Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

19 Apr 2020

படர் கொடியாய்,,,,,


எனது இருபத்தி ஐந்தாவது வயது வரை
அவனை நான் சரியாக பார்த்தாய்
எந்தப்பதிவும் இல்லை என்னில்,
அவன் கருப்பா,சிவப்பா,உயரமா,குள்ளமா
இல்லை இரண்டிற்கும் இடைப்பட்டா
அதுவும் தெரியாது.
காற்றுக்கு தகவல் அனுப்பிக்கேட்ட போதும் கூட
அதையே ருசுப்படுத்தி விட்டுச்செல்கிறது,
அநேகமாய் அவனிலும் என்னைப் பற்றி
அப்படித்தான் இருக்கவேண்டும் தகவல்கள்.
நானும் அவனைப்போல ஒரு சாமாயன் தானே,,,?
அவன் ராம் என்கிற ராம்குமார், எனது நண்பன்,
சரக்குக்கும் சால்னாவுக்கும்,சைட்அடிக்கவுமாய்
கிளைத்ததில்லை அவனது நட்பு,
மண்பிளந்து துளிர்த்து இலை விட்டு கிளைபரப்பி
பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய்
நிறை கொ ண்ட மனதிலிருந்து விழுதிறக்கியவன்.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் நடை பெற்ற
எனது சொந்தங்கள் மற்றும் தோழமை நட்பு வட்டாரத்தின்
திருமணங்களில் எனது கலப்பும் சிரிப்பும்
அடையாளப்பட்டிருந்த அடர் பொழுதுகள்/
ஒரு மழை மாதத்தின் இளங்காலைப்பொழுதில்
”வெள்ளென முகூர்த்தம்” என்கிற அடையாளத்துடன்
நடைபெற்ற நண்பனின் திருமணத்தில்
எனக்கு முன்பாய் வந்து நின்றிருந்தான்
அவன் மாப்பிளையின் தோழனாகவும்
,படர்ந்து பட்ட உறவினனாகவும்/
கொஞ்சம் பேச்சு,அதிராத மென் சிரிப்பு,ஆழ்ந்த அமைதி,,,,,
இவைகளுடன் மட்டுமே முடியிட்டு அடையாளப்பட்டிருந்தான்.
மேல் நோக்கி நீட்டுகிற ஒற்றை சுட்டும் விரலின்
பின்னால் போய் அவசரம் காட்டி
ஒழிந்து கொள்கிற பூஞ்சை உடல் அவனது,
ஒட்டி குழி விழுந்த கன்னம்,ஒடுங்கி உள்ளடங்கிய கண்கள்.
ஏறிய நெற்றி,தலையில் நட்டு வைத்தது போலாய்
அலசலாய் இருந்த முடிகள்,
அளவிற்கு மேல் இருந்தால் வலிக்கும் உடலுக்கு
என்பதாலோ என்னவோ மிகச்சொற்பமாய்
எலும்புகளையும்,அதை மூட சதையையும்
கொண்டவனாய்  தெரிந்தான்,
அதனால் என்ன எலும்பும் சதையும் மட்டுமல்லவே உடல்,,,,,?
உள்ளமும், உயிரும், மேலோ ங்கிய உணர்வுகளின்
கலவைதானே உடல்,,,,/
என நெருக்கம் காட்டி பேச விழைந்த நாட்களில்
அவரை ஒருமையில் அழைக்கவும்,
பேசவும் பழகவும் உரிமம் பெற்றிருந்தேன்,
அவன் சென்ற திருமண மற்றும் விஷேச நிகழ்வுகளுக்கு
இவன் சென்றானா இல்லை,
இவன் சென்ற திருமண மற்றும் விஷேச வைபவங்களுக்கு
அவன் வந்தானா தெரியவில்லை.
ஆனால் பெரும்பாலுமாய் இருவரும்
ஒன்றாகவே கலந்து கொள்வோம் திருமணங்களில்,
இத்தனைக்கும் ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு வரை
அவனை யாரென எனக்குத்தெரியாது,
அவனை யாரென நான் அறிந்திருக்கவில்லை.
இது குருவி உட்கார அல்ல,
அவன் உட்கார இவன்  நழுவி விழுந்த கதை,
”ஊரெல்லாம் திருமணம்,விஷேசங்கள்”,,,,,
எனப் போய்க்கொண்டிருக்கிற நீ
உனது திருமணம் எப்போது என பொழுதுகளில்
தன் வாழ்நாளில் அப்படியொரு பாக்கியம்
இனி இல்லை.தனக்கு வாழ்நாள் நீட்டிப்பு
என இனி இருப்பது அபூர்வமே/
உடல் கொண்ட நோய் உதிரம் குடித்து உயிரைப்போக்குவது உறுதி
ஆகவே மறையப்போகும் முன்னாவது,இம்மண்ணின் பரப்பையும்,
அதில் குடிகொண்ட மனிதர்களையும் பார்த்தே ஆக வேண்டும்
என்கிற உந்துதலும்,வேகமும் என்னில் இருக்கிறது,
அது உறை கொள்ளும் நாள்வரை
இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
ஆகவே என் நலம் பற்றி பேசுவதை தவிர் நண்பா,,
என்றவன் உனது அனுமதியுடன்
”இப்போதைக்கு உன் தோளில் கைபோட்டுக் கொள்கிறேன்”
எனச்சொன்னவனை அதற்கப்புறமாய் இது நாள்வரை
திருமணம் மற்றும் விஷேச நிகழ்வுகளில் பார்க்க முடிந்ததில்லை,

17 Feb 2019

வேறெதுவுமாயும்,,,,,,



வேறெதிலும் ஒட்ட முடியவில்லை.

வேறெதையும் சிந்திக்க மறுக்கிறது மனம்

வேறெதிலுமாய் கவனம் கொள்ள முடியவில்லை.


வேறெதுவும் படிக்க ஒப்பவில்லை,

வேறெதுவும் எழுதி விடமுடியவில்லை.

வேறெதுவும் பார்த்து விட முடியவில்லை,

வேறெந்த பக்கமும் போய் விடமுடியவில்லை,

மனைவி மக்களுடனும் அக்கம் பக்கம் மற்றும் உறவுகளுடனும்

எதையும் பேசிக்கொள்ளவோ, பகிர்ந்து கொள்ளவோ

உரையாடிக் கொள்ளவோ மறுக்கிறது மனம்.

டீக்கடைக்காரரிலிருந்து உடன் வேலை பார்க்கிற யாருடனும்

வேறெங்குமாய் பேசிய பேச்சுக்கள் யாவும் உயிரற்றதாய்/

பேசிய பேச்சுக்களிலிருந்து செய்து முடித்த செய்கைகள்

யாவிலும் எதிலும் எந்த ஒட்டுதலுமில்லை.

சாப்பாடு தண்ணீர்,உடை உடுத்துதல் என மற்ற மற்ற

எல்லாவற்றிலும்  குவிய மறுக்கிறது கவனம்,

தூங்க மறுத்து அடம் பிடிக்கிற தொட்டில் குழந்தையாய்

உடலும்,மனமும் சமனப்பட மறுத்து அடம் பிடிக்கிறதாய்,,,/

புல்வாமாவின் உறை பனியில் நாட்டைக் காக்கும் பணியில்

உயிரிழந்த  ராணுவ வீரர்களின்  நினைவு தவிர்த்து

வேறெதுவும்  உயிரற்றதாய்,,,,/

30 Dec 2018

நிமிடங்களும் ,மணியும் மற்றும் நொடிகளுமாய்,,,/

மணியைப் பார்க்கிறாள், சரியாகத்தெரியவில்லை,

எப்பொழுதோ வாங்கிய கடிகாரம், ஏதோ நினைத்து வாங்கியது பிடித்துப் போ னது பின்னாளில்/கேட்கநேர்கிறபாடல்களும் இசையும் படிப்பும் பேச்சும் மனம் ஒன்றிப் போவது போல/

ஆடுகிற பெண்டுலமும் சுற்றி வருகிற சின்னதும் பெரியதுமாய் கைகோர்த் திருக்கிற முட்களும் கூடவே சுற்றுகிற விநாடி முள்ளும் ஞாபகத்தின் கண்க ளில்/

அவளது ஞாபகத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக இருக்கலாம், முக்கோண சைஸில் மாடனாக இருக்கிறது என கணவர் வாங்கிவந்த கடிகாரம்,

கைக்கும் வாய்க்கும் பற்றாக்குறையாய் இருந்த நாட்களில் வாயைக் கொஞ் சம் கட்டிவைத்து விட்டு முன்னூற்றிச்சொச்சம் ரூபாய்க்கு அருகில் போய் வாங்கி வந்த கடிகாரம்,

வாங்கி வந்த நாளிலிருந்து கொடுத்த விலைக்கு வஞ்சனையில்லாமல் தன் உழைப்பை நிறுவிக்கொண்டிருக்கிறதாய்/

இது நாள் வரை பெரியதாய்ரிப்பேர் என எதுவும் வந்ததில்லை,வழக்கம் போல் பேட்டரி மட்டுமே, கடிகாரத்தின் பெண்டுலம் ஆடும் போது சின்ன வயதில் ஊரில் ”புகழையா” வீட்டில் பார்த்த பெரிய சுவர் கடிகாரம்தான் ஞாபகத்திற்கு வரும்,

ஒடுக்கமான நீள சைஸ் மரப்பெட்டிக்குள் அடைபட்டுக்கிடக்கிற கடிகாரத்தின் டயலும் சின்னதும் பெரியதுமான முட்களும்அதன் கீழே ”டிங் டாங்,டிங் டாங்,,,”என யார் சொல்லவும் தேவையில்லாமல் ,வலதும் இடதுமாய் அழகு காட்டியும்,தன் நேரம் காட்டியுமாய் ஆடிக்கொண்டிருக்கிற பெண்டுலத்தைப் பார்க்கிற பொழுது அதன் நுனிபிடித்து ஆடலாம் போலத் தோணும்,

கொஞ்சம் நேரம் அந்த வீட்டின் வாசலில் நின்று கடிகாரத்தை அண்ணாந்து பார்த்தவளாய்திறந்தவாய்மூடாமல் நின்று கொண்டிருக்கிறசமயமாய் வீட்டுக் காரர் புகழையா வந்துவிடுவார்,

”என்னகண்ணுகளாகடிகாரத்தப்பாத்தீங்களா,சரிபாத்ததுபோதும்,போய்வெளை யாடுங்க, கடிகாரத்த வேடிக்க பாக்குறதுல என்னஇருக்குபெரிசா,,? வெளையா ண்டாலாவது ஒடம்பு வேர்க்கும்,ரத்த ஓட்டம் நல்லாஇருக்கும், ஒடம்பும் மனசும்சுறுசுறுப்பாகும்,செய்யிறவேலை,படிக்கிறபடிப்புஇன்னும்நல்லாயிருக்கும், நல்ல மார்க் எடுக்கலாம், நல்ல பிள்ளை ன்னு பேர் எடுக்கலாமுன்னு ஒரு தன்னம்பிக்கை வரும்,எதையும் சாதிக்கலாம்ன்னு ஒரு முனைப்பு வரும், அதெல்லாம் வரும் போது நீ இப்பய விட இன்னும்நல்லா வருவ, அதுக்கான வழி எதோ அதப்பாக்குற விட்டுப்புட்டு இப்பிடி கெடிகாரத்த தெறந்த வாய் மூடாம பாத்துக்கிட்டிருந்தா என்ன கெடைக்கும் சொல்லுங்க,எனக்கு ஆடு மாடுதா பொழப்பு,பேட்டையில ரெண்டு கெடைக்கும் மேல ஆடுகளும்,அஞ்சி மாடுகளும் நிக்குது,அத விட்டுட்டு நான் கடிகாரத்த பாத்துக்கிட்டு இருந்தே ன்னு வையிங்க ஏங் பொழப்பு அம்பேல்தான்,பாக்குற நேரம் பாத்துட்டு அப்பிடி யேமத்தசோலிகளுக்குதாவிப்போயிறணும்,அதவிட்டுட்டு,,,போங்க, போங்க,,,” என பொதுவாய் சொல்லி விரட்டி விடுகிறஅவரின் வார்த்தைகள் இப்பொழுது ஞாபகம் வருகிறதாய்,/

ஆனால் அவர் போல் சொன்னால் கேட்பதற்கு பிள்ளைகள் ரொம்பவும் குறைச்சலாகி விட்டார்கள்.

இவளதுமகனும்கடைசி வீட்டுக்காரியின் பிள்ளையும் கிரிக்கெட் விளையாடப் போவதுகொஞ்ச ஆறுதலாய் இருக்கிறதுதான்,

தெரு முழுக்கவுமாய் இருக்கும் எட்டு பிள்ளை களில் இரண்டு வீட்டுப் பிள் ளைகள் மட்டும் வெயிலில் விளையாடும் பொழுது தெருவே கொஞ்சம் கேலி யாய்த்தான் பார்க்கும்,

“பேசாம டீ வி,கேம்ஸ்ஸீ கம்ப்யூட்டரு, இண்டர்நெட்டுன்னு,,,,இருக்குற விட்டு ட்டுவெளையாட்டு,வேர்வை,ஒடம்பு,மனசு,ஆரோக்கியமுன்னுபேசிக்கிட்டு,,,,,,  வேலையில்லாம” என்பார்கள்,

ஆனாலும் கேலி பேசியவர்களின் வீட்டுப்பிள்ளைகள் என்றாவது ஒரு நாள் இந்த இரண்டுடன் கை கோர்த்தும் மனம் கோர்த்துமாய்/

லைட்டைப் போடலாம் என எழுந்திரிக்க எத்தனிக்கிற மனதை உடல் சுமை யும் மனச்சுமையும் ஒரு சேர அழுத்தி உட்காரவைத்து விடுகிறது,

எழுந்து கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு பாத்ரூம் போய் வந்தால் தேவ லாம் போல் இருந்தது,

குளிர்காலம் ஆரம்பித்ததிலிருந்து சரியாக தண்ணீர் குடிப்பதில்லை, தாகமும் எடுப்பதில்லை, தாகம் எடுக்கவில்லையே என தண்ணீர் குடிக்காமல் விட்டு விட்டால் உடல் சூடாகிப் போகிறது,

நேற்று மதியம் ஒரு மணி போல் இருக்கும்,கண்களில் கட்டிய நீர் மாலை ஐந்து ஆறு மணி வரை தண்ணீராய் சுற்றிக்கொண்டே நின்றது, கவனமூன்றி எந்த வேலையையும் செய்ய முடியவில்லை.

“உடல் சூடுதான் ,இளனி குடித்தால் சரியாகிப்போகும் என்ற கணவனை ஆமா நீங்க என்னமோ ரெடியா என்னைய கூட்டிக்கிட்டுப்போற மாதிரிதாம் பேசுவீ ங்க, சும்மானாச்சும் அந்த வேலை ,இந்த வேலை இருக்குன்னு வண்டியத் தூக்கிட்டு அலையிவீங்களே ஒழிய வீட்டுலயே கெடக்காளே ஒருத்தி அவள கடைகண்ணிக்குகூட்டிக்கிட்டுப்போனோம்.ஏதாவதுரெண்டுவாங்கிக்குடுத்தோமுன்னு இல்லை, என்னமோ நாந்தான் இப்ப ஆம்பளமாதிரி எதுக்கெடுத்தாலும் தனியா போகணுமாம், தனியா வரணுமாம்,வீட்டுக்குத் தேவையான ஜாமன் கள வாங்கிக்கிறணுமாம்,என்னமோ சொன்னாப்புல இல்ல இருக்கு,

“என்னதான் வீட்டச்சுத்தி கடைக இருந்தாலும் கூட நாங்க போயி தனியா நின்னு கொஞ் சம் யெளைப்பாறி ஒக்காந்து நாலு பேச்சு பேசிக்கிற அளவுக்கு எங்கயாவது டீக்கடையோ,இல்ல காப்பி பாரோ,இல்ல வேற ஏதாவது இருக்கா சொல் லுங்க, இதுல தணியா போயி எளனி சாப்பிடுன்னா எங்கிட்டுப்போயி சாப்புடுறது,பத்துஆம்பளைங்கநிக்குறயெடத்துலஅப்பிடியெல்லாம்போகணுமுன்னா ஒன்னு கூச்சத்த உதுத்துட்டுப்போகணும்,இல்ல,நான் ஒங்களிலும் தைரியமா னவன்னு காண்பிச்சிக்கிற மனசு வாய்க்கணும்,இது ரெண்டும் எனக்கு இல்லாத போதுநான் எங்கிட்டுப்போயி எளனி சாப்புட, பஜாருக்குப் போறன் னைக்கு தேர் முட்டிக்கிட்ட குடிச்சாத்தான் உண்டு”என சப்தமிடுபவளை கைய மர்த்தி விட்டு அமைதியாய் சிரிப்பான்,நீ சொல்வதெல்லாம் வாஸ்தவம் தான்” என/

லைட்டைப்போட்டவள்மணியைப்பார்க்கிறாள்,மூன்றாகியிருந்தது,சிறிதுநேரம் கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள் பாத்ரூம் போய் விட்டு வந்து பாயில் அமர்ந்தாள்.

சிதறிக்கிடந்தது வீடு.அவளைப்பொறுத்த அளவில் வீடு என்பது கணவனும் பிள்ளைகளும்தான்,

கணவனின் அருகிலேயே பிள்ளைகள் இருவரும் படுத்திருந்தார்கள், சின்ன வள் எப்போதும் அவன் அருகில்தான் படுப்பாள்,பெரியவலை தனியாகப்போய் ரூமிற்குள் படுக்கும்படி இவள் சபதமிடுவாள்.

”ஏன்அப்பிடிச்சொல்றபடுத்தாபடுத்துட்டுப்போகட்டும்விடுஎன்பவனைமுறைத்தவளாய் அவஇன்னும்சின்னப்புள்ளைன்னு நெனைப்பாக்கும்” ஒங்களுக்கு” என்பாள்.

திரும்பவுமாய்கடிகாரத்தைப்பார்த்தவள்எரிந்து கொண்டிருந்தலைட்டைக்கூட அணைக்கத் தோணாமல்உட்கார்ந்திருந்தாள்,

வட்ட வடிவத்திற்குள்ளாய் சுற்றிய சின்னதும் பெரியதுமான முட்கள் தன் துணைக்கு விநாடி முள்ளையும் கைகோர்த்துக் கொண்டு சுற்றியது போல் பட்டது.

”முள்சுற்றம்மா முள் சுற்று, நேரம் காட்டலாம் முள் சுற்று,நிமிடம் காட்டலாம் முள் சுற்று, வஞ்சகமில்லாமல் முள் சுற்று ,எல்லோருக்கும் காட்டி முள் சுற்று,,,, என எனவாய் பலவாறாய் பாடிக்கொண்டே சுற்றியதாய் பட்டது அவ ளுக்கு,/

சின்னமுள்ளும் பெரியமுள்ளும் அதன் கூம்பு வடிவிலான முனைகளும் தன் கண்களிலிருந்துசொட்டுகிற நீர் கூம்பு வடிவ முனையில் துளியாய் தொங்கிக் கொண்டிருப்பது போல பட்டது.

ஒற்றைத்துளியில் அர்த்தம் பட்டுப் போகிற கணங்கள்.வாழ்நாள்முழுவதும் தன்னை தொடர்ந்து கொண்டிருக்கிறதுதான்.

சம்மனமிட்டு அமர்ந்து கொண்டிருந்தவள் கடிகாரத்தின் முட்கள் தன் கூர் முனைகொண்டுமனம் குத்துவதாய் கற்பனை செய்து கொள்கிறாள்.

இப்பொழுதெல்லாம் தன் மீதே தனக்கு அதிகமாய் கழிவிறக்கம் பிறந்து விடுகிறதுதான். சம்பந்தா சம்பந்தமில்லாமல் கண்களில் நீர் துளிர்த்து விடுகி றது,இல்லையானால் கண்களில் குளம் போல் நீர்கட்டிவிடுகிறது, வயதாகிப் போனதாலும் உடல்தள்ளாமையினாலும்வந்த பிரச்சனையே ,,/என தனக்குள் ளாய் சொல்லிக் கொண்டாலும் கூட கழிவிரக்கம் ஏற்படுவது கூடிக்கொண்டே போகிறதுதான்,

யாராவது ஒரு விஷயத்தில் ஏதாவது சொல்லி விடும் போதோ இல்லை மென் கருத்தாய் ஏதாவதொன்றை தெரிவித்து விடும் போதோ படக்கென பொங்கி விடுகிறது கண்ணீர்,

“என்னம்மா இது ஏன் இப்பிடி ,ரொம்ப உணர்ச்சி வசப்படுறயாநீ, முன்னயெல் லாம் இப்பிடி இருக்கமாட்டயே இப்ப ஏன் இப்பிடி,,,?என கணவன் தலை கோதுகிற கணத்தில் அவன் அப்படிக்கணத்தில் அவன் மார்பில் சாய்ந்தழுகத் தோன்றியது,அதை உணர்ந்தவகானவோ என்னவோ அவனும் அவளை தலை சாய்த்துக்கொள்ள அனுமதித்தவனாயும் மனம் கோதுகிறவனாயும்/

கடிகாரத்தை அண்ணாந்தவளாய் உட்கார்ந்திருந்தவளின் தலையை கோதிய கை கணவனின் கையாய் இருந்தது.

”என்ன இது ஏன் இப்பிடி அத்துவானமா ஒக்காந்துருக்க” என்றவன் அவள் தலை சாய்த்து முத்தமிட்டுவிட்டு அவளது மடியில் படுத்துக்கொள்கிறான்,

இது போலாய் விழிப்புத்தட்டிவிடும் அத்துவானங்களில் அவள் மடி மீது அவனும்,அவன் மடி மீது அவளுமாய் தலைசாய்த்துக்கொள்வார்கள்/ 


                                                                   பாகம் 2

ஆபரேஷன் பண்ணியதிலிருந்து தான் இப்படி ஆகிறது,அதற்கு முன் இப்படி யெல்லாம் இல்லை,

ராகுலன் டாக்டர்தான்ஆபரேஷுன்பண்ணினார்,ஆபரேஷன் பண்ணச்சொல்லி யோசனை சொன்னவரும் அவர்தான்.

என்ன இது வழக்கமில்லாத வழக்கமாய் இருக்கிறதே,சிசேரியன் பண்ணுவது வரை கேள்விப்பட்டிருக்கிறாள்,ஆனால் ஆபரேஷன் பண்ணி கர்ப்பப்பையை எடுப்பது இது நாள் வரை இவள் அறியாததும் கேள்விப் படாததுமாய் இருக்கி றதுதான், ஒரு வேளை வளர்ந்து வருகிற மருத்துவ விஞ்ஞானத்தை அறியாத வளாக இவள் இருக்கிறாளே என்னவோ,,,?

கர்ப்பப்பையை அகற்றுவது நினைத்துப்பார்த்தாலே கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது,”இதுல என்ன இருக்குடீ இவளே,ஒனக்கு வேணுமுன்னா இது புதுசா பெரிசா தெரியலாம்,பெரிய பெரிய ஊர்கள்லயெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமா தெனத்துக்கும்யாராவது ரெண்டு பேருக்கு கர்ப்பப்பைய எடுக்குற ஆபரேஷன் பண்ணிக்கிட்டுதான் இருக்குறாங்க,ஒனக்கு என்னைக்கி தோது இருக்குமுன்னு சொல்லு, போயி பண்ணிக்கிட்டு வந்துரு., கூடவே வேணு முன்னா நான் வந்து இருக்கேன் ,எனக்கு ஒண்ணும் பெரிய அளவுல வீட்டுல வேலைககெடையாது.புள்ளைங்கரெண்டும்பள்ளிக்கொடம்போனதுக்குஅப்பறம் துணிமணிகள தொவைச்சிட்டு சும்மா டீ வி பாத்துக்கிட்டுதான் இருக்கப் போ றேன்,அந்த நேரம் ஓங் கூட ஆஸ்பத்திரியில வந்து இருந்துட்டுப் போறேன் என்றார்.ஒனக்கும்ஒருஆறுதலா இருக்கும்,எனக்கும்ஒருமனதிருப்தி, தெரிஞ்ச வங்களுக்கு ஒரு உதவி பண்ணுனேன்னு இருக்கும் என்ற அக்கா நீ இவ்வளவு தூரம் யோசிக்கிறதப்பாத்தா இப்பதைக்குள்ள ஆபரேஷன் பண்ணிக்கிற மாதிரி தெரியலடீ,

“போன வாரம் எங்க சொந்ததுல ஒரு அம்மாவுக்கு இப்பிடித்தான் ஆகிப் போ ச்சி,காலையில டாக்டர் கிட்ட ஆலோசனை கேக்கப்போனாங்க ,அன்னைக்கி சாயங்காலமேஆபரேஷன்பண்ணுறக்குபோய்ஆஸ்பத்திரியில சேந்துட்டாங்க, ஒனக்குன்னாபரவாயில்ல,அவுங்களுக்கெல்லாம்ரத்தப்போக்குஅதிகமாவரும், வந்துச்சின்னாநிக்காது,ஒனக்காவதுகொஞ்சம் நின்னு நின்னு வருமுன்னுல்ல சொல்ற,அவுங்களுக்குஅப்பிடிக்கெடையாது,வந்துக்கிட்டேஇருக்குமாம்,அப்பிடியான நாட்கள்ல வீட்டுல ஒரு மூலையில ஒரு சாக்க மடிச்சிப்போட்டு ஒக்கா ந்துருவாங்க,ரெண்டுஉள் பாவடை கட்டீருப்பாங்க,அது நனைஞ்சி சேலை நனைஞ்சி சாக்கு நனைஞ்சி போற அளவுக்கு இருக்கும்,“பாக்குறதுக்கு நமக்கே பயமா இருக்கும்,

“அந்தக்காவப்பாக்கும்போது நானெல்லாம் சாமியக்கும்புட்டுக்கிருவேன், ”சாமி எனக்கெல்லாம் இப்பிடி ஒரு நெலைம வந்துருக்கூடாதுன்னு, அந்த நாட்கள்ல அவுங்களப்பாக்க ரொம்ப பாவமா இருக்குமுக்கா,ஒடம்பெல்லாம் வெளுத்துப் போகும்,கை காலெல்லாம் நடுக்கமெடுக்க ஆரம்பிச்சிடும், சத்து யெழந்து போயி ரொம்ப வீக்கா ஆயிருவாங்க,ஒடம்பெல்லாம் நடுங்கிப் போகும், சமயத் துல அப்பிடியே மயங்கி சரிஞ்சிருவாங்க/

ஏதாவதுசாப்புட்டே ஆகணுமுங்குறதுக்காக வம்படியா சாப்புடுவாங்க, சமைய லறைக்கிப் போயி நான்தான் சாப்பாடு போட்டுக்கொண்டு வருவேன், அவுங்க வீட்டுக்காரரு வேலைக்கிப் போயிருவாரு,புள்ளைங்க ரெண்டும் பள்ளிக் கொட த்துக்கு போயிருங்க,அந்தக்கா கூட சொல்லுவாங்க நீயி எதுக்கு ஓங் வேலை களப் போட்டுட்டு வந்து ஒக்காந்துகிட்டு இருக்க,போயி நீயி ஓங் வீட்ட கவனி, எனக்காக எதுக்கு இங்க வந்து ஒக்காந்துக்கிட்டுன்னுவாங்க,நாந்தான் இருக்கட்டுமுக்கா இத விடஎன்ன வேலை பெரிசா இருந்துறப்போகுது, அப் பிடியே இருந்தாஇருந்துட்டுப்போகுது.அந்தவேலைகள எப்பவேணுமின்னா லும் செஞ்சிக்கலாம்,ஆனா ஒங்களுக்கு இது போலான நாட்கள்லதான ஒதவ முடியும்?நான் ஒண்ணும் ஒங்க ஒடம்புக்கு இப்படி இருக்கு அப்பிடி இருக்கு ன்னு தெருவுக்கு ள்ளயோ இல்ல யெசக்கேடாவோ யாருகிட்டயும் போயி சொல்லீற மாட்டேன், ஏன்னா என்ன பேசுனா என்னவா உருமாறி நிக்கு முன்னு நல்லா தெரியும் எனக்கு/ அதுனால நான் எதுவும் யார்கிட்டயும் ஒங்க ஒடல் நெல பத்தி பேசவோ சொல்லவோ மாட்டேன்க்கான்னு சொன்னாத்தா அவுகங்களுக்கு கொஞ்சம் மனசாறும்,

”அப்பிடியேசொன்னாலும் கூட அந்தக்கா அத பெரிசா எடுத்துக்குற மாட்டாங்க விடு ஊர் ஒலத்துல யாருக்கும் வராத ஒண்ணா எனக்கு வந்துருச்சி, சொல் றவுங்கசொல்லட்டும்,பேசுறவுங்கபேச்சட்டும்இப்பஎன்ன கொறைஞ்சி போச்சி, சொல்லுன்னுசமாளிச்சிக்கிறுவாங்கமனவருத்தத்தவெளியிலகாட்டிக்காம/அந்தக்கா வீட்டுக்காரரு பாவம் கொத்தனாரு வேலைக்கிப் போறாரு,மாசம் பூரா அவுங்களுக்கு வேலை இருக்குமுன்னு சொல்ல முடியாது,கெடச்சன்னைக்கி போயிக்கிற வேண்டியதுதான்,அவரு கொஞ்சம் நல்ல வேலைக்காரருங்குற தாலயும் ஏதாவது சின்னவேலைக்கி கூப்புட்டாக்கூட போயி செஞ்சி குடுக்குற தாலயும் மாசத்துல இருபது நாளைக்கி கொறையாம வேலை கெடைச்சிரும், அதுனால முடிஞ்ச அளவுக்கு லீவு போடாம வேலைக்கிப் போயிக்கிருவாரு, போன மாசம் இப்பிடித்தான் அவரு வேலைக்கிக் கெளம்பிப் போறன்னைக்கி காலையில சமைலறையில வேலை செஞ்சிக்கிட்டிருந்த அந்தக்கா திடீர்ன்னு மயக்கமாகி விழுந்துட்டாங்க,வேலைக்கின்னு கெளம்பி வீட்டு வாசல் வரைக் கும் வந்த அந்த மனுசன் புள்ளைங்க சத்தம் போட்டதக் கேட்டு என்னன்னு ஓடிப்போயி பாத்துருக்காரு,மயங்கி கீழ விழுகும் போது சமையலறை மேடை தலையில அடிச்சி ரத்தம் வந்துக்கிட்டு இருந்துருக்கு, ஒடனே கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு ஓடிருக்காரு,அந்தக்கா நல்ல நெலைமையில இருந்திருந்தா அவுங்கள வண்டியிலயே ஒக்காற வச்சி கூப்புட்டுக்கிட்டு போ யிருப்பாரு,அன்னைக்கி வேற வழியில்லாமஆட்டோவுலதான் கூட்டிக்கிட்டுப் போனாரு,பக்கத்துவீட்டுக்காரப்பையந்தான்ஆட்டோக்கார தம்பி,அது அன்னை க்கி ஆட்டோவுக்கு காசு கூட வேணாமுன்னு சொல்லீருச்சி,

“ஆஸ்பத்திரியில யெறக்கி விட்டுட்டு இவுங்களுக்காக வெயிட் பண்ணிக் கிட்டு நின்னுக்கிட்டு இருந்துருக்கான்,இல்ல நீ போ தம்பி நாங்க வண்டியில வந்து ரோமுன்னுசொல்லீட்டுஅந்தக்காவஆஸ்பத்திரியில ஒக்காறவச்சிட்டு ஆட்டோ வுலயே வீட்டுக்கு வந்து புள்ளைங்கல ஸ்கூலுக்கு அனுப்பீட்டு இவரும் வண்டி எடுத்துக்கிட்டு வந்து அந்தக்காவ கூப்புட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்தாரு, அப்பிடிஅவுங்க வண்டியில ஜோடியா போறதுல ஒரு சூட்சுமம் இருக்கு, அப்பி டியே வண்டியில போயி ஏதாவது ஒரு கோயிலுக்குள்ளயோ இல்ல கூட்டம் அதிகமில்லாத ஒருஹோட்டலுக்குள்ளயோ போயி அவுங்க வாட்டுக்கு டீயோ காபியோ டிபனோ சொல்லீட்டு ஒக்காந்து மணிக்கணக்குல பேசிக்கிட்டு வருவாங்க,

”சும்மாசொல்லக்கூடாது ரெண்டு பேரும் வண்டியில ஜோடியா போகும் போது பாக்கணும் ,ஊரு கண்ணே பட்டுரும் போலஇருக்கும், அந்தண்ணங்கூட கொஞ் சம்சுமாராதான்இருப்பாங்கபார்வைக்கி,ஆனாஅந்தக்கா அவ்வளவு லட்சணமா இருப்பாங்க பாக்குறதுக்கு, சும்மா சாதாரணமாஒரு பூணம் சேலையத்தான் கட்டிக்கிட்டு வெளியில போவாங்க, பாக்குறதுக்குதொடச்சி வச்ச செல மாதிரி பளிச்சுன்னு இருப்பாங்க, பெரிசா ஒண்ணும் மேக்கப்பு,பவுடர் பூச்சுன்னு இருக் காது, தலைக்கி ஒரு மொழம் பூ கூட வச்சிக்கிற மாட்டாங்க,தலை முடிய அள்ளிச்சீவி பின்னாடி விட்டு முடிய லூசா விட்டு முனியில மட்டும் ஜடை பின்னி போட்டுருப்பாங்க, பாக்க அவ்வளவு அமைப்பா இருக்கும்,ஒல்லியான ஒடம்பு,கொஞ்சம் வளத்தியா இருப்பாங்க,லட்சணமான ஒடம்புவாகு, பாக்கப் பாக்க அவ்வளவு நல்லா இருப்பாங்க,சமயத்துல அவுங்க குடும்பத்தோட எங்கிட்டாவது போயிட்டு தெருவுக்குள்ள நொழையும் போது அப்பிடியே கை யெடுத்துக் கும்புடணும் போல இருக்கும். ஏங் வயசுக்கு இது நாள் வரைக்கும் இப்பிடி ஒரு குடும்பத்தப்பாத்தது இல்ல,எங்கிட்டோ பெரிய யெடத்துல பொற ந்துருக்க வேண்டியவுங்க,தப்பி இங்க வந்து பொறந்துட்டாங்க,

”சமயத்துல எனக்குக் கூட கொஞ்சம் பொறாமையா இருக்கும் அந்த மாதிரி வேளைகள்ல அவுங்கள பாக்கும் போது/

”அத அவுங்க கிட்ட சொன்னமுன்னா அடபோ அங்கிட்டு நீ ஒண்ணு வேலை யில்லாம,அழகுலட்சணமுன்னுட்டு,,,,ஒடம்புபடுத்துறபாட்டுக்கு”,என்னஇருந்து என்னசெய்ய,,,நானெல்லாம் இல்லாதவதான இல்லாதவ என்னைக்கும் பொல் லாதவதானன்னு சொல்லுவாங்க,,,போனமாசம் ஏதோ ஒரு விஷேச நாளு வந்துச்சில்ல,அன்னைக்கி இவுங்க குலதெய்வம் கோயிலுக்குப் போறதுக்காக மொத நாளு புளியோதரை ,தயிர் சாதமுன்னு ரெடி பண்ணிக்கிட்டு இருந்தா ங்க ,பொங்கல் வைக்க எங்க வீட்டுலதான் பொங்கப் பானை வாங்குனங்க, எல்லாம் ரெடி பண்ணி சாமி கும்புட சாமானெல்லாம் வாங்கி வச்சி ஆட்டோ வுக்குக் கூடசொல்லி வச்சி ரெடியாகி காலையில இத்தனைமணிக்கு கெளம் புறதுன்னு பேசி முடிவு பண்ணி ராத்திரிக்கு படுத்துட்டாங்க, காலையில எந்திரிக்கும் போது அந்தக்காவுக்கு எப்பயும் வர்றது போல ரத்தப்போக்கு வந்துருச்சி,அன்னைக்கி மட்டும் அந்தக்கா அழுத அழுகை இருக்கே நம்ம ஏரியா மொத்ததுக்கும் பத்தாது ஆமா,நா போயி சொல்றேன், அந்தக்கா வீட்டுக் காரரு சொல்லிப்பாக்குறாரு அழுகைய நிறுத்த மாட்டேங்குறாங்கு றாங்க அந்தக்கா, இல்ல ஏதோ சாமி குத்தம் இருக்கப்போயிதான் இந்த மாதிரி ஆகிப் போச்சி,நான் இந்த வீட்டு ராசி இல்லாதவ,என்னைய ஊசி போட்டு கொன்னு ருங்க,நான் வாழ லாயக்கில்லதவன்னு என்னென்னமோ பேச ஆரம் பிச்சிட் டாங்க, எனக்குன்னா ரொம்ப தர்ம சங்கடமாப்போச்சி ,அந்தக்காவப் பாக்கு றேன்,அந்தண்ணனப்பாக்குறேன்.மாறிமாறி ரெண்டு பேரையும் பாத்துக் கிட்டே இருக்கும் போது அந்தண்ணே படாருன்னு நீதாம்மா எனக்கு குலசாமி, ஒன் னைய விட எனக்கு யாருன்னு சொல்லுன்னு வீட்டு வாசல்ல வந்து நின்ன ஆட்டோவ அனுப்பிச்சிட்டு புள்ளைங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பீ ட்டு அந்தக்கா கூடயேவீட்டுள்ளயேஇருந்து அந்தக்க மனசுக்கு ஒத்தடம் குடுத்தாரு மனுசன். எதுக்குமே கலங்காத அந்தண்ணன் அன்னைக்கி ரொம்ப கலங்கிப் போனாரு/

”அதெல்லாம் பாக்கும் போது நீயி எவ்வளவோ பரவாயில்லைன்னு நெனைச் சிக்க,” என்பாள் அந்தக்கா./

ரத்தப்போக்கு அதிகமாய் இருந்த நாட்களில் யார் யாரிடமோ காண்பித்து விட்டு கடையில் ராகுலன் டாக்டரிம் தான் சென்றாள்,

முன்பெல்லாம்பீரியட்டைம்வந்தால் மூன்று நாட்களில் சரியாக நின்றுவிடும், மிஞ்சிப்போனால் மூணரை நாள்,சமயா சமயங்களில் இரண்டரை நாட்களில் நின்றுபோவதும்உண்டு,அது எப்பொழுதாவதுதான். நிரந்தரம் இல்லை,

ஆனால் இப்பொழுது ஒரு வருடமாகவே இப்படித்தான் ,ஒன்று நான்கைந்து நாட்களுக்குப் போகிறது, இல்லையென்றால் மூன்று நாட்களில் நின்று விட்டு அடுத்த பதினைந்து நாட்களிலேயே வந்து விடுகிறது,அதுவும் ரத்தப்போக்கின் அளவும் கொஞ்சம் கூடுதாலாகவே தெரிகிறது,

முதன் முதலாய் இப்படி ஆன போது இவள் பலசரக்கு வாங்கும் கடைக் கார ரின் மனைவியிடம்தான் பகிர்ந்து கொண்டாள்,

அவள்தான்சொன்னாள்,”என்னசெய்யக்கா, இப்படித்தான் இருக்கு, என்னைக்கி பொம்பளையா பொறப்பு எடுத்தமோ அன்னைக்கே இதெல்லாம் தாங்கிக்கிற வேண்டியதுதான், எனக்கும் இப்பிடித்தான் இருந்துச்சி,நானும் படாபட்டுத் தான் போனேன்,என்னசெய்யசொல்லுங்க,சாப்புடாத மாத்திரையி ல்ல, பாக்கா த வைத்தியமில்ல,கடைசியில ஒடம்புபுண்ணானதுதான்மிச்சம், கடைக்கி காய்கறிவாங்கவந்தஒருத்தங்கதான்சொன்னாங்க,இந்தமாதிரிராகுலன்டாக்டர் கிட்டப்போயிப்பாருன்னு.இப்பஅவருபாத்தவைத்தியமும்குடுத்தமாத்திரையும் தான் ரத்தப் போக்க கொஞ்சம்கட்டுக்குள்ளகொண்டு வந்துநிப்பாட்டிருக்கு.

ஆனா அவர்சொல்றாரு, இதுக்கெல்லாம் ஒரே வழி ஆபரேஷன் பண்ணுறது தான், வேறவழியில்லையா கேட்டா இல்லையின்னு சொல்லி அழகா சிரிக் கி றாரு,

“ஆனா நான் இன்னும் ஆபரேஷன் பண்ணிக்கல, கையில காசு இல்ல,கடை வருமானம்,கடைக்கும் குடும்பத்துக்கும் காணாமாப்போகுற அளவுல நிக்கும் போது எங்கிட்டுஆபரேஷன்பண்ணிக்கிறதுசொல்லுங்க, பாத்துக்கலாமுன்னு விட்டாச்சி,

“இப்பதைக்கிமருந்துமாத்திரைன்னுமட்டும்ஓடிக்கிட்டுஇருக்கு,சமயத்துலரத்த
ப்போக்குரொம்பஇருக்குறன்னைக்கிபேசாமாவீட்டுக்குள்ளயேஇருந்துகுருவேன், தானாசரியானப்பெறகுவந்து கடையிலஒக்காந்துருவேன்என அவள் சொன்ன நாளில் டாக்டரிடம் போய் ஆபரேஷன் பண்ண நாள் குறித்து விட்டு வர வேண் டியதுதான் என முடிவெடுக்கிறாள்/

27 Dec 2018

சுழல் நகர்வுகள்,,,,,

தூக்கம்பிடிக்கவில்லைமனோகரிக்கு,புரண்டுபடுக்கிறாள்,மல்லாக்கப் படுத்துப் பார்க்கிறாள்,கால்களுக்குள்கையைவைத்தவாறுஇருக்கிக்கொண்டுபார்க்கிறாள். எது செய்தும் பலனினில்லாமல் போகவே எழுந்து அமர்கிறாள்,

படுத்திருந்த பாயில் நீட்டிக்கொண்டிருந்த சின்னதான கோரைக்குச்சி கால் பாதத்தின் அருகில் குத்தியது., தடவி விட்டவாறே எழப்பார்க்கிறாள், சலனம ற்றஅமைதி, வீடு முழுவதுமாய் போர்வையாய் போர்த்தியிருந்த மென் இருள், மேற்குப் பார்த்த ஜன்னல் வழியே புகை போல் வந்த வெளிச்சம் லேசாய் திறந்திருந்த ஜன்னல் கிராதியையும் ஜன்னலின் விளிம்பையும் நனைத்துக் கொண்டு வீட்டினுள் புக யத்தனித்தோஅனுமதி கேட்டோ நின்றது ஜன்னல் கிராதியிலிந்து உதிர்ந்த பூ ஒன்றுடன்/

இரவு சாப்பிட்ட உணவு நெஞ்சிலேயே நின்றது,பிள்ளைகளும் கணவரும் சாப்பிட்டது போக மிச்சமிருந்த சோறில் எண்ணை ஊற்றிசாப்பிட்டாள், நல்லெ ண்னைஇல்லை,கடலெண்ணெய்தான்ஊற்றிக் கொண்டாள்,தொடு கறி எதுவும் இல்லை,எலி கறும்பியது போல் யாரோ தின்று விட்டு வைத்திருந்த அரை தேங்காய்ச்சில்இருந்தது,காலையில்தான்கடையில்வாங்கியிருந்தாள்,கடைக் காரர்தான் சொன்னார்,”சோத்துக்குத் தொட்டுக்க தேங்காய்ச்சில்லு வாங்குற ஒரே ஆளு நீங்களாத்தான் இருப்பீங்கக்கா, ஏங் வயசுக்கும் அனுபவத்துக்கும் இப்பிடியெல்லாம் பாத்ததும் இல்ல, கேள்விப்பட்டதும் இல்லக்கா”,என்றார் சிரித்துக்கொண்டே/

வீட்டுக்காரர்தான்சாப்பிட்டிருக்க வேண்டும்,

சின்னவயதுபழக்கம்,இப்பொழுதுதீடீரெனபோஎன்றால்எப்படி,,,?பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்ததும் ஏதாவது தின்ன வேண்டும் போல் இருக்கிறவள் நேரடியாய் சமையலறைக்குள் புகுந்து கொஞ்சம் பொரி கடலை,கொஞ்சமாய் கடிக்கப்பட்ட தேங்காய்ச்சில்,பச்சை மிளகாய் சின்னதுண்டு என வாயில் போட்டுமென்று கொண்டே சிறிது நேரம் வீட்டிற்குள் வலம் வருவாள்,அவளது அம்மா கூட வைவாள்,”கொஞ்சம் உப்பையும் ரெண்டு கறி வேப்பிலையையும் சேத்துப்போட்டையின்னா தாளிச்சா மாதிரி ஆகிப் போகுமில்ல” என்பாள்,

அம்மாவின் பேச்சிற்கு சிரித்துக்கொண்டே ஓடிவிடுவாள்,

அப்பொழுதுசிரித்தசிரிப்புஇப்பொழுதுதன்வசமிருக்கும்அரிசி,பருப்பு,அரசலவில் இருந்து தேங்காய்ச்சில்லை மட்டும் எடுத்துக்கொள்ள வைத்துக்கொண்டிருக் கிறது இத்தனை ஆண்டுகள் கடந்தும்.

இரவு சாப்பிடும் போதே வீட்டுக்காரர் சொன்னார்,நாங்களெல்லாம் சாப்புட் டோம் இனி நீதான் சாப்புடணும்,கொழம்பு கொஞ்சமாத்தான் இருக்கு,நீ வேணு முன்னா ஊத்திக்க நான் தண்ணி ஊத்தி சாப்புட்டுக்குறேன் என்றார், இல்லை வேணாம் நான் சாப்புடகொஞ்சம் நேரமாகும் ,நீங்க சாப்புட்டு படுங்க என்ற வளின் அருகில் வந்தவர் அவளது முகப்போக்கை கவனித்தவராய் இரு என இருவருக்குமாய் சாப்பாடு போட்டுக்கொண்டு வந்து தட்டுகளை அருகில் வைத்தவர் இருந்த கொழம்ப ஒனக்கு ஊத்திருக்கேன்,நான் தண்ணி ஊத்தி சாப்புட்டுக்கிறேன் என்றவர் அவள் அருகில் அமர்ந்து வெண்மை படர்ந்த முடிகள் கலைந்திருந்த தலையை மென்மையாய் கோதி விட்டவாறு நெற்றி யில் முத்தம்மிட்டார்,

“சும்மா இருங்க ,இத்தன வயசுக்கு மேல போயிக்கிட்டு,புள்ளைங்க முழிச்சிக் கிட்டா மானக்கேடு என்றவள் அவரின் தோளில் சாய்ந்து கொண்டாள்.இப்ப மட்டும் புள்ளைங்க முழிச்சிக்கிறாதாக்கும், கிறுக்கி” என்றவர் ”முழிச்சா முழிச்சிப்பாக்கட்டுமே என்ன இப்ப கொறஞ் சிறப்போகுது விடு” என்றவாறு பிசைந்து வைத்த சோற்றை அவளுக்கு ஊட்டி விட்டார்,அவரது தோளில் சாய்ந்து கொண்டே சாப்பிட்டவள் அவரது தோள் மீது கொஞ்சம் சிந்தினாள், சிந்தாமசாப்புடு என லேசாக அவளது தலையில் தட்டி விட்டு அவரும் சாப்பி ட்டார்.

சாப்பிட்ட இடத்திலேயே தட்டில் கையை கழுவி விட்டு அப்படியே படுத்து விட்டாள்,எழுந்துலைட்டைப்போட்டவள்மணியைப்பார்க்கிறாள்,மணிமூன்று, கணவர் ஆழந்து தூங்கிக் கொண்டிருந்தார்,பிள்ளைகள் இருவரும் ஆளுக்கு ஒரு மூலை என தூங்கிக் கொண்டிருந்தார்கள்,கல்லூரியின் இளங்கலையும் முதுகலையுமான இருவரும் படித்து முடித்துத்தூங்க கொஞ்சம் தாமதம் ஆகியிருக்கும், ஆனால் கணவர் தூங்க எப்படியும் ஒரு மணிக்கு மேல் ஆகியி ருக்கும்.பரிட்சைக்குப்படிக்கிற பிள்ளைகள் கூட தோற்றுப் போகும் போல, அவ்வ ளவு படிக்கிறார்,அவ்வளவு பார்க்கிறார், அவ்வளவு கேட்கிறார்,எதற்கு இதெல் லாம் உதவப்போகிறது எனத்தெரியவில்லை,எனச்சொல்லும் போது படிப்பது வீணல்ல என்பார்.

அவர் சொல்வதும் உண்மை தான்,தெள்ளத்தெளிவான சிந்தனையோடும் ,செயலோடும்தான் இதுநாள்வரை இருக்கிறார்,அதற்க்காகவாவது அவரது படிப்பு அவருக்கு கை கொடுக்கட்டும். என்கிற ரீதியில் அவரை இடைஞ்சல் செய்வ தில்லை.

நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவர் எழுந்து விட்டார் மனோகரி லைட்டைப் போடவும்/ ”என்ன இந்நேரத்துக்கு என அருகில் வந்தவர் அவளது தலையை வாஞ்சையுடன் வாரிக்கொடுத்தவர் ஒடம்பு இப்ப எப்பிடி இருக்கு அசதியா இருக்குன்னு சொன்னியே சரியாயிருச்சா” என கேட்டார்,

“சரியாகுறது என்ன பெரிசா சரியாகுறது,நீங்க நாலு தடவை இப்பிடி கேட்டீங் கன்னாலேசரியாயிரும்” என்றவாறு கணவரது தோளில் சாய்ந்து கொள்கிறாள் மனோகரி/

”என்ன மதுரைக்காரம்மா நல்லாயிருக்கீங்களா என்கிற சப்தம் கேட்டுத்தான் திரும்பிப் பார்ப்பவளாகிப் போகிறாள் அவள், உள்ளபடிக்கும் அவள் எந்த ஊர் என்பது இவனுக்குத் தெரியாது,பின் எப்படி மதுரைக்காரம்மா என்கிற துணைப் பெயரைஅவள் மீது ஒட்டினான்எப்பொழுது ஒட்டினான் என்பது சரியாக ஞாபக மில்லை.ஊர் மீது வந்த உறவோ இல்லை,இல்லை எதன் மீது ஆன ஞாபகப் பிசகோதெரியவில்லை,ஒருவேளைவயதானதால்வந்தஞாபகதடுமாற்றமாய்க் கூட இருக்கலாம்,

எதானால் என்ன,,? கண் முன் பார்த்து பேசி பழகிய ஒருவரின் ஊர் பற்றிய ஞாகபத்தடுமாற்றம் அவளைப் பற்றி பெரிதாக நினைவின் அடுக்குகளில் பதிந் து வைத்துக்கொள்ளவில்லை என்கிற அர்த்தத்தைதானே விதைக்கிறது” என இவனுக்குள்ளாய் இவனாய் சொல்லிக் கொள்வதுண்டு இது போலான சமயங் களில்/

இவன் வேலை பார்க்கிற அலுவலகத்தில் ஒரு நாள் தற்செயலாய் பார்த்தது தான்,அப்பொழுது இவனின் பேச்சையும் அதிலிருந்த மிதம் மிஞ்சிய வாஞ்சை யையும் கண்ட அவள் எப்பொழுது அலுவலகம் வந்தாலும் அவனைத்தேடித் தான் வருவாள்,

பக்கத்து இருக்கைக்காரர் கூட கேட்பார் கேலியாக ”எண்ணண்ணே எப்ப வந்தா லும் அந்தம்மா ஒங்களத்தேடித்தான்வர்றாங்க,ஏன் எங்களையெல்லாம் பாத் தா அந்தம்மாவுக்கு ஆளாத் தெரியலையாமா என சிரித்துக்கொண்டே சொல் பவர்அந்தம்மாவுக்குமதுரைபோலஇருக்கு,எப்பப்பாத்தாலும்மதுரைமதுரைண்ணேபேசுவாங்க” என பேசிக்கொண்டிருந்த ஒரு நாளில் வந்த அந்தம் மாதான் வந்த வேலையை கொஞ்சம் சீக்கிரம் முடித்துத்தர இயலுமா என்றும், கொஞ்சம் தாமதமானால் பஜார் வரை போய் விட்டு வந்து விடுகிறே ன் எனவுமாய் சொன்ன அவளை “கொஞ்சம் நேரம் ஒக்காருங்க,இதோ சொடக்குப் போடுற நேரத்துலமுடிச்சிக் குடுத்துருறோம்வேலைய”எனச்சொன்னஇவனை ஏறிட்ட பக்கத்து இருக்கைக் காரர் ”என்ன சார் இது அந்தம்மா எப்ப வந்தாலும் கால்ல வெந்நித் தண்ணி ஊத்திகிட்டுதான்வர்றாங்க,நீங்களும்அவுங்கஅவசரத்துக்குஏத்தாப்புலநடந்துக் கிறீங்க,ஏன் சார் அப்பிடி”? என அவரிட்ட கேள்விக்குறியை மனதில் வாங்கிய வர் ”அப்பிடியில்லசார்,நம்ம பாடு என்னன்னு அவுங்களுக்கு தெரியாது,ஆனா அவுங்கதேவைவந்தவேலையசீக்கிரம் முடிச்சிட்டு போகணும்ங்குறது மட்டும் தான்.அத நம்ம முடிஞ்ச அளவுக்கு நிறைவேத்திக் குடுப்பமே  என்ன இப்ப கொறைஞ்சிறப் போகுது,,?” என்ற போது அவர் கடகட வென சிரித்தார்,

அவரது சிரிப்பில் குடிகொண்டிருந்த அர்த்தம் ஆயிரங்களை விதைத்து சென் றதாய்,அப்படித்தான்அவள் மதுரைக்காரம்மா என அறிமுகமாகிறாள் இவனுக் கு.

அன்றிலிருந்து இன்று வரை அவள் மதுரைக்காரம்மா தான் இவனுக்கு, எப்பொழுதாவது பஜார் அல்லது இது போலான பொது வெளிகளில்பார்க்க நேர்கிற போது இப்படித்தான் அழைத்துக் கொள்கிறான்.

பஸ்ஸை விட்டுஇறங்கியதும் நேராய் சந்து கடைக்கு போய் விடுவான் டீக் குடிக்க,

அதென்ன சந்துக்கடை, நல்லாயிருக்கு ஞாயம் கடைக்கின்னு ஒரு பேரு வேணாமா இப்பிடியா சந்து கடை பொந்து கடையின்னு பேரு சொல்லிக்கிட்டு போயி டீக்குடிப்பாங்க என்பார்கள். இவன் வீட்டில் பிள்ளைகளும் மனை வியும்,/

உண்மையில்அந்தக்கடையின்பெயர்ஆனந்தன்டீக்கடை,வைத்திருந்தபிளக்ஸ் போர்டு இத்துப்போய் பெயர் அழிந்து போன பிறகு கடைக்காரர் அதை மாற்றி வைக்க முயற்சிக்கவில்லை,

கேட்டதற்கு ”இருக்கட்டும் பேரு என்ன பேரு பெரிசா வாழுது,அதான் நீங்க ள்லாம் சொல்றீங்கில்ல சந்து கடைன்னு,அது போதாதா,அந்தப்பேரே அடையா ளமாகிப் போச்சி,நெலைச்சும் நின்னுருச்சி,இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்க”,என்பார்,

அவரது கடையில் மெலிதாக ஒலித்துக்கொண்டிருக்கும் சினிமாப் பாடல்களு க்கு அவர் உயிர் கொடுத்து நிறுத்துவார்.

கை தூக்கி உயர்த்தி ஆற்றுகிற டீக்கு உயிர் இருக்குமானால் டபராவிலிருந்து எழுந்து வந்து இவருடன் கலந்து இசையை ரசிக்க ஆரம்பித்து விடும்,

கடையின் உள்ளிருந்து கேட்கிற பாடல்கள் டீக்குடிக்க வருவோர் கவனத்தை முழுமையாய் ஈர்த்து விடுவதுண்டு,சில பேரானால் பாட்டுக்கேட்டுக் கொண் டே இரண்டு டீகூட குடித்து விடுவார்கள்,

”ஏன்பா ஒனக்கென்ன எள வட்டமுன்னு நெனைப்பா, வயசாகிப்போச்சி,இனி என்னவாம் ஆட்டம் பாட்டம், ரசிபுன்னுக்கிட்டு என்கிற வர்களின் கிண்டலுக்கு ஒடம்புக்குத்தான வயசு, மனசுக்கு என்ன அது இன்னும் துள்ளிக்கிட்டுதான் கெடக்குதுன்னு வையிங்களேன்” என்பவர் டீ என்று சொல்லிவிட்டு திரும்பும் முன் டீக்கிளாஸை முன்னால் நீட்டி விடுவார்,

“எண்ணண்ணேநீங்க,நான் வருவேன்னு எற்கனவேபோட்டுவச்சிருந்தீங்களா”  என்றால்,,,கடகடவென சிரிப்பார்,

”எப்பவும் போலத்தான் போட்டேன்,நீங்கதான் ஏங் வேகத்த வேடிக்கை பாக்குற ஆளாவும் அத சுட்டிக் காட்டி பேசுற ஆளாவும் வேற இருக்கீங்களா,அதான் ஒங்க தலை தெரிஞ்சதும் சட்டுன்னு ஒரு வேகத் தயாரிப்பு” என்பார்.

“ஏன்கிட்ட இருக்குற மிகப்பெரிய சொத்து இதுதான்னு நெனைக்கிறேன், அத முடிஞ்சஅளவு எத்தன வயசு வரைக்கும் வச்சி காப்பாத்த முடியுமோ காப்பா த்திக்கிற வேண்டியதுதா,இப்ப வயசு அம்பத்தி அஞ்சு ஆகுது, இனி என்ன கொஞ்சகாலம்இதே வேகம் இருக்கணுமுன்னு நெனைக்கிறேன்,பாப்போம் எது வரைக்கும் ஓடுதுன்னு/” என்பார் கேலி பேசிக்கொண்டும் டீப்போட்டுக் கொண்டுமாய்/

கூடவே கடையின் உள்ளிலிருந்து ஒலிக்கிற பாடல்களுக்கு தலையசைத் தவாறும் இசையின் லயங்களில் கரைந்தவராயும்/

அப்படியான ஒரு கரைதலுக்கு ஆட்பட்டவராய் அவரும் அந்தகரைதலின் கரைகளில் நின்று கொண்டே நீச்சல் அடிப்பவர்களில் ஒருவனாய் இவனும்,/

இவன் போன்ற இன்னும் பலருமாய் இருக்கும் வரை சந்துக் கடையில் டீயும் பிஸ்கெட்டும் கரை கடந்து ஓடும்,என நினைத்துக் கொண்டிருந்த நாளன்றின் ஒரு மாலை வேளையில் மழை விடாது பெய்து கொண்டிருந்தது,

பூமிக்கும் வானத்திற்கும் நட்டு வைத்தவெள்ளிக்கம்பிகளாய் நெசவிட்டிருந்த மழை தண்ணீர் தன் விருப்பம்கொள்ளுமளவுக்கு பெய்து தீர்த்டு விடலாம் என முடிவு கட்டிக்கொண்டிருந்தது போல் அடர்ந்திருந்த வானம்பிடிவாதம் காட்டி தன் விடாது தன்னை பதிவுசெய்தகொண்டிருந்ததாய்/

சாலையில்விரைந்துகொண்டிருந்த சைக்கிள்க்காரர் சைக்கிளை ஓரம் கட்டி விட்டு டீக்கடையோரம் ஒதுங்கினார்,

இப்பொழுதெல்லாம்சாலைகளில்சைக்கிளைப்பார்ப்பதுஅபூர்வமாகிப்போகிறது, பத்து இரு சக்கர வாகனங்களுக்கு மத்தியில் ஒரு சைக்கிளை பார்ப்பது அபூர்வமாகிப் போகிறது,

போன வாரத்தின் கடைசி நாளில்தான் வீட்டில் நின்ற சைக்கிளை விற்கக் கொடுத்து விட்டு வந்தான்.

இரு சக்கர வாகனம் இருந்ததால் சைக்கிள் மிதிப்பது குறைந்து போனது என இவன்தான் வம்படியாக வாங்கிப் போட்டான்.

ஆனால் நீண்ட நாட்களாகவே வெறும் காட்சிப்பொருளாகவே வீட்டில் நின்றி ருந்தது பொறுக்காமல் விலைக்குப்போட்டு விட்டான்,

”சும்மாவே நின்னா எப்பிடி,,?ஏதாவது ஒரு வேலையின்னா ஆத்திர அவசரத் துக்கு வண்டிய தூக்கீட்டுதான் ஓடுறோம்,இதுல இது வேற எதுக்கு பாரமா” என்றான் சைக்கிளை கடையில் விற்கப்போட்ட நாளன்று,

இப்பொழுது இது போன்று சைக்கிளை பார்க்கிற நாட்களில் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்கிற ஆசை திரும்பவுமாய் முளை விடுகிறது.

பார்ப்போம்எதுநிலைக்கிறதுஎன ,இரு சக்கரவாகனமா,சைக்கிளாஎன மனதில் நினைத்தவனாய்மழைஓய்ந்தபின்கிளம்பிப்போனான்.டீக்கடைக்காரர்இவனுக்காய் பாடவிட்ட பாடலைக் கேட்டவாறே/

கடையின் முன்னால் இருக்கிற புங்க மரத்திற்கு தண்ணீர் ஊற்றுகிறாரோ இல்லையோ தினமும் இசை ஊற்றி வளர்க்கிறார் போலும்/மரத்தின் வளர்ச்சி யிலேயே தெரிந்தது அது.

”ஐய்யைய்யோ சார், ஒங்களப்பாக்கலையில்ல,நல்லாயிருக்கீங்களா எனக் கேட்டவள், டாக்டர் கிட்ட வந்தோம்.பேத்தியாளுக்கு ஒடம்புக்கு முடியல என அருகில் நின்றிருந்த சிறுமியைக் காட்டினாள்.

அவளை பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த இவனிடம் நாலாப்பு படிக்கிறா, பார்வைக்கு ஒண்ணாப்புபடிக்கிற புள் ளையப் போல இருப்பா,அவுங்க அம்மா அப்பா இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க, அவங்க ரெண்டு பேரும் மில்லு வேலைக்குப் போறதால ஏங்கிட்டதான் வளருறா,நானும் ஊட்டிஊட்டிதான் வளக்குறேன்,ஆனாலும் தேறுவேனாங்குறா, அது ஒண்ணுமில்ல மூணாப்பு படிக்கிற வரைக்கும் அவங்க அம்மா அப்பாகிட்டதான் வளந்தா,

அவஅம்மாகாரி என்ன செய்வான்னா வாரத்துக்கு ரெண்டு தடவை மாவரை ச்சிவச்சிட்டுதினம்காலையிலையும் நைட்டும்தோசையா ஊத்திக் குடுத்துருக் கா, மதியம்தான் புள்ளைகளுக்கு ஸ்கூல்ல சோறு போட்டுறாங்கள்ல, அது னால சாப்பாட்டுல அதையே வழமையா கொண்டு வந்துட்டா,

காலையிலயும் இராத்திரிக்கும் தோசை,மதியத்துக்கு ஸ்கூல் சாப்பாடுன்னு ஆகிப்போகுது.

நம்மளப்போலபெரியாளுகளுக்கேஒருதடவைசாப்புட்டதஇன்னொரு மொறை சாப்புட்டா ஒரு மாதிரி இருக்கு.பாவம் சின்னப்புள்ள என்ன செய்வா, இப்பிடித்தான்சாப்புட்டும் சாப்புடாம தேவாங்கு மாதிரி இருக்கா பாத்துக்கங்க, என்றாள்,

பாரிய உடல் மாநிறம்,களைத்து போனமுகம்,அடர் கலரில் அவள் கட்டியிரு ந்த சேலை அவளை ஒட்டிய நிறத்திற்கே/

களைந்துபோனகேசத்தை ஏனோ தானோவெனவாரிமுடிந்திருந்தாள். நெற்றிக் கிட்டிருந்த பொட்டு கொஞ்சம் இடம் பிசகி அமர்ந்திருந்ததாய்/

அவசரமும்பரபரப்புமாய் நின்றிருந்த அவள் வியர் வையை சேலை முந்தா னையால் துடைத்தவாறே பஸ்ஸீக்கு நேரமாச்சி வர்றேன் சார் எனக் கிளம்பு கிறாள். தூரத்தில் பஸ் வெளிச்சமிட்டவாறு வந்து கொண்டிருந்தது,

2 Oct 2018

வடிவெடுப்பு,,,,,,

  பூப்பதெல்லாம் –சிறுகதைகள்                                       விமலன்

நூல் : பூப்பதெல்லாம்,,,,,,
ஆசிரியர் : விமலன்

மின்னஞ்சல் : vimalanperali@gmail.com
மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி
மின்னஞ்சல் : sraji.me@gmail.com
வெளியிடு : FreeTamilEbooks.com
உரிமை : Creative Commons Attribution-Non-commercial-No Derivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.



                                                 பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “பூப்பதெல்லாம் epub” Poopthellam.epub – Downloaded 15 times –
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “பூப்பதெல்லாம் mobi” Poopthellam.mobi – Downloaded 4 times –
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “பூப்பதெல்லாம் A4 PDF” Poopthellam_A4.pdf – Downloaded 40 times –
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “பூப்பதெல்லாம் 6 inch PDF” Poopthellam_6_inch.pdf – Downloaded 17 times –


Send To Kindle Directly


பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/Poopthellam6Inch/
புத்தக எண் – 451

13 Apr 2018

நெசவு கூட்டி,,,

 
  அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்,,,

15 Jan 2018

மின்னிதழாய் உருவெடுத்து,,,,

                                    

         எனது முதலாவது மின் நூல்,,,,,,,,

29 Aug 2016

அஞ்சலி,,,



இன்று அதிகாலை சாலை விபத்தில் சங்கை
திருவுடையான் மரணமடைந்தார், இது போலான காலத்தின் அடையாளமானவர்களின் மரணம் மிகவும் கொடுமையானதாகவே,,,/

அவர் பாடிய பாடலே அவருக்கு அஞ்சலியாக,,,/


பாடலைக்கேட்க,,,,,
http://asunam.blogspot.in/2016/03/aathaa-un-sela.html

ஆத்தா உன் சேல -

இசை : ----- பாடல் : ஏகாதசி

குரல்கள் : கரிசல் திருவுடையான்

ஆத்தா உன் சேல - அந்த
ஆகாயத்தப் போல
தொட்டில் கட்டித் தூங்க
தூளி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க
அப்பனுக்கு தல தொவட்ட
பாத்தாலே சேத்தணைக்கத் தோணும் - நான்
செத்தாலும் என்னப் பொத்த வேணும்
செத்தாலும் என்னப் பொத்த வேணும்

( ஆத்தா உன் சேல...

ஆங்... இடுப்புல கட்டிக்கிட்டு நீச்சல் பழகினதும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
வெறுந்தர விரிப்புல நான் படுத்துக் கெடந்ததுவும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
இறக்கென காயும் போது வானவில்லா தெரியும்
இத்துப்போன சேலையில் உன் சோகக்கதை புரியும்
கஞ்சி கொண்டு போகையிலே சும்மாடா இருக்கும் - நீ
சேலகட்டி இறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்
சேலகட்டி இறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்

( ஆத்தா உன் சேல...

அக்கா கட்டி பழகினதும் ஆடு கட்டி மேச்சதுவும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
வெக்கையில விசிரியாகும் வெயிலுக்குள்ள குடையாகும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
பொட்டிக்குள்ள மடிச்சு வெச்சேன் அழகு முத்து மாலை
காயம் பட்ட வெரல்களுக்கு கட்டுப்போடும் சேல
மயிலிறகா உஞ்சேல மனசுக்குள்ள விரியும்
வெளுத்த சேலத்திரி வெளக்குப் போட்டா எரியும்
வெளுத்த சேலத்திரி வெளக்குப் போட்டா எரியும்

( ஆத்தா உன் சேல...

22 Apr 2016

சொல் நதிகள்,,,,

இச்சி மரம் சொன்ன கதை  (நூல் விமர்சனம்)
             
சொற்கள் கசிந்துருகி பிரவாகமெடுத்தோடும் நதியின் போக்கில் உருண்டோடு ம் கூழாங்கற்கலாய் உரைநடைகள் வாழ்வின்சுழற்சியில் திசைகள் தோறும்/

அலைவுரும்அனுபவத்தின்அத்தனையையும்அள்ளியெடுத்துபின்னிமுடிக்கப் பட்டகருங்குழலைப்போல்மொழிகளின்மயிரிலைகள்,காற்றில்மிதந்தபடியிரு க்க,கற்பனாபுரவியிலேறி,புழுதிபறக்கவார்த்தைக்கூட்டங்களை,மனித பாஷை களை, குலக்குறிகளை, மொழியாளுகையால் வசிகரமாய், பதிவுருத்தி சென்ற தின் நீட்சி,,,,புராணமாய்,இதிகாசமாய், காவியமாய், இலக்கியமாய்,கலையா ய், நம் முன், விரிந்து பரந்து கிடக்கிறது.

அதுகாற்றின்திசையில்சென்றுவார்த்தை ஜாலங்களில், மொழியாளுகையில் இலக்கிய பிரதிகளில் எழுதிக் கொண்டேயிருக்க,இதோ விமலன் என்ற மூர்த்தி (எளிய உரை நடைக்காரர்) அவரும் வாழ்வியல் கோட்பாடுகளை அதன் தீர்க்கதரிசனங்களை, தர்க்கங்களை, பரஸ்பர மனித உறவுகளை, மனங் களின் உள்ளிருந்தும், வெளியிலிருந்தும், அருகாமையிலும், தொலை தூரமா யும், கேட்ட, பார்த்த, நுகர்ந்த நொடிகளையும், உபாதைகளையும், நுட்பமாய் உணர்ந்து கடக்கும் உத்தி கதைகளில் உறைந்திருக்க வைத்திருக்கிறார்/

‘’சொல்லூக்கி’ (முதல் கதை,,,,,,,)

மரணச் செய்தியை வழக்கமாக்கியபடி எழுபது வயது தோழனோடு கடந்தி ருந்த நாட்கள், அவரின் மரண படுக்கையில் கசிந்திருந்த கடந்த காலங்கள் படிமமாய்வழிந்தோடி கால்தழுவிடதொழிற்சங்கதோழனாய் அதன்இயக்க பணிகளில்இயங்கியபசுமையானநாட்களை வால்போஸ்டரிலும், பசையிலும், நகரின் மையத்தில் கம்பீரமாய் வீற்றிருக்கும் தேரடி உணவு விடுதியில் ருசித்துச் சாப்பிட்ட பூரியிலும் டீயிலுமாய் வைத்து விட்டுபேசி விவாதித்த மார்க்ஸியசத்தையும், சோசலிஸத்தையும் மரண ச் செய்தியின் வழியாக பயணிக்க வைத்திருக்கிறார்/

பாதம்தழுவும்கூந்தல்பாய்விரிக்கும்கூந்தல்,காற்றில்சுழன்றுசுருளும் சுருண்ட கார்குழல்பின்னிருமுகங்களில்தம்பூராமீட்டும்கூந்தல்முனைஆரத் தழுவிடும் போதுஆடவனைமூடிமறைக்கும்கூந்தல்,நல்லபாம்பும் சாரையுமா ய் பிணைந் திருக்கும் கூந்தலுக்குள்சடையாகமறைத்திருக்கும் வசீகரமான கூந்தல்கள். இவைகளில்ஒன்றைகொண்டஇளம்பெண்ஒருத்தி பேராலி கண்மாய் மடை குழியில் அகப்பட்டு புதிய நீரில் மூழ்கடிக்க பட்டுஅமிழும்போதுகூந்தல்அழகு மட்டுமல்ல, ஆபத்தும் தான் என்பதை ‘’இச்சி மரம் சொன்ன கதை’’யில் சொல்கிறார்.இது யாரும் சொல்லாத கதைதான்.

அந்த கதையை படித்த கனம் முதல் பெண்களின் கூந்தலை பார்க்கும் போதெல்லாம் மடைக்குழி விழுங்கிய அப்பெண்ணின் வாதை அவளின் மரண குரல் செவிகளில் ஒலித்தப்படி இருக்கிறது.

நீர்தேங்கும் இடமெங்கும் இன்னும் குமிழிட்டப்படி உடையும் நீர் குமிழ் களில் கூந்தலின் மயிரிலைகள்,மிதந்துச் செல்வதும் பேராலி கண்மாயில் மட்டு மல்ல நீர் தேங்கும் இடமெங்கும் கருத்து விரிகிறது.

கூந்தல் நறுக்கி புருவம் திருத்தி புஜத்தில் புரளும் அரைகுறையாக கூந்தல் வளர்க்கும் நாகரீக பெண்கள் முன் ஜாக்கிரதையாய் தெரிந்தா லும், இன்று கிராமங்களின் கண்மாய் நிரம்பி வழிகிறதா? நீர் சுழன்று ஓடுகிறதா? மடைக் குழிகள் நீண்ட கூந்தலுக்காக வாய் பிளந்துள்ளதா? என்ற கேள்விகள் தொக்கியபடி இருக்கிறது.

இன்றைய இளம் பெண்கள் நீண்டு விரிந்த கூந்தலோடு, நீர் பரப்பில் தக்கை யைப் போல் மிதந்துச் செல்ல இருக்கிறார்களா? நவீன குளியலறையில்மலர் மேனியில் பூத் தூறலில் உடல் நனைப்பதும், பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் கோதிஉடலபிஷேகித்துக்கொள்வதுமாய்இந்நொடிகள் கடந்திருக்க, இச்சிமரம் சொன்ன கதை யாரும் சொல்லாத கதையாக வரலாற்றின் விடுப்பட்ட பக்கங்களில் பதிவுருத்தபடவேண்டியவை.

வாங்கிய கடனை திருப்பி தரும் நல்லொழுக்கம் எத்தனை பேருக்கு இருக்கும். ஆயிரமாயிரம்கோடிகளைவங்கிகளில்பெற்றுஅதைபன்னாடுகளில் பதுக்கி விட்டு தப்பி ஓடிடும் பெருந்தனக்காரர்கள், ஒரு புறம், சில லகரத்தில் கலப்புஏர் விசை வாகனம் வாங்க வங்கியில் கடனாக பெற்ற விவசாயியை, அங்கீகாரம் பெற்ற ரவுடிகள், மூலம் அப்பாவி விவசா யியை அடித்துஉதைத்து பறி முதல் செய்வதும் மறு புறம்.நம் நாட்டில் புரை யோடிப் போன கலாச்சாரம்.

ஆயிரமாயிரம் பெண்களின் கிளர்ச்சியறிந்து பொன் வைக்குமிடத்தில் பூவைப்பதாய் பட்டு புடவைகள் வாங்க இயாலாமல், பூ போட்ட சேலை கள் தன் மனைவிக்கும், மகளுக்குமாய், கடனாக பெற்று தரும் குடும்ப தலைவனின்பொறுப்பு.அதை கடனாக தருகின்ற ஜவுளிக் கடை உரிமை யாளர். அந்த கடனை கன்னியமாய் அடைக்கும் மாத சம்பளகாரர். என எல்லோரும் தத்தமது இடத்திலிருந்து விலகாமல் நேர்மையாக செய லாற்றுவதும், மகள் கல்லூரியில் உடன் படிக்கும் மாணவன் ராக்கிங் செய்தபோது அவனை எதிர் கொள்ளும் தன் மகளை பாரட்டும் தந்தை அதை தட்டிக் கேட்கும் அம்மா என குடும்ப உறவின் முடிச்சுகள் மிக சாதுரியமாக அவிழ்த்தப்படி செல்கிறார் சிறு கதை ஆசிரியர்.

ஆனால் காலந்தோறும் நிகழும் சம்பவங்களை ஒரு சிமிழுக்குள் அடக்கும்  ஒரு நாள் ஒரு பொழுது தலைப்பு பொறுத்தமற்றதாய் படுகிறது.

மனுதர்மத்தின்கொடூரகரங்கள்மனித உடல்களை தழுவி நிற்கிற போது அதே உடல்கள் பூத உடல்களாக உருமாறும் போது விலங்குகளின் வகைகளில் ஒன்றாகதான் மடிந்த மனிதயினத்தை பார்க்கிறது. தீண்டாமை என்பது இழி நிலையினர்களுக்கு மட்டுமல்ல. பார்ப்பண பிணத்தி ற்கும்உண்டு என .மனுவின் தர்ம சாலையில் வகுக்கபட்ட கோட்பாடு.

கஸ்தூரி ருதுவாகி தீட்டாக வீட்டில் இருக்கும்போது அவளின் தந்தை சுப்புராம் பிணமாக தூக்கி வரப்படும் துயரம் சொல்லி மாளாத துயரம்.

சுப்புராம் வாழ்வு முடிந்த தீட்டு, கஸ்தூரி பருவ மாற்றத்தால் உருவான தீட்டு என மனு வகுத்த கொள்கை இந்த எளிய மக்களுக்கு எப்படி கற்றுத் தந்தி ருக்கிறது.

தன் கையடக்கத்தில் அன்பு மகளை வாஞ்சையோடு உச்சி முகர்ந்து கை பிடித்து இந்த உலக சூட்சுமத்தை கற்றுத்தந்த முதல் ஆசிரியன் தந்தை.அவன் மடிந்தப்போது அவனருகில் ஆசுவாசமாய் அமர்ந்து ஒரு துளி கண்ணீரோ, மனதில் தேங்கி நிற்கும் அழுகையையோ வெளிப் படுத்தவிடாமல்தடுக்கும் சமூகம். அதற்கு அவர்கள் சொல்லும்காரணம் சமஞ்சவபிணத்துக்குபக்கத்தில் இருக்க கூடாதுதென்று. இந்த உலகுக்கு முதன் முறையாக அறிமுக படுத்தி யவன், தன் ரத்தத்தில் பாதியை தாரை வார்த்து வளர்த்த தந்தை அருகில் இருந்தால் நோய் வாய் படும் என எந்த அறிவியலும் சொல்ல வில்லை. இது மநுவின் கொள்கை அது காலந்தோறும் மனித மணங்களில் பரவி வளர்ந்த புற்று நோய்.

சாஸ்திரமும், சம்பிரதாயமும், புரையோடிப்போன சமூக வலையில் சிறு பூச்சி களாய் சிக்குண்டு தப்பி பிழைக்க வழியின்றி அல்லாடும் மனி த மனங்கள் இருக்கும்இதேவேளையில் சாதி,மதம்,கடந்து வெற்று முகத் தாட்சணைக்காக மட்டும் சுப்புராம் என்ற பிணத்தை அண்டை வீட்டில் வைத்து சாஸ்திரம், சம்பிரதாயத்தின்படியும் அவர்கள் குல வழக்கப்படி யும் அனைத்து விதமான காரியங்களையும்செய்திடஅனுமதிக்கும்அண்டை வீட்டாரின்மனித நேயம் இதே சமூகத்தில்இருப்பதைஉணர முடிகிறது.

ஆண்டாண்டு காலமாய்ஒரே ஊரில், ஒரே தெருவில் ரத்தமும், சதையுமாக உறவாடி மறைந்த ஒரு மனிதனை அதே ஊரில், அதே தெருவில் பிணமாக தூக்கி செல்கிறபோது, ஒவ்வொருவர், வீட்டின் வாசல்களில் ஒரு குவளை தண்ணீர் தெளித்து தீட்டை விலக்குவதாக நம்பும் இக் காலத்தில் அண்டை வீட்டில்சுப்புராமை பிணமாக கருதாமல் நம்மோடு ஒட்டி உறவாடி சென்ற ஒரு உயிர் அது. என்பதை மட்டும் மனதிலேந் திடும். பரந்தமனமுள்ள, ஈரம் இன்றும்காயாததை கரிசத்தரையில் உணர முடிகி றது.

புவிக்கோலம் சதா கொதி, கொதித்து வெடித்து சிதறி மூன்று பகுதிகள் நீராக வும், ஒரு பகுதி நிலமாகவும் உருமாறி இயக்கமானது. நிலத்தின் பெரும் பகுதி நீராக இருந்தும் அது மனிதர்களின் தாகம் தீர்ப்பதில்லை. இது இயற்கை யின் விதி.

வெயில் மட்டுமே கரை புரண்டோடும் விருதுநகர் அதன் சுற்றுப்புறம், வெப்ப தணலில் உருகி ஓடிக்கொண்டேயிருக்கும். அதனாலதான் இந் நகருக்கு வெயில் கந்தம்மன் பட்டிணம் என்ற பெயரும் உண்டு. பெயருக் கேற்றப்படி வெயில் உறைந்த ஊரில் ஒரு சொட்டு நீர் பார்ப்பது சிரம மானது.

இந்த நகருக்கு யாரும் துணிந்து பெண் கொடுக்க மாட்டார்கள். ஆனால் பெண் எடுப்பார்கள். ஏனென்றால்? விருதுநகர் பெண்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் கில்லாடிகள். நீர் ஏழு கடலை தாண்டி எட்டாத உயரத்தில் இருந்தா லும்அதைஅடையமனத்திடத்துடன் செயலாற்றுவார்கள். எங்கள் பெண்கள் மென்மையானவர்கள் மட்டுமல்ல, உருதியானவர்கள். அதனால் விருதுநகர் பெண்களை திருமணம் செய்வதற்கு போட்டி நிகழும்.

காற்றும் நீரும் பொதுவானது, ஒருகாலத்தில்/ ஆனால் இன்று தண்ணீர் வியாபாரமாக்கப்பட்டுவிட்டது. இனி காற்றையும் விற்பணை செய்வ தற்கு ஆட்சியாளர்கள் ஆலோசனை செய்யலாம்.

அம்புக்குறி கதையில் வரும் பங்களா வீடு நீர் விற்பனை செய்யும் இடமாக உள்ளது. இது வியாபார நகரமான விருதுநகருக்கே உரித்தானது.

நகரமக்கள் காலிக் குடங்களை தூக்கிக்கொண்டு பஞ்சம் பிழைக்க செல் லும் பராரிகளாக ஒரு குடம் தண்ணீருக்காக புகைவண்டி நிலையத்தில் பயணி களை இறக்கவும், ஏற்றிக்கொள்ளவும், தண்ணீர் நிரப்பிக் கொள் ளவும், புகை வண்டிகள் நிற்கும்போது. அந்த வண்டியிருந்து பழைய கழிவு சூடான தண்ணீ ரை வெளியேற்றும்போது அதை குடங்களில் பிடிப்பதற்கு மக்கள்படும் அவதி எழுத்தில் சொல்லி தீருவதில்லை.

அதைப்போன்று வண்டியிலேறி கழிப்பறைக்குள் வரும் நீரை பிடிக்க போட்டி போடும் பெண்களின் கூட்டம் அவர்களை அனுமதியின்றி புகை வண்டி நிலையத்தில் நுழைந்து நின்றிருக்கும் வண்டியில் புகுந்து கழிவறைகள் மற்றும் வண்டி வெளியேற்றும் கழிவு நீரை பிடித்த குற்றத்திற்கு தேச குற்றவாளியாக ரயில்வே போலீஸ் வழக்கு போட்டு கோர்ட்டில் நிறுத்துவது. உறைந்துப்போன உண்மை ஆனால் இந்த பகுதியை விமலன் சொல்ல தவறிவிட்டார். இருப்பினும் மெலிதாய் உரசி சென்றது அம்புக்குறியின் கதை யில் தென்படுகிறது.

இது போன்ற மண்ணின் கதைகள் அவர் களமாக அமைகிறது. ஒரு சில கதைகள் அதன் போக்கில் கடக்கவிடமால், அதன் கால்களை மடக்கி பிடித்து கட்டி வைத்திருப்பது அப்பட்டமாகிறது.

ஒரு கரு காற்றின் திசையில் மிதந்துசெல்லும் இறகைப் போல் விட்டு விட வேண்டும் அதன் எல்லையை அது தீர்மானிக்கும். இச்சிமரம் சொன்ன கதையும் இன்னும் சில கதைகளும் நெடிய கதைக்கான களமாக விரிவடைய எத்தனிக்கிறது.

அது அவருக்கே தெரிந்து நிகழ்கிறதா இல்லையா என்பது அவரின் பாணியா என்பதும் குழப்பத்தை தருகிறது. ஒரு சிறு கதை என்பது பல பக்கங்களை உள்ளடக்கியதுதான். ஆனால் சிறு கதை என்பது சில பக்கங்கள் எழுதினால் போதும் என்றும், நிமிட கதை களமாகவும் சுருங்கிப்போனது. நாவல் என்றால் நூறு பக்கத்தை தாண்டக்கூடாது என்ற விதி சில எழுத்தாளார்களின் கருத்தாக உள்ளது. சிங்கிஸ் ஐத்மாத்வ் வின் குல்சாரி குறு நாவல் வெறும் அறநூறு பக்கம்தான் லியோ டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு என்னூறு பக்கம் நாவல். ஆனால் அதையே குறு நாவல் என்றுதான் அவர் பேட்டியில் சொல்லி உள்ளார்.”ஆனால்அவசரஉலகத்தில்அதிகபக்கம்எழுதினால்யாரும்புத்தகத்தை புரட்டிக் கூட பார்க்க மாட்டார்கள். அதனால் நான் குறைந்த பகுதியில் நிறைந்த செய்தியை சொல்கிறேன்” என்ற வரிசையில் விமலன் சேரக் கூடாது என்பது அன்பான வேண்டுகோள்.

ஆண்டன்செக்காவ் தன் கதைகளில் எழுத்தாளனை அனுமதிக்க மாட்டார், புதுமைபித்தன் தன் கதை போக்கில் ஓடியபடி அவ்வப்போது லாகனை பிடித்து இழுத்து அதன் கழுத்தை வருடிக்கொடுப்பார். இருவரும் வரிந்துக் கட்டிக் கொண்டு எழுத்தாளனை கைபாவையாகத்தான் வைத்திருப்பார்கள். அத்து மீறி கதைக்குள் புகுந்து அடவடித்தனம் செய்ய விடமாட்டார்கள்.

விமலன் சொல்லிய கதைகளில் சொல்லாத கதைகள் துருத்திக் கொண்டு துள்ளாட்டம் போடுகிறது.

ஒருசிலகதைகளில்தலைகை கால்கள் நறுக்கப்பட்டு முண்டமாக அலை வுறுவது வாசகனை ஏமாற்றத்தின் ஆல் நிலைக்கு வலுக்கட்டாயமாக இழுத்து செல்கிறது.

விமலனின் அனேக கதைகள் டீமுக்கிய பாத்திரமாய் வந்துசெல்கிறது. இளம்மஞ்சள்நிறதிரவத்தில் பசுவின் சிகப்பணுவிலிருந்து பிரித்து தரும் வெண் பால் பல எடைக் கட்டுக்குப்பின் இளம் மஞ்சள் தேயிலைச் சாரில் கலந்து வழங்கப்படும் டீ பற்றி மிகவும் லயித்து எழுதப்பட்ட கதைகளை படிக் கும் வாசகன் டீயை ஒரு மிடர் பருகாமல் தப்பிக்க முடியாது.

தேயிலைசார்நம்நாட்டின்தேசியபானம்.என்றகோட்பாட்டைஆங்கிலேயர் உருவாக்கி சென்றனர்.

பசியின் கொடூரத்தில் இருக்க இடமும், உடுக்க உடையுமின்றி மனிதர்கள் கூட்டம், கூட்டமாய் கிராமத்தின் தன் கூடுகளை இழந்து, இடம் பெயர்ந்து எங்கேயாவது ஒரு கவளம் உணவு கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தில் அலைந்த பஞ்ச காலத்தில் ஆங்கிலேயர்களின் அடி வருடிக ளான கங்கானி களின் கையில் அகப்பட்டு நல்ல உணவும், உடையும், ஒழுகாத கூரையும் என்ற வசீகர வார்த்தைக்கு மகுடியில் மயங்கிய பாம்பாக பின்போய் மலை சரிவுகள் என்ற மாய குகைக்குள்அகப்பட்டு பச்சை இலைகளில் சிகப்பு ரத்தத்தை சிந்தி, அட்டை, பூரான் சியான் பாம்புகளிடம் கடிப்பட்டு சிகிச்சைக்கு கூட அனுமதியின்றி மாண்டவர் கள், கங்கானிகள், அதிகாரிகளின் ஆசைக் கிணங்க மறுக்கும் பெண்க ளின் தற்கொலை, இணங்கிய பெண்கள் பாலியல் நேயால் அவதியுற்று இறந்த பெண்களின் கண்ணீரும், கதறலும், அவர்கள் சிந்திய குருதியும் தான் தேயிலை சார்.

பாரத தாயின் தலை பகுதியான மலைகளில் ஏலக்காய், மிளகு, காப்பிக் கொட்டை, தேயிலை, என்ற பண கொழிக்கும் பயிர்களை விளைவிக்க நமது மக்களை நவீன அடிமைகளாக, கொத்தடிமைகளாக,விலங்கிலும் கேவலமாக, நடத்தி அவர்கள் உழைப்பில் விளைந்தவைகளை அவர்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது போக மீந்தவைகளை நம் மக்களும் பயன்படுத்த கற்றுக் கொடுத்தனர்.

அதிகாலையில் கதிர்கள்முற்றியவயல்களில் பாடுபடசெல்வதற்கு முன் ஒரு குவளை பழைய கஞ்சித் தண்ணியான நீராகாரத்தை அருந்தி விட்டு, நண்பகல்வரை உப்பு நீர்படிய உழைத்திடும்,விவசாய தோழனின் தேசிய பானாமான டீ இன்று பட்டி தொட்டியெங்கும் தொலைக்காட்சி தொடர்கள், கேலிக் கூத்துக்கள், நகை சுவை என்ற ஆபாச வசனங்கள், வக்கிர பாடல்கள், இவைகளோடு உலக மய வியாபார விளம்பரங்கள். எனஇருந்த போதும் கூடஆங்கிலேயர் நம் நாட்டைவிட்டு போன பின்னும் அவர்கள் விட்டுச்சென்ற எச்சங்கள் இன்னும் காயவில்லை.

அன்னியஆட்சியின் நீட்சி இந்திய செல்வங்களை மட்டும் அழிக்கவில் லை பண்பாடு, கலாச்சாரம், மொழி, இனம்,குடும்பஉறவுஅனைத்தையும் அழித் தொழித்து விட்டது.இதுஇந்தியாவுக்குமட்டுமல்ல ஆசியா கண்டம் முழுவதும் பரவலாக்கப்பட்டது.

மதுபானம்என்பது உயர் குலத்தார், பெருந்தனக்காரர்கள் மட்டுமே பயன் படுத்திய ஒன்று. அதுவும் அரசு அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டும். ஆனால்இன்று பத்தாம் வகுப்பு மாணவன் மட்டுமின்றி மாணவிகளும் மது வருந்திபிரதானசாலையில் பட்டபகலில் உடை களைந்து அரை நிர்வாணமாய் கிடக்கசெய்து மதுவுக்கு அடிமையாக்கிய நம் ஆட்சியாளர் செய்த புண்ணியம் போல் அன்று அண்ணிய ஆட்சியாளர்கள் தேயிலை தூளை வீட்டு, வீட்டுக்கு இலவசமாக கொடுத்தும் அதை சாரக்கி பானமாக அருந்த கற்றுக் கொடுத்தும், கோயில் குளம், இன்னும், இன்னும் மக்கள் கூடுமிடமெங்கும், சென்று இலவச தேயிலை சாரைக் கொடுத்து அதைஅருந்தாமல் அதிகாலை விடியாது என்ற போதைக்கு அடிமையாக்கி மக்கள் டீ குடிக்காமல் ஒரு நொடியைக்கூட கடந்துவிடமுடியாது என்ற ஏக்கத்தை உருவாக்கி பின்பு அதை சந்தை பொருளாக்கியது மட்டுமல்லாமல் ரஷ்யாவின் தேசிய பானம் ஓட்கா போன்று இந்தியாவின் தேசிய பானம் டீ என ஆக்கியது.

அதை நம் வீட்டின் விருந்தினர்களுக்கு வழங்கும் முதல் பழக்கமாக்கிக் கொண்டுஉடலில்ரத்தம் ஓடுகிறதோ இல்லையோ தேயிலை சாறு நிச்சியமாக ஓடுமளவுக்கு அடிமையாக்கப்பட்டு விட்டோம்/. அப்படிபட்ட பானத்தை தான் விமலன் அனைத்து கதைகளிலும் தெளித்து உள்ளார்.

பிறப்புக்கும், இறப்புக்கும், சடங்கு, சம்பிரதாய விருந்தோம்பலுக்கும் முதல் பானமாக வழங்க வேண்டும் என்ற கலாச்சாரம் மக்கள் மனதில் உறைந்துப் போனதின் நீட்சிதான் ஒரு அடிக்கு ஒரு டீ கடை ஒரு மணி நேரத்திற்கு ஒரு டீ என்கிற நிலையை விதைத்துவிட்டுப்போனது.

இப்படி வரலாற்றின் அழித்தெடுக்கமுடியாத பக்கத்தில் நிறைந்து ததும் பும் டீசாரை ஒரு மிடர் அருந்தும் வகையில் விமலன் கதைகள் வாசக னுக்கு ஆசைக்காட்டி செல்கிறது.

ஆனால் அந்த கண்மாய் நீர் வண்ண திரவத்தை வாயில் வைக்கும் போதெல் லாம் லட்சோப லட்ச தேயிலை தோட்ட தொழிலாளிகளின் குருதியின் நெடி நாசியை வருடி செல்கிறது.

விமலன்பதிவுருத்திய பெரும் கதையாடல்களில் பாத்திரங்களின் பெயர்கள் இல்லை.பெயரற்றபாத்திரங்களை நினைவில் கொள்வது சிரமத்தை தருகிறது. இருப்பினும் அவர் தேர்வு செய்திருக்கும் களங்கள் மிக முக்கியமானது. அதனால் எல்லாவற்றையும் அழித்துக்கொண்டு கரு முக்கியப் படுகிறது.

காக்காசோறு என்ற முதல் தொகுப்பின் மூலம் தமிழ் கூறும் நல்லு லகில் எழுத்தாளனாய் தென்பட துவங்கிய விமலன் தட்டாமாலை,,,, வேர்களற்று,,,, பந்தக்கால்,,,,,பூப்பதெல்லாம்,,,, இச்சி மரம் சொன்ன கதை,,, என ஐந்து சிறுகதை தொக்முப்புகளை வெளியிட்டுள்ளார்.

இவையெல்லாம் சிட்டுக்குருவி,என்கிற அவரது வலை தளத்திலும், அவரது முக நூல் பக்கத்திலுமாய் ஆயிரக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டு அவர்கள் அளித்த ஊக்குவிப்பில் ஐந்து தொகுப்புகளாக உருவேறி இருக்கிறது என்பது வரலாறு/

விமலன்என்ற எழுத்தாளன் அறிவொளி இயக்கவாதியாய், நாடக கலை ஞனாய், தொழிற்சங்கவாதியாய்,, சகோதரி விமலாவின் கணவனாய், சந்துரு, சுப இளங்கோ,இருவரின் தந்தையாய், எல்லாவற்றையும்விட பழக இனிமை யான மனிதனாய், சாந்த சொரூ பமாய், பாதுகாப்பாய் எழுதும் இலக்கியவாதி யாய், பயணிக்கும் விமலன் இலக்கியத்துக்குள் இன்னும் கொஞ்சம் உழைப் பை செழுத்த வேண்டியுள்ளது.

உலக இலக்கியங்களிலிருந்து உள்ளூர் இலக்கியங்களையும், தற்கால படைப் புகளையும், ஆசுவாசமாய் அவதானித்தால் அவரின் இலக்கிய பிரதிகள் காலத் தை கடந்து நிற்கும் என்பது நிச்சயம்.

குறிப்பாக இச்சிமரம் சொன்ன கதை, ஒரு நாள் ஒரு பொழுது, இன்னும் சில கதைகளில் அதற்கான அடையாளங்கள் தென்படுகிறது.

அனுபவ படிமங்களை கதைகளமாய் மாற்றுகிற போது அது கடந்த காலமாக இருக்கிறது. ஆனால் விமலன் எல்லாவற்றையும் நிகழ் காலத்தில் சொல்வது வாசிப்பு தளத்தை அழித்துச் செல்கிறது.

காலத்தை மீறுவதும், காலத்துக்குள் நிற்பதும், காலத்தை நிர்ணயம் செய்வதும் படைப்பாளிகளின் கடமை கிடையாது. காலம் காத்திருப்பது இல்லை நாம் தான் அந்த சூட்சுமத்தை கற்றுக்கொள்ளவேண்டும்.

                                                                                                                 பாண்டியக்கண்ணன் 
                                                                                                                (நாவலாசிரியர்) 
                                                                                                                 21.4.16

இச்சி மரம் சொன்ன கதை

விலை 120

வெளியீடு

ஓவியா பதிப்பகம் 


(என்னுடைய இச்சி மரம் சொன்ன கதை சிறுகதை நூலுக்கு நாவலாசிரியர் திரு பாண்டியக்கண்னன் அவர்கள் எழுதிய விமர்சனம்)

10 Oct 2015

அஞ்சலி:மனோரமா,,,,

       என்றென்று நிலைத்து நிற்கப்      
       போகும் தில்லாங்குமரி 
        டப்பாங்குத்து


Inline images 2Inline images 1
ல்லாம் வதந்தி...நான் நலமாக இருக்கிறேன்...உயிரோடு இருக்கிறேன் என்று சில மாதங்களுக்குமுன் அவர் பேட்டி கொடுத்தபோது எத்தனை ரசிக உள்ளங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டன....மனோரமா இனி வந்து அப்படி சொல்ல இயலாது என்ற செய்தி இந்த நள்ளிரவில் சன் செய்திகள் அலைவரிசையில் பார்த்தபோது தெரிந்தது. பல பத்தாண்டுகள் தமிழ்த் திரை உலகில் ஒரு நாயக, நாயகி அந்தஸ்தோடு வலம் வந்து கொண்டிருந்த பன்முக ஆற்றல் படைத்திருந்த நடிகை காலமாகிவிட்டார். மன்னார்குடியில் கோபிசந்தா என்றறியப்பட்டு பின்னர் செட்டிநாட்டுப் பக்கம் பள்ளத்தூருக்குக் குடி பெயர்ந்து பள்ளத்தூர் பாப்பாவாகி பின்னர் மனோரமா என்று பெயரெடுத்து ஆச்சியாக அழைக்கப்பட்ட மனோரமாவுக்கு மரணம் உண்டா என்ன...

அகல விரிந்திருக்கும் கண்களில் மின்னும் ஒளி, அப்பாவி முகவாகு, அசாத்திய உடல் மொழி என்ற வகையில் கருப்பு வெள்ளை படங்களின் காலத்திலேயே நகைச்சுவை நடிகையாக அசத்தத் தொடங்கிய மனோரமாவுக்கு கவிஞர் கண்ணதாசன் முதல் வாய்ப்பு கொடுத்த படம் மாலையிட்ட மங்கை (1958​). அதில் தொடங்கி இடையறாத வாய்ப்புகளும், பாராட்டுதல்களும், சாதனைகளும் தொடர்ந்தன அவர் வாழ்க்கையில்.  பிற்காலப் படங்களில் உதறலெடுப்பது போன்ற பாவனை, பல குரல்களில் இழுத்து நீட்டி முழக்கும் வசன உச்சரிப்பு, சொந்தக் குரலில் அசத்தலான பாட்டு என்று புரட்டி எடுக்கத் தொடங்கினார். ஆயிரமா, ஆயிரத்து ஐநூறா யாருக்குத் தெரியும் அதற்கு மேலும் நடித்திருக்கிறார் மனோரமா. 

லாலி வந்தது என்பார் மனோரமா ஒரு திரைப்படத்தில். லாரி என்ற சொல் வராது அவருக்கு. நாகேஷ் கேட்பார், ஸ்கூல்ல ர நடத்தற அன்னிக்கு நீ லீவா என்று! தேன்மழை படத்தில் நாகேஷ், சோ இருவருக்கும் போட்டி, யார் மனோரமாவின் காதலை வெல்வது என்று....கலக்கலான அந்தப் போட்டியில் மனோரமாவின் அலட்டிக் கொள்ளாத நடிப்பு அசாத்தியமாக இருக்கும். 

உனக்கும் வாழ்வு வரும் என்ற படம் (என்று நினைவு). தேங்காய் சீனிவாசனோடு இணை. ஊமையாக நடிப்பார். பெரிய மலை. அதில் ஒரு குருவி இந்த வசனத்தைப் போட்டுப் பின்னிப் பின்னி எடுப்பார் மனோரமா, அவர் வந்து நின்றாலே ரசிகர்கள், பெய்ய மய்யி அதுல ஒரு குய்யி.....என்று கத்தத் தொடங்கி விடுவார்கள்.  சென்னை பாஷையை அந்தப் பாடு படுத்தி எடுப்பார் படங்களில். அவரது வா வாத்யாரே ஊட்டாண்ட நீ வராங்காட்டினா நா உடமாட்டேன்...என்ற பொம்மலாட்டப் படப் பாடல் எந்தக் காலத்திலும் அழியாது. வா வா மச்சான் ஒண்ணாச் சேந்து வாராவதிக்கே போய்வரலாம் என்ற சென்னைச் சேரியின் குடிசைக் காதலியின் குரலை இனி எங்கே கேட்பது....

அதன் அடுத்த முனையில் மடிசார் மாமி பாத்திரம்...சூரியகாந்தி படத்தில் வம்பு பேசும் தோழிகளோடு அவர் அடிக்கும் கூத்து, தெரியாதோ நோக்கு தெரியாதோ என்ற பாட்டில் பன்மடங்கு பெருகி இருக்கும். மறைந்த கோமல் சுவாமிநாதன் அவர்கள் இயக்கத்தில் அவர் பல நாடகங்களில் நடித்தார். அதில் ஒன்று சென்னை தொலைகாட்சி நாடகமாக மலர்ந்த என் வீடு என் கணவன் என் குழந்தை!  குழந்தைப் பேறு வாய்க்காத வேதனையை மறைத்தபடி குடும்ப உறவுகளோடு நெருங்கி வாழும் தன்மையில்  கணவரோடு (கம்பர் ஜெயராமன்) நெகிழ்ச்சியுற பேசிக் கொண்டிருக்கும் மனைவியாக அய்யர் மாமி வேடத்தில்  அத்தனை அற்புதமாக நடித்திருப்பார். அதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்குமுன் வானொலியில் அவர் அசாதாரண காட்டுக் கத்தல் போடும் பாத்திரத்தில் நடித்த காப்பு கட்டி சத்திரம் ஒலிபரப்பாகும் நேரத்திற்கு ரசிகர்கள் காத்திருந்த காலம் ஒன்று இருந்தது.

சர்வர் சுந்தரம் படத்தில் புதுமுக நடிகராக செட்டில் அறிமுகமாகும் நாகேஷ். இயக்குநராக ரங்காராவ். நாராசம் ததும்பும் உங்கள் நாக்கும் என்று தமிழைப் போட்டுக் கொன்று தின்பார். ஏம்மா மத்த படத்தில் எப்படி வேணும்னா பேசு..எம்படத்தில் தமிழ் பேசும்மா என்று கெஞ்சுவார் ரங்காராவ். போங்க சார் என்ற அவரது நளினமும், துடைப்பத்தை வைத்துத் தரையில் சிலுப்பி எடுக்கும் அவரது நடிப்பும் சிறப்பானவை. 

அன்பே வா படத்தில் எம் ஜி ஆர் யாரென்று தெரிந்தாலும் நாகேஷிடம் காட்டிக் கொள்ளாது அவரைக் காதலிக்கும் குறுகுறு பாத்திரம். சந்திரோதயத்தில் எம் ஜி ஆர் வியந்து பார்த்தபடி காசிக்குப் போகும் சந்நியாசியாக நாகேஷை விரட்டியடிக்கும் பாத்திரம் என பட்டியலிட இயலாத பல்சுவை ரசனை வேடங்களில் அசத்தி இருப்பவர் மனோரமா. 

என்றென்றும் பேசப்படும் பாத்திரம் அவருக்குக் கிடைத்ததற்கு அவர் ஏ பி நாகராஜனுக்கு மிகவும் நன்றி பாராட்டிக் கொண்டிருந்தார். அதுதான் ஜில் ஜில் ரமாமணியாக ஊரையே கலக்கி எடுத்த தில்லானா மோகனாம்பாள். அவரது நடிப்பை சிவாஜியே ரசித்துக் கவனித்துக் கொண்டிருக்கும் காட்சிகள் அந்தப் படத்தில் நிறைய உண்டு. ஒங்க நாயனத்துலதே இந்த சத்தம் வருதா...ஏன் என்று அவர் கெஞ்சலோடு சிவாஜியிடம் கேட்பதும், அவர் மண்டு (மட்டு) என்று நமக்குக் கேட்கும் அளவு அழுத்தமாகச் சொல்லி சிவாஜி நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் காற்றை வருணிக்கும்போது அப்படி லயித்துக் கேட்டு உட்கார்ந்திருப்பார் மனோரமா. வெத்தலவாக்கு, ஜோடா ...வசனத்தை யார் மறக்க முடியும்? தன்னை சண்முக சுந்தரத்தோடு (சிவாஜி) இணைத்து மோகனா (பத்மினி​) சந்தேகப்படும் இடத்தில் அவர் நியாயம் கேட்டு அடுக்கும் அவரது உதவி பட்டியல் அசர வைக்கும். மதுரை காரைக்குடி வட்டார வழக்கு அப்படி  மணக்கும்.

சுருளிராஜனை அவர் வேலை வாங்கத் திண்டாடும் டீக் கடை உரிமையாளர் பாத்திரம் தூள் கிளப்பும். காசி யாத்திரை படத்தில் வி கே ராமசாமியை ஏய்க்கும் பாத்திரம். அண்ணன் ஒரு கோயில் படத்தில், எவர்சில்வர் பாத்திரத் திருடியாக அவர் வருகையில் கிளி கத்திச்சி, கிளியனூர்னு நெனச்சி எறங்கிட்டேன், நானே கன்....ன் ....ன் ...னிப்பொண்ணு..... என்று கிறக்கம் வர அவர் ரயில் நிலையத்தில் பேசுகையில் ஏ கருணாநிதி, ஏம்மா கிளி கத்தினா கிளியனூரு, கோழி கத்தினா கோழியூரா என்று கேட்பார். 

விசுவிற்கு போட்டியாக அவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சம்பந்தியோடு வாதம் செய்யும் வேலைக்காரப் பெண்மணியாக  கம்னு கெட, கம்முனா கம், கம்னாட்டி கோ என்பார்....தில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே என்று ஜொலிக்கும் பாட்டியாக ஒரு வேடம்....எத்தனை எத்தனை பாத்திரங்கள்.....எத்தனை எத்தனை புதிய தோற்றங்கள்...வித்தியாசமான ரசனையில் அவர் வெளிப்படுத்திய நடிப்பாற்றல்....

நாகேஷ், சந்திரபாபு, சோ, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், எஸ் எஸ் சந்திரன் ...........என எத்தனையோ நடிகர்களோடு இணையாக அவர் நகைச்சுவை நடிகையாக நடித்த அவர், ஒரு கட்டத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களை ஏற்கத் தொடங்கினார். அம்மா பாத்திரம். ஜெமினி படத்தில் தனது மகனைக் கொன்ற விக்ரம் கோஷ்டியை அடையாளம் கண்டதும் அவர்களோடு நெருங்கிப் பழகி விஷம் வைத்துக் கொல்லக் காத்திருந்து அதைச் செய்ய முடியாது கதறும் இடத்தில் அருமையாக நடித்திருப்பார் மனோரமா. சின்ன கவுண்டர் படத்தில் கவுண்டமணி, செந்திலோடு ஈடு கொடுத்து நடித்திருக்கும் அவர், ஜென்டில்மேன் படத்தில் தனது மகனுக்குக் கல்வி கிடைக்க தன்னையே அடுப்பாங்கரைத் தீயில் எரிய வைத்துக் கொள்ளும் உருக்கமான வேடத்தில் நடித்திருப்பார்.

ஆச்சி மனோரமாவுக்கு மிகவும் மதிப்பு சிவாஜி கணேசனிடம் இருந்தது. பக்தி என்றே சொல்வார் அதை.  மனோரமா ஒரு பெண் சிவாஜி என்று வருணித்தார் சோ. அதற்கு அடுத்து கமல் ஹாசனோடு ஈடு கொடுத்து நடிப்பதில் அத்தனை ஆர்வம் காட்டியவர் அவர்.  அபூர்வ சகோதரர்கள் படத்தில் போலீஸ் ஸ்டேஷனில் அவர் அய்யய்யோ அய்யோ அய்யய்யோ என்று கத்தி ஜனகராஜை வெறுப்பேற்றும் காட்சி ஒன்று போதும். ராஜா கைய வச்சா ராங்காப் போறதில்ல பாடலுக்குமுன் அவரும் கமலும் தாள லயத்தோடு நடத்தும் வாய்ச் சண்டையும், சிங்காரவேலனில் கமலிடம் சொக்கி ஏமாறும் இடங்களிலும், உன்னால் முடியும் தம்பி படத்தில் கமலுக்கு அண்ணி வேடத்தில் உணர்ச்சிகர பாத்திரத்தில் பேசும் வசனங்களும் அவருக்கே உரித்தானவை. சவால் படத்தில் திருடக் கற்றுக் கொடுப்பவர். 

அண்ணாமலை, அருணாசலம் படங்களில் ரஜினியோடு நடித்த மனோரமா, குரு சிஷ்யன் படத்தில் போலீஸ்காரராக வரும் வினு சக்ரவர்த்தியின் மனைவி வேடத்தில் அட்டகாசம் செய்திருப்பார்.தளபதியில் காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாடலில் ரிதத்திற்கு ஏற்ப நடனத்தை எடுப்பார். சின்னத்தம்பி படத்தில் வெகுளி மகன் பிரபுவோடு விதவைத் தாய் வேடத்தில் அத்தனை பரிதவிப்பைக் கொண்டு வந்திருப்பார்.

உன் ராதையைப் பார் போதையிலே கண்ணா .... (படம்: பந்தாட்டம்​) என்று இருமி இருமி சொந்தக் குரலில்  பாடும் வேடமானாலும், அவரே மிகவும் ரசித்த பாத்திரமான சத்யராஜைக்  காதலிக்கும் வயதான பெண்மணி வேடமானாலும் (நடிகன்) அவர் முழு ஈடுபாட்டோடு நடிப்பார். 7 ஜி ரெயின்போ காலனியில் மிகச் சிறு பாத்திரமே ஆனாலும் சின்னஞ்சிறுசுகள் தப்பு பண்ணப் போகுதுங்களே என்று திடுக்கிடும் முகத்தின் மொழி முக்கியமானது.

தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்குமுன் திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பாட்டுக்களால் அமைந்த ஒரு விடுகதை போட்டி ஒன்றில் எதிரும் புதிருமாக நடத்தப்பட்டது. அதில் மனோரமா அத்தனை அழகாகப் பாடி இருந்தார். அவ மஞ்ச தேச்சுக் குளிச்சா, அது மழையில கரையவில்ல, அவ சந்தைக் கடைக்குப் போனா வந்த வழியில திரும்பவில்ல...அவ யாரு பேரைக் கூறு என்று பாடுவார் மனோரமா. எதிர்பார்ட்டி விடை தெரியாது முழிக்கவே, அவ அழகாச்சே, பேரு எலுமிச்சே என்று விடையையும் பாட்டாகவே பாடி இருப்பார் மனோரமா. நரசுஸ் காப்பி விளம்பரத்தில் மடிசாரோடு ஊஞ்சலைப் பிடித்தபடி ஒயிலாக நின்றவண்ணம் தேங்காய் சீனிவாசன் பேசும் (வட்டாவி விட்டு ஆத்தி.....) வசனத்தை அத்தனை பெருமிதத்தோடு கவனிக்கும் அவர் முகபாவம் உயிரானது.

தமிழ் வசன உச்சரிப்பின் திருத்தம், ஏற்ற இறக்கம், நயம் அனைத்தும் அவர் நாவில் குடி கொண்டிருந்தது. புறமுதுகிட்டு ஓடுகையில் அடிபட்டு இறந்தானா என் மகன் அய்யகோ என்று போர்க்களத்தில் புகுந்து மார்பில் பாய்ந்த வேல் தான் முதுகைத் துளைத்தது என்று அறிந்து பெருமிதம் பொங்கக் கதறும் புறநானூற்றுத் தாய் வேடத்தில் கலைஞர் வசனத்தை உச்சரிப்பதில் பெயர் பெற்றிருந்தவர் அவர். மைல் கற்கள் வழி நெடுக கம்பீரமாக ஊன்றப்பட்ட மிக நீண்ட நெடுஞ்சாலை அவரது கலையுலக பங்களிப்பு. 

'ஏ தில்லாங்குமரி டப்பாங்குத்து ஆட்டம் ஆடுவேன் ஷோக்காப் பாட்டு பாடுவேன் நேக்கா ஓட்டம் ஓடுவேன்' என்று எல் ஆர் ஈஸ்வரி அதிரடிக் குரலில் பாடிக் கொடுத்த பாட்டுக்கு மேடையில் சதிராடி ரோசா ராணி என்று பெயர் மாற்றிக் கொண்டுவிடும் ஜில் ஜில் ரமாமணி அடுத்தடுத்த தலைமுறை தமிழ் ரசிகர்கள் உள்ளங்களில் நிரந்தரமாக ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் நடித்தபடியும் நிலைத்து நிற்பார்.


(எழுத்தாளர் திரு ,எஸ் வி வேணுகோபால் அவர்கள் தனது அஞ்சலியில்,,,,,,,,,)

&&&&&&&&&&&&&&&&&&&&&&