5 Aug 2018

தேத்துகள்கள்,,,,,

குடித்ததேநீரின் விலை பத்து ரூபாய் இன்றையிலிருந்து எனச்சொன்ன கடைக் காரை அண்ணாந்து பார்த்த போது வணக்கம் சொன்னார்.

அவர் அணிந்திருந்த ஊதாக்கலர் சட்டையும் வெளிர்க்கலரில் அணிந்திருந்த் ஆப் வொயிட் பேண்ட்டும் பார்ப்பதற்கு அழகாக இருந்தததோ இல்லயோ, நன்றாக இருந்தது,அந்த உடையில் பொருந்திப்போய் பார்ப்பதற்கு பாந்தமாக இருந்தார்,

இதுபோலான உடைகளை எப்படி இவர் தேர்ந்தெடுத்தார் என இவன் மனம் எழுப்பிய கேள்வி அவருக்கு கேட்டு விட்டதோ இல்லை அவருக்கு தெரிந்து விட்டதோ தெரியவில்லை,சொல்லி விட்டார்,

“சார் இப்பிடி உடுத்தணுங்குறது என்னோட ஆசை இல்லை,ஏங் புள்ளைங்க ளோட ஆசை,இதுல பெரியவ கூட சும்மா இருந்துருவா பாத்துக்கங்க,ஆனா சின்னவ இருக்காளே,ஏன் இன்னும் நீங்க ஸ்கூல் படிக்கிற காலத்துல போட்ட மாதிரியேட்ரெஸ்போடுறீங்க,மாத்துங்கப்பாட்ரெஸ்ஸையும்ட்ரெஸ்பண்ணுற  ஸ்டைலயும்ங்குறா,,,,

”எதுக்கும்மா இதுக்கு என்ன கொறைச்சல்ன்னு கேட்டா ஒண்ணும் கொறை ச்சல், இப்பிடி பொட்டுக்குறதுனால நீங்க ஒண்ணும் கொறைஞ்சிறவும் போற தில்ல.ஆனா காலம் எப்பிடியெப்பிடியே தான் நாகரீகத்த மாத்தி காண்பி ச்சிட்டு வரும்போது நீங்க இன்னும் அப்பிடியே இருந்தா எப்பிடி,

“நம்ம சௌகரியத்துக்கும் வசதிக்கும் டூ விலர் ஒண்ணு வச்சிருக்கீங்க, லேட் டஸ்ட் மாடலா, ஆத்திரம் அவசரம்ன்னா அதத் தூக்கீட்டு ஓடுறீங்க, கையக லத்துக்கு மேல டச் போனு ஒண்ணு வச்சிருக்கிறீங்க,அந்த சௌகரிய மெல் லாம் நீங்க படிக்கிற காலத்துல கெடையாது,இப்ப வந்துருக்கு வாங்கீருக்குறீ ங்க, பயன்படுத்துறீங்க,அப்பிடி இருக்கும் போது ட்ரெஸ் விஷயத்துல மட்டும் இன்னும் மாறாம இருந்தா எப்பிடிங்குறா,அதுதா அவ சொன்ன படியும் அவ ஆசைக்கும் தகுந்தாப்புலயும் ஒரு செட்டு வாங்கிப்போட்டேன், நானாப் போ யிருந்தா இந்த வெலைக்கி ரெண்டு செட்டு ட்ரெஸ் வாங்கிப் போட்டுருப்பேன். இப்படி காச வெரயம் பண்ணிட்டமோன்னு மனசு கெடந்து வாதிக்கிது.

சரி இது காலம் வரைக்கும் நம்ம இஷ்டத்துக்கு வாழ்ந்த நாம இப்ப புள்ளைக ஆசைக்குந்தான் வாழ்வோமே கொஞ்சம் கல்யாணம் பண்ணி அதுக புகுந்த வீட்டுக்கு போற வரைக்கும் என்றவர்,

டீப்பட்டறைக்கு ஏத்துக்குறாத ட்ரெஸ்தான்னாலும் கூட இதும் நல்லாத்தான் இருக்கு போட்டுக்கிர்றதுக்கு என்றார்,

அவர் அப்படித்தான், எங்குபார்த்தாலும்எப்பொழுது பார்த்தாலும் எதற்காகப் பார்த்தாலும் வணக்கம் சொல்லிவிடுவார்,அவர் வணக்கம் சொல்லுவதே அழகாக இருக்கும். கைகள் இரண்டை யும் விரைப்பாக முகத்திற்கு நேராக கூப்பி, கூப்பிய கைகளின் பெரு விரல்கள் இரண்டும் தாடையில் ஒட்ட, ஒட்டிய கைகளின் இடைவெளி வழியே கசிந்தோடி வருகிற சிரிப்பை எதிர் நிற்பவரை நோக்கி அனுப்பி வைப்பார்.பார்ப்பதற்குஅது ஒரு அடென்சென் வணக்கம் போல் இருக்கும், ஆனால் உண்மையில் அப்படியில்லை அது,

அடென்சென் ,ஸ்டேண்டடீஸ்,அபௌட்டெண்,,,,என்கிற எதுவுமற்ற வணக்கம் அவருக்கு மட்டும்தான் சாத்தியம் போலிருக்கிறது,

அவரைப்பொறுத்த அளவில் வணக்கம் ஒரு கடமை,வணக்கம் ஒரு மரியா தை, வணக்கம் ஒரு சொல்லிட தோற்றம்,,,,, என்கிற எண்ணம் கொண்டவர்,

கை கொண்ட எண்ணத்தை ஆழ விதைத்தப்பரும் கூட.விதைப்பிடலின் போது யார் சுமந்த எண்ணத்திற்கும், யார் சுமந்த நினைவுகளுக்கும் காயம் எற்படா மல் பார்த்துக் கொள்பவர்.
ஒரு வேளை எதற்கும் சொல்லி வைப்போம் என நினைத்துச் சொல்லு வா ரோ இல்லை அவரது இயல்பே அதுதானா தெரியவில்லை. ஆனால் அவரது வணக்கத்தில் உண்மையும் அன்பும் இருக்கும்,

”என்னப்பா ஒங்காளு டீக்கடைக்காரு ஒரேயடியா வணக்கம் சொல்றாரு என்ன விஷயாமாம் ,ரொம்பத்தான் சோப்புக்கு அடிமையாகாத எனச்சொல்கிர சாந்தா அக்கா இப்படியெல்லாம் வணக்கம் வைக்கணுமுன்னா அதுக்குன்னு வணக்கம் மட்டும் சொல்லித்தர்ற பள்ளிக்கூடத்துலயோ இல்ல காலேஜில யோ படிச்சும் பட்டம் வாங்கியும் இருக்கணும் என்பாள் கேலியாக/

சரி அவரு இப்பிடியெல்லாம் மாஞ்சி மாஞ்சி ஒனக்கு வணக்கம் சொல்லுறது இருக்கட்டும் ,இன்னைக்கி காலையில வர வேண்டிய டீ இன்னும் வரலையே எனக் கேட்ட போது இந்தா சொல்லீருவம் என்றான் இவன்,

சாந்தா அக்காதான் இவன் வேலை பார்க்கிற ஆடை ஏற்றுமதி நிறுவனத்திற்கு பொறுப்பாளர் மற்றும் சூப்பர்வைசராக இருப்பவர்,

அது ஒண்ணுமில்லக்கா,குடிச்ச டீக்கு கணக்கு வரலைங்குறாரு,தினமும் இருபதும் இருபதுமா நாப்பது டீ,சப்ளைப்பண்ணுறாரு மனுசன்,ஒன்னு டீக் கொண்டு வந்து குடுக்குற பையன் ஏதாவது தப்பு விட்டுருக்கணும் ,இல்லைன் னா நம்ம சைட்ல ஏதாவது காசு குடுக்க விட்டுப்போயிருக்கும் ,அத சரி பண்ணிருவம் விடுங்க,என்றவன்,அது ஒண்ணும் பிரச்சனையில்லை,நானே கூட மறந்து போயி குடுக்காம இருந்துருக்கலாம்,ரெண்டு மூணு நாளா வெளி வேளையா போயிட்டேன்இல்லையா,அதுல கூடவிடுபட்டுப்போயிருக்கலாம், நம்ம நெனை க்கிறோம் ஒரு டீ எட்டு ரூபாதானன்னு,ஆனா அவன் அந்த எட்டு ரூபாய்க்குத் தான நாள் பூராம் நெலையா நிக்கிறான் பாவம் என்றவன் சாந்தாக்காவை ஏறிட்டான்.

சாந்தாக்கா கட்டியிருந்த சேலை நன்றாக இருந்தது. பழைய தமிழ் சினிமா நாயகிகள் கட்டிக்கொண்டு வருகிற புடவைபோல இருந்தது,புடவைகளில் மட்டும் என இல்லை,பாட்டுக்கேட்பதிலும் அவளுக்கு மிகவும் பிரியம், அதிலும் இளையராஜாவின் இசைக்கு மனதில் ஒரு தனி இடத்தை ஒதுக்கி வைத்து விடுவாள்,

அவளது செல்போனில் பாடல்கள் வரிசையில் என்பதுகளின் இசையும் தொ ண்ணூறுகளின் இசையையும் பதிந்து வைத்திருப்பாள் இருநூறு பாடல்களுக் கும் மேலாக/

பதிந்து வைத்திருப்பது மட்டுமில்லாமல் அந்த பாடல்களில் மனம் லயித்திரு ப்பாள்.

நல்லா இருக்குக்கா இந்தப்பொடவை ஒங்களுக்கு என்ற போது ஆமாம் தம்பி வேண்டாம் வேண்டாங்க ஒங்க மாமாதான் கூட்டிக்கிட்டுப்போயி இத எடுத் துக்குடுத்தாரு,மனுசனுக்கு டேஸ்டப்பாரு,எந்தக்காலத்துல போயி எந்தக் கால த்துப் பொடவைய எடுத்துக்குடுத்துருக்காரு பாரு என்ற போது இதுவும் ஒங்களுக்கு நல்லாத்தான் இருக்குக்கா இது நாள்வரைக்கும் நீங்க காட்டன் பொட வையா கட்டி இருந்து பழகீட்டீங்க,அதயும் நாங்க பாத்துப் பழகீட் டோம்,இப்ப இதப்பாக்க கொஞ்சம் வித்தியாசமா இருக்கு அவ்வளவுதான் என்றான்,

மற்றபடி ஒன்றாய் வேலை பார்க்கும் இடத்தில் இவன் சாந்தாவுக்கு தம்பியா கவும்,அவள் இவனுக்கு அக்காவாவும் ஆகிப்போனது இவன் வயதில் இருந்த பலருக்கும் அவள் அக்கா ஆகிப்போனது போலவே/
டீக்கொஞ்சம் திக்காக இருந்தது,மற்ற கடைகளில் குடித்தால் ஒரு கிக்காக இருக்கும் அவரது கடையில் குடிக்கும் போது கொஞ்சம் திக்காக இருந்தது, அவ்வளவுதான் வித்தியாசம்.

எண்ணன்னே வழக்கத்த விட இன்னைக்கி கொஞ்சம் திக்காய் தெரியுது என அவரை ஏறிட்டால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க சார் என டீ ஆற்று கிற இடத்திலிருந்தே கண்களால் குறுஞ்செய்தி அனுப்புவார்,

போய் நின்றதும் அண்ணே ஒரு டீ என சொல்லி விட வேண்டும், அது அல்லாது தேமே எனவோ செல்போனை நோண்டிக் கொண்டோ நின்றிருந் தால் டீ போட மாட்டார்,

அது எவ்வளவு நேரம் நின்றி ருந்த போதிலும் சரி.கேட்டால் சொல்லுவார், “பின்ன என்ன சார்,கடைக்கு டீக்குடிக்கத் தான் வர்றாங்க, வந்து நின்னுக்கிட்டு டீ க்கு சொல்லுறத விட்டுட்டு பெறாக்குப் பாத்துக் கிட்டும் செல்போன நோ ண்டிக் கிட்டும் இருந்தா எப்பிடி,,,? வந்தா வந்த வேலையப் பாக்குறதில்ல, என்பார்,

“அது மட்டுமில்ல சார்,சரி கடைக்கி முன்னால வந்து நின்னுட்டாங்களேன்னு டீயப்போட்டுக் குடுத்தம்ன்னா வாங்க மாட்டாங்க,ஏன் போட்டீங்க நான் ஒண்ணும் ஒங்க கிட்ட டீக்கேக்கலியேன்னு வாங்க, எனக்கு பெரிய தர்ம சங்கடமா போயிரும் ,அப்புறம் ஏங்க வந்து கடைக்கு முன்னால நிக்குறீங் கன்னு கேட்டா சும்மா டைம்பாசுக்கு வந்து நின்னேன்னு சொல்றாங்க,இல்ல அடிக்கிற வெயிலுக்கு ஆத்தமாட்டாம நெழல்ல நின்னேன்னு சொல்றாங்க, என்ன செய்ய சொல்லுங்க,இதுல அவுங்களோட போயி வாதப்பிரதி வாதங்க பேசிக்கிட்டு இருந்தோம்ன்னா நான் போட்டு வச்சிருக்குற டீ வேஸ்டாப் போயிரும்,அந்நேரம் ஒங்களப்போல யாராவது டீக்குடிக்க வந்தாபோட்டு வச்ச டீய மாத்தி விட்டுருவேன்,இல்ல யாரும் வரறலைன்னு வச்சிக்கங்களேன், அது அப்பிடியே வேஸ்ட்டுதான், இதுல இன்னொரு கூத்தும் நடக்கும். யாராவது ஒங்களப்போல ஆள்க வந்துட்டாங்கன்னு சந்தோஷமா போட்டு வச்ச டீயக் குடுத்தோம்ன்னா அவுங்க வாங்க மாட்டாங்க,என்ன முன்னக் கூட்டியே போட்டு வச்ச டீயா அதக்குடிக்க நாங்கதானா கெடைச் சோம் வேணாம் இது, இத அப்பிடியே வச்சிட்டு வேற போட்டுக் குடுங்கன்னு வாங்க, என்ன செய்ய முடியும் பின்ன போடுத்தான் தருவேன், அப்புறம் என்ன போட்டு வச்ச டீ அப்பிடியே வேஸ்டாயிரும் ,இது போல நெறைய டீய கீழ கொட்டீ ருக்கேன் என்பார்,

அவர் அப்படி சொல்லும் போது அவரையும் அறியாமல் குரலில் கொஞ்சம் தழுதழுப்பும் கொஞ்சம் ஆற்றாமையும் வந்துவிடும்.

”என்ன செய்யிறது சார் ,நாறுன பொழப்பு ஏங் பொழப்பு” இப்பிடித் தான் சார் முன்ன நாந்தான் வடை போட்டு வித்துக்கிட்டிருந்தேன், இப்பப்பாருங்க, முடி யல,வெளியில வெலைக்கு வாங்கி விக்கிறேன்,விக்கிற வெலை வாசியில வடை போடுறது கட்டு படுயாகலைன்னாக்கூட தரத்த காப்பாத்தி வச்சிக்கிற முடிஞ்சிச்சி,நாலு அஞ்சி ரகத்துல வடை போட்டேன், பருப்பு வடை,உளுந்த வடை,மசால் வடை காய்கறி வடை வெங்காய வடை,,,இது போக சாய்ங்கால நேரத்துல பஜ்ஜி,போண்டா சமயத்துல உருளைக்கெழங்கு வெங்காய போண் டான்னு போடுவேன்,அது ஒரு தனி பேக்ட்ரி மாதிரி ஒரு வேலையா நடந்துக் கிட்டே இருக்கும் சார்,இதுல பாருங்க லாபம்ன்னு பாத்தா அழிவு செலவு போக கொஞ்சம் கிடைக்கும், அத பெரிசா எடுத்துக்கிடாட்டிக்கூட நான் சம்பா திச்சிவச்சிருந்தநம்பிக்கை இருக்கு பாருங்க,அது ரொம்ப பெரிசு சார், இன்னார் கடைக்கி இன்ன நேரம் போனா இந்த வடை சூடாகெடைக்கும்ங்குற நம்பிக் கை இருந்துச்சி பாருங்க,அது போச்சி மொதல்ல,வடை போடுறத எப்ப நிறுத் துனனோ அப்பயே அந்த நம்பிக்கை போச்சி சார்,

“பின்ன என்ன சார், வடை போடுறது லேசுப்பட்ட வேலை இல்லைங்குறது ஒங்களுக்கே தெரியும், தினசரி பருப்பு மாவு வெங்காயம் பச்சை மொளகா, கருவேப்பிலை மல்லி யெலைன்னு தனியா வாங்கணும் ,பருப்புக்கு ஊறப் போட்டு அத அரைச்சி மாஸ்டர் வரவும் அத ரெடியா எடுத்துக் குடுக்கணும். அப்பியெல்லாம் குடுத்தும் கூட வடை போடுற மாஸ்டர் ஆயிரம் நொட்ட சொல்லுவாரு,என்ன மாவு நேத்து மாதிரி இல்ல ,கொஞ்சம் தெரட்சியா இருக்கு, பருப்பும் சரியில்ல,அப்பிடியே முழிச்சிக்கிட்டு நிக்கிதுன்னுவாரு, சரிங்க மாஸ்டர் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப்போடுங்கன்னு அவர சரிக் கட்டி தாங்கி தடுக்கி வடை போட்டு எடுக்குறதுக்குள்ள நான் சூடாகிப் போ வேன்,எண்னைச்சட்டியிலபோட்டுஎடுத்ததுபோலஆகிப் போகும்ஏன் நெலைம/

“இந்த லட்சணத்துல வடைக்கி எல்லாம் ரெடி பண்ணி தயாரா வச்சிரு ப் பேன், தீடீர்ன்னு லீவுன்னுருவாரு மாஸ்டரு,எனக்குன்னா ஜிவ்வுன்னு ஏறிப் போகும், அப்பறம் என்ன செய்யிறது,,,,?விதி விட்ட வழின்னு நானா மாவ பெ சைஞ்சி நானா வடையும் போட்டுக்கிறுவேன்,டீயும் ஆத்திக்கிறுவேன், அன் னைக்கி ஒரு நா கிறுக்குப்புடிச்சாப்புல இருக்கும்,அதக்கப்புறம் மறு நா மாஸ் டர் வரவும் சரியாகிப்போகும்,ஏங் மாஸ்டர் லீவுன்னா அவருஆயிரம் காரணம் சொல்லுவாரு/

அவரச்சொல்லியும் குத்தம் கெடையாது,நம்ம கிட்ட வேலை பாக்குறாருங்கு றதுக்காக அவர நாம அடிமையாவும் நெனைச்சிறக் கூடாது,ஏன்னா நானும் அப்பிடிஇருந்து இன்னைக்கி சொந்தமா கடை போட்டு வந்தவந்தான்,அதுனால அவுங்க அருமையும் அவுங்களோட மனோ நெலைமையும் எனக்குத் தெரி யும்.

”வீட்ல ஒரு வேலையும் இல்லாட்டிக்கூட ”அட என்னாட இதுன்னு” ஒரு எரிச் சல்ல லீவு போட்டுருவாங்க,தினசரி ஒரே வேலைய வழக்கமா செஞ்சிக் கிட்டேஇருக்காங்கஇல்லையாஅதுனால அவுங்களுக்கும் கொஞ்சம் எரிச்சலா ப் போகும்,

“அதுவும் போக அடுப்பு முன்னாடி நின்னு வேகுற வேக்காட்டுக்கு எப்படா அக்காடான்னு ஒக்காருவோம்ன்னு தோணும்.அந்த ஆத்தாமையிலதான் லீவு போட்டுட்டு போயிருறாங்களே தவிர்த்து பெரிசா வஞ்சம் வச்சிலாம் பழி வாங்கணுமுன்னு அவுங்களுக்கு எண்ணம் கெடையாது,

“அப்பிடிப்பாத்தா ஏங் கடையில ஒரு தடவை வடைப்போட்டுக்கிட்டு இருக்கும் போது அடுப்புக்கு மேல தீப்புடிச்சி எரிய ஆரம்பிச்சிருச்சி,சரி சமயத்துல குப்புன்னு புடிக்கிறது போல புடிக்கிதுன்னு பாத்தா,அதுவாட்டுக்கு நிக்காம எரிய ஆரம்பிச்சிருச்சி,காத்தடி காலம் வேறயா புடிச்ச நெருப்பு கடைஉட்புறத்த நோக்கி வீச ஆரம்பிச்சிருச்சி,கடை வாசல்லயே வடை போடுற அடுப்பு இருந் தததால நெருப்பு கடைக்குள்ள போக ஆரம்பிச்சிருச்சி,

கடைக்குள்ள வேற நாலைஞ்சி பேரு உக்காந்திருக்காங்க,நான் வேற நின்னு டீப்போட்டுக்கிட்டு இருக்கேன்,வடை மாஸ்டருதான் தைரியமா எரிஞ்சிக் கிட்டு இருக்குற தீய தொளைச்சி உள்ளபோனவரா கடைக்குள்ள இருந்த வுங்கள கூட்டிக்கிட்டுவந்தாரு,நான்அதுக்குள்ள அடுப்புல தண்ணிய ஊத்தி அணைச்சிப் பாக்குறேன்,அணைய மாட்டேங்குது தீ/

அவுங்கள கூட்டிக்கிட்டி வந்து வெளிய விட்டவரு கடை வாசலுக்குப்போயி தெருவுல இருந்த மண்ண கூட்டி அள்ளி அள்ளி எரிஞ்சாரு அடுப்ப நோக்கி ,அப்புறம்தான் அணைஞ்சது தீ,அதுக்கப்புறமா,மண்ண அள்ளிப் போடுத நிறுத்தீட்டு வேகமா ஓடி வந்தவரு கால் மிதியடிக்காக போட்டுருந்த சாக்க வச்சி மிச்ச நெருப்பையும் அணைச்சிட்டு அடுப்ப சுத்தம் பண்ணிக் குடுத்தாரு.

“அன்னைக்கி மட்டும் அவரு கொஞ்சம் யோசிச்சிருந்தாரு,இல்ல பின் வாங்கீ ருந்தாருன்னு வைங்க,என்ன வேணாலும் நடந்துருக்கலாம் ஏங் கடைக்கி. நல்ல வேலையா அப்பிடி ஒண்ணும் ஆகாம காப்பாத்திக் குடுத்தாரு,அப்பிடி வேணுமுண்ணே செய்யிறவரா இருந்தா தீ எரிஞ்ச நேரம் அங்கயிருந்து ஓடி ருக்கலாமுல்ல அவரு,அப்படி செய்யலையில்ல, அதுதான் அவுங்க கொணம்,

பொதுவா எல்லாத்துக்காவும் யெறக்கப்படுறதும்,ஆள் தராதரம் பாக்காம ஓடு வந்து ஒதவுறதும் அவுங்க பழக்கம் சார்.

ஆனாநமக்கு அவங்களப் போல இல்லாதவுங்களயும்,கீழ் மட்ட வேலைக் காரங்களையும் யெழப்பமாப்பாத்துப்பழகிப்போச்சி,நாமஅதுல இருந்து எப்ப எப்பிடி மீளப் போறோமுன்னு தெரியல,அப்பிடி மீள்றன்னைக்கித்தான் அவுங்க ளுக்கு நல்ல நாளுன்னு நெனைக்கிறேன் என்றார் குடித்த டீக்கும் கடித்த வடைக்குமாய் காசு வாங்கிப்போட்டவராய்,,/

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

vimalanperali said...

அன்பும் நன்றியும்...!

திண்டுக்கல் தனபாலன் said...

யதார்த்தமான நிகழ்வு...

vimalanperali said...

யதார்த்தங்களின் உள்ளிருப்புகளில்
குடிகொண்ட நடப்புகள்தான்
கதைகளாக விரிகின்றன சார்,
அன்பான வருகைக்கு,நன்றியும் பிரியமும்,,,./