பின்னே வடை இல்லாமலா?மாசக் கணக்கு.காலையில் பத்து மணிக்கு ஒன்று.
மதியம்பணிரெண்டுமணிக்குஒன்று.சாய்ங்காலம்4மணிக்கு ஒன்று.
மேனேஜர்,கேஷியர்,நான்மூன்றுபேருக்குமாகஇரண்டுடீ,ஒரு காபி,
தேவைப்பட்டால் வடை என கொண்டு வரும் டீக்கடைக்காரருக்கு ஒரு தங்கை உண்டு.
இருபது,இருபத்தி இரண்டு வயதிருக்கலாம்.பிரமாதமான அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் ,பிரமாதமான அசிங்கம் என்று சொல்லி விட முடியாது.
பார்க்க கண்ணுக்கு லட்சணமாய் இருந்தாள்.ஐந்தடி உயரத்தில் கருப்பாய் பூசினாற்ப்போலபளிச்செனஇருந்தாள்.டீக்கடைக்காரர்,அவரது மனைவி,தங்கை,
அவரது அப்பா இதுதான் அவரது குடும்பம்.
அந்த ஊரின் நுழைவாயிலில் ரோட்டின் மேல் வலது புறம் அவரது டீக் கடை. டீகடையை ஒட்டிய வீடு.காலையில் கடை விழித்ததிலிருந்து தண்ணீர் எடுப்பது,கடையையை சுத்தப் படுத்துவது,பாத்திரம் விலக்குவது வடை போடுவது,இட்லி சுடுவது என சகலத்திலும் அவரது தங்கையின் பங்கு நிறைந்து பரவியிருக்கும்.
டீக்கடை வேலை ,துணிதுவைக்க,சமையல் வேலை செய்ய ,பிள்ளைகளின் பாடு, தன்பாடு கவனிக்க தீப்பெட்டி ஆபீஸ் வேலக்குச் செல்ல என சரியாய் நகரும்அவளதுஅன்றாடங்கள். அவள்முன்பெல்லாம்கல,கலவெனநன்றாகச்சிரிப்பதாய் சொல்வார்கள்.
பதினாறு வயதில் அவளுக்கு திருமணம் நடந்தது.அண்ணன் மனைவியின் தம்பியைத் தான் மணம் முடித்து வைத்தார்கள். கல்யாணம் ஆன கையோடு புருசன் காரன் பிரமாதமாய் எங்கும் போய் குடிவைத்து விடவில்லை.
அதே ஊர்,அதே டீக் கடை,அதே அண்ணன்,அதே அண்ணனின் சம்ச்சாரம்.
“அங்க இங்க போயி வேலைக்கு அலைஞ்சு கஷ்டப்படுறத விட எங்க கூட டீக் கடையிலேயே இருந்துரு.குடியிருக்க வீடு,வேலைக்கு ஏங்கடை,சம்பளம் குடுக்க நானு,புருசனும்,பொண்டாட்டியும் சந்தோஷமா இருங்க,எதுக்குப் போயி ஒங்க ஊர்ல இருந்துக்கிட்டு.” என்கிற அண்ணனது பேச்சிற்கு உடன் பட்டார்கள்.
அன்றிலிருந்து அவர்களின் உழைப்பும்,பிழைப்பும் அங்கேயே மையமிட்டு விரிந்தது.அவர்களது இயந்திரத்தனமான உழைப்பிற்க்கு மத்தியிலாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.
“ஹீம் பிறந்தது பெண்ணா?”என்கிற சலிப்புடன்தான் அந்த குழந்தையைப் பார்த்தார்கள்.உடல் சுகம்,சுகக் கேடு எல்லாம் தாண்டி ஒரு வயது வரை அந்தக் குழந்தை நன்றாகத்தான் வளர்ந்தது.
அப்புறமாகத்தான் வருகிறது அந்த ஒரு வயது பெண்ணின் அப்பனுக்கு அந்த பாழாய்ப் போன காசநோய்.
ஏற்கனவே உடம்புக்குள் இருந்த வியாதிதான் எப்படியோ அவனை அரித்து,அரித்து தின்றுகொண்டிருந்திருக்கிறது.
கவனிக்காமல் விட்டதன் பலன் பாவம் ஒரு நாளது இரவில் ஆஸ்பத்திரியில் வைத்து அநியாயமாக இறந்து போகிறான்.
பாவம் என்னதான் செய்வாள் அவளும்.பதினாறில் கல்யாணம்,பதினேழில் குழந்தை பிறப்பு,பதினெட்டு முடியும் போது கணவனும் முடிந்து போகிறான். கணவன் இறந்த அன்று அவள் அழுத அழுகை இருக்கிறதே,அந்த ஊர் எல்லைதாண்டி பக்கத்து ஊரையும் பற்றிக் கொள்கிறது. எல்லாம்நடந்துமுடிகிறது.விதவையாகிறாள்.
பூ,பொட்டு,வளையல் எல்லாவற்றையும் விட அவளது விலை மதிப்பில்லாத சிரிப்பு அவளிள் இல்லை இப்பொழுது.
இந்த நேரத்தில் அவளை பார்க்காத கண்களும் ,காமப் படாத மனசுகளும் ரொம்பக் குறைவு.இதையெல்லாம் பார்த்த அவளது அண்ணனும்,
சொந்தக் காரகளும் எடுத்த முடிவுதான் அவளது இரண்டாம் கல்யாணம்.
சுடுகாட்டில் எறிந்து கொண்டிருந்த பிணத்தை அரையும், குறையுமாய் எழுப்பி கூப்பிட்டு வந்து அவளது கையில் ஒப்படைத்தது மாதிரி ஒருவனை திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.
அவன் ஒரு சூதாடி,குடிகேடி,பெண் சகவாசம் உள்ளவன்.ஆனால் உட்கார்ந்து சாப்பிட ஒரு தலை முறைக்கு சொத்து இருப்பதாய் பேசிக் கொண்டார்கள்.
கல்யாணமானஒருமாதம்வரைஒழுங்காகத்தான்இருந்திருக்கிறான். அப்புறம்தான் தெரிந்தது அவன் கட்டெரும்பாய் தேய்வது.
தேய்ந்து,தேய்ந்து ஒரு நாள் காணாமலேயே போய் விட்டான்.வருடம் மூன்றாகப் போகிறது.இதுவரை எங்கு போனான்,என்ன ஆனான்,என்ன செய்கிறான்தெரியவில்லை.ஆனால்இவள்இங்கேதனியேகிடந்து அல்லாடுகிறாள். முதல் கணவனுக்கு பிறந்த குழந்தையுடனும்,இரண்டாவது கணவனுக்கு பிறந்த குழந்தையுடனுமாக.
அவளது தேவைக்கு,அவளது குழந்தைகளின் தேவைக்கு நல்லது பொல்லதிற்க்கெல்லாம் அண்ணன் கையைத்தான் எதிர்பார்க்கிறாள்.
இரு குழந்தைகளும் பள்ளிக்கு செல்கிறார்கள்.அவள் பார்க்கும் தீப்பெட்டி ஆபீஸ் வேலை வருமானம் ஆவளது குடும்பதை ஓட்ட கண்டும்,காணாமல் இருக்கிறது.
குடும்பம் நடக்கிறது.அவள் ஓடுகிறாள்,தேய்கிறாள்,தவிக்கிறாள். என்ன செய்ய தெரியவில்லை??????????...............
14 comments:
இதயத்தை கனக்கசெய்கிறது உங்கள் பதிவு..
இது உண்மை சம்பவமா?..யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று எண்ணுகிறது மனம்..
:(
என்ன சொல்ல? மிகவும் கனமான பதிவு!
வணக்கம் ஹரீஸ் சார்.மனதும் இதயமும் கனக்க செய்கிற நிகழ்வுகள் நமது சமுதாயத்தில் நிறையவே உண்டு.
கனங்களை தாங்கித்தான் நமது சமூகம் பயணிக்கிறது வசந்த் சார்
பதிவு இதயத்தை கனக்க செய்கிறது. அந்தக் குழந்தைகளுக்கு அம்மாவாகவும் அப்பாவாகவும இருக்கவேண்டிய தேவை. ஓடாய் தேய்கிறாள்.
கலங்கடித்து விட்டீர்கள்... வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை...
நன்றி நிலாமதி அவர்களே.உங்களது கருத்துரைக்கும்,வருகைக்கும். அம்மாவாகவும்,அப்பாவாகவும் இருக்க வேண்டியவைகளை மீறி வேறொன்றாகவும் இருக்க வேண்டியதிருக்கிறது அவள்.அதை பதிவு செய்யவில்லை.கட்டாயங்களும்,
சமுகமும் ஒரு பெண்ணை படுத்தும் பாடும் அவளை வைத்திருக்கிற இடமும்,,,,..../
நன்றி பிரபாகாரன் சார்.உங்களது கருத்துரைக்கும்,வருகைக்கும்.
கலக்கங்களை அள்ளித் தெளிக்கிற சமூகம் விதைக்கிற ,காண்பிக்கிற படங்களின் பதிவுகள்தானே இவைகள் எல்லாம்.
கண்ணிருக்கென்றே வாழ்க்கைப்பட்டா ஜீவன்கள் நிறைந்ததாய் இருக்கும் சமூகம்தானே நம் சமூகம்!
கண்ணீருக்கென்றே வாழ்க்கைப் பட்டவர்களாக மட்டுமா?விந்தைமனிதன் சார்,
வானலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதை ஆகி விட்டதே:(
கொஞ்சம் பாரா பிரித்துப் போடுங்கள் சார். ரோஸ் கலர் எழுத்துரு படிக்க முடிவதில்லை. வேறு கலருக்கு மாற்றினால் நன்றாக இருக்கும்.நன்றி.
இச்சிப்பூ - தலைப்பிற்குப் பெயர்க்காரணம் சொல்லுங்களேன். நன்றி.
வணக்கம் கோபி ராமமூர்த்தி சார்,"இச்சிப்பூ",ஆலமரப்பூபோல
அதுவும் ஒன்று/
Post a Comment