19 Jul 2011

வழிபாடுகளாய்,,,,,,,,,,,,

                             

       தெய்வ வழிபாட்டை வெறுத்து ஒதுக்குபவனாக இருந்ததில்லை நான் இதுவரை.
அதே நேரத்தில் தெய்வ நிந்தனையில் முதல் ஆளாய் போய் முண்டியடித்துக் கொண்டு  நிற்பவனாயும் இல்லை.
    கோவிலுக்கெல்லாம்செல்வேன் மனைவிமக்களுடன்.ஆனால் சாமி கும்பிடுவதில்லை.
எல்லோரும்கையெடுத்துகும்பிடுகையில்நான்மட்டும்கைகட்டிக்கொண்டு நிற்பேன்.
யாராவது துணைக்கு என்னைப்போல நிற்கிறார்களா என மனதும்,புலன்களும் தேட யாராவது ஒன்றிரண்டு பேர் நின்றிப்பதைக் கண்டு மனம் சந்தோசமடையும்.
   சமயத்தில் அந்த சந்தோஷமும் கெட்டுப் போகும்.யாரும் துணைக்கு இருக்க மாட்டார்கள்.அந்த மாதிரியான நேரங்களில் எனது மனைவி சாமிகும்பிட கூப்பிய கையோடு என்னை பக்கவாட்டாக இடிப்பாள்.அதற்கு அர்த்தம் நீங்களும் கையெடுத்து கும்பிடுங்கள் என.
     கரெக்டாக அவளது முழங்கை எனது அல்லையில் பட்டு வலிக்கும். (எல்லோர் வீட்டிலும் விழும் இடிதானே இது?கொஞ்சம் கனமான கை என்றால் இடுப்பு வலி நிச்சயம்.அது இன்ப வலிதானே,ஒன்றும் செய்யாது.”பூ விழுந்து வலி எடுக்குமா” சமயத்தில் வலிப்பதுதான்.சமயத்தில் வலிக்காமல் இருபதுதான்.இதெல்லாம் போய் சாமி கும்பிட வந்த இடத்தில் வைத்தா நினைப்பது?என மனம் பூட்டுபவர்களில் நானும் ஒருவனாய்/)
    அவளது வற்புறுத்தலுக்காவும் இடித்தலுக்காகவும் கையெடுத்து கும்பிட்டு விடுவேன்.அர்ச்சகர் நீட்டும் தீபாராதனை தட்டில் உள்ள சூடத்தைத் தொட்டு கண்ணில் ஒத்திக்கொள்வேன்.சிவப்பும்,மஞ்சளுமாய் வெள்ளை நிற சூடத்தின் மேல் ஒற்றை கற்றையாய் எரியும் எந்த தீப ஒளி காற்றில் அசைந்தாடும் நளினமும்,அழகுமே என்னை தொட்டு கும்பிட வைத்துவிடும்.
    அதுமட்டுமல்ல,எனக்காகவும் என்போன்ற எல்லோருக்காகவும் கருவறையிலிருந்து இறங்கி வந்து தீபாராதனை தட்டை காண்பிக்கும் அந்த பெரியவரை(அர்ச்சகரை) அல்லதுநடுத்தரவயதுக்காரரைமதிக்கிறதாயும்,அவருக்கு கொடுக்கிற மரியாதையாகவும் அந்த செயலை செய்து விடுவதுண்டு
தொட்டுக்கும்பிட்டகையோடுதட்டின்ஓரத்தில்இருக்கும்திருநீரை பூசிக்கொள்வேன்.
தட்டில் இரண்டு அல்லது மூன்று ரூபாய் காசுகளை போட்டுவிடுவேன் தட்டில் விழுவது அவருக்குப் போய் சேரும் என்கிற நம்பிக்கையில்.
சாமி கும்பிட்டு நகர்ந்ததும் பிரகாரசுற்று.வேண்டுதல்களுடன் பிரகாரத்தைச் சுற்றும் எனது மனைவி மக்களின் முன்னேயோ,பின்னேயோ கையைக்கட்டிக்கொண்டு கோவில் கோபுரத்தை அண்ணாந்து பார்த்து  நடந்தவாறு செல்வேன்.
  கல்வளர்த்த பெரியதான சுற்றுச்சுவர்கள்,அகண்ட பெரியதான வாசல், பிரமாண்டமாய் தெரியும் கோபுரம் அதன் சிற்பங்கள்,சிலைகள்,சுகந்த வாசனை,சுத்தம்  என இன்னும் இன்னுமான எல்லாமும் ஒரு சேர என்னை பார்க்க அழகாய் இருக்கும் கோவில் எல்லோரையும் கவருவதைபோலவே என்னையும் கவருகிறது. அவ்வளவுதான் எனக்கும் கோவிலுக்கும் உள்ள உறவு.
     நான்இந்தஊருக்குபணிமாற்றம் ஆகி வந்த நாளிலிருந்து இன்றுவரைவாடிக்கையாக ஒரு கடையில் சாப்பிட்டு வருகிறேன்.
     பெரிய கோவிலை ஒட்டிய மெயின் ரோட்டில் வலது புற திருப்பத்தில் அமைந்திருந்த அந்தஹோட்டலில்தான்எனதுதினசரி உணவு.
     இட்லி,தோசை,பூரி,பொங்கல்,இடியாப்பம்,வடை,டீ என்கிற மெனுவில் ஏதாவது ஒன்று எனது வ்யிற்றை நிரப்புவையாக.ஓடு வேயப்பட்ட பெரிய கடை.ஒரே நேரத்தில் 40 பேர்வரைஅமர்ந்துசாப்பிடலாம்.
    உச்சிவகிடுஎடுத்தவர்கள், அள்ளிமுடிந்தவர்கள்,தலையைகலைத்துவிட்டுஅசால்டாக இடது கையால் ஒதுக்கி விட்டு,வருபவர்கள்,மிகவும் எளிமையாகவும்,படோடோபமாகவும் இருக்கிற சர்வர்கள் என்கிற மனிதர்களுடன் நகர்கிற கடையாக/
     சமயத்தில் கடை நிரம்பி வழியும். சமயத்தில் கடை மேலே வேயப்பட்டிருந்த பழைய ஓடு போல காணப்படும்.
    அந்த காலத்தில் வெறும் டீக்கடையாக மட்டும் இருந்ததாம்.காலப்போக்கில் ஹோட்டலாக உருவெடுத்து காட்சியளிக்கும் கடை இப்படி ஆகி இருபது வருடங்கள் இருக்கும் என்றார்கள்.
உழைப்பின் பிரதானம்தான் கடையை உயர்த்தியது என்றார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
    காலையில் அங்கு சாப்பிட்டுவிடுவேன்.மதியம் அலுவகத்திற்கு சாப்பாடு வந்து விடும்.இரவு ஏதாவது ஒன்றை பார்சலாக கட்டிக்கொண்டுபோய் நான் தங்கியிருக்கும் அறையில் போய் சாப்பிடுவேன்.இப்படியான ஏற்பாடுகளின் நடுவேதான் ஒருநாள் கவனிக்கிறேன்.கடை கல்லாவின் முன் உள்ள டேபிளில் வித்தியாசமான ஒன்றை வைத்திருப்பார் கடைக்காரர்.இரட்டையாக,மூன்றாக,நான்காக ஒட்டியிருக்கும் வாழைப் பழங்கள்,உச்சியில் தலை முளைத்தது போல் உள்ள தக்காளி,கைபரப்பி நிற்கும் மனித கூட்டத்தை போல் உள்ள இஞ்சி,,,,,,,,,,, என ஏதாவது ஒன்றை வைத்திருப்பார்.
பார்க்க அழகாகவும் ஒரு ஒழுங்குடனும் இருக்கும். அதன் அருகினிலேயே ஒரு சின்ன எவர்சில்வர் கிண்ணத்தில் விபூதியும்,அதன் அருகில் உள்ள இன்னுமொரு கிண்ணத்தில் குங்குமமும்,அருகருகே இருக்கும்.
       சாப்பிட்டதற்கு காசு கொடுத்து விட்டு நகர்கையில் என் கண்ணை உறுத்தும் திரு நீரிலும்,குங்குமத்திலும்சிறிதுஎடுத்துநெற்றியில்இட்டுக்கொள்கிறேன்தினசரி இல்லா
விட்டாலும் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களில்.
      நான் வைத்திருந்த திருநீறு சிறிது நேரம்தான் எனது நெற்றியில் இருக்கப்போகிறதுஎன்றாலும்இதைநான்செய்யகாரணம்என்ன?தெரியவில்லை.தெரிந்தால் கூறுங்களேன்.
   
   

4 comments:

 1. அருமையான பதிவு
  நீங்கள் சிவப்புக் கோடு இடவில்லை என்றாலும்
  நாங்கள் படித்துவருகையில் அங்கு கொஞ்சம்
  நின்றுதான் வந்திருப்போம் பாம்பின் கால் பாம்பறியும்
  நானும் கூட உங்கள் மனோபாவம் கொண்டவன்தான்
  சில பொருட்கள் அதனுடன் நாம் கொண்டிருந்த பரிட்சியமும்
  அந்த சூழலும்நம்மை கடல் கடந்து கூட
  கடத்திச் செல்லும் பலம் கொண்டவை
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. எனக்கும் தெரியலை ..
  நீங்க கூறிய விதம் அழகு சார்

  ReplyDelete
 3. வ்ணக்கம் ரமணி சார்.பாம்பின் காலை மட்டுமா மனிதனின் மனஹ்டியும் மனிதன் அறிய் செய்து விடுகிற படைப்புகளாய் நாம் உள்ளோம்தானே,,,?பாராட்டுகளும்,நன்றியும்/

  ReplyDelete
 4. வணக்கம் அரசன் சார்.நலம்தானா?கூறிய கருத்து வளம்மிக்கதாய் இருக்கிறப்போது எனது எழுத்தும் நல்லாதாக வரும்தானே?நன்றி.

  ReplyDelete