4 Oct 2010

விரிகிற பிரியங்களில்.........,,,


வணக்கம்பிரியமே /.

அப்போதெல்லாம் உன்னை காதலித்தாகவோ உன் மேல் ப்ரியம் கொண்டு உன்னைநேசித்தாகவோ ஞாபகமில்லை கண்ணே.
ஆனால் உன்மேல் கிஞ்சித்தும் ப்ரியம் குறையாமல் உன்னையே மனதில் சுமந்து வருகிறேனே ............,,,,,,
அன்பே உனக்கு ஞாபகமிருக்கிறதா?முதன் முதலாக உன்னை பார்த்த இடமும் உனது அழகும் பெரிதாக என்னை வசிகரப்படுத்தி விடவில்லை. தொட்டால் ஒட்டிக்கொள்ளும் அளவெல்லாம் இல்லை. ஒட்டினால் போகாத அளவு கருமை பூசியிருந்த நீ உனது எளிர் தெரியும் வெள்ளந்திச் சிரிப்பால் அதை விரட்டிவிட்டாய்தான்.
உனது குட்டைச் சடையும், வட்ட முகமும் ,எண்ணெய் வழிந்த பிசு,பிசுபான உடலும் கலைந்து பரந்திருந்த தலைமுடியும், சுமாரான பாவாடை தாவணியும் என்னை உன் வசம் ஈர்த்து விட்டதுதான். அப்போதெல்லாம் உன் அனுமதி இல்லாமலேயே நினைத்திருக்கிறேன் அன்பே.
இரு காதேரங்களிலும்,பின் தலையில் இறங்கும் முடியின் நுனியிலும் இறங்கிச் சொட்டும் நீர் துளியை நீ குளித்து முடித்து தலை துவட்டும் தருணங்களில் பார்க்க ஆசைப் பட்டதுண்டு கண்ணே.அந்த பாக்கியம் அப்போது .....,,,,ம்ம்ஹும்,.ஒல்லியாய் வளர்ந்து கருத்து நின்ற நீ என்னை கட்டிப்போட்டு விட்டாய்தான், உன்னையே சுற்றிச் சுற்றி வருமளவு கயிறு விட்டு. ஆனால் கண்ணே அப்போதுக்கும் இப்போதுக்கும் மாற்றம் நிறைவே கண்ணே .அதென்ன அப்படி ஒரு ஏற்பாடு என புரியவில்லை. பெண்களில் (பெரும்பாலோனோர் )திருமணமாகி விட்டதும் அதுவும் ஒரு குழந்தை பிறந்துவிட்டபின் தனது உடல் நிலை பராமரிப்பை ஏறக்குறைய கைவிட்டு விடுகிறார்கள்தான், அல்லது மறந்தே போய்விடுகிறார்கள்.அது ஏற்பாடா? சாபக்கேடா? என்பது விவாதத்திற்குரிய விஷயமாகவே. 
ஊர் மந்தை காளியம்மங்கோவிலை ஒட்டிய ஆண்டாள் அத்தையின் வீட்டுத் திண்ணையில்அமர்ந்துஏதோஒன்றைமுறத்திலிட்டுசுத்தம் செய்து கொண்டும், புடைத்துக் கொண்டுமாய் இருந்தாய் நீ. அந்த வேலைத் தளமும், உனது கை விரைவும் ,உடல் அசைவுகளுமே எனக்கு பிடித்துப் போனது. சுண்டினால் ரத்தம் வருமளவு தோல்தான் சிறந்தஅழகாமே.சொன்னார்கள் விபரமறியாத வர்கள். அதெல்லாம் வியர்வை வாசம் மிகுந்த உனது வேலை முனைப் பின் முன் காணமல் போனதுதான் அன்பே.
தெருமுழுவதிலுமாய்அப்படியே ஜனங்கள் வற்றிப் போக நாம் இருவர் மட்டும் உழைப்பின் சுகந்தத்தில் லயித்துப் போகமாட்டோமா என ஆசைப் பட்டதுண்டு அன்பே.தலையில்வாடித் தெரியும்மல்லிகைப்பூவும்,பூப்போட்டபாவாடையும், சாந்துப் பொட்டும் ,ஊதாக் கலர் ரப்பர் பேண்டுமே உனது அதிக பட்ச காஸ் ட்டியூம் எனச் சொன்னாய் நீ. 
அப்போதெல்லாம்உனக்குஅதிகபட்சஸ்நேகிதிகள் இல்லை என்று சொன்னாய் நீ.அந்த கிராமத்தில் உனக்கிருந்த ஒரே சினேகிதி சுமதிதான்.
அவளும் பள்ளி இறுதி வகுப்பை முடித்துவிட்டு கல்லூரி வாசலில் கால் வைத்த நேரம்.மற்ற உன் வயது இளசுகளெல்லாம் உனது நெருங்கிய சொந்த ங்களே. அவர்களிடமும் உன் வயதான பாட்டியிடமும், பகிர்ந்து கொள்ள முடியாத விடலைப் பருவத்தின் இனிக்கும் எண்ணங்களை ,கனவுகளை, என்னுடன் பகிர்ந்து கொள்கிறாய் நிறைவுடன்.
அதில் அப்பிக் கிடந்த ,சந்தோஷங்களும் துக்கங்களும், ஏக்கங்களும்,விட்டேத் தியானபெருமூச்சுகளும்,எல்லைகளற்றஇலக்கில்லாத கனவுகளும், உன்னை எவ்வளவு தூரம் அலைக் கழித்திருக்கும் என இப்போது உணர முடிகிறது அன்பே.
அப்படி உணர முடிகிற தருணங்களும்,மனதும் பரஸ்பரம் நம் இருவருக்கும் இருக்கிறதாலேயே நமக்கு திருமணமாகி ,இரண்டு பிள்ளைகள்ஆகிவிட்ட இந்த பதினைந்து வருடங்களும் ஒருவரை ஒருவர் முடிந்து வைத்துள்ளோம் மனதில். வேறென்ன ஆரம்ப வரிகள்தான்.  

No comments: