29 Jan 2017

மிளகாரம்,,,,,,/


மிளகாய் வாங்கினீர்களா காய்கறி வாங்குகிற போது எனக்கேட்ட மனைவியி டம் ஆமாம் எனச்சொன்னால் அது பொய்யாகி விடும்,இல்லை எனச் சொன் னால் அதுவே உண்மையாகிப்போகும்,

உண்மைக்கும் பொய்மைக்குமான இடைவெளியைக் கடப்பது இங்கு சிலருக்கு எளிதாக கைவரப்பெற்றதாய் ஆகிப்போகிறது, அதற்காய் கடல் கடந்தும், ஆகாய மார்க்கமாகவுமாய்,,,,/

சிலருக்கானால் தனது வீட்டின் வாசல் படிவரை கூட அந்த இடைவெளியை கட்டிக்காத்து கொண்டு சென்று விடமுடியவில்லை.

இதில் மிகைக் காரம்கொண்டமிளகாயைவாங்கவில்லை நான் எனச்சொல்லி விடுவது நல்லதும் சாலச்சிறந்ததும் ஆகிவிடுகிறது இந்த நேரத்தில்,,/

ஏன் இவ்வளவு தூரத்திற்காய்,,,மிகைக்காரம் கொண்ட மிளகாயை வேண்டும் என போன் பண்ணிச் சொல்லி விட்டால் அனுப்பி விட மாட்டார்களா கொரி யர் தபாலில் எனக் கேட்ட பொழுது அவள் அழுத்தம் கொண்டு முறைத்த நிமிட ங்கள் இன்னும் மனமெங்கும்உறைகொண்டுநிற்பதாய்,,,,/

அடேயப்பாஅந்தமுறைப்பும் விறைப்பும்,சமயத்தில் பார்க்க சிரிப்பாய் வந்து விடுவதுண்டுதான்,ஆனாலும் சிரிப்பதில்லை இவன்,எதற்கு நமக்கு உயரிய வீண் வம்பு என நினைத்து/

கொரியக்காரர் வருகிற நேரத்தில் முள் பார்த்து வரச்சொல்லவேண்டும் என சொல்லியிருக்கிறான்.

சைக்கிளில் வருகிற அவர் இதுபோலாய் தபால் கொண்டு வருகிற போதுதான் கொரியர்க்காரர் என அறியப்படுகிறார்,மற்ற வேளைகளில் குறிப்பாககாலை வேளைகளில் கோலப்பொடி சுமந்து வருகிற வியாபாரியாக காட்சியளிக்கி றார்.

எத்தனை தெருக்களில் இப்படி காட்சிப்படுவார் எனத்தெரியவில்லை,ஒரு நாளின் அதிகாலையில் வழக்கமில்லாத வழக்கமாக சீக்கிரம் எழுந்து தெரு வோரக்கடையில் தேநீர் அருந்திவிட்டு மறு முறையுமாய் தூங்க மனமில் லாமல் என்ன வாசலில் கோலமிடுகிற மனைவியுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டும் மற்ற மற்றதானசிறு சிறு வேலைகளை செய்து கொண்டுமாய் இருந்த வேளையில்தான் வருகிறார் அவர் கோலப்பொடி வியாபாரி வேடம் பூண்டு/

அப்பொழுதுதான் பார்க்கிறான் அவரை,ஆகா என்ன இது இப்படியாய் ஆகித் தெரிகிறாரே இவர் கொரியர் ஆபீஸில் இருப்பவராயிற்றே என அருகில் வந்த தும் உற்று ப்பார்த்து உறுதி செய்தவனாக வணக்கம் வைக்கிறான் சார் எனக் கூப்பிட்டு/

கையெல்லாம் கோலப்பொடியுடனும் பழைய துருப்பிடித்த சைக்கிளை கைக் குள்ளாக வைத்துக்கொண்டுமாய் இருக்கிற அவரை அந்த வேளையில் யாரும் அந்தத்தெருவில் சார் என அழைக்கவில்லை

ஐயா கோலப்பொடிக்காரரே,அண்ணே கோலப்பொடி அண்ணே,யோவ் கோலப் பொடி யேவாரி,,,,என்கிற அடைமொழிகொண்டும் இன்னும் பலவாறுமாய் அவ ரைஅனைவரும்அழைத்தகணங்களில்சார் என விழித்தது இவன் ஒருவனாகத் தான் இருக்க முடியும் என உறுதிபடக்கூறிவிட முடியும்/

தொள தொள பேண்ட்டும் ஏதோ கலரில் ஒரு சட்டையுமாய் வந்து காட்சிப் படுகிற அவர் இப்படித்தான் தபால்கொண்டு வந்த ஒரு நாளின் மதியப் பொழு தன்று அவரது சைக்கிள் முள் தைத்து சைக்கிளின் முன் டயர் பஞ்சராகி விட அந்நேரம் போய் எங்கு ஒட்டுவது,சைக்கிளை உருட்டிக்கோண்டு போய் கடை தேடிக்கொண்டிருந்தால் ஆக வேண்டிய வேலைகள் முடங்கிப்போகிற ஆபத்து இருக்கிறது,வேண்டாம்,,,,,,ஆகவேஎனநினைத்தவராகபக்கத்துத்தெருக்களுக்கு நடந்தே போய் தபால் கொடுத்துவிட்டு வந்து பிறகு எங்களது வீட்டின் ஓரமாய் நிறுத்தியிருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் பஞ்சர் ஒட்டுக் கொண்டு போனார்.

ஒரு மழை நாளின் மின்னல் முளைத்த பொழுதுகளில் அதே சைக்கிளை அதே கைகொண்டு பிடித்துக்கொண்டவராயும் கால் கொண்டு மிதித்தவராயும் வந்த அவர் தெப்பமாக நனைந்திருந்தார்.

மழையின் வேகம் கொஞ்சம் அதிகமாகவே அவரை தாக்கியிருக்கக்கூடும் என நினைத்தவனாய் சார்,வாங்க வீட்டுக்குள்ள மழை இப்போதைக்கு நிக்கிற மாதிரி தெரியல.இந்த மத்தியான வேளைக்குஎதிர்பாக்காத மழையும் கொஞ் சம் கூடுதலான மழையும்தான் சார்,என்றான் வாய் நிக்க மாட்டாமல்/

ஆமாம் சார் என வீட்டிற்குள் வந்த அவரை சேரை இழுத்துப்போட்டு அமரச் சொன்ன பொழுது இல்லை வேணாம் சார்,நின்று கொள்கிறேன் இப்படியே வாசலின் ஓரமாக எனச்சொன்னவர் தொடர்ச்சியாய் பேசுகிறார்,கையில் மைக் ஏதும் இல்லாமல்,/

சார்நான்இப்ப வீட்டுக்குள்ள வந்தேன்னா ஏங் ஒடம்புலசொட்டுறதண்ணி வீட்ட நனைச்சிப்பூடும்,ஆகவே இப்படியாய் இருந்து விட்டுப் போவதுதான்உசிதம்/ ஆகவே,,,,,,,,எனஅவர்பேச்சின்நெசவை முடிக்கும் முன்பாக இவன் வீட்டிலிந்த துண்டு ஒன்றை எடுத்து நீட்டுகிறான்,

துவட்டிக்கொள்ளுங்கள் தலையை,கூடவேஉடலையும்சேர்த்து உங்களைப் போல உடலுழைப்புக்காரர்கள் உடல் நலத்தின் மீது அக்கறை கொள்ளுங்கள், சுவரும் சித்திரமும் என்கிற சொல் அதி முக்கியம் இங்கு என்கிற எண்ணத் தையும் சொற்பதத்தையும் தாங்கியவராய் இருக்குமாறு வற்புறுத்திய சொல் லை ஏற்றுக்கொண்டவராயும் வீட்டிற்குள் வரத்தயங்கியவராயும்,,,,,,,,/

கை பரிமாறிக்கொண்ட துண்டை வாங்கி தலை ,கை உடலைத் துடைத்தவர் உலர்ந்து போயிருக்கிறதா உடல் என்று உறுதிப்படுத்திக்கொண்டு கொண்டு வந்திருந்த தபாலை எடுத்துக்கொடுக்கிறார்.மிகவும் மென்மையாகவும் சின்ன தாய் பூத்த ஒரு சிரிப்புடனுமாய்,,,/

அவர் கொடுத்த தபாலினுள்ளே பொதிந்திருக்கிற விஷயம் என்னவாக இருக் கும் என அறுதியிட்டும் உறுதிபடவுமாய் கூறிவிட முடியவில்லை.அல்லது என்னவென யூகிக்கக்கூட முடியவில்லை,ஆனால் தபாலைக்கொடுத்தவரின் கையும் மனதும் மிகவும் மென்மைப்பட்டும்,ஒருவித உலர் புலர்வுடனுமாய்/

ஆகா இதுபோதுமே வேறென்ன வேண்டும் இது போலான சக மனிதகர்களி டமிருந்து,,,/,கொண்டு வந்திருக்கிற தபால் கூட இரண்டாம் பட்சமே/

சரி விடுவோம் போதும் இது போலான புகழாரங்களும் வெற்று வார்த்தை களும் அளவிற்கு மீறிய பகழாரங்களும் ஒரு மனிதனை வீழ்த்தி விடுகிற அல்லது புத்தி மழுங்கச்செய்து விடுகிற வலிமையான ஆயுதம் என்கிறார்கள். சரி அந்த சொற்றொடர் மதித்து செல்வோம் இப்போதைக்கு என்கிற மனோ நிலையினாய் அவரிடமிருந்து தபாலை வாங்குகிறான்.

ஏன் இப்படி காலையில் கோலப்பொடி வியாபாரம்,அதன் பின்னான கொரியர் அலுவலகப்பணி என்கிற கேள்விக்கு அவர் அப்படி ஒரு பதிலை தயாராகவும் ஒரு கூடுதல் தகவல் பொதிவுடனுமாய் வைத்திருப்பார் என எதிர்பார்த்திரு க்கவில்லை.

”சார்,இது மட்டுமில்ல ,கைவசம் இன்னும் கொஞ்சம் வேலைக அடைபட்டுக் கெடக்கு,காலையில கோலப்பொடி வித்துட்டு வீட்டுக்குப்போக நேரம் எட்டு மணிக்கிட்ட ஆகிப்போகும்,அப்புறம் அவசர அவசரமா கெளம்பி கொரியர் ஆபீசுக்கு போறதுங்குள்ள ஏங் பாடு பெரும் பாடா ஆகிப்போகும்.

இத மீறி சமயா சமயத்துல கையப்புடிக்கிற காச ஒரு மாதிரியா செஞ்சி அஜஸ் பண்ணிக்கிருவோம்/

அது மொத்தமா சரக்கு விக்கிறவுங்களுக்கும் தெரியாது, வாங்குறவனுக்கும் பாரமா படாது.

இது போக லீவு நாள்கள்ல எனக்குத்தெரிஞ்ச தச்சுவேலைய உயிரக்குடுத்தும் ரொம்ப ஈடுபாடாவும் செய்வேன்,என்னைய,நான் செஞ்சு குடுக்குற சாமான்கள, புடிச்சவுங்க என்னைய நம்பி ஏங்கிட்ட பொருள் செஞ்சி தரச்சொல்லி வருவா ங்க, அவுங்களுக்கு நான் செஞ்சி தருவேன்,அதுல ஒரு ஆத்ம திருப்தி,

வருமானம்ன்னு பாத்தா பெருசா ஒண்ணும் கெடைக்காது,சமயத்துல கையப் புடிக்குங்கூட,இப்பவிக்கிறவெலவாசிக்கிபொருள்வாங்கி குறிப்பிட்ட தொகைக் குள்ள பண்ணிக்குடுக்குறதெல்லாம் முடியாத காரியம் பாத்துக்கங்க,

ஏங்கிட்டவர்றவங்கிட்டசொல்லீருவேன்கறாரா,இவ்வளவுஆகும் இது செஞ்சா, இந்த தரமும் இவ்வளவு உழைப்பும் இருக்கணும்ன்னு எதிர் பார்த்தீங்கன்னா ஏங்கிட்ட செய்யக்குடுங்க,இல்லைன்னா பேசாம நீங்க பிரியப்பட்ட யெடத்துல வாங்கிக்கங்கன்னு சொல்லீருவேன் எனச்சொல்லும் அவர் எல்லார்கிட்டயும் கறார் காம்பிச்சும் பேசீறமுடியாது,சைஸா அப்பிடியே ஓட்டிக்கிருவேன் சார், இதுல வருமானம் வர்ற நேரம் வரும்,போற நேரம் போகும்,இதெல்லாம் தொழில்ல சகஜம்ன்னு அங்கிட்டும் இங்கிட்டுமா ஓடிக் கிட்டிருந்த ஒரு நாள்ல தான் காலையில சுண்ணாம்பு வாங்கீட்டு வரும்போது பாலம் ஏத்தத்துல ஏறப் போனவன் ஒரு பைக்காரான்தட்டிவிட்டு விழுந்துட் டேன்,

”நல்ல வேலையா பெலமா ஒண்ணும் கெடையாது,பாலத்து யெறக்கத்துல வந்தவன் கொஞ்சம் ரிலாக்ஸா வந்துட்டானா இல்ல நான் ஏதோ ஞாபகத்துல நான் சைக்கிள மிதிச்சி வளைச்சிட்டேனா தெரியல,,,,,,

“தெய்வாதீனமா பெரிசா ஒண்ணும் இல்ல, என்ன ஆஸ்பத்திரியில ஒருவாரம் இருக்க வேண்டியதாப்போச்சி,போச்சா ஒரு வாரம் பொழப்புன்னு நெனைச்சிக் கிட்டு ஆஸ்பத்திரியில நான் இருந்த ஒரு வாரமும் என்னைய புள்ளயப்போல பாத்துக்கிட்டாங்க ஏங்கூட கொரியர்ல வேலை பார்த்த பசங்களும், புள்ளைங் களும்,நல்லா இருந்த ஏங் புள்ளைங்க வயசிருக்கும்,இல்ல அதுக்கும் கொறை வாத்தான் இருக்கும்,அதுகளுக்கு,,/,

“சோறு வேணுமா, வெண்ணி வேணுமா,கஞ்சி வேணுமா இன்னும் ஏதாவது உதவி வேணுமான்னு கேட்டுக்கேட்டு செஞ்சாங்க,ஏங் வீட்டம்மா கூடஅவுங்க கிட்டச் சொன்னா,எதுக்கு ஒங்களுக்கு வீண் செரமம்ன்னு,,,,,,

அதுக்கு அந்த பசங்களும் புள்ளைகளும்சொன்னசொல்லுதான் சார் இன்னக்கி வரைக்கும் மனச நெறச்சி நிக்கிற சொல்லா இருக்கு சார்,

”நீங்க சும்மா இருங்கக்கா,ஒங்களுக்கு ஏற்கனவே ஒடம்பு சரியில்லன்னு எங்க எல்லாருக்கும் தெரியும்/இதோட ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் வேகு,வேகு ன்னு அலைஞ்சிங்கின்னா அப்புறம் ஒங்களப்பாத்துக்கிற ஒரு ஆளு தேவைப் படும் நாளைக்கு,

“இதேது எங்க அம்மாவோ அப்பாவோ அண்ணனோ தம்பியோன்னா பாக்க மாட்டமா,,,,,,அப்பிடி நெனைச்சிக்கங்க, எங்களையெல்லாம் ஒங்க வயித்துல பொறக்காத புள்ளைகளா நெனைச்சிக்கங்க சொன்னப்ப ஏங் பொண்டாட்டிக்கும் எனக்கும் கண்ணீரெ வந்துருச்சி சார்,இப்பிடியெல்லாம் செஞ்ச இவுங்க இன் னோண்ணும் பண்ணினப்ப அவுங்க எல்லார் காலயும் தொட்டுக் கும்புடணும் நெனைச்சேன் சத்தியமா,,,,,

“ஆமா சார் நான் ஆஸ்பத்திரியிலஇருந்து டிஸ்சார்ஜ் ஆகுற ஞாயித்துக்கெழம அன்னைக்கி எல்லா பசங்களும் வந்துட்டாங்க ஆஸ்பத்திரிக்கி,அது மட்டு மில்லாமஎனக்கான செலவ பைசா சுத்தமா எனக்கே தெரியாம கட்டீட்டாங்க, எல்லா பசங்களும் ஆளுக்குக்கொஞ்சமா போட்டும் கொரியர் மொதலாளி குடுத்த பணத்த சேத்தும் கட்டீட்டாங்க,அது போக அந்தப்பணத்துல மிச்சமி ருந்த கொஞ்சத்த ஏங் வீட்டுல கொண்டு போயி வீட்டம்மா கையில குடுத்து ட்டு வந்துருக்காங்க,,ஏங்கிட்ட குடுத்தா வாங்க மாட்டேன்னு தெரிஞ்சி,

“எனக்குன்னாஒரே தர்ம சங்கடமா போச்சி ஆஸ்பத்திர்யில இருந்து டிஸ்சார்ஜ் ஆகிப்போறதுக்குள்ள,,,,,,,/

சரி அப்பிடியெல்லாம் செஞ்ச அந்த புள்ளைகளுக்கு நான் ஏதாவது செஞ்சாத் தான் நான் மனுசனா ஆவேன்.

முப்பது புள்ளைக வரைக்கும் இருக்கும் கொரியர் ஆபீஸில வேலபாக்குறவு ங்க,அவுங்க எல்லார் வீட்டுக்கும் அவுங்களுக்குத்தெரியாம போயி அவுங்களப் பெத்த ஆத்தா அப்பன கையெடுத்துக் கும்புட்டு நன்றி சொல்லீட்டு வந்தேன் சார்,

இப்பிடியாப்பட்ட நல்ல கொணம் கொண்ட புள்ளகளைப்பெத்த ஒங்க கால்ல விழுந்தாக்கூட தப்பில்லன்னு,,,,சொன்னப்ப ஒரு பையனோட அம்மா என்ன மோ கொரியர் ஆபீஸீல வேல பாக்குறேன்னுட்டு பசங்களோட சேந்துக்கிட்டு ஊரச் சுத்துக்கிட்டு கெட்டுப் போறானேன்னு நெனைச்சேன்.ஆனா இப்பத்தான் அவன் அருமை எங்களுக்கே புரியுதுன்னாங்க கண்ல தண்ணியோட./

அவுங்ககிட்ட பதிலுக்கு அவுங்கப்பையனப்பத்தி சொல்லக்கூடாதுன்னுதான் நெனைச்சேன்,மனசுகேக்கல,சொல்லீட்டேன்,

”அம்மா ஒங்க புள்ள இதுவரைக்கும் யாருன்னே மொகம் தெரியாத நாலு பேருக்கு ரத்தம் குடுத்துருக்காம்மா,கௌவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு மாசம் மாசம் ரொட்டி பாலுன்னு வாங்கிக் குடுப்பாம்மா,இது போக நாங்க வேலை பாக்குற ஆபீசுல இருக்குற அத்தன பேரு குடும்பத்துலயும் ஏதாவது நல்லது கெட்டதுன்னாலும் எந்த நேரம்ன்னு பாக்காம போயி நிப்பான்னதும் அந்தத் தாயி பொலபொலன்னு அழுதுட்டாங்க சார்.

என்ன இத்தன சனமும் என்னைய ஆஸ்பத்திரியில கெடந்தஎன்னைய பாக்க வந்தப்ப ஏங் கூடபொறந்த அக்கா மட்டும் என்னைய பாக்க வரலேன்னு ஒரு வருத்தம் இருந்துச்சி,

இதுல அவுங்களச்சொல்றதுலயும் குத்தம் இல்லை,ஏன்னா அவுங்க ஒடம்புக்கு முடியாதவுங்க,எந்தநேரம்நல்லாயிருக்கும்அவுங்கஒடம்பு,எந்தநேரம் கெட்டுப் போகுன்னு சொல்ல முடியாது.

ஏற்கனவே அவுங்களுக்கு பிளட் பிரஷர்,இதுல எதுக்குப்போயி அவுங்கள அலைக் கலைச்சிக்கிட்டுன்னு பேசாம இருந்துட்டோம்.

அவுங்களும் மனசு புடிக்க மாட்டாம வீட்ல இருந்து சொல்லி விட்டுக் கிட்டேதான் இருந்தாங்க,நான் வர்ரேன்,நா வர்ரேன்னு,நாங்கதான் வேணாம் இன்னைக்கி டிஸ்சார்ஜ் ஆகிருவோம் நாளைக்கி டிஸ்சார்ஜ் ஆகிருவோம்ன்னு சொல்லி வரவேணாம் வர வேணாம்ன்னு சொல்லீட்டேன்/.

அவுங்களோட பெரிய மகன்னா ஏங்மகளுக்கு உசுரு,அவன் ஒண்ணும் இவள வெறுக்கல,வீட்டுகெல்லாம் வருவான் போவான்,ஏங் மகளோட நல்லா பேசு வான் செய்வான்,

சரி அப்ப அவனுக்கும் ஏங் மகளப்புடிச்சிப்போயிக்குங்குற நம்பிக்கையிலதான் அக்கா கிட்டப்போயி பேசுனேன்,அவுங்க எனக்கு ஒண்ணும் ஆட்சேபனை யில்லப்பா,பையன் ஒரு வார்த்த கேட்டுட்டு ஓன் வீட்டுக்கே கூட்டீட்டு கூட போ,அவன் ஓங் புள்ள மாதிரிடான்னாங்க,

பையண்ட்டகேட்டப்ப நான் ஒண்ணும் அப்பிடி நினைப்போட அவகிட்ட பழகல ன்னு சொல்லீட்டான்,தவுர அவளப்பாக்கும் போது அப்பிடி ஒரு எண்ணம் எனக்குள்ளவரலங்குறான்.இப்பஅதததுக்கானஆட்கமூலமாவும்சொந்தபந்தங்க மூலமாவும் திரும்பத் திரும்ப பேசிக்கிட்டு இருக்கோம்.முடிஞ்சிரும்ன்னு நெனைக்கிறோம்.

பாப்போம், ஏங் தலையெழுத்தும் ஏங் பொண்ணோட தலையெழுத்தும் இதுல எப்பிடி இருக்குன்னு,,,,என்றார்.

உதிர்த்து விட்ட சொல்லும் மனம் நின்ற பாரமும் லேசாய் இறங்கிச்சரிகிற நேரங்களில்எப்பொழுதுதாவதும்சமயங்களில்அடிக்கடியுமாய்வருகிறகொரியர்க் காரரிடம் நீங்களே வாருங்கள் இனி எனசொல்லிவிடவும் முடிந்தால் அவரது கஷ்டங்களை தீர்க்க ஏதாவது செய்யலாம் என எண்ணவும் சொல்லவுமாய் தோணுகிறது.

எண்ணுவதெல்லாம் உயரிய எண்ணமேயானாலும் அவரிடம் எப்படிப்போய் மிளகாயை கொரியரில் கொண்டுவரச்சொல்லி ஆணையிடவும் அன்பாகவும் கேட்டுக்கொள்ளவும் முடியும்,,,,?அப்படிக்கொண்டு வந்தாலும் பேப்பரில் வரைந்து தபாலில் கொண்டு வருவாரோ,,,,,?

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் விவரிப்பே தனி தான் ஐயா...

Thulasidharan V Thillaiakathu said...

நுணுக்கமான விவரணம் அருமை வித்தியாசமான கண்ணோட்டம்..