8 Oct 2010

கருகும் வேர்கள்






          நானும் அவரை கடந்த நான்காண்டுகளாய்ப் பார்க்கிறேன்அவர் சிரித்துஇன்றுவரை
நான் பார்த்ததே இல்லை.
நல்ல பேண்ட்,சர்ட், செருப்பும் போட்டு நான் பார்த்த்தேயில்லை. எண்ணெய் வழிந்து
வாடிப் போய் கசலையாய்த் தெரியும் அவரது ஷேவிங் செய்யப்படாத முகம் இன்றும்
மறக்கமுடியாத நினைவாகவே என்னுள்.

      உள்ளூர் கொரியர் ஆபிஸில்தான் அவருக்கு வேலை.கொரியர் சர்வீஸ் என பெயர் பலகை
மாட்டப் பட்ட அந்த தனியார் தபால்சர்வீஸ் அலுவலகத்தில் ஆணும்,பெண்ணுமாய்
அறுபது ,எழுபது பேருக்கு குறையாமல் வேலை பார்த்தார்கள்.

       +2 படிப்பிலிருந்து பி.காம் பட்டதாரி வரை இருந்த அவர்கள் அனைவரும்
இளவயதுக்கார்ர்களாகவே.
அவர்களின் மாதச் சம்பளம் ரூ.2500மற்றும் 3500 ஐத் தாண்டவில்லை.
சீனியர்,ஜூனியர் என அவரவர்களின் சர்வீஸிற்கு தகுந்தாற்ப் போல் நிர்ணயித்திருந்தார்கள்
சம்பளத்தை.

     காலையில் எட்டு மணிக்கு ஆரம்பிக்கிறது அவர்களின் இயந்திரமயமான வாழ்க்கை.

ஒன்பது மணி சுமாருக்கு தபால்களை பையில் அள்ளி திணிக்கிறார்கள்.ஊர்வாரியாக
பிரிக்கப்பட்ட தபால்களுடன் கிளம்பும் டெலிவரி பாய்கள் சைக்கிளிலும் பஸ்ஸிலுமாக
விறைகிறார்கள்.

       குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட நபருக்கு தபால் கொண்டு போய் சேர்க்க
வேண்டும். இல்லையென்றால்அரசு அலுவலகங்களில்ரூ 40,000 ஆயிரம் சம்பளம்
வாங்கிக் கொண்டு புரணி பேசித் திரிவதையும்,கோள் சொல்லுவதையுமே தனது
வாழ்க்கையின் லட்சியம் என நினைக்கிற அதிகாரிகள் மிகவும் வருத்தப் படவும், தனது
மேலதிகாரிகளிடம் புகார் செய்யவும் கூடும்.
     இதில் உள்ளூருக்குள் தபால் கொண்டு செல்லும் பையன்கள் மிகவும்பாக்கியச்சாலிகளாக.
அவர்கள் வெளியூர் செல்லும் பையன்களை ஏக்கத்துடனும் பரிதாபத்துடனும்
பார்க்கிறார்கள்.

     வெளியூர் செல்லும் டெலிவரி பாய்க்கு பஸ் காசு+ஒரு டீ கம்பெனிச் செலவாக ஏற்றுக்
கொள்ளப்படும்.உள்ளூருக்குள் செல்லும் பையனுக்கு அதுவும் கட்.
      அப்படி கட் பண்ணப் பட்டும் பஸ் காசு,டீ என அமைகிற அவர்களில் ஒருவர்தான்
எங்களின் அலுவலகத்திற்கு  தபால் கொடுக்க வருகிறார் அனுதினமும்.

     அவர் பீ.காம் படித்துள்ளாராம். அது தவிர டைப்ரைட்டிங் தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும்
ஹையர் பாஸ். அடிசனலாக கம்யூட்டர் ஒரு வருட சர்ட்டிபிகேட் கோர்ஸ் வேறு.

      கல்லுரியில் படிக்கும் போது அவர்தான் ஓட்டப்பந்தயச் சாம்பியனாம்.கபடி விளையாட்டில்
அவரின்சுறு,சுறுப்பு அனைவரையும் கவருமாம்.படிப்பும் பிற திறமையுமாய் சேர்ந்து கலந்து
கட்டித் தெரிந்த அவர் படிப்பு முடித்து சக கல்லூரி, மாணவர்களைப் போலவே கண்களில்
வும்,நெஞ்சம் நிறைந்த நம்பிகையுமாய்வெளிவந்திருக்கிறார். கம்பெனிகளின்
இண்டர்வியூக்கள்,வேலைக்காகப் போட்ட மனுக்கள், வேலை தேடியஅலைச்சல், அவமானம்,
"இன்னும்சும்மாதான் இருக்கியா"?..........என்கிற நக்கல் தொனிக்கிற கேள்விகள்,மனதை
குத்திக் கிழிக்கிற ஏளனப் பார்வைகள் எல்லாமும் ஒன்று சேர்ந்து அவரின்காத்திருப்பையும்,
எதிர் பார்ப்பையும் பின்னுக்குத் தள்ளி அவரை நோகச் செய்து விட அவர் வந்து சேர்ந்த
இடம்தான் கொரியர் ஆபீஸ்.

     அதே கொரியர் ஆபீஸில் அவர் பார்க்கும் வேலைக்குக் கிடைக்கும் போதாத சம்பளமும்
அவரது உழைப்பிற்க்கு கிடைக்காத அங்கீகாரமும் ,அவர் தபால் கொடுக்கப் போகிற
இடங்களில் படுகிற அவமானங்களும்,முதலாளியின் ஏச்சும்,பேச்சும்,வாழ்க்கையில்
அவர் சந்திக்க நேர்கிற இடர்களுமே அவரது விலை மதிப்பற்ற சிரிப்பை அவரிடமிருந்து
பறித்து விட்டிருக்கலாம்.

      அப்படியான தட்டிப் பறித்தலே அவரது அந்தகசலையானதோற்றத்திற்கும் ,
விட்டேத்தியான மன நிலைக்கும் வித்திட்டிருக்கலாம்.
    வேலை கிடைக்காத ஏக்கத்திலும் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு
அமர்த்தப்படுகிற
அவலத்திலும் படித்த படிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்காத கோபத்திலுமாய்
அவர்கள் திசை மாறி பறந்து தீவிரவாதிகளாகவும்,போதைப்பழக்கத்திற்கு
அடிமையானவர்களாகவும் இன்னபிற சமூக, தேச விரோதச் செயல்களுக்கு
துணை போகிறவர்களாகவும் ஆகிப் போகிறார்கள்.

       அந்தக் கொடூரத்தை தடுக்கும் கரங்களாயும்,அவர்களின் மன ரணத்திற்கு மருந்திடும்
மனதினராயும் சில முற்போக்கு சக்திகளும்,தன்னார்வலர்களும் மட்டுமே உள்ள
நிலையில் .............,,,,,,,,,,இவர்களைப் பற்றி உண்மையாகவே அக்கறைகொள்ள
வேண்டியவர்களாக நமது சமூகமும், சமூகம் சார்ந்த சக்திகளும்  இருக்கவேண்டும் என்பதே
இந்த எழுத்தின் ஆசை.



No comments: