22 Jan 2011

செதுக்குமுத்து


                  
   
     ஒன்றை செய்து முடிக்கையில் பிறிதொன்று விட்டுப் போகிறதுதான்.காலை ஐந்தரை மணிக்கெல்லாம் விழிப்புத்தட்டிவிட்டது.ஆனாலும் குளிருக்குப் பயந்து போர்வையை இழுத்து மூடிக் கிடந்தான்.
      முன்பெல்லாம் காலிலிருந்து தலைவரை முகத்தையும் சேர்த்து மூடிக் கொண்டுபடுத்தாலும்ஒன்றும்தெரிவதில்லை.இப்போதெல்லாம்மூச்சு முட்டுவது போல் ஒரு உணர்வு.வயது கூடிக்கொண்டே போகிறதுதானே?ப்ரஷரிலிருந்து சுகர்வரைஎல்லாம் அப்பிக்கொண்டிருக்கிறது.
வாரம்தவறாமல்ஹோமியோபதி டாக்டர் கந்தசாமியைத்தான் போய் பார்க்க வேண்டியிருக்கிறது.அவரும் ரொம்பவும் செலவு வைக்காமல் இது,இது இப்பிடி,இப்பிடி,இந்தந்த மாத்தரையைசாப்பிட்டுவிட்டு இப்படி,இப்படி இருந்து கொள்ளுங்கள்.ரொம்பவும் மனதைப் போட்டு உழட்டிக் கொள்ளவேண்டாம் என்பார்.
சரித்தான்கெமிக்கலின் பாதிப்போடு சாப்பிடுவதை விடுத்து, அது இல்லாமல்  மருந்துமாத்திரைசாப்பிடுவதுநிறையவே பிரயோஜனமாகவும்,மனநிறைவாகவும்.
     இந்த தைமுடிந்தால் 49 பிறக்கிறது.அவனது மூத்த மகன் கூட அடிக்கடி கேலி செய்கிறான். அப்பா ஒங்களுக்கு வயசு ஆயிருச்சு.”என. சொல்லியவனும்,அவனது மனைவியும் அந்தப் பேச்சுக்கு சிரித்துக் கொள்கிறனர். “ஆமாமா,நீ மட்டும் அப்பிடியே மார்க்கண்டேயனாவா இருக்கப் போற,இந்த பதினஞ்சு வயசுல பாரு மண்பானையில தண்ணி ஊத்தி வச்ச மாதிரி வயிரு,ஒடம்மெல்லாம் பாரு பொது,பொதுன்னு ஏதோ காத்தடிச்ச் வச்ச மாதிரி,போ,கிறுக்கா மொதல்ல ஒடம்ப கொறைக்கிற வழியப்பாரு,இதுல ஒங்க அப்பாவ கேலி பண்ணவந்துட்ட,அவர மாதிரி ஒரு நா இருந்துருவயா நீ?”என கணவனுக்கு வக்காலத்து வாங்குகிறவளாக மாறிப்போவாள் படக்கென.இந்த பேச்சைக் கேட்டதும் அவனது மகனின் முகமும் காற்று பிடுங்கிய பலூனாக.
 “தினசரி  காலையில எந்திரிச்சு வாக்கிங் போ,இல்லைன்னா சைக்கிளிங்க் போ,இல்லைன்னா வீட்டுல சின்னதா எக்சர்சைஸ் பண்ணிக்கப்பா,ஒடம்பு என்னாக்குறதுபின்னாடிஎன்பான்அவன்.“ம்,நானாபோகமாட்டேங்கிறேன்,நீங்கதான்விடமாட்டேங்குறீங்க.வீட்டுக்குள்ளயேபோட்டுஅடைச்சு
வைச்சுருக்குறீங்க.
கிரவுண்டுக்குப் போயி சைக்கிள் ஒட்டப் போறேன்னு சொன்னா விடமாட்டேங்க்குறீங்க.அப்பறம் சும்மா,சும்மா என்னையே குத்தம் சொன்னா எப்படி?என்கிறான் பதிலுக்கு கோபமாகவும்,சப்தமாகவும். 
ஏதாவது ஒன்றை செய்யச் சொன்னால் அதற்கான வசதி உள்ள இடங்களில் தான் செய்வேன் அல்லது சும்மா இருந்து விடுவேன்.என்கிற மனோபாவம் பிடித்தாட்டுகின்ற நிலையில் உள்ளவனாகிப் போன மகனது மனஅழுத்தம்தான்  “அப்பாவுக்கு வயசாகிப் போச்சு”என அடிக்கடி பேச வைக்கிறதோ?அவனது மனைவியை மறுக்க வைக்கிறதோ?அப்படியெல்லாம் மகனுக்குச்சொல்லும்ஆலோசனையைபின்பற்றி அவனும்,நடைபயிற்சி,சைக்கிள் ஓட்டுதல்,உடற்பயிற்சி அல்லது யோகா என ஏதாவது செய்யலாம் என்றால் முடிவதில்லை.உடலை அழுத்தும் சோம்பல்,மனம்நிரம்பிய சிந்தனை மெல்லிதான குளிர் இன்னும் விடியாத அரை இருள் என போர்வை விலக்காமல் வாயோரம் எச்சில் ஒழுக ஊத்தைவாயுடன் படுத்துக் கிடப்பான். அப்படித்தான் இன்றும் படுத்துக்கிடக்கிறான்.
     

       கட்டியிருந்த கைலி அவிழ்ந்திருந்தது.பூப் போட்ட கைலி.அந்தாதி கடையில்எடுத்தது.தவணைகடைக்கடைஎனஅதற்குபெயர்வைத்திருந்தான்.
அந்தக் கடைக்குப் போகும் மாதாந்தோறும் அவனது மனம் அவிழ்ந்து போகிறதுண்டு.காரணம்அந்தக்கடையில்வேலைபார்க்கும் பெண்பிள்ளைதான்.
   நன்றாக இருந்தால் இருபதுக்குள் இருக்கலாம் வயது அவளுக்கு.துணிகளுக்கு மத்தியில்பொதித்துவைக்கப்பட்டிருக்கும்உயிர் பொம்மையாய்.அங்குமிங்குமாய்
நடந்துகொண்டும், கடைக்கு வருகிறவர்களுக்கு துணிகளை எடுத்துக்
காண்பித்துக் கொண்டுமாய்.
நடப்பாள்,ஓடுவாள்.வேகமாய் எட்டெடுத்து வைப்பாள்.இப்படி அவளின் அசைவுகள் ஒவ்வொன்றிலும் கடை வளர்ச்சி பற்றிய சிந்தனை உள்ளடங்கியே இருக்குமே என எண்ணத் தோனுகிற வகையில்  நடந்து கொள்வாள்.
மெலிதானஅடர்த்தியற்றநிறத்திலும்,அளவிலுமானதாவணி,அதற்கு மேட்சிங்கான பாவடை,சட்டை கசலையான மெலிந்து சிவந்த தோற்றம்.சதை திரட்சியற்ற கைகளும்,கால்களும்,உடலுமாய் அவளது வறுமையை பறையறிவிக்கும்.
“வாங்கநல்லாயிருக்கீங்களா?,சேலைஎடுக்குறீங்களா?,பேண்ட்,சர்ட்எடுக்கிறீங்களா?வேறஏதாவதும்எடுக்குறீங்களா?என படபடப்பாள்.ஒரு முறை பார்க்கையில் பாவடை தாவணியில் இருந்தால் ,மறுமுறை பார்க்கையில் சுடிதார் போட்டுக் கொண்டிருப்பாள்.அதிலும் பளிச்சிடும் அவளது எளிமை அவனை ஈர்ப்பதாகவே.ஆனால் அந்த எளிமையை மீறிய அவளது தோற்றம் அவனை எங்கெங்கோ இழுத்துச் செல்வதாக அமைந்து விட, சங்கடம் மிக கிளம்பி விடுவான்.
அவள் அவளது வருமானம்,குடும்பம், பாடு என சுற்றி,சுற்றி கிளை பரப்பிரெக்கை கட்டி விடும். கடையைவிட்டு வந்த பிறகும் கூட அந்த எண்ணம் அன்றைய நாளின் பாதியை  ஆக்ரமித்துக் கொள்ளும்.அப்படியான ஒரு சங்கட தருணத்தில் எடுத்து வந்த கைலிதான் இது.
    முழங்கால் வரை ஏறியிருந்ததை இறக்க மனமில்லாமல் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டான் கழுத்து வரை.தலையில் குரங்குக் குல்லா மாட்டியிருந்தான்.பனித்த கண்கள் திறக்கவும்,திறந்த கண்கள் பனிக்கவுமாய் இருந்த கணம் வீடு அழகாக காட்சியளித்தது.மனைவி, பிள்ளைகள் இருவர் என படுத்திருந்த வீட்டில் எரிந்த இரவு விளக்கின் வெளிச்சம் வீட்டை ரம்யப் படுத்தியது.
       வேண்டாம்.........,இன்னும்சிறிதுநேரத்தில் பால்காரர் வந்து விடக்கூடும்.தண்ணீர் வண்டி தெரு முனையில் வந்து ஹாரன் அடித்து நிற்கும்.இரண்டும் வருவது அடுத்தடுத்ததான நிகழ்வாய் இருக்கும்.ஒருநாள் தண்ணீர் வண்டி முந்தும்,ஒரு நாள் பால்க்காரர் முந்தி விடுவார்.சமயத்தில் இரண்டுமே சேர்ந்தாற்ப் போல வந்துவிடுகிற சோகமும் நடந்து விடுவது உண்டு.அந்நேரம்,நீ அங்கு, நான் இங்கு என வேலைகளை பிரித்துக் கொள்வார்கள்.அப்படி பிரித்துக் கொள்ள சோம்பலாகிப் போகிற தருணத்தில் தண்ணீர் வண்டி போய்விடும்.பிறகு அந்த வண்டி பயணிக்கிற திசைகளில் பின்னாலேயே நூல் பிடித்து செல்ல வேண்டும். அதற்கெனஅரைமணி ஆகிப் போகும். அந்த  அரைமணி காலை நேரப்பயணம்
பள்ளிஅலுவலகப்புறப்பாடுகளின் போதுமட்டும்சிரமம்காண்பிக்கும்.
எந்தவெயில்,மழை,குளிரானாலும்சரி.இதுதான் அன்றாட ஏற்பாடாய் அவர்கள் குடியிருக்கும் பகுதியில்.
மழைவெள்ளமாய்ஓடினாலும்சரிஅதிகாலையில்தண்ணீர்வண்டி வரவேண்டும்.
வந்தால்தான் வீடுகளில் தாக சாந்திக்கும்,சமையலுக்குமாய்..........,மனைவியை எழுப்பினான்.அவள் மணிஎன்ன என கேட்டுவிட்டு திரும்பவும் படுத்துக் கொண்டாள்.நேற்றுஇரவேமுடிவுபண்ணிக்கொண்டுதான் படுத்தான்.
பொங்கலுக்கு மறுநாள்நல்ல நாளும்,அதுவுமாய் கறி எடுக்க வேண்டும்.ஆட்டுக் கறிஎடுத்து வருடக்கணக்கில் ஆகிப்போனது.300 ரூபாய் என்கிறார்கள்.அதற்கு கோழிக் கறி எடுத்து விட்டுப் போகலாம்.90 ரூபாய்தான்.ஆட்டுகறியை விட கோழிக்கறி நன்றாகச் சமைக்கிறாள் அவனது மனைவி.அதுவும் ஒரு காரணம்,பணமும் ஒரு காரணமாய் ஆகிப் போக கோழிக்கறிக்கே பெரும்பான்மை ஓட்டு.அவன் வீடு போலவேதான் அனைத்து வீடுகளிலும்  நிலைமைஇருக்கும்................சிக்கன் கடை,............சிக்கன் கடை என பெயர் பலகைகள் மாட்டிய கடைகளின் முன்பாக கூடியுள்ள கூட்டம் இதை உறுதி செய்வதாகவே/பொருளாதாரம் நலிந்த தேசத்தில் மக்களுக்கு வாய்ப்பது இதுவாகத்தான் இருக்கும் போல.......,/
அவனது மகனும் அதைதான் சொன்னான். “நாளைக்கு காலையில வெள்ளென எந்திரிச்சு கோழிக்கறி எடுக்கணும்” என. “வெள்ளென என்பது அவனது அகராதியில் காலை 6.30 என்கிறான்.
மனம் இல்லாமல் படுக்கையை விட்டு எழுந்து முகம் கழுவி கிளம்பிய போது மணி ஆறு.மனைவியிடம் 200 ரூபாய் வாங்கிக் கொண்டான்.இன்னும் பால்காரர் வரவில்லை.வீட்டில் தேநீர் போடவில்லை.தண்ணீர் வண்டிச் சத்தம் கேட்கிறது. “நீங்கள் போங்கள்” என அவசரப் படுத்தி கதவை பூட்டி விட்டுகுடத்தை தூக்கிக் கொண்டு ஓடினாள்.
      ஒரு கிலோ போதும் என தோன்றியது.வாங்கி விட்டான்.அவன்,மனைவி பிள்ளைகள் இருவர் அனைவருக்குமாய் ஒரு வேளை  போதும்.கூடவே தக்காளி,இஞ்சி என வாங்கிக்கொண்டான்,இதே நூற்றி நாற்பது வரை வந்து விட்டது.இனி டீ சாப்பிடவேண்டும்.எல்லாம் முடிந்து வீடு திரும்பும் போது மணி 7.30 ஆகியிருந்தது.
    
 
      இரண்டு மாதங்களாக வீட்டிற்கு பின்னால் கூட்டவில்லை.மனைவிதான் அவ்வப்பொழுது கூட்டிக் கொள்வாள்.இன்று மாடியையும் சேர்த்து கூட்ட வேண்டும்.கொல்லைப்புறம்,பக்கவாட்டாக கிடந்த வெளி,என கொஞ்சம்கிடந்த வெற்றிடத்தில்நின்றமரங்கள்இலைகளைஉதிர்த்துஇடத்தை ஆக்ரமித்திருந்தன.
    ஒரு வேலையை செய்து முடிக்கையில் மற்றொன்று விட்டுப் போகிறதுதான்.உதிர்ந்து கிடந்த மரத்தின் இலைகள்,ஈரம் பூத்திருந்த மண்,அதில் நெடித்து ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள்,இடது மூலை ஓரமாய் நின்ற அடி குழாய்,அதை சுற்றியிருந்த  கட்டப் பட்டிருந்த சிமெண்ட் தளம் என நின்றிருந்த இடத்தை தோட்டம் என்றார்கள்.ரகத்திற்கு ரெண்டாக மரங்கள் வைத்திருந்தார்கள்.வேப்பமரம்,பன்னீர் மரம்,தென்னை மரம்,அரளிப்பூ மரம் ........, என./பார்த்தவரை மரங்கள் நன்றாகத்தான் உள்ளது.கடந்த சில நாட்களாகவே தோட்டத்தை கூட்டவில்லை.பொங்கலுக்கு முதல் நாள் போகியன்று கூட்டியிருக்கலாம்.உடல் சோம்பல் மிகுந்து  விட்டது .சோம்பல் இப்பொழுது குப்பியாகக் கிடக்கிறது இப்போது மிகவும் தூசியாகக் கிடக்கிறது.
பொதுவாகவே அவனது தோட்ட வெளி அனைத்தும்நிரம்பியதாகத்தான் இருந்தது.
பூச்சிகள்,எறும்புகள்,பறவைகள்,கோழிகள்,ஆடுகள்,சமயத்தில்பன்றிகள் அனைத்தும் மேயும் பெருவெளியாகத்தான் இருந்துள்ளது.வீடுகட்டியது போக மீதம்இருந்தவெற்றிடத்தைத்தான்தோட்டம்எனஅறிவித்துக் கொண்டார்கள்.
அதில் ரகத்திற்கு இரண்டாக நின்றதில் மனதை பறிகொடுத்து விடுகிறவனாகவே அவன்.ஆனாலும் அதன் வளர்த்தியிலும்,அடர்த்தியிலுமாய் காயாமல் கிடக்கும் தரை உதிர்ந்து கிடக்கும் இலைகள்,ஈர வாடை அடிக்கும் மண்.
குளிர் காலங்களில் யாருடைய அனுமதியும் அற்று வீட்டிற்குள் நுழைந்து குளிர ஆரம்பித்து விடும் தருணங்களில் அவன் நினைப்பதுண்டு.ஒரு வேளை இந்த மரங்கள் இருப்பதானால்தான் இவ்வளவு குளிர்ச்சியும்,கொசுவும் வருகிறதோஎன.
அதெல்லாம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் இந்த மரங்களை வெட்டிவிட்டால் தேவலாம் என்கிறாள் அவனது மனைவி.
பன்னீர் மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருக்கிறது.வேப்பமரத்தில் காக்கையின் கூடு முட்டையுடன்இருக்கிறது.பூமரத்தில்பூக்கள்அழகழகாய் சிரிக்கின்றன.
     பூவே,பூவே காக்கையைப் பார்.காக்கையே,காக்கையே தேன் கூட்டை கவனி.தேன்கூடே,தேனீக்களேதேனைகாக்கைகளுக்கும்இன்னும் பிறவற்றிற்குமாய் பகிர்ந்து கொடுங்கள்.இங்கே ஆடு மேய்கிறது,மாடு வந்து போகிறது.பன்றிகளும்,நாய்களுமாய் வந்து ஊடாடுவது உண்டு.உடல் பெருத்த கோழி ஒன்றுதனது குஞ்சுகளுடன் அதோ தோட்டத்து மூலையில் உள்ள அடிகுழாய் அருகில்  ஈர மண்ணைகிளறியவாறு இரை தேடும்.இடது மூலையில் ஒரு கரிச்சான் குருவி தினசரி காலை 7 மணி சமீபம் தனது காதலியுடன் வந்து போவது உண்டு.இது போக அவனும்,அவனது மனைவியும்,பிள்ளைகளுமாய் சுற்றித்திரிவார்கள்.அவர்களுக்கும்,அவைகளுக்கும் தேனைக் கொடுத்து விட்டு நீங்கள் இஷ்டத்திற்கு சேகரித்துக் கொள்ளுங்கள் என சொல்லத் தோனுகிறது.
மரங்களை சுற்றியும்,வெற்று வெளியிலும்,மாடிமுழுக்கவுமாய் கூட்டி அள்ளிவிட்டு திரும்பப் பார்க்கிறான்.இடம் சுத்தமாய் இருந்தது.
வேர்வை நிரம்பியிருந்த உடலை துடைத்துக் கொண்டு தரையில் சிறிது நேரம் அமர்ந்து எழுந்து விட்டு கூட்டியதை அள்ளிப் போடுகையில்தான் கவனிக்கிறான்.தேனீக்கள் கூடு கட்டிய பன்னீர் மரத்தின் அடியில் கூட்டாமல் விட்டதை.குப்பையும்,மண்ணுமாய்கிடந்தது.
    அவற்றின்ஊடாக பறந்தும்,ஊர்ந்தும் சென்ற தேனீக்கள் மரத்தை சுற்றி பறந்தவாறும் ஊர்ந்தவாறுமாய்.
   ஒன்றை செய்து முடிக்கையில் பிறிதொன்று விட்டுப் போகிறதுதான்.அதுவும் நல்லதுக்குதான்.   
  

5 comments:

 1. Busy in middle class family well defined.
  Sir, I am now learning tamil transliteration. So I will write Tamil comment in your next blog.
  I promise Good Tamil.

  ReplyDelete
 2. //பொங்கலுக்கு மறுநாள்நல்ல நாளும்,அதுவுமாய் கறி எடுக்க வேண்டும்.ஆட்டுக் கறிஎடுத்து வருடக்கணக்கில் ஆகிப்போனது.300 ரூபாய் என்கிறார்கள்.அதற்கு கோழிக் கறி எடுத்து விட்டுப் போகலாம்.90 ரூபாய்தான்.ஆட்டுகறியை விட கோழிக்கறி நன்றாகச் சமைக்கிறாள் அவனது மனைவி.அதுவும் ஒரு காரணம்,பணமும் ஒரு காரணமாய் ஆகிப் போக கோழிக்கறிக்கே பெரும்பான்மை ஓட்டு.அவன் வீடு போலவேதான் அனைத்து வீடுகளிலும் நிலைமைஇருக்கும்................சிக்கன் கடை,............சிக்கன் கடை என பெயர் பலகைகள் மாட்டிய கடைகளின் முன்பாக கூடியுள்ள கூட்டம் இதை உறுதி செய்வதாகவே/பொருளாதாரம் நலிந்த தேசத்தில் மக்களுக்கு வாய்ப்பது இதுவாகத்தான் இருக்கும் போல.......,/
  அவனது மகனும் அதைதான் சொன்னான். “நாளைக்கு காலையில வெள்ளென எந்திரிச்சு கோழிக்கறி எடுக்கணும்” என. “வெள்ளென என்பது அவனது அகராதியில் காலை 6.30 என்கிறான்.//
  தோழர் விமலன்
  ஆட்டுக்கறியும் கோழிக்கறியும் தவிர்த்து மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறி எல்லாம் இருககிறது. நினைவில் வையுங்கள்

  ReplyDelete
 3. வணக்கம் ரத்தினவேல்,நாரயணன் சார்.நல்லாயிருக்கீங்களா?நன்றி உங்களது கருத்துரைக்கும்,பகிர்தலுக்கும்.

  ReplyDelete
 4. வணக்கம் ரவிகுமார் சார்.நலம்தானே?நன்றி உங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete