6 Oct 2010

சர்க்கஸ்


        


          அண்மையில் ஒரு சர்க்கஸிற்கு சென்றிருந்தேன்.எனக்கு விருப்பமில்லாத ஈடுபாடுஇல்லாத விசயமாகத்தான் அது இருந்தது.   எனதுவிருப்பமில்லாத்தனத்தையும் ,ஆசையையும் என் மனைவி மக்கள் மீது ஏற்றி........அவர்களும் என்னைப் போன்று அதைநிராகரிக்க வேண்டும் என நான் செய்த
முஸ்தீபுகளில் எதுவும் பயனற்றுப் போனது.விடுவதாக இல்லைஅவர்களும்.
    பத்தாம் வகுப்புப் படிக்கும் மகளும்,எட்டாம் வகுப்பு படிக்கும் மகனும் எனது மனைவியும்
ஒத்தைக் காலில் நின்றார்கள்.பின் என்ன செய்ய.....?
காலை இறக்கி வைத்து விட்டு
சம்மதித்தேன்.      மாசக் கடைசிதான் கஷ்டம்தான் என்றாலும் அவர்களை எங்கும் வெளியில்கூட்டிக் கொண்டு போகாத குற்றஉணர்வு ரொம்வே என்னை உறுத்த ரைட் சமாளிக்கலாம் என்ற எண்ணத்தில் போய்விட்டோம்.
    மாலை நேரம் நடந்த அந்த நிகழ்ச்சியில் கூடியிருந்த கூட்டத்தில் சரிபாதி ஆண்களும்,பெண்களும்.
    அது மாதிரியான நிகழ்ச்சிகளில் மட்டும் இல்லை.கல்யாணம்,காது குத்து,சடங்க்கு,சினிமா ,கோவில் .............,,,இதர,இதர நிகழ்ச்சிகளிலெல்லாம் பெண்கள் அதிகமாக கலந்துகொள்கிறார்கள் சமீபகாலமாக.அதிலும் கோவில் என்றால் கேட்கவே வேண்டாம்.கூட்டம்,கூட்டமாக நேர்த்திக் கடன்செலுத்திச்
செல்கிறார்கள்.அப்படி அவர்கள் செல்வதற்கான காரணம் என்னவாக உள்ளது.?என்பதே இந்த நேரத்து கேள்வியாகவும் உள்ளது.


No comments: