25 Nov 2010

பேச்சுக்கால்,,,,,,,,

                              




     ரொம்ப நாள் கழித்து நானும் எனது மனைவியும் பேசிக் கொண்டிருந்தோம்.
ஆமாம்அப்படித்தான்ஆகிப்போகிறது.
காலை எழுந்தவுடன் காபி,டிபன்,சாப்பாடு என சமையலறையில் அவளும்,,,,,,,,,,,,,,
பையனின் பள்ளிப் புறப்பாடு, எனது அலுவலகப் புறப்பாடு என நானும்,,,,,,,,,,,,
மாலை வந்ததும் டீ.வி,கொஞ்சம் ஊறுகாய்ப்போல புத்தகம்,சப்பாடு,தூக்கம் என ரெக்கை கட்டிக் கொள்ளும் நாட்களின் மத்தியிலாக இப்படித்தான் நேரம் ஒதுக்கி சாவகாசமாக ஏதாவது பேசிக் கொள்வோம்.
     சமயத்தில்சண்டைகூடப் போட்டுக் கொள்வோம்.(ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவிற்கு போகும் அளவிற்கு அல்ல,மிஞ்சிப் போனால் ஒரு நேரசாப்பாட்டையாரவதுதியாகம்செய்துகொள்வோம் அவ்வளவே.)
      பெரும்பாலான தமிழக நடுத்தரவர்க்கக் குடும்பங்களில் உள்ள நிலைமையும் அது தானே?கணவன்,மனைவி இரண்டு பேரும் அரசாங்க வேலை அல்லது கணவன் மட்டும்.
     இரண்டு பிள்ளைகள், இங்கிலீஸ் மீடிய படிப்பு,கண்டிப்பாக ஒரு இரண்டு சக்கர வாகனம்,டீ.வி,மிக்ஸி,கிரைண்டர்,வாஸிங் மிஷின்,குளிர்சாதனப் பெட்டி இத்தியாதி,இத்தியாதி என 500 அல்லது 800 சதுர அடியில் மஞ்சள் பெயிண்ட் அடித்த  சொந்த வீடு,,,,,,,,,என செட்டில் ஆகிப் போன மத்தியதரவர்க்கம்.
    ஒரு நாள் மாலை டீ.வி யில் ஒரு நடிகரின் பேட்டி.
என் மனைவி சொன்னாள். “இந்தமாதிரிநாடகம்,நடிப்பு,புத்தகம்,இலக்கியம்னு,,,,,
இருக்குறவுங்களுக்கு பேரு இளிச்சவாயன்,பொழைக்கத்தெரியாதவன்னு  நம்ம உருல நம்ம சொந்தக்காரவுங்க மத்தியில பேரு”.என்றாள்.
   “வாஸ்தவந்தான்.நம்ம ஊருல மட்டும் இல்ல,பெரும்பாலான கிராமங்கள்லயும், டவுன்லயும்,அதான் நெலம.ஏங் நம்ம ஊர்ல கூட எடுத்துக்கயேன்.வடக்குத் தெருவுலஇருக்குறநம்மசொந்தக்காரங்க அப்பிடியில்ல,
அவுங்களுக்குஇந்தமாதிரிவிஷயமெல்லாம்ஏற்புடையதா இருக்குல்ல,
அவுங்களெல்லாம்தெருமொத்தமா கூலிக்குப் போரவுங்க.காலையில எந்திரிச்சு அவுங்கவுங்கவயித்துப்பாட்டமுடிச்சிட்டுஆம்பளைங்ககையிலமம்பட்டியோடவும்பொம்பளைங்ககளைவெட்டியும் கையுமா கெளம்பீருவாங்களே.
     வெயில்ல காஞ்ச்சு, மழையில நனைஞ்சு,நெழல்ல தைப்பாறி கையும்,ஒடம்பும் காய்ச்சுப் போயி ஒரமேருன அந்த சனங்க எண்ணிக்கையில நெறைய இருக்காங்க.
       ஆனா பொழக்கத் தெரியாதவன்,இளிச்சவாயன்னு சொல்ற இந்தத் தெரு சொந்தக் காரங்களுக்கு கொறைஞ்சது பத்து ஏக்கர் நெலமாவது இருக்கு.பம்பு செட்டுத்தோட்டம்,கொஞ்சம்வயக்காடு,மானாவாரிகொஞ்சம்னு இருக்காங்க,
    கோழிகூப்புடவும்,காபித்தண்ணியகுடிச்சிட்டு,தோட்டம்காடு,வயல்,பயர்,பச்சை
தண்ணிப் பாய்ச்சல் எந்த வேலைக்கு எந்த ஆளைக்கூப்புடலாம்?இந்த வேலைக்கு எத்தனை ஆளை வுடலாம்,,,,,,,,,,,,
எவ்வளவு சம்பளம் குடுக்கலாம்னு யோசிச்சிக்கிட்டு வெளக்கமாத்துக் குச்சியால பல்லக்குத்திக்கிட்டுதிரியிரவுங்களுக்காக நெறையப் பேர்க பாடுபட்டுட்டேதான் இருக்காங்க.
     அந்த பாடுபடுற ஜனங்களுக்கு,இந்த மாதிரி கலையும் இலக்கியமும் மனச நீவி விடுற மாமருந்தா மாறிப் போகுது.
அதனாலத்தான் அந்த வடக்குத்தெரு சொந்தக் காரங்கஅதமனசால ஏத்துக்குறாங்க.
     கலையும் ,இலக்கியமும் அது சார்ந்ததும்,அத சார்ந்தவுங்களும் நமக்காகத்தான். நம்ம கையாலதான் அவங்களுக்கு சாப்பாடு அப்படீன்னு நெனைக்கிறதாலத்தான்,,,,,,,,,,,,,, நம்ம மேற்குத்தெரு சொந்தக்காரங்களுக்கு இளிச்சவாயன்,பொழைக்கத் தெரியாதவன்னு படுது.”
என பேசிக் கொண்டிருக்கிற நேரத்தில் ஒரு நண்பரின் பேச்சு ஞாபகம் வருகிறது.
சிறுபான்மையினர் என்பவர் சிலுவை போட்டவரோ, குல்லாபோட்டவரோ அல்ல,
உழைக்கும் நாம் பெரும்பான்மை, கொடுக்கும் அவர்கள்  சிறுபான்மை,
பெரும்பான்மையான  நாம் எப்போதும்  கேட்டுக்  கொண்டே  இருக்கிறோம்.               
      சிறுபான்மையான அவர்கள் எப்போதுமே கொடுக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.கொடுப்பவர்களுக்கும்,வாங்குபார்களுக்கும்மத்தியிலாக இழுபடுகின்ற அமைப்பில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினரை
நசுக்குவதும்,கலைஇலக்கியவாதிகளைபிழைக்கத்தெரியாதவன்எனக் கூறுவதும் இன்றுவரை நடப்பில் உள்ள கசப்பான உண்மைதானே?       

23 comments:

ஹரிஸ் Harish said...

உண்மை தான்..

vimalanperali said...

நன்றி ஹரீஸ் சார்.

pichaikaaran said...

நல்லா சொன்னீங்க

vimalanperali said...

வணக்கம் பார்வையாளன் சார் நல்லாயிருக்கீங்களா?கருத்துரைக்கு நன்றி

போளூர் தயாநிதி said...

parattukal nalla aakkam
polurdhayanithi

vimalanperali said...

வணக்கம் போலூர் தயாநிதி சார்.உங்களது கருத்துரைக்கு நன்றி.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

//ரொம்ப நாள் கழித்து நானும் எனது மனைவியும் பேசிக் கொண்டிருந்தோம்.
ஆமாம்அப்படித்தான்ஆகிப்போகிறது.// பல குடும்பங்களில் இதுதான் நிலைமை. :(

vimalanperali said...

வணக்கம் கனாக் காதலன் சார்.நன்றி உங்களதுகருத்துரைக்கும்,
வருகைக்குமாக/

ஜெயசீலன் said...

உண்மைதாங்க விமலன் சார்... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் ஜெயசீலன் சார்.
நல்லாயிருக்கீங்களா?நன்றி உங்களது கருத்துரைக்கும்,வருகைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஜெயசீலன் சார்.
நல்லாயிருக்கீங்களா?நன்றி உங்களது கருத்துரைக்கும்,வருகைக்குமாக/

மோகன்ஜி said...

விமலன்! மத்தியதரம் பற்றிய உயர்தர பதிவு.நல்ல நடை. ரசித்தேன் விமலன் சார்!

vimalanperali said...

வணக்கம் மோகன் ஜீ சார் நறி உங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும்.

அழகிய நாட்கள் said...

தோழர் எங்கெங்கு பார்த்தாலும் இரு வர்ணங்கள் ( மனுவின் நால்வருணங்கள் இங்கே செல்லுபடியாகாது) ஆண், பெண், ஏழை, பணக்காரன், படித்தவர், கல்வியறிவு பெற முடியாதவர்,தீண்டாமையைக்கடைப்பிடிப்பவர் தீண்டாமைக்கு ஆளாபவர் என நீளுகிறது இரட்டையர் அணி.
பட்டாங்கில் உள்ள படி இட்டார், இடாதார் என இரு வேறு வர்க்கங்களை மறுப்பதற்கில்லை

Aathira mullai said...

சாதாரன மக்களின் பண்பை அழகாக புனைந்துள்ளீர்கள். அருமை..

vimalanperali said...

நன்றி திலீப் நாராயணன் தோழர்.நன்றி

vimalanperali said...

வணக்கம் ஆதிரா அவர்களே,உங்களது கருத்துரைக்கும் வருகைக்குமாய் நன்றி.

Unknown said...

மத்தியதர மக்கள் வாழ்க்கையை நல்லா படம் பிடிச்சு எழுதிட்டீங்க. எழுத்துக்காரங்க குடும்பம் பத்தியும்!

//இப்படித்தான் நேரம் ஒதுக்கி சாவகாசமாக ஏதாவது பேசிக் கொள்வோம். // நீங்க எழுதினதைப் பார்த்தா, பாவம், உங்க வூட்டுக்காரம்மா பேசவே வாய்ப்புக் கிடைக்கலை போலிருக்கே. ஹிஹி, நல்லவங்க பத்தி நல்லவங்களுக்குத் தானே தெரியும்:-)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சற்றுத் தாமதித்து விட்டேன் விமலன். என் தளத்துக்கு நீங்கள் வந்ததில் பெரும் மகிழ்வு.உங்கள் பாதையையும் வாசிக்க நேர்கையில் பிரமிப்பும் பெருமிதமும்.

ஒரு மத்திய தர வாழ்வின் காட்சியை ஒப்பனையின்றி எழுதிய இந்த இடுகையைப் படித்ததிலிருந்து தொடரட்டும் நம் உறவு.

test said...

சூப்பர்! எளிமையா, அருமையா சொன்னிங்க! :-)

Anonymous said...

உண்மை தான் " sir "

சிவகுமாரன் said...

///இரண்டு பிள்ளைகள், இங்கிலீஸ் மீடிய படிப்பு,கண்டிப்பாக ஒரு இரண்டு சக்கர வாகனம்,டீ.வி,மிக்ஸி,கிரைண்டர்,வாஸிங் மிஷின்,குளிர்சாதனப் பெட்டி இத்தியாதி,இத்தியாதி என 500 அல்லது 800 சதுர அடியில் மஞ்சள் பெயிண்ட் அடித்த சொந்த வீடு,,,,,,,,,என செட்டில் ஆகிப் போன மத்தியதரவர்க்கம்.///
........உங்க லிஸ்ட்ல கடைசியா சொன்னதுக்கு கனவு கூட காண மாட்டேங்கறீங்களே என்கிறாள் மனைவி. அப்ப நான் மத்திய தரம் கூட இல்லையா. பயம் காட்டுறீங்களே அய்யா.

vimalanperali said...

வணக்கம் சுந்தர் ஜீ சார்,வணக்கம் கெக்கே பிக்குணி சார்,வணக்கம் ஜீ சார்,வணக்கம் கல்பனா ராஜன் சார்,வணக்கம் சிவக்மரன் சார்,அனைவரின் கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றி.