துக்கத்தின் அடையாளம் சாப்பாட்டை மறுதலிப்பதோடு மட்டும் முடிந்து போகிறதா,அல்லது தனது பிடிவாதத்தை நீட்டித்து அதன் மூலம் மற்றவர்கள் கவனத்தை தன் மேல் குவியச் செய்வதாய் நீடிக்கிறதா?
இந்த இடத்தில் குறிப்பிட்ட தமிழ் படத்தில் வரும் வசனம் ஒன்று நினைவிற்கு வருகிறது. “மத்தவங்கள காப்பாத்தனும்னா நாம திராணியோட இருக்கணும்”
காப்பற்றுபவர்கள் மட்டும் அல்ல,முன் நின்று காரியம் செய்பவர்கள்,அந்த காரியத்தின் நடுநாயகமாய் இருப்பவர்கள்,அவர்களை சார்ந்தவர்கள் என எல்லோருக்குமாய் அர்த்தமாகிப் போகிற வசனம் அது.
அந்த வசனத்தின் மையக் கருவை புரிந்து கொள்ள மறுப்பவர்களாய் ஆகிப் போன இவர்கள் இந்தத் தளத்தில் பேசப் படுகிறார்கள்.
கடந்து போன பத்து நாட்களுக்கு முன்பாக எனது நண்பனின் தாயார் இறந்து போகிறார்கள்.
வயதுஎழுபதை தாண்டி இருக்கும் எனச் சொன்னார்கள். கர்ப்பப் பையில் வளர்ந்து விட்ட கேன்சர் முற்றி வளர்ந்து தொண்டை வரை வந்து விட்டது அண்ணம்,தண்ணி எதுவும் கிடையாது.
கடந்த ஒரு மாதமாய் படுத்த படுக்கைதான்.இரண்டுமாதமாய் வைத்துப் பார்த்திருக்கிறார்கள்.கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில்./ அவர்களும் இயலாமையை தெரிவித்து விட வீட்டிற்கு வந்து விட்டிருக்கிறார்கள்.
கடந்த வாரம் பேசிக் கொண்டிருக்கையில் நண்பனின் அப்பா அனைத்தையும் சொன்னார்.அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தவரின் கண்கள் கலங்கி நிறைந்து விட டீ சாப்பிட்டு விட்டுப் பிரிந்தோம்.
அவ்வளவுஅந்நியோன்யத்துடனும்,பிரியத்துடனுமாய்இருந்திருக்கிறார்கள்
என்கிற நினைப்புடனும்,கனத்த மனதுடனுமாய் வீடு வந்தேன்.
ஏற்கனவே எதிர்பார்க்கப் பட்ட மரணம்தான்,நோய் வந்து படுத்த படுக்கையாய் கிடந்த வயதானவரின் இழப்புத்தான் என்றபோதும் கூட தீடீரென நடந்தேறிவிடுகிற சம்பவங்கள் மனிதனை நிலை குலைத்து விடுகிறதுண்டுதான். அதிலும் தாயின் இழப்பு எனும் போது இவையெல்லாம் சற்று கூடுதலாகவே இருக்கும்.
எனது நண்பனுக்கும் அப்படியே.அதிகாலை நான்கு மணிக்கு சம்பவித்த மரணத்தை சுற்றம், சொந்தங்கள்,நண்பர்கள் என தெரிவித்து முடிக்க மதியம் மணி பணிரெண்டு ஆகியது.
மரணம் சுமந்த அடையாளத்துடன் வீடும்,துக்கம் சுமந்த அடையாளமுகங்களுடன் மனிதர்களுமாய் ./
எனது நண்பனின் தம்பி,அவனது அப்பா,மனைவி,மக்கள்,உறவினர்கள் என கோலப் புள்ளிகளாய் சிதறிக் கிடந்த அவர்களை விடுத்து தனியே ஒதுங்கி நின்ற நண்பனை சாப்பிட அழைத்தேன். வேண்டாம் என மறுத்து விட்டான்.கடைக்கு வேண்டாம்,எனது வீட்டிற்கு வாருங்கள் என கூப்பிட்ட போதும் அவன் பிடிவாதம் தளராதவனாய்.எரிச்சல் மேலிட எழும்பிய கேள்விகளை பகிர்ந்து கொள்ள முற்படுபவனாய் உங்களின் முன் சில,,,,,,,,,/
முதல் நாள் இரவு சாப்பிட்டவன் மறுநாள் மதியம் வரை எப்படி சாப்பாட்டை புறந்தள்ள முடியும்?
வயிறும், மனதும் பசி,பசி என சாப்பாட்டை எதிர்நோக்கி காத்திக்க வீண் பிடிவாதம் பிடிப்பது எப்படி சரியாய் இருக்கும்?
அந்த பிடிவாதம் அவருடன் மட்டும் நின்று போகிறதா?அல்லது அவரை சார்ந்துள்ள அவரை மையப் புள்ளியாய் வைத்து இயங்குகிற அனைவரையும் பாதிக்கிறதா?
இத்தகைய பிடிவாதங்கள் உண்மையானதுதானா?அல்லது மற்றவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி தனது இருப்பை அறிவிக்கிற முயற்சியா? என்கிற கேள்விகள் எழுவதை தவிர்க்க இயலவில்லை என்னுள். உங்களுள்,,,,,,,,,,,,,,,????
4 comments:
நண்பர் விமலன்!
தங்கப்பத்க்கம் சினிமாவில் ஒரு காட்சி வரும். இயக்குனர் மகேந்திரனின் வசனம் அது: "ஒரு வேளை சாப்பிடலையின்னா உசிரா போயிரும்" 64 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஒரு மனிதன் சங்கரலிங்கம் மடிந்த வெக்கைபூமி நமது விருது நகர். சுதந்திரப்போராட்டத்திலும் ஜெயிலில் சம உரிமை வேண்டி பகத்சிங் தலைமையில் போராடிய வழியும் கூட உண்ணாவிரதமே. அந்தப்போராட்டத்தில் ஜதீந்திரனாத் என்பவர் மரணமடைந்தே போனார். அதிகபட்சமாக நாமெல்லாம் அதாவது மூன்று வேளை சோற்றுக்கு இலக்கானவர்கள் அதிக பட்சமாக செய்வது ஆண்டுக்கு ஒன்று அல்லது இருமுறை இறந்து போன அப்பா அல்லது அம்மாவுக்காக ஒரு வேளை சோறுண்பதுதான். ஒரு வேளை சோற்றுக்க்கு அல்லற்படும் 45 கோடி சக மனிதர்களைப்பற்றியதல்ல இது...
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும், எங்களின் மனம் நிறைந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்
வணக்கம் நாராயணன் சார்.நான் சொன்னது வேறு அர்த்தத்தில்.தன்னையும் வருத்தி பிறரையும் வருத்துபவர்களைப் பற்றி.../
நன்றி அப்துல்காதர்சார்.உங்களின் வருகைக்கும்,மேன்மையான கருத்துக்கும்,,,,./
Post a Comment