7 Oct 2010

ஈர ஊற்றுகளாய்.......,,,,,,, 


         பார்த்த மாத்திரத்தில் பளிச்சென்று சிரித்து "என்ன செளக்கியமா?
ல் சே

 டீ சாப்பிடுங்க, என நெரிசல் மிகுந்த நாற்ச் சந்திப்பு சாலை ஓரம் ஒட்டுதலாய்
பேசி மகிழும் ஈர மனது எத்தனை பேரில் இருக்கிறது இங்கு என்கிற புள்ளி விவரம்
எப்போதுமே சரியாகவே பிடிபடாமலேயே.
அவர் ஒரு பட்டதாரி.படித்த படிப்பையும் சான்றிதழ்களையும்
தனது உடம்பின் அங்கமாகவே வைத்துக் கொண்டு இருந்த அவர்
 ரொம்பவும் காலம் கடத்தாமல் சைக்கிள் கடை வைத்துவிட்டார்.
         சைக்கிளுக்கு மட்டும் என இல்லாமல் "டூவீலர்ஞ்சர்,ரிப்பேர்,ஜெனரேட்டர், மோட்டார்
சர்வீஸ் என கலந்து கட்டி.
       சைக்கிள் கடையை ஒட்டி பின்புறம் இருந்த வெற்றிடத்தை "சைக்கிள்ஸ்டாண்ட்" என
அறிவித்துவிட்டார். நகரத்தை ஒட்டி நகரத்தின் பாதிப்போடு இருந்த கிராமம்அது.
        தேசிய நெடுஞ்சாலை அந்த ஊர் வழியாச் செல்வதால் எந்நேரமும் பிஸியாகவே
அந்த ஊரின் சாலை ஓரம்.
        அந்த சாலையை ஒட்டிய இடது புற மூலையில்தான் அவரின் சைக்கிள்+டூவீலர் +சைக்கிள் ஸ்டாண்ட் என்றிருந்த கலப்புக் கடை.
 வாஸ்து சாஸ்திரங்களின்உள்ளீடுகளுக்குள்சென்று அதை அலசி ஆராய்ந்து ,அதன் பின் அந்தக் கடையை வைக்கவோ ,திருத்தி அமைக்கவோ இல்லை அவர்.
        ஆனால் கடை நன்றாக இருந்தது. கிழக்குப்பக்கம் பார்த்த முன் வாசல்,மேற்குப்
பக்கமாய் வாய் திறந்திருந்த கொல்லை வாசல் .
        காலை வெயில் கடையைத் திறக்கும் அவரின் மேல் பட்டு நனைத்துத்தான்
நுழையும்.எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் கடையின் இரண்டு பக்கமுமாக நுழையும்
வெயில் உடம்புக்கு இயற்கையாகவே ஏற்றது என்கிற விஞ்ஞான ரீதியான உண்மையை
உணர்ந்தவராக அந்தக் கடையைக் கட்டியிருந்தார்.இவ்வளவையும் செய்தமனிதர்
சிரிப்பென்றால் என்ன விலை என்று கேட்கிறார்

       எப்பொழுதும் முகத்தில் ஒட்டியிருக்கும் இரண்டு நாள் தாடியும்,தளர்ந்தநடையும் ,
தொள,தொள சட்டையுமே அவரது தோற்றமாக இருந்தது. நாங்கள் பணிபுரியும்
அலுவலகத்திற்கு வரும் அவர் எங்களைப் பார்க்கும் பார்வை எதுவோ செய்யும்.

அந்த பார்வையில் தெரியும் அந்நியம் பளிச்சென பிடிபட எங்களுக்கானால் சிறிது கோபம் கூட வரும்.ஏன் இப்படி இருக்கிறார் என.
ஒருவேளை தனது படிப்பிற்கு குறைவாகப் படித்தவர்களிடம் தான் போய் நிற்க வேண்டி வருகிறதே என நினைக்கிறாரோ ?அல்லது .........,,,,,,, இங்கு வேலை பார்ப்பவர்களை விட நான் எந்த விதத்தில் குறைவாக படித்துள்ளேன்.
எந்த விதத்தில் தகுதி குறைந்தவனாய் இருக்கிறேன்.?ஏன் எனக்கு அரசு வேலைகிடைக்கவில்லை?என்கிற கேள்விகளை அவரது மனம் முழுக்க அடுக்கி வைத்திருப்பாரோ?
அதிலும் அவர் எங்களது அலுவலக கடை நிலைஊழியரை பார்க்கும் பார்வை இருக்கிறதே,,,,,,?அடேயப்பா,,,,,,,,,,,,...........,,,,,, /
பேசிப்பார்த்தபோதுதான் சொன்னார்.தான் படித்த படிப்பு ,அதற்காக செலவழித்த காலம், உழைப்பு, பணம்,தனது பெற்றோரின் கஷ்டம்......,, என இத்தியாதி,இத்தியாதிகளையும் சொல்லி தனது படிப்பிற்கும், தான்வாங்கிய பட்டத்திற்கும் வேலை தராத அரசு,மதிப்பு தராத சமூகம் இவைகளிடம் நான் எப்படி மதிப்புடன் நடந்து கொள்ள முடியும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது உங்களின் எதிர்பார்ப்பு? என்கிறதொரு கேள்வியும்,கோபமும்,பெருமூச்சுமாய் நிறுத்துகிறார்.
படிப்பு தவிர விளையாட்டு ,இதரத் திறமைமைகளிலும் சிறந்து விளங்கினோமே ,
எங்களால் நாங்கள் படித்த பள்ளிக்கும்,கல்லூரிக்கும் பெருமை கிடைத்ததே/ அங்கு படித்த படிப்பும், பெற்ற பட்டமும் பயன் இல்லாமல் பெட்டிக்குள்
வைத்து பூட்டப் பட்ட பழம் பேப்பராக ஆகிப் போன மாயமும் மர்மமும் எங்கு நிகழ்கிறது.?
ஒரு ஆணின் திறமையும்,தகுதியும் அரசுப் பணிக்கு அல்லது தனியார் வேலைக்குச் சென்று சம்பாதிப்பது மட்டுமேதான் என்பது இந்த சமுகத்தில் எழுதப் படாத சாசனமாக உள்ளதே.அதுஏன்?
சம்பாதிப்பவன் எவ்வளவு குடி கேடியாக, ஒழுக்கக் கேடு உள்ளவனாக இருந்தபோதும் கூட இந்த சமூகம் அவனை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் எங்களை மிகவும் கவனமாக புறந்தள்ள மறப்பதில்லையே? என்கிறதொரு துணைக் கேள்வியை நீநீநீ.......ளமாக வெளிப்படுத்திய அவரின் இதயத் துடிப்பு கண்களில் தெரிகிறது கோபமாகவும் கனலாகவும்.
இப்படி கண்களிலும்,இதயத்திலும் கனல் வளர்த்துத் திரியும் இவர்களைப் பார்த்த மாத்திரம் தோள்தட்டி அன்பாய் ஆதரவாய்ப் பேசி அவர்களின்
மன ரணங்களை ஆற்றும் ஈர மனது கொண்டவர்கள் இன்னமும் ஆங்காங்கே இருக்கிறார்கள்தான்.
அவர்கள் உள்ளவரை நாற்ச் சந்திப்பு சாலை ஓரம் என்ன ....,,,,?
பாலைவனத்தில் கூட ஈரம் சுரக்கும் பேச்சுவரும். http://myblog.blogspot.com/

No comments:

Post a Comment