20 Jul 2016

எதிர்முனை,,,,

இவன் அங்கு போன போது ஒருவரும் காணக்கிடைக்கவில்லை.

தோழர்களை எதிர் நோக்கிப்போயிருந்தான்.தோழர்குமாரும்கண்ணனுமாய் வருகிறேன்எனச்சொல்லியிருந்தார்கள்.அவசரம்ஊன்றியஉலகில்எந்த நேரம் எந்தவேலைமுளைத்தெழுகிறதுஎனச்சொல்லிவிடமுடியவில்லை.

அப்படியாய் முளைத்தெழுந்த வேலையின் முனைபற்றிஎங்காவது சென்றிரு க்கக் கூடும் அல்லதுஏதாவதுபணிநிமித்தமாய்எங்கேனுமாய்சென்று கொண் டிருக்கலாம்.

மணியண்ணன்தான் சொல்வார், நிறைந்திருக்கிற சொந்தங்களில் எந்நேரம் யாருக்கு என்ன வருகிறது எனச்சொல்ல முடியவில்லை.என/ஒன்று உடல் நலமில்லாமல் ஆஸ்பத்திரி மருத்துவம் என இருக்கிறார்கள் அல்லது கல்யா ணம் காச்சி விஷேசவீடுஎன ஆகிப்போகிறது.வருடம் முழுவதுமாய் இதற் கென போய் வர தனி மனமும்,உடலும் கூடவே கொஞ்சம் பணமும் வேண்டி யதிருக்கிறதுண்ணே என/

இவனுக்கானால்கொஞ்சம்ஆச்சரியமாகக்கூடஇருக்கும்.எப்படிமனிதர்இப்படி அலைகிறார்.இந்த அலைச்சல் எப்படி இவருக்கு சாத்தியமாகிறது என/

வாரம் முழுக்கவுமான அலுவலக வேலை,குடும்பம்,நண்பர்கள் தோழர்கள் மற்றும் மற்றுமான அவரது செயல்களையும் வேலைகளையும் ஈடுபாடுக ளையும் தாண்டி இப்படியெல்லாம் அலையவும் போகவும் வரவுமாய் அவரால் முடிந்திருக்கிறதேஎன்கிறஆச்சரியம்இவனில்சுழியிடாமல்இல்லை.மணியண்ணனை நினைக்கிற நாட்களில்/

பெரிதாய் ஒன்றும் நிகழ்ந்து விடப்போவதில்லை,திரித்து கேப்பை நட்டு விட வும்செய்துவிடப்போவதில்லை.மூவரின்சந்திப்பில்/கொஞ்சம்தேநீர்கொஞ்சம் பேச்சு,கொஞ்சமாய் இல்லாமல் ஒரு வடை என கலைந்து விடுவார்கள். அவ்வ ளவே/

பணிமுடிந்து கிளம்பும் போதே முடிவு பண்ணியிருந்தான்.இன்று எப்படியுமாய் இவர்கள் இருவரையும் சந்தித்து விடவேண்டும்.அல்லது சந்தித்தே தீர வேண் டும் என/திங்கள்க்கிழமை அவசரமும் ஆளை அமுக்கிவிடுகிற வேலைப் பளுவுமாய்அன்றும் வழக்கம் போல் முளைத்து விட அலுவலகம் விட்டுக் கிளம்புகையில் கிர்ரிட தலையுடனும் அலுத்துப்போன மனதுடனுமாய் வருகிறான். ஆனால் இவன்இருசக்கரவாகனத்தில் கடந்து வந்த எட்டுக் கிலோ மீட்டர் தூரமும் பூச்செரிந்த தோழர்களின் நினைவே மனதை ஆக்ரமித்து அள்ளி மூடியிருந்ததாய்/அதை அவிழ்க்கமனமில்லாமல் செரிந்துகிடந்த பூக்க ளின் மேலே வண்டியை ஓட்டியவனாய் வந்து கொண்டிருந்தான்.

இப்படியாய்சாலைமுழுக்கவுமாய்அள்ளித்தெளித்தகலர்ப்பூக்களாய் நிறைந்து கிடந்தால் சாலையில் விரைகிற கனரகமற்றும் மிதரக வாகனங்களுக்கு இடை ஞ்சல் முளைத்து விடாதா என்ன?தவிரவும் பூக்களின் நிறை வாலும் நறுமண த்தாலும்வாகனஓட்டிகளும்வாகனத்தில் பயணப் படுபவர்களுமாய் ஒரு வித சங்கட மனோநிலைக்குஆளாகிவிட மாட்டார்களா, தவிர நிறைந்திருக்கிற மல ர்கள் தடுக்கிவாகனங்கள்சாலையின் இரு ஓரங்களிலுமாய் வறண்டு கிடக்கிற ஓடைகளில் விழுந்து விடாதா என்ன?

இப்படித்தான் ஒரு மழை மிகுந்த கார்காலமொன்றில் வள்ளியூரைக் கடக் கையில் ரோட்டின் இடது புறமாய் இருக்கிற கரிசல் காட்டின் நடுவிலாய் நின்ற வேப்பமரத்தில் வெள்ளை வேஷ்டி சட்டையுடன் ஆணின் பிணம் ஒன்று கயிற்றில் தூக்கிட்டுத் தொங்கியது விரைத்துப்போய்/நேற்று இரவு பெய்த மழையில் ரோட்டின் இருபக்க ஓடைகளிலும் தண்ணீர் கரை மோதி/ வண்டியை ஒரம் கட்டிவிட்டுபோய் பார்த்துவிட்டுவரலாமென்றால் ம்கூம்,, ,,,,,,,முடியாது போலிருக்கிறது.காடெல்லாம் பூத்து நிறைந்திருந்த ஈரம் நிலத் தில் காலை வைத்தால் முழங்காலுக்குக் குறையாமல் இறங்கும் போலிருக் கிறதே/இவனுக்குத் தெரிந்து இரவெல்லாம் மழை பெய்து கொண்டிருந்த பொழுதுஇதுஎப்படிஎனத்தெரியவில்லை.அதுசரிதான்.மனம்வெறுத்தவனுக்கு மழை என்ன இடி என்ன புயல் என்ன?

இறந்து போனவருக்கு திருமண வயதில் ஒரு பெண்ணும்,பத்தாம் வகுப்புப் படிக்கிற மகனும் இருப்பதாய் பேசிக் கொண்டார்கள். விதைத்த விதைப்பு, விளைந்த வி்ளைச்சல்,நம்பியிருந்த கரிசல் பூமி மனதிலிருந்த நம்பிக்கை எல்லாமுமாய் கூட்டுச்சேர்ந்து பொய்த்துப்போய் விட இப்படி அனாதரவாய் தூக்கில் தொங்கியிருக்கிறார் எனபேசிக் கொண்டார்கள்.

அவர் தொங்கிய கயிறு போனவாரம் அவர் விலை பேசி விற்ற ஒரு ஜோடி காளைகளில் ஒன்றின் பிடிகயிறு எனபேசிக் கொண்டார்கள். அவர் ஒன்றும் குடும்பத்தை நிர்க்கதியாய் நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டு போய்விட வில்லை.காளை மாடு விற்ற காசு கொஞ்சம் சொந்த வீடு ,ஐந்து குறுக்கம் கரிசல் காட்டையும்,மூன்று குறுக்கம் நன்செய் நிலத்தையும் விட்டுவிட்டுத் தான் சென்றிருக்கிறார்.இவன் போனாலும் குடும்பம் ஒண் ணும் நடுத்தெருவுல நின்னுறாது என்கிற பேச்சுடனும்,பெருமூச்சுடனுமாய் நிகழ்ந்துமறைந்த அவரது மரணம் பற்றியான அவதானிப்புகளுடன் அன்றா டங்களை கடக்கி றார்கள்  அந்த ஊர் மக்கள் என்கிறதாய் பேச்சு இதுவரை/

இவன் தேடிவந்த ஒருவரும் காணக்கிடைக்கவில்லையென்றால் என்ன இப் பொ ழுது கெட்டுப்போனது?அதான் டீக்கடை இருக்கிறதே,ஜேம்ஸ் மணி இருக்கிறாரே.வரிகள்தாங்கிய கண்ணாடிகிளாஸில்தேநீர்அருந்துபவர்களும் ,தேநீர்ப்பட்டரையின்இடது ஓரமாய் மடக்கி வைக்கப்பட்டிருந்த தகரத்தின் அருகேசெய்தித்தாளிட்டுமூடப்பட்டிருந்தவடைத்தட்டிலிருந்து வடைகளை எடுத்துக் கடிப்பவர்களுமாய் போட்டிபோட்டுகாணப்பட்டார்கள்தான். இந்தப் போட்டிஎதற்காக,யாருக்காக, என்பதையெல்லாம் மீறி இந்தப்போட்டி இருந் தால் என்ன இப்பொழுது ,இருந்து விட்டுத்தான் போகட்டுமே?அது ஒரு ஓரமாகவும் தளர்வாகவுமாய் என்கிற உயர் நவிற்சி நினைப்புடன் இருந்த ஜேம்ஸ்மணியின் விழிப்படர்வில் விரிவுபட்ட நேரம் ரோட்டின் இடது ஓரமாய்ரோட்டைஅகலப்படுத்துவதற்காய் பரப்பிப்போடப்பட்டிருந்தஜல்லிக் கற்களின் மீது இருசக்கரவாகனத்தை நிறுத்தியபோது கூப்பிட்ட போனை எடுக்காமல் இருக்க முடியவில்லை.

போனில் அழைத்தது தோழராயும், போனை எடுத்தது இவனாகவும் ஆகிப் போன கணங்களில் இவனைப் பார்த்ததுமாய் தேநீரை ஆற்றி விடுகிறார் ஜேம்ஸ்மணி என்கிற கடையின் உரிமையாளர்.அவருக்கும் எப்பொழுதுமே டீ சர்ட் மட்டுமே பொருத்தமாய் இருந்திருக்கிறது.அவருக்கு/

அது எப்படி அப்படி எனத்தெரியவில்லை.பேரன் பேத்தி எடுத்துவிட்ட இந்த வயதிலும் அணியும் இளம் உடைகளில் எப்படிப்பொருந்திப்போகிறார் என் பது சற்றே வியப்புகலந்த ஆச்சரியமாகவே/ சந்தர்ப்பம் வாய்த்தால் அவரை ஒரு முறை தனியே அழைத்து கேட்டே விடவேண்டும்.உங்களது உறவினர் மட்டும் கறுப்புப்பேண்ட் வெள்ளைச் சட்டையில் கனக்கச்சிதமாய் உருமாறித் தெரிந்த போதும்கூடஅவரதுவயதிலிருந்துஅவர் இம்மியளவு கூட இறங்கித் தெரியாத போது நீங்கள் மட்டும் எப்படி இப்படி என/அதற்கானஅவரதுபதில் அநேகமாய் சிரிப்புடனான”அதெற்கெல்லாம்குடுத்துவச்சிருக்கணும்”என்பதாகத்தான்இருக்கும்.

சென்னை போய் வந்த அவர் மூன்று தினங்களுக்கு முன்பாகத்தான் கடை திறந்ததாய்ச்சொன்னார்கள்.அவரதுமூத்தமகன்சென்னையில்தான்இருந்தான் சிவில் இஞ்ஜினியராக/அவனது இளைய மகனை ஜேம்ஸ் மணிக்கு ரொம்ப வும் பிடிக்கும்.மனதுஅரிப்பெடுக்க ஆரம்பித்து விட்டால் பேரனின் நினைவு தாங்கிய மனது சுமந்து ஜோடிக்கண்களில் கோடிக் கண்களின் ஆவல் தேக்கிக் கிளம்பி விடுவார் மனிவியை உடன் அழைத்துக் கொண்டு/

பின் என்ன.பேரனின் ஆசைஒருபக்கம் இருந்தாலும் பிழைப்பின் அவசியம் உறுத்தமூன்றுநான்குநாட்கள்கழித்துவந்துகடையைத்திறப்பார்.அந்தஉலகத்தி லிருந்து விடுபட்டு ஓடிவந்து/

இப்படி சென்னைக்கும்,இங்குமாய் ஒவ்வொருமுறையுமாய் டிக்கெட் எடுத்துக் கொண்டு போய் வருவதற்குப்பதில் சீசன் டிக்கெட் எடுத்துவிடலாமே பேசாமல் என்பார்கள்நண்பர்களும்தோழர்களுமாய்/அவர்கள்சொன்னஉண்மையைஅவர் உணர்ந்து பகுத்தாயும் முன்பாகவே மற்றொறு தடவை யாய் அவரது மனதில் ஆசை குடிகொண்டு விடும் பேரனைப் பார்க்க/ பின் என்னஜோடிக் கண்களில் கோடிக்கண்களின்ஆவல்,இத்தியாதி,இத்தியாதி,எனப்போய் விடுவார்.

இந்த இடத்தில் இப்படி ஒரு மரத்தின்வளர்ச்சியும்அதன்ஆகுருதியும்,அதன் நிழல் சிந்திய படர்வும் எப்படி சாத்தியம் எனத் தெரியவில்லை.இரு சக்கர வாகனத்தை நிறுத்தும் போதும் போனில் அழைத்த தோழருடன் பேசிக் கொண்டே நிமிரும்போதுமாய்அதன் படர்வும்அகலமும்கண்பட்டுத் தெரிகிற தாய்/

கிட்டத்தட்ட ஐம்பது வருட சரித்திரம் இருக்கும் போலத்தெரிகிறது அந்த மரத்திற்கு/அதன் வயது ஐம்பது வருடத்திற்கு மேலாகத் தான் இருக்குமே தவிர குறையாது என நினைத்தபடியே ஜேம்ஸ் மணி என்கிற கடையின் உரிமையாளர் கொடுத்த டீயை வாங்கிகொண்டபோது டீக்கடை உரிமை யாளர் சொன்னார்.நீங்கள் நினைப்பது சரிதான் சார்.ஆனால் இந்தப் பக்க மாய் நீளச்சாலையில் எங்காவது மரம் பார்த்திருக்கிறீர்களா? அல்லம்பட்டி முக்கு திருப்பத்திலிருந்து இதோ ஊர்ந்து போகிறதே இந்த சாலை அது முட்டித் திரும்புகிற வரை எங்காவது ஏதாவது ஒரு சின்ன மரமாவது தென் படுகிறதா பாருங்கள்.ஒருச்சின்ன கன்று கூட இல்லை.ஆனால் என்கடை யின்முன்பு மட்டுமாய் இவ்வளவு உயர மரம் இருக்கவாய்க்கப் பெற்றிருக்கிற அதிசயம் பார்த்தீர்களா?

ரோட்டை அகலப்படுத் துகிறேன் எனசாலையின்இருபக்கமுமாய் நீளமாய் பள்ளம்தோண்டியள்ளி அதில் நிறைத்துஜல்லிக்கற்கள்போட்டுநிரப்புவதற்கு சற்றே சில நாட்களுக்கு முன்பாய் சாலையின் இருபக்கமுமாய் ஆங்காங் கே இருந்த ஒன்றிரண்டு மரங்களை வெட்டியபோது இங்கிருந்த மரம் தப்பித்தது எங்களது கடுமையான எதிர்ப்பு மற்றும் மரத்தின் மூப்புமிக்க படர்வாலும் மட்டுமே என்கிறார் ஜேம்ஸ் மணி/

இப்பொழுது மட்டும் இல்லை.எப்பொழுதுமே மரங்களைப்பார்க்கிற போது மனம் கொள்கிற களிகொள்ளலுக்கு அளவில்லாமல் போய்விடுகிறதுதான். வள்ளியூர் காட்டில் வேப்பமரத்தில் தொங்கிய மனிதரின் உருவை கண் முன் கொணர்ந்து நினைக்காத வரைக்குமாய் என்கிற நினைவுடன் இருந்த கணங்களில் தான் வருகிறார்கள் தோழர் கண்ணனும்,குமாருமாக/

No comments: