17 Jun 2011

தூரம்,,,,,,,.


                 

இரவுகள் நீண்டும் பகல்கள்
சுருங்கிப்போயுமாய் தெரிகின்றன,
நீயும் பிள்ளைகளும் அற்ற நாட்களில்/
இந்நேரம் நீ வாசல்தெளித்து
கோலமிட்டுக் கொண்டிருக்கலாம்.
பிள்ளைகள் பள்ளிசெல்ல
ஆயத்தமாகிக்கொண்டிருக்கலாம்.
பால்காரர்வந்து
பால்ஊற்றிச்சென்றிருப்பார்
பற்ற வைத்தகேஸ்டவ்வில்
பொங்கும் பாலின் நினைவும்
குக்கரின்ஒற்றை
விசில்சப்தமும்கேட்க
கோலத்தை பாதியில் நிறுத்தி
நீஅடுப்படிக்குவிரைந்திருக்கலாம்.
பெரியவனின்முகப்பரு
எந்தஅளவுவற்றியிருக்கிறது
தெரியவில்லை.
சின்னவன் ஒழுங்காக சாப்புடுகிறானா?
உங்களதுதுணைக்கு
எனதுமாமியாரைவரச்சொல்லியிருந்தேனே
வந்திருக்கிறார்களா?
என்கிற விசாரணை எழுவதை
தவிர்க்க முடியவில்லை கண்ணே/
இரவு தூக்கம்வர மறுக்கிறது.
சாப்பாடு இறங்கவில்லை.
டீ கூட கசக்கிறது.
சுத்தமாய் குளிக்கக்கூடபிடிக்கவில்லை.
பல் துலக்குவது,துணிதுவைப்பது
மற்ற,மற்றதெல்லாம் அப்படியப்படியேதான்.
ஏன் என்று விளங்கவில்லை.
ஆனால் உண்மை
அப்படித்தான் இருக்கிறது.
நான் பணிமாற்றலாக்கி
மூன்று மாவட்டங்கள் தாண்டி
இங்கு வந்த நாட்களிலிருந்து
இப்படித்தான்
ஆகிப்போகிறது அன்பே/
காண்கிற கனவுகளிலெல்லாம்
நீயும்,பபிள்ளைகளுமாய்?
பார்க்கிற முகங்களெல்லாம்
உனதுமுகமாகவே/
சாலைகளில் பள்ளிக்கு விரைகிற
பிள்ளைகளின்முகங்களில்
நமது பிள்ளைகளின் முகங்கள்/
பார்க்கிற,பேசுகிற,பழகுகிற
எல்லோரிடத்திலும்
இதுவே பிரதிபலிக்கிறது.
நான் என்ன செய்யட்டும் கண்ணே/
இருந்தாலும்
இதோ ஓரிரு நாட்களில்
உன்னை பார்க்க வந்துவிடுகிறேன்
என் பிரிய மனைவியே?

11 comments:

 1. தூரமே எத்தனை பாரமாய்
  அன்புவயப்பட்டவர்களுக்கு
  அருமையான படைப்பு

  ReplyDelete
 2. வணக்கம் ரமணி சார்.நலம்தானே?நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக.

  ReplyDelete
 3. வணக்கம்.சரவணன் சார்.நலம்தானே?நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக,

  ReplyDelete
 4. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 5. வணக்கம் கூகுள் சிறீ.கொம் சார்.கண்டிப்பாக இணைக்கிறேன்.
  நன்றி.வணக்கம்.

  ReplyDelete
 6. பிரியமானவர்களைப் பிரிந்து இருப்பது கொடுமை. அதை தங்கள் கவிதை அழகாய் சொல்லியது. பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 7. வணக்கம் சித்திரவீதிக்காரன் சார் நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 8. வலிக்கிற வரிகளின் தொகுப்பு. ஒரு கணவனின் ஏக்கம் மிதக்கும் எழுத்துக்கள். பொருளாதாரம் என்கிற தவிர்க்க முடியா சக்தி மனிதர்களின் பாசப்பிணைப்பை கூறு போட்டுவிடுகிற ரணத்தை ரணத்துடனே அனுபவித்து சொல்லியிருக்கிறீர்கள். எத்தனை மைல்கள் தாண்டியும் இணைந்திருக்கும் இதயம் அது சேர்த்து வைத்திருக்கும் ஒவ்வொரு துளி ஞாபகத்தையும் வரிசைக்கிரமமாக வார்த்தைகளாக்கியிருக்கிறது இந்த கவிதை. அந்த ஞாபகங்களின் சாட்சி போதும் வற்றாத பாசத்தின் அடையாளத்துக்கு சாட்சி சொல்ல.

  ReplyDelete
 9. வணக்கம்.தீபிகா அவர்களே/நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 10. அன்பின் விமலன் - பணியின் காரணமாக் பிரிந்திருக்கும் கொடுமை - அப்பொழுது வரும் நினைவுகள் - அழகான் கவிதையாக மலர்ந்திருக்கிறது. நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete