Showing posts with label அனுபவம் கடிதம். Show all posts
Showing posts with label அனுபவம் கடிதம். Show all posts

20 Apr 2019

வழிக்கணக்காய்,,,,


வணக்கம் நண்பரே நலம்தானே,,,,?

நலமே வந்து நலம் விசாரிக்கையில் நலத்திற்கென்ன குறைச்சல் இருந்துவிட முடியும்,,,?என்கிற மழுப்பல் பேச்செல்லாம் வேண்டாம்.நேரடியாய் நலம் என் றால் நலம்,அதுஇல்லையெனில் இல்லை எனச் சொன்னால் போதும், அதுவே மனதிற்கு இதந்தரும் சொல்லாய், செயலாய்,ஆக்கமாய் ஊக்கமாய்,,,,/

அது விடுத்து மனதிற்கு இதந்தரும் பொய் எல்லாம் வேண்டாம்.சரி அது வழ க்கம் கொண்டதுதானே,மிகை மீறா பொய்யும்,மிகை மீறா நடிப்பும் நன்மை யில் முடியும் என்பதுதானே வழக்கமானோர் வாக்கு ,அதனால் சொல்லிக் கொள்வோம், கொஞ்சமாயும் மனம் பாதிக்காத அளவிலுமாய்/

கவிதைக்கு மட்டும்தானா,,,?நம் போன்ற நண்பர்களின் பேச்சிற்கும் அழகு சேர்ப்பது தானே பொய்,,,,/

இன்னும் என்னனென்னமோவாய் சொல்லலாம்.சரி அதிருக்கட்டும்,

சென்ற வாரம் வந்தேன் தங்களின் ஊருக்கு,நிலை கொள்ளாமல் அத்துவான வெளியெங்குமாய்பூத்துக்குலுங்குறமலர்ச்செடிகளைப்போலவும்,அவைகளின் நிரம்பித்தளும்புகிற வாசத்தைப்போலவும் அன்றலர்ந்திருந்த மனதினனாயும் மனம்நிறைத்திருந்தசந்தோஷத்தைஅள்ளிக்கட்டிக்கொண்டு தங்களை நோக்கி பயணிக்கிறவனாயும் அம்புக்குறியிடவனாயும்,,,/

ஒன்பதரை டூ பத்தரை முகூர்த்தம்,தங்களது ஊரில்தான் திருமணம்,

பெண்ணுக்கு சென்னைப்பக்கம் ஊர் என்றார்கள்,மாப்பிள்ளை நம்ம ஊர்க் காற்றை அளவில்லாமல் அள்ளிக் குடித்தவந்தான்,

மலர்ந்திருக்கிற மண்ணில் சேர்ந்தாற்ப் போல் கால்மணி நேரம் நின்றால் நம் பாதத்தின் அடியில் வேர் விட்டுப் போகிற விவசாய பூமி அது,

சொல்லைப்போட்டால் நெல் விளையும் மண்ணாய் மந்திர வித்தை கொண்ட மண் அது,

ஒன்றைப்போட்டால் பத்தாக விளைச்சல் காட்டிய மண்ணை அப்படி ஆக்கி வைத்திருந்தார்கள் அந்த விவசாயிகளும் உழைப்பாளிகளும்/

உழைப்பாளிகளின் உடம்பில் குடிகொண்டிருக்கிற வியர்வைக்கு எப்பொழுது மே வாசம் உண்டு எனச்சொல்வதை நிஜமாக்கினார்கள் அவர்கள்,

நேர் கோடு காட்டியும் வகிடெடுத்துமாய் வழிகிற நீர் வரி வியர்வைக் கோடு களின் கனப்பரிமாணங்கள் அவர்களின் வாழ்வை பிரதிபலித்ததாய்,,,/

விழி கழண்டு ஓடுகிற பார்வை பட்ட இடத்தில் பட்டுத்தெரிகிற மண் நம்மி டம் பேசுகிறது என்றும் அதன் சுவாசம் நம்மில் படர்கிற பொழுதுகள் ஜீவநாதம் மீட்டியும் ,உயிரோட்டமாயும்,,/

அப்படியாய் மனிதர்களையும் மனிதர்கள் விளைவித்த விளை பொருட்களை யும்,அவர்களின் உழைப்பையும் மிகையில்லாமல் நிஜம் காட்டி வளர்த்திருக் கிற மண்ணில் வளந்தவன் அவன்,

அவன் அந்த ஊரில் வளர்ந்தான் எனச்சொல்வதை விட அவனை அந்த ஊர் வளர்த்தது எனச் சொல்லலாம்,

விவசாயம்வளர்ந்தபூமியில்விவசாயத்தை உயிராய் நேசிக்கிறவனாக/ அப்படி யானவன்தான் மாப்பிள்ளையாக,,,,

ஏதோ ஒரு வேளையாய் சென்னைக்குச்சென்றவன் அவனது அக்கா வீட்டில் சிலநாட்கள் தங்க நேரிட்ட போது ஐ.டி கம்பெனியில் பணி புரிந்த அந்த பெண் அறிமுகம் என்றார்கள்,

மெலிந்த தேகம்,சிவந்த நிறம்,நடுவாந்திரமான உயரம் என்றெல்லாம் இருந்த அவளது உடலழகு அவனைக்கவர்ந்ததை விடவும் அவளது படிப்பும் பேச்சும் அவனைக்கவர்ந்தது எனச்சொல்லலாம்,

அப்படியெல்லாம் இல்லை ,எதுவும் கஷ்டமில்லை சார் இங்கு ,கற்றால் எல் லாம்சாத்தியம் என பேச்சின் ஊடாக ஒருநாள் அவனிடம் சொன்னாள் அவள்.

”பார்த்தேன் ,சிரித்தேன்,பேசினேன்,பின் தான் பழகினேன்” என்கிற சொல்லை ருசுப்படுத்தும் விதமாகவும்,மனம் காத்த தனமாயும்தான் அவர்களது நட்பு ஆரம்பித்தது,

ஆரம்பத்தில்அவளைப்பற்றிஏதும்சரியாகத்தெரியாது அக்கா வீட்டின் பக்கத்து வீட்டுப் பெண் அவள் என்பது தவிர்த்து/

தூக்கம் வராத இரவுகளில் வெளி வராண்டாவில் உலாத்துகிற போது அவளது வீட்டில் அந்த நடுராத்திரியிலும் லைட் எரிந்தது,

தயங்கித்தயங்கி ஒரு நல்ல நாளாய் பார்த்து சுபமுகூர்த்த சுப வேளையாய் அல்லாத தினமாய் கேட்டே விடுகிறான் அவளிடம்/

எதற்கு இரவு இவ்வளவு நேரம், விளக்கின் ஒளிர்வு,,,? அதற்கான அவசியம் என்னஇங்கு, கரண்ட் பில் எகிறிப்போகாதா,,,,,?என வரிசை காட்டி அடுக்கிய கேள்விகளுக்கு ”படிக்கிறேன்” என்றாள் பொதுவாக,/

”படிப்பா,இந்தவயதிலா,படித்து முடித்து பரிட்சை எழுதி இண்டர்வியூ பாஸ் பண்ணி ஒரு அரசு வேலையிலுமாய் அமர்ந்து செட்டில் ஏகிவிட்டீர்கள்,பின் என்ன இப்பொழுது போய் படிப்பு,,,,,,,,?எனக்கேள்விக்குறிட்டவனிடம் அவள் சொல்கிறாள்,நீங்கள்சொன்னமுன்னதுவேலை,கம்பெனி,இண்டவிர்யூ,எக்ஸட்ரா, எக்ஸட்ரா,எக்ஸட்ரா,,,/

ஆனால்நான்படிப்பது,வாழ்க்கையின்எதார்த்தம்,வாழ்க்கையின் நிறை குறை எனஇன்னும்இன்னுமாய்நிறைகொண்டவைகளைபடித்துக்கொண்டிருக்கிறேன் யாருமற்ற அத்துவான இரவில்,

இருட்டை அடையாளம் கொண்ட இரவுகள் என்னில் இன்றளவும் வெளிச்சத் தை விதைத்து விட்டுச் செல்கிறது என்றால் அதற்குக்காரணம் நான் படிக்கும் புத்தகங்களே,,,/

நான் படிக்கிற புத்தகளிலெல்லாம் வலராறு, இருக்கிறது.புவியியல் இருக்கி றது, விஞ்ஞானம் இருக்கிறது.அது தாண்டி ஆன்மீகம்,பக்தி சுற்றுலா இயற்கை என எல்லாம் இருக்கிறது,

அதை மீறி இவைகளை கைக்கொண்ட மனிதர்களின் ஈரம் உறைகொண்ட வாழ்க்கை இருக்கிறது, அவர்கள் எல்லாம் புத்தகங்களை படிக்கிற கனம் தோறுமாய் என்னிடம் பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள், துக்கம்பகிர்கிறார்கிறார் கள், அளாவளாவுகிறார்கள்,வாழ்க்கையின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொண் டவாறே இயற்கை வளம்மிக்க காடுகளையும்,அவை அடை காக்கும் விலங் குகளையும்,முகடு வைத்த மலைகளையும்,நீர் நிலைகளையும் சிறு மற்றும் பேரருவிகளையும் கடந்தும் எனக்கு அவைகளை அறிமுகம் செய்வித்துமாய் மகிழ்கின்றன,

அது போலாய் விஷயங்களை உள்ளடக்கிய புத்தகங்களைத்தான் இது நாள் வரை நான் நேரம் காலம் பார்க்காமல் படித்துக்கொண்டு வருகிறேன்,

பொதுவாய் புத்தகங்கள் என்னை புதுப்பிப்பதாய்,,ஆகவே மனம் விரும்பி ஏற்றுச்செய்கிறேன் அப்பணியை,,,/எனச்சொன்னவள் இவன் மனம் பிடித்து நுழைய அவளையே கரம் பற்ற முடிவு செய்த சிறிது நாளிலிருந்து இரு வீட்டாரின் இடையேயான பேச்சிற்கு முளைத்த சிறகு இரு வீட்டாரின் பேச்சு ,பரிமாற்றம்,மற்ற மற்றவைகள்,,,,என முடித்து இப்பொழுது திருமணத் தில் வந்து விடியிட வைக்கிறது,

அவளே மணப்பெண்ணாயும் அறிமுகமாகிறாள்,

திருச்சி டூசென்னை செல்லும் சாலையில் இருந்த மண்டபத்தில்தான் திரும ணம்,

மண்டபம் பெரிதுதான்,ஆனால் பார்க்க லட்சணமாக இல்லை,அங்கொன்றும் இங்கொன்றுமாய் உருட்டி எறியப்பட்ட பேப்பர்ச்சுருளைப் போல அங்கங்கே கட்டிடங்கள் பிரிந்து பிரிந்து நின்றது மண்டபத்தின் ஏக்கர்க்கணக்கான வளா கம் முழுவதும்,

பொதுவாக கட்டிடங்களை கட்டுவதை விடுத்து பின்னினால் சிறக்கும் என்பார் எனக்குத் தெரிந்த கொத்தனார் ஒருவர்,

அவர் சொல்லை வைத்துப்பார்க்கிற போது இவர்கள் கட்டிடத்தை பின்ன விட் டிருந்தார்கள்.

மனதில் நில்லா அந்த மண்டபத்தின் பெயரை மனம் இறுத்தி நிறுத்தப்பார்த்து முடியாமல் வீட்டை விட்டு கிளம்புகிற நேரமாய் ஓடோடிப்போய் வீடு முழுவ துமாய் தேடி கடைசியில் எனது தோளில் தொங்கிய பையிலிருந்து திருமணப் பத்திரிக்கையை எடுத்து திரும்வும் ஒரு முறை சரிபார்த்துக்கொண்டு அதே தோள்பையினுள் அதை பத்திரப்படுத்திக்கொண்டுமாய் விரைகிறேன், இடம் நோக்கி/

ஆமாம், திருமணத்திற்கு முதல்நாளே போக வாய்ப்பில்லாதவர்களுக்காய் திருமண வீட்டார்கள் பஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள்,

அதிகாலை ஐந்தரை மணிக்கு பஸ் பாலம் ஸ்டேசன் அருகில் இருந்து கிளம் பும் என எல்லோருக்கும் தகவல் சொல்லியும் ஏற்பாடு செய்தும் ஒருங்கி ணைத்தும் போன் செய்தும் குறுந்தகவல்அனுப்பியும்,வாட்ஸ் அப் செய்துமாய் சொல்லி முடித்த பின்பாய் அவசியம் வருகிறேன் எனச்சொன்னவர்களில் சிலர் வராமலும்,வரமாட்டேன் எனச்சொன்னவர்களில் சிலர் வருகிறேன் அவ சியம் என்பதாயும் சொன்ன சொல்லின் நுனி பிடித்தும் அதை இறுகக் கட்டிக் காத்தும் சொற்கட்டொன்றை உருவாக்கி அதை அவிழ்ந்து விடாமல் இறுக்கப் பிடித்து இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து முடிந்து வாசனையாய் பவுடர் செண்ட்டின் துணை கொண்டுகிளம்பலாம்என நினைக்கிற நேரமாய் போன் வருகிறது அதிகாலை நான்கரை மணிக்கு,/

“நான்தங்களுடன்திருமணத்திற்குவருவதற்காய்கிளம்பிக்கொண்டிருக்கிறேன், சற்று தாமதமானாலும் வந்து விடுகிறேன் உறுதியாய்,ஆகவே என்னை எதிர் பார்த்துக் கிளம்பவும்,,,” என வந்து விட்டபோன் பேச்சை மனம் பொத்தி ஏற்ற வனாய் நான்கரையிலிருந்துநகன்று மணி ஐந்தை எட்டித்தொடப் போகிற நேரமாய் கிளம்பி பாலம் ஸ்டேசன் வந்து அடைகிறேன் சீக்கிரமாய்,,/

நான் சென்று நின்ற அந்த வேளை டீக்கடைகள் கூட திறந்திருக்கவில்லை. உடனே நான் ஒரு டீக்குடித்தே ஆகவேண்டும் என நினைத்த வேளை பஸ் டிரைவர் போன் பண்ணியவாறே எனதருகில் கொண்டு வந்து பஸ்சை நிறுத் தினார்,

வந்தவர் சும்மா இல்லாமல் என மனதை பிரதிபலித்தவராய் சார் சற்றுத் தள்ளி ஒரு டீக்கடை திறந்திருக்கிறது,வாருங்கள் சாப்பிடலாம் எனக் கூப்பிட்டுப் போனார்,

குட் காம்பினேஷன் என மனதிற்குள் சொல்லியவனாய் டிரைவருடன் நடக்கி றேன்.

நடக்கிற அடி ஒவ்வொன்றுன்றுக்குமாய்,ஒவ்வொருவருக்காய் போன் பண்ணி அங்கு வரவழைக்க சரியாக ஆறு மணியாகிப் போகிறது.

ஒருவர் இருவரல்ல அறுபது பேர்,

ஆற்றை கூட்டி உள்ளங்கைக்குள் அடைக்கச் சொன்னால்,,,,,,,?கஷ்டம்தான், ஆனாலும் கொஞ்சம் முயன்று அடைத்து விட்டேன் என்கிற நினைப்பில் இரு ந்த வேளை பள்ளத்தை நோக்கி ஓடி வருகிற நீர் போல எல்லோரும் வந்தா ர்கள்,

இதில் மிகப்பெரும் கொடுமை என்னவென்றால் சற்று தாமதமாக வருவேன் எனபோன் பண்ணியவர் வந்ததற்கு பின் தான் சீக்கிரம் வந்து விடுவேன் எனச் சொன்னவர்கள் வந்தார்கள்.

ஒரு வழியாய் ஐந்து ஐந்தரை ஆனது,ஐந்தரை ஆறு ஆனது ,ஆறு ஆறே கால், ஆறே கால் ஆறரையாகி பின் ஏழு மணிக்கு எல்லோரும் ஏறி விட பஸ் ஸைக் கிளப்பினோம்,

இதில் மிகப்பெரும் கொடுமை என்னவென்றால் இவர்களையெல்லாம் ஒன்றி ணைத்துஒரேநூலில்கோர்த்து கொண்டு வழி நடத்திக்கூட்டிச் செல்கிறவனாய் நானாகிப் போனேன்,

அப்படியாய் கூட்டி வருகிற வழியில்தான் தங்களை நினைத்தேன் ,திருச்சி செல்கிறோமே நண்பரை பார்த்து விட்டு வரலாம் என ,

நினைத்தநினைப்புஅப்பிடியேஇருக்கசென்றுஇறங்கியதும்திருமணம்,சாப்பாடு திரும்பவுமாய்கூட்டிவந்தவர்களைஒன்றிணைத்து கிளம்ப என்பதுவே சரியாக இருந்தது, அதனால் வர இயலவில்லை,மன்னிக்கவும் சற்றே,,,,/ என மனதிற் குள்ளாய் ஒரு மடலெழுதி தங்களுக்கு அனுப்பிவைத்து விட்டு முடித்து விட்டு கிளம்புகிறேன் அங்கிருந்து/

தங்களை சந்தித்து தாங்கள் எழுதிய புஸ்தகம் ஒன்றை வாங்கிக்கொண்டும் தங்களிடம் சிறிது பேசி விட்டு வரலாம் என்கிற நினைப்பு பாகு முறுகிப் போன பலகாரமாகிப்போனதில் கொஞ்சம் வருத்தமே எனக்கு.

இருந்தாலும் அந்த வருத்தத்தை முன் நிறுத்தி இப்பொழுதைக்கு தங்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பா,,,,/

காலம் மிகச் சிறந்த கணக்கீட்டாளன் என்பார்கள்,

அவன் இடுகிற கணக்குகளில் பிழை ஏதும் நேரிடாமல் இருக்குமானால் நாம் சந்திக்கநேர்கிறநேரம் கண்டிப்பாய்சீக்கிரத்தில்வாய்க்கும்சந்திப்போம் நண்பா,,/

8 Sept 2017

இடைவெளி,,,,,,

நம்மில் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கிறது அம்மாதிரியான அனுபவப் பகிர்வு? 

நாற்புறமும்கத்தரித்துவெட்டியதுமாதிரிபரந்துவிரிந்தமைதானம். 
 
மைதானத்தின் நடுவே தியாகிகள் நினைவு ஸ்தூபி.ஸ்தூபியை சுற்றி வட்டமாய் கட்டப்பட்ட கம்பிகேட்.ஸ்தூபியின் அருகில் உயரமாய் நின்றிருந்த விளக்குக் கம்பத்தில் சோடியம் லைட்டுகள் நான்கு பக்கமும் திரும்பி.
சோடியம்வேப்பரின்வெளிச்சம்இன்னும்தரையைதொடவில்லை.

மைதானத்தின் இடதுபுறம் இருந்த கோவிலை ஒட்டி வரிசையாக அமர்ந்திருந்த டீக் கடை,சைக்கிள்கடை.தவிட்டுக் கடை,ப்ளாஸ்டிக் பொருள் விற்பனைக் கடை.பழைய பேபர் கடை, கயிற்றுக் கடை பக்கத்தில் சிரியதாய் தெருவோரடீக் கடை.அதைத் தாண்டி போஸ்ட் ஆபீஸ் பெரியதாக,காரை பெயர்ந்து,பெயிண்ட் உதிர்ந்து போய். நன்றாக வாழ்ந்து நொடித்துப் போன பெரியதனக் காரரின் வீடாய். மைதானமெங்கும்விரிந்திருந்த பழக்கடைகள், வெங்காயவியாபாரம். 

தெருவிளக்கின் வெளிச்சத்தையும் மீறி அவர்கள் பொருத்தி வைத்திருந்த காடா விளக்கின் வெளிச்சம் காற்றில் ஆடி,ஆடி கண்ணை உறுத்தியது. 

நான் வாங்கிய பாயை சைக்கிளில் கட்டிக் கொண்டிருக்கையில் எதிர் சாரியில் கூட்டம் நிறைந்த ரோட்டிலிருந்து என்னை குறி வைத்து வந்தான் அவன். 

என்எதிரில்நின்று என்னை நிதானித்துப் பார்த்தவன்“டேய்என்னை தெரியுதா”? 
என்றான். 

நினைவுகளின் புரட்டலில் அவனது முகம் சரியாக பிடிபடவில்லை. கேள்விக் குறியுடன்அவனைஅமைதியாய்பார்த்தபோது.............நான்தான்சுந்தரம்என்றான். 

பல்வேறானதிசைகளில் பயணிக்கிற வாழ்க்கை நினைவுகளின் இனி மையை யை வற்ற வைத்து விடுகிறதுதான்.நம்மில் பெரும்பாலா னோருக்கு கிடைக் கிற பாக்கியம்தான் எனக்கும் கிடைத்திருக்கிறது. எவ்வளவு நேரம்தான் அன் பொழுக கூப்பிட்டவனை பேசாமல் பார் த்துக் கொண்டிருக்க? 

இருவருமாய் டீ சாப்பிட்டோம்.“எங்கவேலைதான் பாக்குறேன் நான், காசுக் கடை பஜார்ல நகைப் பட்டறை வச்சிருக்கேன்.”விசிட்டிங் கார்டை நீட்டினான். வெள்ளை வேஷ்டி,வெள்ளைசட்டையில் மிடுக் காய் தெரிந்தான்.துண்டுப் பேப்பர்களால் சட்டைப் பை நிரம்பித் தெரி ந்தது.இடது கையில் வாட்ச் கோல்ட் கலர் செயின் போட்டு,கழுத்தில் மைனர் செயின்,தங்கக்கலர் ப்ரேம் போட்ட கண்ணாடி,“எல்லாமே கவரிங்” எனவும் “பிழைப்புக்காக என்னமோ திங்கிற யேவாரம்” எனவும் சொன்னான். 

எங்களின் கல்யாணம்குடும்பம்,பிள்ளைகள்அவர்களதுபடிப்பு எல்லா மே பேசினோம்.இருவருமாய் இன்னொரு டீக் குடித்தோம்.வழக்கம் போல “நேரம் கிடைக்கும் பொழுது அவசியம் வீட்டுக்கு வரணு ம்” எனப் பிரிந்தோம். 

நன்றாக குளு,குளு என வீசிய காற்றில் பறந்து வந்து விழுந்த தூசி யாக போகும் பொழுது அந்த தகவலைச் சொன்னான். 

“நம்ம கூட படிச்ச பஷீர் புரோட்டாக் கடையில வேலைசெய்யிறான்.” “ராமர் கை வண்டி இழுக்குறான்,” செபாஸ்டின் மார்க்கட்டுல மீன் யேவாரம் பண்ணு றான்.என்றான். 

வீட்டிற்கு வந்ததும் லேசாக ஞாபகத்திற்கு வந்தான் சுந்தரம். பள்ளி நாட்களில் அழகாகவும்,நுணுக்கமாகவும்,நன்றாகவும் படம் வரையத் தெரிந்தவன். 

அவன் வரைந்து கொடுத்த தாஜ்மகால் படம் என்னிடம் நிறைய நாட் கள் இருந் தது.அன்றாடங்களின் இயந்திரத்தனமான நகர்வுகளிலிரு ந்து இம்மாதிரியான பழைய பள்ளிநாட்களின் நண்பர்களை சந்திப்பதும்,அவர்களோடு பேசி அளா வளாவதுமான நிகழ்வு மனதுக்கு சந்தோஷம் அளிக்கிறதுதான். 

நினைக்கையில்இனிமையாய்இருக்கிறதுதான்நானும்எனதுநண்பர்கள் சுந்தர மும் , பஷீரும்,ராமரும் ஒரே பள்ளியில்தான் பள்ளி இறுதி வரை. 

வெவ்வேறு செக்ஷன்களில் வெவ்வேறு ஆசிரியர்களிடம் பயின்ற போதும் கூட நாங்கள் நல்ல மார்க் வாங்கத் தவறியதில்லை. அதனா லேயே எங்களுள் பூத்திருந்த ஒற்றுமைகெட்டிப் பட்டது எனலாம். 

அப்புறம் பள்ளி இறுதியாண்டு முடிந்து கல்லூரிப் படிப்புக்காக கை கொடுத்துப் பிரிந்தோம்.வசதியைப் பொறுத்துதானே கல்லூரிகளின் மேல் படிப்பு அமைகி றது. 

அது போலவே அமைந்து விட்ட கல்லூரி மேல் படிப்புகளை முடித் தும் முடிக் காமலும் ஐவரும் வெவ்வேறு நிலைகளில் வாழ்கையில் செட்டிலாகிப் போய் விட்ட நாட்களை சுந்தரம் பகிர்ந்து கொண்டும், ஆழ விதைத்து விட்டும் போய் விட்டான். .

நாங்கள் அனைவரும் படிக்கும்போது நல்ல நிலையில்தான் இருந் ததாய் ஞாபகம். நன்றாக உடுத்தியும்,உண்டும் இருந்ததாய்த்தான் ஞாபகம். 

பின்எப்படிஇந்தமுரண்பாடு.தெரியவில்லை,சுந்தரமும்அதேயேதான்சொன்னான். தெரியவில்லை என./ 

உங்களுக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

7 Jul 2017

நிழல்களை காவு கொண்ட உருக்கள்,,,/

பரந்துபட்ட ஜன்னலின்நிழலை இவனது இடது உள்ளங்காலின்உருமறைத்துக் கொள்கிறது.உள்ளங்காலின் உருவை விட பரந்துபட்ட ஜன்னலின் உரு சற்றே பெரிதாகவும் அகலம் காட்டியுமாய்/

இருந்தபோதும்கூட கால் இருந்த தூரத்தையும் ஜன்னலின் நிழல் படர்ந்திருந்த தூரத்தையும் கணக்கில் கொள்ளும் பொழுது கொஞ்சமும் பிசகு படாமல் மறைப்பு தொடர்கிறதுதான்,கண் முன்னால் வைத்து விட்ட சின்னக்கல் போல/

கிராதி கம்பி வைத்த ஜன்னல் மேலும் கீழுமாய் இழுக்கப்பட்டகம்பிகளால் டிசைன் செய்து நெசவிடப்பட்டிருந்தது அது பார்க்க அழகாகவும் சிறியதா கவும் இருந்தது,

இன்னும் பெயிண்ட செய்யப்படவில்லை.ஜன்னலை வாங்குற பொழுது கம்பி களின் மீது பூசப்பட்டிருந்த ரெட் ஆக்ஸிட் பெயிண்ட் மட்டுமே கொண்டு காட்சிப்பட்டதாக/

இப்பொழுது மரம் விற்கிற விலையில் மரம் வாங்கி ஜன்னல் செய்வது கட்டுபடியாகாதென்றும் அப்படியாய் செய்வது தேவைஇல்லாததென்றும் கூறிய நண்பனின் பேச்சைக்கேட்டு கந்தன் மர டிப்போவில் வாங்கிய ரெடி மேட் ஜன்னல்தான் இது,

ஜன்னல் விற்ற கடையை விட ஜன்னலை வடிவமைத்தவர் பேசிய பேச்சு நன்றாக இருந்தது,எத்தனைக்கு எத்தனை அளவு கொண்ட ஜன்னல் இது,எந்த மரத்தால் செய்தது,நீங்கள் கட்டிய வீட்டில்ப்பொருத்தப்போகிற இடத்திற்கு இந்த ஜன்னலே போதுமா இல்லை இதை விட சற்றே அதிக விலை கொண்ட கொஞ்சம் நயமான மரத்தால் செய்த ஜன்னல் வேண்டுமா எனச்சொல்லி விடு வார்,

அவர் பேசிய பேச்சே ஜன்னலை வாங்க வைத்து விடுகிறது,அல்லது வாங்கு கிற முடிவிற்கு கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

ஜன்னலை வாங்கப்போன அன்று இரு சக்கர வாகனத்தை பாய் சைக்கிள் கடையோரமாய்தான் நிறுத்தியிருந்தான்.ஜன்னலை வாங்கி விட்டு திரும்பி வரும்போது எதிர் வரிசையில் பாய் கடைக்கு எதிர் வரிசயில் இருந்த ரேஷன் கடையில் சீனி மண்ணெண்னை வாங்க கூட்டம் வரிசையாய் வால் பிடித்து நின்றிருந்தார்கள்,

அன்று மதியமே அரிசியும் போடப்போகிறார்கள் எனப்பேசிக்கொண்டார்கள். புதிதாகவந்தஆபீசர்கொடுத்தஆலோசனைதானாம்.முடிந்தால் உணவுப் பொரு ளை யும் எரி பொருளையும் ஒரே நாளில் வழங்குங்கள்,

நமக்காவது உத்திரவாதப் பட்ட ஒரு வாழ்க்கை இருக்கிறது,ரேஷனில் சாமான் வாங்க வருகிறவர்களில் பாதி பேருக்கும் மேலே அந்த உத்திரவாதம் கூட இல்லாத நிலையில் இருப்பவர்கள்.அவர்களுக்கு உதவுவது நாம் செய்த புண்ணியம்/

ஆகவே ரேஷன் வாங்க வருகிற அவர்கள் எரிச்சல் படுத்தினால் கூட கோபப் படாமல் பணியாற்றுங்கள் என சொல்லிவிட்டு விட்டார்.

அவரது சொல்லையே தேவவாக்காக ஏற்று செயல்படுகிற ரேஷன் கடை ஊழியர்களை அந்தக்கடைக்கு வருகிற மக்கள் தூக்கி வைத்து கொண்டாத குறையாகத் தான் வைத்திருந்தார்கள்,.

என்னதம்பி,,,,,,எண்ணெண்னே,என்னங்கய்யா,வாங்க சார்,என்கிற சொல்லாக்க மும் மாரியாதையும்தான் அங்கு ஓடியது.அது தவிர்த்து வேறில்லை.

அந்தக்கடைக்கு ரேஷன் பொருட்கள் இறக்க லாரி வந்து விட்டால் ரேஷன் கடைக்கு எதிர்த்தாற்போல் இருக்கிற பாய் சைக்கிள் கடைக்காரர்களும் அங்கு வந்து போகிறவர்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்.

அவ்வளவு இடைஞ்சலான இடத்தில் லாரி வந்து திரும்பி அதன் பின் பக்கம் காட்டி லோடு இறக்கத்தோதாய் நிற்க வைப்பதற்குள்ளாய் போதும் போதும் என ஆகிப்போகும்,

லாரியை நேராக க்கொண்டு வந்து நிறுத்தி ரிவர்ஸ் எடுக்கும் போது மிகச் சரி யாக சைக்கிள் கடை வாசலில் வந்து முட்டும் லாரி,இல்லையெனில் முட்டு வது போல் வரும்,சமயத்தில் சைக்கிள் கடையின் முன் பகுதியில் கொஞ்ச மாய் ஏறித்தான் இறங்க வேண்டி இருக்கும்.

அது பற்றி சைக்கிள் கடை பாயோ லாரி டிரைவரோ கவலைப்பட்டதில்லை. பாயிடம் கேட்டால் வாஸ்தவம்தான் இது கரணம் தப்புனா மரணம்ங்குற யேவாரந்தான்,இருந்தாலும்ஒரு ஐந்நூறு பேரு சாப்புடறதுக்கு பொருள் வருது, அத நம்ம நொட்ட சொல்லி வம்பிழுத்தமாதிரி ஆகிறக்கூடாது,அதான் என்பார்/

பக்கத்து சலூன் கடைக்காரர் இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருப்பவ ராக இருந்து கொண்டிருப்பவர் பாய் சொன்ன அதே சொல்தான் என்னதும், வேறு பெரிதாக ஒன்றுமில்லை என்பார்.

பாயிடம் புதிதாக சைக்கிள் மாட்டிய ஒரு நாளில் அவர்தான் சொன்னார்,சார் சைக்கிள் மாட்டிறது என்னவோ பையனுக்குத்தான்னாலும் கூட இப்பதைக்கு சைக்கிள் ஒங்களுத்தான் தேவை ,ஏன்னா ஒக்காந்துக்கிட்டே இருக்கீங்க,வயசு ஐமதுக்கு மேல ஆகிப்போச்சி.

எனக்கெல்லாம்அம்பத்திரெண்டுமுடிஞ்சிஐம்பத்திமூணுஅடியெடுத்துவைக்கிது, நான் நின்னுக்கிட்டே தொழில்ப்பண்ணுற ஆளுதான்னாலும் கூட எனக்கு இப்ப கொஞ்சம் யோசனையா இருக்கு பெருத்துப்போன ஒடம்பப் பாத்து.நான் இதோ சைக்கிள்லதான் போயிக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கேன் என்பார்.

வாஸ்தவம்தான்அவர் சொல்வதும் இனிமேல் தினம் பத்து கிலோ மீட்டர் தூர மாவது சைக்கிள் ஓட்ட வேண்டும் என முடிவெடுத்தவனாக வந்தவந்தான் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு நாள் கூட சைக்கிளை தொடக்கூட இல்லை.

மித மிஞ்சிய சோம்பேறித்தனமும் ,மன அலுப்பும் பிறகு பார்த்துக் கொள்ள லாம் என்கிற தள்ளிப்போடலும் கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.

வீட்டை ரீமாடல் செய்து கட்ட வேண்டும் எனச் சொன்னபோது அல்லது அதற் கான வித்தை மனதில் ஊனிய போது மனைவி சொன்னாள், ”செய்யப் போற வேலையோட வேலையா சேத்து அடுப் படியமாத்திக் குடுத்துருங்க,

”இப்ப இருக்கிறயெடத்துல இருந்துக்கிட்டு என்னால நிம்மதியா ஒரு வேலை கூடசெய்ய முடியல,சேந்தாப்புல அரை மணி நேரம் அடுப்படியல நின்னு வேலை செய்ய முடியல, உக்காந்து காய்கறி நறுக்க முடியல, மிக்ஸியில ஒரு சட்னி வச்சி அரைக்க முடியல,ஒரு தோசை சுட முடியல, இட்லி அவி ச்சி எடுக்க முடியல.நின்னு சோறு வைக்க முடியல,வேக்காடா வேர்த்து ஊத்துது. ஒடம்பு.வேலைசெய்யவேஎரிச்சலாப்போகுது,ஏங்ஒடம்பேஎனக்கு அந்நியமாத் தெரியுது,இதுபோலானபொழுதுகள்ல,,,எரிச்சலாவும்கோபமாவும்போகுது,தவிர இப்பிடியேவேக்காட்டுலவெந்துட்டுக்கெடக்குறதுனாலஏதாவதுஒன்னுஒடம்புல வந்து தொந்தரவுங்குற பேர்ல ஒட்டிக்கிருது.

”சமயத்துல பேசாம சமையக்கட்ட வுட்டு ஓடிறலாமான்னு தோணிப்போகுது, அப்பிடிப் போனா எத்தனைக்கு கோவிச்சிக்கிட்டு எங்க போயி நிக்கிறது,நான் மட்டுமா பொம்பளைங்கள்ல பாதிப்பேருக்கு மேல எல்லாரும் அடக்கி வச்சி ருக்குற கோவத்தையும் வேகாலத்தையும் மனசுல வைச்சிக்கிட்டு எங்கிட்டா வது பேறதுன்னா இந்நேரம் கோவிச்சிட்டுப் போயி தெசை தெரியாமயில்ல நின்னுக்கிட்டு கெடந்திருக்கணும்,

“அதெல்லாம் இல்லாம அடுப்படியே கதின்னு கெடக்கமே அதுலயிருந்தே தெரியலையா,நாங்க மீறமாட்டாத ஆளுன்னு/

“நான் பொறந்த வீட்டுலயும் அடுப்படி இருந்துச்சி ,அது விறகு அடுப்புதான், இந்த மாதிரி ரூமு ரூமா பிரிச்சு வைச்ச வீடெல்லாம் கெடையாது,ஒரே ஹால்தான்,அதுலதான் அடுப்படி படுக்க ரூமுன்னு கண்ணாலேயே அளவெ டுத்தது போல நாங்களே பிரிச்சி கட்டி வச்சிருந்தாங்க,

அப்பிடி பிரிச்சி வைக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருந்துச்சி. இல்லை ன்னா வீடு வீடா இருக்காது,ஒரு சத்திரம் போலத்தான் இருக்கும்,மடக்கி வைக்கப்பட்டஒரு ஹால்ல ஒருபக்கம் அடுப்படி,அதுல இருந்து நீண்டு வந்தது போல அடுப்படி இருக்குற வரிசையிலயே தண்ணி வைக்குற யெடம். அடுப் படிக்கும்தண்ணிக்கொடம் வைக்கிற பட்டியக்கல்லுக்கும்ஊடால மடக்குப் போ ட்டு ஒரு யெடம்,

“என்னதான் மண் அடுப்பா இருந்தாக்கூட வெறகு வைச்சி எறிக்கிறதுக்குத் தோதா அமைப்பா நல்லா இருக்கும் பாத்துக்கங்க, அடுப்படி, பொங்கி வைச்ச சோறு கொழம்பு சட்டிகள யெறக்குறதுக்கு அந்தமடக்கு,அத ஒட்டி தண்ணிக் கொடம் வைக்கிற பட்டியக்கல்லுன்னு அமைப்பா இருக்கும்,

சமைக்கிறவுங்களுக்கும்அடுப்படியிலமத்த மத்த வேலை பாக்குறவுங்களுக் கும் ஈஸியா இருக்கும்,

“அந்த ஈஸியும் அமைப்பும் இப்பம் லட்சக்கணக்குல போட்டுக்கட்டுன வீட்ல இல்ல,அந்த சௌகரியமும் காத்தோட்டமும் கூட இல்ல,என்னதான் கேஸ் அடுப்பு,குக்கரு,மிக்ஸி கிரைண்டருன்னு இன்னும் இன்னுமான சௌகரியா மானபலதுவந்துட்டப்பக்கூடவும்அந்த மண் அடுப்புல ஈயச்சட்டியில சமைச்சி சாப்புட்டப்ப இருந்த சௌகரியம் இப்பம் இல்ல,

“ஆமாம் சரி அதெல்லாம் எதுக்கு இப்பம் போயி ஒங்களுக்கு ஞாபகப்படுத்துன மாதிரி படுத்திக்கிட்டு, ஊருலதான் ஒங்க வீடு எங்க வீட்ல இருந்து நாலாவது வீடுதான,என்னத்தையாவது சாக்கு வச்சி மூச்சிக்கு முன்னூறுதரமும்,ஒரு நாளைக்கு நூத்திப்பத்து தடவைக்கு மேலயுமா எங்க வீட்டுக்கு வந்துருவீங்க;

“என்னைய பாக்கணும்ன்னு சாக்கு வச்சித்தான் நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சி போச்சி,எங்க வீட்ல எல்லாருக்கும்.சரித்தான் நல்லபையன் இவனுக்கு நம்ம பொண்ணு வாக்கபட்டா நல்லாயிருப்பான்னு நம்பி அவுங்களும் அனுமதிச் சாங்க,நீங்களூம் அத்தன தடவை வந்தாலும் நீங்களா போட்டுக்கிட்ட ஒரு எல்லைக் கோட்ட தாண்டாத ஒரு ஆளா ஒங்கள் பாவிச்சிக்கீட்ங்க,

“அதமீறிஎன்னையப் பாக்கனும்ன்னு ஆசைப்பட்டாக்கூட கண்ணோட கண்ணா ஒரு பார்வை, அவ்வளவுதான்.அந்த பார்வை கனிஞ்சி நீங்க என்னய கை பிடிச்சப்ப நம்ம ரெண்டு பேருக்கும் மனம் கனிஞ்சி போன மாதிரி மத்த யாருக்கும் நடந்துருக்குமாங் குறது சந்தேகமே/

”அப்பம் வாடகை வீட்ல யெறநூத்தி சொச்சத்துக்கு ஆரம்பிச்ச வாழ்க்கை தோளுக்கு மேலரெண்டு புள்ளைங்க வளந்து நிக்கிற இப்பக்கூட சொந்த வீட்ல தொடருது சந்தோஷமா,

“அந்த சந்தோஷம் நெலைக்கணும் மொதல்ல, எத்தன யெடர் பாடு வந்தாலும் ன்னு சொல்லிக்கிர்றேன்”எனச்சொல்லி ஆரம்பித்த பேச்சை இடைமறித்தவ னாகவும்கவனத்தைதிசைதிருப்பியவனாகவும்சமையலறையைகவனிப்பவ
னாய் அவதாரம் கொள்கிறான்,

டாணாப்பட மடக்கிப் போடப்பட்டிருந்த கடப்பக்கல் மேடை கறுப்பாக உருவம் காட்டி கால் நீட்டி படுத்திருக்கிறது, அதன் மீது மேடையின் நடு நாயகமாய் அமர்ந்திருக்கிற கேஸ் ஸ்டவ்,அதன் இடது புறமாக வைக்கப்பட்டிருந்த மிக்ஸியும் கிரைண்டரும்,வலது புறமாய் வரிசை காட்டி அமர்ந்திருந்த தண் ணீர் குடங்கள் மூன்று, அது போக தண்ணீர் குடங்கள் வரிசை காட்டி நின்றி ருந்த இடத்தை விட்டு சற்று தள்ளி சாப்பாட்டுத்தட்டுகள் மற்றும் கரண்டிகள் வைத்திருந்த சில்வர் ஸ்டாண்ட் அதை ஒட்டி இருந்த சிங்க் மற்றும் இதர இதரவையாய் அடையாளம் சுமந்து கொண்டிருந்த சமையலறையை மாற்ற இவனுக்கு இஷ்டம் இல்லை என்ற போதிலும் மனைவியின் விடாப்பிடியான பிடிவாதமும்,இரைந்து பட்ட இரைஞ்சலும் இவனை சம்மதம் சொல்ல வைத் தது.

இவனுக்கானால்ஒரேபிடிவாதம்கிழக்குப்பக்கமாய்பார்த்துஇருக்கிறஜன்னலை திறந்தால் வருகிற சூரிய வெளிச்சம் சமையலறையில் பட்டால் உடலுக்கு நல்லதுஎன நினைத்தான்.

அதை மனைவியிடம் சொன்ன போது ரொம்ப ஈஸி,என்ன இப்பொழுது புதிதாக கட்ட இருக்கிற சமையறையில் கிழக்குப்பக்கமாய் பார்த்து ஜன்னல் வைத்து விட்டால் முடிந்து போகிறதுவிஷயம் என்றாள்,

சரிதான் அதுவும் என கட்டி முடித்த சமையலறை டைல்ஸ்கள் மீதுதான் ஜன்னலின் வெளிச்சம் விழுந்திருந்தது பரவியும் படர்ந்துமாய்/

பார்க்க ஆடம்பரமாக இல்லாமல் மிகவும் எளிமையாக இல்லாமலும் நடு வாந்திரமாய் இருந்த டைல்ஸ்கள் கண்ணுக்கு லட்சணம் காட்டியே/

நந்து அண்ட்கோவில் டைல்ஸ்கள் வாங்கிய போது டாக்டர் அண்ணனையும் சீனியையும் சொல்ல வேண்டி வந்தது, இருவ ரையும் சொன்னதும் கடைக் காரர்கள் கொஞ்சம் ஒட்டுதலான மாதிரி உணர்ந் தான்.

சொன்ன விலையிலிருந்து படக்கென இறங்கி வந்தார்கள்,இதற்காகவா மது ரை போக நினைத்தோம்,வீட்டை ரீ மாடல் பண்ண வேண்டும் என நினைத்த போது இப்பொழுது புதிதாக வீடு கட்டுறவர்கள் எல்லோரும் போடுகிற மாதிரி பேசாமல் கிராணைட் போட்டு விடலாமா என நினைத்தான்.

மனைவியும்அதையேமுன்மொழிந்தாள்,ஆனால் பணம்தான்,,,,,,,,,?கொஞ்சம் கேள்விக் குறி தாங்கி நின்றது.அதை உடைக்க எப்பொழுதும்தான் இருக்கிறதே மனைவியின் நகைகள்,

எல்லோர் வீட்டிலும் எல்லோருக்கும் ஈஸியாய்ப் போவதும், கைவரப் பெறு வதும் அதுதான்.

மனைவியின் நகைகளை கொண்டு போய் பேங்கில் வைத்து விடுவது, இவனு க்கும்அதுதான் கை கொடுத்தது ,கையிலிருந்த பணம் பாதி வேலைவரை கை கொடுத்தது,

இவனும் மனைவியும் போட்ட கணக்கு இந்த விஷயத்தில் தப்பாகிப் போனது, கையிலிருக்கிறரூபாயைவைத்து மொத்த வேலையையும் முடித்து விடலாம், அப்படியே காணாமல் போனாலும் கொஞ்சம் மட்டுமே கையைப் பிடிக்கும், அந் நேரம் பார்த்துக் கொள்ளலாம்.என்கிற தைரியம் கொண்டும் தாங்கியும்தான் ஆரம்பித்தான் வேலைகளை,

அதுஇப்பொழுதுபேங்கில்நகைகளை கொண்டு வைக்கிறது வரை கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது,டைல்ஸ் கடையில் போய் நின்ற போது டைல்ஸ் எடுத்துக்காட்டியவர்தான் சொன்னார்,

“சார் கிச்சனுக்கான டைல்ஸ்தான,,,,,ஐ திங்,,,என ஆரம்பித்தார் பேச்சை,அவரது பேச்சை இடை மறித்தவனாக இவன் சார்,சார் அதெல்லாம் வேணாம் விடுங்க நான் சாதாரணமான் ஆளு நீங்க எப்பிடின்னு தெரியாது எனக்கு,

பேச்சு பழக்க வழக்கத்தில் இருக் கிற ரிச்னெஸ் வேணாம்.சும்மா சாதாரணமா வே பேசுங்க போதும் என்றவுடன் அவர் இவன் எதிர்பார்த்ததை விட மிகவும் சாதாரணமாக ஆரம்பித்து விட்டார்,

சார் அது வேற ஒண்ணும் இல்ல,பொழப்புக்காக எதையோ தின்ன கணக்குத் தான்.விடுங்க எங்க பாடு எங்களோட,பழக்கிப்போச்சி எங்களுக்கு,இப்ப ஒங்க ளுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்க,என ஆடம்பரமற்ற பேச்சில் ஆரம்பி த்து டைல்ஸ் வாங்கியதிலிருந்து பில் போட்டு ஆட்டோவில் ஏற்றும் வரை கூடவே இருந்து நன்றி சொல்லி அனுப்பினார்,

எதற்கு நன்றி எனக்கேட்டதற்கு ஆமாம் நீங்கள் என்னை சாதாரணமாய் இருக்க இன்றிலிருந்துகற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்.அப்படி இருத்தலால் மனித மனங் களில்நிறைந்து நிற்கவும் நுழைந்து நிறையவுமாய் இருக்கலாம் என்கிற நிஜத்தை ஆழமாய் என்னில் ஊன்றி விட்டீர்கள் பைசா செலவில்லாமல், அதற்குத்தான் நன்றி எனச்சொன்ன அவரை வாஞ்சையுடன் ஏறிட்டுப் பார்த்து விட்டு வந்தான் டைல்ஸ் ஏற்றிய ஆட்டோவில் டைல்ஸ்ஸோடு டைல்ஸாக/

டைல்ஸை அவன் சொன்ன இடத்தில்வாங்கவில்லை என முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்த டைல்ஸ் ஒட்டுபவனிடம் சமாதானம் பேசி அவன் மனம் நீவி விட்டு அவனை ஒட்டச்செய்து விட்டு அன்று கிடைத்த நிம்மதி இப்பொழுது கால் நிழலை அண்ணாந்துபார்க்கும்போது கிடைக்கிறது.

வலது காலின் மீது இடது காலைப் போட்டுப்படுத்திருந்தான்,அது வலிக்கும் போதும் சலித்துப்போகும் போதும் இடது காலின் மீது வலது கால்,

கொஞ்சகாலமாகவேஇடது மற்றும் வலது கால்களின் அடிப்பாதம் வலிக்கிறது ஏனென்ற காரணத்தை சொல்லாமலேயே,/

பெரிதாக ஒன்றுமில்லை,நரம்பு தொடர்பான பிரச்சனைதான் சரியாகிப்போகும் என நூறு ரூபாய்க்கு மாத்திரைகள் கொடுத்தார்,

மாத்திரை வாங்கி வந்த இரவு எல்லோரும் தூங்கிப்போன இரவில் கால்மேல் கால்போட்டு படுத்திருந்த இவனது உள்ளங்காலின் உரு பரந்து பட்டுப் படர் ந்திருந்த ஜன்னலின் நிழலை மறைக்கிறதாய்/