சுப்புராஜ் அண்ணனின் டீக்கடையிலிருந்து
காற்றில் கலந்து வருகிற பாடல்களே
இவனை தினசரியாய் துயில் எழுப்புகிற
சுப்ரபாதமாய் அமைந்து போகிறது.
அதிகாலையில் அவர் ஒலிக்க விடுகிற
முதல் பாடலே பக்திப் பாடலாய்த்தான் இருக்கிறது.
அவரிடம் கேட்டப்போது அப்படியெல்லாம் இல்லை
பக்திப்பாடல்கள் கேட்பவர் பக்தி மானாகவும்,
அது அல்லாமல் வேறு பாடல்களைக்கேட்பவர்
பக்தியற்றவராயும்,,,,, என்கிற அர்த்தம் கிடையாது,
எனக்குப் பிடித்திருக்கிறது ,கேட்கிறேன்,
என மட்டும் இல்லை.
பரந்து விரிந்திரிக்கிற அத்துவான வெளியெங்குமாய்
நிரம்பியிருக்கிற காற்றின் உள்வெளியெங்கும்
நிரம்பி வருகிற பாடல்களும் இசையும்
மனித மனத்தை லேசாக்க வல்லவை,
அது படி வருகிற பாடல்களை
தரம் பிரித்தும் பேதம் பிரித்தும்
பார்க்க வேண்டியது இல்லைதான்/
10 comments:
அருமையான விடயம் சொன்னீர்கள் நண்பரே
த.ம.2
அருமை
அருமையான பதிவு
நன்றி சார் வருகைக்கும் அன்பிற்கும்!
நன்றி சார் வருகைக்கும் அன்பிற்கும்!
நன்றியும் அன்பும் சார்!
அன்பு பொதிந்த விமர்சனம்!
நன்றி அன்பிற்கும் கருத்திற்கும்!
நன்றி அன்பிற்கும் கருத்திற்கும்!
அன்பு பொதிந்த விமர்சனம்!
Post a Comment