18 Sept 2011

ஹைக்கூபூக்கள்,,,,,,,


      



அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது

அதிகாலை எழுந்து விட்ட மனைவி.
            
             #####

காத்திருக்கும் காதலன்.

அவனை கடக்கும் பட்டாம் பூச்சி

           #####

உடல் நனைத்த வேர்வை.

வண்டி நிறைந்த பூமூட்டைகள்.

          #####
ரத்தம் உறிஞ்சிகிற மூட்டை பூச்சி.

தொழிற்சாலையில் தொழிலாளி.

         #####
பாட்டி காது குடைகிறாள்

இறகுதிர்கும் கோழி.

         #####
வரிசைதப்பி மேயும் பன்றிகள்.

பசியுடன் பேப்பர் பொறுக்கும் சிறுவன்.

        #####

வெள்ளிக்கிழமைபிச்சைக்காரர்கள்.

சாலையோரத்தில் டீக்கடை.

         #####
ஆதரவற்ற தாய்

.பிச்சைக்காரர்கள் வரிசையில்.

கோவிலுக்குள் காவல் தெய்வம்.

        #####
கூடி விளையாடும் குழந்தை

வாசலில் எட்டுப்புள்ளிக்கோலம்,
              #####
மரத்தடியில் இலைகள்.

வேர்கள் விசாரிக்கின்றன.

       #####
சிரித்து விளையாடும் சிறுவர்கள்
பக்கத்தில் கட்டப்பட்டிருக்கிற ஆட்டுக்குட்டிகள்.

         #####
சாலையோரத்தில் செருப்புக்கடை.

சுட்டெரிக்கும் வெயில்.

வெற்றுக்கால்களுடன் பாதசாரி.

     #####

புரியவில்லை பாஷை.

புடிபடுகிறாது மொழி.

வேற்று மாநிலத்தவர்களுடன்

பேசிக்கொண்டிருக்கிறேன்.

     #####
சிதறிக்கிடந்த பேப்பர்கள்.

முளைத்துதெரிந்த கவிதைகள்.

     #####  
  

2 comments:

Philosophy Prabhakaran said...

அடடே... ஆச்சர்யக்குறி...

vimalanperali said...

ஆச்சரியங்களை ஏற்படுத்துவதும் எழுத்தின் பணிதானே.