முதன் முதலாக வந்த மாணவன் தயங்கி நின்றபோது மணி காலை 9.30. நான், கிளைச் செயலாளர் முத்துக் குமார், நாவலாசிரியர் பாண்டியக் கண்ணன் ,கிளைத் தலைவர் திருமதி. சுமதிச் செல்வி.திரு, தேனி வசந்தன்,திரு.ஜே.ஜே சீனிவாசன் ,திரு.திலீப் நாரயணன் எல்லோருமாய் கூடி நிகழ்ச்சிக்கான வேலை செய்து கொண்டிருந்த இடம் விருதுநகர் R.C மேல் நிலைப்பள்ளி .
த.மு.எ.க.ச விருதுநகர் கிளை உயர் நிலைப் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான கவிதைப் போட்டி நடத்த வேண்டும் என முடிவு செய்த நாளிலிருந்து கிளைத் தோழர்களுக்கு இறக்கை முளைத்து விட்டது. எல்லோரும் மிகவும் சந்தோசித்துப் போனோம். ஆகா மிகவும் நல்லதொரு நிகழ்ச்சி. இது கவிதைப் போட்டியாக மட்டும் அமையாது. பயிற்சியாகவும் அமையும் என்கிற உயரிய முடிவே ஒரு குறிப்பிட்ட தலைப்பில் மட்டுமே கவிதை எழுதச் சொல்லாமல் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என அறிவிப்பு செய்ய வைத்தது. உள்ளூர் கேபிள் டீ.வி நகரின் பிரதான இடங்களில் இரண்டு விளம்பரப் பலகைகள் என வைத்ததும் ,கவிதைச் சங்கமம் நிகழ்ச்சியின் சூடு ஊரெங்கும் பற்றிக் கொண்டது . நேரிலும்,தொலை பேசி மூலமாகவும் கிளைச் செயலாளர் முத்துக் குமார் அவர்களிடம் எப்பொழுது, எங்கு, எப்படி, நிகழ்ச்சி நடக்கும் இடம் எங்கே? என்கிற விசாரிப்பு நடந்து அதற்கு விடை தந்து நிகழ்ச்சி நடக்கும் நாளும் வந்து விட்டது. அந்த நாளின் காலை முதன் முதலாக வந்த மாணவன் தயங்கி நின்ற போது காலை மணி 9.30. அந்த மாணவன் முதன் முதலாய் கேட்ட கேள்வி போட்டி எப்பொழுது ஆரம்பிக்கும் என.
எழுதி,எழுதி தீராத பக்கங்களாய் வாழ்க்கை தன்னுள் அன்றாட நிகழ்வுகளையும்,
சம்பவங்களையும் சுமந்துகொண்டும், சுழியிட்டுக்கொண்டும், முடியிட்டுக் கொண்டுமாய்
ஓடிக் கொண்டிருக்கிறது. பழவண்டிக்காரர்கள், காய்கறிவிற்கும் பெண், கீரைக்காரக் கிழவி, பெட்டிக் கடைக்காரபாய் , ரோட்டோர மரத்தடியில் அமர்ந்து செருப்புத்தைப்பவர்............,என
வாழ்க்கையின் சகல தரப்பினரையும் தன்னகத்தே சுமந்து கொண்டிருக்கிற சமூகத்தின்
நகர்வில் இரவு வடிந்து காலை புலர்ந்த "11.9.2010" தனது நகர்வை "தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்" விருதுநகர் கிளை நடத்திய "கவிதை சங்கமம் "நிகழ்ச்சிக்
கென ஒதுக்கித் தருகிறது. 11.9.2010 அன்று உயர் நிலைப்பள்ளி மற்றும் ,கல்லூரிமாணவ, மாணவிகளுக்கான "கவிதை சங்கமம்" விருதுநகர் R.C மேல்நிலைப்பள்ளியில்நடைபெற்றது. பேனாவை கூர்முனை செய்து கொண்டும், மனதை தயார் படுத்திக் கொண்டுமாய் "கவிதை எழுத வேண்டும்,பரிசு பெற வேண்டும்" என்கிற ஆவலில் வந்திருந்த மாணவ,மாணவிகள் அனைவரையும் அடக்கிய "கவிதை சங்கமம்" நிகழ்ச்சி காலை 10.30 மணியளவில் கிளைத் தலைவர் திருமதி, சுமதிச்செல்வி
அவர்களின் தலைமையிலும், கிளைச் செயலாளர் திரு.முத்துக்குமார்அவர்களின்
முன்னிலையிலும் , நடந்தது . நிகழ்வுக்கு ஊக்கமான துவக்கமாய்கவிஞர் நீலம் மதுமயன்
அவர்களின் துவக்க உரைஇருந்தது. கவிதை பற்றி, கவிதையின் பாடு பொருள் பற்றி, இளம் பருவத்தின் ஆசை பற்றி, கனவுகள்பற்றி,காதல் பற்றி என நிறைய, நிறைய பேசியது மாணவ,
அவர்களின் துவக்க உரைஇருந்தது. கவிதை பற்றி, கவிதையின் பாடு பொருள் பற்றி, இளம் பருவத்தின் ஆசை பற்றி, கனவுகள்பற்றி,காதல் பற்றி என நிறைய, நிறைய பேசியது மாணவ,
மாணவிகளைஉற்சாகப்படுத்தியது.இலக்கியத்தில்கவிதைஆற்றுகிறபங்குஎன
திரு.தேனி வசந்தன் அவர்களும் , "கவிதை சங்கமம்" பற்றியும்,கலை இலக்கியகத்தின்
போக்கு பற்றியுமாய் பேசிய கிளைச் செயலாளர் திரு.முத்துக்குமார் ஆகியோரின் பேச்சும் நிகழ்ச்சிக்கு நிமிர்வு சேர்த்தது. அனைவரும் பேசி முடியவும் போட்டி ஆரம்பமானதாய் அறிவிக்கப் படுகிறது. மாணவ,மாணவிகள் அனைவரும் தனது ஆசைகளை,கனவுகளை,எண்ணங்களை, ஆவல்களை கவிதையாக எழுதினார்கள். நாவலாசிரியர் திரு.பாண்டியக் கண்ணன் ,எழுத்தாளர் திரு.திலீப் நாரயணன் ,எழுத்தாளர்
திரு.விமலன். பேச்சாளர் திரு.தேனி வசந்தன் ,கருத்தாளர் திரு.ஜே.ஜேசீனிவாசன்

,த.மு.எ.க.சவின் மாவட்டச் செயலாளர் திரு.லட்சுமி காந்தன்ஆகியோரின் பங்கேற்புடன்
மிகவும் கம்பீரமாகவும், எளிமையாகவும் நடைபெற்ற "கவிதை சங்கமம்" நிகழ்வில்விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள் 50 பேர்வரை
மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டார்கள்.
சுமார் ஒருமணிநேரத்திற்கும் மேல் நடந்த கவிதை போட்டியில் பல்வேறுதலைப்புகளையும்,

கருத்துக்களையும், தாங்கி வந்த கவிதைகளை ஆய்வுசெய்த "த.மு.எ.க.ச" வின்
விருதுநகர் கிளைத் தலைமையையும், மாவட்டச் செயலாளர் திரு.லட்சுமிகாந்தன்
அவர்களையும் கொண்டகுழு இறுதியாக உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான
கவிதைகளுக்கு, மூன்று பரிசுகளையும், கல்லூரி மாணவ ,மாணவிகளுக்கான
கவிதைகளுக்கு , மூன்று பரிசுகளையும் அறிவித்தது. கல்லூரிகான கவிதைப் போட்டியில் நாவலாசிரியர் பாண்டியக்கண்ணன் அவர்களின்
புதல்வி செல்வி. கயல் விழி (V.V.V கல்லூரி,)முதல் பரிசையும்,இரண்டாம் பரிசை கலைவாணி (V.V.V கல்லூரி)யும், மூன்றாவது பரிசை மணிகண்டன்(அண்ணா பல்கலைக்கழகம் )னும் பெற்றுக் கொண்டார்கள். உயர்நிலைப் பள்ளிகளுக்கான கவிதைப் போட்டியில் முதல் பரிசை வீரலட்சுமி(ஹாஜி.பி. ஹவ்வா பீ.வி மேல் நிலைப் பள்ளி)யும், இரண்டாவது பரிசை ஜெரால்டு(R.C மேல் நிலைப் பள்ளி)டும், மூன்றாவது பரிசை K.சதீஸ்வரன்(ஹாஜி .பி.செய்யது மேல்நிலைப் பள்ளி) யும்
பெற்றுக் கொண்டார்கள். பரிசுகள் வழங்கி, கௌரவித்து ,புகைப்படம் எடுத்து சந்தோசித்த "கவிதைசங்கமம்"

நிகழ்வை "த.மு.எ.க.ச" வின் மாவட்டச்செயலாளர் திரு.லட்சுமிகாந்தன்அவர்கள்
"எங்கும் பரவி நிற்கிறது கவிதை" என்கிற தனது எளிய உரையுடன் முடித்து
வைத்தார்கள்.நிகழ்ச்சியின் பின்புலமாய் நின்று உதவிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கும், தங்களது பள்ளியில்
வைத்தார்கள்.நிகழ்ச்சியின் பின்புலமாய் நின்று உதவிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கும், தங்களது பள்ளியில்
நிகழ்ச்சி நடத்த இடம் கொடுத்து உதவி, நிகழ்ச்சிபற்றியும், "த.மு.எ.க.ச விருதுநகர் கிளை" பற்றியுமாய் விசாரித்துத் தெரிந்து கொண்ட உயர் உள்ளம் கொண்ட R.C உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்திற்குமாய் நன்றி சொல்லி விட்டு நிகழ்வு முடிந்து அனைத்து மாணவ, மாணவிகளும் இன்முகத்துடன்
வெளியேறியபின் கடைசியாகசென்ற கல்லூரி மாணவன் தன்னைஇருபாலினத்து மாணவன்
என கோடிட்டுக் காட்டி விட்டுச் சென்றான். அப்படிப் பட்ட மாணவனை தைரியமாக நிகழ்வில் பங்கேற்க செய்ய "த.மு.எ.க.ச" வால்
மட்டுமே முடிகிறது. த.மு.எ.க.ச விருதுநகர் கிளை அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. மனிதமும், மனித நேயமும், மண்ணில் இருக்கிறவரை "த.மு.எ.க.ச" வினால் "கவிதை
சங்கமம்" நடத்தப்படும்.அந்த நிகழ்வில் பங்கேற்க, அந்த மாணவனைப் போல இன்னும்
சிலர் தைரியமாக வரக்கூடும்.அந்த தைரியத்தையும், நெஞ்சு நிமிர்வையும் "த.மு.எ.க.ச"
வழங்கியிருக்கிறது. இது போதும் தோழர்களே,நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்து விட்டது என அறிவிக்க,,,, என்கிற சந்தோச புன்னகையுடன் வெளியேறுகிறோம் , நிகழ்ச்சிக்கு பின் புலமாக இருந்து
உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி கூறியவாறே./

No comments:
Post a Comment