வீட்டிலிருந்துதான் கிளம்பினான்.கிளம்பிய பொழுது காலை பதினோரு மணி யை எட்டித்தொடப்போகிற வேளையாய் இருந்தது.
சின்ன மகள்தான் சொன்னாள் இது அஞ்சி நிமிஷம் லேட்டுப்பா,என்ன நீங்க கடிகாரத்த வச்சிருக்கீங்க, ஒண்ணு லேட்டா ஓடுது,இல்லபாஸ்டா ஓடுது என/
அவள்அப்படித்தான்கொஞ்சம்அவசரக்குடுக்கையாய்வார்த்தைகளைக்கொட்டி விடுவாள்.இரண்டாம் வகுப்பு படிக்கும் போது மாறு வேடப் போட்டியில் விவே கானந்தர்வேஷம்போட்டு பசித்த மானுடன்வயிற்றில் கடவுள் இருக்கிறார் என வசனம் மனப்பாடம் பண்ணச்சொல்லி அனுப்பிய போது மாறு வேடப் போட் டியில்ஜெயித்து விட்டு வந்தபின்னாய் இவனிடம் அவள் கேட்ட கேள்வி இன்றளவுமாய் மனதில் நிற்பதாக/
ஏன் அப்படிச்சொன்னீர்கள் அப்படியானால் பசிக்காத மனிதனின் வயிற்றில் கடவுள் இல்லையா என்றாள்,
அதற்கு அர்த்தம் அதில்லை,பசியின் வெம்மையும் கொடுமையும் கடவுளை உணர வைக்கிறது என அர்த்தம் கொள்ளலாம் என்றான்.
அப்படியா நீங்கள் சொன்னது உண்மையா இல்லையா எனது டீச்சரிடம் கேட்டு முடிவு பண்ணிக்கொள்கிறேன்,என்றவள் அன்று மாலையே டீச்சரிடம் கேட்டு வந்ததாகச் சொன்னாள்,சரிதானப்பா நீங்கள் சொன்னது என /
அது போல் அவள் பல விஷயங்களில் பல மாதிரியாய் உருவெடுத்து நிற் பாள்,
அதே இரண்டாம் வகுப்புப்படிக்கும் போது ஸ்கூல் யூனிபார்மில் சட்டையின் இடது கையோரமாய் லேசாக கிழிந்து போகிறது,அவள் சொன்னாள் ,கிழிந்த தைதைத்துக்கொடுங்கள்போட்டுக்கொள்கிறேன்என.இவன்சொன்னான் வேண் டாம் கிழிந்தது கிழிந்ததாகவே இருக்கட்டும்,அதற்கு மாற்றாக வேறு ஒன்று எடுத்துவந்துவிடுகிறேன்என்றான்.சொன்னவன்எடுத்தும்வந்துவிட்டார்,ஆனால் அந்த புது சட்டையை அவள் போடவே இல்லை, தொட்டுக்கூடப் பார்க்கவில் லை அவளிடம் ஏன் எனக்கேட்ட பொழுது எனக்காக வேஸ்டா ஆகுற வீண் செலவ நான் ஏத்துக்கல,என்றாள்.
அவளைப்பொறுத்த வரை சரியாக இருக்க வேண்டும் எல்லாம் அவ்வளவே, தனக்காகவும் சரி வேறு எதற்காகவும் சரி அனாவசியமாய் ஆகும் செலவு களை ஏற்றுக்கொள்ள மாட்டாள்.
அவள் சொல்லுவதற்காய் இருபத்தைந்து வருடங்களாய் வெறும் பேட்டரி செல்களை மட்டுமே வாங்கிக் கொண்டு உயிர் காட்டி ஓடிக்கொண்டும் வேறெதுவும் பெரிதான செலவெதுவும் வைக்காமல் இருக்கிற காலத்தின் கை காட்டியான கடிகாரம் பார்ப்பதற்கு மாற்றமுடியுமா என்ன,,?
ஆனால் பெரியவளின் கருத்தும் பார்வையும் இதில் வேறாக இருக்கிறது. தா மதமாக ஓடினால் என்ன இல்லை கொஞ்சம் அதிகமாக நேரத்தை முன்ன றிவித்து காட்டிவிட்டால்தான் என்ன சொல்லுங்கள்.
செய்யப் பட்டிருக்கிற மெக் கானிசத்தின் படியும் சொல்லப்பட்ட சொல்லை ஏற்றுமாய் இயங்குகிற ஒரு சின்ன யந்திரம்.அது என்ன தானாகவா விருப் பட்டு இயங்குகிறது.
நாம் எப்படி வைக்கிறோமோ அப்படியாய் இயங்குவதுதானே,,,?இதைப்போய் பெரிதாக எடுத்துக்கொண்டு,,,,,நமது உடலில் ஏதாவது வந்து விட்டால் உடனே சம்பந்தப்பட்ட உடல் உறுப்பை அறுத்தா எறிந்து விடுகிறோம்? மாத்திரை மருந்து,மருத்துவர்,மருத்துவம்,அலோபதி,ஹோமியோபதி,,,எனஎத்தனைஎத்த னைகளை யோசிக்கிறோம்,எத்தனை எத்தனைகளைப்பார்க்கிறோம். எத்தனை எத்தனை பேசுகிறோம். எத்தனை எத்தனை பங்கிட்டுக் கொள்கிறோம். அத்த னைக்கும் அர்த்தமில்லாமலா போய் விடுகிறது.உடம்பிற்கு வருவதை சரி பண்ணிக்கொள்ள வைத்தியமும் வைத்தியரும் இருபப்தைப்போல இதையும் சரி பண்ணி ஓட விட கடைகளும் ஆட்களும் இருக்கிறார்கள்.அவற்றை சரி பண்ணி ஓட வைத்து விடலாம் என்பாள்.
அவள் இருக்கட்டுமே பார்ப்போம் இப்பொழுது எல்லாம் கரெட்டாக இருக்க வேண்டும் என்பது என்ன கணக்கு என்பாள்.
அதுவே முதலில் தப்பு என்பதும் எல்லாவற்றிலும் எல்லாமும்சரியாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நம் தவறு என்றும் சரியாக ஓடிக் கொண் டிருக்கிற ஒன்றை வம்பாக எடுத்துக்கொண்டு போய் கெடுத்துக்கொள்வானேன் என்பதுவும் அவளது கருத்து/
உழமானப்பட்டுக்கிடக்கிறதாய் வீடு/முன் வாசலும் புற வாசலுமாய் வைத்த ஆயிரம் சதுர அடி வீட்டில் அத்தனை காலம் வாழ்ந்த பின்னுமாய் இப்படி ஒரு எண்ணம் அலுச்சாணீயப்பட்டுத்தோணூகிறதாய்/
பெயிண்ட்அடிக்கவேண்டும்வீட்டுக்கு.வீட்டை எக்ஸ்டெண்சன் பண்ணி கட்டிய திலிருந்து வீடெல்லாம் தெரித்துக்கிடக்கிற சிமிண்ட் பூச்சுத்தெரிப்புகளும் அதன் தடங்களும் இன்னும் அப்படியே பூச்சு மாறாமலும் தடம் மாறாமலு மாய்/
அதைப்பார்க்கிற போதெல்லாம் இவனுக்கு பெயிண்ட் அடிக்க வேண்டும் என் கிற உத்வேகம் பிறக்காமல் இல்லை.அதற்கான ஆட்கள் கூலி பெயிண்ட் கலர் உட்படயோசித்துவைத்துவிட்டான்.
இவனுக்குத்தான்நேரம்கிடைக்கவில்லை,ஒருநாளின்முக்கால்வாசி நேரத்தை பறித்துத்தின்று விடுகிற அலுவலகம் மீதி இருக்கிற நேரத்தில் கொஞ்சமாகக் கூட வேறெதையுமாய் யோசிக்க விட்டதில்லை பெரிதாக.சரி நேரம் வாய்க் கும் பொழுது பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விடுகிறான்.
அம்மாதிரியான விட்டு வைப்பு இப்படியாய் காட்சிப்பட்டும் உழமானம் கொண் டும் தெரிவதாக/இது போலாய் வெற்று வார்த்தைகள் சுமந்து ஏக்கப்பெரு மூச்சு விடுகிற சமயங்களில் சின்னவள் பாட்டுப்போட்டு விடுவாள்.ஹோம் தியோட்டரில்/
அதில்ஒலிக்கிறபாடல்கள்பலதரப்பட்டவையாய் இருக்கும். பழைய பாடல்கள், இடைக்காலம்,புதுப்பாடல்கள்,,,,என கலந்துகட்டியவையாய் பென்டிரைவில் பதிந்து வைத்திருப்பாள்.
அதில் பெரும்பாலுமாய் இவனது டேஸ்டுக்கு தகுந்தாற்போல இடைக் காலப் பாடல்களை ஒலிக்க விடுவாள். இவன் வீட்டை விட்டு போய் விட்ட பின் ஹிந்திப்பாடல்களை ஒலிக்க விட்டுக்கேட்பாள்.
ஏனென்று கேட்டால் நன்றாக இருக்கிறது என நான் தான் ஒன்றிரண்டு பாடல் களை பதிந்து வைத்துள்ளேன் என்பாள்.மேலும் ஏன் அவையும் பாடல்கள்தா னேஎனகேள்வி போர்த்தி நகர்கிற அவள் அவளுக்கு விருப்பட்ட ஹிந்திப் பாட லைஒலிக்கவிடுவாள்இவன்முன்னாகவே/அர்த்தம்தெரியாவிட்டாலும்கேட்பதற்கு நன்றாகவேஇருக்கிறது,
நல்லாத்தானே இருக்கு, இதுக்குப்போயி ஒங்க அக்காகாரி பெரிசா குதிக்கி றா ளே நல்லாயில்ல அது இதுன்னு,எனக் கேட்டால்அவள்அப்படித்தான் பெரிசா அவளுக்குபாட்டுக்கேக்குறடேஸ்டுஇல்லை,அதுபத்துனஞானமோஅவதானிப்போ எதுவும் கிடையாது,என்னமோ அவ சொல்றான்னு நீங்களும்,,,,,,,,ஹோம் தியோட்டர்ல பாட்டு ஓடிக்கிட்டு இருக்கும் போதே டீ வி யில மெகாத்தொடர் பாத்துக்கிட்டு இருப்பா,ஒரே நேரத்துல எப்பிடி ரெண்டையும் பாக்கவும் கேக் கவும் முடியும் யோசிங்க என்பாள்.
பொதுவாவே எல்லா விஷயத்துலயும் அவ டேஸ்டும் அவளோட பங்கும் இப்பிடித்தான் இருக்கு.என்ன செய்ய சொல்லுங்க என்கி றாள் சிறியவள். ஆனால்அவளோஏன்ஒவ்வொன்றையும்ஆழ்ந்துஅவதானித்துக்கொண்டு,,,,,,,,,,,,?

தேவையற்ற விஷயம் அது என்னைப்பொறுத்த அளவில் என்பாள்.
சரி அப்படியே இருக்கட்டும் உன்னளவிலாய் நீ முன் வைக்கிற விஷயமும், அவளலவிலாய் அவள் வழிமொழிகிற விஷயமும் என இவன் அவர்களை சமாதானம் செய்கிற போது,,,,இவன் மனைவியின் சப்தம் கொஞ்சம் கூடி விடும்.சரி ரெண்டு பேரும் அங்க என்ன வெட்டி தர்க்கம் பண்ணிக்கிட்டு/
ரெண்டு பேர்ல ஒருத்திய கிச்சனையும்,இன்னொருத்திய மத்த வேலைகளை யும் பாக்கச் சொல்லுங்க,நாளைக்கு வேற வீட்டுல போயி வாழப்போறவுங்க, அங்க இந்த பேச்சு மட்டும் துணை குடுக்காது பாத்துக்கங்க என்பாள்.
ஒங்களச்சொல்லணும்மொதல்லரெண்டும்பேசுறதகேட்டுக்கிட்டுநீங்களும்அவுங்களோட சேந்துக்கிட்டு பேசிக்கிட்டு இருக்கீங்க பாருங்க என்பாள்.இவனது மனைவி/
அவளது பேச்சிற்கு அப்புறம் மறு பேச்சு கிடையாது இந்த வீட்டில்/
ஆனால் இவ்வளவுபேசுகிறஅவள் தினசரி பறவைகளுக்கு கொண்டு போய் தானியம் வைத்தாளாஎன்கிறகேள்விக்கு கிட்டத்தட்ட இல்லை என்றுதான் பதில் வரும்.
தின்னஏதுமற்ற விவசாய நிலங்களின் மீது பறந்து அலுத்துப்போன வாயில்லா ஜீவன்கள்சிலகூட்டமாய்வான்வழிபறந்துவந்துஇவர்கள்போடுகிறதானியத்தை தின்றுபோவதில் இவனுக்கு கொஞ்சம் பெருமையாகவும், கொஞ்சம் ஆறுதலா யும் இருந்ததுண்டு.
எப்பொழுதிலிருந்து இந்தப்பழக்கம் ஆரம்பித்தது எனத்தெரியவில்லை.வந்து விட்டது தொடர்கிறது இப்பொழுது வரை,மாதா மாதம் பலசரக்கு வாங்கும் போது கடையில் ஒரு கிலோ தானியம் வாங்கிவிடுவது வழக்கம்.
ஒரு தடவை கம்பு,ஒரு தடவை கேப்பை,ஒருதடவைகோதுமை,,,என ஏதாவது வாங்கிக்கொள்வான்.கோதுமைபெரும்பாலுமாய்ரேஷன்கடையில் கிடைக்கும்.
ஆனால்கம்பு கேப்பை கிடைப்பதில்லை,ஒரு நாள் காலை வேளையாக மாடியி ல்போய் நின்று கொண்டிருக்கும் போது புறாக்கள் நான்கைந்து பறந்து வந்தன, பறந்து வந்த புறாக்கள் இவன் இருப்பு மாடியில் இருப்பதைப் பார்த்ததும் அப் பக்கமாய் வருவதை தவிர்த்து வேறு பக்கமாய் பறந்து விட்டன,
அன்றிலிருந்து இன்று வரை இவன் மாடிபக்கமாய் போவதில்லை அந்த காலை நேரத்தில் தின்ன ஏதாவது தேடி அலைகிறது போலும் என இவனாக முதலில் இரு கை சோற்றை வைத்துப்பார்த்தான்,ம்ஹூம் தின்னவில்லை, திங்காது, இது போலானதை விட்டுட்டு உண்மையிலேயே அதுகளுக்கு ஏதா வது தின்னப்போடணும்ன்னு நெனைச்சிகீன்னா,,,தானியம் தவசின்னு ஏதாவது வாங்கிப்போடுங்க, ஒங்களுக்கு புண்ணியமாவது வந்து சேரும். என்கிற பேச்சி ற்கு கட்டுபட்டவனாயும்நம்வீட்டில் வந்து நாலு ஜீவராசிகள் சாப்பிட்டுப் போகி றதென்றால் நமக்குத் தானே புண்ணியம்,என நினைத்து ஆரம்பித்த வேலை,
இருபது புறாக்கள் வரை இப்பொழுது வர ஆரம்பித்து விட்டது,அது போக அவை வந்து போனபின் மைனா மற்றும் பெயர் தெரியாத சில பறவைகள் வந்து போக ஆரம்பித்தன,வாங்கிய ஒரு கிலோ தானியம் போதவில்லை இப்பொழுதெல்லாம்.
அப்படியான நாட்களில் இன்னமும் ஒருகிலோ வாங்கிக்கொள்வான். இவன் குடியிருக்கிற ஏரியாவில் இருக்கிற தவுட்டுக் கடையிலேயே வாங்கிக் கொள் வான்.
தவுட்டுக்கடையில்வாங்குகிற தானியங்கள் கொஞ்சம் தூசி கலந்து இருக்கும், தவுட்டுக்கடையில் வாங்வதில் இன்னொரு லாபமும் இருக்கிறது. அங்கு செஞ்சோளம் வாங்கிக்கொள்ளலாம்.
கம்பு கேப்பை கோதுமையை விட அது கொஞ்சம் விலை கம்மிதான்,புறாக்கள் செஞ்சோளம்தின்பதில்லை,அதுஉண்மையில் உண்ணுமா உண்ணாதா என்பது பற்றிஇவனுக்குத்தெரியாது,ஆனால்இவர்கள்போடும்செஞ்சோளத்தைஉண்ணாது, மாறாக அடுத்து வருகிறவைகள் ஒன்று விடாமல் அவற்றை பெறக்கித்தின்று விடும்,மாடி கூட்டி வைத்தது போல் சுத்தமாக ஆகி விடும்.
ஒரு நாள் கேப்பை ,ஒரு நாள் கம்பு ஒருநாள் கோதுமை,ஒரு நாள் செஞ்சோ ளம் என அடுத்தடுத்ததாய்ப் போடுவான்.
கையிருப்பு காலியாகப்போகிற நிலையில் இருக்கிற போது கம்பு கேப்பை கோதுமை,செஞ்சோளம் என இருக்கிற ஸ்டாக்கை தீர்த்து விடுவான்.
அப்படியாய் ஸ்டாக் தீர்க்கப்படுகிற அன்று வட்டவடிவமாய் வரையப்பட்ட கோலம் போலாய் ஒன்றை கற்பித்துகொண்டு தானியங்களை சிதறலாகப் போட்டு அதில் ஒன்றுடன் இன்னொருதானியம் கலக்காதவாறு அடுக்கடுகாய் போடுவான்,
அந்த அடுக்களின் இடுக்குகளில் குடியிருக்கும் தானியங்களில் தேவையான வற்றை பெறக்கி எடுத்து உண்டு விட்டுப்போகும் புறாக்களும் இன்னும் பிற பறவைகளும் எந்த வித சேதாரமும் யாருக்கும் வைக்காமல்/
அப்படியாய்சேதாரம்வைக்காமல்சாப்பிட்ட பறவைகளை இப்பொழுதெல்லாம் காணமுடிவதில்லை, சுத்தி இருக்கிற வீடுகளின் மாடிகளில்ஆள் நடமாட்டம் அதிகரித்துப்போனதும் வீடுகளில் உள்ள சிறுவர்கள் மாடியின் மீது ஏறி வந்து விளையாடவுமாய் இருந்ததில் கிலி கண்ட பறவைகள் பயந்து ஒதுங்கிக் கொண்டன போலும்,
இப்போது புறாக்களுக்காகவும்,மற்ற பறவைகளுக்காகவுமாய் வாங்கி வைத்த கம்பும் கேப்பையும் கோதுமையும் செஞ்சோளமுமாய்தேடுவாரற்றுக் கிடக்கி றது வீட்டின் வராண்டாவில்/
யாராவது தெரிந்தவர் இருந்தால் அல்லது இங்குவந்துபோன புறாக்களுக்கும், பறவைகளுக்குமாய்தந்திமுகவரி அல்லது ஜி மெயில் ஐ டி இருந்தால் சொல் லுங்கள்,அனுப்பலாம்ஒருசெய்தி/சிறியதாகவோபெரிதுபட்டோ,,(எப்பொழுதும் போல் எங்களது வீட்டின் மாடியின் மீது உங்களுக்காக சிதறப்போட்டுக் காத்தி ருக்கும் கம்பு கேப்பை,கோதுமை மற்றும் செஞ்சோளம் தின்பதற்கு ஆளற்று காய்ந்துபோய்க்கிடக்கிறது,ஆகவேவாருங்கள்,வந்துசாப்பிட்டுவிட்டுபோங்கள், உங்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறோம் நாங்கள்,தேவைப்படுமானால் உங்களுக்காகசிக்னல் விளக்குகள் அமைத்துக் கொடுக்கச்சொல்லி மனுக்கொடுக்கலாம் உரிய இடத்தில்,,,,) அனுப்பலாம்,
அது பார்த்து அவைகள் வர வாய்ப்பில்லை என்றால் பறவையியல் வல்லுன ரிடம் சொல்லி அவைகளிடம் பேச்சுவார்த்தை நடத்திப்பார்க்கச் சொல்லலாம். என உத்தேசித்து நாட்களை கடந்த போதும் கூட அவைகளுக்கு இங்கு இரை தின்ன வர நேரமும் அதற்கு இரையிடும் பாக்கியமும் எங்களுக்கு இல்லை என முன்னறிவித்துச் சென்றவாறு அந்தப்பறவைகள் அந்தோ பறந்து போய்க் கொண்டிருக்கின்றன/

7 comments:
பறவைகள் பலவிதம். அருமையான கதை.
யாராவது தெரிந்தவர் இருந்தால் அல்லது இங்குவந்துபோன புறாக்களுக்கும், பறவைகளுக்குமாய்தந்திமுகவரி அல்லது ஜி மெயில் ஐ டி இருந்தால் சொல் லுங்கள்,அனுப்பலாம்ஒருசெய்தி/சிறியதாகவோபெரிதுபட்டோ,,(எப்பொழுதும் போல் எங்களது வீட்டின் மாடியின் மீது உங்களுக்காக சிதறப்போட்டுக் காத்தி ருக்கும் கம்பு கேப்பை,கோதுமை மற்றும் செஞ்சோளம் தின்பதற்கு ஆளற்று காய்ந்துபோய்க்கிடக்கிறது,ஆகவேவாருங்கள்,வந்துசாப்பிட்டுவிட்டுபோங்கள், உங்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறோம் நாங்கள்,தேவைப்படுமானால் உங்களுக்காகசிக்னல் விளக்குகள் அமைத்துக் கொடுக்கச்சொல்லி மனுக்கொடுக்கலாம் உரிய இடத்தில்,,,,) அனுப்பலாம், //
மிக மிக ரசித்த வரிகள்!! சொல்லி அனுப்பிவிட்டால் போச்சு...அத்தனையும் வந்தால் பார்ப்பதற்கே கொள்ளை அழகுதான்...மனதே மகிழ்வாய் துள்ளிடும்!! அருமை அருமை...
கீதா
வணக்கம் துளசிதரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
இப்போது புறாக்களுக்காகவும்,மற்ற பறவைகளுக்காகவுமாய் வாங்கி வைத்த கம்பும் கேப்பையும் கோதுமையும் செஞ்சோளமுமாய்தேடுவாரற்றுக் கிடக்கி றது வீட்டின் வராண்டாவில்/
வேதனை நண்பரே
வளர்ச்சி என்னும் பெயரில் எத்தனை எத்தனை உயிரினங்கள் இருக்கும்இடம் தெரியாமல் மறைந்து கொண்டே இருக்கின்றன
வேதனை
தம +1
நன்றியும் அன்பும் சார்!
அருமையான கதை அண்ணா...
வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றியும் அன்பும்/
Post a Comment