Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

9 Sept 2017

வாராந்திரி,,,,,,,,,,,,,,

சென்ற இடம் டீக்கடையாகவும் வாங்கிய பத்திரிக்கை ஒரு வாரந்திரியாகவும் இருந்தது.

அது எப்படி அது டீக்கடையில் போய் வாரந்திரியை எப்படி வாங்க முடியும்,,,? என்பதல்ல,டீக்கடை குடிகொண்டிருக்கிற இடத்தின் அருகாமையாய் இருக்கிற ரஹீம் பாய் கடையில்தான் வாராந்திரியை வாங்குவான்,

என்ன பாய் நல்லாயிருக்கீங்களா என்பதுதான் இவன் அவரைப் பார்த்ததுமாய் கேட்கிற முதல் கேள்வியாய் இருக்கும்.

அவரும் என்ன சார் ,நல்லாயிருக்கேன் சார்,நீங்கள்ளாம் இருக்கும் போது எனக்கு என்ன சார் எனச் சிரிப்பார்.

சிரிப்பின் முடிவாய் கேட்பார்,என்ன சார் இப்பத்தான ஒரு மணிநேரத்துக்கு முன்னாடி பஜாருக்குப்போது நல்லாயிருக்கீங்களான்னு கேட்டீங்க,இப்ப திரு ம்பி வந்து கேக்குறீங்களே,என்பார்,

இருக்கட்டும் பாய் என்ன இப்ப கேட்டதாலா,நான் கேக்குறதுல எதுவும் ஒங்களுக்கு மன சங்கடம் இருந்துச்சின்னா கேக்கல பாய் என்பான்,

அய்யய்யோ அப்பிடியெல்லாம் இல்ல சார்,நீங்க நிமிஷத்துக்கு நிமிஷம் அப்பிடி கேட்டாலும் நான் வருத்தப்பட போறதுல்ல சார்,இன்னும் சொல்லப் போனா நீங்க கேட்டதுல எனகு சந்தோஷம்தானே தவுர வருத்தமெல்லாம் ஒண்ணும் கெடையாது என மறுமுறையுமாய் சிரிப்பார்.

அவரது வெள்லைச்சிரிப்பிற்கும் அவரது உடல் கனத்திற்குமாய் சம்பந்ஹ்டம் இருக்காதது போல் தோணும் சமயத்தில்/

கடை இருக்கிற வெள்ளியங்கிரி ரோட்டில் இருந்து அவரது வீடு இரண்டு கிலோ மீட்டர்களாவது இருக்கும்.

சின்னதான அட்ல்ஸ் சைக்கிள்தான் அவரது வாகனம்,பெருத்த உடலை தூக்கி சைக்கிள் மீது வைத்துக்கொண்டு அவர் சைக்கிள் மிதித்து வருகிற அழகே தனிதான்,அசைந்து வருகிற தேர் தோற்றுப்போகும்.

கடையின் தெற்குப்புறமாக சைக்கிளை நிறுத்தி விட்டு கடையை திறப்பவர் மதியம் சாப்பிடப்போகும் போதுதான் பின் சைக்கிளை எடுப்பார் கடையை பூட்டிவிட்டு.

சாப்புட்டதும் ஒரு மணி நேரமாவது தூக்கம் இருக்கணூம் சார் நமக்கு, இல் லைன்னாஅந்தநாளே அன்னைக்கி வெளங்காதது போலஆயிரும் பாத்துக்கங்க என்பார்.

அப்படி தூங்கி எந்திரிச்சி வந்துட்டோம்ன்னு வச்சிக்கங்க,ஒடம்பு சொடக்கு எடுத்து விட்ட மாதிரி ஆயிரும்.அதுனால்த்தான் பிடிக்குதோ பிடிக்கலையோ அப்பிடி படுத்து எந்திரிச்சி வர்றது,

இல்லைன்னா சார்,இந்த வலது கால் பாருங்க ரொம்ப வலி எடுத்து தொந்தரவு குடுக்க ஆரம்பிச்சிரும்.எனச்சொல்கிற அவர் கடைகுள்ளாயும் சரி கடை யை விட்டு வெளியில் வரும் போதும் கடைக்குள் போகிற போதுமாய் வலது காலை சாய்த்து சாய்த்துதான் நடப்பார்.

என்ன பாய் இந்த வயசுலயே இப்படியா எனக்கேட்டால் ஒடம்பு பெருத்துப் போச்சில்ல சார் என்பார்,எனக்கென்ன ஒங்க வயசுதான் இருக்கும்ன்னு நெ னைக்கிறேன்,என்ன சின்ன வயசுல கல்யாணம் ஆகிட்டதுனால பேரன் பேத்தி எடுத்துட்டேன்,அதுவும் ஏங் மகளத்தான் கல்யாணம் முடிச்சி குடுத்துருக்கேன், இன்னும் ,மகன் ஒருத்தன் இருக்கான்,அவனுக்கு முடிக்கணும்.என்பவர்,ஏங் சார் தப்பா நெனைச்சிம்க்கிறாதீங்க ஒங்க வயசு என்ன சார் என்பார்,

சொன்னதும்அய்யோ சார் அதேதான் என்னோட வயசும் என சின்னப் பிள்ளை போல் துள்ளிக்குதிப்பார்,

நீங்க பச்ச்சதெல்லாம் இந்த ஊர்லயா,இல்ல வெளியூர்லயா சார் என்பவரிடம் பாய் நான் அச்சடிக்கப்பட்ட இந்த ஊர்க்காரன் பாய்,தூத்துக்குடி ரோட்டுல இருக்குற ஹைஸ்கூல்லதான் படிச்சேன்.என்றதும்

சார் அப்பிடியா நானும் அந்தஸ்கூல்லதான் சார் படிச்சேன்,எந்த வருசம் சார், என்பவரை இடைமறித்து வருசமெல்லாம் ஞாபகம் இல்ல பாய் ,வாழ்க்கை யோட அழுத்ததுலயும் ஓட்டத்துலயும் அதெல்லாம் மறந்து போச்சி பாய், மறைமலை சார் ஹெட் மாஸ்டர்,அண்ணாமலை சார் அசிஸ்டெண்ட் ஹெட் மாஸ்டர், செல்வின் சார் கணக்கு சார்,பாலகுரு சார் என் சி சி மாஸ்டர், ஆறுமுகம் நம்பி சார் பி டி மாஸ்டர்,நம்ம ரெஜினா டீச்சர் தமிழும், நாகே ந்திரன் சார் ஹிஸ்ட்ரி,,,,,,அப்புறமாய் பெத்துன்னன் சாரும் மண்டை வாத்தி யாரும் இருந்த நேரத்துல படிச்சேன் பாய்,

இதுல என் சி சி மாஸ்டர் கத்துக் குடுத்த லெப்ட்,ரைட்டும்,,,கணக்கு வாத்தி யார்பெரம்பால இழுத்த இழுப்பும் ,,,,ஹிஸ்ட்ரிசாரை பள்ளிக்கூடத்துல இருந்து சஸ்பெண்ட் பண்ணுனப்ப பள்ளிக் கூடத்துல படிக்கிற செவன்த்துல இருந்து டென்த் பையங்க வரைக்கும் ரோட்டுல யெறங்கி ஊர்வலம் போனது எல்லாம் ஞாபகம் இருக்கு பாய் என்றதும் அந்த ஊர்வலத்துல நானும் ஒரு பையன் சார் அப்பம் என்பார்.

அப்பம் ரோட்டுல யெறங்கி போராட்டம் பண்ணுன கொணம் இன்னைக்கி வரைக்கும் அப்பிடியே இருக்கறதாத்தான் சார் நெனைச்சிக்கிட்டு வர்ரேன் சார்,அதகட்டி காபாத்தீட்டும் வர்றேன் சார் என்பார்.

போனவாரம் நீங்க வந்துட்டுப்போன கொஞ்ச நேரத்து தண்ணியப்போட்டுட்டு வந்த ஒருத்தன் வாழைப்பழம் வாங்கிதின்னுட்டு காசு குக்க முடியாது, தெரி ஞ்சத பாத்துக்கன்னு சொல்லீட்டு போயிட்டான்,

அவன் ஒரு விருதான்னு எனக்குத்தெரியாது நான் கடைய விட்டு யெறங்கிப் போயிசட்டையப் புடிச்சிட்டேன்,வாழப்பழத்தத்தின்னுட்டு அப்பிடியே போயி ருந்தாலும் கூட ஒண்ணும் தெரியாது.சரி போறான் தொழஞ்சின்னு விட்டுருக் கலாம். அவன் பேசுன பேச்சு இருக்கே அந்தப்பேச்சு பேசீட்டான், அதான் எனக்கு கோபமா போச்சி,அவனும் எட்டி சட்டையப்புடிக்க நான் ரெண்டு அடிஅடிச்சிட் டேன்,அடிச்சிட்டுகடையிலவந்துஉக்காருறேன்,என்னவேகத்துலபோயிவந்தான்னுதெரியலஅவுங்க தெருவுலபோயிஆட்களகூட்டிக்கிட்டு வந்துட்டான்.

வந்தவன் சும்மா இல்லாம நான் இன்னாரு ஏங் ஆளுகிட்டயேவா வந்து நொரண்டு இழுக்குறன்னு சொல்லி பெரிசா பேச ஆரம்பிச்சிட்டான்,

நான் எதுக்கும் அசையல,ஒக்காந்த யெடத்த விட்டு கூட அசையல.என்ன சத்தம் குடுத்தவனுக்கு மறுப்பு சொல்லி பேசும்போது எழுந்திச்சி நிக்க வேண் டியதா போச்சி/கொஞ்சம் சத்தம் போட்டு பேச வேண்டியதா போச்சி சார்,

ஏய் இந்தா பாரு ஒன்னைய எனக்கு தெரியும்,ஆனா என்னையப்பத்தி ஒனக்கு த்தெரியாது,ஒங்க தெருவுலயே ஒனக்கு பக்கத்துலயே எனக்கு ஆள் இருக்கு பாத்துக்க,,,,,ஒனக்கு ஆள்களோட வந்து அரட்டுற தெம்பு இருந்துச்சின்னா அந்த மெரட்டலுக்கு பயபடாமா அத எதுத்து நிக்குற தெம்பு எனக்கு இருக்கு . வேணு முன்னா இன்னைக்கி ஓங் வீட்டு வாசலுக்கு வரட்டுமா பாத்துக்கிருவமா என்றதும் என்ன பாய் நீங்க யாருன்னு தெரியாம வந்துட்டேன். வேணுமின்னா ஒடச்ச ஒங்க கடை ஓட்ட மாத்திக்குடுத்துருரேன் பாய்ன்னு சொல்லீட்டு கால்ல விழுகாத கொறையா மன்னிப்பு கேட்டுப்போனான்.

அன்னையில இருந்து அந்த விருதாபைய இந்தக்கடைப்பக்கமே வர்றதில்ல, இன்னைக்கி மதியம் கடை பூட்டபோன சாப்பாட்டு வேளையில வந்துட்டு கடைஓரமாமொகத்ததொங்கப்போட்டுட்டுநின்னான்,நாந்தான் தொலஞ்சி போறா ன்னு ரெண்டு வாழை பழத்த பிச்சிகையில குடுத்து விட்டேன்.என்ன செய்ய பின்ன நமக்கு மனசு கேக்கல சார் என்கிற பேச்சின் முடிவோடு கையில் புத்தகத்தை எடுத்துக்கொடுத்தார்.

இன்று நேற்றல்ல கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக வாங்கி வருகிறான்,

பத்திரிக்கை சின்ன சைஸாக இருக்கும் பொழுதிலிருந்து இன்று வரை ஒரு வாரம் கூட தவறாமல் வாங்கி வந்து கொண்டிருக்கிறான்.

அதிலிருக்கிற கதைகளும் துணுக்குகளும் ஜோக்குகளும் பிரபலம் என பல பேர் சொல்லி கேள்விப்பட்டும் உணர்ந்தும் இருக்கிறான்,ஆனால் இவனுக்குப் பிடித்ததெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதிதாய் ஏதாவது ஒரு தொடர் புத்தம் புது முயற்சியாய் செய்து கொண் டிருப்பார்கள்,

வடக்கு மாவட்ட பக்கமிருந்து அறிமுக எழுத்தாளரின் எழுத்து என ரத்தமும் சதையுமாய் அப்பொழுதுதான் ஜனித்த புத்தம் புதுகுழந்தையாய் ஒரு தொட ரை இறக்கி வைத்தார்கள்,அது வயலும் காடும் தோட்டமும் அது சார்ந்த ஊழைப்பாளிமக்களையும் அவர்களது குடும்பப்பாடுகளையும் பேசிச்சென்றது கொஞ்சம் ஒட்டுதலாக.

அது போல் தென் புற மண்ணிலிருந்து ஒரு எழுத்தாளர் எழுதிய சிறு கதை மற்றும் தொடர்கதை மனம் கவர்ந்ததாகவும் மிகவும் பிடித்துப்போனதாகவும் இருந்தது.

இது போலாய் அதில் வரும் கெள்வி பதில் பகுதியும் விஞ்ஞானம் சுமந்த இருப்பும் இன்னும் இன்னுமுமான பல பக்கங்கள் அவனைகவர அது கவர்ந் தது போல் வேறெதுவும் இவனை கவராமல் போக படிக்கிற பழக்கம் தொட ரட்டும்,என்கிற பிடிவாதத்துடன் வாங்கிய பத்திரிக்கை இன்று வரை கையில் இருக்கிறது,

அதன்ஈரமும்பசைதன்மையும் உயிர்ப்பும் இன்றும் அப்படியாய் இருக்க தவறா மல் வாங்கி வருகிறான்.

”எதுக்குடாஇதுக்குப்போயிகாசசெலவழிச்சிக்கிட்டுவெட்டியா,அதுக்குஏதாவது வாங்கித்தின்னாலாவது ஒடம்புல ஒட்டுமுல்ல என்கிற நண்பனிடம் அடப் போடாதின்னாலாவது தின்னாலாவதுன்னு நெறைய வாங்கி தின்னாச்சி, இனி வாங்கித்தின்ன ஏதாவது ஒரு புது ஐட்டமா கண்டுப்பிடிச்சாத்தான் உண்டு, சமையல் உலக சக்கரவர்த்திகள்கிட்ட சொல்லி செய்யச்சொன்னா சரியா இருக்கும்ன்னு நெனைக்கிறேன்” என சொல்லுவான் இவன்/

”போடா டேய் நீயி அந்தமானிக்க தின்னுட்டாலும் மிஞ்சி மிஞ்சி போனா டீக் குடிப்ப,வடைசாப்புடுவ,அதவிட்டாபன்னு,இல்லைன்னாவாழைப்பழம்இதுதான ஓங் வழக்கமா வெளிய வாங்கித்திங்குறதுல இருக்குற ஐட்டங்க, என்னமோ ஊரையே வளைச்சிப்போட்டு சாப்புட்டு அலுத்துப்போன மாதிரியில்ல பேசுற போடா டேய் போடா உண்மையிலயே சொல்லப்போன இங்க என்ன இருக்கு ன னே ஒனக்கு தெரியாது,,இதுலதின்னு அலுத்துப்போனானாம் அலுத்து,,/ போடா டேய் போடாஎன்னமாவது சொல்லீறப்போறேன்” என்பான் நண்பன்.

அவன்பதிலுக்குப்பேசுகிற போது,உண்மைதான்,அவரவர்கள் தேடித்தேடி போய் சாப்பிடுவதை பார்க்கிற போதும்சாப்பிடுவதற்கான அயிட்டத்தை தேர்ந்தெடுத் து சாப்புடுவதை பார்க்கிற போதும் கொஞ்சம் பொறாமையாகவும் கொஞ்சம் எரிச்சல் காட்டியும் ஆகிப் போகும்,

இது போக கல்யாண சமையல் சாதம் என சாப்பிடுபவர்களும் உண்டு, நான்கு இட்லி,இரண்டு தோசை, ஒரு பூரி செட்,இரண்டு வடை, ஒரு டீ,,,,, என சாப்பி டுவர்களும் உண்டு,எப்படி இப்படியெல்லாம் சாப்பிட முடிகிறது என்கிற ஆச்ச ரியம் ஒருபக்கம் இருக்க ஒருபக்கம் இப்படியும் சாப்பிட்டு செமிப்பவர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள் என்பான்,

அப்படியாய் சாப்பிடுபர்களும் சாப்பிட வாய்க்கப்பெற்றவர்களும் மிகவும் கம்மி யாகத்தான் இருக்கிறார்கள் ,ஒன்று சாப்பிட வாய்ப்பிருப்பவனுக்கு கையில் பணம் இருப்பதில்லை,கையில் பணம் இருப்பவன் சாப்பிட முடிவதில்லை.

இப்படியானஈருகெட்டநிலைஇவனதுநண்பனுக்குவாய்த்தாய்ச் சொல்லுவான், அரசு அலுவலகத்தில் தற்காலிக ஊழியராய் வேலை செய்த போது பற்றாக் குறை சம்பளத்தில் சாப்பிடக்கூட வசதி வாய்க்கப்பெற்றதில்லை எனவும், இப் பொழுது வசதி வந்து விட்ட பிறகு சாப்பிட முடியவில்லை எனவுமாய் சொல் லுவான்,

சுருக்கமாக சொல்லப்போனால் அப்போது சாப்பிட வயிறு இருந்தது,சாப்பாடு இல்லை,இப்போதுசாப்பாடுவேண்டுமட்டும்இருக்கிறது,சாப்பிடவயிறுஇல்லை எனவுமாய் சொல்லுவான்.அவன்சொன்னசொல்உண்மைதான் என நிரூபணம் ஆகும் நண்பரைப் போல் இன்னும் சில பேரை சந்திக்கிற போது/

அப்பொழுதெல்லாம் பெரும்பாலுமாய் கலியூர்கடையில்தான்சாப்பிடுவான். கணக்கு வைத்து சாப்பிடுகிற அளவிற்கு பழக்கம்,

“பழக்கம் என்ன பெரிதாய், எங்களை வைத்து உங்களுக்கு சாப்பாடு,உங்களை வைத்து எங்களுக்கு காசு, என்பார் ,உங்களது மூலமாய் வருகிற ஒரு மாத வருமானத்தை பத்து பேர் வந்து சாப்பிட்டால்தான் பார்க்க முடியும். ஆகவே உங்களைப்போலானவர்களைசகித்துக்கொள்கிறோம்,தவிரஉங்களைப்போலா னவர்களி ன்நல்லமனமு ம் நல்ல எண்ணமும் நல்ல சிந்தனையும் எங்களைப் போலானாவர்களுக்குகூடுதல் ப்ளஸ் பாயிண்டாகவும் கூடுதல் தைரியமாவும் ஆகிப் போகிறது.”

”உங்களைப்போன்றவர்களின் நல்ல மனமும் நல்ல சிந்தனையும் இங்கு விரிகிற போது கடைக்கு வருகிற நான்கு பேர் கடையை கொஞ்சம் மதிப்புட ன் பார்க்கிறார்கள்.கடை வளர்ச்சிக்கும்,கடை விரிவாவதற்கும் இன்னும் கொஞ் சம் அது உதவியாய் இருக்கிறது,என அவர் சொல்லிக்கொண்டிருந்த நாட்க ளில் இவனுக்கு அறிமுகமான தந்தையின் நண்பரை கூட்டிக்கொண்டு ஒரு நாள் கடைக்கு சாப்பிடப்போனான் .

இவன்கொஞ்சம்வேகமாய்சாப்பிட்டுமுடித்துவிட்டான்.அவர்பதறாமல்சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.இவன் வெளியில் போய் விட்டு வருவதாய் சொல்லி விட்டுச் சென்றான்,

சென்ற வேலை கொஞ்சம் தாமதமாகிப்போக இவன் வருகிற போது அவர் கடைகல்லாஓரமாகஅமர்ந்திருந்தார்.கடைமுதலாளிதான்அமரவைத்திப்பதாகச் சொன்னார்,”ஏன் அவரை போகச்சொல்லியிருக்கலாமே” என முதலாளியிடம் கேட்ட போது அவர் கடையையும் வியாபாரத்தையும் பார்க்க வேண்டும் எனச் சொன்னதாகவும் சொன்னார்,

அனுப்பி வைத்தலுக்கும் இருப்பிற்குமான இன்மை அவ்விடத்தில் உறை கொண்டு தெரிய அவரை அழைத்துக்கொண்டு போனான்.

போகும் போது நண்பனின் அப்பா ஒரு ஹோட்டல் வைக்க வேண்டுமானால் எவ்வளவு செலவாகும் எங்கு வைத்தால் வியாபாரம் ஆகும்,அதற்கு பேங்கில் லோன் தருவார்களா என இன்னும் இன்னுமாய் நிறைய நிறைய கேட்டுக் கொண்டே வந்தார்.

அதைஅப்படியே தாங்கி ஏந்திக்கொண்டு போய் நண்பனிடம் சொன்ன பொழுது நீ இரு பேசாமல்,,,/அவரு இப்ப கொஞ்ச காலமா எதப் பார்த்தாலும் இப்படித் தான்பேசிக்கிட்டும்கேட்டுக்கிட்டுமாஇருக்கிறாரு,பெட்டிகடைக்குப்போனாலும் சரி டீகடைக்குப்போனாலும் சரி ,இல்ல வேற ஏதாவது ஒரு சின்ன கடையை பார்த்துட்டாலும்சரி ,அதை தான் செஞ்சி பார்த்தா எப்படி இருக்கும்,அதுக்காக பேங்க் லோன் கிடைக்குமான்னு விசாரிட்டு இருக்குறாரு,சமீப காலங்களா,,, நீ ஒண்ணும் கண்டுக்காதே அதப்பத்தி கேட்டா நல்ல படியா விசாரிச்சிச் சொல் றேன்னு சொல்லீட்டு ஒதுங்கிக்க,,,, வருசமெல்லாம் அரசின் அதிகாரம் செலுத்தும் பதவியில இருந்தவர்,நல்லதானாலும் கெட்டாதானாலும் முடிவெ டுக்கிற இடத்தில் இருந்தவர்,இப்பொழுதும் அப்படியேஇருக்க நெனைக்கிறாரு. அதுதான் பிராபளம் இப்பொழுது,அதை ஜெயித்து வந்து விட்டால் போதும் இப்போதைக்குங்குறநெலைமையிலஇருக்குறோம்நாங்க”/எனசொன்னநண்பன் இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வருவான்,டீ சாப்பிட/

பூத்துக்குலுங்குகிற மரங்களில் இருக்கிற பூக்களிடம்யார்பேசிஎன்ன அறிந்து கொள்ளமுடிகிறதுஎனத்தெரியவில்லை.

பூத்து நிற்கிற பூக்கள்,வளர்ந்து நிற்கிற மரம் கிளர்ந்து நிற்கிற இலைகள், மற்றும் மற்றுமான இன்னும் இன்னுமானவைகளுடன் உருக்கொண்டு நிற்கிற மரம் மரமாகஅல்லாமல் ஒரு அடையாளம் கொண்டு அந்தக்கடை முன்னாக நிற்கிறது,பூக்கிற மரம் காய்க்கவும்,காய்த்த மரம் கனியவுமான காட்சியை முன் நிறுத்திக் கொண்டு/

ராஜன் மாஸ்டர் போட்டுத்தருகிற டீக்கும் பெயர் தெரியாத ஒரு மாஸ்டர் சுட்டெடுத்துத்தருகிற வடைக்குமான தூரம் அந்த கடையில் வெகுவாய் வித்தி யாசம் கொண்டு தெரிந்ததாய் தெரியவில்லை.

ஒரு வடை சாப்பிட்டால் ஒரு டீ அல்லது டீக்குடிக்க போகும் முன் ஒரு வடை என்பது அங்கு டீக்குடிக்க வருகிறவர்களுக்கு முன் எழுதப்படாத சட்டமாயும் முன் வரைவாயுமாய் இருக்கிறது.

அந்தகடைக்குமுன்னாய் இருந்த பாய் கடையில் நின்றுவாரந்திரியை வாங்கிக் கொண்டிருக்கும் போதுதான் நண்பரும் தோழரும் உடன் பணி புரிபவருமான மகேஷ் கடந்து போகிறார் இவனை,

”என்ன சார் இப்பத்தான டீ சாப்பிட்டீங்க ஆபீஸ் முடியப்போற நேரத்துல, அதுக்குள்ள என்ன தேவை இருந்துற முடியுமுன்னு இன்னொரு டீ சாப்புட வந்துருக்கீங்க,”எனக்கேட்ட அவரை நோக்கி சொல்கிறான்.

இல்ல சார்,நான் டீக்குடிக்க வரல,இங்கன நண்பர்கள் சில பேர பாக்கறதுக்காக வந்தேன்,இங்க எனக்குன்னு சில பேரு இருக்குறாங்க,நட்பு கொள்ளவும் தோழமை பூக்கச்செய்யவுமா,/

அப்பிடியா இருக்குற நாங்க எல்லாரும் இங்க ஒண்ணு கூடுவோம்/அதுக்காக வர்றதுதானே ஒழிய டீக்குடிக்க வர்றது ஏங் நோக்கம் இல்லை.அப்படி வர்ற நேரத்துல டீக்குடிக்க வர்றது தவிர்க்க முடியாம போகுது.அவ்வளவுதான்.என ச் சொல்லியவாறே பேசிக்கொண்டிருந்த காட்சியை முடித்து அவரை வழிய னுப்பி வைக்கிறான்.

7 Jul 2013

தேத்தண்ணி,,,,,


காபி கொண்டு வருகிறவர் மீதோ அதை கொதிக்க வைத்து தயாரிக்கிறவர்கள் மீதோ எனக்கு எந்த விதகோபமும்,வருத்தமும் இல்லை.

   கசப்பான,அடர்த்தியான,திகட்டலானஅதன்சுவைமீதுகூடஅவ்வளவு வெறுப்பில்லை.
  ஏனோ பிடிக்கவில்லை மனதிற்கு எனபதை எல்லாம் தாண்டி அது விலை கூடிய பானம் அல்லது ஆங்கிலேயர் பானம் என்பதுவே காரணமாகிப்போகிறது அதை வெறுக்க. ஆனாலும் வேறு வழியில்லை குடித்துவிடுகிறேன்.
 தினசரி காலை 10.30மணியிலிருந்து10.45ற்குள்ளாகவும்,மாலை 4.00 மணியிலிருந்து 4.30திற்குள்ளாகவும் நான் வேலை பார்க்கிற அலுவலகத்திலுள்ள 5 பேருக்கும் காபி வரும்.
கலர்மங்கிப்போனசில்வர் டம்ளர்,அளவானஅளவிலும் சிறியதாகவும்/அதனுள்ளேதான் நாங்கள்குடிக்கிறதிரவம்(காபி)அடர்த்தியானகலரில்/
ஒன்று,இரண்டு,மூன்று,,,,,,,,,,,,,,,,,,,,,,,,என கடந்து எனக்கு வருகிற போது அஷ்டகோணலான முகத்து டனும், மனத்துடனும்,சிரிப்புடனுமாய் வாங்கிகுடித்துக்கொள்கிறேன்.
வேண்டாம் என முடிவெடுத்துவிட்டால் அதை உடனடியாக செய்து விட முடிவதில்லை.
 அப்படி ஒரு பழக்கமும் இதுவரை கை வரப்பெற்றதில்லை. “விலை அதிகம்,நன்றாக இல்லை,ஏமாற்றுகிறார்கள்,பிடிக்கவில்லை”என்கிறமாதிரியானநிறையகாரணங்கள் இருந்தாலு ம், கண்முன்னே விரிந்தாலும் கூட கசப்புகலுடனோ அல்லது சமாதானம் செய்து கொள்கிற மனப்பாங்குடனோ அங்குதான் போய் நிற்கிறேன்.
நான் எனது என இல்லாமல் நாம்,நமதுஎன யோசிக்கிற பொதுபுத்திகூட அப்படியான எனது செயலுக்கு காரணமாக அமைந்து போகலாம் கூட/
 எங்களது அலுவலகம் அமைந்திருக்கிற தூரத்திலிருந்து பத்தடி தூரத்தில்தான் எங்களது அலுவலகத்திற்கு காபி சப்ளை ஆகிற டீ கடை இருந்தது.
கடையின் பெயர் வேறொன்றாக இருந்தாலும் ஈசல் கடை என்பதுவே நிலைத்துப்போனது.
சிறு பிள்ளையிலிருந்து பெரிய மனிதர்கள்வரைஅப்படித்தான் சொன்னார்கள்.
 காலையிலிந்து மதியம் 1 அல்லது 2 மணிவரை இயங்குகிற டீக்கடையில் இட்லி, வடை, மொச்சை,போண்டா,மிக்சர் பக்கோடா சமயத்தில் எப்பொழுதாவது “பால் பன்”என கிடைக்கும்.
 இட்லி வடை என்றால் காரச்சட்னி,தேங்காய் சட்னி, சாம்பார்,மொச்சை, வடை என்றால் அதற்கே ற்றார் ப்போல,,,,,,,,,,/
 கொஞ்சம் தூக்கலாக வற்புறுத்துபவர்களுக்கு கூடுதலாக  ஒரு கரண்டி சாம்பார்.
 பருப்பும்,கடலைமாவும் கலந்து கட்டியிருக்கிற சாம்பாரை ருசிக்க ஒரு கூட்டம் வரும் தனியாக/
 
 அது அவருக்கு தனியாக தெரிந்து போவதுண்டு.அதிகாலைஐந்து,ஐந்தரைக்கு கடை திறந்ததி லிருந்து,இட்லிக்கு,வடைக்கு,சட்னிக்கு,என கடையில் போய் சரக்கு வாங்கவும் அடுப்பில் வேலை செய்யவும் என மாறி,மாறிஆளாய்  பறந்து கொண்டிருப்பதனாலும் அவரின் பெயர் ஈசல் என ஆகிப்போனதாய்அறிகிறேன் இந்தநேரத்தில்/
 மச்சான்,மாமா, அண்ணன்,தம்பி ,சித்தப்பா ,பெரியப்பா,அதை ,மதினி  என கலந்து கட்டி உறவுக ளிடமும்,பிறரிடமும்(அனைத்து ஜாதியினரும் கலந்து வாழ்கிற கிராமங்களில் இன்றளவும் ஒருவருக்குள் ஒருவர் முறைவைத்து கூப்பிட்டு சொந்தம் கொண்டாடுகிற கிராமங்களில் அதுவும் ஒன்றாய்) அவர் இறக்கை கட்டித்திரிகிற நேரங்களில் நெசவிடுகிற பேச்சில் பூத்து மலர்கிற உறவு அவரை பொத்திவைத்திருக்கும் பத்திரமாக/
  “வாப்பா நம்ம ஈசல் கடதான,வா ஒரு வடையும் டீயும் சாப்புட்டுட்டுப் போகலாம் என கையில் காசில்லாதவர்கள் கூட அவர்களது பெயரில் உள்ள கணக்கை நம்பியும் ஈசலை நம்பியுமாய் டீ சாப்பிட வருவதுண்டு.
 டீ,காபி,மொச்ச,பால்பண்ணு,சேவு,மிச்சரு,,,,,,,என எல்லாம் கேட்கிறவர்களிலும் வாங்கி சாப்பிடு வர்களிலும் பாதிக்கும் மேற்பட்டோர் காசு கொடுப்பதில்லை.
 காசு என்னாச்சுப்பா?டேய் காசக்குடுடா,கணக்கு ஏறிக்கிட்டே போகுதில்ல,,,,,என்கிற அவரது கஷ்டமான தர்மசங்கடமான கேட்டலுக்கு அதெல்லாம் தருவமப்பா/காசு என்ன ஓடியா போகுது ,,,,,,?ம்,,தரமாட்டோம்/இப்ப என்ன ஐயா கஞ்சிக்கு இல்லாம இருக்கீங்களாக்கும்,,,,,,,?என்பது போன்ற இடக்கான,எள்ளலான  பேச்சுக்களே அவரது கேட்டலுக்கு பதிலாக வரும்.
  அந்தபதிலுக்குஈசலின்சலிப்பும்“இனிமேடீக்குடிக்ககடப்பக்கம் வந்துராதீங்க”,,,,என்கிற
பேச்சும்,பெருமூச்சு மிகுந்த சொல் பிரயோகமுமே பெருமூச்சாக வெளிப்படும்.
 அவரது பெருமூச்சை சொல்லின் வெளிப்பாடாக கேட்டவர்கள் “அட சும்மா இருங்க,ஒங்களுக்கு வேற வேலை இல்ல,” என மொத்தமாய் சிரித்து விட்டுப் போவார்கள்.
 அவர்களில் நான்கைந்து பேர்கள் சரிதான் விடப்பா,அதான் சாய்ங்காலம் ஒண்ணா ஒக்காந்து சரக்கடிக்கும் போது எல்லா கணக்கும் நேராகிப்போகும் என மனதுள் நினைத்த வாறும் சொல்லியவாறும் போய்விடுவார்கள்
.
   அவர்களதுஎள்ளலும்,புறந்தள்ளலும்.நகைச்சுவையாககலந்துவிடுவதுண்டு.அவர்களும்
ஈசலுமாய் கலந்து தண்ணீ அடிக்கிற சாயங்காலப்பொழுதுகளில்/
 அப்படியான உறவுடனும்,ஸ்னேகத்துடனும்,நட்புடனும் பழகி தனது உழைப்பை விரித்து ஆல்போல் நின்றிருந்த அவரின் கடை அந்த கிராமத்திலிருந்த எல்லோருக்கும் உரிமை யானதாயும்,நட்பானதாயும்/
 “சரி,சரி வா,,,கையில இருக்கும் போது குடு,ஏதொ ஒரு கொணத்துல பேசீட்டா,அப்பிடியே போயிர்றதா? கோவிச்சிட்டு போறமாதிரி”என்கிற அவரது சரிக்கட்டலான பேச்சும்,பொத்துத லுமேஅந்தக்கடையைநிலைகொண்டு ஊன்றச்செய்திருக்கிறது.
 அப்படியான ஊன்றலும் ,நிலைநிறுத்தலுமாய் இருந்த கடையிலிருந்து அவரது மறைவிற்குப் பின் அன்றாடம் காலையிலும்,மாலையிலுமாய் வருகிற காபியை குடிக்கிற போதுதான் இந்த சிந்தனை மேலிடுகிறது.
  இன்றைக்கு ஒரு சிறுமி காபி கொண்டு வந்தாள்.கொண்டு வந்ததை வைத்து விட்டு போய் விட்டாள்.
 பள்ளிக்கு லீவு விட்டுவிட்டபோதும் பள்ளி சீருடையை அணிந்து கொண்டு வந்திருந்த அந்த பட்டாம் பூச்சி காபியை கொண்டு வந்து வைத்து விட்டு பறந்துவிட்டது.
 ஒரு பூ,,, புயலாய் புயலாய் நுழைந்து விட்டுப்போனதைபோல ஆகிப்போன நிமிடங்களில் காபியைப்பற்றிய சிந்தனையும் மறந்து போகிறது.
காபி கொண்டு வருகிறவர்கள் மீதோ,அதை தயாரிப்பவர்கள் மீதோ எனக்கு எந்தவித கோபமும், வருத்தமும் இல்லை இப்பொழுதுவரை/    

25 Aug 2012

மென் தூவல்,,,,,,,,,


பஸ் நிற்கிறது. இறங்கிச் செல்கிறாள் யுவதி ஒருத்தி. காலில் கொலுசும், கையில் வளையலுமாக/ 

வலதுகையில் இரட்டைவலையல்சேர்ந்தாற்ப்போலஇடதுகையில் சின்னதாய்
தெரிந்தவாட்ச்காலில் இருந்த கொலுசு கண்ணுக்குத் தெரியவில்லை. சலங்கை
கள்அதிகமாகஇருந்திருக்கவேண்டும்போலசப்தம்அதிகமாகக் கேட்டது.காலில் அணிந்திந்த செருப்பு200ரூபாய்க்கும் மேல் இருக்க  வேண்டும்  தலையை  படிய
வாரிசடைப்போடாமல்குதிரைவாலாய்விரித்துவிட்டிருந்தாள்.நெற்றிக்குஇட்டிருந்தாள். 

லிப்ஸ்டிக்ஒன்றும்அவ்வளவுதூக்கலாகத்தெரியவில்லை.இப்படியிருந்தாலேஒப்பனைகளும்,அரிதாரங்களும் ஓகேதானே? 

தலையில் வாடிப் போயிருந்தபூ,மல்லியோ,பிச்சியோ தெரியவில்லை,கலர் வெள்ளைகழுத்தில்மெலிந்துதொங்கியஒற்றைச்செயின் அவளில் படிந்து படர்
ந்து/ 

கருப்புப்புடவையும்அதற்குபொறுத்தமானகலரில்ஜாக்கெட்டும் அணிந்திருந்தா
ள்,பப்புக்கைவைத்துதைப்பதெல்லாம்இப்போது"அவுட்ஆப்பேஷன்”ஆகிப்போனதுபோலும்அடுத்ததெருமாமிஅவனதுவீட்டுக்காரியிடம்சொல்லியிருக்கிறாள். 

“அத எவடி போட்டிக்கிட்டு அலைவா? என்னமோ  பப்பாயிங்  அடிக்கிற  மாதிரி.
குட்டக்கைதான்போட்டுக்கிட்டுஇருக்கேன்,ஊரோடஒத்துப்போயிரணும் கேட்டி
யா?என்றாளாம். 

அது பார்த்தால் முன்னால் கை இறக்கமாக அணிந்திருந்தவர்களுக்கு அந்த இடத்தில் கையில் தடம் விழுந்து இப்போது கைஏறிஅணிகையில் துண்டாகவும்
அசிங்கமாகவும் தெரிகிறது அது போலத்தான் அவளுக்கும் தெரிந்தது. 
கையெல்லாம் முளைத்துத் தெரிந்த மென்முடிகள் வேறு  துருத்திக்கொண்டு.
நிறைய இல்லாமல் கொஞ்சமாக இருந்தாலும் அதன் வெளிப்பாட்டுக்கு குறைவில்லை. 

சாதாரண  மென்மை பூத்த பெண்ணாய்த்தான் இறங்கிப் போகிறாள்.
பங்கஜம் அத்தையின் பெண்இப்படித்தான் இருப்பாள்.அவள் கொஞ்சம் சிவப்பு.
இவள் கொஞ்சம் கருப்பு.அவள் கொஞ்சம்உயரம்,.இவள்கொஞ்சம்உயரம் கம்மி.
அவள் கொஞ்சம்அழகாயிருப்பாள்.இவள் மேக்கப்போட்டிருந்தாள். அவள் ஒல்லியாய், இவள் வாடலாய்.இவள் கொஞ்சம் புஷ்டியாகவும் சதை
போட்டுமாய்/ 

அவன் அங்கு வந்த போது மாலை மணி 6.00 இருக்கலாம்.எந்த வண்டிக்காக கேட் அடைத்திருந்தார்கள் எனத்தெரியவில்லை.அனேகமாக செங்கோட்டை பாஸஞ்சராக இருக்க வேண்டும்.செங்கோட்டை பாஸஞ்சரும் பாஸ்கரனும் என ஒரு சொல் உதிக்கும் அந்த வண்டியை பார்க்கிறகணங்களில்/அதன்தட,தட
சப்தங்களில்பாஸ்கர்,பாஸ்கர்,பாஸ்கர்,,,,,,,,,என்பதுஅசரீரியாகஅதுஎதிரொலிப்பதாக/

அவர் ரயில்வேயில் வேலை செய்கிறவர் நீண்ட கால நண்பர்.நல்ல பழக்கம்,
வேர் விட்டு கிளை படர்ந்து பூத்தது இல்லை என்றாலும் கூட மெனமை பூத்து விரிந்த மலராய்இருக்கிற நட்பு பார்க்கிற நேரங்களில் பேசிக்கொள்வோம்,
சிரித்துக்கொள்வோம்,வணக்கம் சொல்லிக் கொள்வோம்,உடன் எங்காவது 
எதிர்படுகிற கடைகளில் டீ சாப்பிடுவோம் சேர்ந்து நின்று/அப்படி நட்பாய் வாய்த்துப்போகிற கொஞ்சம்பேரில்அவரும்ஒருவராய்த்தெரிந்தார். 
ரயில்வே  பாஸ்கர்”சொல்லவே  நல்லாயிருக்கு.

நேற்றைக்கு காலையில் மிகவும் பிரியமாய்  இருப்பவரிடமிருந்து  போன் 
என்னப்பா ன்ன செய்யிறப்பா?ரொம்பநாளா போன் பண்ணல எப்பிடி இருக்கப்பா
என்றார். 

அவன் அதற்கு மிகவும் லேசாகவும் ,கேலியாகவும் பேசுவாதாக எண்ணி,,,,,,,, இப்பத்தான் ரோட்டுக்கடையில் டீசாப்புட்டுட்டு நின்னுக்கிட்டு  இருக்கேன்,
ரொம்பநாளா பேசவுட்டுப் போனவுங்ககிட்டயெல்லாம்  பேசனும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன்,கரெக்ட்டா  நீங்க பேசிட்டீங்க”என்றான்
,”டீரொம்பநல்லாயிருந்துச்சி.”,,,,,,,,என்கிறவார்த்தையுடன் சேர்த்து./

“சீ கர்மம்புடிச்சவனே காலங்காத்தால இப்பிடி பேசிட்டு,வேற வேலையில்லை
யாப்பா ஒனக்கு” என போனை துண்டித்து விட்டார். 

ரோட்டின் இடது ஓரமாக அவனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தான். நிறுத்தியிருந்த இடத்தை ஒட்டி பிளாட்பாரம் தாண்டி அமர்ந்திருந்த வீட்டின் முன் இருந்த மரத்தில் பூத்து நின்ற மஞ்சள் நிற பூக்கள் அவனைப்பார்த்து கண் சிமிட்டியதாய் தோனியது. 

தூரத்திலும்,மிக அருகாமையிலுமாய் அற்று கத்திச்சென்ற பறவையின் சப்தம் இருள்சூழ்வதற்காய் கனிந்து நிற்கிற வானம்,மப்பும் மந்தாரமுமான சூழல்.மழை வரலாம் அனேகமாக/ 

நேற்று மழை கொட்டித் தீர்த்துவிட்டது. நாளைக்கெல்லாம்பெய்யப் போவதில்
லை. 

இத்துடன் என்னிடம் நீர் இல்லை என்பது போல கொட்டித்தீர்த்து விட்டது.நல்ல மழை.வெயிலும் காலையிலிருந்து எரித்துத்தீர்த்தது.உடலை உருக்கி ஊண் தொட்டு விடும் போல தெரிந்தது.இதெல்லாம் எதிர் சாரியில் சினிமா பேனரில் சிரிக்கிற கதாநாயகனுக்கு தெரியுமா தெரியவில்லை.ப்ளெக்ஸின் அடியில் நாயனின் பெயருடன் தனது பெயரை கடைசியிலோ,முதலிலோ சேர்த்து ஒட்ட வைத்திருந்தார்கள் ரசிகர்கள்/ 

பஸ்,லாரி சைக்கிள்,இரு சக்கர வாகனங்கள் என குழைத்து நின்ற வரிசையை தன் மீது சுமந்து நிற்கிறது சாலை. 

விரைந்துவந்த சைக்கிள்  ஒன்று  அவனருகில்  வந்ததும்  பிரேக்கிட்டு   நின்றது.
அவசரத்தில் வந்தஅவன் சைக்கிளை விட்டு இறங்குகையில் நிலை குலைந்து வண்டிமீது சாய்ந்துவிட்டு ஸாரி சொன்னான் அவன் சொன்ன ஸாரிகூட பெரிதில்லை. பஸ்ஸிலிருந்து இறங்கப் போன அவளை முழுமையாக பார்க்க 
முடியாமல் செய்து விட்டான்.கவனம் முழுவதும் அவன் மீதும்,அவனின் எரிச்சல் உண்டாக்கிய செய்கை மீதும். 

கொஞ்சம் இடைவெளி விட்டு கவனித்ததில் ரயில்வே கேட் அருகில் வலது புற பிளாட்பாரத்தில் நின்ற ஆஸ்பத்திரிக்குச் சென்றாள். அங்குதான் கோபால் அண்ணன் இருந்தார்.ஒரு மாதம் முன்பாக/ 

அண்ணன்என்றால்அவனுக்குஉறவுஇல்லை.பற்றிப்  படர்ந்து நின்ற  தோழமை,
நட்பு, 

மனம் பூத்தபழக்கம்.அவர் ஆபீஸர்,அவன் குமாஸ்தா ஆனாலும் பிடித்துப் போன மனதுநெருங்கி விட்ட நட்பு. பரஸ்பரம் மனம் படர்ந்த நடவடிக்கைகள்
எல்லாம் காரணமாகிப் போகவும் நெசவிட்டு விடவுமாய் இருந்த நேரங்களில்
மலர்ந்த நட்புதான்.அண்ணன். 

அண்ணன்என்றால்அண்ணா,எண்ணன்னா,வாங்கண்ணா,போங்கண்ணாதான். இப்படியானமனம்தொட்டகூப்புடுதலில்கலந்திருநது அவர்களது பேச்சும்,பேச்சு சூழ்ந்த நிமிடங்களும்/ 

திடீரென  தூங்கி  எழுந்த  ஒருநாள்  காலையில்  அவரை  பக்கவாதம்   ஆட்க்
கொள்கிறது.முதல் நாள் வேலைக்குப்போய் விட்டு அன்று 200 கிலோ மீட்டருக்கும் மேலாக இரு சக்கர வாகனத்தில்அலைந்தவர் அன்றிரவு படுத்து 
மறுநாள் எழுந்திருக்க முடியவில்லை. 

பத்துநாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டுப்போனார்.வைத்தியம், ,பிஸியோ
தெரபிமருந்து,மாத்திரைகள்  மற்றும்  வைட்டமின்கள்  எல்லாம்  சேர்த்து லட்சத்தை தொட்டு விட்டது என்றார். 

அது போலிருக்கிற  உறவினர்  அல்லது  நண்பர்கள்,அக்கம்பக்கம்யாரையாவது பார்க்கப்போகலாம்அவள்.

இறங்கிப்போகிறாள்,இறங்கிப்போகிறாள்,இறங்கிப் போகிறாள்,,,,,,,,,,,எத்தனை 
முறைசொன்னாலும் அதுதானே?அதுதான் என்பது சரி.  வளையோசையும், 
நடையின்நளினமும்இப்படி சண்டி இழுக்கிற போது மன்ம் தக்கையாய் தள்ளாடி சுண்டப்பட்டு விடுகிறதுதானே? 

“தள்ளாடி விடுகிறதா,கொடுமை .இந்த 48 ல் இப்படி மனதை கட்டிபோடாமல் விட்டால் எப்பிடி?ஒரு கயிறு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் ரெடியாக.இப்படி மனதுஉங்களைமீறிஅலைபாய்ந்துசெல்கிறநேரங்களில்வீசிசுருக்கிட்டுஇழுத்து
க்கொள்ளுங்கள்”.என்கிற வார்த்தைக்கு கட்டுப்பட்டவனாய் எனது இரு
சக்கரவாகனத்தின் இருக்கையில் கையூன்றியவாறு/ 

நடத்துனர்சில்லறையைகொடுத்துக்கொண்டிருந்தார்கூடவேவிடுபட்டநபர்களுக்குடிக்கெட்போட்டுக்கொண்டிருந்தார்.ஜன்னல்வழியாகஎட்டிப்பார்த்தமுகங்கள்படிக்கட்டில்உதிர்ந்துகிடந்தமண்னைகவனிக்கவில்லை.தத்தம்பாடு,தத்தம்பேச்சு,தத்தம் கவலை, தத்தம் போக்கு,,,,,,,,,,,, என்றவாறாய்  காட்சிப்பட்ட அவர்க
ளில் உருக்கொண்டிருந்த மனிதம் ஒரு பெரியவரின் செய்கையில் இட்ட புள்ளியில் முடிகிறது. 

கால் பரப்பி இருக்கையில் அமர்ந்திருந்த அவர் கம்பூன்றி எழுந்து அருகில் பஸ்ஸின் கம்பிபிடித்துநின்றிருந்தநிறைமாதகர்பிணியைதன்னிடத்தில்அமரச் சொல்கிறார். 

அதற்கப்புறம் பஸ்சில் வாண்டுகளும்,பள்ளிப் பையன்களும் பெண்களும் அதை ஒரு ஆச்சரியமாகவும் சற்றே குற்ற உணர்வு கலந்தும் பார்க்கின்றனர். 

“கொட்டுகிற அருவியில் தன்னன்ன,தனனன்னே,,,,,,,,,எனஒலித்த பாடல் விரிந்துபரவுகிறது. ஒலித்த நேரம் ரயில்வே கேட் திறக்கிறது.என்னைப் பார்த்து சிரித்த  மஞ்சள்பூ  மரத்திலிருந்து  உதிர்ந்து தரை தொடுகிறது. கேட்அடைப்பில்
நின்றவாகனங்களும்வாகனங்களைக்கொண்டமனிதர்களும்புறப்பட்டுச்செல்கிறார்கள். 

கூடவே பேருந்தும்,இன்னபிற வாகனங்களுமாய்,அவன்பேருந்தினுள் ஒலித்த பாடலின் கைபிடித்தவாறும்,ந்டந்து சென்றவளை நினைத்தவாறுமாய்/

17 May 2012

அரிசிமாவும்,உளுந்த மாவும்,,,,1


இரண்டுவடைகளைசேர்ந்தடியாகசாப்பிட்டதில்வயிறுஒத்துக்கொள்ளவில்லை.ஊதிக்கொண்டது காற்றாடித்த பலூனாக/ விட்டால் உடம்பிலிருந்து பிய்த்துக் கொண்டு தனியாக காற்று வெளியில் பறந்து திரிய ஆரம்பித்து விடும் போலிருக்கிறது. பலூனும் உருண்டை ,வயிறும் உருண்டை.அப்பா உங்களுக்கு தொந்தி வைத்து விட்டது.தொப்பை,தொப்பை,தொப்பை ,,,,,,,,என கேலிபண்ணுவாள்.சமயத்தில் அவனை சுற்றி வந்து கும்மியடிப்பாள்.பூ ஒன்று கை விரித்து நடமிடுவது போலிருக்கும் பார்ப்பதற்கு/ அவள்காற்றுவெளியில் பறந்து போய் வயிறை மீட்டுக்கொண்டு வருவாளா?கேட்கலாம் அவளிடம். இப்படி ஒன்று நிகழ்ந்து போனது எனக்கு இந்த நேரத்தில் இன்ன இடத்தில் என்று சொன்னால் தன் ஓட்டைப்பல் தெரிய சிரிப்பாள்.கன்னத்தில் விழுகிற குழியில் அரைப்படிஎண்ணெய்ஊற்றலாம்போலிருக்கிறது. சொன்னால் அதற்கும் சிரிப்பாள். மறுபடியும் குழி.மறுபடியும் எண்ணெய்,,,,,,,சொல்லல்,குழி எண்ணெய்,,,,,யப்பா போதும் சிரிப்பை நிறுத்து நீ.ஒவ்வொருதடவைக்குமாய் விழுகிற குழிக்கு அரைப்படி என்றால் எங்கே போவது? இந்த மாதபட்ஜெட் அவ்வளவுதான்,தாக்கல்செய்துமுடிந்து போனது,பலசரக்குக்கடை, பாத்திரச்
சீட்டு,தேனம்மாள் ஸ்டோர்,ஜவுளிக்கடை,LIC கேபிள் டீ,வி எல்லாம் முடிந்து 
தேதி20ஐஎட்டுப்பிடிக்ககைநீட்டிக்கொண்டிருக்கிறது.இந்த நேரத்தில் இப்படி,,,,? “அப்பநாங்கபடுறஆசைக்கும்,நடந்துக்குறநடப்புக்கும்அளவு வச்சிக்கிரனுமா
ப்பாமகள்ஆமாப்பா, கண்டிப்பா அப்பிடித்தான். இல்லாதவுங்க வீட்ல மட்டுமில்லநம்மளமாதிரி நடுத்தரவர்க்ககுடும்பத்துலபொறந்துட்டாலும்
இதுதான்கதி,இருக்குறதையும்,ஆசையையும்சுருக்கி வாழப்பழகிக்கிரணும், ஆமாம்எனசொல்பவனைஏறிடும் மகளை அவன் பார்ப்பதும்அவள் திரும்பவும் கன்னம் குழி விழ சிரிப்பதும்வாடிக்கையாகிப்போனது.வாழ்க வளமுடன்/ ஒல்லியாய்வெடவெடப்பாகஇருக்கிற மகளை”நல்லாசாப்புடு,தெம்பா இரு,ஒடம்பப்பாரு காத்தடிச்சா பறந்துருவ போலயிருக்க”என்பான் அவன். ஊம் நீங்க மட்டும் எப்படி இருந்தீங்களாம் முன்னாடி?போன வருசம் வரைக்கும் ஒடம்புல இருக்குற எலும்பு வெளியில் தெரியிற மாதிரி இருந்தீங்க.இப்ப ஒரு வருசமா ஒக்காந்து பாக்குற வேல கெடைச்ச ஒடனே இப்பிடி ஆகிப்போட்டீங்க/-மகள். “ஆமா நானு ஆயிட்டேன்.நான் என்ன செய்யட்டும்?ஒங்க அம்மா கொணாந்து சாப்புடு,சாப்புடுன்னு திணிக்கிறா.அப்புறம் தொந்தி வைக்காம என்ன செய்யும்?நீயும் நல்லாசாப்புடு,ஒனக்கு தொந்திவைக்காட்டி கூட ஒடம்பாவது தேறுமா,இல்லையா?ஒங்க அம்மா ஒனக்கு வைக்க வேண்டிய சாப்பாட்டையும் சேர்த்து ஒங்க அக்காவுக்கு வச்சிர்றா போலயிருக்கு.என மனைவியை ஏறிடுவான். “என்னைய எதுக்கு ஒங்க பேச்சுக்கு ஊடால இழுக்குறீங்க?என்னைய வம்புக்கு இழுகாட்டி ஒங்களுக்கு ஒரக்கம் வராதே என்பாள்பதிலுக்குமனைவியும். “ஆமாம்ஒன்னையவம்புக்கு இழுக்குறாங்க,
இழுக்க மாட்டாம. பத்துபவுன் நகையையும்,ஒட்டுச்சடையையும் வச்சி ஒன்னய ஏந்தலையில கட்டீட்டாங்க”-அவன். “ஏன் ரெண்டு பவுந்தான் போட்டாங்கன்னு கூட சொல்லுங்க,என்ன கொறஞ்சி போச்சாம்இப்ப”?மனைவி. “அப்பிடித்தான் சொல்லுவேன், மைக் போட்டு சொல்லுவேன், தெரு முக்குல போயிசொல்லுவேன்,ஊரு மத்தியில நின்னு ஓன்னு கத்தி சொல்லுவேன்.எங்கசொந்தக்காரங்ககிட்டசொல்லுவேன்,ஒங்கசொந்தக்காரங்ககிட்ட சொல்லுவேன்,”அவன்.“சொல்லுங்க,சொல்லுங்க,,,,அப்பிடியேசொல்லிக்கிட்டேபோயிகௌவர்மெண்ட் ஆஸ்பத்திரியில பைத்தியக்கார வார்ட்ல சேந்துருங்க. இத்தன வயசுக்கப்புறம்இப்பிடிஎல்லாம் யோசிக்கிற ஆளு என்னைய ஏன் கட்டுனீங்க, வேற ஒருத்திய கட்டீர்க்க வேண்டியதுதான”?அவள். என்ன செய்யச் சொல்ற.ஒன்னய பொண்ணு பாக்க வந்த நாள்ல கொஞ்சம் புத்திய கடன் குடுத்துட்டேன்.இப்ப கெடந்து அனுபவிக்கிறேன்.”-அவன். “அப்பிடி என்ன அனுபவிக்கிறாராம் ஐயா பெருசா”?அவள். “ஆரம்பிச்சுட்டீங்களாஒங்கதிருவிளையாடலஎனஇரண்டுமகள்களும்சிரித்துக்கொண்டு விளையாடப் போய் விடுவார்கள் அல்லது தொலைகாட்சியில் ஆழ்ந்து போவார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு மிகவும் பிடித்தது,,,,,,,,,,,,,,,,,,,,,என்கிற ராகத்துடன்வருகிறவிளம்பரமும்,மற்றும்சிறுவர் சிறுமிகள் வருகிற நாடகமும்,சினிமாவும் மட்டுமே/ பெரியவள் பேருக்குத்தான் பெரியவள்,ஆனால் இன்னும் சிறியவளாகவே/பேச்சு செய்கை, நடவடிக்கை,எல்லாவற்றிலுமாய்.அவளது அம்மா கூட தினசரி திட்டுகிறாள். “என்ன இன்னும் சின்ன நொட்டச்சி மாதிரி.நாளைக்கு வேற வீட்டுக்கு போகப்போற.போற யெடத்துல எங்களத்தான் சொல்லுவாங்க புள்ளய வளத்து வச்சிருக்குற லட்சணத்தப்பாருன்னு”.என்பாள். அட விடும்மா, தினசரி அக்காவ இப்பிடி சொல்லிச்சொல்லியே அமுக்கி வச்சிட்டீங்க.ஸ்கூல்ல ஹாக்கி டீம்ல வெளையாடபோறேங்குறா,இப்பிடி என்னத்தையாவது சொல்லி தலையிலதட்டிஅவள உக்காரவச்சிர்றீங்க.கல்யாணம்,போற யெடம்,பேச்சுன்னு,,என்பாள் சின்ன மகள். அவளது பாட்டி கொடுத்திருந்த காசில் வாங்கிய சுடிதாரைத்தான் அணிந்திருந்தாள்.அது அப்படித்தான், அவர்களுக்குள்/ இப்படி பாட்டி கொடுப்பதும், பேத்திகள் வாங்கிக்கொள்வதும் வாடிக்கையாகிப் போனது. இப்படியாக ஓடுகிற பேச்சுகளுக்கு மத்தியில்தான் தொலைக்காட்சியும்ஓடிக்கொண்டிருக்கும். பேச்சுப்பாதி,தொலைக்காட்சி
பாதிஇன்னபிறபாதிஎன மாறி,மாறி ஓடிக்கொண்டிருக்கிற நிகழ்வுகளுக்கு மத்தியில் நகர்கிற பொழுதாக இருக்கிற வீட்டின் அன்றாடங்கள் பார்க்க மிகவும் நன்றாகவும் சற்றே கலவரம் கலந்துமாய்/என மிதந்த நினைவுகளுடன் வீடுவந்துகொண்டிருக்கிறேன்.இரண்டுவடைகளைசேர்ந்தடியாக சாப்பிட்ட
தில் வயிறு ஒத்துக் கொள்ளவில்லை

28 Sept 2011

பஞ்சாரம்,,,,,,,,,


                               
          எத்தனை சொல்லியும் எந்த மாற்றமுமில்லை.உடும்பை ஞாபகப்படுத்திய அவளது பிடிவாதம்.”
       தனியாக போக வேண்டுமாம்.”நான்,தம்பி,அம்மா,நாட்டாமை மாமா எல்லோரது பேச்சையும் கடலில் கரைத்த பெருங்காயமாக்கி விட்டாள்.காது வளர்த்த கிழவி,பிடிவாதத்தையும் சேர்த்து வளர்த்து வைத்திருந்தாள்.
     நாற்பதை தாண்டி முப்பது வருடங்கள் ஆகிறது.அம்மாவை பெற்றவள்,நல்ல திடசாலி.மனதளவில்உள்ளதிடம் இப்பொழுது எங்களை போட்டுப்பார்க்கிறது.
   ”பரஸ்பரம் மனிதர்களை மனிதர்கள் பரிட்சிப்பது மனித நாகரீகம் வளர்ந்த காலம் தொட்டே உண்டு போலும்.”அதற்காக இப்படியா?இரண்டாவது நாளாய் இன்றும் சொல்லிப்பார்க்கிறோம்.............. ம்ஹூம்,,,,நார்உறிக்கமுடியவில்லை.
சொற்களாலும் பேச்சுக்களாலும் உடைக்க முடியவில்லை.இறுகி கெட்டிதட்டி வைரம் பாய்ந்த கல் மரம் போல நிற்கிறாள்.
    இப்பொழுது மட்டும் என இல்லை ,தாத்தாவை கைபிடித்த சிறிது நாட்களிலிருந்தே அப்படி ஆகிப்போனாள்.கல்யாணமான நான்கைந்து வருடங்களிலேயே ஏதோ பெயர் தெரியாத நோயில் படுத்தவர்தானாம்தாத்தா.எழுந்திருக்கையில் பார்வை இல்லை.
    நன்றாக இருந்தவரையில் அவரும் பாட்டியை ராசாத்தியாய்த்தான் வைத்துபார்த்துள்ளார்.கைக்கும்,வாய்க்கும் காணாத பற்றாக்குறை வாழ்க்கையிலும் பாட்டியை மனம் நோக விட்டதில்லையாம்.
    கூலிக்காரன்பொண்டாட்டியாகஇருந்தபோதும்கூடசோறு,தண்ணி,சேலை,
துணிமணி,நல்லது,பொல்லதுஎனபாட்டிக்குஎதிலும்குறை வைத்ததில்லையாம்.அவரிடம் பிடித்துப்போன அந்த குணம்தான் பார்வைபோன போதுகூட அவரை மணம் நோகாமல் பார்த்துக்கொள்ளச் செய்திருக்கிறது.
    பார்வை போன கணவனோடும்,இரண்டு பிள்ளைகளோடும்,வாழ்க்கை அவளை நிராதரவாய் விட்ட போதும் கூட தோற்று ஒதுங்கிவிடவில்லை. எதிர்த்து நின்று சமாளித்து போராடி ஜெயித்தாள்.உழைப்பின் நுனியைப்பற்றிக்கொண்டு வாழ்க்கையின் மேலேறி வந்த வைராக்கியக்காரி உடம்பிலும்,மனசிலுமாய் ஏற்பட்ட சிராய்ப்புகளுடன் இப்போது கரையோர ஆலமரமாய் நிற்கிறாள்.
     மண்பிளந்து,துளிர்த்து,வளர்ந்து,கிளைபரப்பி பரந்து நிற்கும் மரத்தைப்பற்றி  விழுதுளிடம் சொன்னால்?,,,,,,,,,,யாருக்காவது வேறு யோசனை தெரிந்தால் சொல்லுங்கள்எனக்கூடகேட்டுப்பார்த்தேன்.யாரும்சொல்கிற வழியைக்காணோம்.
     “வேலியிலபோறதஎடுத்து..........எனஒதுங்கிக்கொண்டார்கள்.இது கிராமம்.
இல்லையானால் இந்நேரம் பேப்பரில் விளம்பரம் தந்து கூட கேட்டிருக்கலாம் யோசனைகளை.
     ஆனால் பாட்டி தனது இரண்டு பெண் பிள்லைகளை கல்யாணம் செய்து கொடுத்தபோது யாரிடமும் யோசனை கேட்கவில்லை.
     வெளியில் சொந்த பந்தங்களைக்கூட கலந்து கொள்ளவில்லையாம்.தாத்தாவின் பார்வைபோனபோது ஒற்றையாய் நின்று தேம்பியவளை தோள் தட்டி தேற்றக்கூட ஆள் இல்லை என்கிற கோபமும் வைரக்கியமும்/
    இரண்டு பெண்களையும் உள்ளூரில்தான் திருமணம் செய்து கொடுத்தாள்.அண்ணன் தம்பிக்கு அக்காள் தங்கை.ஒரே நாளில் கல்யாணம்.கோவிலில் கல்யாணம்,சாவடியில் சாப்பாடு.
    கல்யாணத்தில் சாப்பிட்டவர்களை விட மொய் எழுதியவர்கள்தான் அதிகமாம்.ஊரே ஆச்சரியப்பட்டுப்போனதாம்.”ஒடம்பொறப்புகளுக்கு,ஒடம்பொறப்பாப்பாத்துமுடிச்சி வச்சுட்ட.ஓன்நல்லகொணத்துக்குதான்இந்தமாதிரிமருமக்க மாருக அமைஞ்சிருக்காங்க நல்ல இருக்கட்டும் தாயி”.
    எல்லோருடைய வாழ்த்துக்கள்படி இரு மகள்களும் நன்றாக வாழ்ந்தார்கள்.பாட்டியை தன்னுடன் வந்து இருக்கும் படி இருமகள்களிடமிருந்து வற்புறுத்துதல்கள் அவ்வப்போது/
   “இல்ல தாயி இப்பயே ஒக்காந்து தின்னா ஒடம்புல ஒட்டாது.”  நாசுக்காக மறுத்து விடுவாள்.
   அப்போதெல்லாம் பெற்றோருக்கு பிள்ளையாக வளர்ந்ததை விட பாட்டிக்கு பேரனாய்த்தான் வளர்ந்திருக்கிறேன்.அந்த அபிமானமும்,மரியாதையும் இப்போது நினைத்தவைகளைக் கூட பேச விடாமல் செய்கிறது. அப்போதெல்லாம் பாட்டியின்
தினங்கள்எனக்கு அத்துபடி.”அப்ப்யெல்லாம் கூலிக்கு காயி புடுங்கப்போவம்,காலையில வெள்ளன எந்திருச்சி கஞ்சி வாளியோட போறவதான்,மசங்கவுதான் வீடு வருவேன்.ஒங்க தாத்தாவுக்கு பார்வதான் இல்லையே ஒழிய புத்திக்கூர்ம கூடுதலு.வீட்டுல புள்ளைகள குளுப்பாட்டுரதுலயிருந்து,கஞ்சிகாச்சுற வரைக்கும் அவுங்கதான்”.
    “மசமசன்னுஇருட்டுலபோறவுங்க,பொல்லுன்னுவிடியறதுக்குள்ள காயப்பெறக்கி
ஏறுவெயிலுக்குமுன்னாலடவுன்லகொண்ணாந்துசேக்கணும்.இப்பத்தான பஸ்சு,
ட்ராக்டருங்க,அப்பயெல்லாம்தலைச்சொமதான்.கருவக்காட்டுகுறுக்குப்பாதையில
வுழுந்து போவம்.ஓடை,ஒடப்பு,பள்ளம்,மேடுன்னு ஆறு கல்லு தொலவும் ஒரே ஓட்டமும் நடையும்தான்.என்னோடநாலஞ்ச்சுபேரு,அவுகளுக்குள்ள போட்டி”.
   “தொங்கு,தொங்குன்னு ஓடுவம்.வண்டியில பூட்டுன மாடுமாதிரி.ஒண்ணுக்கு ரெண்டுக்கெல்லாம்கூடரெண்டாம்பட்சமாத்தான்ஆகிப்போகும்.நடந்த நடைக்கும்,
செமந்த செமைக்கும் கூலி கட்டுபடியாகதுன்னு சொல்லி மொதலாளி மாருககிட்ட துட்டவாங்குறதுக்குள்ள தொண்டத்தண்ணி வத்திப்போகும்.”
     “கூலிக்காரன் பொழப்பு என்னைக்கும் தொன்னாந்த பொழப்புதான”.இப்பத்தான ஊங்குறதுக்குள்ளடவுன்லபோயிநிக்குறீங்க.எங்ககாலத்துலயெல்லாம் டவுனுக்குப்போறது பெரிய சங்கதி”.
    அதுலயும் நாங்க நித்தம் டவுனுக்குப்போயி வருவமா?காயி பெறக்குற யெடத்துல,ஊருக்குள்ள,க்கடகண்ணியில்பாதிநாடவுனப்பத்திதா பேச்சு.”அவுங்களுக்கு என்ன தெரியும் கண்ணுல சேனை கட்டுன எங்க பாடு,”இதுக்காவே எதையாவது சாக்கு வச்சி வீட்டு வாசல்ல வந்து காத்துக்கெடப்பாங்கன்னா பாரேன்.
      இன்னும் நிறைய சொல்வாள்.”ஒழப்புல நெறைய சந்தோசம் இருக்குடா,” “என்னைய கேட்ட காடு கரைகள்ல வேலை செய்யும் போதே உசிரு போயிரனும்டா.”        
    அப்படியெல்லாம் ஓடியாடி உழைத்தவள் தாத்தா இறந்த போது நாள் கணக்கில்
வீட்டுக்குள்ளேயேமுடங்கிப்போனாளாம்.யார்என்னசொல்லியும் கேட்கவில்லையாம்.
தாத்தாவின்நினைப்பிலேயேஊன்உருகிக்கிடந்தவளின்முன்வாடிக்களைத்துஉருக்குலைந்துபோனபிள்ளைகளின்முகம்தெரிந்தபோதுதான் சமாதானமானாளாம்.
    உழைப்பையே மூலதனமாய்க்கொண்டு வாழ்க்கை விளக்கெரிய தன்னையே திரியாயும்,எண்ணையாயும் எரியவிட்டவள்.கன்னத்து தசைகெல்லாம் ஒட்டிப்போய் லேசான நடுக்கத்துடன் உட்கார்ந்திருந்தாள்.
     முன்னே அவள் வயசு பெண்களெல்லாம் சொல்வார்களாம்.”என்ன மாயம்டியம்மா இது,செஞ்சு வச்ச செல கணக்க அப்பிடியே இருக்கயே,தங்கபஸ்பம் எதுவும் சாப்புடுறயா”?
     அவள்தான் இன்று உருக்குலைந்து கிடக்கிறாள்.ஊர் தூங்கி விட்ட இரவின் அமைதி.லேசாய் திறந்திருந்த கதவின் வழியாக பனிப்புகையாய் உள்ளே நுழைந்த குளிர் காற்று உடம்பைக்குத்த பேசிக்கொண்டிருந்தோம்.
    நான் சொல்ல,தம்பி பேச,அம்மா மெளனமாய் இருக்க நாட்டாமை மாமா எடுத்துச்சொல்லிக்கொண்டிருக்க.........எதற்கும் அசைந்து கொடுக்கிற மாதிரி இல்லை.   எல்லோருடைய பார்வையும் பாட்டியை நோக்கியே/
    அவள்சொல்லப்போகும்காரணப்பேச்சைஎதிர்பார்த்தேன்.மெளனமாய்நீண்ட
கணங்களில் ஏதேதோ............./
    பாட்டியின் பிடிவாதம்,அம்மாவின் நிலை,தம்பியின் அவசரம்,நாட்டாமை மாமாவினது பேச்சுக்கள்,ஊரில் உள்ள மனைவி மக்களது நினைப்பு,ஆபீஸ் எல்லாம் கண்முன்னே விரிந்து சுருங்கியது.கூடவே பக்கத்து வீட்டு பாட்டி சொன்னதும்........../
    “தம்பி அவ ஒக்காந்துக்கிட்டுஇருக்கா,நீங்க ஓடிக்கிட்டு இருக்கீங்க,ஏணி கூட இல்ல,பாலம் கட்னாலும் கதை ஆகாது.அந்த அளவு அவ பழுத்து நிக்குறா,நீங்க பிஞ்சுக/,அது கழுத அது கழுத எங்க கூடயே வருசம் பூராம் காட்டுல கெடந்து ஒழலும்,சமயத்துல எங்களாலயே அதும் புத்திய புரிஞ்சிக்க முடியாது.”
     “ஆதியிலயிருந்தே அதுக்குன்னு சில பழக்க வழக்கங்க,எங்க கூட காடு கரைகள்ல திரியிற அந்த நாள்கள்லயும் கூட வாரா வாரம் சுத்தமா தல முழுகி,வீடு வாசல் கழுவி விட்டு சுத்தபத்தமா இருப்பா/”
     “செவ்வா,வெள்ளிதவறாமஊதுவத்தியும்,சாம்புராணிபொகையுமாவீடு மணக்கும்.
நாங்க கூட கேலி பேசி சிரிப்போம்,ஐயமாரு வீட்டுல பொறக்க வேண்டியவ தப்பி இங்க வந்து பொறந்துட்டயேன்னு.சிரிச்சுக்குவா,அவ தலைமுழுகுற அன்னைக்கு சாத்துன கதவ தெறக்க மாட்டா,மறுநா பூராம் காடுகள்ல வேலைத்தளங்கல இதுதான் பேச்சு.”என்னடி ஓன்புருசன் சிக்கெடுக்கும் போது தலையில காக்காப்பொண்ண வச்சு தேச்சு விட்டுட்டாரா?தலையில மின் வெட்டுது என்போம்.சொன்னதுதான் தாம்சம் தலைய அள்ளி முடிஞ்சு வண்டு கட்டிக்கிருவா(துணியை சுற்றிக் கட்டிகொள்ளுதல்)”
    “இப்ப என்னய்யா நீங்க பாட்டிய பாக்குறீங்க.அவ ஒரு முனி மாதிரி வாழ்ந்தாயா,அவ/ஒங்கதாத்தாவுக்குபார்வபோனப்பயெல்லாம்அவ செத்துப்
போவான்னுதான் நெனைச்சோம் நாங்கெல்லாம்.நோக்காட்டுக்கு தப்புன பயிர் மாதிரி ரோசத்தோட உசும்பி பொழச்சுக்காட்டுனா.ஊருசனம் அவள பேசாத பேச்சு இல்ல,அப்பிடி பேசுச்சி,பேச்சு மட்டுமா..........?/”
     “எல்லாத்துக்கும் வளைஞ்சு,நெளிஞ்சு கரட்டுக்காடு வேலாமரம் மாதிரி தாங்கி எந்திரிச்சு நின்னா,இப்ப ஒங்களப்பாத்து கொஞ்சம் அலுப்பு ஆத்திக்கிட்டு கெடக்கா/”
     “அவ இன்னைக்கும் அடுப்பாங்காரையில வேலை செஞ்சான்னா பாத்துக்கிட்டே இருக்கலாம்.அடுப்பு வேலை செய்யும் போது ஒரு துண்டாவது வேணும் அவளுக்கு ஒடம்பச்சுத்திகட்டிக்கிறதுக்கு.அவ்வளவு நறுவிசு,சாப்பாட்ட பொங்குன கையோட வீட்டுக்கு வெளியில காக்காயிக்கு கொஞ்சம் சோறு வைக்காம ஒங்க தாத்தாவுக்குக்கூட சோறு எடுத்து வச்சதில்லை அவ/”
     “ஒங்க தாத்தாகூட கேலியா சொல்லுவாரு. “ஏம்மா நம்ம பொழப்பே தொன்னாந்த பொழப்பு.இதுல அதுகளுக்கு வேறயாக்கும்?/”
     “தொன்னாந்த சீவங்களுக்கு தொன்னாந்தவுகதான ஆதரவு”அப்பிடீன்னுவா ஒங்க பாட்டி.
   “ஒங்க தாத்தா யெறப்புக்குப்பின்னாடி அந்த மனுசர நெனைச்சு அந்த மனுசர நெனைச்சு அப்பிடி உருகிபோனா,மாத்தைக்கி ஒரு நா ஒங்க தாத்தாவ  நெனைச்சு வெரதம் இருக்குறதோட மட்டுமில்லாம,அக்கம்,பக்கத்து வீட்டு புள்ளைங்க ரெண்டு பேருக்காவது அவ வீட்டுல வச்சி நெல்லுச்சோறு  போடுவா.அப்பேர்பட்ட சீவன் அது.இன்னமும் அது மனசு பூராம் தாத்தாதாம்பா/
    பக்கத்துவீட்டு பாட்டி பேசிய பேச்சில் சின்னதாய் ஒரு பொறிதட்டல்.
   “அம்மா அந்த மந்த  வீட்ட சுத்தம் பண்ணிக்குடுத்துரு,பாட்டி கொஞ்சநாளு அங்க போயி யெளப்பாறிட்டு வரட்டும்”
    நீண்ட மெளனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நானும் எல்லோருமாய் எழுந்தோம்.
   பாட்டியின் முகத்தில் சந்தோச ரேகை/ 

காக்காப்பொண்ணு,,,,,,,,,,


                             
  
        காளியம்மாவின் இந்த முடிவு யாரும் எதிர்பாராததுதான்,முத்துவும் கூட/
நேற்று மாலைக்  கருக்கலிலேயே ஊரை விட்டு போய் விட்டாளாம்.வயதான அம்மா,அப்பா, தம்பி, தங்கையுடன் மாமா ஊருக்கு.
       அக்காவைக்கட்டிக்கொடுத்தஇடம்.மாமாவுக்குபனியன்கம்பெனியியில் வேலை.
அங்கு போய் அப்படியே பிழைப்பை ஓட்டிக் கொள்ளலாம் என திட்டம்.ஆனால் முத்துவிடம்கூடஒருவார்த்தைசொல்லவில்லை.
      இரண்டு பேருக்கும் ஒரே இடத்தில்தான் வேலை.முத்து நிமிந்தாள்.காளியம்மா சித்தாள்.” அக்காவவிட தம்பிக்கு சம்பளம் ஜாஸ்தி” சாப்பாடு நேரத்தில் காளியம்மா ஆதங்கமாய் கேலி செய்தாள்.
      முத்துவுக்கும் காளியம்மாவிற்கும் இரண்டு வருடங்கள் வித்தியாசமிருக்கும்.ஓங்கு தாங்காகஇருப்பாள்.கருப்பிலும்கலப்பில்லை.புதுநிறத்திலும் சேர்த்தியில்லை.
ஒழுங்கற்றது மாதிரி ஒழுங்காய் இருக்கும் காளியம்மாவை முத்துவுக்கு ரொம்பத்தான் பிடிக்கும்.
      அது எப்படியோ தெரியவில்லை. என்னமும் ராசிதானோ என்னவோ? முத்துவும்,
காளியம்மாவும் வேலை பார்க்கும் இடங்கள் பெரும்பாலும் ஒன்றாக அமைந்து போகும்.
     களைஎடுக்கையில்,கதிரருக்கையில்,பருப்புநடுகையில்,களத்துமேட்டு வேலைகளில்
...........இப்படி இரண்டு பேரின் தலையும் ஒன்றாகத் தெரியும்.”அப்பிடி என்னதான் ராசியோ,அக்கா,தம்பிக்குள்ள,பேசி வச்ச மாதிரி ரெண்டு பேரும் ஒண்ணா நிக்குறாங்களே/” “ஆத்தாடி ரெண்டு பேரும் அக்கா தம்பிதானா”முத்துவின் சைடில் ஆண்களும்,காளியம்மாவின் சைடில் பெண்களும் கலகலப்பார்கள்.
      இத்தனைக்கும் இருவரும் ஒரே ஊர்.ஒண்ணுக்குள் ஒண்ணுஎன்கிற மாதிரியெல்லாம் இல்லை.பிழைப்புதேடிசொந்த்ஊர்களை விட்டு இங்கு வந்து வேர் விட்டவர்கள்.பரஸ்பரம் இருவரின் பழக்க வழக்கங்கள்,பேச்சு வார்த்தைகள்,நடை முறைகள் இருவருக்கும் புரிபட்டு,பிடித்துப்போக............ காளியம்மாவின் மீது முத்துவிற்கு ஈர்ப்பு ஏற்படச் செய்திருக்கிறது.
      இன்று காலையில் கூட இரண்டு பேரும் ஒன்றாகத்தான் வந்தார்கள்.பஸ் வரவில்லை என முத்துவுடன் சைக்கிளில்தான் வந்தாள்.அப்போது கூட ஒன்றும் மூச்சுவிட்டவில்லை.அஞ்சுகிலோமீட்டர்தூரம்.எவ்வளவுபேசியிருக்கலாம்,எவ்வளவு சொல்லியிருக்கலாம்.எவ்வளவுகேட்டிருக்கலாம்.
      தார்ரோட்டையும்காட்டுகம்பந்தட்டைகளையும்,சீமக்கருவேலையையும் வெறிச்சு,
வெறிச்சு பாத்ததுதான் மிச்சம்.
      அங்கன விட்டாக்கூட தினமும் கூடுற காப்பிக் கடமுக்கு, வேலபாக்குற யெடம்,
சாப்பாட்டு நேரம் இப்பிடி எத்தன யெடம்?முச்சு விடவில்லையே/
      இந்த ஒரு மாதமாக அவளது பேச்சும் செயலும்,அவ்வளவு ஒட்டுதலாக இல்லை.என்னஎன்றால் என்ன?மண்ணுக்கும் அவளுக்கும் என்னதான் உறவோ,நாளில் பேர்பாதி நேரம் தரையையே வெறித்துக்கொண்டு........./
      கேட்டால் விட்டேத்தியாய் சிரித்தாள்.முன்பெல்லாம் அவர்களது கலகலப்பில் அடுத்தவர்களது மனது பொறாமையில் இடறியிருக்கிறது.
      முத்து வீட்டிலும் சரி.காளியம்மாவின் வீட்டிலும் சரி விலகிப்பழகச்சொல்லி எச்சரிக்கையும்,திட்டுகளும்வராமல்இல்லை.ஊரும்,சுற்றமும்பேசாத பேச்சுக்களும்,
சொல்லாதசொல்லும் இல்லை.
      முத்துவும்,காளியம்மாவும் அதை கணக்கில் எடுக்காமலும் இல்லை.இருந்தாலும் பக்கத்து,பக்கத்து மரங்களின் கைநீட்டலை,ஒன்றின் மீது,ஒன்றான பூச்செறிதலை எப்படிதடுக்க/எந்தசுவர்எழுப்பிமறைக்க?புறஞ்ச்சொல்லலும்,சுவர்எழுப்பலும்..........ம்ஹீம்/
      ஆறு மாதத்திற்கு முன்பு ஊரில் வேலைகள் மத்துவமானபோது டவுனில் போய் விசாரித்து சித்தாள் வேலைக்கு தாக்கல் சொன்னவன் முத்துதான்.
     ஊரில் காடு கரைகள் மாதிரியே இங்கும் ஒரே கட்டித்தில் வேலைகள் அமைந்தது.அவர்கள் ஒரே இடத்தில் சேர்ந்து வேலை செய்யும் போது இருந்த வேகம்,தனித்தனியாக வேலை செய்யும்போது இல்லை.
     அதை அறிந்தது போலவே மேஸ்திரியும் அவர்களை ஒரே இடத்தில் வேலைக்கு அனுப்பினார்.வேலைக்கு வேலையும்,கலகலப்புக்கு கலகலப்புமாய் அந்த இடமே அமளி துமளிப்படும்இருவராலும்/
     அப்படித்தான் ஒரு நாள் ஊரில் கதிரடித்துக் கொண்டிருக்கும்போது களத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள் காளியம்மாவும், முத்துவும்/அந்த உம்மனாக்காரமூஞ்சிமுதலாளி“என்னஇதுவேலைசெய்யுற யெடமா,
வெளையாட்டுத்தளமாஎன சத்தம் போட்டிருக்கிறார் காளியம்மாவிடம்.
     “உம்முனு வேலை செஞ்சா விடுற அனல் மூச்சுல நெல்லு கருகிப்போகும்ல மொதலாளி”என்றிருக்கிறாள் காளியம்மா.அவளது அந்த வெள்ளந்தித்தனத்தில் முதலாளியே சிரித்து விட்டாராம்.
     ஊரெல்லாம் வேலைதளங்களில் இதை ஒரு அதிசயமாகவே பேசிகொண்டார்கள். அந்தக் காளியம்மாள்தான் முத்துவிடம் ஒருமாதமாய் சரியாக பேசவில்லை.
      முத்துவின் கெஜ கர்ணமெல்லாம் காளியம்மாவின் முன் தோற்றுப்போனது.ஆழ்ந்த ஒரு பார்வை,விட்டேத்தியாய் ஒரு சிரிப்பு.அவ்வளவுதான் மிஞ்சிப்போனால் என்ன என்றால் என்ன?
      நேற்றும் வேலைத்தளத்தில் அந்த ரீதியாய் பார்த்தவள்தான்.இன்று ஊரில் இல்லை. “எனக்குன்னு சொத்து சேத்து வச்சிருந்த மாதிரி செல பழக்கவழக்கங்க வச்சிருந்தேன்.அதெல்லாம் மருகி,மருகி துப்பரவா காணாம போச்சு இப்ப.எப்பப்பாரு சாந்து சட்டி,செங்காமட்டி, கொத்தன், மேஸ்த்திரி, அவனுக பேசுற கவுச்சு.........இதுதான் மனசவட்டம் போடுது.அதெல்லாம் கூட பரவாயில்லை,அந்த முத்துத்தம்பியவே வேறாமாதிரி நெனைச்சுப்பாக்குற அளவுக்கு பொச கெட்டுப்போச்சு மனசு.”இனி நா இருந்தாதேவலையா?செத்தா தேவலையா,,,,,,,,,,,?
       பக்கத்துவீட்டு வெள்ளையம்மாளிடம் நிறைய சொல்லி அழுதிருக்கிறாள்.இரண்டு நாட்களுக்கு முன்.இப்பொழுது முத்து யோசிக்கிறான்.
      காளியம்மா போன ஊருக்கே நாமும் போய்விட்டால் என்ன? 

19 Sept 2011

பந்தக்காலு,,,,,,


                                 



       அன்பு நண்பருக்கு வணக்கம்.ரொம்பவுதான் நாளாகிப்போனது உங்களுக்கு கடிதம் எழுதி.
    ஆமாம்,,,,,,பெண்குழந்தை பிறந்திருக்கிறதாமே,சந்தோசம்,வாழ்த்துக்கள்.தங்களுக்கு
திருமணமாகி நான்கு வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை.மனைவி கருவுற்றவுடன் ஸ்கேன் பார்த்து பெண் குழந்தை என்றவுடன் கலைத்து ,,,,,, “இனியும் கலைத்தால் மனிவியின் உயிருக்கு ஆபத்து” என்கிற டாக்டரின் எச்சரிக்கையினால் கலைக்காமல் விட்டு பிறந்த பெண் குழந்தை.
   உங்கள் கூற்றுப்படி உங்களை தட்டுக்கேட்க ஒரு ஆண் மகவு வேண்டும் என்கிற எண்ணத்தை பொய்யாக்கப்பிறந்த குழந்தை.இனி அடுத்ததாய் ஆண் குழந்தை பிறக்கிற காலம் வரை முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு திரிவீர்கள் அப்படித்தானே நண்பரே.?
    உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?பணியில் சேர்ந்த முதல்நாள் “சார் ப்யூன் போஸ்ட்” என உங்களிடம் தானே “அப்பாயிண்மெண்ட் ஆர்டரை” கொடுத்தேன்.
பின் வந்த நாட்களில் நமது ரூம் வாசப் பேச்சுகளில் இதெல்லாம் கேலியும்,கிண்டலுமாக இடம் பெறுமே,
   “டேய் கொரங்குப்பயலே,ப்யூன் போஸ்ட்டுன்னு வந்த பைய இப்ப இவ்வளவு பேச்சு பேசுறயேடா” “டேய் பகலிலேயே பசுமாடு தெரியாத பையன் நீயீ,,,,,,,,,,,,”ஆரம்ப நாட்களில் நமது பேச்சும், பழக்கமும் இப்படித்தான் இருந்தது.அப்புறம் போகப்போக எல்லா விஷயங்களுக்குள்ளும் சென்றோம்.பகிர்ந்து கொண்டோம்.
    அலுவலகம்,ரூம் என வித்தியாசமில்லை.இடத்தை விட்டு விட்டு பொருள்,ஏவல் அடிப்படையில் எல்லாம் பேசினோம்.எங்கெங்கோ கிடந்த இரு விதைகள்காற்றில் இழுத்து வரப்பட்டு ஓரிடத்தில் விழுந்து மண்பிளந்து,துளிர்த்து,முளை விட்டு ,கிளை பரப்பி நின்றது போல் நம் நட்பும்,நட்பின் ஊடாக வந்த அந்த உறுத்தலான விஷயமும்தான் நம்மை பிளவு படுத்திவிட்டது என நினைக்கிறேன்.
   அது ஒரு பெண்.முப்பது வயதில் புது நிறத்தில் இருந்தாள்.அவள் கட்டுகிற அடர் நிற சேலை,ரவுக்கையை போல் அவளது மனமும் இருந்ததாக அறிகிறேன்.கணவனை விட்டு பிரிந்து பிறந்த வீட்டில் இருந்தவளை நீங்கள் ஆள ஆரம்பித்துவிட்டீர்கள்.
   அவளும் உடன்பட்டாள்.காரணம் கேட்டபோது சொன்னீர்கள்”எனக்கு தினமும் ஒரு பெண் வேண்டும் என.ஆடு வேண்டும்,கோழி வேண்டும் என சாமி வந்தவர்கள் சொல்வது போல நீங்கள் சாதாரணமாகவே சொன்னீர்கள்.சரி போகட்டும் என விட்டு விடவோ,ஒத்துக்கொள்ளவோ முடியவில்லை.
   “நான் அந்த பெண்ணிடம் பேசட்டுமா?,உங்களை தின்று தீர்க்க வேண்டாம்”என கேட்டேன் நீங்கள் மறுத்து விட்டீர்கள்.அப்புறம்தான் ஒரு விஷயத்தை தெளிவு செய்தீர்கள் என்னிடம். “இங்கு மட்டுமல்ல,நான் வேலை செய்கிற ஊர்களிலெல்லாம் ஒவ்வொரு பெண்ணை வைத்திருந்தேன்,கிட்டத்தட்ட குடும்பமே நடத்தினேன்”என்றீர்கள்.
   அதெப்படி இருந்திருக்க முடியும்?எந்த நேரம் எந்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆகிபோவீர்கள்,எந்த நேரம்,எந்த ரூபத்தில் ஊர்க்காரர்களால் பிரச்சனை வரும் என்கிற எதிர்பார்ப்புடனும்,கவலையுடனும் இருப்பவள் எப்படி மனம் ஒன்றி உங்களுடன் குடும்பம் நடத்தி இருப்பாள்.உங்களது செயலை ஞாயப்படுத்த உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்ட சமாதானம்.அப்படித்தானே?
   நாம் இருவரும் வேலை பார்த்த ஊரிலும் அதே மாதிரியான உங்களின் பழக்கம் தொடர்ந்தது.உங்களின் அவள் வந்து போக வசதியாய் நம் ரூம் பக்கத்திலேயே ஒரு ரூமைப் பிடித்தீர்கள்.ரூம் என்ன ரூம் வீட்டைத்தானே அப்படி சொல்லிக்கொண்டீர்கள்.
  அந்த ரூம் கிடைக்கும் முன் பத்துக்கும்,நாலுக்குமாய் உள்ள ஒரு செவ்வக டைப் வீடு.சமையலறையிலிருந்து, குளியல்ரூம்வரை அதற்குள்ளாகவே எல்லாமும் அடங்கி
விட்ட அதன் மாடியில் தட்டு,முட்டு சாமான்கள் போடுவதற்காகவே கட்டியது போல் ஒர் அறை.அதில்தான் நான் தினமும் படுத்துக்கிடப்பேன்.தட்டுமுட்டு சாமன்களோடு சாமான்களாய் அதன் தூசியை சுவாசித்துக்கொண்டு கிடப்பேன்.
   டேய் முன்ன மாதிரி இல்லடா,இப்பயெல்லாம் அவ டெய்லி வர்றேங்குறா,கொஞ்சம் அட்ஜஸ்ட்பண்ணிக்கோடா”என்றீர்கள்.இரண்டு பேரும் ஒன்றாய் தங்கியிருந்த ரூமில் உங்களது தாகத்திற்காய் அவளை பலிகடா ஆக்கிக்கொண்டு “அட்ஜஸ்ட்” என்கிற பெயரில் ஏதாவது செய் என்றீர்கள்.
    விளைவு மாடி ரூம் உறக்கம்.ஒன்னுக்குகூட கீழே இறங்கி வர முடியாமல் சங்கடப்பட்டு,,,,சங்கடப்பட்டு,,,,,,,,,,,,மனம்வெம்பிஅவஸ்தையோடு படுத்துக்கிடப்பேன்.
   ஒரு நாள் என்னை தேள் கடித்து விட்டது.பொறுத்துப்பார்த்தேன்.வலிதாங்க முடியவில்லை.கீழே இறங்கி வந்து விட்டேன்.முதலில் சப்தம் போட்டு விட்டு அப்புறம்தான் கேட்டீர்கள்.என்ன என.அவளும் வெறித்தாள்.ஒன்றும் சொல்லவில்லை.டாக்டரிடம் போய்விட்டு வந்து சொன்னேன்.”ரொம்பவலிக்குதா”அவள் கேட்டாள்.என் பார்வையின் நெருப்பு அவளை சுட்டிருக்க வேண்டும்.போய்விட்டாள்.
   அதன் பிறகு நண்பா,நீங்கள் என்னை மாடிக்கு போகவிடவில்லை.கீழேயே படுத்துக்கொண்டோம். இருவரின் நீண்ட மெளனத்திற்க்குப்பிறகு விடிய விடிய பேசினோம்.உங்களது செயலுக்கு ஞாயம் கற்பித்து வந்த வாதங்கள் எனது பேச்சை அமுங்கச் செய்து விட்டது.பின் என்ன செய்ய?விடிந்தும் விட்டது.
   அவளின் ஆளுமையோ,உங்களின் ஆளுமையோ,அல்லது இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஆளுமை செலுத்தினீர்களோ தெரியவில்லை.”அவள்தான் எனது வாழ்க்கை”என்றீர்கள்.
அது எப்படி சரியாகும் என நான் கேட்ட கேள்வி இருவருக்குமிடையே பெரிய வாக்கு வாதமாகி “அது என் சொந்த விஷயம்  நீ தலையிடாதே” என சொல்ல வைத்தது.விலகிக்கொண்டேன்மனமில்லாமல்.நம்இருவருக்குமிடையில் மனக்கசப்பு,
பேச்சின்மை,பிரிவுதொடர்ந்தது.அவளுக்கும்,உங்களுக்கும்உறவுவலுத்ததுமுன்பைவிட/
  உங்களுக்கு சந்தோசம்,எனக்கு வருத்தம்,ஊருக்கு பொறாமை.”அரசு உத்தியோகிஸ்தன்” “பணம்” அவளே சம்மதிச்சிப்போறா”,,,,,,,என்கிற பிரச்சனைகள் இவைகளை காட்டி நீர்த்துப்போகும்.அப்புறம் என்ன?இம்மாதிரியான ஓர் நாளில் எனக்கு ட்ரான்ஸ்பர் வந்தது.அடுத்த சில மாதங்களில் உங்களுக்கும் ட்ரான்பர் வந்ததாய் அறிந்தேன்.
  அவளை என்ன செய்தீர்கள் தெரியவில்லை.இப்பொழுது மனைவி,குடும்பம் என செட்டில் ஆகி விட்டீர்கள்.பெண்குழந்தையும் பிறந்தாகி விட்டது.அடுத்த ஓரிரு வருடங்களில் இன்னொரு குழந்தை.அது ஆணோ,பெண்ணோ பெற்றுக்கொண்டு நாமிருவர் நமக்கிருவர் என வாழ்வை கழிப்பீர்கள்.அப்படித்தானே நண்பா?
    ஆனால் நண்பா,இப்பொழுது அந்த பெண்ணை நினைவில் வைத்திருப்பீர்களோ இல்லையோ தெரியாது.அலுவலக வேலை நிமித்தமாய் மதுரை சென்றபோது அவளை பார்க்கிறேன். கையில் அழகான குழந்தை.
    நண்பா உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா, “நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு கண்ணுமணிகளா ரெண்டு குழந்தைகள பெத்துக்கிட்டனும்”
   நண்பா நீங்களும் அந்த பெண்ணும் பேசிக்கொண்டதை அசந்தர்ப்பவிதமாக கேட்டுள்ளேன்.
   ஏனோ நண்பா அந்த பெண்ணை பார்த்ததும் மின் வெட்டாய் இந்த வார்த்தைகள் வந்து போனது எனக்குள்.
   பார்க்காதது போல் போன என்னை அவள்தான் கூப்பிட்டு நிறுத்தினாள்.கோவிலுக்கு வந்ததாயும்,செளகரியமாய் இருப்பதாயும் சொன்னாள்.
   இந்த பையன் அவருக்கு பொறந்ததுதான்”என்றாள்.வேறென்ன முடிக்கிறேன் நண்பா/ 

மண்ணரிப்பு,,,,,,,


 
                        
       அவரையும் இந்த சூழலையும் பாத்ததும் அவரோடு பேசவும் பகிர்ந்து கொள்ளவும் நிறையத்தான்  இருக்கிறது என்றாலும் நான் தயாராய் இல்லை.
     அவரது மனைவியின் தவறான உறவால் ஏற்பட்ட மனப் பிணக்கில் இந்த அந்திம காலத்தில் இப்படி அவர்/
     நீண்டு விரையும் சாலைகளின் அதிர்வுகளிலும் மிகுந்து போன நெரிசல்களுக்கு மத்தியிலும் அவரது  நாட்களின் நகர்தலைக்கண்டு  அதிர்ச்சியடைந்து போனேன்.
     நான் யாரோ, அவர் யாரோ,நான் எனது வேலையை பார்க்கிறேன்.அவர் அவரது வேலையை பார்க்கட்டும் என கூறி விட முடியவில்லை.
    “தம்பி ஒரு கால் ரூபா இருந்தா குடு ஊருக்குப் போகணும்”நகரின் ஏதாவது ஒரு நெரிசலானதெருவில்அல்லதுசாலைகளின் சந்திப்பில் டீக்கடை ஓரமாய்,பஸ்டாண்டிலும் இந்த குரலை கேட்க நேர்ந்த நேரங்களும் தினங்களும் அதிகம்தான்.
     அன்றாடங்களின்நகர்தலில்அவரைநோக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாய் பதிவாகிறார் என்னுள்.
     தூரத்தே விரையும் எனது சைக்கிளை சாலையின் அத்தனை நெரிசலிலும் அத்தனை வேகத்திலும் ஈஸியாய் இனங்கண்டு கொண்டு அவர் வாய் வார்த்தையால் பிரேக்கிட்டு விடுவார்.
     அப்புறமென்ன அவர் கேட்கும் வாய்வார்த்தை அவரின் தோற்றத்துடன் பிசைந்து வரும்.
     பிளாட்பாரம் ,டீக்கடை ஓரம்,பஸ்டாண்ட் இங்கெல்லாம் அவரை பார்க்க நேர்கிற கணங்களில் கேட்க நேர்கிற கேள்விகளை அவரது தோற்றம் மறக்கடிக்கச் செய்துவிடுகிறதுண்டு.
     மனம் பிசைய சங்கடத்துடன் இருபத்தைந்து பைசாவை கொடுக்கும் எனது கைக்கும்,அவரது கைக்குமான உராய்வு ஏற்படுகிற நேரம் என் மனதின் ஓரம் ஒரு மெகா சைஸ் கேள்வியை எழும்பி விடுகிறதுண்டு.
     லிங்கம் பலசரக்குக்கடை.ஐந்து பைசாவிற்கு கைநிறைய அள்ளித்தரும் கடுகு மிட்டாயிலிருந்து,அரிசிபருப்பு வரை இல்லாத வியாபாரம் இல்லை எனலாம்.
     அள்ளித் தருகிற வள்ளலுக்கு அடுத்தபடி இவர்தானோஎன எண்ணத்தோன்றும்.
     இப்போதுதானே எதற்கெடுத்தாலும் பத்து ரூபாய் நீள்கிறது.அப்போதெல்லாம் பருத்திதான்.
பருத்தி கொண்டு போனால் நிறுத்துப் போட்டுவிட்டு வேண்டியதை தருவார்கள்.
உள்ளூர் பருத்தி வியாபாரி விளையாட்டாயும், சங்கடத்துடனும் சலித்துகொள்வார் லிங்கத்திடம்.
    “நீங்கெல்லாம்என்னைக்குபருத்திவாங்க அரம்பிச்சீங்க்களோ,
     அன்னையிலிருந்து நம்ம வியாபாரம் பெப்பரப்பேதான்”
இத்தனைக்கும் வியாபாரி லிங்கத்துக்கு சொந்தம்தான்.ஏய் போன்னா அங்கிட்டு,,,,,,,,என்பார் லிங்கம் வியாபாரியை/
    மறுநாள் காலையில் அவர்கள் இருவரும் ஊர் மந்தை டீக்கடையில் சிரிப்பும்,பேச்சுமாய்டீக்குடித்துக்கொண்டிருப்பதைகாணலாம்.
     சின்னப்பிள்ளையாக இருக்கும் போது நான் அவரது கடைக்கு நிறைய தடவை போயிருக்கிறேன். “என்ன தம்பி எப்படி இருக்க?,பள்ளிக்கூட யூனிபார்ம் அழுக்குப்படாமக்கூட வந்து நிக்கிறயே,”என்பார்.
    அப்போது கடைக்கு வந்திருக்கும் என் வயது பையன்களிடம்,தம்பி படிக்கிற டவுன் படிப்புக்கு ஏத்தமாதிரி அவன் கொண்டு வர்ர பருத்தியும் எப்புடி இருக்குது பாருங்க  என மறக்காமல் சொல்வார்.
    வாஸ்தவம்தான்.அவர் சொன்னஎன் வயது  பையன்கள் பருத்தியில் லேசாக தண்ணீர் தெளித்துக்கொண்டு வருவார்கள்.அப்படி கொண்டு வருகிற பையன்களிடம் தராசில் வேலைகாட்டி  விடுவார் லிங்கம்.
     பருத்திக்காசு போக வாய்கணக்கு,வாரக்கணக்கு என நிறைய புழங்கும் அவரது கடையில்.
    லிங்கம் கடையில் கணக்கு என்றால் அவ்வளவு லேசெல்லாம் கிடையாது.அதையெல்லாம் மீறி ஓடியது கணக்குகளும்,கடையும்/
  
     அந்த அடைமழையோடு வந்து சேர்ந்ததுதான் ஆசைத்தம்பி குடும்பம்.அவர்கள் பூர்வீகம் என மலைசார்ந்த ஊரை சொன்னார்கள்.
    வரத்து ஆடு மேய்த்து பிழைப்பு நடத்துபவர்கள்.கையில் ஒரு பிள்ளையும் வயிற்றில் ஒன்றுமாய் அவர்கள் வந்து ஊர் சாவடியில் நின்றபோது லிங்கம் மனதிற்குள்ளேயே
அழுது விட்டார்தான்/
    உடம்பிலும்,உடையிலும் இல்லாமை.உருண்டு,திரண்டு மார்பு விரிந்து நின்ற கணவன் வாடிப்போயிருந்தான்.மனைவி பரட்டையாய் உடல் காய்ந்து.பிள்ளை அழவும் சக்தியற்று துவண்டுபோய்.அவர்களிடம் எச்சில் துப்பக்கூட திராணியில்லை.
    லிங்கம்தான் தனது தொழுவத்தில் தங்கவைத்தார் அவர்களை.முதலில் சாப்பாடு.அப்புறம்தான் என்ன,ஏதென்ற விவரம் கேட்டார்.
    ஆடு மாடுகளின் வாசனையோடு இருந்த தொழுவம் இப்போது மனித வாசனையுடனும்,சுத்தத்துடனும்/
    தங்களது பிழைப்பின் ஆதார நுனியை வெளியே பரப்பி படர்ந்து பற்றி பாவி நின்றார்கள்.இதுதான் லிங்கம் மனைவியின் மனதை நெருடி,நெகிழச்செய்திருக்க வேண்டும்.
    லிங்கம் குடும்பத்திற்கும்,சுத்தத்திற்கும் வெகு தூரம்.ஊர்பஞ்சாயத்தில் சொல்லி அவர்கள் இருவரையும் தினமும் குளிக்கச்சொல்லவேண்டும் என்கிற மாதிரியான பேச்சுக்களெல்லாம் நடப்பதுண்டு ஊருக்குள்.
   “மழை,குளிர் காலத்துல கூட சரி ,கண்ணுகுள்ளயெல்லாம் வேர்க்கிற இந்த வெயில் காலத்துல எப்படித்தான்,,,,,,,,,,,,?கண்றாவி புடிச்ச பையல்க”என்பார்கள் மறைமுகமாக.
    அவர்களது கடையும் அப்படித்தான்இருக்கும்.ஒன்றின் மீது ஒன்றாய்.அரிசிமூடை மீது பருப்பும்,எண்ணெய் டின் மீது உப்பும் சிந்திக்கிடக்கும்.கருவாடு தன் பங்குக்கு வாசனையை பரப்பிக்கொண்டு ஒரு மூலையில்.தவிரமிட்டாய் பாக்கெட்,அப்பள பாக்கெட் என தின்பண்டங்களின் ரகங்களும் வரிசைகட்டிக்கொண்டு நெருக்கமாய்/
    கடையின் வாசலை நெருங்கும்போதே ஏதோ ஒரு ரசாயன கலவை  வாசனை.வாசலில் நிரந்தரமாய் ஒட்டி இருக்கும் பிசுபிசுப்பு.தூசி,அழுக்கு படர்ந்து நிற்கிற ஈரம்.
    இதையெல்லாம் கடந்துதான் அவரிடம் சரக்கு வாங்க போகவேண்டும்.அப்படி சரக்கு வாங்கப்போகிற வேளைகளில் ஏழுகடல்,ஏழு மலை தாண்டுகிற பரமபிரயத்தனம் தெரிந்திருக்கவேண்டும்.
    லிங்கத்தை கடையில் பார்க்கிறதை விட அவருடைய ஒற்றை மாட்டு வண்டியில் பார்த்தவர்கள்தான் அதிகம்.காலையில் வண்டிக்கு மசையும்,மாட்டுக்கு இரையும் தண்ணீரும் விட்டு விட்டு கிளம்புவார்.மதியம் உச்சி வேளை வேளையில் திரும்பிவருவார்.தக்காளிக்கூடை,எண்ணெய் டின்,அரிசி மூடை இவற்றோடு கொஞ்சம் வைக்கோலும்/
    இப்படித்தான் ஒரு தடவை சரக்கேற்றி வரும் போது வழக்கம்போலவே தூங்கி கொண்டு வந்திருக்கிறார்.வழியில் ஆள் அரவம் இல்லை.வண்டி வந்து கொண்டிருக்கிறது.வண்டியை நிறுத்தி கையோடு கொண்டு வந்திருந்த புண்ணாக்கு தண்ணீரை மாட்டுக்கு வைத்துவிட்டு  லிங்கம் தூங்கிக்கொண்டிருந்த மூடையை மட்டும் விட்டு விட்டு மற்றதை நகட்டிக்கொண்டு போய் விட்டார்கள்.மாடும் புண்ணாக்குத் தண்ணீரை குடித்துவிட்டு ஊர் வந்து சேர்ந்திருக்கிறது.மறுநாள் அரிசிக்கடைக்காரரிடம் போய் சண்டை பிடித்திருக்கிறார் லிங்கம்.அவர் சிட்டையை எடுத்து காண்பிக்கவும் திருட்டை ஊகித்திருக்கிறார்.
   ”ஆடிக்காத்து வேகமா அடிக்கிற நேரம்,அசந்து கண்ண மூடுனது ஏந்தப்புதான்,”என கடைக்காரிடம் சொல்லியவராய் வந்திருக்கிறார்.ஒரு வாரத்தில் திருடனை பிடித்து விட்டாராம்.பிடிபட்டவன் கஞ்சிக்கு இல்லாத கொடுமை என கையெடுத்து கும்பிட்டு அழுதபோது திருடியதை பைசல் பண்ணிவிட்டு டவுனில் உள்ள தெரிந்த கடையை சொல்லியிருக்கிறார் வேலைக்கு சேரச்சொல்லி/
    காலையில் எழுந்திருப்பவர் முகம் கழுவுவதே மந்தை டீக்கடையில்தான்.பின் கண்மாய்,வண்டிமாடு,டவுன் பிரயாணம் இதுதான் அவரது அன்றாடகாலை நகர்வுகள்.பல்விளக்கி குளித்து,வீட்டில் சாப்பிட்டு என்பதெல்லாம் லிங்கத்திற்கு அப்பாற்பட்டவிஷயங்களாகவே இருந்துள்ளது எப்பொழுதும்.
    ஆனால் அந்த பழக்கங்கள் சரியாக இருந்த ஆசைத்தம்பி குடும்பத்திடம் லிங்கம் மனைவியின் மனது பறிபோனதில் ஆச்சரியம் இல்லை என்றார்கள் விஷயம் தெரிந்த சிலர்.
   முதலில்அரிசி,பருப்பு,அரசலவுஎனமுந்தியில் வைத்துபோயிருக்கிறது.நாள்பட,நாள்பட
எல்லாம்வெளிப்படையானது.
    காரணம்இப்படித்தான்சொன்னாள்.“அவர்களும்வந்தட்டி,நாங்களும் வந்தட்டி
(பிழைக்கவந்தவர்கள்)ஒருத்தருக்கொருத்தர் ஆதரவுதான்” என்றாள் லிங்கத்தின் மனைவி.
    அந்தஆதரவின்நிழல் லிங்கத்தின் மனைவி மீது நிரந்தரமாய் விழுந்து விட்டது
ஆசைத்தம்பியின்மூலமாய். லிங்கத்தின் குழந்தைகள் இரண்டும் ஆசைத்தம்பியின் சாயலில் இருப்பதாக பேசிக்கொள்வார்கள் ஊருக்குள்.    
    நைந்துமெலிந்துபோனதேகம்,மேலேமுரட்டுத்துணியில் போர்த்திய சட்டை,கோட்டின் தோற்றத்துடன்அங்கங்கேஒட்டுப்போட்டு.கனக்காலுக்குஏறிநிற்கும் அழுக்குக்கைலி,
படர்ந்து தொங்கும் மீசையுடனும், தலை கலைந்து காணப்படும் அவர் எப்பொழுதும் ஷேவிங் பண்ணிய தோற்றத்துடனேயே இருப்பதை பார்த்திருக்கிறேன்.
    அவர் என்னை பார்க்கிற போதெல்லாம் கேட்கிற வார்த்தைகள்,அந்த “கால் ரூபா,ஊருக்குப்போகணும்,”அதை தாண்டியோ அல்லது குறைவாகவோ கேட்டதாக ஞாபகம் இல்லை.
  அல்லது,ஒருடீ,காபி,டிபன்,சாப்பாடு,,,,,,,,இந்தமாதிரியெல்லாம்கேட்டதாகவும் ஞாபகமில்லை எனக்கு.
   நானும்எங்களுர்க்காரர்கள்சிலரைகேட்டுப்பார்த்ததுண்டு.வாஸ்தவம்தான்என்கிறார்கள்
குரலில் கேலி தொனிக்க.
   அந்த கேலியையும்,எல்லையும் மீறி,அதிர்வு மிகுந்த ,நெரிசலான இடங்களின் மத்தியில் அவரது குரல் கேட்காமல் இல்லை.
   “தம்பி ஒரு கால் ரூபா இருந்தா குடு, ஊருக்குப்போகணும்.”