23 Jun 2011

சந்திப்பு,,,,,,,,,,,,


                       


       அந்த பழக்கடையை கடந்த விநாடிகளில் உன்னைப்பற்றிய நினைவுகள் என்னில் பீறிட்டுகிளம்பாமல் இல்லை.
      உன்னை நினைத்த மறுகணத்தில் கண்களில் கசிந்து ஈரம் வந்து உலர்ந்து போன இரண்டு சொட்டு நீரை  தடுக்க முடியவில்லை. விழியில் கசிந்து இதயம் உருக்கி உள்ளுள் உலாவும் நினைவு இதுதானோ கண்ணே?
     தினமும் நான் வாங்குகிற கடைதான்.மிஞ்சிப்போனால் இருபது அல்லது இருபத்தைந்துக்குள்ளாக ஏதாவதுவாங்குவேன்.
    ஒருநாள் வாழைப்பழம்,மறுநாள் திராட்சைப்பழம்,அதற்கடுத்த நாள் ஆப்பிள்  என்கிற மாதிரியாய் உருண்டு திரண்டு நிற்கிற பழங்கள் இரண்டு அல்லது மூன்று,,,,,,,,
    கடைக்காரரும் என்னைபார்த்ததும் சிரித்துக்கொண்டே எடுத்துக் கொடுத்து விடுவார் கேட்டதை.
    அவரதுசிரிப்பில்ஒருரசவாதவித்தைஇருந்தது.வியாபாரம் செய்யத்
தெரிந்தவர்களுக்கு மட்டுமே புடிபடுகிற வித்தை மாதிரியும் இல்லாமல் அனைவருக்கும் கைவரப்பெற்றதாயும் தோணாமல் நடுவாந்திரமாய் அமைந்து போன ஒன்றாய் அவரிடம் அது/
    சரி இருந்து விட்டுபோகட்டும் தவறில்லை.அதையே மூலதனமாக்கி அவர் தொழிலை விருத்திசெய்யும் கருவியாக,ஆயுதமாக வைத்திருக்கிறார் எனும் போது எழுகிற ஆச்சரிய அலைகள் என்னை போலவே அனைவருக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.
    பிள்ளைகள் இருவருமாய் நமது அம்மா வீட்டில் இருக்க இந்த முழுபரிட்சை லீவில் நாம் தஞ்சமடைந்த இந்த தஞ்சாவூரில் தினசரி நடந்த காட்சிகளை இப்போது ரீவைண்ட் பட்டன் போட்டு உனக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறேன் கண்ணே/
   எனக்கு பணியிடம் மாற்றம் கிடைத்து நாம் இங்கு வந்ததும் தினசரி அலுவலகம் விட்டு வருகையில் உனக்கும்,எனக்குமாய் வாங்கி வந்த பழங்கள் இப்போது நினைத்தாலும் இனிக்கிறது கண்ணே.அந்த இனிப்பையும் இனிப்பு தந்த பழங்களையும்,அந்த பழங்களை தந்த கடைக்காரரையும் இன்று மாலைபார்த்தேன் அன்பே/
     பார்த்ததும் உனது ஞாபகமும்,கண்ணில் துளிர்த்த நீரும் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.
    அலுவலகம்,அலுவலகம்முடிந்துரோடு,ரோட்டின்மீதுஊர்ந்த வாகனங்கள்,
பேருந்துகள்,மற்றும் இருசக்கர,,,,,,,,,,/
   அதைகடந்து விடுகிற போது சாலையின் இருமருங்கிலுமாய் தெரிகிற கடைகளைதாண்டி விரைந்து கொண்டிருந்தேன் எனது இருசக்கர வாகனத்தில்.
    பெரிய கோவிலை கடக்கிறேன்.கோவிலின் முன்பாக நின்றிருந்த போலீஸ்காரர்களைப்பார்க்கிறேன்.கோவிலுனுள் எரிந்த விளக்கு வெளிச்சத்தை பார்க்கிறேன்.கோவிலையும், கோவில் கோபுரங்களையும் இரவு வெளிச்சத்தில் பார்ப்பதற்காய்த்தான் இந்த ஏற்பாடு.ஆனால் பகலில் பார்ப்பது போல் இல்லை கோவிலின்அழகு.பார்க்கப்பார்க்கபிரமிப்பூட்டுவதாயும் எத்தனைமுறை
பார்த்தாலும் ஆச்சரியம் அகலாமலும் விழிவிரித்து பார்க்க வைக்கிற ஆச்சரியத்தை தன்னுள் அடக்கி வைத்திருக்கிற ஆயிரம் வருட அதிசயம் அது என்றே படுகிறது.
   “எந்த விஞ்ஞான வசதியும்,தொழில் நுட்ப வசதியும்  அற்ற காலத்தில் சாத்தியப்பட்டிருக்கிற ஒரு சரித்திர சான்று உயிரோவியமாய் நிற்கிறது இந்த ஆயிரங்களை கடந்து”என அசைபோட்டவாறு வருகிறபோது தென்படுகிற கார்ஸ்டாண்ட், அதில் உலாவுகிறமனிதர்கள்,சுற்றுலாவுக்கு வந்திருந்தவர்கள் என்கிறகூட்டத்தைதாண்டி வந்து கொண்டிருந்தேன்.
   மேம்பாலம்,அதுதாண்டி மெடிக்கல் காலேஜ் ரோடு அதுதாண்டி ரோட்டின் இருமருங்கிலுமாய் கடைகள்,என  வந்து கொண்டிருந்த போதுதான் இத்தனையும்.
    சென்ற சனிக்கிழமைவரை  என்னுடன் இங்கிருந்து விட்டு பிள்ளைகளுக்கு பள்ளி திறக்கிற நேரம் என நமது சொந்த ஊருக்கு சென்று விட்டாய் நீ,என்னைதனிமையில் விட்டுவிட்டு/
   ஒருமாதம் மட்டும் சும்மா தற்செயலாக வீடு பிடித்து இருந்தோம் அங்கு.இப்போது பிள்ளைகளுக்கு பள்ளி ஆரம்பமாகிற நேரம்.திரும்பவுமாய் பிடித்த வீட்டை காலி செய்து விட்டு உன்னையும்,பிள்ளைகளையும் ஊரிலிருக்கப்பண்ணிவிட்டு இப்போது நான் மட்டும் இங்கே.
   சரியாக அலுவலகம் மூடிய ஐந்து முப்பது மணிக்கு கடைவீதி சென்று நானும்,சக்கரபாணிஅண்ணனும்,ரகுஅண்ணனுமாகஒரு போர்வையும்,
தலையணையும் வாங்கினோம்.
    என்னைபோல் கதியற்றவர்களுக்கும்,ஊர் தெரியாதவர்களுக்கும்,உதவ எங்கும்எப்போதும்உதவகாத்திருப்பவர்களாய் சக்கரபாணிகளும்,
ரகுராமன்களும்,ஸ்ரீதர்களும்/
         காதிகிராப்டில்கேட்டுப்பார்த்துதோற்றுப்போய்அதற்குஎதிர்த்தாற்ப்போலிருந்த
துணிக்கடையில்வாங்கினோம்.ரூபாய்130க்குபோர்வையும்,70 க்கு பஞ்சுவைத்த தலையணை எனவுமாய்/
   வாங்கியதை இருசக்கரவாகனத்தில் வைத்து  கொண்டு வருகிற வழியில்தான் பழக்கடையும்,உனது நினைவும்/
    
      நீஎன்னைவிட்டுசென்றுமூன்று நாட்கள்தான் ஆகிறது.ஆனால் இந்த மூன்று நாட்களும் மூன்று யுகங்களாய் நகர்கிறது என் கண்ணே.
நகர்கிற நினைவுகளை சுமந்து கொண்டே நான் தங்கியிருக்கும் அறைக்குச் செல்கிறேன்.
     வழக்கம் போல வாரக்கடைசிசனிக்கிழமை வருகிறேன்.சந்திப்போம் அன்பே/      

4 comments:

 1. //வழக்கம் போல வாரக்கடைசிசனிக்கிழமை வருகிறேன்.சந்திப்போம் அன்பே/ //
  இனிமையாகத்தன் இருக்கும்!வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. வணக்கம் சென்னைபித்தன் சார்.நலம்தானே?அசைபோடும் நினைவுகளின் வெளிப்பாடே இந்த படைப்பு.நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக.

  ReplyDelete
 3. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வணக்கம் ரத்தினவேல் சார்.நலம்தானே?உங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete