வலது கை கட்டைவிரல் அமுக்கி ஆட்காட்டி விரல் கொண்டு பிய்த்த இட்லி யின் விள்ளலும் தொட்டுக்கொண்ட சட்னியின் காரமும் துணை சேர்ந்து கொண்ட சாம்பாரின் கைகோர்ப்புமாய் விரிந்து கிடந்த வாழை இலையின் இளம் பச்சையின் கைகோர்ப்புடன் பார்ப்பதற்கு ஒரு நவீன ஓவியமாயும் மரபு சார்ந்த ஓவியமாயும் பட்டுத்தெரிகிறது.
ஒன்றுமில்லாமல் இரண்டுமில்லாமல் நான்கே நான்கு இட்லிகள்,உரசினால் காயமேற்பட்டுப்போகுமோ என்கிற பயத்தில் ஒன்றின் மீது ஒன்று உரசாமல் வெண்மையாகவும், மென்மை தாங்கியுமாய்/
நான்கின் வலது ஓரமாய் இருந்த இட்லியின் மீதுமட்டுமாய் தொட்டுப் படர் ந்திருந்த தேங்காய் சட்னியின் அரை வெண்மையும், அதனருகாய் சட்னியை கொஞ்சம் இழுத்துக்கலக்க விட்டிருந்த செந்நிறம் காட்டிய பருப்புச் சாம்பார் வீற்றிருந்த இரு கையலகத்திற்கும் சற்றே கூடுதலாய் இளம் பச்சைகாட்டிய வாழை இலையில் வீற்றிருந்த இட்லியின் விள்ளலை வாயருகே கொண்டு செல்கையில் சாம்பாரில் முழுதாய் முழித்து மிதந்த பருப்பு இங்கே விளைந்த பருப்பல்ல, வெளிநாட்டிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட பருப்பு என்கிறாள் கடைக்காரி,
பார்க்கக் கொஞ்சம்கலராகத் தெரிந்தாள். அமைதியாய் கொஞ்சம் சாந்தம் தாங்கியமுகம்.பச்சைக்கலரில்வெள்ளைகாட்டிஓடிய கோடுகள் தாங்கியிருந் த நூல்ப் புடவையைக்கட்டியிருந்தாள்.
பொங்கலுக்குஅரசுகொடுத்தஇலவச வேஷ்டி சேலையில் வாங்கியிருப்பாள். அரசின் முத்திரை இன்னும் சேலையின் முந்தியிலிருந்து உதிராமல் இன்னும் அப்படியே இருந்தது.
இரண்டு மூன்று சலவைகள் கண்டிருக்கும் போல இருந்தது சேலை.அதே கலரில்அணிந்திருந்தசட்டையில் வலது கையோரம் நூல் பிரிந்து தொங்கிய து.
தூக்கிச்சொருகியிருந்தசேலையிலிருந்துமீறியாரிடமும்சொல்லாமல் கொள் ளாமல் வெளிப்பட்ட பாவாடையின் அடியோரம் நைந்து கிழிந்து அதன் மஞ்சள் நிறத்தையே பழுப்பாக்கிக் காட்டியது.
அவள் ஒவ்வொரு முறையுமாய் நின்றிருந்த மண்ணெண்ணெய் ஸ்டவ்வின் அருகாய் இருந்து ஒவ்வொருவருக்குமாய் இட்லியும் தோசையும் வடையும் அதற்குத்துணையாய் சட்னியும் சாம்பாருமாய் ஊற்றி வருகிற போது அவளது பழுப்பு நிறமேறிய பாவாடை அடியிலிருந்து தொங்கிய நூல்கள் தரையில் இழுபட்டுக்கொண்டும் கோலம் வரைந்து கொண்டுமாய்/
இழுத்த கோட்டிலும் வரைந்த கோலத்திலுமாயிருந்து கலர்காட்டி ஏதாவது ஒரு அதிசயம் நடந்து விடாதா,,,,,,டப்பாவுகுள்ளிருந்து பூப்பூக்கவும்,புறா பறக்க விடவுமான மேஜிக்கை செய்வது போல,என கண்கொத்திப்பாக காத்திருந்த விழிப்படர்வின் நேரத்தில் கடைக்காரி சொன்ன சொல் அல்ல,அவள் ஊற்றிய சாம்பாரிலிருந்த பச்சை மிளகாய் கடிபட்டதில் வாய்க்குள் பரவிய உறைப்பு நாவின் சுவையறும்புகளுக்கு எட்டிச்சொல்லி விட்டு தண்ணீருக்காய் காத்தி ருக்கிறது.
“இருங்கசார்,மொளகாயகடிச்சிட்டீங்களா,இந்தகொண்டுவர்றேன்சார்,,தண்ணி நீங்க வந்துருக்குற நேரம் டிபன் முடியப்போற நேரத்தநெருங்கி இருக்குது. அதான்இட்லிஎடுத்துவச்சஎனக்கு தண்ணிஎடுத்து வைக்கணும்ன்னு தோணல, தப்பா நெனைச்சிக்கிறாதீங்க,”என்றாள்.
“இல்லம்மா,தப்பா நெனைக்குறதுக்கு இதுல என்ன இருக்குது,இந்த ஊர்ல இருக்குற தண்ணிப் பஞ்சத்துல ஒரு வேளை கடையில் தண்ணி வைக்குற பழக்கமில்லையோன்னுநெனைச்சுக்கிட்டேன்.,
”ரோட்டோரம் இருக்குற சின்னக் கடை நீங்க,நீங்க போயி இப்பிடியெல்லாம் செய்வீங்களான்னும் நெனைப்பு ஒருபக்கம். போன வாரம் ஒரு பெரிய கடை க்குசாப்புடப் போயிருந்தேன். அங்க இங்க சாப்பாட்டுக்கு தண்ணி கிடையாது, விலை குடுத்து தண்ணி பாட்டில் வாங்கிக் கொள்ளவும்ன்னு எழுதிப் போட்டு ருந்தாங்க, எனக்கு அதெல்லாம் பிரச்சனையில்ல, கையில எப்பவுமே ஒரு தண்ணி பாட்டிலு வச்சிருப்பேன்.அதத்தான் குடிக்கிறது,ரெண்டு லிட்டர் கலர் பாட்டில்,அது .கலர குடிச்சி முடிஞ்ச ஒடனே பாட்டில தூக்கி கீழ போட்டுறாம இந்த மாதிரி தண்ணி கொண்டு வர்றதுக்கு பயன்படுத்திக்கிருவேன்.இது போக இன்னும் ரெண்டு மூணு பாட்டிலு வீட்டுல கெடக்குது,மிதமா ஒரு கொதி மட்டும் கொதிக்க வச்ச தண்ணிய பாட்டில்ல ஊத்திக்கிட்டு வருவேன். அது தான் சாய்ங்காலம் வரைக்கும்.எங்க போனாலும் அது ஏங்கூடவே கைக் கொழந்தமாதிரிஏன் தோள்ப்பையிலயே கெடக்கும். சமயத்துல நான் கொண்டு வர்றது மதியம் வரைக்கும் கூட காணாது.அப்புறம் போற வர்ற யெடத்துல கெடைக்குற தண்ணியும் ஆபீசுல இருக்குற மினரல் வாட்டரும்தான்னு ஆகிப் போகும் எனக்கூறியவாறே இலையிலிருந்து கொஞ்சமாய் விலகிப்போய் சாப்பாட்டு மேஜையை எட்டித்தொடப்போன சாம்பாரை அதே ஆள் காட்டி விரலால் இலைக்குள்ளாக தள்ளிவிட்டுவிட்டு அதற்கு இட்லியை அண்டக் கொடுத்துவிட்டு சாப்புடுகிற போது நேற்றைக்கு முன் தினம் மாலையிலாக வாங்கிய தேங்காய் ஞாபகத்திற்கு வருகிறது.
கடந்த ஒரு வாரமாய் மனைவி சொல்லிக்கொண்டுதான் இருந்தாள்.வீட்ல தேங்காயும் வெங்காயமும் காலியாகிப்போச்சி,நானும் ஒரு வாரமா மாடாக் கத்திக்கிட்டு இருக்கேன் என்றாள்.
அப்பிடியா எந்த ஊர்ல மாடு இப்பிடி ஐநூத்திச்சொச்ச ரூபாய்க்கு சேலையக் கட்டிக்கிட்டுநிக்குது.சும்மாரொம்பயும்தான்கோயிச்சிக்கிறாத,என்பான் அவளி டம் நெருங்கி/
சும்மாயிருங்க ஆமாம்,எது சொன்னாலும் பக்கத்துல வந்து நின்னுக்கிட்டு என்னத்தையாவது மாத்திப்பேசி ஆளக்குளுப்பாட்டாதீங்க,என்பாள் மனைவி. ஆமா அப்பிடியே குளிப்பாட்டிட்டாலும்,,,,,அதுக்கெல்லாம் அசருற ஆளா நீயி அடேயப்பா_இவன்.
சரி சரி சும்மா அத இதப்பேசி ஒப்பேத்தாதீங்க,இன்னைக்கி வரும்போது கண்டி ப்பா வெங்காயமும் தேங்காயும் வாங்கிட்டு வரணும் ஆமா எனவாய் கோபம் காட்டுகிறாள்,
”அடப்பாவமேஎதுக்குப்போயிநீயி,அந்தமாதிரி கோவப்படுற மாதிரியெல்லாம் சீரியஸா மொகத்த வச்சிக்கிருற,அதான் ஒனக்கு செட்டா காதுல்ல,ஏங் போயி ட்டு வீணா ட்ரைப்பண்ற, என்பான்.அவளும் பதிலுக்கு சிரித்துக் கொண்டு இப்பிடித்தான் என்னத்தையாவது பேசி சமாதாம் பண்ணாதீங்க என்பாள்,
வெங்காயம்வாங்கச்சொன்னஅன்றும்சும்மாவண்டியிலஅங்கிட்டுப் போனேன் இங்கிட்டுப்போனேன்னு கதை வுடாம வாங்கீட்டு வாங்க, சொன்னத என கையில் வெடுக்கென திணித்த பணமும் பையும் கொண்டு வாங்கியபோது தேங்காய்க் கடைக்காரர் சொன்னார்.
:தேங்காய் வெலை கூடிருச்சி சார்,மழை இல்லாததுனால வெளைச்சல் இல்ல சார்,வெளைச்சல் இல்லாததுனால பதிமூணு ரூபாய்க்கு வித்த காயி இன்னை க்கி இருப்பது ரூபா வரைக்கும் விக்குது சார்,வெங்காயம் கெடைக்கவே இல்ல சார்.பத்து மூடை தூக்குன யெடத்துல இப்ப ரெண்டு இல்லைன்னா மூணு மூடைதூக்குறதுக்கேயோசனையாஇருக்கு,பாத்துக்கங்க,அழுகிப்போறயேவாரம். மூடைக்குள்ளஅப்பிடியே வைக்க முடியாது.தரையில கொட்டி விரிச்சி விட்டா அப்பிடியே காத்து குடிச்சிருது. இதெல்லாம் போக வாங்கீட்டு வந்த சரக்க ரெண்டு கைபாத்துதான் விக்க வேண்டியதிருக்கு.அப்பிடியெல்லாம் வித்து தான் லாபம் பாக்க வேண்டியதிருக்கு பாத்துக்கங்க,எனச்சொன்ன கடைக் காரரிடம் வாங்கிய தேங்காய்/
பத்து வருடங்களுக்கும் மேலாய் அவரிடம்தான் தேங்காய் வாங்குகிறான். பக்கத்திலிருக்கிற காய்கறிக்கடைக்காரருக்கு இதில் ஏக வருத்தம்.இங்கயும் தேங்காய் வெங்காயமெல்லாம் இருக்கு.நீங்க இங்கயே இதெல்லாம் வாங்கிற லாம் என்பார்.
வழக்கமாககடையில்நிற்கிறவர்இருந்தால்அப்பிடியெல்லாம்சொல்லமாட்டார். அவனை மாற்றிவிட பெரியவர் ஒருவர் நிற்பார்.அவர்தான் அப்பிடி யெல்லாம் பேசுவார்.அவரது அந்தப்பேச்சிற்கு பின்பு ஒருநாளாய் கடைக்காரன் வருத்தப் பட்டான்.
அவருக்கு வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்கிற முறை வரை தெரியாது மன்னித்துக்கொள்ளுங்கள்.என்றார்.
“ஐய்யய்யோ அப்பிடியெல்லாம் இல்லை, உங்களை மன்னிக்கிற அளவிற்கு நான் பெரிய மனிதனும் இல்லை ,மன்னிப்புக் கேட்கிற அளவிற்கு நீங்கள் தவறேதும் செய்து விடவில்லை.பத்து வருடங்களுக்கும் மேலாக நான் வியா பாரம் வாங்குற கடை அது.திடீரென அவர்களது நம்பிக்கையை சிதைப்பது போல் நடந்து கொள்ளக்கூடாது.அவருக்கு என் மீது இருக்கிற நம்பிக்கையும் நல்லெண்ணமும் பொய்த்துப்போகக்கூடாது என்பதாலேயே அவரை விட்டு இடம்நகர்ந்துவர மறுக்கிறேன்.புரிந்து கொள்ளுங்கள் சரியாக,என்கிற இவனது சொல்லை ஆமோதித்தது ஏற்றுக்கொள்வார் கடைக்காரர்.
அந்த ஆமோதிப்பும் அனுசரனையுமே இது நாள்வரை அங்கு இவனை காய்கறி வாங்க வைத்திருக்கிறது.இனியும் வாங்க வைக்கும்.
மணிகண்டன் போன் பண்ணிய போது மணி ஒன்பது இருக்கலாம்.அந்நேரம் இவன் அல்லம்பட்டி முக்கு ரோட்டை எட்டித்தொட்டிருந்தான்.வருகிற போது வண்டியில்பெட்ரோல்கொஞ்சமாக இருந்தது ஞாபகத்திற்கு வரவில்லை.
நேற்றுகாலையிலேயே அலுவலகம் செல்கையில் ரிசர்வ் விழுந்து விட்டது. விழுந்து விட்ட ரிசர்வை ரிவர்ஸில் எடுத்து மறுபடியும் புல் பண்ணி விட முடியாதுதான்.என்ன செய்ய பின்னே அதற்கு,,,? என்ன செய்வார்கள் பெரிதாக, குறைந்து போன அளவை திரும்பவுமாய் இட்டு நிரப்பி விட வேண்டியது தான்.என நேற்றிலிருந்து நினைத்தவன் நினைத்த நினைவை முடியிட்டு தக்க வைத்துக்கொள்ளாமல் எப்படியோ மறந்து போகிறான். மறந்து போன கணத்தி லிருந்து இப்பொழுது வரை இவனது இருசக்கர வாகனம் ஓடிச்சென்றும் திரும்ப வந்துமாய் நின்றது காதாதூரம் இல்லை என்றாலும் கூட பெட்ரோல் காலியாகிவிடும் தூரமாய் இருந்தது.போதா இது ,மூச்சு வாங்காமல் ஓடிய இரு சக்கர வாகனம் நிற்பதற்கு நின்று விட்டது,
வேகமாய் போய்க்கொண்டிருக்கையில் நின்ற வாகனத்தை ஓரம் கட்டவும் மணி கண்டனிடமிருந்து வந்த போனை எடுக்கவுமாய் சரியாக இருந்தது. அண்ணே நான் வந்துட்டேன்.அரை மணிக்கு முன்னாடியே,நீ வரலையே இன் னும் எனக்கேட்ட அவரிடம் காரணகாரியங்களை விளக்கிவிட்டு நின்ற வண்டி யை தள்ளிக்கொண்டு போய் பெட்ரோல் பங்க் இருக்கிற திசை நோக்கிச் சென்று பெட்ரோல் நிரப்பிவிட்டுச்செல்கிறான்.மணிகண்டன் அழைத்த இடம் நோக்கி.
மிகவும் சிரியதாகவும் அல்லாமல் மிகவும் பெரியதாகவும் அல்லாமல் அந்த கூட்ட அறையில் எப்படியும் நூறு பேர்வரை அமரலாம்.அப்படி அமர்வதற் காய் பிளாஸ்டிக் சேறும் போட்டிருந்தார்கள்.கூட்டம்முடிந்ததும் அங்கேயே உட்கா ர்ந்து சாப்பிட டைனிங்க் டேபிளும் அதே சேர்களும்.
சேரில்உட்கார்ந்துகொண்டுடைனிங்க்டேபிளில்சாப்பிட்டுக்கொள்ளலாம்என்பது ஈஸியான நடை முறை. அது சரி கூட்டம் நடக்கும் போது அமர்ந்து பேச மேடை என யாராவது ஞாபகமாய் கேட்டால் என்ன செய்ய ,அதையும் கட்டி வைத்திருந்தார்கள்.
அந்தமேடையைத்தான் இப்பொழுது அலங்கரிக்க வேண்டும். அதில் கொடிகள் தோரணம் பேனர் என எல்லாம் இருந்தது.அதில் கொடிகள் தோரணம் பேனர் என எல்லாம் கட்டிய பின்பு பிளக்ஸையும் கட்ட வேண்டும்.இவை எல்லா வற்றையும்செய்து முடிக்க எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும். அதற்குத் தான் மணிகண்டன் வரச்சொல்லியிருந்தார் அவ்வளவு அவசரமாகவும் சில வேலைகள் சுமந்துமாய்/
கூடவே தோழரையும் சேர்த்து க் கொண்டார்,தோழர் என்றால் அவரது பெயர், பெயர் இல்லாமல் இல்லை அவருக்கு,ஆனால் நேற்றுப்பிறந்த குழந்தையிலி ருந்து நாளைக்கு தலை போகிறது வரைக்குமாய் இருக்கிற பெரியவர்கள் வரைஅறிந்துவைத்திருந்ததுதோழர்,தோழர்,தோழரே,,அவரது இயற்பெய ரைக் கூப்பிட்டால் கூட திரும்பிப்பார்ப்பாரோ இல்லையோ தோழர் என அழைத் தால் சப்தம் கேட்ட மறு விநாடி தாமதிக்காமல் திரும்பிப்பார்த்து விடுவார்.
அப்படியாய் அடையாளம் கொண்ட அவரும் மணிகண்டனும் இவனுமாய் அந்தஅறையைஅலங்கரித்து விட்டு நிமுருகிற போதுகாலையில் சாப்பிடாம ல் வந்திருந்ததைவெறும் வயிறு ஞாபகப்படுத்தவே மணிகண்டணிடமும் தோழரி டமுமாய் சொல்லி விட்டு சாப்பிட வருகிறான்,
வலது கை கட்டைவிரல் அமுக்கி ஆட்காட்டி விரல் கொண்டு பிய்த்த இட்லி யின் விள்ளலும் தொட்டுக்கொண்ட சட்னியின் காரமும் துணை சேர்ந்து கொண்ட சாம்பாரின் கைகோர்ப்புமாய் விரிந்து கிடந்த வாழை இலையின் இளம் பச்சையின் கைகோர்ப்புடன் பார்ப்பதற்கு ஒரு நவீன ஓவியமாயும் மரபு சார்ந்த ஓவியமாயும் பட்டுத்தெரிகிறது

1 comment:
நன்றியும் அன்புமாய் கழிகிற பொழுதுகள்,,,/
Post a Comment