20 Nov 2010

நல்லதொரு,,,,,,,,,,,,


                          


      ல்லதொரு காலை ஐந்து மணிக்கு ஒரு குறுநாவலைப் படிக்கிறேன்.
நாவலை படித்து முடிக்கவும் மணி ஆறு ஆகவும் சரியாக இருக்கிறது.நாவலை படித்து கொண்டிருந்த ஒரு மணி நேரமும் வேறெதுவும் இல்லை மனதிற்குள்.கதையும்,கதையின் களமும்,கதையின்,மாந்தர்களும் மட்டுமே மனதினுள்ளாகத் தங்கிப் போனார்கள்.
    அவர்களுடன் மட்டுமே உறையாடி உறவாடிக் கொண்டிருந்த நேரம் அது.அந்த ஒரு மணி நேரமும் ஒண்ணுக்கு தண்ணிக்கு எதுவுமே ஞாபகம் வரவில்லை.
    புத்தகம்என்னைஅப்படிஉள்ளிழுத்துஆட்கொண்டுவிட்டது  நாவலைபடித்துமுடித்ததும்வீடேமிகஅழகாக,ரம்யமாக,ரசிக்கத்தக்கதாகத் தெரிகிறது.
      தினம்,தினம் பார்க்கும் மனைவியும் பிள்ளைகளும் கூட மிக பொலிவு கூடிஅழகாகத்தெரிகிறார்கள்.மனசுசந்தோசத்தில்வியாபித்து,விரிவடைந்து
குதூகுலமடைகிறது.
     தூங்கிக்கொண்டிருக்கும்மனைவியையும்,பிள்ளைகளையும்  எழுப்பாமல் டீக்குடிக்க வெளியில் செல்கிறேன்.
   தார்ரோடும்,மிகக் குறைந்த அளவிலான பாதசாரிகளும் டீக்கடையின் ரேடியோ இசையும் மிகவும் ரசிக்கத்தக்கதாக.ஏற்றுக் கொள்ளவும் ஆக்கிக் கொள்ளவும் முடிகிறது என்னால்.
      நடை முறைவாழ்வில் அது எத்தனை பேருக்கு வாய்க்கிறது எனத் தெரியவில்லை.கைவரப்பெற்றிருக்கிறது என்பதும் புரியவில்லை.
     எனக்கு மட்டுமா அது ?எல்லோருக்கும்  அப்படித்தானே?நல்லதொரு படிப்பும்,நல்லதொரு காட்சியும் நம்மை அப்படியாக்கி விடுகிறதுதானே?ஆனால் யதார்த்தம்.............?வேறொன்றாகத் தானே விரிகிறது.தினசரிகளை விரித்தவுடன்   கொலை,கொள்ளை,கற்பழிப்பு.கடத்தல்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,போன்ற செய்திகளும் புத்தகங்களில் படிக்கிற தரக் குறைவான கதைகளும்,சினிமா நமக்கு காண்பிக்கிற மட்டமானகாட்சிகளும்,நம்மனதை ஊடறுத்து,செல்லரித்து,
காயடித்து, காயப்படுத்தி விடுகிறதுதானே?
    “டாடிமம்மி வீட்டில் இல்லை”களும், ‘பஜன் பஜன் கே,பஜன் பஜன்கே’களும் நமது தேசிய கீதமாகவும், ரிங்டோன்களாகவும்,,,,,,,,,,, அரிவாள் தூக்கிய படங்களே நம்மை கொள்ளை கொள்வனவாகவும் அமைந்து போகிறது
       கையில் பட்டாக்கத்தி  வைத்திருப்பவர்கள் புடைசூழ எதிராளியை தாக்கச் செல்லும் சினிமா கதாநாயகனை பார்த்ததும் மனது ஒரு நிமிடம் ஏங்கிப்போய் விடுகிறதுதான்.
    அதே போன்ற காதநாயகத் தனத்திற்காக ஏங்கி  உருவகப் பட்டுப் போகிறது மனம்.
     இத்தனை கடுமையாக சட்டம் பிரயோகிக்கப் பட்டபின்பும் கூட ஈவ் டீசிங்குகள் தொடர்வதும்,நகரின் இதயப் பகுதியில் காலை எட்டு மணிக்கு கொலை நடப்பதும் எதன் பாதிப்பாய் தெரிகிறது அல்லது எதன் பாதிப்பாய் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது?
      அண்மையில் தினசரியில் படித்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியூட்டுவதாய் இருந்தது.35 வயதை தாண்டிய அந்த வாலிபர் இரவு வேலைகளில் தனியாகத் தூங்குவதோ,விளக்கைஅனைத்துவிட்டுத்தூங்கச்செல்வதோ கிடையாதாம்.
     இரவு வேலையில் தனியாக பாத்ரூம் கூடப் போக மாட்டாராம்.ஏன் அப்படி எனக்கேட்டபோதுஅந்தஇளைஞன்தெளிவாகவே சொல்லுகிறான்.
       தொலைகாட்சி யில் வருகின்ற மர்மத் தொடர்களும்,மர்ம நாவல்களில் வருகின்ற கதாப் பாத்திரங்களுமே என்னை இப்படி செய்து விடுகின்றன என./   
  ஏன் இவைகளெல்லாம் இவைகளை தவிர்க்க முடியாதா?என்கிற கேள்வியின் விடையாகவே, அல்லது ஒரு சிறு ஆலோசனையாகவோ இந்தக் கட்டுரையின் ஆரம்பவரிகள்தான்தோனுகிறது.         
     ஆரம்பவரிகளைதிரும்பவும்படித்துவிட்டுகூறுங்கள்.
     முடிந்தால்செயல்படுத்திப்பார்க்கலாம்.
     முயன்றால்எதுவும் முடியும்தானே? 

No comments: