5 Aug 2018

நெடுந்தேட்டங்களில்,,,,,


ஓடுகிற சைக்கிளுக்கும் மிதித்த கால்களுக்கும் நெசவிடுகிற இயக்கம் மனம் மாச்சரியமற்றாய்,,,/
              ________________________
மன மாச்சரியங்கள் ஆரம்பிக்கிற புள்ளிகளிலும் தொடர்கிற விழுமியங்களிலுமாய் துவக்கம் கொள்கிற வாழ்க்கை,,,/
         ------------------------------
துவக்கம் கொள்கிறதன் முதல் புள்ளிகள் நீட்சிகொண்டு வேர்விட்டும் கிளை பரப்பியுமாய்,,,/
                    --------------------
பரப்பிய கிளைகளும் ஆழமிட்ட வேர்களும் தன் முனைப்பில் கவனம் கொண்டே,,,
                ---------------------------
கொண்ட கவனத்தின் சிதறாத முனைகள் மழுங்கிக் காணாமலும் திசை திரும்பிப் போகாமலுமாய்.,,,/
                 -------------------------
திரும்பாத திசையின் உள் வகிடுகள் வகித்துக்கொண்ட கோலம் காலம் அழியாயமலும் அழிக்கப் படாமலு     மாய்,,,/
         --------------------------
அழிக்கப்படாதவைகளின் சுவடுகள் சுமந்து நின்ற வடுக்கள் நம் பின் தொடரும் நிழலாய்,,,/
              ----------------------
தொடரும் நிழல்கள் சுமந்து செல்கிற உரு நீண்டும் சுருங்கியுமாய் காட்சி கொண்டு,,,/
                 ------------------------
காட்சி கொண்ட உருக்களின் சூழ்கொள்ளல்கள் மனம் தாங்கியும் அது அல்லாத்தாயும்/
                ----------------------
அல்லாததும்,அல்லதுமாய் இருக்கிறவைகள் சாஸ்வதப்பட்டா,நிரந்தரம் சுமந்தா ,,,?
                     -----------------
சுமந்த நிரந்தரங்களின் கனமும் அது அல்லாதனின் லேசும் உள்ளும் புறமுமாய்,,,/
                     ------------------
உள்ளும் புறமுமாய் உருக் கொண்ட லேசும் கனமும் நீட்சிகளில் காட்சி கொண்டும் அது அல்லாததுமாய்,,,/
                          ------------------
இருப்பதும் இல்லாததுமாய் தொட்டுத்தொடர்கிறதான நினைவுகள் சூழ்க்கொண்ட உறைவிடமாய் வாழ்க்கை.../
                      --------------
கரிப்பும் இனிப்பும் யார் கொண்டு வந்ததென தெரியவில்லையாயினும் கூட ஏற்றுக்கொண்டு ஓட்டமிடும் தேட்டம்,,,/
                 ----------------------
ஓடுகிற ஓட்டங்கள் உன்னையும் என்னையும் நம்மையும் நம் மனம் கொண்டவர்களையும் அரவணைக்கிற கிளைகளாகவும் வேர்களாகவும்...,,,/
                 ------------------
பூமி கொண்ட வேர்களும் வானம் பார்த்த கிளைகளுமாய் தாங்கி உருபட்ட மரம் கொடை கொண்டதை அள்ளி உருபடுகிறதாய்,,,,/
                  --------------------
கொடைகொண்டதை கடந்தும் அதனில் சுகித்தும் செல்கிறவைகள்கடக்கிற தூரம் சற்றே நீண்டதாயும் கொஞ்சம் புள்ளிகாட்டியுமாய்,,/
                   --------------------
காட்டிய புள்ளிகள் இயங்கியவையையும் இயக்கியவனையும் அடையாளமிட்டும் சுற்றம் காட்டியும்,,/            

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உறைவிடமாய் வாழ்க்கை உட்பட அனைத்தும் அருமை...

vimalanperali said...

நன்றியும் அன்புமாய்,,,/