாஓடிக்கிட்டேத்திரியிரேன்ங்குறபேர்லசொந்தபந்தங்கல விட்டுறாத,கொஞ்சம்சூதானமாஇருந்துக்கண்ணுதான்சொல்லவந்தேன்,எனக்குத் தெரியும் நீ எப்பயும் தப்புக்குத்தொணைப் போறவனில்லைன்னு , ஆனா அதுல இருந்து தப்பிக்கக் கூடத் தெரியாத வெள்ளந்திப்பய நீ. உக்காருறதுக்கு நேரமில்லாம ஆகிப்போகாத, அவுங்களுக்கு ஒன்னைய விட்டா கூப்புடுறதுக் கு நெறைய ஆட்கள் இருக்காங்க,ஆனா ஓங் குடும்பத்துக்கு நீ தாண்டா.என வாய் ஓயாமலும் ஓரக்கண்ணால் பார்த்த படியுமாய் சொன்ன அண்ணனின் பேச்சையும் நினைவையும் சுற்ற வைத்து வைக்கிறதாய் வாட்சின் முட்கள்/

பஜாருக்குப்போய் திரும்பி வந்துகொண்டிருந்தவேளைபாரத விலாஸிற்கு எதிர்த்தாற் போல் பார்க்கும் படியாகிப்போகிறது,

பாரத விலாஸ் சைவப் பிரியர்களுக்கு என இல்லை ,அனைவருக்கும் ஏற்ற ஹோட்டலாய்/

என்ன சிறிது கூட அல்ல மிகவும் பழமை தாங்கி காட்சிப்படும்.அங்கு கிடைக்கிற ரவா தோசையும் பில்டர் காபியும் வேறெங்கும் கிடைக்காது என்பது அங்கு சாப்பிடச்செல்ப்வர்களது அபிப்ராயம்.

அது போல செந்தமிழ் தேன் மொழியாலை மருந்துக்குக் கூட வேறெங் குமாய் கேட்டு விட முடியாது,

சிறிது நாட்கள் முன்புவரை முருகன் கோவில் சந்தில் பழைய பாடல்கள் கேட்க வாய்க்கும்,ஆனால் இப்பொழுதைக்கு இப்பொழுதெல்லாம் கேட்க முடியவில்லை,

“எல்லாமே ரிக்கார்ட்தான் தம்பி,நான் சவுண்ட சர்வீஸ் வச்சிருந்தேன் , இங்க யிருந்து சுத்தியிருக்குற பட்டி தொட்டி வரைக்கும் நம்ம சவுண்டு சர்வீஸ் தான்,பாத்துக்கங்க,என்ன இப்ப மாதிரியெல்லாம் அப்பம் எதுகெடு த்தாலும் மைக் செட்டெல்லாம் வைக்க முடியாது. ஆளு பேரு அம்புன்னு சொல்லுவா ங்கல்ல, அதபொறுத்துதான் அமையும் ,வசதி படைச்சவுங்க தான் இதப்பத்தி யோசிப்பாங்க, இதுக்காக ஆகுற செலவு ஒண்ணும் பெரிசா வந்துறப் போறதில் லைன்னாலும்கூடஇது என்னடா இது,ரேடியோ செட்டக் கொண்டாந்து வீட்டு முன்னாடி கட்டிக்கிட்டு,இப்ப என்ன கோயில் திருவிழாவா நடக்குதுங்குற பேச்சில மைக் செட்ட அமுக்கிருவாங்க, அதத் தாண்டி அவுங்க யோசிக்கறதும் இல்ல,என்பார்,

“நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா” என பிள்ளையார் சுழியிட்டு சுழலஆரம்பிக்கிறபாடல்”தெய்வமேதெய்வமேநன்றி சொல்வேன் தெய்வமே,,” என முற்றுப் புள்ளியிட்டுநிற்கும்,முதல்நாள் அப்படியென்றால் மறுநாள்” ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” என ஆரம்பித்து ”காவியமா நெஞ்சில் ஓவியமா” என்பதில் கொண்டு வந்து முடிப்பார்,

என்றாவது ஒரு நாளில் அல்லது பஜாருக்குச்செல்கிற தினம் தோறுமாய் அந்த சந்தைக்கடக்க நேர்ந்தால் அல்லது அந்த வழியாய் செல்ல நேர்ந்தால் அருகிலிருக்கிற டீக்கடையில் நின்று விடுவான் பாடல்களைக்கேட்க,/

டி,எம்,எஸ்ஸீம், சிதம்பரம் ஜெயராமனும் ,திருச்சி லோகநாதனும் ஜிக்கி யும் சுசிலா அம்மாவும் இன்னமும் பெயர் தெரியாத பாடகர்களும் பாடகிக ளுமாய் இவனது அருகில் வந்து மனதை நிறைத்து விட்டுச்செல்கிற நேரங்க ளில் அந்த பாடல்களுக்காய் வெண் திரையில் ஓடிய நாயகனும் நாயகிகளும் அங்கு கானல் காட்சிகளாய் வந்து செல்வது தவிர்க்க இயலாமல் போய் விடுவது ண்டு,

பாடல்களுக்கும் இசைக்கும் அப்படி ஒரு தனி சக்தி உண்டுதான் போலும், திரையில் பார்த்தவர்களையும் ,கேட்டவைகளையும் தரையில் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திச்செல்கிற மாயகணம் அது,

இவனுக்கு தெரிந்தும் இவன் அறிந்தும் பள்ளி வாசல் தெரு வழியாய் நடந்து படிக்கச்செல்கிற காலங்களில் தர்காவை அதிசமாய் பார்த்ததுண்டு, உயர்ந்து நிற்கிற தர்காவையும் அதன் மீது பூசப்பட்டிருக்கிற வர்ணத்தையும் மேலே பறக்கிற கொடியையும்,அதை உரசிப்பரக்கிற புறாக்களையும், கட்டி டங்களில் படரும் அதன் நிழலையும் இவன் அதிசயமாய் பார்த்ததுண்டு,

நோன்புநாட்களில் பள்ளி நண்பர்கள் பக்கத்துபெஞ்ச்பையன்கள் வாங்கி வந்து தருகிற நோன்புக்கஞ்சி குடிக்கிற கணம் தாண்டி மனதிற்குள்ளுமாய் இனிக்கும்தான்,

பள்ளிமுடித்துவந்தமாலைவேளைகளில்வரிசையில்நின்றுகஞ்சி வாங்கிச் சென்ற தினங்களும் உண்டு,அப்படி கஞ்சி வாங்கச்சென்ற ஒரு மாலை வேளையாய் பக்கத்து பெஞ்சு மஞ்சுவுடன் வந்து கொண்டிருந்த ஒரு மழை நாளில் தர்கா தாண்டி தெரு முக்கிலிருந்த டீக்கடையில் ஒருவர் சினிமா வசனம் பேசிக் கொண்டிருந்தார்,

இவனுக்கு அதை நின்றுவேடிக்கை பார்க்க ஆசை, வசனம் கேட்க ஆசை, கூட நிற்கிற மஞ்சு அரித்துக் கொண்டிருந்தாள் வீட்டிற்குப்போக வேண்டும் என/

அவளை அனுப்பி விட்டு கையில் இருந்த காசில் ஒரு வடையை வாங்கி தின்று கொண்டே அவர் பேசுகிற வசனத்தை கேட்டுக்கொண்டிருந்தான், ”வானம் பொழிகிறது, பூமி விளைகிறது”,,என ஆரம்பித்து வீர பாண்டிய கட்ட பொம்மன் சிவாஜியையும் சினிமாவையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்,

ஏற்ற இறக்கங்களோடும்,உடல் மொழியுடனும் மூச்சுவாங்கவுமாய் அவர் பேசுகிற வசனங்களில் அவரது கண்ணக்கதுப்பின் துடிப்பும்,அவரது கை கால்களின் அசைவும் அவரது மதிப்பிட முடியாத உணர்வும் சேர்ந்து கலந்தி ருக்கும்,

அவர்வசனம்பேசிச்செல்கிற வேளைகளில்அவருக்குள்ளாய் குடி கொண்டிருப் பவர் சிரிப்பார்,கோபப்படுவார்,கர்ஜிப்பார்,முறைப்பார், சிலிர்ப்பார், அவரது சிலிர்ப்பிலும், கோபத்திலும்,கர்ஜிப்பிலும் ஒரு முழு நீள அர்த்தம் பட்டுத் தெரி வதுண்டு,அரை மணி ஒரு மணி என அவர் பேசுகிற வசனம் கேட்டு விட்டு வீட்டிற்குசெல்லலேட்டாகிப்போகும் நாட்களில் அம்மாவின் கைகள் இவன் முதுகில் அழுந்தப்பதிவதுண்டு. அன்றிலிருந்து இரண்டு தினங்கள் பள்ளி செல்வது கட்டாகிப் போகும்.
 ஆறு மாதங்களுக்கு முன்னால் என நினைக்கிறான். பஜார் போய் விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தஒருமாலைவேளை,அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்லாமல் பஜாருக்கு வந்து விட்டிருந்தான்,

வீட்டிற்குச் சென்றால்டீக்குடிக்கசிறிது நேரம் உட்கார டீ,வி பார்க்க எனவும் பிடித்துவைத்துக்கொள்கிறது வீட்டிற்கும் கட்டுப்பட்டே ஆகவேண்டி இருக்கி றது,

வெறும் செங்கலும் சிமெண்டும் மட்டுமே வீடு,என்கிற மேல் பூச்சு தாண்டி ரத்தமும் சதையுமானமனித உறவுகள் பூத்துக்குலுங்குகிற செடியா க வும் மலர்ந்து சிரிக்கிற பூவாகவும்,,,இருக்கக்கண்டதுண்டு, அதனால்தான் வீட்டால் இவ்வளவு ஈர்க்கப் படுகிறான்இவன்,

”அப்படியே இருங்க அசையாம,,என்ன இது வெள்ளை முடி கூடிக்கிட்டே போகுதுஐயாவுக்கு,,” என்கிற மனைவியின் கேலிப் பேச்சிற்கு,சிரித்துக் கொண் டே கண்ணடிப்பான்,

”மொதல்லஇந்ததெத்துப்பல்லையும்,கண்ணுரெண்டையும்நோண்டுனாத்தான் சும்மாக்கெடப்பீங்க நீங்க, இந்த பார்வையையும் சிரிப்பையும் வச்சிக்கிட்டுத் தான மயக்குறீங்க மனச,,,,/

“நான் வாட்டுக்கு செவனேன்னு சமையக்கட்டுக்குள்ள கெடந்தவள இழுத்து வச்சி வம்பு பேசிக்கிட்டு இப்ப எதுவும் தெரியாத பப்பா மாதிரி,,,,,,,ஆத்தாடி கொஞ்சம் ஆபத்தான ஆளுதான் நீங்க,,,,என நீட்டி முழக் கியவளாயும் விரல் மடக்கி கொமட்டில் குத்தியவளாயும் சென்றவளின் பின் சென்றவன் தண்ணீர் குடித்து விட்டு வருவான்,

“இந்த வயசுல இவ்வளவு தாகத்தோட திரியிறதுநல்லதில்லஆமா சொல்லீட் டேன்,என்பவளை அப்படியே அள்ளிக் கொண்டு போய் விடலாம் போலத் தோணும்,

“அட பைத்தியகார மனுசா, நீங்க ஏங் முதுகுக்குப்பின்னால நின்னாலும் ஒங்க மனசுஏங் கண்ணுக்கு முன்னாடி நிக்குது,அப்பிடி நெனைக்கவெல்லாம் வேணாம், வெலைஞ்சி நிக்கிற வெள்ளாமை ஒங்களுக்குத்தான ,இத அறுவடை பண்ண யாரக்கேக்கணும்,போவீங்களாசோலியப்பாத்துக்கிட்டு,, ,,அப்பிடியேஅள்ளுவாங்களாம்,,,கொண்டுபோவாங்களாம்,,எதுக்குப்போயி இத்தன,,,,எனச் சிரிக்கிறவளைக்காண இரண்டு கண்கள் போதாதுதான்,

காய்கறிகளை வாங்கிக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்த வேளையில் எதிர்ப் பட்ட நண்பர் மிகவும் சந்தோஷப்பட்டு வரவேற்றார்,சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிப்போனதன் குறையைத்தீர்க்க வாருங்கள் போய் சாப்பிடலாம் என்றவராய் ஹோட்டலுக்குள் கூப்பிட்டுக்கொண்டு போனார்,

அவர் அம்புக் குறியிட்ட கடை பாரத விலாஸாய் இருந்தது,பொதுவாக ஒரப்பு சரப்பாய் சாப்பிடும் இவனுக்கு சைவ ஹோட்டல்கள் கொஞ்சம் தூரம்தான்,

சரி வேறு வழியில்லை, வேண்டாம் எனச்சொன்னால் வம்பிழுத்து விடு வார் மனுசன், அப்பிடின்னா என்னையமாதிரி ஆளுக கூப்பிட்டா சாப்புட வர மாட்ட அப்பிடித்தான என்பார் கூசாமல்/

இடம் காலம் தோது பார்த்து இதற்கெல்லாம் ஆட்பட்டுத்தான் போக வேண்டி இருக்கிறது,என்ன செய்ய எனபான் நண்பன் கேட்கிற பொழுது களில்.

சிரித்துக்கொள்வான் அவனும்,அவன் சொல் வேறு மாதிரியாய் இருக்கிறது, எத்தன காலத்துக்கு ஆட்படுவ நீ,ஒரு எண்டுல போயி ஒடைச்சிரு, ஒடைச்சி நில்லு,இல்லைன்னா ஒடைச்சிட்டு வெளிய வா,எதுக்குப் போயிக் கிட்டு,என்ன அவர் மட்டும்தானா ஒனக்கு நண்பர்,நாங்களெல்லாம் என்ன ஆகாதவுங்களா, ஒனக்கு,

இன்னமும் சொல்லப்போனா அவுங்கள விட ஒன்னைய நல்லா அறிஞ்ச வன் ஒன்னயப்பத்தி தெரிஞ்சவன், நீ அம்மணமா திரிஞ்ச பருவத்துல இருந்து ஒன்னைய பாத்துக்கிட்டு வர்றவன்,ஆமா பாத்துக்க” என்றவன் ”பாத்து சூதானமா இரு,”எனச் சொன்ன சொல் மனமெங்குமாய் நின்று பரவுகிறதுதான் அவர் கூப்பிட்டு தோள் மீது கை போட்ட வேளையில் /

ஹோட்டலின் உள் அழைத்துப்போனார்.ஹோட்டலின் நுழை வாயில் இடது ஒரம் கல்லா,வலது ஓரம் சுண்ணாம்பு பெயர்ந்து வெள்ளையடிக்க பட்டு உருவம் காட்டி நின்ற சுவர்,அந்த உருவத்தை ஹோட்டலுக்கு வந்து போகிறவர்கள்என்னவாய் நினைக்கிறார்களோ அதுவாகவே மாறிக்காட்சிப் பட்டது அவர்களுக்கு/

உள்ளே இரண்டு வரிசையாய் கிழக்கு மேற்காகவும் இரண்டு வரிசையாய் வடக்கு தெற்காகவுமாய் சாப்பாட்டு மேஜைகளை போட்டிருந்தார்கள்,எந்த இடஞ்சலுமற்ற நிறைந்த வெளியாய் காட்சிப்பட்டது சாப்பாட்டு மேஜை அடைகொண்டிருந்த இடம். அதைத் தாண்டி பெரியதாய் மறைப்பேதும் இல்லாமல் இருந்த சமையல் ரூம், அங்கு தொந்தி தள்ளி நின்று கொண்டிரு ந்த மாஸ்டர்,

அப்படியே சமையல் ரூமின் நேர் எதிராய் கை கழுவுகிற இடம், பெரிதாக வைக்கப்பட்டிருந்த பித்தளை அண்டா நிறைந்த தண்ணீரில் சில்வர் டம்ப்ளர் ஒன்று மிதந்தது, அதில் தண்ணீர் மோந்து அண்டா இருந்த திண்டின் அருகில் இருந்த இடத்தில் கழுவினார்கள்,பார்ப்பதற்கு சின்ன சளதாரிப்போலத் தெரிந்தது,

இதையெல்லாம் சாப்பிட வருகிற அன்று பார்த்த போதும் கூட இதற்கு முன்னாய் எப்பொழுதோ அங்கு வந்து சென்ற ஞாபகம்,

“அடப்பாவி இது கூட மறந்து போச்சா ஒனக்கு” என மனம் இரைச்சலி ட்டது. ஊரில் இருந்த வெயில் நாள் ஒன்றில் பாட்டிக்கு வயிற்றோட்டம் நிற்காமல் இருந்தது, அதற்கு ஜீரா போலி சாப்பிட்டால் சரியாகிப் போகும் என யாரோ சொன்ன வார்த்தையை நம்பி அதிகாலையில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஓட்டத்தெரியாத சைக்கிளை மிதித்து வந்து அந்நேரம் திறக்காத கடை முன்னாய் காத்திருந்து ஜீரா போலி வாங்கிச் சென்றது ஞாபகங் களில் வளையமிடுவதாய்,,,,/

இவனின் தூரத்து உறவுப் பாட்டி அவள்,ஆனாலும் இவன் மீது பிரிய மாய் இருந்தாள்,அசப்பில் அவளது மூத்த மகள் போல் இருக்கிறாய், அடிக்கடிச் சொல்வாள்.

”அதனால் என் உள்ளம் ஈர்க்கிறாய் நீ”என்கிற அவளது சொல்லுக்காயும் அவள் மீது கொண்ட அளவற்ற பாசத்திற்காயும் மட்டுமே அன்று ஜீரா போலி வாங்க வந்திருந்தான்,

அன்றிலிருந்துஇன்று வரை தனது அடையாளத்தை இழக்காததாதி போல எந்த வித பெரிய மாற்றமும் இன்றி அப்படியே இருந்தது கடை. ஓனருக்கு கொஞ்சம் வயதாகியிருந்தது,நரை முடியை அழுந்த படிய வாரியிருந்தார், சமையலறையும் தண்ணீர் ஊற்றுகிற அண்டாவும் சமையல் மாஸ்டரும் அப்படியேதான் இருந்தார்கள்,சாப்பாட்டு மேஜைகளின் வரிசையும் அதன் பெயர்ந்து அடையாளத்தையும் சேர்த்து./

அன்று சென்ற அதே பாரத விலாஸிற்கு முன் நின்றவன்தர்மரை அழைத்துக் கொண்டுசாப்பிடப்போகலாமா,என்கிற யோசனையில் ஆழ்ந்தவனாய்,,,,/

3 Aug 2019

தருணங்களின் வாழ்வித்தலில்,,,

வாழ்வித்த தருணங்கள் வழுக்கியது,அப்படியானால் வழுக்கிய தருணங்கள் வாழ்வித்ததா பார்க்கலாமே சிறிதுதூரம் எழுத்தாற நடந்து சென்று /கொஞ்சம் கண்ணாரவும் மனதாறவும் என சேர்த்தும் கொள்ளலாம்,

அப்பொழுதுதான் பேருந்துலிருந்து இறங்கினான், நகரப்பேருந்து அது. நகரப் பேருந்து சமயத்தில் நகராப்பேருந்தாய் ஆகித்தெரிகிறது, அதற்காய் காத்துக் கிடக்கிற பொழுதுகளிலும், அது வராத நேரங்களிலுமாய் ,/

வருகிற பொழுதுகளில் கட்டி வைத்த கூட்டத்தை மொத்தமாய் பயணிகள் என்கிற கணக்கில் அள்ளி எடுத்து அடைத்துக்கொண்டு வரும்.

சொல்லாமல் கொள்ளாமல் வானம் அவிழ்ந்து கொள்கிற முன் மழைக்காலம் அது,

அலுவலகம் முடிந்ததும் வேலையின் அலுப்பை உடல் மற்றும் மனம் முழுவ துமாய் அப்பிகொண்டு அரை கிலோ மீட்டர் நடந்து பஸ் நிலையம் சென்றால் அதிசயம் பாருங்கள்,சுற்றி இருக்கிற் இடங்கள் எல்லாம் காய்ந்து போய் கிடக்க பஸ் நிலையத்தினுள் மட்டும் தெப்பக்குளம் போல் தண்ணீர்கட்டிக்கிடக்கிறது,

கட்டிக்கிடக்கிற நீரில் மிதவுண்டவையாய் அங்கிருக்கிற கடைகள் மற்றும் கட்டிடங்கள், கட்டிங்களுக்கு ஒன்றுமாகிவிடப் போவதில்லை, கடைகள்தான் சற்றே சிரமம் தாங்கித்தெரிந்தது,

இவன் வழக்கமாய் டீக்குடிக்கச்செல்கிற கடைக்கு அருகருகிலாய் இருக்கிற சேவுக்கடை பழக்கடை மற்றும் ஜீஸ்க்கடை போலவே பஸ் நிலையத்தினுள் இருந்த கடைகள் அனைத்தும் தண்ணீரில் மிதந்தது.

காற்றின்திசையின் போகும் தண்ணீரில் இழுபட்டுக் கொண்டு செல்லும் சேவுத் தட்டையும்,மிக்சர் தட்டையும் அதன் இழுப்பில் செல்ல அனுமதிக்கா மல் தன் திசை நோக்கி கயிறு கட்டி இழுத்து வைத்திருந்தார்,கடைக்காரர்.

தண்ணீரில் நீச்சலிடித்துக்கொண்டே வந்து சேவு வாங்கிச் செல்கிற வர்களுக்கு தண்ணீரில் மிதக்கிற தராசு கொண்டே நிறுத்துப் போட்டு தண்ணீரில் மிதக்கிற கல்லாவிலேயே காசும் வாங்கிப்போட்டுக் கொண்டார்,

மற்ற எல்லாக்கடைக்காரர்களும் கூட அப்படியே செய்தார்கள்.இதில் பழக் கடைக்காரரிடமிருந்து கழண்டகன்ற பழங்கள் பஸ் நிலையம் முழுவது மாய் மிதந்து மிதந்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தது,

மிதந்தபழங்கள் யாவும் கடைக்காரரின் சொல்லுக்கும் பார்வைக்கு மாய் முழுக்க முழுக்கக்கட்டுப்பட்டவை போலும்.ஆமாம் அப்படித் தான் தெரிந்தது, பின்னே தன் திசையிலும் தன் இஷ்டத்திற்குமாய் எங்கும் போய் விடாமல் பழக்கடைக்காரரின் கண் முன்னாடியே காட்சிப்பட்டுகொண்டு இருந்ததாய்,

அவரும் கண்ணால் பார்க்கிறார்,கண்ணால் சொல்கிறார், கண்ணால் கூப்பிடுகி றார், கண்ணால் சைகை சைகை செய்கிறார்,கண்ணால் பேசுகிறார்,

அவரது கண் அசைவிற்கும் சைகைக்கும் பேச்சிற் கும் கட்டுப்பட்டது போல் திசைகொன்றாய் மிதக்கிற பழங்கள் அவர் கூப்பிடுகிற திசைக்கு வந்து செல்வதாய் தெரிகிறது.

அவரும் கைக்கு வந்த பழங்களை வலிக்காமல் எடுத்து தராசில் வைத்து கேட்டவருக்கு புன்னைகை மாறாமல் கொடுத்தார்,

நீச்சலில் வந்தவரும் வாங்கிக்கொண்டு வலிக்காமல் போய் விட்டார் ,முங்கு நீச்சல் போட்டுக்கொண்டும், மல்லாக்க நீந்தியவறுமாய்/

பஸ் நிலையம் தண்ணீர் ,மிதந்து நின்ற கடைகள் அதில் மிதந்து தெரிந்த பொருட்கள் நீச்சலத்த மனிதர்கள் மிதவையாய் போய் வந்து கொண்டிருந்த பேருந்துகள்,எல்லாம் ஒரு சேர காட்சிக் கொண்டி ருந்த நேரத்தில் இவனு க்குத்தான் புதிதாய் முளைத்துத் தெரிந்த சிக்கல் ஒன்று தண்ணீர் மேலிடைக் கல்லாய் மிதந்துபட்டுத் தெரிந்ததாய்/

டீக்குடிக்க வேண்டும் இப்பொழுது ,திடீர் திடீர் என சொல்லாமல் கொள் ளாமல் அவிழ்ந்து விடுகிற வானத்திலுருந்து கொட்டுகிற தண்ணீர் மழையாய் காட்டி பொழிந்த பொழுது அலுவலகத்திலி ருந்து பஸ் நிலையம் வருவதற் குள்ளாய் கொஞ்சம் நனைந்து விட்டான்,

லேசாக குளிர்ந்தது.பற்கள் கொஞ்சம் தந்தியடித்தது, வயதாகி விட்டதோ,,,. ஐய்யையோ,,,,,

இளம் சூடாய் ஒரு டீக்குடித்தால் நன்றாக இருக்கும் எனத் தோனியது,ஆனால் நீச்சலடித்துப்போய் டீக்குடிக்கிற அளவெல்லாம் தைரியமில்லை இவனுக்கு, என்ன செய்யலாம் இப்பொழுது.

குளிர் கூடிஉடல் நடுக்கம் அதிகமாகிக்கொண்டேவருகிறது,என செய்யலாம்,? பஸ் வர வேண்டிய நேரம் தாண்டி பத்து நிமிடங்கள் ஆகிப்போனது,

இவனது யோசனையும்,மனப்பிராண்டலும் டீக்கடைக்காரருக்குக் கேட்டு விட்டது போலும்,/

கடைக்காரர் அங்கிருந்தவாறே டீயும் இரண்டு ஒரு வடையையும் சேர்த்து கட்டி நீளமான குச்சி ஒன்றின் முனையில் கட்டி அனுப்பி வைத்தார்,

வடையை சாப்பிட்டு விட்டு டீயைக்குடிக்கப்போகும் போதுதான் கவனிக் கிறான்,

அருகில் கையேந்தி நிற்கிற பிச்சைக்கார சிறுமியை, குடிக்க இருந்த டீயை அப்படியே சிறுமிக்குக் கொடுத்து விட்டு இவன் டீக்கடைக்காரரை நோக்கி சைகை செய்கிறான்,

அவரும் அதே குச்சியில் கொஞ்சமும் நனைந்து விடாமல் டீயை கட்டி அனுப்பி வைக்கிறார்,

கூடவே வந்த வடையை சிறுமிக்குக்கொடுத்து விட்டு இவன் டீசாப்பிட்டுக் கொண்டு நிற்கும் போது தாமதமாய் வந்த பேருந்து மிதவை காட்டி வந்து கொண்டிருந்தது,

பாண்டியன் நகர் பஸ்டாப் அது ,பாண்டியன் நகர் என்றால் கே.கே எஸ்.எஸ். என் நகர், ரோசல் பட்டி பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ்,மற்றும் பாண்டியன் நகர் பஸ்டாப் என்கிற மூன்று நிறுத்தங்களுமே/

மூன்றுக்கும் பாண்டியன் நகர் ஸ்டாப் என்றுதான் பெயர் அப்படிச் சொல்லித் தான் டிக்கெட்டும் எடுக்கிறார்கள், மூன்று இடங்களுக்கும் டிக்கெட் ஒரே விலைதான்,

மூன்றுக்கும் இடைவெளி தலா அரைக்கிலோ மீட்டர்களாவது இருக்கும். சொல்லி வைத்தது போல,/

இப்படியெல்லாம் அமைவது ரொம்பவும் அபூர்வமே/ தூரங்களில் இடைவெளி சொல்லிச் செல்கிறதாயும் அளவீடுகள் சரி காட்டியுமாய்/

இவன் இறங்க வேண்டிய இடம் மூன்றாவதாய் வந்து நின்ற பாண்டியன் நகர் பஸ்டாப்பில்/

இவன் இறங்கி கால் தரையில் கால் வைத்த நேரம் இவன் எதிரே சவ ஊர்வலம் ஒன்று மெல்ல நகர்ந்து போய்க்கொண்டிருந்தது,

தெரு விளக்குகள் போடப்பட்டிருந்தது,விளக்குகளின்வெளிச்சத்தில்ஆம்புலன் ஸினுள் படுக்க வைத்திருந்தவர் எதோ சொன்னது போல் சாலையையும் சாலையின் மனிதர்களையும் பார்த்து/

வாழ்வித்த தினங்கள் வழுக்கிய தருணத்தை இவனும் கண்ணுற்றவனாய் போய்க் கொண்டிந்தான்,

இவன் சாலை கடந்த நேரம் அரசு மருத்துவ மனையில் அழகான குழந்தை ஒன்று பிறந்திருப்பதாய் எட்டுத்திக்கும் சென்ற செய்தி அசரீரியாய் ஒலித்தது.

23 Jul 2017

பஞ்சறுடைத்து,,,,,,,,,,,

பஞ்சராகிப்போகிறது இரு சக்கர வாகனம்.

பச்சைக்கலரில் வர்ணம் வைத்த 100 சி சி வண்டி.. அல்லாக்கோயில் ரோட்டி லிருக்கிற பாலாம்பிகா ஏஜென்ஸீஸில் வாங்கிய வண்டி,

இதற்குமுன்னால் வைத்திருந்த 70 சி சி வண்டியை போட்டு விட்டு எக்ஸேஞ்ச் ஆபரில் எடுத்த வண்டி இது.

வீட்டில் அவ்வளவாய் யாருக்கும் பிடித்தம் இல்லை இந்த வண்டி எடுத்த தில்.வண்டி எடுக்கப்போகும் பொழுது கூடக்கூட்டிப்போன சின்ன மகளுக்குக் கூட பிடித்தம் இல்லை.

இவன்தான் விடாப்பிடியாக இதுதான் வேண்டும் என்று அடம் பிடித்து எடுத்து வந்தான்,

பழைய வண்டி விற்ற விலை போக மீதத்தை தவணையில் கட்டுவது என்கிற முடிவில் வாங்கி வந்தான்,

வாங்கி வந்த அன்றிலிறுந்து இன்றுவரை பெரிதாக எதுவும் கிலோ மீட்டர் காட்டியோ இல்லை நீண்ட தூரப்பயணமோ போய்விடவில்லை.

அதிகாமான தூரம் என்றால் ஐந்து அல்லது பத்து கிலோ மீட்டர்களுக்குள் போயிருப்பான்,

மற்றபடி வீட்டிலிருந்து அலுவலகம்,அலுவலகத்திலிருந்து வீடு இதுதான் அவனது வழக்காமான பார்முலா,

இதுதாண்டி போக வேண்டும் என யோசித்தால் என்றாவது ஒரு நாளில் புது பஸ்டாண்ட் பக்கம் போவான்,பஸ்டாண்டிற்கு வலது பக்கமாய் நாலு கடை தள்ளி கையகலமாய் வடை போடுகிற டீக்கடையில் ஒரு வடையும் டீயும் சாப்பிட்டு வருவதை என்றாவதான வழக்கமாய் வைத்திருந்தான்.

அந்தஎன்றாவதானவழக்கம் தாண்டி நண்பரைப்பார்க்க கலெக்டர் ஆபீஸ் வரை போய் வருவதுண்டு.நண்பரைப்பார்க்க,

அவர்தான் பஸ்டாண்ட் கடையை அறிமுகம் செய்து வைத்தார்.

சூலக்கரையில் இருக்கிற இன்னுமொரு நண்பனின் தந்தையாரது மரணத்திற் கு போய் விட்டு வருகிற போது கொஞ்சம் டீ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் உடலுக்கும் மனதிற்கும் சாப்பிடலாமா நண்பா என அவரிடம் விண்ணப்பத்தை வைத்த மறு விநாடி சற்றும் யோசிக்காமல் அவர் சொன்ன கடை அதுவாகத் தான் இருந்தது.

அந்தக்கடைதான் இப்பொழுது வரை இவனுக்கு தாக சாந்தி தீர்க்கிற மருந்துக் கடையாகவும், எப்பொழுதாவதுமான சர்வ ரோக நிவாரணியாகவுமாய் இருக் கிறது.

அவ்வளவுக்குள்ளாக ஓடுகிற வண்டியில் இது நாள்வரை பெரிய அளவிலாய் ரிப்பேர் என எதுவும் வந்துவிட்டிருந்ததில்லை,

இப்பொழுதுதான் பஞ்சர் என நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டது.

ஒரு நாலு அல்லது நாலரை மணிக்குத்தெரிந்திருந்தாலாவது இந்நேரம் எங்கா வது விட்டு பஞ்சர் பார்த்து வைத்திருந்திருக்கலாம்,அல்லது தெரிந்த ஒர்க்‌ ஷாப்பிற்கு போன் செய்து ஆட்களை வரச்செய்து பஞ்சர் பார்க்கச் சொல் லியிருக்கலாம்,

அவன் கைவசம் இரண்டு ஒர்க்‌ஷாப்க்காரர்களின் நம்பர் இருக்கிறது,ஆனால் இரண்டுமேதூரம் தூரம்,ஒன்று இந்த மூலை என்றால்,மற்றொன்று இன்னொரு மூலை.

போன் பண்ணினாலும் அப்படியே அவர்கள் வர ஒத்துக்கொண்டாலும் கூட அவர்கள் வந்து இனி சக்கரத்தை கழட்டிக்கொண்டு போய் பஞ்சர் ஒட்டிக் கொண்டு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாகிப்போகலாம்.

முன் சக்கரத்தில்தான் பஞ்சர்,வண்டியை நின்ற இடத்திலிருந்து ஸ்டாண்ட் எடுத்து தள்ளிக்கொண்டு வந்து முன்னால் நகர வைக்கமுற்ப்படுகையில் நகர மறுக்கிறது வண்டி.

என்ன இது சண்டி செய்கிறதே நம் மனம் போல,,,,,என அப்புறம்தான் பார்க் கிறான்,முன் சக்கரம் காற்றற்று தரையோடு தரையாக ஒட்டிக் கொண்டிருக் கிறது.

வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு மணியண்ணனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பக்கத்து டிபார்ட்மெண்டல் ஸ்டோரிலிருந்து வாசல் தெளிக்கவேண்டி ஒரு பெண் நின்றிருந்தாள்.

வழக்கம் போல மாலை வேளைகளில் நடப்பதுதான் இது என்றாலும் கூட இன்று ஒரு பெண் பிள்ளைநின்றிருந்தாள்,நன்றாக இருந்தால் இவனது மகள் வயதிருக்கும்,

எப்பொழுதும்ஒருபையன்தான்தண்ணீர்தெளிப்பான்,அவனது பேச்சும் சேட்டை யும் யாரையும் எளிதில் கவர்ந்து விடும்.

சார் வணக்கம் சார் என ஆரம்பிக்கிற அவனது பேச்சு ஓட்டம் கொண்ட குதி ரையின்வேகத்தைப்போல கடிவாளமில்லாமல் போய்க்கொண்டிருக்கும், கேட்க சுவாரஸ்யம் கொண்டிருக்கும்,

பேசுகிற ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் சிரிப்பு சோகம் துக்கம் என கலர் காட்டிய பேச்சை கொட்டுகிறவனாய் மாறிப்போகிற பேச்சை விதைத்து விட்டுச்சென்று விடுவான் சட்டென/

பக்கத்தில் நின்ற மணியண்ணனிடம் கேட்டதற்கு சார் இந்தா பக்கத்துல ஒர்க் ஷாப் இருக்கு சார்,வாங்க கையோட ஆளக் கூட்டிக்கிட்டு வந்துரலாம் வந்தா ங்கன்னா அரை மணி நேரத்துல வேலை முடிஞ்சி போகும் ஒங்களுக்கு, என்றார்,

தியேட்டரில் போய் அவரது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு போக வேண்டும்.

வழக்கமாக அங்குதான் அவர் இரு சக்கர வாகனத்தை நிறுத்துவார், அதற்கு கட்டணமெல்லாம் ஒன்றும் கிடையாது ,அன்பையும் பாசைத்தையும் மனித பழக்க வழக்கங்கங்களையும் மட்டுமே கட்டணமாக விதைத்து விட்டிருந்தார் அவர்/

ஒடுக்கமாய் வழி கொண்டிருந்த அந்த தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிகிறஇருவருமாய் அலுவலகம் முடிந்து வரிசைக்கிரமம் காட்டி காட்சிப்பட் டிருந்தமாடிப்படிகளில் இறங்கி வந்து இருபத்தி இரண்டாவது படியில் கடைசி விளிம்பில் இருக்கிற அந்த ஒடுக்கமான இடத்தில் இரு சக்கர வாகனத்தை எடுத்த போதுதான் அது பஞ்சர் எனத்தெரிகிறது.

அவ்வளவு பெரிய அலுவலகத்திற்கு அந்த வழி சற்று சிறியதுதான், அலுவல கத்தில் பணி புரிகிறவர்கள் தங்களது இரு சக்கர வாகனத்தை நிறுத்தக்கூட இடமில்லாமல் பக்கத்து சந்தில் நிறுத்தி வைத்திருந்தார்கள்,

சாதாரணமாய் ஹாலோ பிளாக்கற்கள் பதிக்கப்பட்டு நீண்டு விரிந்திருந்த சந்து இப்பொழுது சிறிது நாட்களுக்கு முன்பாக நல்லதொரு நாளில் மூத்திர சந்தாய் மாறிப்போனது,

அப்படி ஆகிப்போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

அத்தனை பேர் நடமாடுகிற சாலையில் ஒரு கட்டண அல்லது கட்டணமில் லாத கழிப்பறை இருந்தால் இப்படி ஆகியிக்காது என்பதுதான் இதற்கு மாற் றான வாதமாக இருக்கிறது இப்போதைக்கு/

அதற்கு சிறிது தினங்கள் முன்பு வரை அந்த சந்தை மறைத்து அதன் முன் ஒரு பெட்டிக்கடை இருந்தது,

அது பேப்பரில்ஆக்ரமிப்பு என்கிறரகத்தில் செய்தியாக வந்துவிடஆக்ரமிப்பாய் இருந்ததை எடுத்து விட்டார்கள் ஆக்ரமிப்பு அகற்றாலர்கள்/

சிகரெட்டும் பீடியும் கடலை மிட்டாயும் வெற்றிலையுமாய் கூடவே டீயும் வடையுமாய் விற்ற கடையை எடுத்துக்கொண்டு விட்டு அதன் வாசத்தை மட்டும் விட்டு விட்டுப்போய் விட்டார்கள்.

விஷயம் கேள்விப்பட்டபோது இவன் மேலே அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தான்.

மணியண்ணன்எப்பொழுதும்போலஇவனது அருகில் அமர்ந்து வேலை பார்த்து க் கொண்டிருந்தார்.

அவர்தான்இவனிடம்சொன்னார்,சார்அந்தசந்தைமறச்சிக்கிட்டுஇருந்தபெட்டிக் கடைய எடுத்துக்கிட்டு இருக்காங்க சார்,பெரிசு பெரிசா புல்டோஷர் வண்டியும் போலீசும்நிக்கிறாங்க சார்,ட்ராபிக்கக்கூட நிறுத்தீட்டாங்க சார் ஒரே கூட்டமா இருக்கு சார் என்றார்.

அலுவலகத்திலிந்துஎட்டிப்பார்த்த போது அவர் சொன்னதின் வாஸ்தவம் உரை த்தது.

கடைக்காரரும் கடைக்காரரின் தெருக்காரர்களும் கடையை எடுப்பது தப்பு என வாதிட்டுக்கொண்டிருந்தார்கள்.ஆக்ரமிப்பைஅகற்றியவர்களிடமிருந்து/அவரது சார்பாக அந்த சாலையில் இருந்த கடைக்காரர்கள் சிலர் பரிந்துவந்து பேசினா ர்கள்,

நாளைக்கு நமக்கும் அதே நிலை என்கிறதெல்லாம் இல்லாவிட்டாலும் கூட அந்தபெட்டிக்கடைக்காரருடனானநட்பும்அவரது உயிருக்குயிரான பழக்கமும் ஒருவரின் ஆதார சுருதி பறிக்கப்படுகிறதே என்கிற அநியாயமும் காட்டி/

அதிகாலைஆறுமணிக்கெல்லாம் திறந்து விடுவார் கடையை, அந்தக் கடைக் காரர்.

அந்நேரமாய்அந்தரோட்டில்எந்தக்கடையும்திறந்திருக்காது,டீக்கடை தவிர்த்து, ஆனாலும் இவர் கடை டீயைகுடிக்கவென தனி வாடிக்கையாளர்கள் எப்பொ ழுதுமே இருப்பார்கள்.

கனம் கொண்ட உடலை தூக்கிகொண்டு பள்ளிக்கூட சைக்கிளில் மெதுவாக தேரின் வேகம் காட்டியும் அதன் அசைவிலுமாய் நகன்று நகன்று வருவார்.

வரும் போதே சில்வர் டீக்கேனை சைக்கிளின் பின்னால் வைத்துக்கொண்டு வந்து விடுவார்.அது அவர் போடுகிற டீ இல்லை.அவருக்காக அவரது பக்க த்து வீட்டு மாமி போட்டுக்கொடுப்பார்,

பால் டீத்தூள் மற்றும் வடி கட்டி பால் சட்டி இன்னும் இன்னுமான எல்லாம் அவரது.பாலை அடுப்பில் ஏற்றி டீயாக்கித் தந்து விடுவது மட்டும் மாமியின் வேலை.அதற்கு மாமிக்கு தனி சம்பளம்தந்து விடுவார்,

தினசரிரெண்டு லிட்டர் என்பது கணக்கு,அதை கடைக்காரர்தான் எடை கட்டித் தருவார்,எடை கட்டிய பாலை சட்டியுடன் அடுப்பில் ஏற்றி அடுப்பை சூடம் ஏற்றி பற்றவைத்து விட்டு பால் கொதிக்கும் வரை அருகில் இருந்து பார்த்து விட்டு பால் கொதித்த பின் போய் குளித்து கிளம்பி வருவார்.

மாமிக்கு இட்லி வியாபாரம் .இட்லியும் பணியாரமும் போடுவாள், அதென் னவோ தெரியவில்லை,இட்லி சுட்டு விற்கிற எல்லோரும் தவறாமல் பணியா ரம் சுட்டு விற்கிறார்கள்.

அது போலவே மாமி செய்ததிலும் தவறிருக்க முடியாது.அதற்கு முன்னால் பாலை அடுப்பில் ஏற்றி டீ தாயாரித்துக்கொடுத்து விடுவாள்,

மாமி அடுப்பை வீட்டுக்கு வெளியில்தான் வைத்திருப்பாள்,வீடு கால் நீட்டி படுக்கவே காணாத வீடு .இதில் எங்கிட்டு அடுப்புப்போட மழை நேரத்தில் அடுப்படியை பொத்திக்கொள்ள வைத்திருக்கும் தகரம் அவளுக்கு கை கொடு க்கும்.

விறகு எல்லாம் பெட்டிக்கடைக்காரரின் வீட்டு தாழ்வாரத்தின் ஓரத்தில் கிடக்கும்,நல்ல மழை நாளன்றின் ஒரு மாலை பொழுதில் பஜாருக்கு போய் விட்டுத்திரும்பும் முன் அடமாய் பிடித்து பெய்ய ஆரம்பித்த மழை மாமியின் அடுப்புக்குப்பக்கத்தில் இருந்த விறகுக்குவியல் பின் அம்மி,ஆட்டுக் கல் எல்லாவற்றையும் நனைத்து விட்டது.

இதை பார்த்துக்கொண்டிருந்த பெட்டிக்கடைகாரரின் பெண்டாட்டி அம்மிகல் லையும் ஆட்டுஉரலையும் விறகுக்குவியலையும் எடுத்து தனது வீட்டு தாழ்வாரத்தில் போட்டு விட்டாள்.மாமி வந்த பின் அவளிடம் சொல்லி அடுப் பையும் தனது தாழ்வாரத்தில் போட்டுக் கொடுத்தாள்.

இதற்குகைமாறாக மாமியால் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் அளவிட இயலா கண்ணீரையும் மட்டுமே தர முடிந்தது.அதன் விளைவு தினசரியுமாய் அவள் தயாரிக்கிற டீயில் சுவை கூடியது,

காலைஆறு மணிக்கு வந்து விடுகிற அவர் நேரடியாய் கடையை திறந்து விட மாட்டார்,

முதலில் கடைக்கு வெளியில் அவர் சாத்தி வைத்துப் போன விளக்குமாறை எடுத்து சுத்தமாக கூட்டி விட்டு பக்கத்துத் தெருவிலிருக்கிற அடி குழாயி லிருந்து தண்ணீர் பிடித்து வந்து கடை முன்னாக தெளித்து விட்டுத் தான் கடையைத்திறப்பார்,

அதற்கு முன்பாக தண்ணீர் தெளித்த இடத்தின் வலமும் இடமுமாக இரண்டு இரண்டு பூந்தொட்டிகளை எடுத்து வைப்பார். வலது பக்கமாய் வைக்கிற தொட்டியில் பூப்பூத்த செடி ஒன்றும் இடது பக்கமாய் வைக்கிற செடியில் பூப்பூத்த செடி ஒன்றும் கண்டிப்பாக இருக்கும்.

இதற்கெல்லாம் அவர் எடுத்துக்கொள்கிற நேரம் வெறும் பத்து அல்லது எட்டு நிமிடம் மட்டுமே/

கடையை திறந்ததுமாய் டீக்கேனைதூக்கி கடையின் வலது ஓரமாய் இருக்கிற ஸ்டூலில் வைத்து விட்டு திருநீறு எடுத்து தண்ணீரில் நனைத்து மூன்று விரல்களால் தடவி விடுவார்.

அவர் திருநீறு பூசி விட்டு நிமிர்வதற்கும் டீக்குடிக்கஆள் வருவதற்கும் சரியாக இருக்கும்,சரியாக இல்லையென்றாலும் கூட சரியாக்கி விடுவார். கேன் டீ, பேப்பர் கப்,இது தவிர்த்து பீடி சிகரெட் உடன் சேர்ந்து கொள்ளும். சமயா சமயங்களில் உடன் சேர்ந்து கொள்கிற வடை அவர் கொடுக்கிற டீக்கு சுவை சேர்த்து விடுவது உண்டு,

தினசரி காலையிலும் மாலையிலும் அவர் தக்க வைத்துக்கொள்கிற அந்த சுவைதான் அவரது கவனிப்பும் மனக் கனிவும் அவரது மனம் ஒட்ட வைக்கிற அந்த பழக்கமும்தான் அவரை அந்த அளவிற்காய் அங்கு பேச வைத்தது என லாம்,

தவிர்த்து மற்றகடைகள் திறக்கிற நேரமான ஒன்பதுமணிக்கெல்லாம் வந்து விடுகிறகாலைசாப்பாட்டை அவரது பேத்தி கொண்டுவருகிற போது கடையின் முன் இருக்கிற தொட்டியிலிருந்து பூஞ்செடி ஒன்று கொத்தாய் எழுந்து நடந்து வருவது போல் இருக்கும்.நடந்து வந்த பூங்கொத்து வந்தமர்ந்து அவர் சாப்பி டும் வரை சும்மா காத்துக்கொண்டு நிற்காமல் தாத்தாவின் கடைக்குப் பக்கத் தில் இருக்கிற நான்கு கடைகளுக்கு ஒவ்வொரு குடம் தண்ணீர் எடுத்து கொடு க்கும்.

அதற்க்கெனஅவளுக்குகாசுகொடுப்பார்கள்கடைக்கார்கள்,தாத்தாபிடித்துவரும் பக்கத்துத்து குழாயிலிருந்து பிடித்து வருவதற்கு ஒரு குடம் தண்ணீருக்கு இரண்டு ரூபாய்/

தினசரி பத்து ரூபாய் அவளது கணக்கு.நான்கு கடை போக இன்னும் ஒரு குடம் எடுக்க வேண்டுமே,தாத்தா கடையே அந்த ஒரு குடம் தண்ணீருக்கான தேவை யாய் மாறிப் போகும்.

எத்தனை ஆதரவும் சத்தமும் அவரது பெட்டிக்கடை அகற்றலைநிறுத்தி விட முடியவில்லை.அகற்றிவிட்டார்கள்,அந்தமனிதனின்பேரழுகைக்கிடையிலும்,  உள்ளக்குமுறலுக்கிடயிலுமாய்…/

மணியண்ணன்சொன்னபோதுநம்பமுடியவில்லை.ஆனால்மாலைஅலுவலகம் விட்டுப்போகும் போது பார்த்தான்.

கடையை எடுத்தவுடன் அந்த சந்து எந்த வழியாகப்போய் எங்கும் முடிகிறது என்பதைக்காட்டியது,

கடையை எடுத்தமறு நாள் அந்த சந்து வழியாகத் தான் போனான்,அது தெருக் களை அடையாளம் காட்டிய படியும் வீடுகளை அர்த்தப்படுத்தியுமாய் காட்டிக் கொண்டு சென்று இரண்டாவது கேட் தெருவில் முடிந்தது.

மணியண்ணன் தியேட்டரில் போய் இரு சக்கர வாகனத்தை எடுத்து வந்தார். அவரது இருசக்கர வாகனத்தை ஒர்க் ஷாப்பில் வேலைக்கு விட்டிருப்பதாக வும்,ஒர்க்ஷாப் வண்டியை எடுத்துக்கொண்டு ஓட்டி வந்திருப்பதாகவும் சொன் னார்.

அவர்வண்டியைஸ்டார்ட்ப்பண்ணியதும்ஸ்டார்ட் ஆகவில்லை,தியேட்டரின்  சைக்கிள் ஸ்டாண்ட் முழுவதுமாய் ஓடி ஓடி உருட்டி ஸ்டார்ப் பண்ணியதும் மிகவும் சிரமப்பட்டு ஸ்டார்ட் ஆகியது.

வண்டியின் சப்தமே வித்தியாசமாக இருந்தது, ஊர் வரை கொண்டு போய் சேர்த்து விடுமா அவரை என சந்தேகிக்க வைக்கிற சப்தமாயும்,,,/

பின்னால் ஏற்றிக் கொள்கிறார்.அவர் சொன்ன இடத்திற்கு கூப்பிட்டுப் போகி றார்,அதுவரைக்குமாய்அவர்சொல்லிக்கொண்டிருந்த கடைக்குக்கொண்டு போய் விட்டார்.

30 Apr 2017

கில்லித்தட்டான்,,,,,



இவன் சொல்வது அவருக்கு சரியாகக்கேட்கவில்லை.இவன் மட்டுமல்ல யார் சொன்ன போது அவருக்கு சரியாகக்கேட்காதுதான்.

ஏன் இப்பிடி அடுத்தவுங்க சொல்றதும்கேக்காம நீங்களும் சங்கடப்பட்டுக் கிட் டு ரொம்ப செரமப்படுறீங்க, என அடுத்தவர்கள் சொன்ன போதும் அஞ்சோ பத்தோ ஆனா ஆயிட்டுப் போகுது ஏன் போட்டுக்கிட்டு துன்பப்பட்டுக் கிட்டு ,,,,,பேசாம ஒரு மிஷின வாங்கி மாட்டிக்கிற வேண்டியதுதான,என யார் சொ ன்ன போதிலும் உதாசீனம் செய்து விடுவார்.

அது எதுக்கு அதப்போயி காதுக்குப்பின்னாடி அசிங்கமா ஒட்ட வச்சிட்டு, இப்பிடியே இருக்குறதுல இன்னொரு சௌகரியமும் ஒண்ணு இருக்கு.யாரும் என்னையப்பத்தி யெசக்கேடா பேசுனாலும் கேக்காது.தவுர அவுங்க பேசுற ஒழுக்கக்கேடான பேச்சுக்கு நான் வருத்தப்பட வேண்டியது இருக்காது பாரு ங்க என சொல்லிச்சிரிப்பார்.

பாண்டியன்காலனியில்டீக்கடைவைத்திருக்கும்போது அதிகாலையில்மூன்று மணிக்கெல்லாம் விழித்து விடுவார்.

“ஏன் இப்பிடி இருக்கீங்க ,ராத்திரி தூங்கும் போதும் லேட்டாத்தான் தூங்குறீ ங்க,எப்பிடியும் பண்ணெண்டு மணி ஆகிப்போகுது.இப்ப இப்பிடி காலையில யும் சீக்கிரம் எந்திரிச்சி ஏன் இப்பிடி அழிச்சாட்டியம் பண்ணுறீங்க,கேட்டா கடையப்போயி தெறக்கபோறேன்றீங்க,இந்த நேரத்துல யாரு வந்து ஒங்க ளுக்காக கடை முன்னாடி வரிசை கட்டி காத்து ருக்காங்க,அப்பிடியே வந்தா லும் ஒங்கள மாதிரி ரெண்டு ஒண்ணு வந்து காத்துக்கிட்டு இருப்பாங்க, அந்த கடைசி வீட்டுக்காரரு ஒருத்தரு,மில்லுக்காரரு ஒருத்தரு,நடுத்தெருக்காரரு ஒருத்தரு,மாடிவீட்டுக்காரருஒருத்தரு,நாலாவதுவீட்டுக்காரருஒருத்தருன்னு ,,,,, இன்னும் நாலைஞ்சு பேருமா சேந்து வருவாங்க,எல்லாம் ஒங்க வயச ஒத்தவங்களதான் இருப்பாங்க,அவுங்க கூட வம்பு பேசிக்கிட்டு அவுங்களுக்கு டீக்குடுத்துக்கிட்டு இருக்குறதுக்கு பேசாம கூடக் கொஞ்ச நேரம் படுத்து எந்தி ரிச்சிக்கிட்டு நிம்மதியாப்போயி கடை தொறக்கலாம்ல”,என்கிற மனைவியின் பேச்சிற்கு தொறக்கலாம் இல்லைன்னு சொல்லலம்மா,ஆனா என்ன ஒரு துரதிஷ்டவசம்ன்னா காலையில அந்த நேரத்துல தொறந்தாத்தான் இப்பிடி யான ஆட்களெல்லாம் வருவாங்க,அப்பிடி வர்றவுங்க நீயி சொன்ன ஆட்க தவிர்த்து இன்னும் கூடுதலா ஆறேழுபேருக்கு மேல வர்றாங்க,எல்லாரையும் சேத்து வச்சிப்பாத்தா எப்பிடியும் பதினைஞ்சி பேருக்கு மேல வருவா ங்க,

”அவுங்களெல்லாம்அந்நேரம் வந்து பளபளன்னு விடியிற நேரம்போயிருவா ங்க, அப்பிடிவந்து போறவுங்கஎல்லாரும் டீக்குடிக்கனும்ன்னு மட்டும் வந்து போறது இல்ல.அவுங்க பொறந்தது வளந்தது,அவுங்க படிச்சது மேல அவுங் களோட இளம் பிராயம் மத்தபடி அவுங்க கல்யாணம் குடும்பம் புள்ள குட்டிங்க, அவுங்க படிப்பு வேலை அவுங்க கல்யாணம் குடும்பம் மகன் மருமக,பேரன் பேத்தின்னு நெறைய பேசுவாங்க,பரிமாறிக்கிருவாங்க,

“இதுல பென்ஷன் வாங்குறவுங்க,கைக்காசு வச்சிருக்குறவங்க,மக்க மாருக பேரன் பேத்தி கைய நம்பி இருக்குறவுங்கன்னு நெறையப்பேரு இருக்காங்க/,

”இதுல மில்லுக்காரரு நெலைமையின்னா இதுலயிருந்து கொஞ்சம் வேறு பட்டுநிக்குது.அவருக்குபாருங்கநெலையானவருமானம்ன்னு ஒண்ணும் கெடை யாது.மில்லு வேலையில இருந்து நின்ன ஒடனே வந்த மொத்தப் பணமும் வீட்டுப்பாட்டுக்குப் போக மிச்ச இருந்த பணத்த பேங்குல போட்டுட்டு அதுலயி ருந்து வர்ற வட்டிப்பணத்த வச்சித்தான் சாப்புட்டுறாரு,மத்தபடி அவுங்க மக்க மாருகளும் பேரன் பேத்தியும் கைச்செலவுக்குன்னு குடுக்குற பணத்த வச்சி ஓட்டிக்கிர்றாரு,

“அந்த விஷயத்துல அவரது பேரன் கெட்டிக்காரன்,அவனுக்குன்னு அன்றாடம் செலவுக்குகுடுக்குறகாசுலமிச்சம் வச்சி அவருக்குக்குடுப்பான்,அவரு எவ்வ ளவு தான் வேணாம்ன்னு சொன்னாலும் கேக்க மாட்டான்,வம்பா கொண்டு வந்து குடுத்துட்டுத்தான் போவான்,ஆரம்பத்துல கொஞ்சம் பிகுபண்ணுனாலும் கூட போகப் போக அவருக்கு அவன் தர்ற காசு தேவையா இருக்குறதுனால வாங்க ஆரம்பிச்சுட்டாரு.

அந்தக்காசுதான் அவருக்கு தினமும் டீக்குடிக்கவும் வடை சாப்புடவும் ஒதவுது தவுர அவர மனம் கோணாம வச்சிருக்குறது பேரன் கைச்செலவுக்குன்னு குடுக்குற கொஞ்சம் கைக்காசும்தான்,

இது ஒரு பக்கம்ன்னா அந்த மிலிட்ரிக்காரரு நெலம இன்னும் மோசம். அவரு க்கு வர்ற பென்ஷன் பணத்த அவரு கூடவே போயி அவரு வீட்டம்மா எடுத் துட்டு வந்துரும். பென்ஷன் பணத்த எடுத்த கையோட மிலிட்ரி கேண்டீன் போயி சாமான்க வாங்கீட்டு வருவாங்க,அதுல இவருக்குன்னு மிஞ்சுறது ஒரே ஒரு பிராந்தி பாட்டில் மட்டும்தான்.அதுல கூட கூட ஒரு பாட்டில் வேணு முன்னா வாங்க சம்மதிக்காது அவரு வீட்டம்மா, பின்ன அவரோட செலவுக்கு என்னங்குறாருன்னா அவரோட பேத்தி குடுக்குற காசுதான்,

“அவ ஒண்ணும் அவளுக்குன்னு குடுத்த காச சேத்து வச்செல்லாம் தர மாட் டா/அவ பாட்டிகிட்டப்போயி ரைட் அண்ட ராயலா சண்ட போடுவா,,,, பாட்டி பென்ஷன் பணத்துல தாத்தாவுக்குக் குடுக்க வேண்டிய பணத்தக் குடுன்னு சண்ட போட்டு வாங்கீட்டு வந்துருவா ,,,,அந்தப்பணத்துலதான் அவருக்கு டீ வடை மத்த மத்தது எல்லாம்,

“அது போக கல்யாணம் ஆகிப்போன அவரு பொண்ணு பெங்ளூர்ல இருக் காப்ல அந்தப் பொண்னுக்கு மூணு மாசத்துக்கு ஒரு முறை பணம் அனுப்பு வாரு, அவரு அனுப்புற பணம் அந்தப்பொண்ணுக்கு பெரிய அளவுல தேவை இருந்துறப் போறதில்லைன்னாக் கூட ஏதோ கைச்செலவுக்கு ஆயிட்டுப் போ குதுன்னு சொல்வாரு.

அந்தப்பொண்ணு கூட சொல்லுவா,ஏங் இவ்வளவு செரமப்படுறீங்க, நீங்க வாங்குற பென்சன் ,பணத்துல அங்க அம்மாகிட்ட புடுங்குபெத்துக்கிட்டு ஏன் போயி இப்பிடி பண்ணாட்டி என்னன்னு,,,,/

”ஆனாஇவரு விடாம அந்த வேலையபண்ணிக்கிட்டே இருக்காரு. அந்தப் பொ ண்ணுக்கும்பத்தாவதும் ஏழாவதும் படிக்கிற புள்ளைங்க இருக்காங்க ஆனாலு ம்இன்னும்பிரியம்மாறாமபணம்அனுப்புறகொணம்அவருகிட்டஇருக்கு,வாங்கிற மனசு அந்தப்பொண்ணுகிட்ட இருக்கு,அப்பன் மக ஒறவுன்னா இப்பிடி இருக் கணும்,

“இவரு அந்தப்பொண்ணுக்கு பணம் அனுப்புறது மட்டும் இல்ல,இவருக்கு ஏதாவது தேவைன்னா அந்தபொண்ணும் சும்மா வச்சி செலவழிங்கன்னு பணம் அனுப்பும், இதெல்லாம் அவுங்க பேச்சுல வரும்.

“இதுலகழிவிறக்கப்பேச்சு,பச்சாதாபப்பேச்சுன்னு நெறையவரும்,நெறைய போகு ம், இதுலயாரும்யாரைப்பத்தியாரையும் தப்பா பேசுனது கிடையாது, யா ரும் யாரைப் பத்தி பெறனி பேச மாட்டாங்க,

”வீட்டுல உள்ள மக்க மாருகளப் பத்தி, பேரன் பேத்திகளப் பத்தி கொற பட்டுக் குருவாங்களே தவுர தப்பா பேச மாட்டாங்க, தப்பா பேசுறது வேற கொற பட்டுக்குறதுவேற,இது ரெண்டையும் ஒண்ணாப் போட்டு கொழப்பக் கூடாது ன்னு அவுங்க பேசுறத வச்சி எப்பவாவது புரிஞ்சிக்கிற முடியும்,

“ஒனக்குதான் காது கேக்காதே பின்ன எப்பிடின்னு கேக்குறவுங்களுக்கு நான் சொல்றதுஇதுதான்எப்பவுமா இருந்திருக்கு, உணர்வுகளப் பகிர்ந்து பேசுறவுங்க பேச்சக்கேக்குறதுக்குகேட்புணர்வு எதுக்குன்னுதான் கேக்கத் தோணுது.,,,,, எனச் சொல்லித்தான் அன்றாடம் அவர் கடையைத் திறப்பார்.

அவரது கடை டீ ஒன்றும் அவ்வளவு சுவையாகவும் அது அற்றுமாய் இருக் காது என்கிற போதும் கூட அவரது கடைக்கு வருகிற கூட்டத்திற்கு பஞ்சம் இருக்காது,ஓட்டப் பந்தயத்தில் நான் ஒருவன் மட்டுமே ஓடினேன் என்பது போல்/

அவரதுகடை மட்டும் அங்கு நிலை கொண்டிருந்ததால்கூட்டம் வந்ததில் ஆச்ச ரியம் ஒன்றும் இல்லை.

”எல்லாம் சரிதான் ஒங்க நிம்மதிக்காவும் பொழப்புக் காவும்ன்னு சொல்லி கடை போட்டீங்க,என்னையும் போட்டு கொலையா கொன்னு கடையில ஒக்காரவச்சி வியாபாரத்த விருத்தி பண்ணுனீங்க சரிதான்.அதுல ஒங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி இருந்துச்சிங்குறது உண்மைதான்,அதே சமயம் கடையில சம்பாதிச்ச சம்பாதித்தியத்த மாசத்துக்கு ஒருக்கா,ரெண்டு தடவைன்னு ஆஸ் பத்திரியிலகொண்டுபோயி குடுத்துட்டுவந்துருறீங்களே, பிரஷரு,மூச்சுத் தெண றலுன்னு,,,அது எப்பிடி சரியாயிருக்கும் சொல்லுங்க” என்கிற மனைவியின் பேச்சுக்கு,,,,,”இது நா டீக்கடை போட்டதுனாலதா வருதா,சும்மா இருந்தாலும் வர்றதுதான,இதுல கழுதையப் போட்டுட்டு என்ன பெருசா வியாக்கினம் வேண்டிக்கிடக்கு,,,,,”எனச்சொல்லி சிரிப்பார் பெரிதாக/

இரவு பணிரெண்டு மணிக்குப்படுத்து அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து டீக்கடை வைத்து சம்பாதிக்கிற அவரின் சம்பாத்தியம் பாதி ஆஸ்பத்திரிக்கும் மீதி நேரம் அவரது நிம்மதியற்றதனத்திற்குமாய் செலவாகிப் போகிறது என்கிற நிஜம் அறிந்தவர்களாய் இருந்த அவரது வீட்டார்கள் அவரை கடை யை மூடச்சொல்லி விட்டு ”வேண்டுமானால் மாதாக்கோயில் கிட்ட நம்ம சொந்தக்காரங்க வச்சிருக்குற டீக்கடையில இருந்துக்கங்க சம்பளத்துக்கோ இல்ல பொழுது போக்குக்குக்கோ” என்றார்கள் வீட்டில்,/

அதற்குஅவர்சம்மதித்த மறு நாளிலிலிருந்து அந்தக்கடையில்தான் நிற்கிறார். அப்படியாய் அவர் நின்ற கடையைக்கடக்க நேர்கிற சமயங்களில் நின்று குடிக்கிறடீயின்பொழுதில் தான் இவ்வளவுமாய் வந்து விழுந்து விடுகிறது.பார் க்கவும் கேட்கவுமாய் நேர்ந்து போகிறது.

”காது கேக்கலைன்னா வருத்தப்பட வேண்டியதிருக்காது பெரிசாங்குறது சரி அதுக்காக கண்ணு முன்னால நடக்குற எத்தனையோ நல்லாஇல்லாததுகளப் பாக்குறதுக்கு வருத்தப்பட்டுகிட்டு பார்வை இல்லாம இருந்த நல்லா இருக் குன்னு நெனைக்கிறதா கிறுக்குப்பயலே” என அவரது சகவயதுக்காரர்கள் அவரிடம் சப்தம் போட்டுப்பேசும் போது ஏற்றுக்கொண்டு நிற்பார் மௌனம் காத்து.

ஆனாலும்அவர் மனம் சொல்கிற அச்சடி த்த பதில் இதுவாகத்தான் இருக்கும். ஏங் சௌகரியம் இது அதுக்காக ஊர்க் காரங்களுக்கு கண்ணில்லாம போறது பத்தி யோசிச்சா எப்பிடி என்பார்,எனக் கேத்தாப்புல எனக்குன்னு சமாதானம் பண்ணிக்கிறேன் அவ்வளவுதான் என்பார்,

அந்த அவ்வளவில்தான் அவரது பேச்சும் சமாதானமும் செயல்பாடும் இருக் கும்.அவரது காதுவாகு அப்படி எனத்தெரிந்தும் கூட கடை ஓனரும் சரி கடை க்கு வருகிறவர்களும் சரிஎன்னய்யா இது என கொஞ்சம் சலிப்பு சுமந்து பேசும் பேச்சை ஒரு மென் சிரிப்பில் கடந்து விடுவார்.சரி விடுப்பா,அவுங்க அப்பிடித்தான் நாம் இப்பிடித்தான் என்பார்.என்ன சமயத்துல ரோட்டுல போற வுங்க திரும்பிப்பாக்குற அளவுக்கு சப்தம் போடுறதுதான் சங்கடமா இருக்கு மனசுக்கு என்பார்.

இது ஒரு புறம் இருக்க அவர் பேசுவதும் சரியாக கேட்க வில்லை.அல்லது விளங்கவில்லை.அவர் பேசுகிற பேச்சில் இரண்டிற்கு ஒன்று இவனது காதில் விழும்.அதுவும் முழுதாக விழாது.நான்கு பேச்சென்றால் இரண்டுதான் வந்து சேர்கிறது.மற்றதெல்லாம் பின் தள்ளிப்போய் விடுகி றது.

போய் விடுகிறதென்றால் காற்றில் கரைந்து போய் விடுவதில்லை.பேசுகிற பேச்சை பாதி முழுங்கி விடுகிறார் அவர்.

உடன் வேலை பார்க்கும் இளம் குமாஸ்தாவை சிவகாசி ரோட்டில் இறக்கி விட்டுவிட்டு வரும்போதுதான் வந்து விடுமோ சடுதியாக என நினைத்து அச்சப்பட்ட மழை லேசாக சொட்டடிக்க ஆரம்பித்தது.

“சார் மழை வந்துருமோ பஸ்ஸேறுறதுக்குள்ள, கரெக்டா மழை துளி வாயி லேயே விழுகுது சார்” என்றார்.

அவருக்கு கவலை எங்கே மழை பெய்து தொலைத்து நம்மை ஊருக்குப் போக விடாமல் தாமதம் செய்து விடுமோ என்பதாய் இருந்தது. ”அடப் போங் கடா நீங்களும்,ஒங்க மழையும் எனக்கு வீட்டுக்குப்போகணும் காலகாலத்துல அங்க போயி பொண்டாட்டி புள்ளைங்கள பாக்கணும்.ஆபீஸீலபட்ட பாட்லயி ருந்து வீடடையப்போற தருணத்துல இப்பிடி போகவிடாம ஒரு மழையால தடுக்க முடியுதுன்னா எரிச்சல் தான் வருது எனச்சொன்ன அவர் வண்டி ஓட்டுகிற இவனை மனதிற்குள்ளாக மெலிதாகவாவது திட்டியிருக்ககூடும்.

அலுவலகம் முடிந்து இவனது இரு சக்கர வாகனத்தின் பின்னால் அவரை ஏற்றியதிலிருந்து அவர் இறங்க வேண்டிய இடத்தின் அருகாமைவரை முப்பதிலும் இருபதிலுமாய்த்தான் பயணிக்க முடிந்தது.

பணி முடிய இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன .பொதுவாக நேரத்திற்கு அமர்ந்து நூல்ப்பிடித்து நேரம் முடிய மட்டும் வேலை பார்ப்பது இவனது வழக்கமில்லை.மனசாட்சிக்கு விரோதமாய் அப்படி பார்க்க நேர்கிற நாட்களில் தூக்கமும் பிடிப்பதில்லை,கடுமையான மன வாதைக்கு உள்ளாகிப்போகிறதும் உண்டுதான்.

அப்படியான ஒரு நேரமாய்பார்த்துத்தான் அன் றும் பணிமுடிந்து எழ வேண் டியதாகவும் அவரை கூட்டிப்போக வேண்டி யதாகவும் ஆகிப்போகிறது. மென் மை கவிழ்ந்து முரட்டுத்தனம் காட்டாத நீலவானம் சற்றே கருமை சுமந்தும், குளுகுளுப்பை அள்ளீ வீசிக் கொண்டுமாய்,,,,,/

சற்றே ஆளரவம் குறைந்த சாலையில் ஆங்காங்கே மனிதர்களை அள்ளித் தெளித்துக்காண்பித்ததுசாலை.அப்படியானஅள்ளித்தெளிப்பின்முக்கியப்புள்ளி களாய் அடையாளம் காட்டப்பட்ட மனிதர்கள் இரு சக்கர வாகனங் களி லும் பாதசாரிகளாகவும்,திறந்திருந்த கடைக்குள்ளாகவும், டீக்கடை முன்பாகவும் காட்சிப்பட்டுத்தெரிந்தார்கள்.

அந்த காட்சி அவிழ்பின் காட்சியை கண்ணுற்றவனாகஅவரைபின்னமர வைத்து விட்டுமுன்னமர்கிறான்.

அலுவலக வாயிலிருந்து. சரவணன் தியேட்டர்,ரெங்கநாதர் கோயில்,பாய் டீக்கடை,,,,,,எனசென்ற நீண்ட சாலையின் எல்லை தாண்டி இன்கம்டாக்ஸ் ஆபீஸ் ரோடு திரும்பியதும் முன் சென்ற லாரியின் வால்ப்பிடித்து செல்ல வேண்டியதாகிப் போனது.

லோடு லாரி,நிறை பாரமாய் சென்றது.இப்படியான இடங்களில் இப்படியாய் நிறைபாரத்துடன் செல்கிற லாரிகள் மெதுவாக ஆடி அசைந்துதான் போகும் போலும்/

லாரியின் பக்கவாட்டு ஓரமாய் ஒதுங்கிப் போகலாம் என்றால் இடமும் இல் லை. கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது.வேறு வழியில்லை,ஸ்டேட் பேங்க் முக்கு திரும்பும் வரை இப்படித்தான் செல்ல வேண்டும்,

அகலம் காட்டிச்செல்லாத சிங்கிள் ரோடு,நீளம் ஜாஸ்தி,அகலம் குறைவு,அங்கு போய்தான் இந்த ரோடு முடிந்து மெயின் ரோட்டில் இணைந்து செல்லும்.

“இப்பிடி போறதுக்கு பேசாம உருட்டிக்கிட்டு போயிறலாம சார், கொஞ்சம் யெறங்குங்க,சார்,அப்பிடியே உருட்டிக்கிட்டே போவோம் கொஞ்ச தூரம்” என்றார் உடன் வந்த குமாஸ்தா/

கேலியும் கிண்டலுமாய் அவரை விட்டு வந்த வேளை லேசாய் சொட்டு வைத்துப்பெய்த மழை ஆழ ஊனி பூமிக்கும் வானத்திற்குமாய் நட்டு வைத்த வெளிக்கம்பிகளாய் ஆகித்தெரிந்தது.

இப்படியான சூழலில் நட்டு வைத்த வெள்ளிகம்பிகளை ஏற்றுத்திளைத்துத் திரிந்த வயதும் மனதும் அப்போது இருந்ததைப்போல் இப்போது இல்லை, இந்த 54 ல் அதை ஏற்று மகிழும் உடல் நிலையும் இல்லை.

ரயில்வே ஸ்டேஷனைத் தாண்டி விட்டான்.வலுத்துக்கொண்டு வந்த மழை இனியும் இப்படியே நீ சென்று விட இயலாது,எங்கேனுமாய் ஓரங்களில் நின்று விட்டு மழை நின்றதுமாய் கிளம்பு/என்றறிவித்ததை ஏற்றுப் பணிந்த வனாய் இரு சக்கரவாகனத்தை திருப்பிக்கொண்டு டீக்கடையில் வந்து நிற்கி றான்,

பழகிய கடை பழகிய முகம்,பழகிய பேச்சுதான் என்றாலும் கூட அவர் பேசியது சரியாக கேட்கவில்லை,

“வாங்க,நல்லா நனைஞ்சிட்டீங்க போல, கடைக்குள்ள போயி நில்லுங்க” என் பது அவரது பேச்சின் அர்த்தம் என்பதாய் புரிந்து கொள்கிறான்.

நன்றாக நனைந்து விட்டிருந்தான்,பேண்ட் சட்டை எல்லாம் தெப்பமாக நனைந் திருந்தது,பிழிந்தால் அரைக்குடம் தண்ணீராவது எடுக்கலாம் போலிருக்கிறது.

வடை எடுத்துகடிக்கலாம் என்றால் வடை இல்லை.இனிப்புப் பனியாரம்தான் இருந்தது,ரவையில் சுட்டிருப்பார்கள் போலிருக்கிறது, இருக்கமாக இருந்தது. கேட்டதில் ரவைப்பணியாரம் என்றார்கள்,

பணியாரத்தை சாப்பிட்டு நின்று கொண்டிருக்கும் போது பெய்து கொண்டிருந்த மழையின் வலு கூடிக்கொண்டு போனது தெரிந்தது.கடைக்குள்ளாக நின்று கொண்டிருந்த இவன் மீது தெரித்த மழையின் சாரல்கள் நனைந்து நின்ற இவனை மேலுமாய் நனைத்தது.சித்திரை வெயிலின் வெப்பத்தின் தாக்கத்தி லும் கூட உடல் லேசாக ஜில்லிட்டது.”இதுதான் சார் மழையோட அருமை, எவ்வளவு வெயில் அடிச்சாலும் கூட ரெண்டு மழைத்தண்ணி மேல விழுந்த ஒடனே ஒடம்பு ஜில்லிட்டுப்போகுது” என்றார்.

இன்னும் ஒரு மணி நேரமாவது கண்டிப்பா மழை பெய்யும் சார் என்றார், மேகத்தப்பாருங்க.அந்தா கரை கட்டுனாப்புல நிக்குது பாருங்க,அது இருக்குற வரைக்கும் மழை ஊனிப்பெய்யும் சார் என்றார்,இவருக்கு எப்படி இதெல்லாம் தெரிகிறது என்கிற ஆச்சரியத்தில் அவர் சொன்ன திசையில் பார்த்த போது வானத்தில் பார்ட்டர் கட்டி நின்றது போல் நின்றது மேகம்,

அப்படியாய் பார்டர் கட்டி நின்ற இடம் கருமை காட்டி அடர்த்தியாய் இருந் தது.

அவர் சொன்னது உண்மைதான் போலும்,இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மழை நிற்காது எனத்தோணியது.வீட்டிற்கு போன் பண்ணி சொல்லிவிடலாம் என நினைத்தால் வெட்டுகிற மின்னலும்,இடிக்கிற இடியுமாய் போன் பண்ண விடவில்லை.தவிர கரெண்ட் வேறு கட்டாகியிருந்தது,

டீக்கடைக்காரர்தான் பேசினார், இப்போதைக்கு போன் பண்ணமுடியாது நீங்க எங்கேயாவது மழையில நிப்பீங்கன்னு வீட்டுக்காரங்களுக்குத் தெரியும். என் றார். மனசின் பாஷை இவருக்குத்தெரியிமோ,,,?மழையின் பாஷை தெரிந்தது போல,,,,,/

தின்று முடித்து விட்ட ரவாப்பணியாரமும் குடித்து முடித்து விட்ட டீயும் மழைக்கு திருப்தியாய் இருந்தது.

இவன் கொண்டு போய் பஸ்ஸேற்றிவிட்ட குமாஸ்தா இந்நேரம் ஊர் நெருக்கி சென்றிருப்பாரா,அலுவலகத்தைஇந்நேரம்மூடியிருப்பார்களா,,?கல்லூரிசென்ற  மகன் மழைக்கு முந்தி வீடு திரும்பி இருப்பானா,,,?என்ற கேள்விகளை உள்ளட க்கிய மனதினனாய் நின்றிருந்த வேலை நிற்பது போல் வலு இழந்திருந்த மழை திரும்பவுமாய் பெரிய துளிகளாய் பெய்ய ஆரம்பித்திருந்தது,

கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே எதிர்பார்த்திருந்த மழை இப்போது பெய்தது சந்தோஷமாகவே இருந்தது,அந்த சந்தோஷம் தாங்கி மழை நின்று கடையை விட்டு வெளியில் வரும் போது சொன்னார் கடையில் நின்றவர்,

சார் பழைய படிக்கும் பழைய யெடத்துலயே டீக்கடை போடப்போறேன் எப்ப வும் போல வாங்க,ஆதரவு குடுங்க என்று சிரித்தார்/

29 Jan 2017

மிளகாரம்,,,,,,/


மிளகாய் வாங்கினீர்களா காய்கறி வாங்குகிற போது எனக்கேட்ட மனைவியி டம் ஆமாம் எனச்சொன்னால் அது பொய்யாகி விடும்,இல்லை எனச் சொன் னால் அதுவே உண்மையாகிப்போகும்,

உண்மைக்கும் பொய்மைக்குமான இடைவெளியைக் கடப்பது இங்கு சிலருக்கு எளிதாக கைவரப்பெற்றதாய் ஆகிப்போகிறது, அதற்காய் கடல் கடந்தும், ஆகாய மார்க்கமாகவுமாய்,,,,/

சிலருக்கானால் தனது வீட்டின் வாசல் படிவரை கூட அந்த இடைவெளியை கட்டிக்காத்து கொண்டு சென்று விடமுடியவில்லை.

இதில் மிகைக் காரம்கொண்டமிளகாயைவாங்கவில்லை நான் எனச்சொல்லி விடுவது நல்லதும் சாலச்சிறந்ததும் ஆகிவிடுகிறது இந்த நேரத்தில்,,/

ஏன் இவ்வளவு தூரத்திற்காய்,,,மிகைக்காரம் கொண்ட மிளகாயை வேண்டும் என போன் பண்ணிச் சொல்லி விட்டால் அனுப்பி விட மாட்டார்களா கொரி யர் தபாலில் எனக் கேட்ட பொழுது அவள் அழுத்தம் கொண்டு முறைத்த நிமிட ங்கள் இன்னும் மனமெங்கும்உறைகொண்டுநிற்பதாய்,,,,/

அடேயப்பாஅந்தமுறைப்பும் விறைப்பும்,சமயத்தில் பார்க்க சிரிப்பாய் வந்து விடுவதுண்டுதான்,ஆனாலும் சிரிப்பதில்லை இவன்,எதற்கு நமக்கு உயரிய வீண் வம்பு என நினைத்து/

கொரியக்காரர் வருகிற நேரத்தில் முள் பார்த்து வரச்சொல்லவேண்டும் என சொல்லியிருக்கிறான்.

சைக்கிளில் வருகிற அவர் இதுபோலாய் தபால் கொண்டு வருகிற போதுதான் கொரியர்க்காரர் என அறியப்படுகிறார்,மற்ற வேளைகளில் குறிப்பாககாலை வேளைகளில் கோலப்பொடி சுமந்து வருகிற வியாபாரியாக காட்சியளிக்கி றார்.

எத்தனை தெருக்களில் இப்படி காட்சிப்படுவார் எனத்தெரியவில்லை,ஒரு நாளின் அதிகாலையில் வழக்கமில்லாத வழக்கமாக சீக்கிரம் எழுந்து தெரு வோரக்கடையில் தேநீர் அருந்திவிட்டு மறு முறையுமாய் தூங்க மனமில் லாமல் என்ன வாசலில் கோலமிடுகிற மனைவியுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டும் மற்ற மற்றதானசிறு சிறு வேலைகளை செய்து கொண்டுமாய் இருந்த வேளையில்தான் வருகிறார் அவர் கோலப்பொடி வியாபாரி வேடம் பூண்டு/

அப்பொழுதுதான் பார்க்கிறான் அவரை,ஆகா என்ன இது இப்படியாய் ஆகித் தெரிகிறாரே இவர் கொரியர் ஆபீஸில் இருப்பவராயிற்றே என அருகில் வந்த தும் உற்று ப்பார்த்து உறுதி செய்தவனாக வணக்கம் வைக்கிறான் சார் எனக் கூப்பிட்டு/

கையெல்லாம் கோலப்பொடியுடனும் பழைய துருப்பிடித்த சைக்கிளை கைக் குள்ளாக வைத்துக்கொண்டுமாய் இருக்கிற அவரை அந்த வேளையில் யாரும் அந்தத்தெருவில் சார் என அழைக்கவில்லை

ஐயா கோலப்பொடிக்காரரே,அண்ணே கோலப்பொடி அண்ணே,யோவ் கோலப் பொடி யேவாரி,,,,என்கிற அடைமொழிகொண்டும் இன்னும் பலவாறுமாய் அவ ரைஅனைவரும்அழைத்தகணங்களில்சார் என விழித்தது இவன் ஒருவனாகத் தான் இருக்க முடியும் என உறுதிபடக்கூறிவிட முடியும்/

தொள தொள பேண்ட்டும் ஏதோ கலரில் ஒரு சட்டையுமாய் வந்து காட்சிப் படுகிற அவர் இப்படித்தான் தபால்கொண்டு வந்த ஒரு நாளின் மதியப் பொழு தன்று அவரது சைக்கிள் முள் தைத்து சைக்கிளின் முன் டயர் பஞ்சராகி விட அந்நேரம் போய் எங்கு ஒட்டுவது,சைக்கிளை உருட்டிக்கோண்டு போய் கடை தேடிக்கொண்டிருந்தால் ஆக வேண்டிய வேலைகள் முடங்கிப்போகிற ஆபத்து இருக்கிறது,வேண்டாம்,,,,,,ஆகவேஎனநினைத்தவராகபக்கத்துத்தெருக்களுக்கு நடந்தே போய் தபால் கொடுத்துவிட்டு வந்து பிறகு எங்களது வீட்டின் ஓரமாய் நிறுத்தியிருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் பஞ்சர் ஒட்டுக் கொண்டு போனார்.

ஒரு மழை நாளின் மின்னல் முளைத்த பொழுதுகளில் அதே சைக்கிளை அதே கைகொண்டு பிடித்துக்கொண்டவராயும் கால் கொண்டு மிதித்தவராயும் வந்த அவர் தெப்பமாக நனைந்திருந்தார்.

மழையின் வேகம் கொஞ்சம் அதிகமாகவே அவரை தாக்கியிருக்கக்கூடும் என நினைத்தவனாய் சார்,வாங்க வீட்டுக்குள்ள மழை இப்போதைக்கு நிக்கிற மாதிரி தெரியல.இந்த மத்தியான வேளைக்குஎதிர்பாக்காத மழையும் கொஞ் சம் கூடுதலான மழையும்தான் சார்,என்றான் வாய் நிக்க மாட்டாமல்/

ஆமாம் சார் என வீட்டிற்குள் வந்த அவரை சேரை இழுத்துப்போட்டு அமரச் சொன்ன பொழுது இல்லை வேணாம் சார்,நின்று கொள்கிறேன் இப்படியே வாசலின் ஓரமாக எனச்சொன்னவர் தொடர்ச்சியாய் பேசுகிறார்,கையில் மைக் ஏதும் இல்லாமல்,/

சார்நான்இப்ப வீட்டுக்குள்ள வந்தேன்னா ஏங் ஒடம்புலசொட்டுறதண்ணி வீட்ட நனைச்சிப்பூடும்,ஆகவே இப்படியாய் இருந்து விட்டுப் போவதுதான்உசிதம்/ ஆகவே,,,,,,,,எனஅவர்பேச்சின்நெசவை முடிக்கும் முன்பாக இவன் வீட்டிலிந்த துண்டு ஒன்றை எடுத்து நீட்டுகிறான்,

துவட்டிக்கொள்ளுங்கள் தலையை,கூடவேஉடலையும்சேர்த்து உங்களைப் போல உடலுழைப்புக்காரர்கள் உடல் நலத்தின் மீது அக்கறை கொள்ளுங்கள், சுவரும் சித்திரமும் என்கிற சொல் அதி முக்கியம் இங்கு என்கிற எண்ணத் தையும் சொற்பதத்தையும் தாங்கியவராய் இருக்குமாறு வற்புறுத்திய சொல் லை ஏற்றுக்கொண்டவராயும் வீட்டிற்குள் வரத்தயங்கியவராயும்,,,,,,,,/

கை பரிமாறிக்கொண்ட துண்டை வாங்கி தலை ,கை உடலைத் துடைத்தவர் உலர்ந்து போயிருக்கிறதா உடல் என்று உறுதிப்படுத்திக்கொண்டு கொண்டு வந்திருந்த தபாலை எடுத்துக்கொடுக்கிறார்.மிகவும் மென்மையாகவும் சின்ன தாய் பூத்த ஒரு சிரிப்புடனுமாய்,,,/

அவர் கொடுத்த தபாலினுள்ளே பொதிந்திருக்கிற விஷயம் என்னவாக இருக் கும் என அறுதியிட்டும் உறுதிபடவுமாய் கூறிவிட முடியவில்லை.அல்லது என்னவென யூகிக்கக்கூட முடியவில்லை,ஆனால் தபாலைக்கொடுத்தவரின் கையும் மனதும் மிகவும் மென்மைப்பட்டும்,ஒருவித உலர் புலர்வுடனுமாய்/

ஆகா இதுபோதுமே வேறென்ன வேண்டும் இது போலான சக மனிதகர்களி டமிருந்து,,,/,கொண்டு வந்திருக்கிற தபால் கூட இரண்டாம் பட்சமே/

சரி விடுவோம் போதும் இது போலான புகழாரங்களும் வெற்று வார்த்தை களும் அளவிற்கு மீறிய பகழாரங்களும் ஒரு மனிதனை வீழ்த்தி விடுகிற அல்லது புத்தி மழுங்கச்செய்து விடுகிற வலிமையான ஆயுதம் என்கிறார்கள். சரி அந்த சொற்றொடர் மதித்து செல்வோம் இப்போதைக்கு என்கிற மனோ நிலையினாய் அவரிடமிருந்து தபாலை வாங்குகிறான்.

ஏன் இப்படி காலையில் கோலப்பொடி வியாபாரம்,அதன் பின்னான கொரியர் அலுவலகப்பணி என்கிற கேள்விக்கு அவர் அப்படி ஒரு பதிலை தயாராகவும் ஒரு கூடுதல் தகவல் பொதிவுடனுமாய் வைத்திருப்பார் என எதிர்பார்த்திரு க்கவில்லை.

”சார்,இது மட்டுமில்ல ,கைவசம் இன்னும் கொஞ்சம் வேலைக அடைபட்டுக் கெடக்கு,காலையில கோலப்பொடி வித்துட்டு வீட்டுக்குப்போக நேரம் எட்டு மணிக்கிட்ட ஆகிப்போகும்,அப்புறம் அவசர அவசரமா கெளம்பி கொரியர் ஆபீசுக்கு போறதுங்குள்ள ஏங் பாடு பெரும் பாடா ஆகிப்போகும்.

இத மீறி சமயா சமயத்துல கையப்புடிக்கிற காச ஒரு மாதிரியா செஞ்சி அஜஸ் பண்ணிக்கிருவோம்/

அது மொத்தமா சரக்கு விக்கிறவுங்களுக்கும் தெரியாது, வாங்குறவனுக்கும் பாரமா படாது.

இது போக லீவு நாள்கள்ல எனக்குத்தெரிஞ்ச தச்சுவேலைய உயிரக்குடுத்தும் ரொம்ப ஈடுபாடாவும் செய்வேன்,என்னைய,நான் செஞ்சு குடுக்குற சாமான்கள, புடிச்சவுங்க என்னைய நம்பி ஏங்கிட்ட பொருள் செஞ்சி தரச்சொல்லி வருவா ங்க, அவுங்களுக்கு நான் செஞ்சி தருவேன்,அதுல ஒரு ஆத்ம திருப்தி,

வருமானம்ன்னு பாத்தா பெருசா ஒண்ணும் கெடைக்காது,சமயத்துல கையப் புடிக்குங்கூட,இப்பவிக்கிறவெலவாசிக்கிபொருள்வாங்கி குறிப்பிட்ட தொகைக் குள்ள பண்ணிக்குடுக்குறதெல்லாம் முடியாத காரியம் பாத்துக்கங்க,

ஏங்கிட்டவர்றவங்கிட்டசொல்லீருவேன்கறாரா,இவ்வளவுஆகும் இது செஞ்சா, இந்த தரமும் இவ்வளவு உழைப்பும் இருக்கணும்ன்னு எதிர் பார்த்தீங்கன்னா ஏங்கிட்ட செய்யக்குடுங்க,இல்லைன்னா பேசாம நீங்க பிரியப்பட்ட யெடத்துல வாங்கிக்கங்கன்னு சொல்லீருவேன் எனச்சொல்லும் அவர் எல்லார்கிட்டயும் கறார் காம்பிச்சும் பேசீறமுடியாது,சைஸா அப்பிடியே ஓட்டிக்கிருவேன் சார், இதுல வருமானம் வர்ற நேரம் வரும்,போற நேரம் போகும்,இதெல்லாம் தொழில்ல சகஜம்ன்னு அங்கிட்டும் இங்கிட்டுமா ஓடிக் கிட்டிருந்த ஒரு நாள்ல தான் காலையில சுண்ணாம்பு வாங்கீட்டு வரும்போது பாலம் ஏத்தத்துல ஏறப் போனவன் ஒரு பைக்காரான்தட்டிவிட்டு விழுந்துட் டேன்,

”நல்ல வேலையா பெலமா ஒண்ணும் கெடையாது,பாலத்து யெறக்கத்துல வந்தவன் கொஞ்சம் ரிலாக்ஸா வந்துட்டானா இல்ல நான் ஏதோ ஞாபகத்துல நான் சைக்கிள மிதிச்சி வளைச்சிட்டேனா தெரியல,,,,,,

“தெய்வாதீனமா பெரிசா ஒண்ணும் இல்ல, என்ன ஆஸ்பத்திரியில ஒருவாரம் இருக்க வேண்டியதாப்போச்சி,போச்சா ஒரு வாரம் பொழப்புன்னு நெனைச்சிக் கிட்டு ஆஸ்பத்திரியில நான் இருந்த ஒரு வாரமும் என்னைய புள்ளயப்போல பாத்துக்கிட்டாங்க ஏங்கூட கொரியர்ல வேலை பார்த்த பசங்களும், புள்ளைங் களும்,நல்லா இருந்த ஏங் புள்ளைங்க வயசிருக்கும்,இல்ல அதுக்கும் கொறை வாத்தான் இருக்கும்,அதுகளுக்கு,,/,

“சோறு வேணுமா, வெண்ணி வேணுமா,கஞ்சி வேணுமா இன்னும் ஏதாவது உதவி வேணுமான்னு கேட்டுக்கேட்டு செஞ்சாங்க,ஏங் வீட்டம்மா கூடஅவுங்க கிட்டச் சொன்னா,எதுக்கு ஒங்களுக்கு வீண் செரமம்ன்னு,,,,,,

அதுக்கு அந்த பசங்களும் புள்ளைகளும்சொன்னசொல்லுதான் சார் இன்னக்கி வரைக்கும் மனச நெறச்சி நிக்கிற சொல்லா இருக்கு சார்,

”நீங்க சும்மா இருங்கக்கா,ஒங்களுக்கு ஏற்கனவே ஒடம்பு சரியில்லன்னு எங்க எல்லாருக்கும் தெரியும்/இதோட ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் வேகு,வேகு ன்னு அலைஞ்சிங்கின்னா அப்புறம் ஒங்களப்பாத்துக்கிற ஒரு ஆளு தேவைப் படும் நாளைக்கு,

“இதேது எங்க அம்மாவோ அப்பாவோ அண்ணனோ தம்பியோன்னா பாக்க மாட்டமா,,,,,,அப்பிடி நெனைச்சிக்கங்க, எங்களையெல்லாம் ஒங்க வயித்துல பொறக்காத புள்ளைகளா நெனைச்சிக்கங்க சொன்னப்ப ஏங் பொண்டாட்டிக்கும் எனக்கும் கண்ணீரெ வந்துருச்சி சார்,இப்பிடியெல்லாம் செஞ்ச இவுங்க இன் னோண்ணும் பண்ணினப்ப அவுங்க எல்லார் காலயும் தொட்டுக் கும்புடணும் நெனைச்சேன் சத்தியமா,,,,,

“ஆமா சார் நான் ஆஸ்பத்திரியிலஇருந்து டிஸ்சார்ஜ் ஆகுற ஞாயித்துக்கெழம அன்னைக்கி எல்லா பசங்களும் வந்துட்டாங்க ஆஸ்பத்திரிக்கி,அது மட்டு மில்லாமஎனக்கான செலவ பைசா சுத்தமா எனக்கே தெரியாம கட்டீட்டாங்க, எல்லா பசங்களும் ஆளுக்குக்கொஞ்சமா போட்டும் கொரியர் மொதலாளி குடுத்த பணத்த சேத்தும் கட்டீட்டாங்க,அது போக அந்தப்பணத்துல மிச்சமி ருந்த கொஞ்சத்த ஏங் வீட்டுல கொண்டு போயி வீட்டம்மா கையில குடுத்து ட்டு வந்துருக்காங்க,,ஏங்கிட்ட குடுத்தா வாங்க மாட்டேன்னு தெரிஞ்சி,

“எனக்குன்னாஒரே தர்ம சங்கடமா போச்சி ஆஸ்பத்திர்யில இருந்து டிஸ்சார்ஜ் ஆகிப்போறதுக்குள்ள,,,,,,,/

சரி அப்பிடியெல்லாம் செஞ்ச அந்த புள்ளைகளுக்கு நான் ஏதாவது செஞ்சாத் தான் நான் மனுசனா ஆவேன்.

முப்பது புள்ளைக வரைக்கும் இருக்கும் கொரியர் ஆபீஸில வேலபாக்குறவு ங்க,அவுங்க எல்லார் வீட்டுக்கும் அவுங்களுக்குத்தெரியாம போயி அவுங்களப் பெத்த ஆத்தா அப்பன கையெடுத்துக் கும்புட்டு நன்றி சொல்லீட்டு வந்தேன் சார்,

இப்பிடியாப்பட்ட நல்ல கொணம் கொண்ட புள்ளகளைப்பெத்த ஒங்க கால்ல விழுந்தாக்கூட தப்பில்லன்னு,,,,சொன்னப்ப ஒரு பையனோட அம்மா என்ன மோ கொரியர் ஆபீஸீல வேல பாக்குறேன்னுட்டு பசங்களோட சேந்துக்கிட்டு ஊரச் சுத்துக்கிட்டு கெட்டுப் போறானேன்னு நெனைச்சேன்.ஆனா இப்பத்தான் அவன் அருமை எங்களுக்கே புரியுதுன்னாங்க கண்ல தண்ணியோட./

அவுங்ககிட்ட பதிலுக்கு அவுங்கப்பையனப்பத்தி சொல்லக்கூடாதுன்னுதான் நெனைச்சேன்,மனசுகேக்கல,சொல்லீட்டேன்,

”அம்மா ஒங்க புள்ள இதுவரைக்கும் யாருன்னே மொகம் தெரியாத நாலு பேருக்கு ரத்தம் குடுத்துருக்காம்மா,கௌவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு மாசம் மாசம் ரொட்டி பாலுன்னு வாங்கிக் குடுப்பாம்மா,இது போக நாங்க வேலை பாக்குற ஆபீசுல இருக்குற அத்தன பேரு குடும்பத்துலயும் ஏதாவது நல்லது கெட்டதுன்னாலும் எந்த நேரம்ன்னு பாக்காம போயி நிப்பான்னதும் அந்தத் தாயி பொலபொலன்னு அழுதுட்டாங்க சார்.

என்ன இத்தன சனமும் என்னைய ஆஸ்பத்திரியில கெடந்தஎன்னைய பாக்க வந்தப்ப ஏங் கூடபொறந்த அக்கா மட்டும் என்னைய பாக்க வரலேன்னு ஒரு வருத்தம் இருந்துச்சி,

இதுல அவுங்களச்சொல்றதுலயும் குத்தம் இல்லை,ஏன்னா அவுங்க ஒடம்புக்கு முடியாதவுங்க,எந்தநேரம்நல்லாயிருக்கும்அவுங்கஒடம்பு,எந்தநேரம் கெட்டுப் போகுன்னு சொல்ல முடியாது.

ஏற்கனவே அவுங்களுக்கு பிளட் பிரஷர்,இதுல எதுக்குப்போயி அவுங்கள அலைக் கலைச்சிக்கிட்டுன்னு பேசாம இருந்துட்டோம்.

அவுங்களும் மனசு புடிக்க மாட்டாம வீட்ல இருந்து சொல்லி விட்டுக் கிட்டேதான் இருந்தாங்க,நான் வர்ரேன்,நா வர்ரேன்னு,நாங்கதான் வேணாம் இன்னைக்கி டிஸ்சார்ஜ் ஆகிருவோம் நாளைக்கி டிஸ்சார்ஜ் ஆகிருவோம்ன்னு சொல்லி வரவேணாம் வர வேணாம்ன்னு சொல்லீட்டேன்/.

அவுங்களோட பெரிய மகன்னா ஏங்மகளுக்கு உசுரு,அவன் ஒண்ணும் இவள வெறுக்கல,வீட்டுகெல்லாம் வருவான் போவான்,ஏங் மகளோட நல்லா பேசு வான் செய்வான்,

சரி அப்ப அவனுக்கும் ஏங் மகளப்புடிச்சிப்போயிக்குங்குற நம்பிக்கையிலதான் அக்கா கிட்டப்போயி பேசுனேன்,அவுங்க எனக்கு ஒண்ணும் ஆட்சேபனை யில்லப்பா,பையன் ஒரு வார்த்த கேட்டுட்டு ஓன் வீட்டுக்கே கூட்டீட்டு கூட போ,அவன் ஓங் புள்ள மாதிரிடான்னாங்க,

பையண்ட்டகேட்டப்ப நான் ஒண்ணும் அப்பிடி நினைப்போட அவகிட்ட பழகல ன்னு சொல்லீட்டான்,தவுர அவளப்பாக்கும் போது அப்பிடி ஒரு எண்ணம் எனக்குள்ளவரலங்குறான்.இப்பஅதததுக்கானஆட்கமூலமாவும்சொந்தபந்தங்க மூலமாவும் திரும்பத் திரும்ப பேசிக்கிட்டு இருக்கோம்.முடிஞ்சிரும்ன்னு நெனைக்கிறோம்.

பாப்போம், ஏங் தலையெழுத்தும் ஏங் பொண்ணோட தலையெழுத்தும் இதுல எப்பிடி இருக்குன்னு,,,,என்றார்.

உதிர்த்து விட்ட சொல்லும் மனம் நின்ற பாரமும் லேசாய் இறங்கிச்சரிகிற நேரங்களில்எப்பொழுதுதாவதும்சமயங்களில்அடிக்கடியுமாய்வருகிறகொரியர்க் காரரிடம் நீங்களே வாருங்கள் இனி எனசொல்லிவிடவும் முடிந்தால் அவரது கஷ்டங்களை தீர்க்க ஏதாவது செய்யலாம் என எண்ணவும் சொல்லவுமாய் தோணுகிறது.

எண்ணுவதெல்லாம் உயரிய எண்ணமேயானாலும் அவரிடம் எப்படிப்போய் மிளகாயை கொரியரில் கொண்டுவரச்சொல்லி ஆணையிடவும் அன்பாகவும் கேட்டுக்கொள்ளவும் முடியும்,,,,?அப்படிக்கொண்டு வந்தாலும் பேப்பரில் வரைந்து தபாலில் கொண்டு வருவாரோ,,,,,?

3 Jul 2016

பொய்ப்பாடு,,,,,,


தோணி விடுகிறதுதான் அந்த நேரத்திலும் அந்த இடத்திலுமாய்,தோணிய எண்ணத்தின் முளை தேடியும் மூலம் தேடியுமாய் அலைய முடியாது அல்லது அலைவது வேஸ்ட் இல்லை அபத்தம் .அதனால் தோணிய எண்ணத் தை முன் கையாக முந்திக்கொண்டு தவறென சொல்கிற தைரியம் இவனுக் கில்லை.

ஆனால் இவனது பையனுக்கிருந்தது,இளங்கன்று,பயம் அறிவதற்கு ஒன்று மி ல்லை என்ற போதிலும் துணிந்து சொல்ல மனமிருந்தது. மீசையும் ஆசையும் சேர்ந்து வளந்து விட்ட வயது.

பள்ளியின் இறுதி வகுப்பு முடித்து நிற்கிறான். என்ன படிப்பு என்ன மார்க், அடுத்த படிப்பு என்ன என்றால் வானத்தை அண்ணாந்து பார்த்து கற்பனையில் மிதக்காமல் யதார்த்தத்தில் காலூன்றி நிற்பவன்.ரொம்பவும்தான் பிராக்டிக்கல் என்பான் உடன் படிப்பவன்.

ஆனால் அந்தப்பிராக்டிக்கல் நிறைய இடங்களில் உதவுவதோ கொடுப்பதோ இல்லை.என்ன செய்ய அந்த மாதிரியான இடங்களில் அரிதாரம் பூசித்தான் ஆக வேண்டியிருக்கிறது.என்பதுமாய்ச்சொல்வான்/

சரிபூசிக்கொள்இந்தமாதிரியான இடத்தில் அரிதாரம் பூசித்தான் ஆகவேண்டும் இருக்கிறது.என்பதுமாய்ச்சொல்வான்.சரிபூசிக்கொள்இந்தஇடத்தில்இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றால் தவறில்லை.என்பது போலான இவனது பச்சைவிளக்கும்தலையாட்டலும் அவனை அது போலாய் மேலும் கொஞ்சம் இயங்க வைக்கும்.அப்படியாய் அவன் இயங்குகிற வேளைகளில் இவனில் இருக்கிற இயங்கு திசை இயக்கம் மேற்கொண்ட அந்த எண்ணம் சரிதானா என கேள்வி கொள்ள வைக்கும்.

காலையில் எழுந்திரிக்கும் போதே இவனில் சுழியிட்டு விடுகிற அந்தியந்த மனோநிலையும் உடல் அசதியும் இவனில் கை கோர்க்க இன்று அலுவலகத் திற்கு விடுப்புப்போட்டு விடலாம் என்கிற எண்ணத்தை விதைக்கிறது. இது போலான நேரங்களில் வாக்கிங்க் போவது மட்டுமல்ல, பக்கத்திலிருக்கிற வீதிமுக்குக்கடைக்குடீக்குடிக்கப்போவது கூட தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது. அதிகாலையின் நான்கே முக்கால் மணிக்கே டீக்குடிக்க போக வேண்டுமா னால்மெயின் ரோட்டின் முக்கிற்கு போக வேண்டும்,போன மாதத்தின் தூக்கம் வராத ஒரு நாள் அதிகாலையின் நாலே கால் மணிக்கு மெயின் ரோட்டிற்கு டீ சாப்பிட வந்த இடத்தில் ரோட்டில் ரோந்து பணிக்கு நின்றிருந்த போலீஸ்க் காரர் ஒருவர் இவனையும் இவன் சென்ற இரு சக்கர வாகனத்தையும் நிறுத்தி வாயை ஊதிக்காட்டு என்றார்,

“சார் என்ன சார் இது இந்த அதிகாலை நேரத்துல எந்தக்கடை சார் தெறந்து வச்சிருக்கான்,நான் போய் குடிச்சிட்டு வர,என்று கேட்ட போது போலீஸ்க் காரர் சொன்ன பதில் தான் வேடிக்கையாக இருந்தது,நீ ஒரு வேளை நைட் குடிச்சிருந்தையின்னா,இல்லகாலையில் எந்திரிச்ச ஒடனே கொஞ்சம் ஊத்திக் கிட்டுவந்துருந்தையின்னா,,,,,,,,என்றபோதுசிரித்துவிட்டான்இவனையும் அறியாமல்,சார் நான் அப்பிடியெல்லாம் இல்லை,தூக்கக் கலக் கத் துல ஏங் கை பிடிச்சிருந்த வண்டி தள்ளமாடியிருக்கலாம்.அதுக்காக இப்பிடி குடிச்சிருக் கேன்னு சந்தேகப்படுவது சரியில்ல சார் என்ற போது,இவனது வீட்டு முகவரி வேலை பார்க்கிற இடம்,,,,,,எல்லாம் கேட்டுவிட்டு வேலையைச் சொன்ன வுடன் விட்டுவிட்டார்,இத மொதல்லயே சொல்லீருக்கக்கூடாதா என/

டீக்கடைக்காரர்விஷயத்தைகேட்டுவிட்டுவாய் கொள்ள மாட்டாமல் சிரித்தார், அட சண்டாளப்பாவமே, ஒங்களப் பாத்து இப்பிடி ஒரு கேள்வி கேட்டவருக்கு என்னிய மாதிரி ஆட்களப்பாத்து கேக்கணுன்னு ஏந்தோணமாட்டுதுண்ணு தெரியலசார் என்றார்.

நான் வருசமெல்லாம் தண்ணி போட்டுட்டு திரியிற ஆளுதான்.இவ்வளவு ஏன் சமயத்துல அவுங்க முன்னாடியே தண்ணி போட்டுக்கிட்டு வண்டிய ஓட்டிருக் கேன். அப்பவெல்லாம் புடிக்காதவுங்க,இப்ப பாவமேன்னு டீக்குடிக்க வந்த ஒங்களப் போயி,,,,,,எனசொல்லி விட்டு டீயை ஆற்றிக்கொடுத்தார்.

முன்பெல்லாம் 24 மணி நேரமுமாய் திறந்திருந்த டீக்கடைகள் உண்டு,அந்த 24 மணி நேரக்கடை களில் மூன்று சிப்ட்டுக்கு என மாறுகிற மாஸ்டர்களின் கைப்பக் குவத்திற்காகவும் ருசிக்காகவும் டீக்குடிக்க வருகிறவர்கள் நிறைய பேரைக் காணலாம்.

இப்பொழுது 24 மணி நேர டீக்கடைகளையும் காணோம் மாஸ்டர்களையும் காணோம்.

இரவு12மணியோடுசரி.டீக்கடைகளின்திறப்பு,அப்புறம்மறுநாள்தான்.இடையில்  ஊர் எங்கும் தேடினாலும் கிடைக்காது.

என்றாவது விழிப்பது போல அன்றைக்கும் சீக்கிரம் விழித்து விட்டான்.எழுந் தமர்ந்துவிட்ட நான்கு மணிக்கு திரும்பவு மாய் போய் படுத்து விட முடியாது. வேண்டாம் என நேரடியாக பாத்ரூம் போய் முகம் கூடகழுவாமல் குளித்து விடுவான்.வெயில்காலங்களில்அப்படியாய்குளிக்கையில்ஒன்றும்தெரியாது,  குளிர் மாதங்களில்தான் தெரியும் சிரமம்.இருந்தாலும் குளிர் பாராது குளித்து விடுவான்.

இது போலாய் முன்னெழுகிற காலையில் ஒன்றும் பெரிதாய் தெரிவதில்லை சிரமம்.ஊரே உறங்கிக்கொண்டிருக்கிற முக்கால் வாசி விடிந்த இரவு பொழுதில் குளித்து முடித்து விட்டு ப்ரெஸ்ஸாக வருபவன் பெரும்பாலுமாக பல்விளக்கப் போவதற்குமுன்பாக எப் எம் ரோடியோவைப்போட்டுவிடு வான்.

அதிகாலை நான்கு மணிக்கு குளித்த நீரின் குளிர்ச்சி எப் எம்மில் இருந்து வருகிற பாடல்களில் தெரியும்.அத்தனையும் அப்படி ஒரு மெலடி.

வீட்டில் இருக்கிற பென் டிரைவ்களில்ஒன்றில் மெலடி நிரம்பியும் மற்றொன் றில் அது இல்லாமல் எல்லாம் கலந்துமாய்/சின்ன மகள் இதில் கருத்து வித்தியாசம் கொள்வாள்.இதுல நான் கேட்பதும் மெலடிதான் கேளுங்கள் என்பாள்.அவளுக்கானால் இப்பொழுது இருக்கிற வருகிற புதுப்பாடல்களில் சிலவற்றை எந்த அளவிற்கு ரசிக்கிறாளோ அதே அளவிற்கு இடை நிலை காலங்களில் வந்த பாடல்களையும் ரசிப்பாள்.இப்பொழுது அவள் கேட்கும் பாடல்களில் சில இவனுக்கு பிடித்துப் போன லிஸ்டில்/

அது போலவே மனம் பிடித்தும் மெலடி கொண்டுமான பாடல்களின் கை பிடித்தவாறும் அவைகளை மனமேற்றிக் கொண்டுமாய் வாசலில் போய் நிற்பான் பல்துலக்கியவாறே/

இதே வாசலில் எத்தனையோதரம்இப்படியாய்பாடல்களை கேட்டுக் கொண் டோ அது அற்றுமாய் வந்து நின்றிருக்கிறான்.போன இரண்டு நாட்களுக்கு முன்பாக தூக்கம் வராமல் இரவின் இரண்டரை மணிக்கு அரை விழிப்புடன் வெளியில் வந்து நின்று கொண்டிருந்தான்.

அக்கம்பக்கமும் எதிர் சாரி வெற்று வெளியும் தெரு விளக்கின்வெளிச்சத்தில் தூக்கம் பிடித்துத்தெரிய இவன் மட்டுமாய் வாசலில் நின்று கொண்டோ அல்லது அமர்ந்து கொண்டோ,,,/

எதிர்சாரியில் வீடுகள் முளைத்திருந்தஇடம் போக இருந்த வெற்று வெளியில் தரைகீறிநின்றிருந்தசீமைக்கருவேலை மரங்கள் பெரிதாயும் அகலம் விரித்துப் படர்ந்துமாய்/அதனுள்ளாய் பற்றிப்படர்ந்து தெரிகிற பூச்சிகளும் புழுக்களும் எறும்புகளுமாக அதைத்தாண்டிய ஊர்வனவான பாம்புகளும் கீறிப்பிள்ளைக ளுமாய்இந்நேரம் எங்கு போய் திரியுமோ அல்லது அடைந்திருக்குமோ தெரிய வில்லைஎன்கிறஎண்ணத்துடனாய்/

அப்பொழுதாய் அந்த வேளையில் எழுதுகிற படிக்கிற கேட்கிற யாவும் மனதின் அருகாமையாய் ஓடோடி வந்து ஒட்டிக் கொள்கிற உணர்வுடனும் வைபவ முடனுமாய் பட்டுத்தெரியும்.ஆனாலும் கூட இந்த அதிகாலையின் ரம்யத் திற்கு ஈடாகித்டெரிவதில்லைதான்.தரை பட்டுத்தெரிகிற புல் கூட சிலிர்ப்புற்று அழகாகக்காணப்படுவதாய்/

இது போலாய் மென்மை வாய்ந்த பாடல்களையும் அதிலும் குறிப்பிட்ட இசை அமைப்பாளரின் பாடல்களை எப்பொழுதிலிருந்து கேட்க வாய்க்கப்பெற்றது என இவனுக்கு சரியாக ஞாபகமில்லைஎன்கிறபோதும் உத்தேசமாக இன்றிலி ருந்து பத்து வருடங்களுக்கு முன்பாக என வைத்துக்கொள்ளலாம்.

அப்பொழுது வெள்ளூரில் வேலை பார்க்கிறான்.காலை வேளையின் அவசர த்தின் பரபரப்புசுமந்துவந்த வேளைகளிலும், அரக்கப்பரக்க வேர்த்து விறு விறுத்து வந்த பொழுதுகளிலும் கூட அவன் வேலைக்குச்செல்லும் ஊருக்குச் செல்வதற்கென மூன்று பஸ்களை தேர்வு செய்துவைத்திருந்தான். ஒன்று நேரடியாய் வெள்ளூருக்கேச் செல்வது, இன்னொன்று நாராயணவிலாஸ்,இது போக அவசரத்திற்கென ஒரு பஸ் வைத்திருந்தான். அதுதான் அந்த ஊருக்குப் போகிற தீப்பெட்டி ஆபீஸ் பஸ்.

ஆத்திர அவசரத்திற்கென இவனை ஏற்றிக் கொண்டுபோவார்.அந்தவண்டியின் டிரைவர் இவன் வேலை பார்க்கிற அலுவலகத்திற்கு பக்கத்து வீட்டுக்காரர்.

என்றாவது ஒரு நாளின் மாலை வேலையாக இவன் வேலை விட்டு வருகிற நேரமாக அவரைப்பார்க்கலாம்.அப்பொழுது பார்த்து சிரித்துப்பேசிய நட்பு இவனை பஸ்டாப்பில் நிற்கிற வேளையாய் ஏற்றி வருகிற பழக்கத்திற்கு கொண்டு வந்து விட்டு விட்டிருந்தது.

காலையில்முதல்நடைகிராமத்திலிருந்துவேலையாட்களை ஏற்றிக் கொண்டு வருகிற பஸ் திரும்பவுமாய் வெள்ளூர் கடந்து ஐந்தாவது கிலோ மீட்டரில் இருக்கிற ஊர் வரைக்குமாய் தீப்பெட்டி ஆபீஸிற்கு வேண்டியஇடு பொருட் களை சுமந்து கொண்டுசெல்லும்.அந்நேரம்தான் இவன் பஸ்ஸை விட்டு விட்டு நிற்கிற நேரமாயும் பஸ்ஸில் தஞ்சம் கொள்கிற நேரமாயும் இருந்தி ருக்கிறது பெரும்பாலுமாய்/

அந்த பஸ்ஸின் டிரைவர் பெரும் ரசனைக்காரராய் இருப்பார் போலும்,அவரை விட கண்டக்டர் ஒரு படி மேல். இருவருக்கும் வெள்ளூர்ப்போய்ச்சேருகிற வரைக்குமாய் பஸ்ஸில் எந்தப்பாடல்களை ஒலிபரப்பலாம் என்பதில் பெரும் போட்டியே நடக்கும்,கண்டக்டருக்கு இளையராஜா,ஏ.ஆர் ரகுமான் இசைப் பிடித்தம், டிரைவருக்கு பழைய பாடல்கள் என்றால் உயிர்,கண்ணதாசனும் விஸ்வநாதன் இணையும் போது என்பார்,

ஆனால் இவன் என்றாவதான நாட்களில் அந்த பஸ்ஸில் ஏற நேர்கிற போது பெரும்பாலுமாய் இளையராஜா,ஏ ஆர் ரகுமான் இசைதான் ஒலித்திருக்கிறது, டிரைவரிடம் கேட்கும் பொழுது அவர் சொல்வார்,என்ன இப்ப அதனால,நான் கம்பெனிகிட்ட பஸ்ஸ ஓரம் கட்டீட்டு ரெஸ்ட் எடுக்கும் போது கூட பழைய பாட்டுகளகேட்டுக்கிருவேன்,ஆனாஅவன்அப்பிடியில்லை.நான்ரெஸ்ட்எடுக்குற நேரம்தீப்பெட்டிஆபீஸிலஅவனுக்கு ஏதாவது வேலை இருக்கும். அதுனால தான் அவன் இஷ்டத்துக்கு விட்டுர்றது,தவுர பாட்டுக்கேக்குற நேரத்துல 
பாருங்க அவன் மனசுல எவ்வளவுசந்தோஷம்இருக்குன்னு,,,,,ஏதோநிம்மதிப் பட்ட தாக் கூட அவன் உணரலாம். என்பார்.

அது போக நாராயணவிலாஸ் பஸ்,அதில்பயணிக்கிறபயணிகளைவிடவுமாய் அந்த பஸ்ஸில் ஒலிக்கிற பாடல்களால் பஸ்ஸே குலுங்கும்/பஸ்ஸிற்காக பாடல்களா அல்லது பாடல்களுக்காக பஸ்ஸா என்கிற சந்தேகம் வந்து போகும் சமயா சமயங்களில்,,,./

என்ன அந்த பஸ், பக்கத்திலுள்ள ஊருக்குபோய் விட்டு திரும்ப ரிட்டர்ன் வந்து பின் வெள்ளூருக்குப் போகும்.அதில் ஒரு அரைமணி கூட ஆகும்.

கண்டக்டர்கூடச்சொல்லுவார்,ஏன்சார்இதுலபோயிவந்துக்கிட்டு ஒங்களுக்குத் தான் அழகா இந்த பஸ்ஸிக்குபின்னாடியே நேரா போற பஸ்ஸீ இருக்குதே என்பார்.

அதற்கு லேசாகவும் சமயங்களில் பஸ் அதிரவுமாய் சிரிக்கிற இவன் பாடல் களைக் கேட்கத்தான் அந்த பஸ்ஸில் ஏறுகிறான் என்பது கண்கூடு.

“இப்பிடி ஒரு ஆளக்கண்டமா, காசையும் குடுத்து நேரத்தையும் செலவழிச்சி வர்ற ஆள,,, என இவனது முன்னால் பேசா விட்டால் கூட இவனுக்குப்பின் பேசுபவர்கள் அதிகம். ஆனால் அது பற்றியெல்லாம் கவலை கொள்வபவனாக இவன்இல்லை.இவனுக்குத்தேவைபாட்டு,பாட்டு,பாட்டு,பாட்டே,,,,,,,இது பரவா யில்லை, நேரமும் காசும் கொஞ்சம் கூடுதல் அவ்வளவே,

ஆனால் இது போக இன்னொரு பஸ்ஸில் பயணிக்கிற போது வெள்ளூரில் இறங்காமல் சிவகாசியில் போய்இறங்குவான் ,கேட்டால் பஸ்ஸில் ஒலித்த பாடல்கள் என்னை கைகோர்த்து இழுத்து வந்து விட்டது என்பான்,

எப்படியும் ஒழிந்து போங்கள் என தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்கள் இவனை அது விஷயத்தில்,

இவனும் மகனுமாக ஷோ ரூமில் போய் நின்ற போது மணி பதினொன்றை இருக்கும், முதலில் இங்கு வருவதாகவே உத்தேசம் இல்லை இவனுக்கு, மகனுக்கானால் சுத்தமாகப் பிடிக்கவில்லை.வெறென்ன செய்ய இவன் கூப்பிட்டான் என வந்திருந்தான்.

காலையில் பத்து மணிக்குக் கிளம்பி ஆபீஸிற்கு லீவு சொல்லி விட்டு ஆஸ்பத்திரிக்கு போனான்,

இவன் மட்டும் கூடப்போயிருக்கலாம்,ஆனால் எதற்கும் இருக்கட்டும் என மகனையும் உடன் கூட்டி க்கொண்டு போனான், அவன்தான் சொன்னான், என்ன இது ஏன் இப்படி,உடல் நலமில்லை என்றால் பேசாமல் ஆபீஸிற்கு லீவு போட்டு விட்டு படுத்தெந்திருக்க வேண்டியதுதானே,ஏன் இப்படி வீணாக வெயிலில் அலைய வேண்டும்?என, சலிப்பாய் சொல்லியபடியேதான் வந் தான்.

அவன் சொன்னபடி வெயில் இன்னும் குறையவில்லை,அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் உக்கிரம் இன்னும் அப்படியே,,,/

அதற்காக வண்டியில் குடை மாட்டிக்கொண்டெல்லாம் போய் விட முடியாது. டவுனில் இவன்அங்கங்கே பார்த்திருக்கிறான்.வாகனத்தின்சீட்டுக்கு மேலாக ஆள்அமர்கிற அளவிற்கு இடைவெளிவிட்டு சற்றே உயரமாய் தூக்கி வைக்கப் பட்டிருந்தசின்னக்கூடாரம் போலான அமைப்பு பார்ப்பதற்கு நன்றாகவே இருந் தது,அப்படியாய் இவனது வண்டியில் மாட்டிக்கொள்ளவெல்லாம் சம்மதம் இல்லை இவனுக்கு.

ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டுவெளியில் வரும் பொழுதுஇன்றைக்கே ஷோ ரூம் போய் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண் டிருந்த இருசக்கர வாகனத் ந்தை இன்று எடுத்து விடலாம் என முடிவு செய்கிறான்.மகனிடம் கேட்ட பொழுதுசரிஎனச்சொல்லஇருவருமாய்போய் விடுகிறார்கள் இரு சக்கர வாக னம் விற்கிற ஒரு கம்பெனியின் ஷோ ரூம் நோக்கி.

குட்டையாய் குண்டாய் இருந்தவர்தான் இவனை வரவேற்று அமர வைத்து இவன் கொண்டு போயிருந்த பழைய இருசக்கர வாகனத்திற்கான விலை, எடுக்க இருக்கிற புது இரு சக்கர வாகனத்திற்கான விலை.மாதா மாதம் கட்ட வேண்டிய தவணை,,,, என எல்லாம் சொல்லி விட்டு வண்டி ரெடியாக இருக் கிறது சொல்லுங்கள் இப்பொழுதே நீங்கள் டெலிவரி எடுத்துப் போகலாம், ஸ்பேர்ப்பார்ட்ஸ் மாட்ட மட்டும் அரை மணி நேரம் ஆகும் என்றார்.

அவர்சொன்னதும்மணியைப் பார்க்கிறான்,மணிபணிரெண்டைஎட்டித் தொட்டு விடப்போகிறதாய்.

அவரிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு போன் பண்ணிக்கேட்கிறான்,மாலை நல்ல நேரம் எப்பொழுது என,5.30 டூ 6.30 என்கிறாள் மனைவி. ,சரி அந்நேரமே வந்து வண்டியை எடுத்துக்கொள்கிறேன் வண்டியை ரெடி பண்ணி வையுங்கள் என சொல்லிவிட்டு ஷோ ரூம் விட்டுக்கிளம்புகிறான்.

இது வரைக்குமான இவனது 45 வயது வாழ்க்கையில் இவனாக முடிவெடுத்துச் செய்கிற விஷயங்களில் நல்ல நேரம் ,கெட்ட நேரம் எதுவும் பார்த்ததில்லை,

ஏனோ தோணியது இப்பொழுது. கேட்டு விட்டான் வீட்டில்.தோணிய எண்ணம் தவறெனசொல்லவும் முடியாது.அதற்காகதோணிய எண்ணத்தின் முளை தேடியும் மூலம் தேடியுமாய் அலைய முடியாது அல்லது தேடுவதும் அலை வதும் வேஸ்ட் இல்லை அபத்தம்.

அதனால் தோணிய எண்ணத்தை தவறென சொல்கிற தைரியம் இவனுக்கில் லை.

8 Apr 2016

ஒத்தப்பனை,,,,,

சரீரம் பருத்த பாட்டியின் அன்றாடங்கள் எதுவாக இருக்கிறது இதுவரை?நான் அவளருகே சென்று கவனித்ததில்லை.அப்படியெல்லாம் கவனிக்க முடியாத அளவிற்குஅவளதுவீடு தூரம் தொலைவு என்றெல்லாம் கிடையாது. அதற்காக அவளுக்குஅருகில்போயோஅவளை வட்டமிட்டுக் கொண்டோஇருக்கஎன்கிற இலக்கணத்திற்கு உட்பட்டெல்லாம் இல்லை நானும்/

வழக்கமான தோல்தடித்துப்போன மிடில்கிளாஸ் தனங்களில் பக்கத்து வீட்டுக் காரரிடம்பேசுவது கூட அரிதாகிப்போகிறது.அப்படி இருக்கும் போது எப்படி,,,,,,? எங்களது தெருவின் இடது பக்கத்திருப்பத்தில் இருக்கிற வீடு.சுந்தரம் ,,,,,,,வீடு என்றுதான் அந்தப்பாட்டியின் வீடு அவரது கணவரின் பெயருடன் சேர்த்து அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.ரேஷன் கார்டிலும் வாக்காளர் அடையாள அட்டையிலும்அப்படியேதான்.

அவரதுவாலிபவயதிலும்சரி,உடலில் உழைப்பின் சக்தி உள்ள வரைக்கும் சரி.ரயில்வே குட்செட்டில் வேலை பார்த்தவராம்.லோடு மேன்களில் அவர் ஒரு ஸ்பெசலிஸ்டாகவே/

நூறு கிலோ மூட்டயை கழுத்து நரம்பு புடைக்க ஒற்றை ஆளாக தலையில் தூக்கிப்போகிற அளவிற்கு பலம் வாய்ந்தவராய்/சைக்கிளில் அவர் அடிக்கும் லோடுகளுக்குகணக்குக்கிடையாது.எதுஎதற்கோவிருதுவழங்கும் அரசாங்கம் அவரையும் அவர் போலான பிறரையும் கௌரவித்து பட்டம் ஏதேனும் வழங் கியிருக்கலாமே,,?பட்டங்களும்கௌரவங்களும்உயர்பதவிகளில்உள்ளவர்களு க்கும் அரசு பணி புரிபவர்களுக்கு மட்டும்தானா,,?இது போல் கீழ்த்தட்டில் வேலை செய்பவர்களை கண்டறிந்து இந்த அமைப்பு எப்பொழுது முன் வரும் எனத் தெரியவில்லை.

பின்அவர்விஷயத்தில்மட்டும் முளைத்தெழுந்தாவரும் அந்த மனப்பான்மை? தாத்தா பற்றி பாட்டி இவ்வாறெல்லாம் தொகுத்துச் சொல்லக் கேள்விப்பட்டி ருக்கிறேன்.

அவளுக்கு இருக்கிறபெரும்பிரச்சனையும் கவலையும் அவர்களது வீடு தெரு முனையில் இருக்கிறதே என்பதே/எந்த எடுபட்ட பயலாவது என்றாவது ஒரு நாள் இடித்துவிட்டால்,,,,,வீடு என்னத்துக்கு ஆக/ என்பது அவளின் கனமான வாதம்/வீடு திருப்பத்தில் இருப்பதால் தெருவிற்கு வரும் டூ வீலரிலிருந்து தண்ணீர்ட்ராக்டர்வரைஎங்களதுசுவரைஇடிக்கிறதுபோல்வந்துதிரும்புகிறது.

அவளது வாதத்தை சப்தமிட்டு சாட்சிக்கூண்டில் நின்று சொல்லாவிட்டாலும் கூட அங்கு வந்து போகிற அக்கம் பக்கத்தவர்களிடமெல்லாம் சொல்லித் தீர்த்தாள்.

நாங்கள் வீடு கட்டு போது எங்களது நிலத்தில்தானே ரோட்டுக்கு இடம் ஒதுக் கினோம்,ஆகவே இதுஎங்களதுஇடம்.இந்தரோட்டில்யாரும் போக வர உரிமை கிடையாது,நான் முள்ளை வைத்து அடைக்கப்போகிறேன் ரோட்டை என்றாள். முடிந்தால் அடைத்துக் கொள்ளுங்கள் என்று புதிதாக குடிவந்த கடைசி வீட்டுகாரிக்கும்அவளுக்குஒருநாள்சண்டையே வந்து விட்டது. கடைசி வீட்டுக் காரியிடம்அவள் போட்ட சண்டைதான் கடைசியிலும் கடைசியாக/ அதற்கப்புறம் அந்தத்தெருவிற்கு யாரும் புதிதாகவோ வாடைகைக்கோ குடி வந்துவிடவில்லை.ஆமாம் இந்தத் தெருவில்வீடுகட்டிகுடிவந்துவிட்டாலும்,,,, என்று தான் பேசிக்கொண்டார்கள் அந்தத்தெருவிலுய்ள்ள காலி மனைகளைப் பார்த்துச் சென்றவர்கள்.

பஞ்சாயத்து விதிமுறைப்படி முறையாக கட்டப்பட்டமைக்கப்பட்ட தெருவோ ரோடோ அல்ல அது.வீடு கட்டியவர்கள் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு வீட்டின் முன் விட்ட ரோட்டடிஇடமேஇப்போதுதெருவாய் உருவெடுத்து/ சீமைக்கரு வேலை முட்ச்செடிகளும்,பார்த்தீனியம் செடிகளுமாக காலி இடங்களை ஆக்க ரமித்து ஓங்கி வளர்ந்து செழிப்புடன் நிற்க அவற்றினூடாக தேங்கி நின்ற மழை நீரில்பன்றிகள்தாராளமாகஉழப்பித்திரிந்தன.

அவற்றின்உறைவிடமாகவும்உணவிடமாகவும்ஆகிப்போனஇடத்தில்முட்டை
யிட்டுகுஞ்சுபொரித்தகொசுக்கள்சைக்ளோத்திரின்காயல்களையும்திரவமருந்து க்களையெல்லாம் மீறி பச்சைப் பெயிண்ட் மஞ்சள் பெயிண்ட் வீடுகளுக்குள் படையெடுத்தன.இம்மாதிரியான தெருவின் ரோட்டிற்குத்தான் இப்படியாய் கச்சைக்கட்டிக்கொண்டு நிற்கிறாள் பாட்டி.

அவளும் லேசுப்பட்ட பாட்டியில்லை என்றுதான் இந்த வட்டாரத்திலும் தெரு விலும்பெயர் /

இன்றுகாலையில்கூட வார்டு மெம்பரிடம் சப்தம் போட்டுக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் பள்ளிக்குப்போக அவரவர்களின் வேலை அவசரம் என தெருவி லிருக்கிற வீட்டுக்காரர்கள் அனைவரும் தண்ணீர் பிடித்தது போக ஆறோ அல்லது ஏழோ குடம்தான் வருகிறது இந்த வயசான கட்டைப்பிடிக்க நான் என்ன செய்யட்டும் நீயே சொல்லு என அவரை பாடாய்ப் படுத்தி எடுத்து விட்டாள்.

அதற்கடுத்துவரும்நாட்களில் அவர் எங்களது தெருபக்கம் தலை வைத்து படுப் பதுகூடசிரமம்என்றேதான்தோன்றுகிறது.அப்படியானசிரமத்தைஎதிர்கொள்ளப் பிடிக்காமலும் அவளின் வாய் வார்த்தையை தாங்காமலும் அவளிடம் யாரும் நெருங்குவதோதொடர்பு வைத்துக்கொள்வதோ கிடையாது.

அந்தஅளவிற்கான எரிச்சலும் கோபமுமே அவள் சிக்கன் குனியா காய்ச்சலில் படுத்தபோதுஅந்த தெரு வாசிகள் அவரையும்அவளதுஅருகில்அண்டவிடவில் லை. என்னைத் தவிர/

டாக்டரிடம் போய் வருவதிலிருந்து சாப்பாட்டிற்கு வரை அவள் பட்ட சிரமங் கள் சொல்லி மாளாது/ஒத்தாசைக்கு தாத்தா இருந்தாலும் அவர் தாத்தாதானே?

அவரவர் அவரவரின் பிழைப்பின் முக்கியத்துவம் கருதி ஓடிக்கொண்டிருக் கையில் இந்த சண்டைக்காரப்பாட்டியின் பின்னால்யார் அலைவது? தெருவா சிகள்பாட்டியைமுன்னால்விட்டுபின்னால்பேசுவதுநிறையவே,,,/அந்தப்பேச்சுத் தப்பித்தவறி அவள் காதில் விழுந்து விட்டாலோ அல்லது கேள்விப் பட்டு விட்டாலோ பேசியவர்கள் மன்னிப்புக்கேட்கும் வரை விடமாட்டாள்.

என்னதான்பெரியதாகசண்டைபோட்டாலும் கூட மறு நாளே போய் விடுவாள் அவர்களது வீட்டிற்கு/.

என்ன தங்கச்சி என்ன செய்யிற என ஆரம்பித்து அது என்னவோ போ என்ன செய்ய,,,எனமுடிப்பாள்.காலைநீட்டிஅமர்ந்திருந்தவள்படியிலிருந்து எழுந்தவா றே திரும்பவும் ஒரு கால் மணி நேரமாவது பேசுவாள்.அன்றும் அப்படித்தான் கிழிந்து போன ரேஷன் கார்டின் கடைசிப்பக்கத்தையும் கார்டையும் தனித் தனியாககையில்ப்பிடித்துக்கொண்டுவந்திருந்தாள்.இப்பிடிசெஞ்சுதொலைச்சா எப்பிடி,,?இப்பிடிதனித்தனிதாளாக்குடுத்தாஎன்னயமாதிரிஆட்கதொலைச்சிட்டு நிக்கவா,.நீதான இத கோளாறா ஒட்டிக்குடு,தரையில் ரேஷன் கார்டை போட்டு விட்டு கால் நீட்டி அமர்ந்து விட்டாள்.

எனக்குக்கூட எரிச்சல்தான் ,உதவி கேட்டு வருபவள் இப்படியா முகத்தில் அடித்தாற்போல்நடந்துகொள்வது,,?

மனைவியைஏறிட்டேன்.பலஅர்த்தங்களைசொன்ன பார்வையுடன் பார்த்தவள் ரூமிற்குள் சென்று பசைப்பாக்கெட்டைஎடுத்துவந்தாள்/

நீட்டிஅமர்ந்திருந்த கால்களின் தடிமனும் உடலின் பருமனும் களைத்துத் தெரி ந்தசுருக்கங்கள்அற்ற உருண்டை முகத்தில் வழிந்தஎண்ணெய்மின்னதண்ணீர் கேட்டாள்.

பாட்டியின்உடன்பிறந்தவர்கள்பத்துப்பேராம்.எல்லோருமேஅவரவர்கள்பிழைப் பிற்குள்ளாய்அடங்கிப்போனவாழ்நாள்சூழலில்/உள்ளூரிலேயேஇருக்கிறதம்பி
யும் தங்கையும் அவரகளது பிள்ளைகளும் தோதுப்படுகிற போது வந்து எட்டிப் பார்த்துசாப்பாடுதின்பண்டம்கைச்செலவிற்குஎனஏதாவது க்கொடுத்து விட்டுப் போவார்கள். மற்றவர்கள் தூரங்தொலைவில் இருப்பதால் வெறும் விசாரிப்பு மட்டுமே ,,,/

எங்களையார்கவனிக்கிறார்களோஅவர்களுக்குத்தான்எங்கள்சொத்துஎல்லாம் எனவும் ஒடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் இப்பிடியே அல்லாடிக்கிற வேண்டியதுதான். எனவும் சொல்வாள்/

சமயங்களில்முதியோர் இல்லங்க ளைப்பற்றி அக்கறை எடுத்து விசாரிப்பாள். ஆனால் தாத்தாவின் எண்ணம் இந்த விசயத்தில் வேறு மாதிரியாக இருந்தது.

தாத்தாவுக்கும் பாட்டிக்கும்எதுஎன்றாலும்ஏழாம்பொருத்தமாகவே/ தாத்தாவை விட பாட்டிக்கு பத்து வயது குறைவு.

தாத்தா வீட்டிற்கு வெளியே பிளாஸ்டிக் சேர்ப் போட்டு அமர்ந்து விடுவார். உழைப்பின் தடங்கள் இன்னும் உருண்டு திரண்டு மிச்சமாய் தெரியும் உடம் பில் ஒரு துண்டும் நாலு முழ வேஷ்டியும் மட்டுமேயான காஸ்டியூமுடனும் வெற்றிலைபோட்டு சிவந்த வாயுடன்/

நீர்க்கட்டுக்காலுடன்அவர்எப்படியாவதுதாங்கித்தாங்கிநடந்துசென்றுவெற்றிலை யை மட்டுமாவது வாங்கி வந்து விடுவார்.பாட்டி கூட சப்தம் போடுவாள் தாத்தாவை.

கடை கடையா வெத்தல வாங்க அலையுற நேரத்துலவீட்டுக்குத்தேவையான காயி,கீயி ஏதாவது வாங்கீட்டு வரலாம்ல என்பாள்.பாட்டியின் அந்தப் பேச்சுக் கெல்லாம் தாத்தா ஒன்றுமேசொல்வதில்லைஎப்போதும்.

ஆனால் அப்படி தெருப்பக்கம் அடிக்கடிஎன போய் வரும்நேரங்களில் வேஷ்டி யிலேயே மலம்கழித்துவிடுவதும் உடல்நடுக்கத்தால்எங்காவதுகடை ஓரம் திண்ணை ஓரம் என உட்கார்ந்து விடுவதும் சமயா சமயங்களில் சாய்ந்து கீழே சாய்ந்து விடுவதுமாய்தான்அவரதுபெரும்பாலான தினங்கள் கழிந்தன.

இதையெல்லாம் பார்த்தவர்கள் சொல்லக்கேட்டும்,கேள்விப்பட்டுமே தாத்தா வை இப்படியெல்லாமுமாய் சப்தம் போடுகிறாள் பாட்டி/

ஒருநாள்இரவுஹோட்டலிலிருந்துபார்சல்வாங்கிவரும்போதுஅவரது வீட்டின் படியோரம்விழுந்துகிடந்ததைப்பார்த்தேன்.நினைவுஇருந்தது.அவரைத்தூக்கி அமரவைத்து தண்ணீர் கொடுத்து நெஞ்சை நீவி விட்டதும்தான் நிலைக்கு வந்தார் மனிதர்.

பாட்டிகடைக்குப் போயிருக்கிறாள் எனச்சொன்ன அவர்சிறிதுமௌனத்துக்குப் பின் கையில் என்ன புரோட்டா பார்சலா,சால்னா வாடை இங்க அடிக்குது என்றார்.

ஒரு பொட்டலத்தை எடுத்து அவர் கையில் கொடுத்த போது அதெல்லாம் ஒரு காலம் பகல் ராத்திரின்னு அதுவும் கணக்குக்கிடையாது.ஆடு கோழின்னு எல்லாம் சாப்டுட்டு அளவில்லாம வேலை செஞ்சிக்கிட்டு திரிஞ்ச நான் இப்ப பச்சதண்ணியபல்லுலஊத்துறதுக்குக்கூட்டயோசிக்கவேண்டியதிருக்கு என்றார்.

அவரின்பேச்சிலிருந்தஏக்கத்தையும்சோகத்தையும்உணரதனிமனம்வேண்டும். அங்கிட்டுஇங்கிட்டுதூரந்தொலைவுல இருக்குற கூடப்பொறந்தவுங்க ரெண்டு பேரும் இங்க வந்துருங்க,இங்க வந்துருங்கன்றாங்க.மதுரையில இருக்குற தம்பி வீட்லதான் கக்கூசு சகிதம் இருக்கு.ஆனா பாட்டிக்கு அங்க போக மனசு ஒப்பல.தனியாளா இருந்தாலும் இங்க இருக்குற சௌகரியம் அங்க வருமாங் குறா,என்னஇருந்தாலும் இன்னோர்த்தங்க வீட்ல போயி பொட்டிப்பாம்பா எப்டி இருக்க?அப்டீங்குறா என்ன செய்ய சொல்லு,,?

பேச்சற்றுக்கிடந்த சிறிது நேர இடைவெளிக்குப்பின் அவரேதான் தொடர்ந்தார். சீக்கிரமாகொண்டு போ வீட்ல புள்ளைங்கஆசையா காத்துக்கிட்டுக் கெடக்கும். எங்களுக்குத்தான்இப்பிடிஒருகுடுப்பினைஇல்லாமப்போச்சி.சொல்லும்போதே குரல் தழுதழுத்து அழுதவாறே உட்கார்ந்து விட்டார் தாத்தா.

பக்கத்திலேயே அவரது கண்ணீரை துடைத்தவளாய் பாட்டியும்/

பிள்ளைகளற்றஅந்தஅனாதைமுதியவர்களைபார்க்கும்போதும்கடக்கும்போதும் அவர்களின்அன்றாடங்கள்சோகம்கப்பியநினைவுகளுடன்நகர்வதாகவேபதிவா கிறது என்னுள்/

 (காக்காச்சோறு தொகுப்பிலிருந்து,,,,,,,,,,,,,,,,,,)


இந்தக்கதையின் நாயகர் மறைந்த நாள் இன்று,அவரது நினைவாக,,,,,,/

12 Mar 2016

மாவுக்கல்லும் தூசியும்,,,/



உடைத்தெறியபட்ட கற்கள் சதுரங்களாயும்,செவ்வகங்களாயும் முக்கோண வடிவிலும் அருங்கோணமாயுமாய் இன்னமும் இன்னமுமான வடிவம் காட்டியுமாய் காட்சி தருகிறது.கூடவேகொஞ்சம் சிமெண்ட் மற்றும் செங்கல் காரையும் தூசியுடனுமாய்/

ஏதாவதுஒரு வீட்டின் தரைத்தளம்,மற்றும் அடுப்படி மேடை சிங்க தொட்டியை உடைத்தெடுத்திருக்கவேண்டும்.நல்லதல்லாததைஉடைத்துவிட்டு நல்லதை  வைத்திருக்க நடந்த முன்னேற்பாடா அல்லது அதை விட சிறந்ததாக வேறேதும் வைப்பதற்காக இதைப்பெயர்த்தெடுக்கிறார்களா தெரிய வில்லை.

இடிக்கப்பட்ட வேகம்,இடித்தவரின் கை,அவர்களதுஉழைப்பின் உறுதி எல்லாம் குவிக்கப்பட்ட மண் குவியலில் தெரிந்தது.

இவனது பக்கத்து வீட்டுக்காரர் மாரிச்சாமி புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக் கும் பொழுது தரைக்கு மார்பிள்தான் பதிக்க வேண்டும் என நிலையாக நின்று விட்டார்.

எழுநூறு சதுர அடி வீடு கட்ட வேண்டியது,அவரது சேமிப்பு,பேங்கில் வாங்கிய லோன்,மனைவியின்நகையை அடகுவைத்தது என எல்லாம் தொகையையும் ஒன்று சேர்த்து அவர் கடன் வாங்கிய பேங்கிலேயே அவரது கணக்கில் போட்டு வைத்து விட்டார்.

இவனிடம் கேட்டார்,என்ன சார் வீடு கட்டும் போது நீங்கள் கூலி காண்ட்ராக்ட் விட்டீர்களா இல்லை மொத்தக்காண்ட்ராக்டா,இல்லை அத்தைக் கூலி வேலை யா,,,,,,,,,,என,,/எல்லாம்கேட்டுவிட்டுகடைசியாகஒருஎஞ்சினியரிடம் ஒப்படைத்து விட்டார் வேலையை/

பத்து நாட்களாக கேட்காதவர்களிடமெல்லாம் கேட்டு, விசாரிக்காதவர்களிட மெல்லாம்விசாரித்து அந்த எஞ்ஜினியரைபிடித்தார், இடத்தையும், வீடு கட்டு வதற்கான பணத்தையும் இஞ்ஜினியரிடம் கொடுத்து விடுவது வீட்டின் சாவியை வாங்கிக் கொள்வது என்கிறது போலானஒப்பந்தம்.

ஒப்பந்தம் எழுதிய நாளில் இஞ்ஜினியர் இடத்தைப் பார்த்து விட்டு அரை மணி நேரம் பேசினார்.அதிலும் இவரது பக்கத்து வீட்டுக்காரர் மாரிச்சாமி பார்க்க கொஞ்சம் அப்பாவியாக இருந்ததில் இஞ்ஜினியருக்கு சௌகரியமாகப் போய் விட்டது.இன்னும்சொல்லப்போனால் பேச்சில் கொஞ்சம் எள்ளல் பேசும் அளவு கூட போய் விட்டது.பேச்சிலேயே கொஞ்சம் வீடு கட்டினார்.அவர் வீடு கட்டுவது வீட்டுக்காரர் மாரிச்சாமிக்கு தெரிந்திருந்தாலும் கூட அவர் ஒன்றும் தெரியாது போல் இஞ்ஜினியர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டார், அவருக்குஇப்போதைக்குஎடுத்திருக்கிறவேலைநல்லபடியாகமுடியவேண்டும்.  என்கிற எண்ணம் தவிர வேறொன்றுமில்லை.

கட்டைஊனிபூஜை போட்டு வீட்டு வேலை ஆரம்பித்த நாளிலிருந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்த வீடு முக்கால் வாசி முடிந்து வீட்டின் உள் பூச்சும் தரை தளமும்தான் பாக்கி என்பதாய் இருந்த வேளையில் வீட்டுக்காரர்பிடிவாதமாக தரையில்மார்பிள்தான்பதிக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டார்.இஞ்ஜினியர் அதெல்லாம் சரிதான் பட்ஜெட் கொஞ்சம் கூடுமே என்றார்.பட்ஜெட் கூடுமா,சரி யோசிப்போம் என பதினைந்து நாட்க ளுக்குவேலையைநிறுத்த ச்சொல்லிவிட்டார்.மாரிச்சாமி.

இஞ்ஜினியரும் சரி பரவாயில்லை, உங்களது மனதே என்னுடைய திருப்தி என நிறுத்தி விட்டார்.பதினைந்து நாட்களுக்கு அப்புறமாய் இல்லை சார், வேண்டாம் மார்பிள் சாதாரண சிமிண்ட தளமே போதும் எனச்சொல்லி விட் டார் மாரிச்சாமி.

இஞ்ஜினியர் கூடசொன்னார்,இல்லை சார்இப்போதைக்கு கையில் இருப்ப தைக் கொடுங்கள்,நான் இன்னொரு இடத்திற்காய் வாங்கி வைத்திருக்கிற மார்பிள் கைவசம் இருக்கிறது,அதை உங்களது வீட்டிற்கு பதித்து விடுகிறேன். எனக்கு ஒரு ஆறு மாத காலத்திற்குள்ளாக நிதானம் காட்டிக்கொடுங்கள் பணம் அது போதும் என்றார்

நான் ஆரம்பித்து வைத்திருக்கிற இன்னொரு வேலை முடிய ஆறு மாதமோ அல்லது அதற்கு மேலாகவோ கூட ஆகிப்போகலாம்,உங்கள் சம்மதம் எப்படி எனச் சொல்லுங்கள் என்றார்.

மாரிச்சாமிக்கானால் அரை மனதாய் சம்மதம் ,ஒருபக்கம் மார்பிள் பதித்து தரை மிளிர வேண்டும் என ஆசை ,ஒரு பக்கம் கடன் கூடி நிம்மதி போய் விடும் என்கிறதான நினைவு/

வீட்டில் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் மார்பிள் பதித்து விட வேண்டும் என்பதுதான்ஆசை.பிள்ளைகள்வெளிப்படையாகச்சொல்லிவிட்டார்கள்.மனைவி மனதிற்குள்ளாகமருகிக்கொண்டிருந்தாள்.வீட்டுக்காரருக்கானால்அரை மனது சம்மதமானபோதிலும்கூடகொஞ்சம்தயங்கினார்.வீடுகட்டுவதற்காய்வாங்கிய நிலத்திற்கு கொடுக்க வேண்டிய கடன் இன்னும் பாக்கி இருக்கிறது. ரொம்பவும்இல்லை.இன்னும் பத்தாயிரம் வரைதான் பாக்கி இருக்கிறது. அதற் கே அவர் கோர்ட்டுக்குப்போகிறேன்எனநிற்கிறார்.வீ.ஏ.ஓ தான் பேசித் தலை யிட்டு அவரைக் கொஞ்சம் சமாதானப்படுத்தி வைத்திருக்கிறார்.

வீ ஏ ஓ தான் இந்த நிலத்தை வாங்கிக்கொடுத்தார்.குழி ரூபாய் 2500 என. மொத்தம் 25 குழி,அவ்வளவு நிலம் தேவைஇல்லைதான் வீடு கட்ட/,இருந்த போதும் மொத்தமாக வருகிறதென வாங்கிப் போட்டார்.

வெறும் சீமைக்கருவேலைமுள்மரமாய் அடர்ந்து கிடந்த நிலத்தில் காலடி எடுத்து வைத்து அளந்து கல் போட்டு பத்திரம் பதிந்த அன்று பாதி ரூபாயை ரொக்கமாகக்கொடுத்தார்.மீதிப்பணத்தை பி எப் லோன் போட்டு ஒரு மாதத்திற் குள்ளாகதருவதாகசொல்லியிருந்தான்.வீ ஏ ஓ அதற்கு ஏற்றுக் கொண்டார். ஆனால் மாரிச்சாமி வேலை பார்த்த தனியார் நிறுவனம் மூலமாக எழுதிப் போன பி எப் லோன் வரவில்லை.என்ன செய்ய என கைபிசைந்து நின்ற வேளைவீ.ஏ.ஓ போன்பண்ணி நிலத்துக்காரர் போலீஸ் ஸ்டேசன் போகப் போகிறேன்என்கிறார்,என்றார்.அதற்குமாரிச்சாமி பி.எப்லோன் போட்டிருக்கிற விபரத்தையும் அது இரண்டொரு நாளில் வந்து விடும் எனச்சொன்னபோது வி ஏ ஓ அரை மனதுடன் அதை ஏற்றுகொண்டார்.

மாரிச்சாமி வீ ஏ ஓ விடம் சொன்ன நாளைக்கு முன்னதாகவே பணம் வந்து விட வீ ஏ ஓவிடம் கொடுத்து விட்டு வந்தான் பத்தாயிரத்தைக் குறைத்துக் கொண்டு,அந்தப்பத்தாயிரத்தை வீ ஏ ஓ கையிலிருந்துபோட்டு நிலத்துக்காரரி டம்கொடுத்திருக்கிறார் என்பது பின்னாளில் அவரது பேச்சிலிருந்து தெரிந்தது. உனக்குக்கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் கொடுக்கவில்லை, உனது குணம், பிடித்துப்போன உனது நடத்தை உனது இருப்பு ,,,,,,,எல்லாம் என்னை ஈர்த்து விட மனம் பிடித்துப் போய் உனக்காக பணம் கொடுத்தி ருக்கிறேன், மற்றபடி வேறொன்றுமில்லை என்றார் வீ ஏ ஓ.

அவரது பணத்தையும் கொடுக்க வேண்டும்.இதில் தரைக்கு மார்பிள் வேறு போட்டு விட்டால் அந்தக்கடனும் தனியாக ஏறிவிடும்.கடன் ஏறி நிம்மதி போய் அலைவதற்கு பேசாமல் தரைக்கு மார்பிள் போடும் யோசனையை கை விட்டு விடலாம்.பின்னாடி வசதி வருகிற நாட்களில் பார்த்துக் கொள்ளலாம் என தரைக்கு மார்பிள் பதிக்காமல் விட்டு விட்டார்.ஆனால் அடுப்படி மேடைக்கு மட்டுமாய் விடாப்பிடியாக எஞினியர் கடப்பக்கல் மேடையும் சிங்கும் அமைத்துக்கொடுத்தார்.பணம் பின்னாளில் வருடங்கள் கழித்துக்கூட வாங்கிக் கொள்கிறேன் என்றார்.பின் ஒரு வருடத்திற்குள்ளாக எஞ்ஜினியரி டம் பட்ட கடனையும் வீ.ஏ.ஓவிற்கு தரவேண்டிய பணத்தையும் கொடுத்து முடித்து விட்டார்,இதைஅவரைப் பார்க்கிற நாட்களிலெ  ல்லாம் தவறாமல் சொல்லுவார். மாரிச்சாமி/

நேரமாகிப்போகிறது பஸ்ஸிற்கு என பின்னால் அமர்ந்திருக்கிற மகனிடம் முன்அனுமதி வாங்கிக் கொண்டும், நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஆக்ஸி லேட்டரை முறுக்கிக்கொண்டு வந்ததற்கு இப்படி காத்திருக்கிற பலன்தான் கிடைத்தது.பஸ்வர இன்னும் ஐந்து நிமிடத்திலிருந்து ,பத்து நிமிடங்கள் வரை ஆகலாம்.செல்போனில் மணி பார்த்த போது செல் சொன்னது.

பாலத்திலிருந்து இறங்கிவருகிற பஸ்களும் வேன்களும் இன்ன பிற வாகன ங்களும் சாலையின் இடது புறமும்,பாலத்தில் ஏறுகிற வாகனங்கள் வலது புறமாயும் அணிவகுத்து வருகிறதாய்ப் படுகிறது, வருகிறபோகிற வாகனங்க ளில் பத்தில் இரண்டு அல்லது மூன்றாவது பள்ளிக் கல்லூரி வாகனங்களாய் இருந்தது.

இதைப்பார்த்தவாறு இவர்கள் காத்து நின்ற தருணங்களில் முதலாவதாய் ராமேஸ்வரம் பஸ்ஸீம் ,இரண்டாவதாய் ப்ரதீப்பும் ,பின் மூன்றாவதாய் அல்லது நான்காவதாய் இவனது பையன் செல்ல வேண்டிய பஸ் வரும். அதற்குள்ளாக கலந்து கட்டி பள்ளிக்கல்லூரி வேன்களும் பஸ்களும் வந்து விடும்.இன்று என்னவோ தாமதம் காட்டுகிறது.

நிற்கிற இடத்தின் மேலாக பரந்து விரிந்த குடையாய் காட்சி தருகிற மரம் பூப்பூத்திருந்தது. தூங்கு மூஞ்சி மரம் என நினைக்கிறான்.அது என்ன மரம் என யாரிடமாவது கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைப் பதுண்டு சமயங்களில்/ நினைத்த கணத்திலிருந்து சிறிது நேரம் வரைக்குமாய் நிலை கொண்டிருக்கிற நினைவு பின் பறந்து போகிறதாயும்,காற்றில் கரைந்து விடுகிறதாயும்/

இன்று போல் பஸ்ஸிற்காய் காத்து நிற்கிற நேரத்திலும் அது தான் தோன்று கிறது.தற்செயலாய் மரத்தை அண்ணாந்து பார்த்த போது மஞ்சளும் ,வெள்ளை யும் ,இளம் பச்சையுமாய் பூத்திருந்த பூக்களிலிருந்து ஒன்று திறந்திருந்த இவனது வாய் மீதாக விழுந்தது.

இது போலாய் பலரது வாய் மேலும், உடல் மீதுமாக விழுந்த பூக்களைச் சுமந்த மரங்கள் பாலத்திலிருந்துஇறங்கிச் சரிகிறசாலையின் இரு மருங்கிலு மாய் காணக்கிடைக்கவில்லை.

ரோட்டை அகலப்படுத்துவதற்காக சாலையின் இரு மருங்கிலுமாய் இருந்த மரங்களை வெட்டி விட்டார்கள்.அவர்கள் வெட்டிய மரம் ஒவ்வொன்றும் ஐம்பது வருடங்கள் சரித்திரம் கொண்டதாக இருந்தது.ஆழ வேறூன்றி அகலக் கிளைகள் கொண்ட அகன்று பரந்திருந்த அம்மரங்களை மெசின் கொண்டு அறுத்துப்போடும் போதும்,ஜே சி பி மெசினை வைத்து தூர்களை இழுத்து அகற்றும்போதும்பார்த்தவர்களுக்குகண்ணீர்வராதகுறையாகத்தான்இருந்தது.

வெட்டிப்போடப்பட்டிருந்தமரக்கிளைக்களும்,மரத்தின்இலைகளும்,சாலையில் வருகிறவர்கள் போகிறவர்களைப்பார்த்துஎங்களைக் காப்பாற்றுங்கள், எங்க ளைக் காப்பாற்றுங்கள் என கூவி அழைத்ததாய் இருந்தது.ஒன்றல்ல இரண்ட ல்ல சாலையின்இருமருங்கிலும் இருந்த இருபதிற்கும்மேற்பட்ட மரங்கள் இருந்த இடத்தில்விளக்குக்கம்பங்களும்,விளம்பரப்பலகைகளும் நின்றிருந் தன.

சாலையின் மத்தியில் இருந்த முழங்கால் உயரச்சுவரின் ஊடாக வாய்க்கால் வகுத்தது போல் காணப்பட்ட மண்பரப்பின் ஊடாக ஊனப்பட்டு வளர்ந்திருந்த செடிகளின்பூத்துச்சிரித்த பூக்கள் சிவப்பாய் வெள்ளையாய் கலர்க்காட்டி நின்றி ருந்தன குட்டையாய்/

இவர்கள் நின்றிருந்த இடம்தான் பஸ்டாப் என அர்த்தமாகிறது.ஆனால் அது அல்ல இடம்.பஸ்டாப் இவர்கள் நின்றிருந்த தூங்கு மூஞ்சி மரத்திலிருந்து பத்தடி தள்ளித்தான் இருந்தது.

நன்றாக உயர்த்திக் கட்டப்பட்டிருந்த முச்செவ்வகமான கட்டிடம்.உள்ளே மூன்று பக்கமுமாய் கடப்பக்கல் மேடை போடப்பட்டு பதினைந்து அடி அகலத் திலும் ஆறடி நீளத்திலுமாய் தன் கம்பீரம் காட்டி நின்றது,இப்ப்பொழுதுதான் கட்டி ஒரு வருடம் கூட ஆகாத புதுக்கருக்கு இன்னும் அதில் ஒட்டித் தெரிந் தது.ஆனாலும்அங்குபோய்யாரும்நிற்பதில்லை.நன்றாகநின்றால்பஸ்ஸிற்காக நிற்பவர்களில் பத்து அல்லது ஐந்து பேர் வரை நிற்பார்கள் ,மிச்சம் பேர் எல்லாம் ரோட்டோரங்களிலும் மரத்தடியிலுமாகத்தான்/

அப்படி நிற்கும் போது மரத்தடியின் பக்கமாய் நின்ற மின் கம்பத்தின் கீழாக பூக்கடை வைத்திருந்தவள் சொன்னாள்.ஏதாவது அவசர வேலை இருந்தா விட்டுட்டுக்கெளம்புங்க நீங்க,பஸ் வரவும் நான் ஏத்தி விட்டிருறேன் என்றாள்.

மானசீகமாகவும்வெளிப்படையாகவும்அப்பெண்ணிற்கு நன்றி சொல்லி விட்டுப் போன அன்றைய தினத்தின் அவசியம் போல சில நாட்களில் ஏற்பட்டுப் போ னது தற்செயலா அல்லது எதுவென இதுவரை புரியாததாகவே/

அவ்வப்பொழுது பஸ்ஸிற்காய் நிற்கும் போதும் அந்த இடத்தைக் கடக்கையி லும்லேசாகபுன்னகைக்கிறஅந்தப்பெண்ணின்வயதுமுதிர்ந்த சிரிப்பில் பூவாசம்/

வாயிலும் மேலிலுமாய் விழுந்திருந்த பூக்களை தட்டிவிட்டு விட்டு தரை முழு வதுமாய் போர்வையாய் போர்த்தியிருந்த பூக்களை மிதித்தவனாய் பைய னிடம் சொல்லிவிட்டுக்கிளம்புகிறான்.நேரமாகிறது எனக்கு,பஸ் வந்தால் ஏறிக்கொள்,நான் போய் பெட்ரோல் போட்டுக்கொண்டு கிளம்புகி றேன்.என பேட்ரோல்பங்க்வந்தபோது பெட்ரோல் பங்கின் அருகாமை யாக இருந்த சீமைக் கருவேலைமுட்கள்நிறைந்திருந்தவெற்று வெளியில்தான் அந்தக் குவியலைக் கொட்டி வைத்திருந்தார்கள்.

பெட்ரோல் போட வருகிற நேரங்களில் அவசர ஆத்திரத்திற்கு ஒதுங்குகிற பதிவான ஒரு இடமாக இருந்தது அது.நீண்டு வாலோடியாய் ஓடிச்செல்கிற சாலையின் ஓரமாய் இப்படியாய் ஒரு இடம் இருப்பது ஆத்திர அவசரத்திற்கு உதவுகிறதுதான்.இது போலான குவியலை மதுரை ரோட்டில் பார்த்திருக் கிறான்.புது பஸ்டாண்ட் திரும்புகிற இடத்தில் இருக்கும்.அது அனேகமாக மார்பிள் கற்களை பொடி பண்ணுகிற பேக்டரி என இவன் புரிந்து வைத்திருந் தான், இடையிடையில் கொஞ்சம் பெரிது பெரிதான மார்பிள் கற்களைப் பார்க்கலாம்.

மதுரைரோட்டில் அன்று பார்த்தகற்குவியலும் சரி,பெட்ரோல் பங்க் அருகாய் பார்த்த உடைத்தஎறியப்பட்ட குவியலும் சரி ஏதோ முன் பின் அறியா குடும் பத்தினரின் முகம் சுமந்து கொண்டிருப்பதாகப் பட்டது.

நேற்று இரவு ஒரு புகழ் பெற்ற இயக்குனரின் படம் பார்த்து விட்டு தூங்க போகும்பொழுதுஇரவுமணிபணிரெண்டாகிப்போனது.அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்தப்படத்தைப்பற்றி ஒரு இலக்கிய மாத இதழில் வெளி வந்திருந்த விமர்சனம் சரி என்றே பட்டது.இவன் அப்படி ஒன்றும் பெரியவிமர்சகனோஅல்லது படத்தை சீர்தூக்கிப்பார்த்து சரி தவறு சொல்கிற அளவிற்கான ஆளெல்லாம் கிடையாது என்ற போதும் கொஞ்சம் காரம் ஜாஸ்தி,,,,இனிப்பு கம்மி,,,,, என சொல்லத்தெரிந்து வைத்திருந்தான்.

இவனது மனைவி கூடச்சொல்வாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்கை யிலோஅல்லதுசினிமாபார்க்கையிலோ,,,,,சினிமாதான,நாடகம்தானஅதுக்குப் போயி எதுக்கு இவ்வளவு சீரியஸாகுறீங்க அது ஒரு பொழுது போக்கு ,அதைப்போய் இப்படி சீரியஸாக எடுத்துக்கொண்டும்,புரிந்து கொண் டும் விடா விட்டால் என்ன,என அவள் சொன்னதும் சட்டென அதற்கு பதில்சொல்பவ னாகஇருந்திருக்கிறான்இதுநாள்வரை.அப்படியானால் கோயிலுக் குப் போவ தை ஒரு பொழுது போக்காக எடுத்துக்கொள்வாயா நீ என/

அவளும் விட மாட்டாள்,அது எப்படி எடுத்துக் கொள்ள முடியும் சினிமா சித்தரி க்கப்படுவது,கோயில்அப்படியல்ல,தெய்வமும்,கலாச்சாரமும்ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் வேறு வேறல்லவா, என அவள் சொன்ன போதும் இரண்டும்சமூகஉட்கட்டமைப்பின்மீதான எண்ணங்களின் பிரதிபலிப்பு தானே,,,? என இவனும் அவளுமாக நிறையப்பேசுவார்கள்.இவர்கள் பேசிக் கொண்டிருக் கும் பொழுதோ, உரையாடலை ஆரம்பிக்கிற பொழுதோ யாராவது வந்து விட்டால் என்ன வழக்கம் போல புருசனும் பொண்டாட்டியுமா விவாதத்துல யெறங்கீட்டீங்களா என்பார்கள்.இதுக்குப்பதிலா இன்னைக்கு சோத்துக்குஎன்ன பண்ணலாம்,கொளம்புக்கு என்ன செய்யலாம்ன்னு பேசீரு ந்தாலாவது பிரயோ ஜனமா இருந்திருக்கும்.

என்னதான் நீங்கமுக்கிமுக்கிபேசுனாலும்கூடநடக்குறதுதான் நடக்கும். சும்மா இந்தமாதிரிபேசுறதவிட்டுட்டுகல்யாணத்துக்குவளந்துநிக்கிறபெரியபொண்ணு க்குமாப்ளபாக்குறது சம்பந்தமாயும்,சின்னமகளோட12ஆம்வகுப்புபடிப்பையும் கொஞ்சம்கவனிங்க என்பார் வீட்டிற்கு அடிக்கடி வருகிற சொந்தக்காரர் ஒருவர்.

அவரதுஇந்தப்பேச்சை கேட்கிற கணத்தில் ஒன்று சேர்ந்து கொள்வார்கள் இரண்டு பேரும்/

எண்ணன்னேஇது,போனவாரம்வந்தப்பக்கூடஒங்க சின்ன மகன் டீவியப்பாத்து க் கெட்டுப்போறான்னு சொன்னீங்க,இப்ப வந்துட்டு இப்பிடி சொல்றீங்களே என இருவருமாய் சேர்ந்து அவருக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது இவன் பணி புரிந்த ஊரில் தங்கியிருந்த நாட்களில் நடந்த நிகழ்வு நினைவிற்கு வராமல் இல்லை.

வேலைக்குச்சென்று வந்தநாளன்றின்மாலைஇரவு கவிழும் நேரமாய் இவன் வீட்டை விட்டு வெளியில் கடைக்கு வந்திருந்த நேரம் கல்யாணி அண்ண னுடன்பேசிக் கொண்டிருந்தான்.அப்பொழுது வேகமாக வந்த அவளது மனைவி பதைபதைப்பாக காணப்பட்டாள்.இவன் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டான், கணவனும், மனைவியும் பேசுகிற இடத்தில் நாம் எதற்கு அனாவசியமாய் என ,

தீப்பெட்டி ஆபீஸ் போன பிள்ளை இன்னும் வீடு வரவில்லையாம்/4.30 மிஞ்சிப் போனால் ஐந்து அல்லது ஐந்தரை மணிக்குள்ளாக வந்து விடுவாள். வந்த துமாய் அம்மாவை சுடுதண்ணி வைக்கச்சொல்லி குளித்து விட்டு உள்ளூரில் இருக்கிற பெருமாள் கோயிலுக்குப்போய் விட்டு வந்து இரவு வீட்டு வேலை யில் அவளது அம்மாவிற்கு உதவியாக இருப்பாள்.

இப்பொழுதுஇரண்டுவாரங்களாய்த்தான்கோயிலுக்குப்போகவில்லை.அவளது அம்மா வேண்டாம் எனச் சொல்லி விட்டாள்.கோயில் இருக்கிறது வடக்குத் தெருவில்,இவர்கள் இருப்பது தெற்குத்தெருவில்/

கல்யாணியின் மகள் வேலை பார்க்கிற தீப்பெட்டி ஆபீஸ் இருப்பது வடக்குத் தெருவில்தான்,அட ஏம்பா வேலை விட்டு வரும்போது ஒரு எட்டு கும்புட்டு வர்றதுக்கென்ன என அவளது அம்மா கேட்கும் போதெல்லாம்,,,அது எப்படி ம்மா குளிக்காம செய்யாம ஒடம்பு முழுக்க அடிக்கிற மருந்து வாசனையோட போயி சாமி கும்புடுறது என்பாள்.நீயி என்ன கோயிலுக்கு உள்ளயா போயி சாமி கும்புடப்போற,கோயிலுக்கு வெளியில நடையில நின்னு கும்புட்டு வர்றதுக்கு எப்பிடிப்போனா என்ன,என அவளது அம்மா சொன்னதும் சும்மா இரும்மா நீயீ,வீட்ல வந்து குளிச்சிட்டு தலையில ஒரு மொழம் மல்லிகைப் பூவோடகாத்தாடபோயி வந்த மனசுக்குக்கொஞ்சம் யெதமா இருக்கும். ஏங் கூட இன்னும்ரெண்டுமூணுபேரு வருவாங்க,அப்பிடியே பேசிக்கிட்டே போயி ட்டு வருவோம்/எனச்சொல்வாள்.

வாரம் முழுக்க பூட்டியிருக்கிற அந்தக்கோயில் வாரத்தின் வெள்ளிக் கிழமை களில் மட்டும் திறந்திருக்கும். மற்றநாட்களில் கோயிலின் வாசலில் சூடம் பொருத்தி வைத்துவிட்டு கும்பிட்டு விட்டு வருவார்கள்.

சில நாட்களில் பக்கத்திலிருக்கிற வேப்ப மரத்தின் அடியிலாக கொஞ்சம் நேரம் அமர்ந்து பேசிவிட்டு வருவார்கள்.அவர்களது பேச்சில் கோயிலுக்குள் இருக்கிற சாமியிலிருந்து அவர்கள் வேலை பார்க்கிற தீப்பெட்டி ஆபீஸ் சூப்பர் வைசர் வரைக்குமாய் அரை படுவார்கள்.

இப்பொழுதுஇரண்டுவாரங்களாககோயிலுக்குப்போகவில்லை.போய்வரமுடிய வில்லை.கோயிலுக்குபோய் வருகிற வழியில் சில விடலைப்பை யன் களின் கேலியும்,சீண்டுதல்ப்பேச்சும்,அவர்களைப்பின் தொடர்தலும் கூடுதலாகிப் போக கோயிலுக்குப்போக வேண்டாம் என நிறுத்தி விட்டார்கள்.பையன்கள் பின் தொடர்வதும்கேலிபேசுவதும் பிள்ளைகளுக்குக் கூடத்தெரியவில்லை முதலில்/ டீக்கடைக்கார்தான் விசயத்தைச்சொன்னார்.

டீக்கடைக்காரபால்ச்சாமியண்ணனும்,கல்யாணியும்மாமன்மச்சினன்முறையி ல் பழகிக்கொள்வார்கள்.அவர்கள் இருவரும் சொந்தமெல்லாம் இல்லை.

கமுதிப்பக்கமிருந்து பிழைப்பிற்கு வழி தேடி நிர்கதியாய்இங்கு வந்து நின்ற போது கல்யாணியின் தலைதுவட்டி பாதுகாத்து தன்னகத்தே அடை காத்துக் கொண்டவராய்டீக்கடைபால்ச்சாமியண்ணன் இருந்தார்.

அப்படியாய்அன்று அடைகாத்த பால்சாமியண்ணமிம் பாஞ்சாரத்திலிருந்துக் கிளைத்த நட்பு அவர்களை மாமன் மச்சான் என உறவுகொண்டாட வைத்து விட்டது.

பால்ச்சாமியண்ணன் டீக்கடைக்கு டீ வாங்க வருகிற கல்யாணியை சர்வ சாதாரணமாக கேலிபண்ணுவார்.சார் இவரத்தான் ஊர்க்காவலுக்குப்போட்டுரு க்கு நல்லா பாத்துக்கங்க என்பார்.அதற்கு கல்யாணியும் சிரித்துக்கொள்வார். ஏய் போ மாப்புள அங்கிட்டு,நா ஊருக்கு காவல்ண்ணா ஓங்தங்கச்சியும் ஏங் க்கூட வரணுமில்ல என்பார்.இருவருமாய் சிரித்துக்கொள்வார்கள்.சப்தமிட்டு/

தினசரி காலையிலும் மாலையிலுமாக பால்சாமியண்ணன் கடை வந்துதான் டீ வாங்குவார் கல்யாணி/ ஒரு பார்சல் டீதான் மொத்தக்குடும்பத்திற்கும்/ கல்யாணி அவரதுஇரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பத்திற்கு ஒருபார்சல் டீ வாங்குற போதும் கூட காணாததுதான்.ஆனால் பால்சாமியண்ணன் கடையில் வாங்கும் போது நான்கு பேர் போக கூட ஒரு ஆள் சேர்த்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இந்த மாதிரியான அளவில்லா டீக்கு கல்யாணிகொடுக்கிற காசும் பால்சாமி யண்ணன் வாங்கி கல்லா கட்டுகிற பணமும் எந்த வியாபாரதர்மத்திலும் அடங்காது.கேட்டால் அட போ மச்சான் நீ பாட்டுக்கு,இப்ப நீயி காசு குடுத்துத் தான் எனக்கு நெறையப்போகுதாக்கும் நீயி ஒரு திக்கம் என்பார்.வேணுன்னா ஒண்ணு செய்யி நா குடுக்குற டீக்கு பதிலா ஓங் மகள ஏங் பையனுக்குக் கட்டிக்குடுத்துரு என்பார்.பால்ச்சாமியண்ணன் கல்யாணியிடம்/

இது போலான வரம்பு மீறாத பேச்சும் சிரிப்பும் பழக்க வழக்கங்களும் அவர்க ளுக்குள்ளாய் வளர்ந்திருந்த நட்பும் கல்யாணி வளர்ந்து வசதியான சொந்த மாக வீடு வாசல், கையிருப்பு,,,,,,என ஆகிப்போன பின்பும் கூட துளியும் பிளவு பட்டு விடவில்லை.

அந்த நட்பின் மூலாதாரமும் ,வேரும் கிளை பரப்பலும் ஒருவர் வீட்டு விசே சத்தில் இன்னொருவர் வீட்டு இருப்பும்,ஆலோசனையும் முக்கியம் எனும் அளவிற்கு பிணைப்பை உருவாக்கியிருந்தது.அந்த பிணைப்பும் இறுக்கமும் இருந்த நாட்களின் நகர்வில் பால்சாமியண்ணண்டீக்கடையில் நின்றுபேசிக் கொண்டிருக்கும்போதுதான்அவள்மனைவிவந்துபதைபதைத்துச் சொன்னாள்.  மகள் இன்னும் வீடு வரவில்லை என

அதை முழுதாக விசாரிக்கிற நேரத்திற்குள்ளாய் வாங்க மச்சான் என பால்ச் சாமியண்ணன்கல்யாணியைகூட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்.

கொஞ்சநேரத்தில்களோபரமாகிப்போனதுகல்யாணியின்வீடு.எங்கபோயிருப்பா,  என்ன ஆக்கியிருப்பா,,இப்பிடியா செய்வா பொம்பளப்புள்ள எங்க போறோம் என்ன செய்யிறோம்ன்னு கூடச்சொல்லாம, என பலரும் பல விதமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது அந்தப்பக்கமாகப் போன வாத்தியார் ஒழுக்கமா அவளுக்கு ஒரு பையனப்பாத்து கட்டிவையுங்க,,,,, எனச் சொல்லி விட்டுப் போய் விட்டார்,

அவரது பேச்சின் அர்த்தம் அங்கிருந்த குழந்தைக்குக்கூடத் தெரியும். என்பது தான் நிதர்சனம்.

தீப்பெட்டி ஆபீஸிலில் வேலை செய்பவள்தானே எவனுடனாவது போயிருப் பாள் என்கிற உள்ளர்த்தத்தைக்கொண்டிருந்த அவரது பேச்சு நிலமையை இன்னும் பதட்டமாக்கியதேதவிரகுறைக்கவில்லை.

தேடிப்போனகல்யாணியும்பால்சாமியண்ணனும்இன்னும்வரவில்லை.பேசிக்  கொண்டிருந்தவிசயத்தின் வீர்யமும் சுவாராஸ்யமும் குறைந்து போன போது வீட்டு முன்பாக கூட்டம் குறைய ஆரம்பித்தது.கூட்டம்குறைந்த சிறிது நேரத் தில் கல்யாணி வந்து விட்டார்.

மகளுடன்.வேலை முடிந்து பக்கத்து ஊரில் இருக்கிற தோழியின் வீட்டிற்கு போயிருக்கிறாள்.கூட வேலை பார்ப்பவளிடம் சொல்லியிருக்கிறாள்,அவள் அவளது அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போகிற அவசரத்தில் சொல்ல மறந்து போனாள்.என்பது தெரிந்தது பிற்பாடு.

உடன் வேலைபார்ப்பவள் மறு நாள் வந்து கல்யாணியிடமும்கல்யாணியின் மனைவியிடமும் மன்னிப்புக் கேட்டாள்.மன்னிப்புக்கேட்டு என செய்ய ,நடந்த நிகழ்வும் ஏற்பட்ட கெட்ட பெயரும் நிலை கொண்டு விட்டதுதானே,,?என வருத்தப்பட்ட கல்யாணியின் மகள் மறு நாள் வேலைவிட்டு வரும் போது வாத்தியாரிடம் போய் சண்டை போட்டு விட்டு வந்து விட்டாள்.தன்னை எப்படி இப்படி இழிவாகவும் பழித்தும் பேசலாம் என,/

இத்தனைக்கும் அவளுக்கு சொல்லிக்கொடுத்த வாத்தியார் அவர்.அவருக்கும் கொஞ்சம் அவமானமாகவே போய் விட்டது,சிறு பிள்ளைதானே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத வயது. கொஞ்ச நேரம் பேசியதும் அழுது விட்டாள்.அழுது கொண்டே வாத்தியாரின் வீட்டு  வாசலில்  உட்கார்ந்து 
விட்டாள். அட சண்டாளத்தனமே,இப்பிடியா நடக்கும் காலக்கொடும,,,என வாசலில் அமர்ந்திருந்த அவளை வீட்டிற்குள் கூட்டிப் போய் சிறிது நேரம் உட்கார வைத்து டீக்கொடுத்து மனசை சாந்தப் படுத்தி அனுப்பினாள். வாத்தி யாரின்மனைவி.

அவளைஅப்படிவீட்டிற்குள்ளாய் கூட்டிப் போனதற்குகாரணம் இருந்தது.வீட்டு வாசலில் கூட்டம் கூடி விட்டது. அதைத் தவிர்ப்பதற்காகவும் வாத்தியாரின் அந்தப்பேச்சிற்குவருத்தம்தெரிவிப்பதற்காகவும்தான்/வாத்தியாரும்அவளிடம்  மனதார மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

பின்அந்தபக்கமாய்போகும் போது கல்யாணியிடமும் கல்யாணியின் மனைவி யிடமுமாய் மன்னிப்புக்கேட்டுக்கொண்டார். வாத்தியாரின் அந்தப்பேச்சும் மன்னிப்புக்கோரலும் கல்யாணியை அவரது பெண்ணுக்கு அவரச அவசரமாக கல்யாணம் பேசி முடிக்கும் நிலைக்குத்தள்ளியது என்கிற நினைவு சுமந்து உடைத்தெறியப்பட்டிருந்த கற்களின் சதுரங்களையும் ,செவ்வகங்களையும் அருங்கோணங்களையும்,,,,இன்ன பிற வடிவம் தாங்கிய குவியலையுமாய் பார்த்துக்கொண்டு செல்கிறான்.