21 Nov 2010

டீக் கிளாஸ்,,,,,


                      

    
     எனக்குத் தெரிந்த டீக்கடை மாஸ்டர்கள் நான்கைந்து பேர் உண்டு.தவிர போகிற வருகிற இடங்களில் டீக் குடிக்கையில் மாஸ்டர்களை பார்த்ததும் உண்டு.
     ஒருவர் டீப் போடுகையில் உடலை ஆட்டிக் கொண்டே போடுவார்.தொந்தி மட்டும் குலுங்கும்.இன்னொருவர் கையை ஆட்டிக் கொண்டே அந்தரத்திற்கும் தரைக்குமாக டீ ஆற்றுவார்.
     இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக டீப் போடும் அழகே தனிதான்.அப்படியெல்லாம் டிசைன் டிசைனாக டீப் போட்டுத்தந்த மாஸ்டர்களைஇப்பொழுதெல்லாம்பார்க்கமுடியவில்லையே?எங்குதான் போனார்கள் அவர்கள்?
     வேறுஎங்கேனும் போய்விட்டார்களா?இங்கேதான் இருக்கிறார்கள்.ஆனால் அவ்ர்களின் டிசைன்,டிசைன் டீ தான் இல்லை.அமைதியான டீதான்.
  “மாஸ்டர் ஒரு டீ. ம்,,,,,”
  “மாஸ்டர் ரு காபி. ம்,,,,,,,”
  “சீனி கம்மி. ம்,,,,,”
 “ ஸ்ட்ராங்காக .ம்,,,,,”
    இதைத்தவிரஅந்தடீமாஸ்டரிடம்ஆரவாரமானஎந்தவித   வார்த்தையையும்,
சந்தோஷத்தையும் காணவில்லை.
மிஞ்ச்சிப் போனால்,என்ன என்றால் என்ன அவ்வளவுதான்.மூன்று ரோடுகளும் ஒரு தெருவின் முனையும் சந்திக்கும் முக்கியமான வளைவு அது.
     அந்த ரோட்டின் இரண்டு பிளாட்பாரங்களிலும் அருகருகே குறிப்பிட்ட இடைவெளிவிட்டுஇரண்டு டீக்கடைகள் அமைந்திருக்கும்.டீக் கடையென்றால் வடை  இல்லாமலா?
    சாய்ந்திரம் ஐந்து மணியிலிருந்து வடையும்,டீயுமாக வியாபாரம் தூள் பறக்கும்.சிறியதாக கிழிக்கப் பட்ட இலையில் இர்ண்டு வடை, கொஞ்சம் தேங்காய் சட்னி,என அவரவர்கள் சக்திக்குத் தகுந்தவாறு வாங்கிச் சாப்பிட டீக்குடிக்க ,,,,,,, என கூட்டம் நிறைந்து நிற்பார்கள்.
     கடை முதலாளி கைகளும்,கண்களும் போதாமல் தெய்வத்திடம் வரம் கேட்டுக்கொண்டிருப்பார்.காலையில்வேலைக்குப்போன சித்தாள்,கொத்தனார்,
தச்சுத்தொழிலாளி,எலெக்ட்ரீசியன்,பிளம்பர்,பெயிண்டர்கைவண்டி இழுப்பவர்,
டயர் வண்டிக் காரர்,மூடை தூக்குபவர்,இன்னும்,இன்னுமான நிறைந்து போன கூலித் தொழிலாளர்,நாள் முழுக்க ரத்தத்தை வியர்வையாய் சிந்தி உழைத்து,களைத்து  வீடு செல்லும் போது அப்படியே சாலை ஓரமாக நின்று டீகுடிக்க வசதியாகயாகவோ,செளகரியமாகவோ அப்படி ஒரு டீக்கடை அமைந்து போனது சந்தோஷம் தருகிற விஷயங்களாகவே/டீயும், வடையோடு  மட்டும் கடைக்கு வந்து போகிறவர்களின் உறவு முடிந்து போவதில்லை. அங்கே பகிர்ந்துகொள்ளப்படுகிறசுகம்,துக்கம்,குடும்பம்,உறவு,பிள்ளைகள்,படிப்பு,வேலைபொருளாதாரம் ,,,,,,,,,,, என்கிற நிறைந்து போனவைகள் உண்டு.
அம்மாதிரியான உண்டுகளின் சுகத்திற்காகவே டீக் கடைகளுக்கு வந்து போகிறவர்களும் உண்டு.
       ஒரு உணவு இறங்கிய திருப்தி கூலித் தொழிலாளிக்கு.காசு வந்த சந்தோசம் கடை முதலாளிக்கு.
     ஆனால் கடந்த சில வருடங்களாகவே இந்த  காட்சிகள் அரை மயக்க நிலையில்  இருப்பவனின்   கண் காட்சிகளாக மங்கிக் கொண்டுவருகிறதே.
       நகர் முழுவதும் உள்ள ஒட்டு மொத்த டீக்கடைகளிலும் இதுதான் நிலையா என்றால் இல்லை .
   பத்துக்கு இரண்டுபழுதில்லை என்பதுதான் நிதர்சனமாக உள்ளது.ஏன் அப்படி?தெரிந்தால் சொல்லுங்கள்.

4 comments:

 1. வணக்கம்; தங்கள் இடுகைகள் சிறப்பாக உள்ளன; வாழ்த்துகள்!

  அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை என்பதுதானே ஊர்மை?

  ReplyDelete
 2. நன்றி சார் உங்களது கருத்துரைக்கும்,வருகைக்கும்.

  ReplyDelete
 3. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. வணக்கம் kana varu சார்,உங்களது கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete