10 Jun 2016

சில்லுண்டி,,,,,

கோம்ஸ்அண்ணனைஇறக்கிவிடவேண்டியதாகிப்போகிறது போகிற வழியில்/

செல்கிற வழி எது எனச்சொல்லுங்கள்,நான் இறங்கிக்கொள்கிறேன் எனது இலக்கு வந்ததுமாய் எனச்சொன்னவர் அவரது இலக்கு பெருமாள் கோவில் அருகில் என்கிறார்.

ஏறிக்கொள்ளுங்கள் சும்மா,றெக்கை கட்டிப்பறந்து விடுவோம்.கட்டப்படுகிற இறக்கையும் அது எட்டுகிற தூரமும் வேகமும் குறைவாய் இருந்தால் கூடப் பரவாயில்லை.சென்றுவிடலாம்இருசக்கரவாகனத்தில்.வாகனத்தில்எதாகினும் பழுது ஏற்பட்டால் கூட தவழ்ந்தேசென்று நமது இலக்கைஅடைந்து விடலாம் என்கிறான் இவன் அவரது சொல்லுக்கு பதில் சொல்லாக/

அப்படியாய்கோவில்வழியாகச்செல்லநேர்கிறநாட்களில்கோவில்கோபுரத்தை என்றாவதுஒரு நாள்அபூர்வமாக அண்ணாந்துபார்ப்பதுண்டு.அப்படிப்பார்க்கும் போதுகோபுரத்தைப்பார்த்துவியந்தானா அல்லது அதிலிருக்கிற சிலைகளைப் பார்த்து வியந்தானா என்பது அவனுக்குமட்டுமே கண் கூடு.

கோயில்அருகில்இருந்தசேவுக்கடையும்,டீக்கடையும்,பழக்கடையுமாய்காட்டிய பரபரப்பில் கொஞ்சமும் குறைவில்லாமல் கோவில் நடையை ஒட்டியிருந்த இரும்புக்கடை காட்டியது.

இரும்புக்கடைஎன்றால்அங்கு இரும்பு மட்டும் விற்கவில்லை.சிமிண்ட ஜல்லி மணல் செங்கல் மற்றும் பெயிண்ட்,ஆணி மண்வெட்டி,இரும்புத்தகடு என எல்லாம் கலந்து கட்டி விற்கிற அவரது கடையின் வலது ஓரத்தில் தேங்காய் பூப்பழம் வைத்த அர்ச்சனைத்தட்டு விற்பதற்கு ஒரு ஆளும் போட்டிருந்தார்.

அந்த ஆள் தேங்காய்ப்பழம் விற்ற நேரம் போக கடையினுள் கட்டித்தொங்கிய திரைக்குப் பின்னால் இருக்கிற சாணை மிஷினில் சாணைபிடித்தார்.

அருவாள்,அருவாள்மனை,கத்திரிக்கோல்,,,,,எனஎல்லாவற்றிற்கும்அவர்சாணை பிடிக்கிற அழகை ஊரே அறியும்/

ஊருக்குள்ளிருக்கிற ஏதாவது ஒரு வீட்டில் காய்கறி அறுபடவில்லையென் றால்உடனேதூக்குஅரிவாள்மனையை.கொண்டுபோஅவரிடம் எனக் கொண்டு வந்து விடுவார்கள்.இது போலவேதான் அரிவாளும் கத்தரிக் கோலும்/

அந்தக் கடைக்கு எதிர்த்தாற்ப்போல் இருக்கிற பாய் கடையில்தான் புத்தகம் வாங்குவான் வழக்கமாகவும் மாதந்தோறுமாய்/.

வாங்கும்போதுஎன்னமாமாநல்லாயிருக்கீங்களாஎன்பதுதான் கடைக்காரரைப் பார்த்து இவன் கேட்கிற முதல் கேள்வியாக இருக்கும். அதற்கப்புறம்தான் இவன் கைக்கு புத்தகம் கை மாறுவதும் இவன் காசு கொடுப்பதும்/

அங்கு இல்லாத யேவரமே இல்லை எனலாம்.சின்ன உலகில் விரிந்து பட்ட பெரியகாட்சிபோலஇருந்தது.காட்சி சமயத்தில் கடலாய் மாறித் தெரிவதுதான் மிகுந்து படுகிறஆச்சரியங்களில் ஒன்றாக/

உருட்டுஉருட்டிப்பார்க்கிறகலைடாஸ்க்கோப்பின்ஆச்சரிரியங்களிலும்,வண்ண ங்களிலும்சற்றும்குறையாமல்/அருகருகேஒட்டிஇருக்கிறஇரண்டுகடைகளும் அது போலவேதான் தெரியும்.

போனமாதத்தின் ஒரு வெயில் நாளின் மதிய வேளையாகமுருகன் கோயில் பக்கமிருந்து ஏறி வந்து கொண்டிருந்தான் சாலையின்இடது பக்கமாக/

இவனுக்கு முன்பாக சென்று கொண்டிருந்த லோட் வேன் ஒன்று சாலையின் முனையில் ஒடித்துத்திரும்ப முடியாமல் திரும்பத் திணறிக் கொண்டிருந்தது. இவனுக்கு முன்னும் பின்னுமாக வரிசையாகவும் அது தப்பியும் இரு சக்கர வாகனங்களும் சைக்கிள்களுமாய் சேர்ந்து விட்டது.

பின்னால்திரும்பிப்பார்க்கிறான்.இவனுக்குபின்னால்சற்று இடைவெளி விட்டு சற்றே தூரமாக வேன் ஒன்று நிற்கிறது.உடனே இப்பொழுதே ட்ராபிக் கிளியர் ஆனாலும் கூட வேன் இவனை நெருங்க எப்படியும் இரண்டு நிமிடங்களாவது ஆகும் இந்தக்கூட்டத்தில் என நினைத்தவனாய் இவனது இரு சக்கர வாகனத் தை ஓரம் கட்டி விட்டு அதில் அமர்ந்தவாறு கோபுரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

எவ்வளவு நேரம் அப்படியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். எவ்வ ளவு தூரம் சிலைகளை ரசித்தான் என்பது இவனுக்கும் தெரிந்திருக்கவில்லை கோபுரமும் அலுப்புத்தெரிவிக்கவில்லை.பின் இவனும் என்னதான் செய்வான் பாவம்,

இவனது ரசிப்பையும் கைகட்டலுடனான இவனின் இரு சக்கர வாகன இருப் பின் மீதான இருப்பையும் உடைத்தது அந்த லத்திக்கம்பே என்று சொல்ல லாம்.அந்த லத்திக்கம்பை யாருடைய அனுமதியும் இன்றி இவன் முன்னாக நீட்டிஇவனதுஇருசக்கர வாகனத்தின் ஹேண்டில் பார் மீது தட்டுகிறாள்.என்ன சார் பகல்லயே கனவா என,,,/

அப்பொழுதுதான்நடப்புலகிற்குவந்தவனாகரோடுகோபுரம்கோயில் சிலைகள், மனிதர்கள்அவர்களின் மீதான பார்வை என எல்லாவற்றையும் சொன்னான்.

நல்லா செஞ்சீங்க போங்க,நான் மட்டும் வந்து சுதாரிச்சி உசுப்பி உடலைன்னா கோபுரத்தபாத்தவானிக்கயே உக்காந்துருப்பீங்க போலயே சார், அப்புறம் ஒங்க பொண்டாட்டி புள்ளைங்க வந்து ட்ராபிக்கில நிக்கிற நீங்களாவது இந்த கூறு கெட்ட மனுசன்கிட்ட ஒரு வார்த்த சொல்லி வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்கக் கூடாதான்னு எங்ககிட்ட வருத்தப்படுவாங்க,அதுக்குக்கொஞ்சம் அனாவ சியமா நாங்க சங்கடப்பட்டுட்டு நிக்கணும்,சரி சார் போங்க மொதல யெடத்த காலி பண்ணுங்க ஒங்களப் போல வர்ற போற எல்லாரும் ரசனையாளர் லிஸ்ட்ல சேந்துட்டா அப்புறம் எங்க பாடு திண்டாட்டம் என அவள் சொல்லி முடித்த போதுவண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பிய இவன் சாலையோர மண்வெளி யில் வரிசையாக ஊர்ந்து போய்க்கொண்டிருந்த எறும்புக் கூட்டத்தின் மீது வண்டியின் முன் சக்கரம் பட்டு விடக்கூடாது என்று நினைத்தவனாய் வண்டி யை பின்னகர்த்தி உருட்டி யவனாய் எடுத்துக்கொண்டு போகிறான் .எறும்புக ளோடு ஒரு சின்னப்பேச்சு வார்த்தை நடத்தினால் நன்றாக இருக்கும் என்கிற நினைப்புடன்,,/

”எறும்புகளே,எறூம்புகளே வரிசையாக்ச்செல்லுங்கள்,சண்டை சத்தம் ஏதும் போட்டுக்கொள்ளாமல்,,,,,எனசொன்னதும்தலையை தூக்கிப்பார்த்த முன்னால் சென்ற எறும்பு ஒன்று அதெல்லாம் நாங்கள் இந்த நிமிடம் வரை நன்றாகவே இருக்கிறோம்,கிடைத்த உணவைசேகரித்து பகிர்ந்து உண்டு ஒழுங்காக வாழ் ந்து வருகிறோம், அதைக் கெடுத்து புத்திமதி சொல்கிறேன் அல்லது உங்க ளுக்கு ஏதாவது வேலை வேண்டும்என்பதற்காகஎங்களது பிழைப்பில் கை வைத்துவிடாதீர்கள்.கூட்டுக்குடும்பத்தில்குண்டுவைக்கிற நாசத்தைச் செய்யா மல் போங்கள் சார் உங்களது வேலையைப் பார்த்துக் கொண்டு,,,,” என சிறு கல் ஒன்றை தூக்கி இவன் மேல் எறிந்தது.

போனவனைஆச்சரியமாகபார்த்தஅவளிடம்முடிந்தால்சிக்னலில் நாலாபக்க முமாய் சிவப்பை எரிய விட்டு எறும்புகள் சாலையில் ஊர்ந்து செல்லஅனுமதி யுங்கள் எனச்சொல்லியவனாய் கிளம்புகிறான். சிரித்துக் கொள் கிறாள் அவள்.

நன்றாகஇருந்தால்இவனது மூத்தமகனின் வயது இருக்கும் .இல்லை என்றால் ஒன்றிரண்டுகூட்டியோ குறைத்தோ இருக்கலாம் ,மதுரைக்கு தேர்தல் வேலை யாய் போயிருந்த சமயத்தில் பூத்தில் இருந்த அவள் அங்குமிங்முமாய் ஓடித்தெரிந்தாள்.அடுத்து என்ன அடுத்தது என என்பது போலாய் வேலைகளை ஓடி ஓடி செய்து கொண்டிருந்தாள்.கடையிலிருந்து வாங்கி வந்த டீயை வாங்கிக் கொண்டு போய் அனைவருக்குமாய் கொடுத்தாள். இடையிடையில் பூத்திற்குள்ளாகச்சென்றுஎல்லோரையும்பார்த்துவிட்டும்பேசிவிட்டும்வந்தாள்.  பூத்திற்குவெளியேஓட்டுப்போட நின்றிருந்தவர்களை வரிசை படுத்தி நிற்க வைத்தாள்.இவையெல்லாம் செய்த நேரம் போக அங்கிருந்த ஒரு ஸ்டூலில் சென்று அமர்ந்து கொள்கிறாள்.

நட்டு வைத்த பூச்செடி ஒன்று சீருடையுடன் நகர்ந்து சென்றுகொண்டிருந்தது போல் தோற்றப்பட்ட அவளிடம் சொல்லிக்கொண்டுவிட்டுத்தான் வந்தான் தேர்தல் வேலை முடிந்து வரும் போது/

மூத்தமகள்இந்நேரம்வேலைக்குப்போயிருந்தால்இப்படித்தான்ஏதாவதுஒன்றில் சிறப்புற்று இருந்திருப்பாள் இந்நேரம்.

இந்த ஐம்பத்தைந்து வயதில் வெளிர் நிற அரை வெள்ளைக்கலர் பேண்ட்டும், லேசாய் அடர் ஊதா நிறத்தில் இருந்த முழுக்கை சட்டையும் இவனுக்கு நன்றாக இருக்க வாய்த்திருக்கிறது.

சட்டையும் பேண்ட்டும் ஏ,ஆர் ரெடிமேடில் வாங்கியது.ஆறு மாதங்களாக வாங்க வேண்டும் வாங்க வேண்டும் என நினைத்து சென்ற மாதம்தான் வாங் கினான்.அதற்கு முந்தைய மாதம்தான் பெரியளுக்கு சுடிதாரும் சின்னவனுக்கு பெண்ட் சர்ட்டும் எடுத்ததில் 2800 ரூபாய் வரை வந்து விட்டது. அந்தப் பணத் தை இந்த மாதம் கொடுத்து விட்டு எடுத்த பேண்ட் சர்ட் நன்றாக இருந்தது.

பொதுவாகவேஇவன்மிகவும்தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் சொல்வது தான்.மேலே அடர் நிற சட்டைஎன்றால் கீழே வெளிர் நிற பேண்ட்டும், கீழே அடர் நிற பேண்ட் என்றால் மேலே வெளிர் நிறச்சட்டையும் அணிந்து பாரு ங்கள் நன்றாக இருக்கும்.என/

ஆனால் ஊருக்கெல்லாம் அப்படி ஊருக்கெல்லாம் பாடம் எடுத்த இவனுக்கு அதுபோல்உடை உடுத்த வாய்க்கவில்லை.காரணம் இவனிடமிருந்தது வெளிர் நிற பேண்ட் சர்ட்டுகளே/

வேலை முடிந்து மதியம் சாப்பாட்டிற்காய் வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என வண்டியை எடுத்த நேரம் மனைவியிடமிருந்து போன்.சாப்பிட வீட்டிற்கு கிளம்பி விட்டீர்களானால் அப்படியே பஜார் வழி வாருங்கள்.செல்ப் சர்வீஸ் கவுண்டரில் பலசரக்கு வாங்க வந்துள்ளேன்.வாங்கியும் முடித்து விட்டேன். அதை பையில் எடுத்து வரிசையாக அடுக்கிக் கொண்டு வைத்து விட்டு உங்களின் மேலான வருகைக்காக காத்தி ருக்கிறேன் வாருங்கள் சீக்கிரம். என்றாள்.

மாதம்பிறந்துஐந்துதேதிகளுக்குள்ளாகபலசரக்குவாங்கிவிடவேண்டும்இல்லை யென்றால் திருப்திப்படாது அவளுக்கு என நினைத்தவனாய் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்புகையில்தான் கோம்ஸ் அண்ணனின் பிரசன்னம்.

கோம்ஸ் அண்ணன் பின்னால்உட்கார இவன் வண்டியை உசுப்பி விட்ட நேரம் அலுவலகத்திற்குஎதிர்த்தாற்போலிருக்கிறகடைக்காரர்வந்தார்.அவர்கடையின் பெயர் ராம் ரஹீம் எலெக்ட்ரிக்கல்ஸ்.மோட்டார் பம்புகளும் அதன் ஸ்பேர்க ளு மாகவிற்றார்.அலுவலகத்திற்கு அவர்வருகிறநேரங்களிலும்சரி,சாலை யிலும் டீக்கடைகளிலும் இவனைப்பார்க்கிற நேரங்களிலும் சரி. கொஞ்சம் ஒட்டுதலு க்கு அதிகமாகவே பேசுவார்.

யார்,யாரிடம்நெருக்கமாக பழகுகிறார்களோ அவர்கள் அவர்களிடம் கொஞ்சம் ஒட்டுதலாக இருப்பதில் ஆசரியம் என்ன இருக்கமுடியும் எனச்சொன்ன நாளொன்றின் காலை வேளையில்தான் இவன் எதிர்தாற்போல் அவசரமாக வந்து கொண்டிருந்த போது சாலையின் இடது புற கடையிலிருந்து திரும்பிய அவர் வண்டியை கொஞ்சம் வேகமாக திருப்பி விட்டார்.அவர் வண்டியை திருப்பும் போது எதிர்த்தாற்போல் வந்து கொண்டிருந்த இவன் அவர்வண்டியை அப்படித்திருப்புவார்என்கிறஎதிர்பாராதிருப்பு இவனை அவரது வண்டியின் அருகில் பிரேக்கிட்டு நின்று விடவைத்து விடுகிறது.நல்ல வேலையாக மோதிவிடவில்லைஇருவருமாய்/மாறாகசிரித்துக்கொண்டார்கள்கடகடவென,,

இதுநடந்த இரண்டொரு நாளில் அவரிடம் கேட்டிருந்தான்.அதென்ன கடைக்கு அப்படி ஒருபெயர் என,,/ அதற்கு அவர் சொன காரணம்தான் மிகவும் ஆச்ச ரியமாக இருந்தது.

ராமு இறந்து போன எனது அண்ணனின் பெயர்.மிகவும் சின்ன வயதிலேயே இறந்து போனான் என்றார்கள்.

சின்ன வயது என்றால் கைக்குழந்தையாய் இருக்கும் போது குல தெய்வம் கோயிலுக்குவண்டிகட்டிக்கொண்டுசாமிகும்பிடப்போனஒருநாளில்வண்டியின் பின்னால் தூளி கட்டி தூங்கப் போட்டிருந்தவன் வண்டி தூக்கிப் போட்டத்தில் இறந்து போனான்.இரண்டாமவன் ரஹீம் இன்றளவும் என் தோளுடன் தோள் காத்து கொடுத்து நிற்கிற நண்பன்.இவர்களின் பெயர்களை இணைத்து வைத் திருக்கிறேன் .என்றார்,

சரிதான் அவர் சொல்வதும்,பரஸ்பரம் மனிதமனம் நுழைந்து மனிதம் பார்ப் பதில் மனிதருக்கு நிகரானவர்கள் யாரும் இருந்து விட முடியாதுதான் என அவரைப் பார்க்கிற கணங்கள் தோறுமாயும்,அவருடன் பேச நேர்கிற தருணங் கள் யாவிலுமாய் தோணாமல் இல்லை.

கோம்ஸ் அண்ணன் கோவில் வருகிற வரை பேசிக்கொண்டேதான் வந்தார். அவர் என்ன பேசினார்ஏதுபேசினார்என்பது அவ்வளவாக நினைவில் இல்லை. ஆனால்அவர் கோவிலுக்குப்போகும் முன்பாக வருகிற சேவுக்கடையையும் பேக்கரியையும் கடக்கையில் சொன்னார்.

நான் போன வாரந்தாண்ணே வண்டி வாங்குனேன்.நல்ல வண்டி நல்ல பிக்கப் புண்ணே என்றார்.

சொல்லியவர் வண்டியை விட்டு இறங்கும் போது பெரியவ என்ன படிக்கிறா சின்னவன் பத்தாம் வகுப்புல என்ன மார்க் என விசாரித்தார்.

அவர்அப்படியாய்சொல்லிவிட்டுநகர்கையில்தான்தோணுகிறது ஆகா அவரது  பிள்ளைகளைப் பற்றி கேட்காமல் விட்டு விட்டோமே என,,,,,/

சரிபரவாயில்ல,இன்னொருநாளில்கேட்டுக்கொள்ளலாம்எனத்தோணியவனாய்  செல்ப் சர்வீஸ் கவுண்டரில் இவனது வருகை நோக்கிக் காத்திருக்கும் மனை வியைப் பார்க்கப்போகிறான்.

6 comments:

கோமதி அரசு said...

நல்ல கவனிப்பு. நட்டுவைத்த பூச்செடி சீருடையில் அழகான சொல்.நட்பு, பாசம், எல்லாம் கலந்த சொற் சித்திரம்.

எறும்புகள் சாலையில் நடமாட அனுமதி கேட்பதும் அருமை.
எறும்புகள் பேசுவதும் அருமை.

vimalanperali said...

வணக்கம் கோமதி அரசு மேடம்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

KILLERGEE Devakottai said...

சொல்லிச்செல்லும் யதார்த்தநடை வழக்கம்போல் அழகு நண்பரே
தமிழ் மணம் 1

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி தேவகோட்டை சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே அருமை
தம 2

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/