Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

16 Aug 2016

இச்சி மரம் சொன்ன கதை,,,,,,,,,

சென்ற வருடம்  வெளிவந்துள்ள எனது சிறுகதைத்தொகுப்பு,
தேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்:   94863 21112
விருதுநகரில் பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள சேது புக் சென்டரில் கிடைக்கிறது.

14 Jan 2015

பூப்பூ,,,,,

நண்பர்களே, கிராமத்தில் பிறந்து, நகரத்திற்குச் சென்று வாழ்பவர்கள் அதிகம். ஆனால் நகரத்தில் பிறந்து, கிராமத்தில் தஞ்சம் புகுந்தவர் இவர்.
     ஒரு கிராமத்தில் மனிதன் இருப்பதற்கும், ஒரு மனிதனை கிராமம் வளர்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து, உணர்ந்து வளர்ந்தவர் இவர்.
     தோட்டம், காடு, வயல் வெளிகள் என பசுமை நிறைந்த மண் வாசனையினையும், மண்ணின் ஈரத்தினையும், மண் சார்ந்து வாழ்வு நடத்தும் மனிதர்களின் ஈர மனதினையும் ஒரு சேர அறிந்தவர் இவர்.
     இடுப்பில் அழுக்கேறிய சிவப்பு டவுசரும், தோளில் துண்டுமாய், உழைப்பு, உழைப்பு, உழைப்பு என இருபத்து நான்கு மணி நேரமும உழைப்பிற்கே, தன் வாழ்வினை உரிமையாக்கி, கிராமம் தாண்டாமல் வாழ்ந்தவர் இவர்.

     கொஞ்சம் படித்து, நிறைய உழைத்து, பாண்டியன் கிராம வங்கியில் ஊழியராய், இவர் இணைந்தது தனிக் கதை.
    வங்கியில் எண்களோடு மட்டுமே உறவாட வேண்டிய வாழ்க்கையில் நுழைந்த இவர், எழுத்துக்களின் வழியாக வெளிப்பட்டது வியப்பிற்குரிய நிகழ்வுதான்.
     எழுத்து என்றால் கிராமிய மணம் கமழும் எழுத்து. கிராமத்து மண்ணைக் கிளறிவிட்டால், எழுமே ஒரு மண் வாசனை, ஈர மண் வாசனை, அந்த ஈர மண் வாசனையினையும், ஈர மனிதர்களின் வெள்ளந்திப் பேச்சுக்களையும், ஒவ்வொரு எழுத்திலும், ஒவ்வொரு சொல்லிலும் சுமந்து வரும் எழுத்து இவரது எழுத்து.
நண்பர்களே, இந்த எழுத்திற்குச் சொந்தக்காரர் நண்பர் விமலன் அவர்கள்தான், என்று நான் சொல்லி, நீங்கள் அறிய வேண்டிய நிலை இல்லை, என்பதனையும் நான் அறிவேன்.
      வலையுலக உறவுகள் அனைவருமே இவரை நன்கறிவார்கள்.
காக்காச் சோறு
2008 ஆம் ஆண்டு முதற் பதிப்பு கண்ட இவரது நூல்,
ஆறு ஆண்டுகள் கடந்து,
மீண்டும் ஒரு பதிப்பு கண்டு,
தமிழ் உலகை வலம் வரத் தொடங்கியிருக்கிறது.
    பல நூல்கள் அச்சக அறைகளிலேயே, கட்டாய ஒய்வு எடுக்கும், இக்கால கட்டத்தில், ஒரு நூல் மீண்டும் அச்சேறி, அரியணை ஏறுவது மகிழ்ச்சிக்கு உரிய செய்தி அல்லவா?. இதற்காகவே விமலன் அவர்களை ஒரு முறை பாராட்ட வேண்டும்.
     அங்குட்டிங்குட்டு தூரந் தொலவுல இருக்குற கூடப் பொறந்தவுங்க ரெண்டு பேருமே, இங்க வந்துருங்க, இங்க வந்துருங்கன்றாங்க.
     மதுரையில இருக்குற தம்பி வீட்லதான் கக்கூசு பாத்ரூம் சகிதம் இருக்கு.
     ஆனா பாட்டிக்கு அங்கன போக மனசு ஒப்பல.
     தனியாளா இருந்தாலும், இங்கன இருக்குற சௌகரியம் அங்க வருமாங்குறா. என்ன இருந்தாலும், இன்னோர்த்தங்க வீட்ல போய், பெட்டிப் பாம்பா எப்படி இருக்க? அப்பிடீங்குறா, என்ன செய்ய சொல்லு?
     பேச்சற்று கடந்த சிறிது நேர இடைவெளிக்குப் பின் அவரேதான் தொடர்ந்தார்.
     சீக்கிரமா கொண்டு போ, வீட்ல புள்ளைங்க ஆசையா காத்து கெடக்கும்.
     எங்களுக்குத்தான் இப்படி ஒரு குடுப்பின இல்லாமப் போச்சு.....
     சொல்லும் போதே குரல் தழுதழுத்தது. அழுதவாறே உட்கார்ந்து விட்டார் தாத்தா. பக்கத்திலேயே அவரது கண்ணீரைத் துடைத்தவளாய் பாட்டியும்.
     நண்பர்களே, இன்று எத்தனை வீடுகளில் தாத்தா, பாட்டி இருக்கிறார்கள். நண்பர் விமலனின் ஒத்தப்பனை இது.
     வணக்கம் நண்பனே, இறந்துபோன உனக்கு கடிதம் எழுதுவதென்பது, அவ்வளவு பெரிய தேச விரோத செயலா என்ன? பலர் சொல்கிறார்கள். பரவாயில்லை, சொல்லிவிட்டுத்தான் போகட்டுமே. அந்த தேச விரோதச் செயலை செய்து விட்டுப் போகிறேன். என்ன லாஜிக்காய் கொஞ்சம் இடிக்கும். விடு நண்பா, இங்கே லாஜிக்காய் எதுதான் ......?
    
      உயிருடன் உள்ள உறவுகளுக்குக் கூட, கடிதம் எழுத, எழுதுகோலை திறக்க மறுக்கும் மனிதர்கள் நிரம்பி வழியும் இவ்வுலகில், இறந்து பேன, தன் நண்பனுக்கு ஓர் கடிதம் எழுதுகிறார் இவர். சுடரினுள்ளே .. எனத் தலைப்பிட்டு. கடிதம் இருளில் விளக்கொளியாய் மின்னுகிறது.
     ஆம்பள இல்லாத வீடுன்னு தெருவுல திரியுர கண்ட கழுதைகளெல்லாம், மோப்பம் புடிக்குது, மூஞ்சக் காட்டுது. அந்நேரம் ஈரக்கொலையே ஆடிப் போகுது.
     இருக்குறப்ப நல்லவுங்களா தெரிஞ்சோம். இப்பம் இல்லாதப்ப, பொல்லாதவுங்களா தெரியுறம்.
     கழுத எங்கிட்டாவது தூர தேசமா போயிரலாம்னா, அதுக்கும் வழியில்லை. எங்கயாவது ஆத்துல கொளத்துல விழுந்து உசுர மாச்சுக்கிறலாம்னு பாத்தா, புள்ளைங்க மொகம் வந்து கண் முன்னாடி நிக்குது.
      இன்றைய சமூகத்தில் மனிதாபிமானம் கிழிந்து போய் கிடப்பதை, வெளிச்சம் போட்டுக் காட்டும், இச்சிறுகதையின் பெயர் கிழிசல்.
     இப்படியான பேச்சுக்களையும், பார்வைகளின் அனர்த்தங்களையும், தூது விடல்களையும், விடலைகளின் சீண்டல்களையும், சொந்தங்களிடமும், உடல் முடியாத தாய் தந்தையிடமும் சொன்னபோது,..
      எல்லாம் எங்களுக்குத் தெரியத்தாம்மா செய்யுது, தாலி அறுத்தவ தலவிதி அதுதான் என்றார்கள்.
       நீர்க்குமிழி நெஞ்சை விட்டு அகல வெகு நேரமாகும்.
மறு பதிப்பு கண்ட
காக்காச் சோறுக்கு
வாழ்த்துக்கள் நண்பரே.
வெளியீடு
வம்சி புக்ஸ்,
19, டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை 606 601
தொலைபேசி 04175 251468
அலைபேசி 94448 67023

(எனது காக்காச்சோறு சிறுகதைத்தொகுப்பிற்கு கரந்தை ஜெயக்குமார்அவர்கள் எழுதிய விமர்சனம் 
அவரின் வலைத்தளமுகவரி /http://karanthaijayakumar.blogspot.com/)

10 Dec 2014

இறகசைவு,,,,,,



வணக்கம் வலையுறவுகளே/ நலம் விளைய ஆவல்,,,,,,,,,,
அடைக்கப்பட்டிருந்தநாற்செவ்வகமானஅஞ்சறைப்பெட்டிக்குள்இருந்தும்ஊற்
றிவைக்கப்படிருந்தபாட்டிலுக்குள்இருந்துமாய்சமையல்சாமான்களைஎடுத்து புழங்கியகாலம்போய்பவுச்சுகளைஉடைத்தும்கட்பண்ணியும்சட்டிக்குள்ஊற்றி யும்,போட்டுகிளறியுமாய்சமையல்செய்கிறகாலமாய்இன்றுஆகிப்போனதுதான்,

இதில்பவுச்சும்,பாட்டிலும்சமையல்பொருள்களும்தவிர்த்துஉடைத்துஊற்றுகிற மனோநிலையே மிக முக்கியமாய் காட்சிப்பட்டுத் தெரிகிறது. 

அதுபோலவேஎனதுஎழுத்தும்படைப்பும்எனவாய்த்தோணித்தெரிகிறது,அந்தத் தோணுதலுடன்இதோஎனதுகாக்காசோறுபுத்தகத்தைதங்களின்முன்னாய்,,,,,,,


எனது முதல் சிறுகதை தொகுப்பான காக்காச்சோறு  விற்பனைக்காய் தற்பொழுது  அழ்கான வடிவமைப்பில் எனது கைவசம்  விலை ரூ: 70

புத்தகம் விரும்புவோர்  தொடர்புகொள்ளவேண்டிய எண்: 94863  21112

16 Oct 2014

சந்தோஷக்கூப்பாடு,,,,,

அத்துவானமாய் பரந்துவிரிந்துதன்நிறம் காட்டி சிரிக்கும் கரிசல் மண்ணில் ஆழமாயும், அகலமாயும்உழுதுப்போட்டமண்ணின் புழுதியோடும்,  கரட்டுக் கட்டிகளோடும்,அதன் விளைச்சலோடும் மல்லுக்கட்டிக்கிடக்கிற கிராமத்து  மனிதர்களின் ஈரம் படர்ந்த படர்வுகளையும், அவர்களின் சாயலுடனும் அவர்க ளை முன்முகமாய்ச்சுமந்து வாழ்கிற நடுத்தரர்களின் வாழ்வியலையும் சுமந்து கொண்டு வந்திருக்கிற எழுத்துக்களின்பதிவாக,,,,,,,எனது ஐந்தாவதுசிறுகதைத் தொகுப்பு  பந்தக்கால்  வெளிவந்துள்ளது.

தொடர்புக்கு: 94863 21112    

5 Aug 2014

விளைச்சல்.,,,,,,,,


தமிழ் கூறும் நல்லுலகில் இப்படியானதொரு பாக்கியம் எத்தனை பேருக்கு கைவாய்க்கவும், கைவரப்பெறவும் பெற்றிருக்கிறது எனத் தெரியவில்லை.

கனத்தமனதுடனும்உன்மத்தநிலையுடனுமாய்கடந்த5.8.14அன்றுபின் சிவப்புச் சாயம் பூசிக்கொண்ட வீட்டின் படிக்கட்டில் அமர்ந்திருக்கிறேன்.பெரிதாய் ஏதும்படிக்காத,உருப்படியாய்ஏதும் எழுதிவிடாத பொழுதன்றின் கனத்துடன்/

விட்டில்கள் பரந்தமர்ந்த மரங்கள்மென்காற்றின் ஓசையுடன் சிலிர்த்தெழுந் தும்,சலசலத்துமாய் அசைவு காட்டிய போது சற்றே மென்மையாய் சப்த மிடசெல்போன்எனதுநண்பரும்,தோழருமான நாவலாசிரியர் திரு.பாண்டியக் கண்ணன் அவர்களை அறிமுகம் செய்து விட்டுச்செல்கிறது.

செல் போனுக்குள்ளாய் இருந்து பேசிய பாண்டியக் கண்ணன் அவர்களின் பேச்சுஇப்படியாய் சொல்லிவிட்டுச் செல்கிறது. ”வெளிவந்து விட்டது எனது இரண்டாவது நாவல்.”மழைப்பாறை”முதல் பிரதி உங்களிடம் தர இதோ விரைந்து வந்து கொண்டிருக்கிறேன் தங்களின் இருப்பிடம் தேடி.சற்றே பெரிய மனது பண்ணி பூங்கா அருகில் நில்லுங்கள்”, எனவுமாய் பணித்து விட்டுசொல்றது அவரது குரல்.

சரிதோழர்,தோழர்களும்,நண்பர்களும்நாவலாசிரியர்களும்பணிக்கிற வேலை யை மறுக்க முடியுமா என்ன?சிறிது நேரத்தில் அவர் சொன்ன குறிப்பிட்ட இடம்சென்றுஒரு சிலநிமிடங்கள்காத்திருந்துவிட்டுஅவர் அங்கு வரவுமாய் புத்தகம் வாங்கி வருகிறேன்,கண்கள் பனிக்கவும் மனம் சிலிர்க்கவுமாய்/

”மழைப் பாறை”என நாவலின் தலைப்பு தாங்கிய புத்தகத்தின் அட்டையில் ஒருவயது முதிர்ந்த,பட்டைகள் விரிந்த மரத்தின் பின்னாலிருந்துதன்முகம் காட்டுகிற சிறுவனின் படமும்,மரத்திற்கு கீழாக விளைந்து நிற்கிற சப்பாத் திக் கள்ளிச்செடிகளும்,பச்சைப்பரப்புமாய் தன்னை காட்சிப்படுத்திக் கொள்கி றவெளியும் புத்தகத்தின் உள் செல்ல முன் அனுமதி வழங்குகிறது தாராள மனதுடன்.

புத்தகம் வாங்கி கொண்டு வழக்கம் போல் சிறிது நேரம் பேசிக் கொண்டி ருந்து விட்டு வரும்போதுதான் எதிர்ப்பட்ட நண்பர் ஒருவர் சொல்கிறார். எத்தனை பேருக்கு இப்படியானதொரு பாக்கியம் கைவரப் பெறவும், வாய்க் கவும்பெற்றிருக்கிறது சொல்லுங்கள்,தமிழ் கூறும் நல்லுலகம்அந்த பாக்கிய த்தை தங்களுக்கு அளித்திருக்கிறது.லேசில் எல்லோருக்குமாய் வாய்க்காத து இந்தசெயல்,தொடரட்டும் உங்கள் இருவரது அன்பும், நட்பும், தோழமை யும்,வாஞ்சையும்,,,,,,என சொல்லிச்சென்ற நண்பரின் பேச்சு இந்த நிமிடங் களில் மட்டுமல்ல,நாங்கள் இருவரும் இப்புவியில் நிலைத்திருக்கும் காலம் வரை சத்தியமும் சாத்தியமும்தான் என்கிற நினைப்புடன் ரத்தமும் சதையுமாய் அப்பொழுதான் ஜனித்த ஒரு குழந்தையை இரு கையும் தாங்கி வாங்கி உச்சி முகர்வது போல வாஞ்சையுடன் பார்த்து விட்டு மழைப்பாறை நாவலை வாசிக்க சித்தம் கொள்கிறேன்.


என் போல் இப்பதிவை படிக்கும் அனைவரும் மழைப்பாறை நாவலை வாங்கிபடிக்கஆயத்தப்பட்டால் சந்தோஷம் கொள்ளும் தமிழ் கூறும் நல்லு லகமும்,வி்ளிம்பு நிலை மக்களின் வாழ்நிலை உலகமும். எனச் சொல்லி முடிக்கலாம் இந்தக்கணத்தில் அன்பும்,நட்பும், தோழைமையும் வாஞ்சையு மாய்./    

18 Jul 2014

பூப்பு,,,,,,,,


எனது நண்பரும் தோழரும் விருதுநகர் த,மு.எ க.ச வின் கிளைத் தலைவருமான திரு.பாண்டியக் கண்ணன் அவர்களின் இரண்டாவது நாவல்.... மழைப்பாறை... ஈரோடு புத்தகக் கண்காட்சியில்... விடியல் வெளியீடு...

                                            வாழ்த்துக்கள் தோழர் பாண்டியக்கண்ணன் அவர்களே/ 

30 Mar 2014

விமர்சனமல்ல மனம் தோனியசொற்களாய்,,,,,,



மருந்துதோன்றியாய்உருவாகிபின்மருதோன்றியாய்மருவிஅதன்பின்மருதாணியாய் உருப்பெற்றுஉயிர்ப்பெற்றஒருஉயிர்தாவரமேஇங்குகவிதைப்புத்தகமாய்பூத்திருக்கிறது, “நீவைத்த மருதாணி” என்கிற பெயர் தாங்கி/

பெயரில்என்னஇருக்கிறதுஎன்பதல்ல,பெயரிலும்இருக்கிறது கவிதையும் அதற்கான சந்தமும், சப்தமும்என்பதை நிரூபிக்கிறது புத்தகம்.

சொல்லியசொல்லைவிடசொல்லாத சொல்லுக்குஅடர்த்தியும்அழகும் பரிமாணமும் ஜாஸ்தி தான்என்றாலும்கூட சொல்லாதசொல்லுக்கு விலையேதும் இல்லைதான் என நினைத்தோ என்னவோஎல்லாவற்றையும்சொல்லமுனைந்திருக்கிறார்கவிஞர்.கருணாகரசுஅவர்கள்/

தான் பார்த்தது,படித்தது,கேட்டது, பேசியது,பகிர்ந்துகொண்டதுஎன,,,,,,இந்தமண், மண் கொண்ட மனிதர்கள்,அவர்களின் அன்றாடப்பாடு,பிழைப்பிற்கான அவர்களின் உயிர் அவஸ்தை,,,,,,,,, எனஇன்னும்இன்னுமாய்நிறைய,நிறைய சொல்லிச் செல்கிறஇவரின்நீவைத்தமருதாணி புத்த கத்தைஒரு குழந்தையை கையில் தாங்கி எடுக்கும் பாங்குடனும் மனம் மிகுந்த களி கொள் ளலுடனும் வாரி எடுத்து உள் பிரிக்கையில் ஆ,,,,,அட்டகாசம் என சொல்ல வைக்கிறது புத் த கம்,

அச்சிடப்பட்ட வெள்ளைத்தாள்களை 127 பக்கங்களாய் வரிசை காட்டி காட்சிப் படுகிற இப் புத்தகத்தில் ஒவ்வொருபக்கமுமாய் இருக்கிற படங்களே ஒரு கவிதையாய் காட்சிப்பட்டு விரிகிறது.

அப்படிக்காட்சிப்படுகிற அப்படங்களின் மேல் கையூன்றி சுவர் பிடித்து தன் பிஞ்சுப் பாதம் பதித்து நடை பழகும் குழந்தையின் விடாமுயற்சியுடனும், எளிய பாங்குடனு மாய்நகர்கிற கவிதைகள்ஒவ்வொன்றும்இச்சமூகத்தின்மேல்அக்கறைகொண்டும் இப்புவிப்பரப்பின் அநியா யம் கண்டும்பொங்கி எழும் எண்ணப்பதிவுகளாகவே/

நாம் விழித்துக் கொள்ளும் தருணமிது
இல்லையேல் விழித்துக் கொள்ளும் ஆர்ட்டிக்

என”உலகவெப்பத்தில்”சுழியிடுகிற இவரது கவிதை தொட்டுச்செல்லாத இடப் பரப்பு மிகவும் குறைச்சல் எனலாம்,

”மகிழ்ச்சியை விற்பவர்” என்கிற தலைப்பில் புல்லாங் குழல் விற்பவரின்வற்றியவயிற்றில் இவரதுகவிதைக்கண்பட்டுப்படர்கிறபொழுதுஅவர்வாசிப்பதென்னவோசோகசுரம்தான்.விற்பதோ புல்லாங்குழல் என்கிறார்.

ஒருபெண்ணின்கொலுசொல்தாங்கிய நடை வீணையின் மென்சுரத்தை ஞாபகப் படுத்துகிற து இவருக்கு,நமக்கும் சேர்த்துத்தான் கொலுசொலி கவிதையில்/

அதை நமக்கும்அப்படியே தன் வார்த்தைகளில் பரிமாறுகிற இவர் கை ரேகை பார்ப்பதில் அல்ல கைரேகை தேய்வதில்தான் உன் வாழ்க்கையின் பதிவு இருக்கிறது என்கிறார் கைரே கை கவிதையில்/

அவ்வளவு வலியிலும், உதிரத்திலும் அழுக்கிலுமாய் பிறக்கிற குழந்தை உணர்வு இருண்ட தருணத்தில்பிறக்கிறவெளிச்சம் எனவெளிச்சம் கவிதையின் மூலமாய் சொல்லும் இவர்,,,,,,,

கடவுள் வாழும் கல்லறையில்பறிபோகிறது கற்பு
எனும் செய்தி கேள்விப்படும் பொழுது
இடம் மாறுகிறது என் கோபம்
பூசாரியின் மீதிருந்து கடவுளுக்கு,,,,,,,,
எனச் சொல்லவும் மறக்கவில்லை ”இடம் விட்டு இடம்” கவிதையில்/

நீ பூவை தலையில் வைத்துக்கொண்டாய்,
பூ தன் தவத்தை முடித்துக்கொண்டது
 
எனதவம் கவிதை மூலம் சொல்லிச்செல்கிற இவரால்இத்தேசத்தின்சாகாவரமான  வறுமை குறித்தும்,குறித்தும் பயங்கரவாதம் குறித்தும் வருத்தப்படவும் சாடவும் அதன் முகத்தில் காறி உமிழவும் முடிந்திருக்கிறது.மதிப்பீடுகள்,பயங்கரவாதம் என்கிற இரு கவிதைகள் மூல மா கவும்’/

(வறுமை தின்ற பாரதிக்குவாய்க்கரிசிபோடாத
சமூகம் அவன் கோபத்தை
இன்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது).

இதுஇப்படி என்றால் பால் சுரப்பிஎன்கிற கவிதை கவிதைக்கு தேவையில்லை பொய் வார் த்தை ரத்தமும் சதையுமான எங்களது அகதிகளின்கிழித்துநிர்மூலமாக்கப் பட்ட வாழ்வே வலு எனச் சொல்லிச் செல்கிறது.

நாற்றைபிடுங்கி வேறொரு இடத்தில் நடுங்கள் தயவுசெய்து அல்லது நட அனுமதி யுங்கள் என மறுநடவு கவிதை மூலம் இப்படியாய் பதிவு செய்கிறார் இச்சமூகம் துச்சமென மதிக் கிற திருநங்கைகளை

(எங்களை மதிக்க வேண்டாம்,
உங்களது கால்களை நகர்த்துங்கள்,
உங்களது செருப்பின் கீழ் உயிர் அறுபட்டுக்கிடக்கின்றோம்)

என ஒவ்வொன்றின் அவஸ்தை பற்றியும்அழகுபற்றியும் அதன் தன்மை பற்றியும் அதன் உள்ளீடுகள் பற்றியும் பேசுகிற கவிதையின் அடர்த்தி நிறைய நிறையவாய் சொல்லிச் செல்கிறது,

வானம் வசப்படும்,சகுனம், போருக்குப் பின்,,,,,,,,போன்ற, மனம் நிறைந்த தலைப்புகளிளெல் லாம்கவிதைஎழுதியகவிஞர்கடைசியாய் தான் படித்தபள்ளிபற்றி எழுதிய கவிதையில்
என் நீள் வாழ்க்கை முழுவதும்
நினைவுக்குள் நிற்கும் நிகழிடம்,,,,,,,

மாணவமாணவிகளுக்கு மட்டுமல்ல
மகிழ்ச்சிக்கும் திறந்தே இருக்கும்
அந்த நுழை வாயிலுக்குள் திரும்பத்துடிக்குது மனது,
திரும்ப அழைக்குது வயசு,,,,,,,
என முற்றுப்புள்ளியிட்டு முடிக்கிறார்,இக்கவிதைத்தொகுப்பை/

இதுதவிரஇந்தஇடத்தில் சொல்லப்படாததும் இன்னும் இன்னுமாய் அடர்த்தி தாங்கியும் பய ணிக்கிற, நிறைய பேசியும், சொல்லியும் செல்கிற இவரதுகவிதைகள்வேறுஎங்கோஅமானு சியத்தில்இருந்துஊருவி எடுக்கப்பட்டவைகளாய் இல்லா மல்தன்னைச்சுற்றி நடக்கிற வகை ளையும்,தனக்குநேர்ந்தவைகளைப்பற்றியும்எழுதியிருப்பது இன்னும் அழகாகயிருக்கிறது,

ஆம் அதற்கு ஒரு தனி தைரியம் தேவைப்படுகிறது இன்றைய கவிதை சார் உலகில், நான் இப்படித்தான் இதுதான் என் எழுத்து,நான் சார்ந்தும் வாழ்ந்துமாய் நிற்கிற இச்சமூகத்திற்கா யும்அதில்இருக்கிறவைகளையும்எழுதாமல்வேறெதைஎழுதஎனக்கேட்டு தன்கவிதை தொகுப் பான நீ வைத்த மருதாணி யில் சுழியிட்டிருக்கிற அவரது எழுத்து (கவிதைதொகுப்பு) அனைவராலும் படிக்கவும் பாதுகாக்கப்படவும் வேண்டிய ஒன்று மிகவும் தைரியமாய் சொல்ல முடிகிறது, வாழ்த்துக்கள் கருணாகரசு சார்,எழுதுங்கள் தொடந்து உங்களது எழுத் துக்களை படிக்கவும்ஆதரிக்கவும் என் போன்ற நாங்கள் இருக்கிறோம், எழுத்துதொடர/

தொடர்பிற்கு”
சி கருணாகரசு,
தமிழ் பதிப்பகம்
உ,நா குடிக்காடு,
மணப்புத்தூர் அஞ்சல்
செந்துரை வட்டம்,
அரியலூர் மாவட்டம்-621709
 மின்னஞ்சல் karunakarasu@gmail.com