7 Jul 2016

ஆனாலும்,,,

ஆனாலும் போயிருக்கலாம்
என்றே என்னத் தோனுகிறது .
திட்ட மிட்டபடியே சென்றிருக்கலாம் .
சிறப்பு நிகழ்ச்சியை ஒலி பரப்பி
தொலைக்காட்சியில் மனது லயித்து விட
அமர்ந்து விடுகிறேன் .
பச்சைக்கலர் புடவையும்
கருப்புக்கலர் ரவிக்கையும் அணிந்திருந்த
மனைவி ஒருபக்கமும் ,
பெர்முடாசும் வெள்ளை பனியனுமாய்
இருந்த மகன் மறு பக்கமுமாய்
நைட்டி அணிந்திருந்த இளைய மகள்
கழுத்தைக்கட்டியபடிசுற்றிலுமாய்
காலைச்சாப்பாட்டின்இனிய நேரமும்
தொலைகாட்சி நிகழ்ச்சிகளும்
எங்களது பேச்சுபரிமாறல்களும்
திட்டமிட்டதை
மறக்கடிக்க செய்துவிடுகிறதுதான் .
ஆனாலும் போயிருக்கலாம் என்றே  
இந்தக்கணம் வரை நினைக்க தோனுகிறது .

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்வான தருணங்கள் அல்லவா

KILLERGEE Devakottai said...

யதார்த்தம் நண்பரே
த.ம.1

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி தேவகோட்டை சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Yarlpavanan said...

அருமையான வரிகள்
தொடருங்கள்... தொடருவோம்...

vimalanperali said...

வணக்கம் காசிராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/