பரந்து பட்ட ஜன்னலின்
நிழலை
இவனது இடது உள்ளங்காலின்
உரு
மறைத்துக்கொள்கிறது.
கால் மேல் கால்
போட்டுப்படுத்திருந்தான்.
வலது காலின் மீது
இடது கால்.
அப்படிப்போட்டு
அலுத்துப்போகிற நேரத்திலும்
வலிக்கிற பொழுதுகளிலும்
இடது காலின் மீது
வலது கால்.
படுத்திருந்த பாயின்
கோரைகள்
தன் அழகு காட்டியும்
உருக்காட்டியுமாய்
விரிந்திருகிற
பொழுது
படுத்திருந்த பாயிலிருந்து
எழுந்து
ஜன்னலின் நிழல்
நோக்கிச் செல்கிறேன்.
செல்லச்செல்லத்தான்
தெரிகிறது
நிழல்கள் எப்பொழுதும்
நிஜமாகி விடுவதில்லை என/
2 comments:
நிஜங்கள் நிழலாகிப் போய்விட்ட காலத்தில்
நிழல்கள் நிஜமாவது சிரமம் தான்..
வணக்கம் துரை செல்வராஜீ சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment