15 Jul 2011

அங்கவஸ்த்திரம்,,,,,,,


நல்லமனம்,நல்ல உடல்,
நல்ல எண்ணம்,நல்லசெயல்,
நல்லநண்பர்கள்,நல்ல தோழர்கள்,
நல்ல எழுத்து,நல்ல படிப்பு,
நல்ல நான்,நல்ல எனது குடும்பம்,
மனைவி மக்களது உடல் நிலைஎன,
இன்னும்,இன்னுமாக,,,,,,
நிறைய வேண்டி
இவையெல்லாம் எனக்கு
வாய்க்கப்ப் பெறவேண்டும்
என்கிற வேண்டுதல்களில்
அன்றாடம் பயணப்படுகிற
எனது மனம் எது சொல்லியும்
கேட்க மறுக்கிறது.
தனிமையில் இருக்கிற
வீட்டை நினைக்கிறது.
உடல் சுகக்கேட்டை
நினைத்து மிகவும்பயம்கொள்கிறது.
வேலை பார்க்கிற அலுவலகம்,
உடன்வேலை பார்ப்பவர்கள்
தங்கியிருக்கும் அறை,அறை நண்பர்கள்,
அறையின்சொந்தக்காரர்,
பதிவாய் சாப்பிடும் ஹோட்டல்,
உணவு,அதைபரிமாறுபவர்கள்,
அவர்களது எளிமை மற்றும் ஏழ்மை,
சாப்பிடவருகிற மனிதர்கள்,
அவர்களது நடப்பு, பேச்சு ,அசைவுகள்
தினசரி பார்க்கிற எளனிக் கடைக்காரர்,
அலுவலகத்தின் எதிர்புற டீக்கடைக்காரர்,
சாலை,அதில்விரையும் கன ரக,
இலகு ரக வாகனங்கள்,
சைக்கிள்,ட்ராபிக்போலீஸ்,
அவசரம் காட்டி விரையும்மனிதர்கள்
அலுவலக வாடிக்கையாளர்கள்,
நண்பர்கள்,தோழர்கள்,நட்புகள்,
சொந்த ஊர்,
இப்போது தனியாளாய்
நான் இருக்கிற ஊர்,
ஊரின் மனிதர்கள்,
வாரத்தில் இருமுறை அல்சருக்கென
நான் ஊசிபோட்டுக் கொள்ளப்போகிற
டாக்டர்,
அவர் காண்பிக்கும் பெரிய ஊசி,
அவரது மருத்துவமனை,
அங்கு வந்து போகிறவர்கள்,
அவர்கள் மீதான மதிப்பீடுகள்,
கோயில்கள்,சாமிகள்,வழக்கங்கள்,
 என எல்லாம் ஞாபகம் வர வர
கடக்கிற அன்றாடங்கள்
நல்லதாயும் சங்கடம் மிகுந்ததாயும்
இருக்கிறபோது நல்ல மனதும்,
நல்ல உடலும் வாய்க்கப் பெறுவது
என்பது சற்றே சந்தேகமாகவே
என்னினுள்ளே,,,,,,,,,/

2 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
உங்கள் நலனுக்காக பிரார்த்திக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வனக்கம் ரத்தினவேல்சார்,நல்லபதிவும் ,அதை வாழ்த்தும் மனமும் ஓங்கி வளர்க