17 Aug 2011

சாவிக்கொத்து,,,,,,





ஐந்து,ஆறு, எட்டு,,,,,,
என்கிற எண்களையே
தனது கடைசிஇலக்க
எண்ணாக கொண்ட
பூட்டுகள் மூன்று
எங்களது அலுவலகவாயிலில்
இருந்த கேட்டிலும்,
உட்புற கேட்டிலுமாய் தொங்கின.
புகழ்பெற்ற முன்னணி
நிறுவனத்தின் தயாரிப்பான
அவைகள்
வலதுபக்கம்ஆறாம் எண்ணுடனும்,
இடது பக்கம் ஐந்தாம் எண்ணுடனும்,
உள்புற கேட்டில் எட்டாம் எண்ணை
கொண்டுமாய் காட்சியளித்தது.
தினசரி காலைஅலுவல் நேரத்திற்கு
சற்று முன்அலுவலகத்தை
திறக்கிற போது
பாட்டி வலது பக்கம்
இறங்கித்தெரிகிற
மாடிப்படியில்
சம்மணம் கூட்டி அமர்ந்திருப்பார்.
அவரின் அருகாமையாக
அவரது ஊன்று கோல்.
“64ன் இந்த தள்ளாட்டத்திலும்
அந்த பாட்டிஎங்களது
அலுவகத்தைப்போலவே
இன்னும் நான்கு இடங்களில்
வேலை செய்கிறார்.
ஓய்ந்த நேரங்களில்
பதிவாக சில வீடுகளில்
வேலை பார்க்கிறார்.
தினசரி இரவு வேலைகளில்
வாயில் புகையும் சுருட்டுடனும்,
ஓங்கிய விசில் சப்தத்துடனுமாய்
எங்களது அலுவலகம்
இருக்கிற தெருவை வலம்
வந்து காவல் காக்கிறார்.
இந்த தள்ளாத வயதிலும்
கணவன்,பிள்ளைகள் யார் துணையும்
அற்று கடவுளே துணை என
ஒரு கோவிலில்தான் குடியிருக்கிறார்.
அங்கும் தொடர்கிற அவரது பணி விடைக்கு
கோவில் பிரசாதமும்,மற்ற,மற்றவைகளுமே
அவரது உணவாக ஆகிப்போகிறது.”
என சொல்லி சிரிக்கிற பாட்டி
“ஆபிஸ தொறந்து வச்சிட்டு
எங்க வேணும்னாலும்
போயிட்டு வாங்க,
நான் இந்த ஆபீஸ் சாவி மாதிரி”
என சொல்லி வெள்ளந்தியாய் சிரிக்கிறார். 

3 comments:

vidivelli said...

நல்ல கவிதை,,,
வாழ்த்துக்கள்..

vimalanperali said...

நன்றி விடிவெள்ளி சார்,உங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம்ரத்தினவேல் சார்.நலம்தானே?நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக!களது வருகைக்கும் கருத்துரைக்குமாக!