பஞ்சராகிப்போகிறது இரு சக்கர வாகனம்.
பச்சைக்கலரில் வர்ணம் வைத்த 100 சி சி வண்டி.. அல்லாக்கோயில் ரோட்டி லிருக்கிற பாலாம்பிகா ஏஜென்ஸீஸில் வாங்கிய வண்டி,
இதற்குமுன்னால் வைத்திருந்த 70 சி சி வண்டியை போட்டு விட்டு எக்ஸேஞ்ச் ஆபரில் எடுத்த வண்டி இது.
வீட்டில் அவ்வளவாய் யாருக்கும் பிடித்தம் இல்லை இந்த வண்டி எடுத்த தில்.வண்டி எடுக்கப்போகும் பொழுது கூடக்கூட்டிப்போன சின்ன மகளுக்குக் கூட பிடித்தம் இல்லை.
இவன்தான் விடாப்பிடியாக இதுதான் வேண்டும் என்று அடம் பிடித்து எடுத்து வந்தான்,
பழைய வண்டி விற்ற விலை போக மீதத்தை தவணையில் கட்டுவது என்கிற முடிவில் வாங்கி வந்தான்,
வாங்கி வந்த அன்றிலிறுந்து இன்றுவரை பெரிதாக எதுவும் கிலோ மீட்டர் காட்டியோ இல்லை நீண்ட தூரப்பயணமோ போய்விடவில்லை.
அதிகாமான தூரம் என்றால் ஐந்து அல்லது பத்து கிலோ மீட்டர்களுக்குள் போயிருப்பான்,
மற்றபடி வீட்டிலிருந்து அலுவலகம்,அலுவலகத்திலிருந்து வீடு இதுதான் அவனது வழக்காமான பார்முலா,
இதுதாண்டி போக வேண்டும் என யோசித்தால் என்றாவது ஒரு நாளில் புது பஸ்டாண்ட் பக்கம் போவான்,பஸ்டாண்டிற்கு வலது பக்கமாய் நாலு கடை தள்ளி கையகலமாய் வடை போடுகிற டீக்கடையில் ஒரு வடையும் டீயும் சாப்பிட்டு வருவதை என்றாவதான வழக்கமாய் வைத்திருந்தான்.
அந்தஎன்றாவதானவழக்கம் தாண்டி நண்பரைப்பார்க்க கலெக்டர் ஆபீஸ் வரை போய் வருவதுண்டு.நண்பரைப்பார்க்க,
அவர்தான் பஸ்டாண்ட் கடையை அறிமுகம் செய்து வைத்தார்.
சூலக்கரையில் இருக்கிற இன்னுமொரு நண்பனின் தந்தையாரது மரணத்திற் கு போய் விட்டு வருகிற போது கொஞ்சம் டீ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் உடலுக்கும் மனதிற்கும் சாப்பிடலாமா நண்பா என அவரிடம் விண்ணப்பத்தை வைத்த மறு விநாடி சற்றும் யோசிக்காமல் அவர் சொன்ன கடை அதுவாகத் தான் இருந்தது.
அந்தக்கடைதான் இப்பொழுது வரை இவனுக்கு தாக சாந்தி தீர்க்கிற மருந்துக் கடையாகவும், எப்பொழுதாவதுமான சர்வ ரோக நிவாரணியாகவுமாய் இருக் கிறது.
அவ்வளவுக்குள்ளாக ஓடுகிற வண்டியில் இது நாள்வரை பெரிய அளவிலாய் ரிப்பேர் என எதுவும் வந்துவிட்டிருந்ததில்லை,
இப்பொழுதுதான் பஞ்சர் என நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டது.
ஒரு நாலு அல்லது நாலரை மணிக்குத்தெரிந்திருந்தாலாவது இந்நேரம் எங்கா வது விட்டு பஞ்சர் பார்த்து வைத்திருந்திருக்கலாம்,அல்லது தெரிந்த ஒர்க் ஷாப்பிற்கு போன் செய்து ஆட்களை வரச்செய்து பஞ்சர் பார்க்கச் சொல் லியிருக்கலாம்,
அவன் கைவசம் இரண்டு ஒர்க்ஷாப்க்காரர்களின் நம்பர் இருக்கிறது,ஆனால் இரண்டுமேதூரம் தூரம்,ஒன்று இந்த மூலை என்றால்,மற்றொன்று இன்னொரு மூலை.
போன் பண்ணினாலும் அப்படியே அவர்கள் வர ஒத்துக்கொண்டாலும் கூட அவர்கள் வந்து இனி சக்கரத்தை கழட்டிக்கொண்டு போய் பஞ்சர் ஒட்டிக் கொண்டு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாகிப்போகலாம்.
முன் சக்கரத்தில்தான் பஞ்சர்,வண்டியை நின்ற இடத்திலிருந்து ஸ்டாண்ட் எடுத்து தள்ளிக்கொண்டு வந்து முன்னால் நகர வைக்கமுற்ப்படுகையில் நகர மறுக்கிறது வண்டி.
என்ன இது சண்டி செய்கிறதே நம் மனம் போல,,,,,என அப்புறம்தான் பார்க் கிறான்,முன் சக்கரம் காற்றற்று தரையோடு தரையாக ஒட்டிக் கொண்டிருக் கிறது.
வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு மணியண்ணனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பக்கத்து டிபார்ட்மெண்டல் ஸ்டோரிலிருந்து வாசல் தெளிக்கவேண்டி ஒரு பெண் நின்றிருந்தாள்.
வழக்கம் போல மாலை வேளைகளில் நடப்பதுதான் இது என்றாலும் கூட இன்று ஒரு பெண் பிள்ளைநின்றிருந்தாள்,நன்றாக இருந்தால் இவனது மகள் வயதிருக்கும்,
எப்பொழுதும்ஒருபையன்தான்தண்ணீர்தெளிப்பான்,அவனது பேச்சும் சேட்டை யும் யாரையும் எளிதில் கவர்ந்து விடும்.
சார் வணக்கம் சார் என ஆரம்பிக்கிற அவனது பேச்சு ஓட்டம் கொண்ட குதி ரையின்வேகத்தைப்போல கடிவாளமில்லாமல் போய்க்கொண்டிருக்கும், கேட்க சுவாரஸ்யம் கொண்டிருக்கும்,
பேசுகிற ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் சிரிப்பு சோகம் துக்கம் என கலர் காட்டிய பேச்சை கொட்டுகிறவனாய் மாறிப்போகிற பேச்சை விதைத்து விட்டுச்சென்று விடுவான் சட்டென/
பக்கத்தில் நின்ற மணியண்ணனிடம் கேட்டதற்கு சார் இந்தா பக்கத்துல ஒர்க் ஷாப் இருக்கு சார்,வாங்க கையோட ஆளக் கூட்டிக்கிட்டு வந்துரலாம் வந்தா ங்கன்னா அரை மணி நேரத்துல வேலை முடிஞ்சி போகும் ஒங்களுக்கு, என்றார்,
தியேட்டரில் போய் அவரது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு போக வேண்டும்.
வழக்கமாக அங்குதான் அவர் இரு சக்கர வாகனத்தை நிறுத்துவார், அதற்கு கட்டணமெல்லாம் ஒன்றும் கிடையாது ,அன்பையும் பாசைத்தையும் மனித பழக்க வழக்கங்கங்களையும் மட்டுமே கட்டணமாக விதைத்து விட்டிருந்தார் அவர்/
ஒடுக்கமாய் வழி கொண்டிருந்த அந்த தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிகிறஇருவருமாய் அலுவலகம் முடிந்து வரிசைக்கிரமம் காட்டி காட்சிப்பட் டிருந்தமாடிப்படிகளில் இறங்கி வந்து இருபத்தி இரண்டாவது படியில் கடைசி விளிம்பில் இருக்கிற அந்த ஒடுக்கமான இடத்தில் இரு சக்கர வாகனத்தை எடுத்த போதுதான் அது பஞ்சர் எனத்தெரிகிறது.
அவ்வளவு பெரிய அலுவலகத்திற்கு அந்த வழி சற்று சிறியதுதான், அலுவல கத்தில் பணி புரிகிறவர்கள் தங்களது இரு சக்கர வாகனத்தை நிறுத்தக்கூட இடமில்லாமல் பக்கத்து சந்தில் நிறுத்தி வைத்திருந்தார்கள்,
சாதாரணமாய் ஹாலோ பிளாக்கற்கள் பதிக்கப்பட்டு நீண்டு விரிந்திருந்த சந்து இப்பொழுது சிறிது நாட்களுக்கு முன்பாக நல்லதொரு நாளில் மூத்திர சந்தாய் மாறிப்போனது,
அப்படி ஆகிப்போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
அத்தனை பேர் நடமாடுகிற சாலையில் ஒரு கட்டண அல்லது கட்டணமில் லாத கழிப்பறை இருந்தால் இப்படி ஆகியிக்காது என்பதுதான் இதற்கு மாற் றான வாதமாக இருக்கிறது இப்போதைக்கு/
அதற்கு சிறிது தினங்கள் முன்பு வரை அந்த சந்தை மறைத்து அதன் முன் ஒரு பெட்டிக்கடை இருந்தது,
அது பேப்பரில்ஆக்ரமிப்பு என்கிறரகத்தில் செய்தியாக வந்துவிடஆக்ரமிப்பாய் இருந்ததை எடுத்து விட்டார்கள் ஆக்ரமிப்பு அகற்றாலர்கள்/
சிகரெட்டும் பீடியும் கடலை மிட்டாயும் வெற்றிலையுமாய் கூடவே டீயும் வடையுமாய் விற்ற கடையை எடுத்துக்கொண்டு விட்டு அதன் வாசத்தை மட்டும் விட்டு விட்டுப்போய் விட்டார்கள்.
விஷயம் கேள்விப்பட்டபோது இவன் மேலே அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தான்.
மணியண்ணன்எப்பொழுதும்போலஇவனது அருகில் அமர்ந்து வேலை பார்த்து க் கொண்டிருந்தார்.
அவர்தான்இவனிடம்சொன்னார்,சார்அந்தசந்தைமறச்சிக்கிட்டுஇருந்தபெட்டிக் கடைய எடுத்துக்கிட்டு இருக்காங்க சார்,பெரிசு பெரிசா புல்டோஷர் வண்டியும் போலீசும்நிக்கிறாங்க சார்,ட்ராபிக்கக்கூட நிறுத்தீட்டாங்க சார் ஒரே கூட்டமா இருக்கு சார் என்றார்.
அலுவலகத்திலிந்துஎட்டிப்பார்த்த போது அவர் சொன்னதின் வாஸ்தவம் உரை த்தது.
கடைக்காரரும் கடைக்காரரின் தெருக்காரர்களும் கடையை எடுப்பது தப்பு என வாதிட்டுக்கொண்டிருந்தார்கள்.ஆக்ரமிப்பைஅகற்றியவர்களிடமிருந்து/அவரது சார்பாக அந்த சாலையில் இருந்த கடைக்காரர்கள் சிலர் பரிந்துவந்து பேசினா ர்கள்,
நாளைக்கு நமக்கும் அதே நிலை என்கிறதெல்லாம் இல்லாவிட்டாலும் கூட அந்தபெட்டிக்கடைக்காரருடனானநட்பும்அவரது உயிருக்குயிரான பழக்கமும் ஒருவரின் ஆதார சுருதி பறிக்கப்படுகிறதே என்கிற அநியாயமும் காட்டி/
அதிகாலைஆறுமணிக்கெல்லாம் திறந்து விடுவார் கடையை, அந்தக் கடைக் காரர்.
அந்நேரமாய்அந்தரோட்டில்எந்தக்கடையும்திறந்திருக்காது,டீக்கடை தவிர்த்து, ஆனாலும் இவர் கடை டீயைகுடிக்கவென தனி வாடிக்கையாளர்கள் எப்பொ ழுதுமே இருப்பார்கள்.
கனம் கொண்ட உடலை தூக்கிகொண்டு பள்ளிக்கூட சைக்கிளில் மெதுவாக தேரின் வேகம் காட்டியும் அதன் அசைவிலுமாய் நகன்று நகன்று வருவார்.
வரும் போதே சில்வர் டீக்கேனை சைக்கிளின் பின்னால் வைத்துக்கொண்டு வந்து விடுவார்.அது அவர் போடுகிற டீ இல்லை.அவருக்காக அவரது பக்க த்து வீட்டு மாமி போட்டுக்கொடுப்பார்,
பால் டீத்தூள் மற்றும் வடி கட்டி பால் சட்டி இன்னும் இன்னுமான எல்லாம் அவரது.பாலை அடுப்பில் ஏற்றி டீயாக்கித் தந்து விடுவது மட்டும் மாமியின் வேலை.அதற்கு மாமிக்கு தனி சம்பளம்தந்து விடுவார்,
தினசரிரெண்டு லிட்டர் என்பது கணக்கு,அதை கடைக்காரர்தான் எடை கட்டித் தருவார்,எடை கட்டிய பாலை சட்டியுடன் அடுப்பில் ஏற்றி அடுப்பை சூடம் ஏற்றி பற்றவைத்து விட்டு பால் கொதிக்கும் வரை அருகில் இருந்து பார்த்து விட்டு பால் கொதித்த பின் போய் குளித்து கிளம்பி வருவார்.
மாமிக்கு இட்லி வியாபாரம் .இட்லியும் பணியாரமும் போடுவாள், அதென் னவோ தெரியவில்லை,இட்லி சுட்டு விற்கிற எல்லோரும் தவறாமல் பணியா ரம் சுட்டு விற்கிறார்கள்.
அது போலவே மாமி செய்ததிலும் தவறிருக்க முடியாது.அதற்கு முன்னால் பாலை அடுப்பில் ஏற்றி டீ தாயாரித்துக்கொடுத்து விடுவாள்,
மாமி அடுப்பை வீட்டுக்கு வெளியில்தான் வைத்திருப்பாள்,வீடு கால் நீட்டி படுக்கவே காணாத வீடு .இதில் எங்கிட்டு அடுப்புப்போட மழை நேரத்தில் அடுப்படியை பொத்திக்கொள்ள வைத்திருக்கும் தகரம் அவளுக்கு கை கொடு க்கும்.
விறகு எல்லாம் பெட்டிக்கடைக்காரரின் வீட்டு தாழ்வாரத்தின் ஓரத்தில் கிடக்கும்,நல்ல மழை நாளன்றின் ஒரு மாலை பொழுதில் பஜாருக்கு போய் விட்டுத்திரும்பும் முன் அடமாய் பிடித்து பெய்ய ஆரம்பித்த மழை மாமியின் அடுப்புக்குப்பக்கத்தில் இருந்த விறகுக்குவியல் பின் அம்மி,ஆட்டுக் கல் எல்லாவற்றையும் நனைத்து விட்டது.
இதை பார்த்துக்கொண்டிருந்த பெட்டிக்கடைகாரரின் பெண்டாட்டி அம்மிகல் லையும் ஆட்டுஉரலையும் விறகுக்குவியலையும் எடுத்து தனது வீட்டு தாழ்வாரத்தில் போட்டு விட்டாள்.மாமி வந்த பின் அவளிடம் சொல்லி அடுப் பையும் தனது தாழ்வாரத்தில் போட்டுக் கொடுத்தாள்.
இதற்குகைமாறாக மாமியால் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் அளவிட இயலா கண்ணீரையும் மட்டுமே தர முடிந்தது.அதன் விளைவு தினசரியுமாய் அவள் தயாரிக்கிற டீயில் சுவை கூடியது,
காலைஆறு மணிக்கு வந்து விடுகிற அவர் நேரடியாய் கடையை திறந்து விட மாட்டார்,
முதலில் கடைக்கு வெளியில் அவர் சாத்தி வைத்துப் போன விளக்குமாறை எடுத்து சுத்தமாக கூட்டி விட்டு பக்கத்துத் தெருவிலிருக்கிற அடி குழாயி லிருந்து தண்ணீர் பிடித்து வந்து கடை முன்னாக தெளித்து விட்டுத் தான் கடையைத்திறப்பார்,
அதற்கு முன்பாக தண்ணீர் தெளித்த இடத்தின் வலமும் இடமுமாக இரண்டு இரண்டு பூந்தொட்டிகளை எடுத்து வைப்பார். வலது பக்கமாய் வைக்கிற தொட்டியில் பூப்பூத்த செடி ஒன்றும் இடது பக்கமாய் வைக்கிற செடியில் பூப்பூத்த செடி ஒன்றும் கண்டிப்பாக இருக்கும்.
இதற்கெல்லாம் அவர் எடுத்துக்கொள்கிற நேரம் வெறும் பத்து அல்லது எட்டு நிமிடம் மட்டுமே/
கடையை திறந்ததுமாய் டீக்கேனைதூக்கி கடையின் வலது ஓரமாய் இருக்கிற ஸ்டூலில் வைத்து விட்டு திருநீறு எடுத்து தண்ணீரில் நனைத்து மூன்று விரல்களால் தடவி விடுவார்.
அவர் திருநீறு பூசி விட்டு நிமிர்வதற்கும் டீக்குடிக்கஆள் வருவதற்கும் சரியாக இருக்கும்,சரியாக இல்லையென்றாலும் கூட சரியாக்கி விடுவார். கேன் டீ, பேப்பர் கப்,இது தவிர்த்து பீடி சிகரெட் உடன் சேர்ந்து கொள்ளும். சமயா சமயங்களில் உடன் சேர்ந்து கொள்கிற வடை அவர் கொடுக்கிற டீக்கு சுவை சேர்த்து விடுவது உண்டு,
தினசரி காலையிலும் மாலையிலும் அவர் தக்க வைத்துக்கொள்கிற அந்த சுவைதான் அவரது கவனிப்பும் மனக் கனிவும் அவரது மனம் ஒட்ட வைக்கிற அந்த பழக்கமும்தான் அவரை அந்த அளவிற்காய் அங்கு பேச வைத்தது என லாம்,
தவிர்த்து மற்றகடைகள் திறக்கிற நேரமான ஒன்பதுமணிக்கெல்லாம் வந்து விடுகிறகாலைசாப்பாட்டை அவரது பேத்தி கொண்டுவருகிற போது கடையின் முன் இருக்கிற தொட்டியிலிருந்து பூஞ்செடி ஒன்று கொத்தாய் எழுந்து நடந்து வருவது போல் இருக்கும்.நடந்து வந்த பூங்கொத்து வந்தமர்ந்து அவர் சாப்பி டும் வரை சும்மா காத்துக்கொண்டு நிற்காமல் தாத்தாவின் கடைக்குப் பக்கத் தில் இருக்கிற நான்கு கடைகளுக்கு ஒவ்வொரு குடம் தண்ணீர் எடுத்து கொடு க்கும்.
அதற்க்கெனஅவளுக்குகாசுகொடுப்பார்கள்கடைக்கார்கள்,தாத்தாபிடித்துவரும் பக்கத்துத்து குழாயிலிருந்து பிடித்து வருவதற்கு ஒரு குடம் தண்ணீருக்கு இரண்டு ரூபாய்/
தினசரி பத்து ரூபாய் அவளது கணக்கு.நான்கு கடை போக இன்னும் ஒரு குடம் எடுக்க வேண்டுமே,தாத்தா கடையே அந்த ஒரு குடம் தண்ணீருக்கான தேவை யாய் மாறிப் போகும்.
எத்தனை ஆதரவும் சத்தமும் அவரது பெட்டிக்கடை அகற்றலைநிறுத்தி விட முடியவில்லை.அகற்றிவிட்டார்கள்,அந்தமனிதனின்பேரழுகைக்கிடையிலும், உள்ளக்குமுறலுக்கிடயிலுமாய்…/
மணியண்ணன்சொன்னபோதுநம்பமுடியவில்லை.ஆனால்மாலைஅலுவலகம் விட்டுப்போகும் போது பார்த்தான்.
கடையை எடுத்தவுடன் அந்த சந்து எந்த வழியாகப்போய் எங்கும் முடிகிறது என்பதைக்காட்டியது,
கடையை எடுத்தமறு நாள் அந்த சந்து வழியாகத் தான் போனான்,அது தெருக் களை அடையாளம் காட்டிய படியும் வீடுகளை அர்த்தப்படுத்தியுமாய் காட்டிக் கொண்டு சென்று இரண்டாவது கேட் தெருவில் முடிந்தது.
மணியண்ணன் தியேட்டரில் போய் இரு சக்கர வாகனத்தை எடுத்து வந்தார். அவரது இருசக்கர வாகனத்தை ஒர்க் ஷாப்பில் வேலைக்கு விட்டிருப்பதாக வும்,ஒர்க்ஷாப் வண்டியை எடுத்துக்கொண்டு ஓட்டி வந்திருப்பதாகவும் சொன் னார்.
அவர்வண்டியைஸ்டார்ட்ப்பண்ணியதும்ஸ்டார்ட் ஆகவில்லை,தியேட்டரின் சைக்கிள் ஸ்டாண்ட் முழுவதுமாய் ஓடி ஓடி உருட்டி ஸ்டார்ப் பண்ணியதும் மிகவும் சிரமப்பட்டு ஸ்டார்ட் ஆகியது.
வண்டியின் சப்தமே வித்தியாசமாக இருந்தது, ஊர் வரை கொண்டு போய் சேர்த்து விடுமா அவரை என சந்தேகிக்க வைக்கிற சப்தமாயும்,,,/
பின்னால் ஏற்றிக் கொள்கிறார்.அவர் சொன்ன இடத்திற்கு கூப்பிட்டுப் போகி றார்,அதுவரைக்குமாய்அவர்சொல்லிக்கொண்டிருந்த கடைக்குக்கொண்டு போய் விட்டார்.

10 comments:
கடை அகற்றப்பட்டது வேதனை தான் நண்பரே
அவரது வாழ்வாதாரம் அகற்றப்பட்டது துயரம்.....
காட்சிகளைக் கண்முன்னே கொண்டு நிறுத்தும் எழுத்து. பாராட்டுகள்.
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
இழந்து போன வாழ்வாதாரங்களை
எட்டிப்பிடிக்கிற முயற்சிகள்
நம் சமகாலத்தில் நம் கண்முன்னே
நடப்பவையாயும் நடந்து கொண்டே
இருப்பைவையாயும்/
வணக்கம் வெங்கட் நாகராஜன் சார்,
நன்றியும் அன்பையும் தவிர்த்து
வேறேன்ன சொல்லிவிட முடியும் பெரிதாக
இந்தக்கணத்தில்........
வருகைக்கு நன்றி சார்/
பாராட்டுகளில் சந்தோஷிக்கிறேன்/
எப்போதும் அடித்தட்டு மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்
அது எங்கும் ஏற்பட்டதுதானே,,?
நன்றியும் அன்புமாய்/
விவசாயிகளின் வாழ்வாதாரம் அகற்றபட்டுக் கொண்டு இருக்கையில் அதன் தொர்ச்சியாக அனைசரின் வாழ்வாதாரமும் அகற்றப்படும்..என்பதை நாசூக்காக சுட்டிக்காட்டியதாக எனக்கு படுகிறது
வேதனை
வணக்கம் வலிப்போக்கன் சார்,
நன்றி வருகைக்கும்,கடுத்துரைக்குமாக,,,/
வணக்கம் நாகேந்திர பாரதி சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment