வீட்டுக்குள் வந்த குழந்தை
அம்மா என்கிறது.
அத்த்,,,த என்கிறது.
மாமா என்கிறது.
அண்ணா என்கிறது.
அப்பா எனச் சொல்கிறது
தனது மழலை மொழி மாறாமல்.
கைதட்டி சிரிக்கிறது.
முகத்தை கோணல்
காட்டி பழிக்கிறது.
புரியாத பாஷையில்
ஏதேதோ சொல்லி மகிழ்கிறது.
ஒவ்வொரு பொருளாய்
கைகாட்டி கேட்கிறது.
சிலவற்றை இழுத்து
கீழே போட்டும் விடுகிறது.
வீடு முழுக்கவுமாய் ஓடித்திரிகிறது.
தனது கையில் வைத்திருந்த
ப்ளாஸ்டிக் பந்தை
என்னிடம் கொடுத்து
உருட்டு விடச்சொல்லி
தன்னிடமிருந்த பேட்டால் அடிக்கிறது.
வாயில் எச்சில் ஒழுக,,,,,
ஹால்,அடுப்படி,பாத்ரூம்
என ஒவ்வொரு இடத்திலுமாய்
தனது இருப்பை பதிவு
செய்த குழந்தை
நடு ஹாலில் சிறுநீர் கழித்து விட்டு
தனது தாய் அதட்டி அழைக்கவும்
சென்று விடுகிறது.
கணநேரத்தில் பூத்து மலர்ந்த
பூ ஒன்று சட்டென காணாமல்
போனதாய் ஒரு மாயத்தோற்றம்
என்னுள் எழுந்து மறைவதை
அந்த நேரத்தில்
தவிர்க்க முடியாதவனாய் நான்.
6 comments:
அருமை.
வாழ்த்துக்கள்.
பூ ஒன்று சட்டென காணாமல்
போனதாய் ஒரு மாயத்தோற்றம்
என்னுள் எழுந்து மறைவதை
அந்த நேரத்தில்
தவிர்க்க முடியாதவனாய் நான்...உண்மை தான் குழுந்தை அழகே அழகு...!.
Vetha. Elangathilakm.
http://www.kovaikkavi.wordpress.com
வணக்கம் ரத்தினவேல் சார்.நலம்தானே?நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக!
அழகு நிறைந்த அசைவுகளில்குழந்தையும் ஒன்றாய் இப் பூ உலகில்!ில்!
அழகிய கற்பனை நிறைந்த கவிதை..
வாழ்த்துக்கள்...
வணக்கம் விடிவெள்ளிசார்.நலம்தானே?நன்றிஉங்களது கருத்துரைக்கு.
Post a Comment