19 Jun 2016

மல்லி கருவப்பில்ல,,,,,,

கத்திரிக்காய் வெண்டைக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு தக்காளி முள்ளங்கி,சௌச்சௌ,,,இவைகள் இவன் வாங்கிய காய்கறிகளாக இருந்தது.

வாங்கிய காய்கறிகளை வட்டத்தட்டில் போட்டு விட்டு அதன்ஓட்டை வழியா கவும் பூக்கண் வழியாகவும் தெரிகிற காய்கறிகளின் நிறத்தையும் அதன் இருப்பையும் பார்க்கிற அழகே தனித்துவமாய்த்தான் இருந்தது,

இதுபோலவேசிறுசிறுகண்கள் வைத்து நெய்த சேலையில் மனோ அக்காவைப் பார்க்கும் போது நன்றாக இருந்ததிருக்கிறது, பொதுவாக அவளுக்கென அப்படி யான சேலைகள் எங்கு கிடைக்கும் எனத்தெரியவில்லை.எங்கு போய் வாங்குகிறாள் எனவும் தெரியவில்லை.

அவளைபார்க்கநினைக்கிற நேரங்களில் கேட்க நினைப்பதுண்டுதான், ஆனால் அப்படியாய் கேட்கஇது நாள் வரை இவனுக்குவாய்க்கவில்லை. நேரடியாய் அவளைப் பார்க்கிற வாய்ப்பும் சரி,அவளிடம் பேசுகிற சந்தர்ப்பமும் சரி இன் னும் கிடைக்கவில்லை எனச்சொல்லலாம்.

தினசரி காலை வாக்கிங் போகும் போது அவளை பார்ப்பதுண்டு,மிகச்சரியாக பார்க் அருகில்/ 

அது என்ன நெசவு எனத்தெரியவில்லை இவர்களுக்குள்ளாக,தினசரி இப்படிப் பார்க்கிற வித்தை கலந்த ஒற்றுமை நடந்து விடுகிறதுண்டுதான். இத்தனைக் கும் இவன் குடியிருக்கிற ஏரியா வேறு,அவள் குடியிறுக்கிற ஏரியா வேறு, ஆனாலும் இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக பார்க் அமைந்து போவதில் ஆச்சரியம் இருக்க முடிகிறதுதான் இன்றளவுமாக/

அவளிடம் அடிக்கடி பேசி உறவாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண் டுமானால் ஒன்று அவள் குடியிருக்கும் ஏரியாவில் போய் இவன் குடியேற வேண்டும்அல்லது இவன் இருக்கிற ஏரியாவிற்கு அவளை குடி வரச் சொல்ல வேண்டும்.  இரண்டில் எது ஒன்று நடந்தாலும் கூட இவனுக்கு லாபம்தான்,
ஆனால் அவள் இவன் ஏரியாவிற்கு குடிவருவது கனவிலும் நடக்காத ஒன்று. இவன் அங்கு போவது வேண்டுமானால் சாத்தியம்,வாடகை வீடுதானே, 
கொடுத்த அட்வான்ஸ் தவணை நேரம் கூட முடியப்போகிறது,இன்னும் ஒரு வாரம்தான்  இருக்கிறது, 

புது வீடு பார்க்க பால்காய்ச்ச சாமான் சட்டுகளை ஒதுக்கஎனஇந்த நாட்கள் கூடப் போதாதுதான்.ஆனாலும் ஒரு முயற்சியே,,,,,,/ 

எதற்காக வீடு மாற்றம்,ஏன் இந்த எண்ணம் இப்பொழுது இருக்கிற வீட்டிற்கு என்ன குறைச்சல்,,,,,,ஒருவரை அடிக்கடி பார்க்க வேண்டும் என்பதற்காக வீடு மாற்றவேண்டுமாஎன்ன,,,அடிக்கடிகோயிலுக்குப்போகிறவர்கள் கோயிலுக்குப் பக்கத்தில் போய் வீட்டை வைத்துக்கொள்ள யோசிப்பது போல/

அவரவர் சௌகரியம்,அவரவர்களுக்கு வாய்த்த வாய்ப்பு எப்படியோ அதுபடித் தானே எல்லாமுமே/ 

வாடகைஅட்வான்ஸ்,அக்கம் பக்கம் தெருவின் தன்மைஎனஇன்னும் இன்னு மான நிறைந்து போன விபரங்கள் உள்ளடங்கிக்கானப்படுகிற போது திடுதிப் என வீடு மாற்றம் என்பதில் சாத்தியம் சற்றுக்குறைவுதான்.

மனோஅக்காவின்வீட்டுக்காரர் கூட சொல்வதுண்டு அடிக்கடியாய் இவனிடம் என மாப்புள, குடி வந்துருங்க ஏன் வீட்டுப்பக்கம்,ஏன் சொல்றேன்னா நமக்கும் ஒன்னுக்கொண்ணு பாதுகாப்பா இருக்குமா இல்லையா,,?என்ன சொல்ற என் பார்.

சிரித்துக்கொள்வான் இவன்.அவருக்குப்பிடித்ததும் அணிவதும் வெளிர் நிற உடைகளே,கேட்டால் சொல்வார்,சிம்பிளி பெஸ்ட் இதுதான் என,அவர் அணி கிற உடைகள் பெரும்பாலுமாய் நகரில் எங்கும் கிடைக்காது போல் இருக்கும். ஆனால்ஈஸியாகக்கிடைக்கும்,

அவர் ஒரு கதர்க்கடையில் கணக்கு வைத்திருக்கிறார்,சுதந்திரப்போராட்ட தியாகியின் கடை அது,அவருக்கு வயதாகி விட்டதால் அவரது பிள்ளைகள் தான் கடையைப்பார்த்துக்கொள்கிறார்கள். 

பெரும்பாலும் அவரது மூத்தபெண்தான் கல்லாவில் உட்கார்ந்திருப்பார். இளை யவன் லையனுக்குப் போய் விடுவான்.என்றாவது ஒரு நாள் தியாகியும் அவரதுமகளும்மகனுமாககடையில்இருப்பார்கள்.கடையேஅந்நேரம் கலகலப் பாக இருக்கும்.அந்நேரம் யார் போனாலும் வாங்கபோன வியாபாரம் போக உபரியாக கொஞ்சம் கலகலப்பையும் வாங்கி வரலாம்.இவனும் போயி ருக்கிறான். எப்பொழுதாவது ஒரு முறை அல்லது தேவை வரும் போது/ 

ஆனால் சட்டைத்துணி மற்றும் பேண்ட எதுவும் பார்த்ததில்லை தனியாக, அவரது கண்ணுக்கு மட்டும் பட்டது எப்படி எனத்தெரியவில்லை.சில நல்ல விஷயங்கள்சிலரது கண்ணுக்கு மட்டுமே தெரியும் என்பார்கள் அதுபோலவா மாமா என அவரிடம் கேட்ட பொழுது அப்படியெல்லாம் இல்லை, நீங்கள் கதர் ஸ்டோர் என்றால் சில குறிப்பிட்டது மட்டுமே விற்கும் அல்லது கிடை க்கும்எனநினைத்துக்கொண்டு இருந்திருப்பீர்கள் ஆனால் அங்கு இது போலான சட்டைத்துணிகளும்இன்னும்சொல்லப்போனால்ரெடிமெட்பேண்ட் சட்டையும்  கூடக் கிடைக்கும்.நன்றாகக்கூட இருக்கும் சமயத்தில்/

நகரில் உள்ள கடைகளில் அதிகமாக எங்கும் கிடைக்காத டிசைன் கூடக் கிடைக்கும்.நான்அந்தப்பக்கம்போகும் போது வரும் போதும் பார்த்து வைத்துக் கொண்டுபோவதுண்டு.இதுபோல்நல்லதாகப்பார்க்கக்கிடைக்கிற சமயங்களில்  எடுத்துக்கொண்டு வந்துவிடுவேன்என்றார்.

அதுபோலவேமனோஅக்காவும்,ஒருரெடிமேட் கடையில்கணக்குவைத்திருக்கி றார்,இவனையும்கூடச்சொல்வார்கள்இரண்டுபேரும்வேண்டுமானால்உனக்கு க்கூட கடையை அறிமுகம் செய்து வைக்கிறோம். கணக்குவைத்து வாங்கிக் கொள்,உனக்குவிருப்பம் இருக்குமானால் சீப் அண்ட் பெஸ்ட் ஆகஇருக்கும் என்றார்கள், 

உடை விஷயங்களில் மட்டுமல்ல,மற்றமற்றதான எல்லா விஷயங்களிலும் இரண்டு பேரும் அப்படித் தான் இருக்கவும் செய்தார்கள்.கேட்பவர்களிடமும் சொன்னார்கள் ,நீங்கள் இப்படியெல்லாம்இருந்தால் நல்லது.என நினைக்கி றோம் என/

அவர்கள் சொன்னதை கேட்பவர்களும் முன்னால் விட்டு பின்னால் கேலி செய்பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.

ஆனாலும்அவர்கள் வழக்கம் போலவே இருக்கிறார்கள் இந்த நிமிடம்வரை,,,,,,, இவன் கூட சமயத்தில்/

சிவப்புக்கலரில் பொடிப்பொடி கண்வைத்து நெசவு நெய்தது போல் இருந்த கூடை நன்றாக இருந்தது பார்ப்பதற்கு, வட்டமாக சின்ன சைஸில் இருந்த நான்குகூடைகள் அடுக்கப்பட்டு இருந்த ட்ரேயை வாங்கிவந்த அன்றே அதற்கு வேலை வந்து விட்டது. 

தக்காளி உருளைகிழங்கு மற்றும் இன்னப்பிற காய்கறிகள் மற்றும் தேங்காய் வைக்க என அந்த ட்ரேயில் இடம் சரியாக இருந்தது.அந்த ட்ரே இப்பொழுது இல்லை வீட்டில் பிய்ந்து போனது.தூக்கி எறிந்து விட்டார்கள்.அதன் நான்கு வருட உழைப்பையும் சேர்த்து/

வீட்டில் பிரிட்ஜ் வந்து விட்டது.வாங்கிப்போகிற காய்கறிகளை அதில்தான் வைத்துக் கொள்கிறார்கள் இப்போதைக்கு/

இவன் கடையில் வாங்கிய காய்கறிகள் தவிர்த்து மற்றதெல்லாம் வேண்டாத தெல்லாம்இல்லைஎனஇல்லை.இப்போதைக்குதேவைஇல்லை.அவ்வளவே,,,,,, இவைகள்தான் வாங்க வேண்டும் இவைகளெல்லாம் வாங்க வேண்டாம் என வீட்டிலிருந்து முடிவெடுத்ததெல்லாம் வருவதில்லை. வந்த இடத்தில் முடி வெடுத்து வாங்குவதுதானே,,?

வேலை பார்க்கிற தனியார் அலுவலகத்தில் வருகிற மக்களிடம் இப்படித்தான் இவன் சொல்வதுண்டு.நாங்க என்ன வீட்லயிருந்து கெளம்பி வரும்போதே இன்னாரவையணும்,இன்னார்கிட்டக்கோபப்படணுன்னுமுடிவுபண்ணிக்கிட்டா வாரோம்.ஒருஆத்தாமையினாலும்ஆத்துரத்துலயும்நடந்து போற விஷயந் தான இதெல்லாம்என்பான்.அது போலவேஆகிப்போகிறது.இவன்வாங்கிய தேங்காய் உட்பட/

வீட்டின்அருகிலிருந்த காய்கறிக்கடையில் அவசரத்திற்கு ஒரு நாள் இரண்டு தேங்காய்ச் சில் வாங்கப்போயிருந்தான்.

கொடுக்க மாட்டேன் வழக்கமாக இங்கு சரக்கு வாங்குபவர்கள் இல்லையே நீங்கள், உங்களுக்கு நாங்கள் தேங்காய்ச்சில் தரமாட்டோம்,,,,போய் வாருங்கள் என்றாள் கடைக்காரி.

அவளுக்கு மொத்தமாக காய்க்கறிகள் எல்லாம் பஜாரில் வாங்கிவிட்டு சில்ல றைக்கு மட்டும்இங்குவாங்கவருகிறார்கள்என்கிறஆதங்கம். அந்தஆதங்கம் தான் இவனுக்கு தேங்காய்ச்சில் இல்லை என கடைக்காரியைச்சொல்ல வைத்திரு க்கிறது.

இது நடந்து ஆறு மாதங்கள் இருக்கலாம்.இவன் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது கடைக்காரர் இவனைப்பார்த்து இடை மறித்துக் கேட் டார். ”ஏன் சார் கடைப்பக்கம் இப்ப ஆளையே காணேம்.சாமான் ஏதும் வாங்க வரமாட்டேங்கிறீங்களே என்ற போது பொறுக்கமாட்டாமல் சொல்லி விட்டான் இவன்.தேங்காய்ச்சில் சம்பவத்தை/

சரி சரி ஒரு தடவ ஏதோ தப்பு நடந்து போச்சி,இனிம வாங்க தர்றோம் என்று சொன்ன சொல் இந்த நிமிடம் வரை இவன்மனதில்நிற்கிறதுதான். ஆனால் இவன் இதுநாள்வரைகடைக்குப் போனதில்லை.

மனைவியோஅல்லதுஇளையவளோ மூத்த மகனோதான் போய் வருவார்கள், இப்பொழுது எது கேட்டாலும் இல்லை எனச்சொல்வதில்லை. பரவாயில்லை என்றாலும்அதற்குக்காரணம்இல்லாமல்இல்லை,அவர்களதுகடைக்குஇரண்டு கடை தாண்டி ஒரு கடையும் பிள்ளையார் கோயில் அருகிலிருக்கிற காம்ப்ள க்ஸில்புதிதாக ஐந்து ரூபாய் காய்கறிக்கடை வந்துவிட்டிருந்ததே அவர்களை இந்த அளவிற்காய் இறங்கிவந்து பேசவைத்து விட்டது.

இந்தகாய்கறிகளெல்லாம்வாங்கியதுஒரேகடையில்தான்என்றாலும் ஒவ்வொ ன்றும் ஒவ்வொரு குணம் கொண்டவையாயும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலைகொண்டதாயும் இருந்தன.

இதில் மற்ற காய்கறிகளெல்லாம் ஓ கே. தக்காளி மட்டும் கண்ணாமூச்சியா ட்டம் காட்டிக்கொண்டிருந்ததாய்/ 

இவன் போய் நின்றதும் ஐயா வாங்க என பேச்சில் பிள்ளையார் சுழியிடுகிற கடைக்காரர் என்ன வேணும்,என்ன வேணும் எனக்கேட்டுக்கொண்டே இவன் கேட்காதகாய்கறிகளையும்சேர்த்துப்போட்டுவிடுவார்.

சிட்டைபோடும்போதுதான் தெரியும்.மறு நாள் வைத்திருந்தால் கெட்டுப் போகும் அல்லது தாங்காது என்கிற நிலையிலிருக்கிற காய்கறிகளை தள்ளி விட்டிருக்கிறார் என/

கேட்டால்நீங்கள்கேட்டதாய்ஞாபகம்போட்டுவிட்டேன்என்னஇப்போஅதனால் கொண்டு போங்கள் வீட்டிற்கு சமைத்துப்போடுங்கள் பிள்ளைகளுக்கு சாப்பி டட்டும் வயிராறவும் மனதாரவும் எனச்சொல்லிச்சிரிப்பார். 

அந்தச்சிரிப்பிலிருக்கிறவெள்ளந்தித்தனத்திற்குஇவனது வெள்ளந்தித்தனமான சிரிப்பே பதில் சிரிப்பாய் அமைந்து போவதாக/

ஓடி ஓடி பிறருக்கு உதவி செய்கிற மனோ நிலையும் கழிவிறக்க குணமும் இளக்காரமாய்ப்பார்க்கப்படுகிற நிலைஉருவாகிப்போகிறதாக பலசமயங்களில் பல இடங்களில்/அது சமயத்தில் தனக்கே வேட்டு வைத்து விடுகிற பைத்தியக் காரத்தனத்தை செய்து விடுவதாக/

இன்றிலிருந்துபத்துவருடங்கள் பின்னோக்கி இருக்கும் என வைத்துக் கொள்ள லாம். தற்செயலாய் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு நாளில் அவர்தான் சொன்னார்.விடுசொன்னா சொல்லீட்டுப் போகட்டும், நீ வெள்ளந்தித்தனமா இருக்குறதுனாலஒனக்குஒன்னும்நஷ்டம்கெடையாது,ஆனா அவுங்க கெட்டிக் காரத் தனமா இருக்குறதா நெனைச்சிக்கிட்டு ஆள்கக்கிட்ட இருந்து வெலகி போறாங்க, தவுர ஓங்கிட்ட பழகுறவுங்க ஓங் மேல உண்மையான மதிப்பு வச்சி பழகுறாங்க,ஆனா அவுங்ககிட்ட பழகுறவுங்க அப்பிடியில்ல ஏதோ ஒரு அவசி யத்துனாலயும்,பயத்துனாலயும் பழகுறாங்க,அந்த வித்தியாசம் இங்க ரொம்பப் பெரிசு அத மனசுல வச்சிக்க,மனசப்போட்டு வீணா ஒழட்டிக்கிறாத என்பார். 

ஆனால் அப்படியெல்லாம் உழட்டிக்கொள்ளாமல் இருந்து விட முடிவதில்லை எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும்/

பழகுகிற பழக்கம் வழக்கமாய் வாங்குற முக தாட்சண்யம் இன்னும் இன்னு மான எல்லாம் சேர்ந்து அவரிடமே காய்கறிகளை வாங்க வைத்து விடும். அப்படியே வாங்கினாலும் சின்ன வெங்காயம் பல்லாரி ,தேங்காய் மூன்றை யும் வாங்க மாட்டான். காரணம் பக்கத்திலிருக்கிற கடையில் வெங்காயம் தேங்காய் இருக்கிறது.காய்கறிக்கடைக்காரர் இங்கு கடை போடுவதற்கு முன்பே தேங்காய்க்கடைக்காரர் இவனுக்குப்பழக்கம்.இவனது மனைவி கூடக் கேட்பதுண்டு.ஏன் ஒரே கடையில் எல்லாம் இருக்குறதும் நமக்கு சௌகரியம் தான, வாங்கிப்போட்டுட்டு வர வேண்டியதுதான்,ஒன்ன இங்க வாங்கி இன்னொன்ன அங்க வாங்கன்னு இல்லாம எனச்சொல்லும் போது இவன் சொல்லுவான் அது எப்படிம்மா,,,,நேத்துப்பேஞ்ச மழையில மொளச்ச காளான நம்பி முந்தா நாள்வெளஞ்சி நிக்கிறத கண்டுக்காம விடமுடியுமா சொல்லு,,, என்பான்/

.அவரிடம் தேங்காய் வெங்காயம் மட்டும் என இல்லை.ஞாயிறுகளில் அவரது கடைக்குப்போனால்வாழை இலையையும் சேர்த்து வாங்கி வருவான். கடைக் காரரே அதை நறுக்கி ஐந்து அல்லது ஆறு பேர் சாப்பிடும் படி கட்டிக் கொடு த்து விடுவார்.

எப்பொழுதிலிருந்து இவனுக்குஅந்தப்பழக்கம் உருவானது எனத் தெரியவில் லை. மிக்கேல்அந்தக் கடையில் வேலை பார்த்ததிலிருந்து இந்தப் பழக்கம் இவனில் சுழியிடுகிறது என வைத்துக்கொள்ளலாம்/

அப்பொழுதெல்லாம் பஜாரில் வெங்காயம் காய்கறிகள் மற்றும் தேங்காய் எங்கு வாங்கலாம் என இலக்கற்றிருந்த நாட்கள்,இதுதான் என இல்லாமல் நினைத்த கடையில் நினைத்த காய்கறிகளை வாங்கினான்.

மார்க்கெட்டிற்குள் போனால் மொத்த வியாபாரமாக விற்கிற கமிஷன் கடை கள் நான்கு உண்டு. என்ன அங்கு ஒரு பெரிய வம்பு என்றால் நாம்தான் காய் கறிகளை தேர்ந்தெடுத்து பொறுக்கிப்போட்டு நிறுக்கக்கொடுக்க வேண்டும். அதிலும்நாம்தான்பைகொண்டு போக வேண்டும்.ஆத்திர அவசரத்திற்குக்கூட கேரிபேக்தரமாட்டார்கள்,கேட்டால் அவர்கள் சொகிற ஒரே வார்த்தை இல்லை என்பதுவே/

அப்படியிருந்தும் கூட அங்கு போய் ஏன் வாங்குகிறார்கள் என்பதற்கும் ஒரு காரணம் இருந்தது.அங்குவிலைக்குறைச்சல்.குறைச்சல் என்ன குறைச்சல் மற்ற கடைகளுக்கும் இங்கு வாங்குவதற்கும் பெரிதாய் ஒன்றும் வித்தியாசம் வந்து விடப்போவதில்லை.நம்மில்விகிதப்பட்டுநிற்கிற திருப்தியே/

மற்ற கடைகளில் வாங்கினால் காய்கறிகளை பெறக்கிப்போட்டு கட்டிக் கொடு த்து விடுகிறார்கள்.டீயிலிருந்து ஹோட்டலில் சாம்பார் சட்னி வரை எல்லா மே அதில்தான் என்றாகிப்போன பிறகு இவர்கள் மட்டும் இல்லை இல்லை என்றுசொன்னால் எப்படி,,,?அடப்பாவமேஎன யோசித்த ஒரு நாளில் வாங்கிய கடைதான் இந்தக் கடையாக இருக்கிறது.

கடைக்காரர்நிறுத்துப்போட்ட காய்கறிகளில்தக்காளியும் சௌச்சௌவும் தவிர் த்து மற்றதெல்லாம் சாதாரண விலையில்தான் இருந்தது.வாங்கிய காய் கறிகளை பைக்குள்ளாகவைத்துவிட்டு பணம்கொடுக்கும்போது சொல்கிறான், சௌச்சௌ வெலைக் கூடன்னு சொல்லீருந்தா அப்பதையே வாங்கீருக்க மாட்டேனே என,,,,,,,,,/

9 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Nagendra Bharathi said...

காய்கறி கடை அனுபவம் அருமை

vimalanperali said...

வணக்கம் நாகேந்திர பாரதி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

துரை செல்வராஜூ said...

பச்சைக் காய்கறிகளின் வாசத்துடன் -
மார்க்கெட்டினுள் நடந்து வந்த அனுபவம்..

இனிய நடை.. வாழ்க நலம்..

vimalanperali said...

வணக்கம் துரை செல்வராஜ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

KILLERGEE Devakottai said...

கூடவே வந்தது போன்ற உணர்வு அருமை
த.ம 2

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி தேவகோட்டை சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வாக்களிப்பிற்கும்,,/

வலிப்போக்கன் said...

அருமை....