19 Sep 2011

கோப்பி,,,,


                        
  
        ஒரு ஊரில் இரு பெண் இருந்தாள். அவளது பெயர் கோப்பி என அறியப்பட்டது.
      அதென்னது கோப்பி.இவனும் வந்ததிலிருந்து அவளை பார்க்கிறான்.அவளைப்பற்றி கேட்கிறான்.கேள்விப்படுகிறான்.பெயர்காரணம் தெரியவில்லை.
      அவளும் அப்படித்தான். விடிந்ததும் தட்டு கையுமாக கிளம்பி விடுகிறாள்.முகம் கழுவி,பல் தேய்த்து,அடுப்பு பற்ற வைத்து.............என்கிறதெல்லாம் அவளுக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகவே இருந்துள்ளது எப்பொதுமே/
    அது மட்டுமா,அழுக்குப் பிடித்த உடம்போடும்,எண்ணெய் காணாத தலையோடும் கிழிந்து போன உடைகளோடும் ஒவ்வொரு வீட்டின் முன்பும் தினசரி அன்றாடம் காலை ஆஜர்.
    “அம்மா கோப்பி” “அம்மா கோப்பி” “அம்மா கோப்பி” இதுதான் அவளது சுதிதப்பாத காலை நேரத்தின் தாளலயம் தப்பாத சுப்ரபாதம்.
     சில வீடுகளில் அவளது குரலுக்கு காபி,டீ கிடைக்கும்.சில வீடுகளில் வசவும் பாட்டும் மட்டும்தான்.எது கிடைத்த போதிலும் சரி,அந்த ஈயத் தட்டும் பெயிண்ட் உதிர்ந்து உருவங்கள் காட்டும் இரும்பு போணியும்தான் அவளது தற்காப்பு ஆயுதமாயும்,வாங்கிக்கொடுக்கும் அமுத சுரபியாயும்/
    ஏய்,,,,, அங்கன பாரு கோப்பி,,,,,,,என்கிற ஒற்றை குரல் ஒலித்த மறுநிமிடம் சேர்ந்து கொள்கிற கோரஸான குரல்களின் லயங்களில் கோப்பி கிடந்து இழுபடுவாள் சிறிது நேரம்.அந்நேரம்விழித்துவிட்டசிறுசுகள்,சுறுப்பும் உற்சாகமும் மேலிட கூச்சலிடுவார்கள். ஏய்,,,,,,கோப்பி,கோப்பி,கோப்பி............என.
    ”இவளுக்குவிடிஞ்ச்சிரப்புடாது,வந்துருவா,தட்டயும்,போனியையும் தூக்கிக்கிட்டு.”
“அட நீ வேற,அவ மனிசியிலயும் கூட்டு கெடையாது,பைத்தியத்திலயும் கூட்டு கிடையாது.எல்லாம் அந்த சனியன் புடிச்ச பையனால வந்த வென”அவளை பார்க்கும் அனேகம் பேர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் இவைதான்.
    மாரிமுத்து ஆண்டாள் நல்ல ஜோடி.திருமணமான புதிதில் அவர்களை அப்படித்தான் சொல்லிக்கொண்டது ஊர்.மோகத்திற்கு முப்பது ஆசைக்கு அறுபது நாளாமே?
    தலா அந்த நாட்களை கூட ஆண்டாளுக்கு ஒதுக்கவில்லை அவன்,ஆனால் அதெல்லாம்ஆண்டாள் அறிந்திருக்கவில்லை.
    அவளுக்குகாடுகளையெடுப்பு,களத்துமேடுஇப்படித்தான்வாழ்க்கை பயணப்பட்டது.
புருசனுக்குவாக்கப்பட்டாளா,வேலைக்குவாக்கப்பட்டாளாஎனஊர்
பேசிக்கொள்ளுமளவுக்கு/
அதிலும் பாசத்திற்கு எந்தவித பங்கமோ,குறைபாடோ இல்லை.நடராஜனுக்கு பக்கத்து  டவுனில் டின் பேக்ட்ரியில் வேலை.காலையில் சாப்பாடு டப்பாவோடு சைக்கிளில் கால் வைப்பவன்தான்,இரவு ஊர் அடங்கிய பின்தான் அவனது பிரசன்னம்.அப்புறம் என்ன,சாப்பிட,படுக்க,தூங்க,அதிகாலையில் எழுந்திரிக்க,சாப்பாடு டப்பாவோடு சைக்கிளில்கால்வைக்க.../அதுதான் அவனது வாடிக்கையான வாழ்க்கையாகிப்போனது.
   வாடிக்கையின் நகர்தலில் அவனுள் ஆண்டாள் புறந்தள்ளப் பட்டவளாகிப்போனாள். ஆனால் இங்கு வேறாகி நின்றாள்.
   அன்றாடங்களின்  அவசரங்களிலும்,சலிப்புகளிலும்,கரடு தட்டிப்போன  இறுக்கங்களிலும் கூட மனம் நிறைய அவளை சுமந்தாள்.அவனுக்கான காத்திருப்பிலும்,வாழ்க்கை நகர்தலிலும் அர்த்தம் இருப்பதாய் சந்தோஷப்பட்டாள்.அந்த சந்தோஷத்தின் ஈரம் காயும் முன்பாகவே நடந்தேறிவிட்டவை நிறையவே/
   முதலில் நைட் ஷிப்ட்,வேலை அதிகம் என வீட்டை தவிர்த்த நடராஜன் அடுத்தடுத்து வீட்டுக்கு வருவதையே நிறுத்தினான்.விசாரித்ததில் கூத்தியாள் சகவாசம் என பதில் வந்தது.ஊர் பெரியவர்களோடு போன போது எனக்கு ஆண்டாள் வேண்டாம் என்கிற பேச்சுடன் எட்டப்போய்  நின்று கொண்டான். ஊர் பெரியவர்கள் கூட அவனை மல்லுக்கட்டி இழுத்தபோது ஆண்டாள்தாள் வேண்டாம் என அவர்களை கையமர்த்திவிட்டாள்.
     பிரியப்பட்டு ஏன் கூட இருக்குறதுன்னா இருக்கட்டும்.இல்லைன்னா.வுட்டுருங்க அவர,அவர் மன்ம் போன யெடம்பாத்துஇருந்துகிரட்டும்விட்டுருங்க என்று விட்டாள்.
    அந்த விட்டுருங்களில் போன அவளது வாழ்க்கை வத்தல் கம்பெனியில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டும், பிழைப்பு தேடி வரவுமாய் வைத்திருக்கிறது.
   யாருக்கோ,எதுவோகூடப்பிறந்ததாமே,அதுபோலஆண்டாளுக்குவறுமையும்,
உழைப்பும்போலும்/
   வத்தல்கம்பெனியின் பிரமாண்டம்,வேலைத்தளம்,வேலைப்பிரிவுகல் எல்லாம் அவளை முதலில் மலைப்பிற்கு உள்ளாக்கியதுதான்.போகப்போக கையூன்றி சுவர் பிடித்து எழுந்து நடை பயிலும் குழந்தையாய் கற்றுத்தெளிந்தாள்.
   அங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை.வத்தலிருந்து காம்பை பிய்த்தெடுக்க, பிய்த்ததைகாயப்போட,வத்தல்விதைகளைஎடுக்க.உதிர்ந்தவைகளைபேக்கிங்செய்ய,,,,,,,,/
   ஆண்டாளுக்கு வத்தலிருந்து காம்பை பிய்தெடுக்கும் வேலை.அம்மாதிரி வேலகளில் எந்தவேலைதான்சிலருக்குஒத்துக்கொள்கிறது.ஆண்டாளுக்கும் அப்படித்தான்.
   வத்தலின் காந்தலும்,புகைச்சலும் நெடியும்தூசியும் சிறிது நாட்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லைதான்.உடம்பெல்லாம் எரியும்.சொரிந்தால் உடலெல்லாம் தடிப்பு தடிப்பாய் வீக்கம் வரும்.கண்கள் வீங்கி எந்நேரமும் நீர் கசிந்த் கொண்டே இருக்கும்.சாப்பிடக்கூடபிடிக்காது.வாந்தி வருவது மாதிரி இருக்கும்.உடம்பெல்லாம் மிளகாய் வத்தல் வாடை,சோறு,குழம்பு,தண்ணி எதை தொட்டாலும் அப்படித்தான் ஆனது.
     ஒரு நாளைக்கு இரண்டு,மூன்று தடவையாவது குளிக்க வேண்டி வந்தது.எத்தனை குளித்தாலும் மாற்றுப்புடவை அதுதான் திரும்பவுமாய் வருகிறது.குளித்து விட்டு சகதியில் குதித்த மாதிரி.அதே வாடை,அதே வத்தல் தூசி.என்ன செய்ய வயிற்றின் தேவை.ஊருக்குள்ளும் வேறு இல்லை.காத்தடி காலம்.கையிருப்புகள் காலியாகி அததுகள் அண்டை அயல்களின் நிழல்களில் ஒதுங்க வேண்டிய நேரம்.    அந்தஇலக்கணப்படிதான்ஆண்டாளும்,வத்தல்கம்பெனிக்கும் வீடுக்குமாய்.
    மாரிமுத்துவை கைபிடிக்கையில் தன் சுகதுக்கங்களை பகிர்ந்து ஆசுவாசப்பட்டுக் கொள்ள புருசன் மடியும் மனசும் கிடைக்கும் என சந்தோஷப்பட்டாள்.அதுவும் பறிபோன பரிதாபம்.
   என்னதான்தனிமரமாய்நின்றாலும்அவளுகென தலைதுவட்டிக்கொள்ள,
ஒன்றிக்கொள்ள ஒற்றை நிழலாவது தேவைபட்டது. தனியாய் நிற்பவளை கொத்திதின்ன கழுகுக்கண்கள் எப்போதும் காத்திருக்கும்தானே?
  அவள் விஷயத்திலும் அது நடக்க சிலரின் யோசனைகளும்,பேச்சுக்களும் அவளை தாய் வீட்ட்ற்கு அம்புக்குறியிட்டது.
    தாய் வீட்டிலும் பாட்டோடு பாட்டாய் ஆண்டாளை சுமக்கத்தான் செய்தார்கள்.பெற்றகடனுக்காய் அவளை சுமக்கலாம் சரி.அவள் கருவிலிருந்த குழந்தைகளையும்,அவளை சுற்றி நின்ற பிரச்சனைகளையும் ,,,,,,,,,,?
    தினமும் மூன்று பேருக்கு மூன்று வேளை தட்டு கழுவி ஆண்டாளின் கர்ப்பகால சிகிச்சை,செலவு,போக்குவரத்து,நல்லது,பொல்லது,,,,,,,,,,,ரொம்பவும்தான் சிரமப்பட்டுப்
போனார்கள்.
    ஆளை அமுக்கும் பாரத்துடன் தோள்களும்,முதுகுத்தண்டும் கனத்து வலித்து தெரிக்கும் நாட்களுடன் எத்தனை காலம்தான் கடத்துவது.வாழ்நாட்களின் நகர்தல் கண்ணெதிரே உட்கார்ந்து சரிந்த நிலை.ஆண்டாள் தன்னை தனியே பிரித்தெத்து ஒதுக்கிக்கொண்டாள்.
    மனதும்உடலும்தாய்வீட்டையே அண்டியிருக்க கட்டாயப்படுத்தியபோதும்,சூழ்நிலை நிர்பந்தம் வெளியே வந்தாள்.வைராக்கியமாய் வெளியே வந்து விட்டாள்தான்.
    அவளது நினைப்புகளும்,எதிர்பார்ப்புக்களும் அவ்வளவு சுலபமாய் இருக்கவில்லைதான்கண்ணுக்கு எட்டிய வரைதுரும்புகூட தட்டுப்ப்படாத அத்துவான காட்டில் ஒற்றை ஆளாய் திரிந்து கூவுகிற நிலை.
    எவ்வளவுதான் கூப்பிட்டாலும் கூப்பிடுதூரத்தில் ஆள் இல்லாமல்,ஆண்டாளும் அவள் வயிற்று குழந்தைகளும் கதறி தவிக்கிற பரிதாபம். என்ன கதறி என்ன,ஊரும் உறவும் சிறிது நாளைக்குதானே?
    கண்ணிமை பட படப்பாய் நகர்ந்த நாட்கள் ,வத்தல் கம்பெனி வேலை,குழந்தை பிறப்பு,அடுத்தடுத்ததாய் நிகழ்ந்த பெற்றோரின் இறப்பு,ஆண்டாளின் தள்ளாமை,குழந்தையின் வளர்ச்சி,அதன் படிப்பு,எல்லாம் பார்த்து,பார்த்து செய்து வாழ்நாட்களை தள்ளி சவால்களை எதிர்கொண்டு எங்கும் புற முதுகிடாமல் ஊர்ந்து, நகர்ந்து, நகண்டு,நடந்து,ஓடி ,விழுந்து ,எழுந்து,,,,,,,,,,,இதில் எதிலாயினும் அவள் நடைமுறை புரண்டிருக்கலாம்தான் அல்லது புரண்டதாய் சொல்லப்பட்டிருக்கலாம்தான்.
    அதையெல்லாம் அவளது மேல்பட்டமண்ணாய் தட்டி விட்டாள்.அந்த தட்டலில் அவளும் பிறரும் நோகாத நேக்குப்போக்கு,சின்ன நெளிவு சுளிவு,மனநிமிர்தல்.வளர்ந்துவிட்ட பிள்ளையை கட்டிக்கொடுத்தாள்.
     நடராஜன் மாதிரி இல்லாமல் நல்ல ஒருவனுக்கு மகளை கொடுத்ததில் சந்தோசம்  ஆண்டாளுக்கு.
    ஆண்டாளும் அவ்வளவுக்கவ்வளவாய்தான் வேலைபார்த்தாள்.ஒத்தை ஆளுக்கு எவ்வளவு தேவையிருக்கப்போகிறது,ஆனால் தேவை நிமித்தம் ஆகிப்போன விசயம் அவளது விஷயத்தில் பட்டவர்த்தனமாகிப்போனது.
    வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை,நெற்றியில் பளிச்சிடும் சின்னதான திருநீர் கீற்று,அதன் நடுவில் பளிச்சிடும் குங்குமம்.எங்கும் எப்போதும் சைக்கிள்தான்.
    பக்கத்து டவுனிலிருந்து வேலைக்கு வருகிற வத்தல் கம்பெனி மேனேஜர்  இப்படித்தான் அடையாளப்பட்டும்,பதிந்துபோயுமிருந்தார் அந்த ஊர்க்காரர்களின் மனதில்.
    அவள்குழந்தைக்குஐந்துவயதிருக்கும்.பார்த்தவுடன்ஓடிப்போய் கொஞ்சத்தோணும்.
குழந்தைக்கு ஆறு வயதில் அதன் அம்மா மஞ்சள் காமாலையில் படுத்தாளாம்.எழுந்திரிக்கவில்லையாம்.மனைவியின் நினைவுகள் மாறுவதற்காக முன்னிருந்த ஊரிலிருந்து நகண்டு இங்கு வந்திருக்கிறாராம்.பிழைப்பும் பிள்ளயுமாக/
    காலையில் வேலைக்கு வந்தவுடன் முதல் வேலையாக கம்பெனியின் நாலாவது வீட்டு பாட்டியின் கைக்கு குழந்தை மாறும்.குழந்தையை பார்த்துக்கொள்ள அவளுக்கு மாத சம்பளம் பேசியிருந்தார்.
    அடுத்ததாய் வத்தல் கம்பெனி வேலை முடிந்து வீட்டுக்கு வருகிற ஆண்டாளிடம் குழந்தை கைமாறும்.அப்புறமென்ன மேனேஜர் வந்து குழந்தையை வாங்குகிறவரை ஆண்டாளும், குழந்தையும் தனியுலக சஞ்சரிப்புதான்.
   குழந்தையின் ஒட்டுதலை அறிந்தவர் பாட்டி இல்லாத நாட்களில் ஆண்டாளின் உலகத்திலேயே சஞ்சரிக்க விட்டிருந்தார். குழந்தையைபார்க்க மேனேஜர் அடிக்கடி ஆண்டாளின் வீட்டுக்கு வந்து போவது உள்ளூர்க்காரர்களின் கண்களை உறுத்தியது.
     நிர்கதியாய் நின்ற ஆல மரங்கள் இரண்டு ஒன்றுக்கொன்று தோள் தட்டி பரஸ்பரம் ஆறுதல் பட்டுக்கொண்டார்கள்.ஆறுதல் ஊரார்களின் கண்களை உறுத்தி விழுத் விட்டு படர்ந்து போனது.
     “அசலூர்காரன் நம்ம ஊரு பொண்ணுகிட்டதொடர்பு வச்சிருக்கிறதா”என்கிற ஒற்றை வரியில் உஷ்ணமாய்  ஊர் மானம் காத்தவர்கள் மேனேஜரை நிரந்தரமாக அந்த ஊர்பக்கமே வரவிடாமல் செய்து விட்டார்கள்.
    அன்று பித்து பிடித்தவள் போல் ஊர்பெரியவர் வீட்டிலும்,சொந்தங்களின் வீட்டிலுமாய் போய் சத்தம் போட்டவள்தான். “வாழ கதியத்து நின்னப்ப ஏன்னு கேக்காதவுங்க,இப்ப நல்லா பொழக்கியில வந்து நாசப்படுத்தி விட்டுடீங்களே,,,,,,,,,,,,,என வயிற்றிலும் வாயிலுமாய் அடித்துக்கொண்டு அழுது புலம்பி இருக்கிறாள்.
    அதற்குபின் ஏற்பட்ட சடுதியான மாற்றங்கள் அவளைசெதில் செதிலாய்,,,,,,, செதில்,செதிலாய், செதுக்கி,செதுக்கி உருமாற்றி,உருமாற்றி ஆண்டாளை கோப்பியாக்கி இருக்கிறது.  
       ஏய்ய்ய்ய்,,,,,,,,,,,கோப்பி,,,,,கோப்பி,,,,,,,கோப்பி,,,,,,கோப்பி,,,,,,கோப்பி,,,,,,
ஆண்டாளைகண்டசிறுசுகளின்கேலிக்குரல்கள்அந்தஊரின்நாலாதிசைகளிலும்
மோதி எதிரொலிக்கிறது தினம் தினம்.  

       
    

No comments:

Post a Comment