21 Nov 2010

காலக்கண்ணாடி.

       
                 

        ஒரு சிற்பியின் உளி உராய்வில் நேர்த்தியான சிலை உருவெடுத்து விடுகிறதுதான்.
     வண்ணங்களின் கலவைகளிலும்,ஓவியரின் கைவண்ணத்திலும்அழகான ஓவியம் படைக்கப் பட்டுவிடுகிறதுதான்.
     சிறுகதை எழுத்தாளரிடமிருந்து நல்ல சிறுகதையும்,நாவலாசிரியரிடமிருந்து நல்ல நாவலும்,கட்டுரையாளரிடமிருந்துநல்லகட்டுரையும்,கவிஞரிடமிருந்து
நல்லகவிதையும் பிறப்பெடுக்கிறதுண்டுதான்.
       இவையெல்லாம் ஒரே நபரிடமிருந்து ஊற்றெடுத்தால், ஊற்றெடுத்து ஓடினால்,?
   ஊற்றெடுத்துருக்கிறதே,ஓடியிருக்கிறதே,,,,,,,,,
   மிதமானசலசலப்பும்,லேசானஅசைவுகளுடனும்ஓடும்சிற்றோடையாய்,மண்டியும்
மகிழியுமாய் சுழித்துக் கொண்டு ஓடும் வெள்ளமாய்,அமைதியான மாலை நேர
கண்மாய்த் தண்ணீராய்,மலை உச்சிக்கும் தரைக்கும் இணைத்துக் கட்டப் பட்ட அருவியாய்,நடனமிடும்நதியாய்,குதித்தோடும் ஆறாய் ,,,,,,,,பல பரிணாமங்களில் ஒரு புத்தகம்.
   “சிதம்பரம் நினைவுகள்”மலையாள எழுத்தாளர் நவீன கவிஞர் என அறியப்பட்ட திரு. “பாலச்சந்திரன் சுள்ளிக்காடு” அவர்கள் எழுதி தமிழில் திருமதி கே.வி சைலஜா அவர்களால் மொழிபெயர்க்கப் பட்ட நூல்.
     152 பக்கங்களில் 21 தலைப்புகள். “வாழ்வின் சில நிகழ்வுகள் மங்கி மறைந்து போகாமல் மீண்டும்,மீண்டும் அலைமோதிக் கொண்டிருக்கின்றன.அந்த நிகழ்வுகளை வார்த்தைகளில் கோர்த்து பார்க்கத் தோன்றியது.அப்படி உருவானதுதான் இந்த வாழ்க்கை குறிப்புகள். ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று,ஒருபோதும் எதிர்பார்க்காத  ஏதோ ஒன்றை அது உங்களுக்காக பொத்தி,பொத்தி வைத்துக் காத்திருக்கும் எப்போதும்.”என்கிற முன்னுரையுடன் எழுத ஆரம்பிக்கிறார்.
    மெல்லஆரம்பிக்கிறார்,நிகழ்வுகளைசொல்லிச்செல்கிறார்,காட்சி விரிக்கிறார்.
படம் காண்பிக்கிறார்உண்மையிலேயே மனம் புல்லரித்தும் பிரமித்தும் போய்விடுகிறதுதான்.
  புத்தகத்தின் களமே அவரை மையமிட்டுதான்.தன்னைப் பற்றி,வயதான காலத்தில் கோவிலில் குடியிருக்கும் “பென்ஷன்” தம்பதி பற்றி,தன் அப்பாவை பற்றி,கல்லூரி தோழியை பற்றி ,வயதான மூதாட்டி பற்றி, தன் சக மாணவன் பைத்தியமாகி அலைவது பற்றி,ஓணம் திருவிழாநாளில் தான் வயிற்றுப் பசியோடு அலைந்தது பற்றி,படித்த கல்லூரி,பீஸ் கட்ட முடியாத நிலை,கல்லூரியிலிருந்து வெளியேற்றம்,,,,,,,,இவை பற்றி,,,,,
    இளமையில்,காதல் நாட்களில்,தன் காதலி கர்ப்பமடைந்து; கர்ப்பத்தை கலைக்க அலைந்து கடைசியில் ஒரு கர்ப்பகால சிசுவை கொன்ற மன உளைச்சல் பற்றி,,,,,
     பணத்தின் அத்தியாவசியப் பொழுது எங்கு எப்படி நேர்ந்தது என்பது பற்றி,சூழல் காரணமாக ஓரு விலை மாதுவை வீட்டிற்கு கூட்டிச் சென்று தன் மனைவியிடம் அறிமுகம் செய்து வைத்தது பற்றி,மாணவப் பருவத்து பெண் வெறுப்பை மாற்றிய மாணவியை பற்றி ,,,,,,,,
       எண்ணெய்க் கார செட்டியாருடனான உறவு பற்றி,நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன்அவர்களுடனானசந்திப்புபற்றி,எனஇன்னும்,இன்னுமாக்க நிறைய அவரைப்ப்பற்றி./
     தன்சுகம்,துக்கம்,அழுகை,கண்ணீர்,சந்தோஷம்,அழுக்கு,சுத்தம்என கவிதையாக,சிறுகதையாக,கட்டுரையாக,நாவலாக,நாடகமாக ,,,,,,,,,/
         தவழ்ந்து,கையூன்றி,சுவர்பிடித்துநடைபழகி,ஒருபூந்தோட்டத்தில்,
கரடுமுரடான பாதையில்நடந்து போன அனுபவம்  கிடைக்கிறது புத்தகத்தை படித்தவுடன்./
    ஒரு படைப்பாளியின் சொல் ஆற்றலையும்,எழுத்து வன்மையைய்ம் விட அவரது மன பிசைவுகளே இங்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.  
அதுவே புத்தகத்தின் வெற்றியாகவும்  ஆகிப் போகிறது.    

6 comments:

Anonymous said...

பதிவுலகில் புத்தக விமர்சனம் குறைவு தொடருங்கள்

vimalanperali said...

வணக்கம் சதீஸ்குமார் சார்.உங்களது கருத்துரைக்கு நன்றி.

KANA VARO said...

ஒரு சிற்பியின் உளி உராய்வில் நேர்த்தியான சிலை உருவெடுத்து விடுகிறதுதான்.

வண்ணங்களின் கலவைகளிலும்,ஓவியரின் கைவண்ணத்திலும்அழகான ஓவியம் படைக்கப் பட்டுவிடுகிறதுதான்.

சிறுகதை எழுத்தாளரிடமிருந்து நல்ல சிறுகதையும்,நாவலாசிரியரிடமிருந்து நல்ல

நாவலும்,கட்டுரையாளரிடமிருந்துநல்லகட்டுரையும்,கவிஞரிடமிருந்து
நல்லகவிதையும் பிறப்பெடுக்கிறதுண்டுதான்.

இவையெல்லாம் ஒரே நபரிடமிருந்து ஊற்றெடுத்தால், ஊற்றெடுத்து ஓடினால்,?\\

Super intro...

நல்ல விடயம், பகிர்வுக்கு நன்றி

vimalanperali said...

KANA VARU சார் வணக்கம்,உங்களது கருத்துரை ஈர்த்து விட்டது.

Anonymous said...

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு
பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_12.html

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

cheena (சீனா) said...

அன்பின் விமலன் - நல்லதொரு புத்த்க விமர்சனம் - வலைச்சர அறிமுகம் - வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா