4 Jul 2016

அந்திமம்,,,,,,

சுருங்கித்தெரிகிற அந்த முதிய விழிகளிலிருந்து
வழிகிற கண்ணீரின் ஆழம் எதைச் சொல்லிச்செல்வதாக?
80 ஐ எட்டித்தொடப்போகிற வயது கொண்ட
அவர் மாதங்களின் முதல் வாரத்திற்குள்
முதியோர்பென்சன்வாங்க தவறாமல் வந்து விடுகிறவராக/
வலுவிழந்த வாழ்வின் அடையாளங்கள்
இன்னுமாய் ஒட்டிக்கிடந்த உடல் சுமந்து
மழையில் நனைந்த கோழியாய் நடுநடுங்கி வருகிறார்.
கட்டிய மனைவி இல்லாது போயிருக்க,
பெற்ற பிள்ளைகள் திருமணம் செய்த இடங்களில்
தங்கி விட தனித்திருந்த அவர்
தன் உடல் திங்கும் நோய்க்கு மருந்து வாங்கவே
இந்தப்பணத்தை செலவிடுவதாய் சொல்கிறார்.
சுருங்கித்தெரிகிறஅந்த முதிய விழிகளிலிந்து வழிகிற கண்ணீரின் ஆழம் எதைச்சொல்லிச்செல்வதாக/

10 comments:

Thulasidharan V Thillaiakathu said...

வேதனை மிகுந்த வரிகள் அப்பட்டமாய்...

ஸ்ரீமலையப்பன் said...

கொடுமை ...

vimalanperali said...

வணக்கம் நாகேந்திர பாரதி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஸ்ரீ மலையப்பன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

KILLERGEE Devakottai said...

நிறைய மனிதர்களின் உண்மைநிலை இன்று இப்படித்தான் என்ன செய்வது ?
தமிழ் மணம் 1

Yarlpavanan said...

அருமையான கண்ணோட்டம்
தொடருங்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை நண்பரே

vimalanperali said...

வணக்கம் கில்லர்ஜி தேவகோட்டை சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/